அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/21/17

களி மண் விதை உருண்டை /Seed Dumplings


       லேபிள்ஸ் எடிட் செய்யும்போது தவறுதலாக இந்த பதிவு மேலே  வந்துவிட்டது .எனக்கு பழைய தேதிக்கு மாற்ற  இயலவில்லை        ..அழித்தால் ஒரு பதிவு குறையும் இதுவரை 274 பதிவுகள் ..இன்னும் 26 அடிகள் வைத்தால் 300..
இது 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய பதிவு ..நான்  வெளிநாட்டு நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியை மையப்படுத்தி படங்களில் தமிழில் எழுதி பசுமைவிடியலில் பதிவிட்டிருந்தேன் ..அப்போதே 400 ஷேர்ஸ் போனது ஒரு வலைத்தளம் அவங்க பெயர் போட்டு வெளியிட்டு கொண்டார்கள் எல்லாம் ஏதொ நம்மால் நல்லது    நடந்தால் சரி என்பதைப்போல சமீபத்தில் இதே விதைப்பந்து பற்றி ஹிந்துநாளிதழில் மிக அருமையாக ஒரு செய்தி வந்துள்ளது ..அதையும் இங்கு இணைத்துள்ளேன் ..

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article9564608.ece?homepage=true&relartwiz=true

                                                                       
மனசு குமார் தம்பியின் வலையில் இன்று ஜோதிஜி அவர்கள் மிக அழகாக  தன்னைப்பற்றி //என்னைப்பற்றி //பதிவை எழுதியுள்ளார் 

http://vayalaan.blogspot.com/2017/03/10.htmlஅனைவரும் வாசியுங்கள் ..

                                                                                   
1938 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டை சேர்ந்த நுண்ணுயிரியல்
 நிபுணர் FUKUOKA துவக்கி வைத்தது இவரை பற்றி
இங்கே  இளங்கோ அவர்களின் பதிவில் வாசிக்கவும் ..

                                                                                     


இந்த seed dumplings எனப்படும் முறை ,பூச்சி மருந்துகள் இரசாயன 

உரங்கள் மற்றும் பக்கவிளைவுகள் /கேடு விளைவிக்கும்
எந்த பொருளுமின்றிஇயற்கை வேளாண்மை முறையை அறிமுகப்படுத்தியவரும்  நிபுணர் FUKUOKA இவர்தான் .
பிறகு 1970 ஆம் ஆண்டுகளில் நியூயார்க் நகரத்தின் பசுமை 
ஆர்வலர்கள் கூட்டாக சேர்ந்து நகரின் பல இடங்களில் குறிப்பாக வறண்ட தரிசு ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் பசுமை 
சோலைகளை  ஏற்படுத்த இதே முறையில்  விதை பந்துகளை
 தயார் செய்து ஆங்காங்கே தூவி விட்டார்களாம் .


                                                                                


சில வாரங்களில்  அவர்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது அவ்வாறு எறியப்பட்ட பந்துகளில் உள்ள விதைகள் முளைத்து 
அந்த இடமே பச்சை பசேலென காட்சியளித்தது .
பிறகு பலரும் அம்முறையை பின்பற்ற ஆரம்பித்தார்கள் 
எங்கெல்லாம்  வறண்ட தரிசு நிலம் கானபட்டதோ அங்கு அழகிய வண்ண மலர் செடி விதைகளை தூவ நந்தவனாமகியது! 
இந்த முறையால் சிறு பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் 
தேனீக்கள் ஆகியன பயன் பெறும் .

                                                                                   

இப்பொழுது வெளி நாடுகளில் இந்த விதை  உருண்டைகளை 
தயாரித்தும் விற்பனை செய்கிறார்கள் .
அதை வாங்கி ..நமக்கு விருப்பமான இடங்களில் கவண் 
கொண்டு எறியலாம் :)
                                                                                


ஆட்கள் இல்லாத இடங்களில் மட்டும்  முயற்சிக்கவும் ..
அல்லது கையால் வீசி எறிந்தாலும் போதுமானது .
நிலத்தில் விழுந்த இந்த உருண்டைகளிலுள்ள களிமண் 
உருகி நிலத்தோடு ஒட்டும் மற்றும் அதிலுள்ள கலப்பு கூட்டு 
உரம் விதை வளர துணை புரியும் ..


                                                                                          


உங்க வீட்டருகில் தரிசு நிலங்கள் இருந்தால் படத்தில் உள்ளபடி முயற்சித்து பாருங்கள் அல்லது தோட்டத்தின் ஒரு சிறு 
பகுதியில் இடம் இருந்தாலும் செய்யலாம் .

முக்கியம் ..விளை  நிலங்கள் இருக்குமிடத்தில் இப்பந்துகளை பயன்படுத்தக்கூடாது .  

லெமன் க்ராஸ் ,வண்ண மலர் விதைகள்,மூலிகை செடிகள் ,ஆகியவற்றை விதை உருண்டைகளாக்கி பயன்படுத்தலாம் 
 குறிப்பாக மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்களையும்   வண்ணத்துபூச்சிகளையும் அழிவிலிருந்து காக்க இந்த 
விதை உருண்டை மிக மிக முக்கியமாக உதவும் ..

நன்றி ..பசுமை விடியல்  (நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவு )

13 comments:

 1. காலை வணக்கம்,தங்கையே!எல்லோரும்,நலமா?///அருமையான பகிர்வு.இங்கே,சில ஊர்களுக்கு பேரூந்து/தொடரூந்தில் செல்லும் போது தூரத்தே,இயற்கைக் காட்சிகளை ரசிப்பதுண்டு.தொலைவில்,மக்கள் நடமாட்டமற்ற இடங்களில், அழகான பூக்கள் மலர்ந்திருப்பது கண்ணில் படும்.எப்படி என்று யோசித்ததில்லை.உங்கள் பகிர்வின் பின்னர் தான் உறைக்கிறது,ஹ!ஹ!!ஹா!!!நன்றி.

  ReplyDelete
 2. வணக்கம்
  யாவருக்கு பயனுள்ள பகிர்வு பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. இன்றைய கால கட்டத்திற்கு - மிகவும் பயனுள்ள செய்தி..
  எளிமையானசெயல் முறை விளக்கம் - சிறப்பு..
  இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
 4. புதிய தகவல்... பயனுள்ள தகவல்...

  நன்றி...

  ReplyDelete
 5. வருகை தந்து கருத்து தெரிவித்த ,,, யோகா அண்ணா
  ரூபன்-துரை செல்வராஜூ ஐயா ,
  Bro D.Dஅனைவருக்கும் நன்றிகள் _/\_

  ReplyDelete
 6. இங்கு இப்படி இருக்கோ தெரியாது ஆனா கார்டின் செண்டரில இப்படியான உருண்டைகள் பார்த்திருக்கேன் அஞ்சு. எதுக்காக என தெரியவில்லை.ஏதாவது வாங்க போகும்போகும் மேம்போக்கா இப்படி சிலது தெரியும்.ஆனா ஆராய்ந்ததில்லை. இனி கவனிக்கவேணும்.
  நல்லமுறையாகவும் இருக்கு. தகவலுக்கு நன்றி.
  பதிவு வாசிக்க செல்லனும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..இது ஜெர்மனிலயும் கிடைக்கும் கார்டன் சென்டரில் நான் முந்தியே பார்த்திருக்கேன் பார்க்க பறவை உணவு மாதிரி இருக்கும் ஆனா இதே விதை பந்து

   Delete
  2. ஒருவர் வந்து இந்த பதிவு செல்லாது என சண்டை பிடிக்கபோறாரே அஞ்சு....

   Delete
  3. Rendu per varuvaanga 😂 priya ..avanga inum parkala post

   Delete
 7. களிமண்ணில் உருண்டையில் விதைகள் வைத்து முன்பு போடுவத்ற்கு காரணம் பற்வைகள், எறும்புகள் விதையை தின்னாமல் இருக்க செய்வார்கள்.
  விதை உருண்டை நல்ல யோசனை.
  பசுமை விடியலுக்கு நன்றி.
  பதிவு பயனுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா அக்கா ..அப்போ இந்த டெக்னீக் நம்மது அதைத்தானே வெளிநாட்டினரும் பின்தொடர்கிறார்கள் .மிக்க நன்றி அக்கா

   Delete
 8. மீள்பதிவு ஆனாலும் - விதை உருண்டை பற்றிய செய்திகள் நேர்த்தி..

  நம்மால் ஆனவரைக்கும் பூமியை அழகு செய்வோமே!..

  விரைவில் முன்னூறை எட்டிப் பிடிக்க வேண்டும்!.. நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
 9. உபயோகமான மீள்பதிவு. ஆனால் நம்மூரில் யாரும் இதைச் செய்வதாகக் காணோம்!


  ReplyDelete