அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/27/17

சில குணாதிசயங்களும் மரபணுக்களும் (1)                சில குணாதிசயங்கள்  மரபணுக்கள் வழியே  சந்ததியினரை தொடரும் என்பது பற்றி ஜோதிஜி அவர்களின் என்னைப்பற்றி பதிவில் உள்ள பின்னூட்டத்தில்  வாசித்தபோது நம்மை சுற்றி  ஏதாச்சும் நல்ல விஷயங்கள் தொடர்கிறதா என்றும் அதேபோல இளம்பிராயத்தில் நம்மை அறியாமல் ஏற்றுக்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் காலமெல்லாம் வாழ்வில் தொடருமா  ! என்றும்  யோசித்துக்கொண்டிருந்தேன் அப்போ எங்க வீட்டில் மற்றும் அக்கம்பக்கம் தெரிந்தவர்கள் மத்தியில் இப்படி தொடரும் சில தொட்டில் பழக்கங்கள்  குணாதிசயங்கள் நினைவுக்கு  வந்தது

4/24/17

வந்ததே வசந்தம் :) மற்றும் எனது பேலியோ பயணம் ..swans ducklings

வந்ததே வசந்தம் :) 


முதலில் ஒரு சந்தோஷமான விஷயம் நாங்க அடிக்கடி நடைபயிற்சி  செல்லும் வழியில் வசிக்கும் எங்கள் வளர்ப்பு மகள் 12 குழந்தைகளுக்கு தாயாகி என்னையும் என் கணவரையும் பாட்டி   தாத்தா ஆக்கிட்டா :) நல்ல கடும் குளிர்காலத்தில் கூட நான்  அவ்வழியே சென்று வாத்துக்களுக்கு உணவிட்டு வருவேன் ..அந்த வாத்து 12 பாப்பாக்களையும் கூட்டிட்டு என்னை நோக்கி வந்தாள் :) அன்னிக்குத்தான் முதலா தனது குழந்தைகளுக்கு வெளியுலகை அறிமுகம் செய்கிறாள் தாய்..

4/17/17

ஈஸ்டர் ...அன்றும் இன்றும்

ஈஸ்டர் ...                                                                                                          நாங்கள் 10 வயதில் கொண்டாடிய ஈஸ்டருக்கும் பல வருடங்கள் கழித்து  எங்கள் மகளின்  பதின்மத்தில் கொண்டாடும் ஈஸ்டருக்கும் தான் எத்தனை வித்தியாசம் !! நாங்கள் பள்ளி படிக்கும்போது எங்க பகுதி பேக்கரிகளில் ஹாட் க்ராஸ் பன் பெரிய வெள்ளியன்று விற்பனையாகும் அன்று ஆலயத்தில் காலை 11 முதல் பிற்பகல் 3 வரை ஆராதனை  நடக்கும் ஆராதனை  முடிந்ததும்

4/10/17

வசூல் ராஜா MBBS கட்டிப்புடி வைத்தியம் :)

Free Hugs / கட்டிப்புடி வைத்தியம் :)

                                                                                                   நம்ம மக்களுக்கு அன்பு காட்ட நேரமே இல்லாமப்போனதால்தான் உலகத்தில இருக்கவே கூடாத மன   உளைச்சல்கள் வெறுப்பு கோபம் ,சண்டை ,சச்சரவு  , பொறாமை ,மன அழற்சி இன்னும் பற்பல நோய்கள் எல்லாம் கணக்கிலடங்காம குப்பைகளாக நிரம்பி குமிந்துள்ளன ..சந்தோஷமான ஆழ்மனதில் இருந்து வரும் சிரிப்பும் அன்பான அரவணைப்பும் இந்த வேண்டா நோய்களை  மனுஷரிடமிருந்து தூர விரட்டுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

4/8/17

லண்டன் ஸ்டைல் அவியல் :)

லண்டன் ஸ்டைல் அவியல் :)
--------------------------------------------------

                                                                  எங்கள் பிளாக்கில் என் சமையல் குறிப்பு வெளியானதில் இருந்து எனக்குள் ஒரு ஸ்பார்க் தீப்பொறி பற்றி எரிகிறது ..http://engalblog.blogspot.com/2017/04/blog-post_3.html

அது இப்போ விதவிதமா சமைத்து வலைப்பதிவில் போட்டு உங்களுக்கெல்லாம் நல்லது செய்யணும்னு மனசு துடிக்குது :) நேற்று கூட முருங்கையிலை சாம்பார் முருங்கையிலை சூப் பொரியல் எல்லாம் செய்தென் ஆனா படம் எடுக்காததால் இங்கே போட முடியலை ..அடுத்தது உலக முழுதும் இருந்து பார்வையாளர்கள் என்னுடைய சமீபத்திய புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டையும் முருங்கை ரசத்தையும் மீண்டும் மீண்டும் வந்து ரசிக்கிறாங்க ..அவங்க விருப்பத்திற்கிணங்கி வாரம் ஒரு சமையல் குறிப்பை வழங்க இருக்கிறேன் .

4/6/17

நேர்காணல்/ நேர்முகத்தேர்வு ...ஒரு ஃப்ளாஷ்பேக் ..
நேர்காணல் ஒரு ஃப்ளாஷ்பேக்  ..


                                                                                                     சில வருடம் முன்பு   லண்டனில் ஒரு  ரெஸ்டாரண்டில் மதிய உணவு சாப்பிடும்போது அங்குள்ள தொலைக்காட்சியில் எதோ ஒரு தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .பெயர் தெரியவில்லை ..அதில்  கதாநாயகன் ப்ரிலிமினரி முடிந்து  IAS இன்டெர்வியூவுக்கு செல்கிறார் ..நேர்காணலின்போது அதிகாரி ஒரு பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டுவிட்டு இன்டெர்வியூ வந்த கதாநாயகனை அந்த பேனாவை  எடுக்க சொல்வார்

4/1/17

ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் ,புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு ,முருங்கைக்காய் ரசம்                                இன்றைக்கு நான் சமையல் பற்றி பேசலாம்னு இருக்கிறேன் :) அப்படியே எல்லாரும் தரையில் பாய் போட்டிருக்கேன்அதில்  உட்கார்ந்துக்கோங்க :)  .உக்காரும்போது அதிராவை ஓரத்தில் விட வேண்டாம் ..ஹெவி வெயிட்டுக்கு ஒரு பக்கமா போயிடும் கார்ப்பெட் பாய் அதனால் அதிராவை  நடுவில் உட்காரவைச்சிட்டு சுற்றி எல்லாரும் அமரவும்   .

இப்போ இந்த மந்திரப்பாய் உங்களை சில வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்லப்போகிறது ..


                                                                                

அது விர்ரென பறந்து இறங்கிய இடம் ..சென்னையில் ஒரு வீடு ,நன்கு விழாக்கோலம் பூண்டுள்ளது வீட்டின் முன்னே வாழைமரம் நட்டு வர்ணமடித்து  வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன