அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/14/17

Loud Speaker .45.மகிழ்ச்சி அப்டேட் ,நானும் முகப்புத்தகமும் , ஸ்டாம்ப் சேகரிப்பு . ஒரு நாலு கால் செல்லம் நியூஸ் ..Magic

இன்றைய செய்திகள் மற்றும் துணுக்கில் முதலில்  மகிழ்ச்சி அப்டேட் ,நானும் முகப்புத்தகமும் ,மகளின்  ஸ்டாம்ப் சேகரிப்பு  .
ஒரு நாலு கால் செல்லம் நியூஸ் ..Magic 


மகிழ்ச்சி 
----------------
                                        இவை கிறிஸ்டின் எங்களுக்கு ஆண்டுதோறும் தவறாமல் அனுப்பிய கிறிஸ்துமஸ் , பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள்.. இவை எல்லாமே அவர் கைப்பட செய்தவை .
                                                                                

சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சி பதிவில்  கிறிஸ்டின் பற்றி குறிப்பிட்டிருந்தேனே அவரை நாங்க சென்ற சனிக்கிழமை அன்று வீட்டுக்கு சென்று சந்தித்தோம் .

http://kaagidhapookal.blogspot.co.uk/2017/03/blog-post_35.html
நான்கைந்து வருடங்கள் பிறகு சந்திக்கிறேன் ,போன வருடம் பிப்ரவரி முதல் இந்த பிப்ரவரி வரை எல்டர்ஸ் கேர் ஹோமில் இருந்தாராம் இப்போ மகன் இங்கே  ஸ்பெஷல்  வீடு வாங்கி அதாவது சக்கர நாற்காலி எளிதில் செல்ல வசதியான கதவுகள் அமைந்த வீடு வாங்கி ஹோமிலிருந்து அழைத்து வந்துவிட்டார் ..அவரால் நடக்க முடியாது கால்களில் நிறைய பிரச்சினை இரு கால்களையும்  தூக்கி ஒரு சிறு மேஜை மீது வைத்தவாறு அமர்ந்திருந்தார் ..நாங்கள் உள்ளே நுழைந்ததும் அந்த முகத்தில் நான் கண்ட சந்தோஷத்துக்கு அளவில்ல. 
எனதுகைகளை இருக்கபிடித்துக்கொண்டிருந்தார் .கொஞ்சம் குற்ற உணர்வாக இருந்தது எத்தனை முறை அவர் கார்ட் அனுப்பி இருப்பிடத்தை தெரிவித்தும் பார்க்காமல் இருந்தோம் என ..இம்முறை நட்புக்களின் பின்னூட்டம் எப்படியாவது அவரை சந்திக்கவேண்டுமென  பிடிவாதமாக சென்று சந்தித்தோம் ..மீண்டும் அடிக்கடி வருவதாக வாக்குறுதி தந்துவிட்டு வந்தோம் ..
                                                    ********************************
                                                                                    

                                                                                         

நானும் முகப்புத்தகமும் பிரிந்துவிட்டோம் :) அதாவது அதை விட்டு வெளியேறி விட்டேன் . பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் நான் முகப்புத்தகத்தை டீஆக்டிவேட் செய்துவிட்டேன் ..எனது குவில்லிங் முகப்புத்தக ஐடியையும்தான் ..
பிறகு சென்ற வாரம் நிஷாவின் பதிவை பார்த்ததும் திடீரென மனதுக்கு தோன்றியது அங்கே ஒன்றிரண்டு நட்புக்களுக்கு மட்டுமே நான்  டீஆக்டிவேட் செய்வதை இன்போக்ஸ் தகவலாக சொல்லியிருந்தேன் .மற்றவர்களுக்கு தெரியுமா என்றனக்கு தெரியவில்லை மீண்டும்  முகப்புத்தகம் செல்லும் யோசனை துளியுமில்லை .எது மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருகிறதோ அதை மட்டும் செய்ய நினைத்தேன் அதையே இப்போது செய்கிறேன் ..ஆகவே நட்புக்களே இணையம் சோஷியல் மீடியா என்பது ஒரு சிலந்தி வலை போலத்தான் மிக கவனமுடன் கையாளனும் போலி ஐடிக்களும் போலி முகங்களும் கண்டுபிடிக்க மிக சிரமம் ..யாரும் யாராகவும் மாறக்கூடும் ..ஆகவே நான் அங்கில்லை அங்கு இல்லை இல்லை என கூறிக்கொள்கிறேன் .. தொடர்புடைய பதிவு 

                                                                 ***************


மகளுக்கு சிறுவயது முதலே ஸ்டாம்ப் சேமிக்கும் பழக்கமுண்டு ..அப்படி அவள் சேமித்து வைத்தவற்றை சிறு பெட்டியில் வைத்திருந்தாள் ஸ்டாம்ப் ஆல்பம் மிக விலை ஆதலால் செகன்ஹான்ட் ஆல்பம் எங்கள் மார்க்கெட்டில் ஒரு வயதான தாத்தா வும் பாட்டியும் மாதமொருமுறை தங்களின் அனைத்து கலெக்சனையும் ஒரு ஸ்டாலில்  வைத்து விற்பார்கள் ..யாரும் வாங்குவது குறைவு இப்போல்லாம் பிள்ளைகளை யாரும் ஊக்குவிப்பதுமில்லை ..நாங்க  சென்று பார்த்ததும் அவருக்கு மிகுந்த சந்தோசம் இலவசமாக ஒரு பெட்டி ஸ்டாம்ப்ஸ்  கொடுத்தார் மகளுக்கு .வீட்டுக்கு கொண்டுவந்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தி நாடுகள் ரீதியாக நுழைத்து வைத்துள்ளாள் .அதில் ஒரு ஹிட்லர் ஸ்டாம்ப் இருக்கு ..


                                                                                 


                                                                              

அதை அடுக்கும்போது ஜெஸி :) அவற்றின் மீது படுத்துக்கொண்டது :)
                                                                                


நாலு கால் செல்லம் பற்றிய செய்தி 
--------------------------------------------------------------
மனிதர்களை இனிமே யாராவது நாயே என்றழைக்காதீர்கள் .

                                                                                
                                                                              இந்த சுட்டியில் சென்று  புற்றுநோய் மனிதர்களிடம் இருக்கிறதா என்பதை நுகர்வால் கண்டுபிடுக்கும் பைரவர்கள் செய்தியை வாசிக்கவும் ..http://www.bbc.co.uk/news/health-39217858

சமீபத்தில் இந்த பைரவர்களை வைத்து மனிதருக்கு புற்று நோய்  அறிகுறி தென்படுகிறதா என ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்களாம் .ஏற்கனவே நீரிழிவு நோய் சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிப்பதை கண்டுபிடிக்க பைரவர்கள் பயன்படுத்துகிறாரகள் ..

                                                                                  
மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..

80 comments:

 1. உங்கள் நண்பரை சந்தித்து வந்ததும் மற்ற‌ தகவல்களும் அறிய மகிழ்வாயிருந்தது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா .ஆமாம் ..எங்க மூவருக்கும் அவ்ளோ சந்தோசம் அவரை பல வருடம் கழித்து பார்த்ததில் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா

   Delete
 2. பாசமான மகன். தந்தைக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறாரே... அவரைப்போய்ப் பார்த்து வந்து விட்டீர்களா? உங்களையும் பாராட்ட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் //தந்தையில்லை தாய் .தந்தை சில வருஷமும் இறந்துவிட்டார் .கேர் ஹோம்ல அவரை சரியா கவனிக்கலையாம் ..அதான் மீண்டும் வீடு அழைத்து வந்துட்டார் அவருக்கு ஒரு போனையும் இருக்கு பேர் ஸ்பையர் :)
   அது அம்மாவை அன்புடன் கவனிக்குதாம்

   Delete
 3. ஃபேஸ்புக்கில் நீங்கள் இல்லையா? உங்கள் முடிவு. எனினும் என் கருத்து எதையும் நாம் கையாளுவதில்தான் இருக்கிறது. எதில்தான் ஆபத்து இல்லை? சமீபத்தில் ஜி எம் பி ஸாரின் சமையல் பதிவுத் தளத்தில் அராபிய வார்த்தைகளில் நிறைய பதிவுகளில் பின்னூட்டம் விழுந்திருந்தது. தமிழில் படித்து, அராபியில் பின்னூட்டமா? என்ன தகவல் எங்கு சொல்லப் படுகிறதோ என்று தோன்றியது!

  ReplyDelete
  Replies
  1. அடடா!! சமையல் பதிவில் எதற்கு அப்படி பின்னூட்டம் :(
   நானா இப்போ ஹாப்பியா இருக்கேன் அதிராவேர அடிக்கடி என்னை திடீர் போராளின்னு சொல்வாங்க ..இப்பெல்லாம் நானா அமைதியாவே இருந்திடறேன்

   Delete
  2. சென்று பார்த்தேன் அது எதோ பைப் விளம்பரமாம் கில்லெர்ஜீ சொல்லியிருக்கார் ..ஆனா அந்த விளம்பரங்கள் உணவு பதிவில் எதற்கு ? :) இதைத்தான் சொல்றேன் irrelevant விஷயங்கள் நம் கண் முன்னே வந்திடும்
   அந்த விளம்பரத்தை பிளாக்கர் மேலே தட்டி தட்டி நெக்ஸ்ட் போனா வரிசையா வரும் அப்படி யாரவது போட்டுட்டு போயிருப்பாங்க ராண்டமா ..

   Delete
 4. ஸ்டாம்ப் கலெக்ஷன் இன்னுமா செய்கிறார்கள்! எப்போதோ சிறுவயதில் கொஞ்சம் - கொஞ்சம்தான் - ஈடுபாடு இருந்தது.ஜெஸிக்கு அதைப் பார்த்தாலே தூக்கம் வருகிறது போல!

  காணொளி - அடடே நம்ம செல்லங்களின் சாதனைகள்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ஜெசி கொஞ்சம் ஜெலசி அதிகம் எந்த புக் பேப்பர் எதுவாக இருந்தாலும் அது மேலே வந்து உக்காந்துக்கும் ..சில நேரம் தட்டி விடுவா

   Delete
  2. செல்லங்கள் காணொளி நிறைய vimeo வில் இருக்கு இங்கே இணைக்க முடில

   ஆமாம் இன்னும் ஸ்டாம்ப்ஸ் நாணயங்கள் எல்லாம் சேகரிக்கிறாங்க பிள்ளைங்க ..
   இவள்கிட்ட நிறைய இருக்கு

   Delete
 5. முகநூலில் இருந்து விலகியது சரியான முடிவல்ல
  ஆனால் நிறைய நேரத்தை சேமிக்கலாம்
  ஸ்டாம்ப் கலக்சன் அருமை
  நிறையும் ஒரு கிளப் மெம்பர்தான்

  ReplyDelete
  Replies
  1. எனக்கே நான் சொர்ணாக்கா ஆகிட்டு வரேனோன்னு ஒரு உணர்வு :) நான்லாம் அமைதி காமெடி பீஸ் :)
   பிளாக்ஸ் போதும்னு விட்டுட்டேன் அதை .
   வாவ் நிறையும் கலெக்ட் செயகிறாளா நல்லது ...

   Delete
  2. மதுவின் கருத்துதான் எனது கருத்தும் பேஸ்புக்கில் செட்டிங்கில் நிறைய ஆப்ஷன் இருக்கிறது அதன் மூலம் யார் கருத்து சொல்லாம் யார் நமது பதிவை பார்க்கலாம் யார் நமது நட்பில் இருக்கலாம் என்பது போன்றவற்றை செய்தாலே மிகவும் தைரியமாக உலாவரலாம்

   Delete
  3. இவ்ளோ விஷயம்லாம் இருக்கா :) ஆனா காலம் கடந்து இப்போ எனக்கு தெரிஞ்சி நோ யூஸ் :)
   நான் ஒரு முடிவெடுத்தேன்னா திரும்பி பின்னோக்கி பார்க்க மாட்டேன் ..அதுக்குன்னு மலை உச்சில கொண்டுபோய் நிக்க வச்சிராதீங்க :))ஹாஹாங்

   Delete
 6. முகநூல் விலகல் : நல்லதொரு முடிவு... இருந்தாலும் சரி OK...(!)(?)

  ஸ்டாம்ப் கலெக்ஷன் தொடரட்டும்...

  நன்றி என்றாலே பைரவர்கள் தானே... மனிதன் (என்பவன்) இதை மறக்கக்கூடாது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ டிடி ..ஒதுங்கி இருந்தா டிஅக்டிவேட் செய்யாம ..போய் பார்த்தா என்னனு கியூரியாசிட்டி வருமே :) அதான் மொத்தமா விலகிட்டேன்

   Delete
 7. நட்பை மதித்து சென்று பார்த்தது மிகவும் பாராட்டதக்கது மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அவங்க முகத்தில் அத்தனை சந்தோஷம் ..ரொம்பநேரம் கைகளை அழுத்தி பிடித்துக்கொண்டு இருந்தாங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

   Delete
 8. ///ஒன்றிரண்டு நட்புக்களுக்கு மட்டுமே நான் டீஆக்டிவேட் செய்வதை இன்போக்ஸ் தகவலாக சொல்லியிருந்தேன்//

  அந்த ஒன்றிரண்டு நட்பு லிஸ்டில் நான் இல்லை என்பதை நினைத்து வருத்தம்

  ReplyDelete
  Replies
  1. அதுதான் நாம் இங்கே சந்திக்கிறோமே பிளாக்ல :) இதை விட்டு போகணும்னு தோணும்போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்லிட்டே போவேன் :)

   அத்துடன் அன்னிக்கு டிஅக்டிவேட் செய்யும்போது lent வரைக்கும் வர மாட்டேன்னுதான் அப்போ ஆன்லைன்ல இருந்த ரென்டு பேர்கிட்ட சொன்னேன் அதுக்குள்ள வருத்தம் அப்டின்னலாம் பெரிய வார்த்தை சொல்லி ஒரு பச்சை குழந்தையை நோனோ ஒரு half மஞ்சள்பின்க் குழந்தையை அழ வைக்கக்கூடாது சொல்லிட்டேன் ..:) சாமீ இந்த கமெண்ட் அதிரா கண்ல படவேகூடாது

   Delete
  2. ஹய்ய்ய்ய்ய்ய்யா இப்பத்தான் மனசுக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம். ஹாஹா. நேக்கு இன்பாக்சில் சொன்னிஞ்க தானே? என் பதிவை வைத்து இதுக்கெல்லாம் பயந்து நான் ஓடி ஒளிய மாட்டேன்பா.

   Delete
  3. ஹையோ :) போலிக்கு பயப்படலப்பா ..இப்போ நான் இல்லைனதும் யாரும் வேற போலி ஐடி உருவாகிடக்கூடாதே

   Delete
  4. ஹலோ நிஷா அப்படி என்ன பதிவு போட்டு ஆளை பயமுறுத்துறீங்க லிங்க் ப்ளிஸ்

   Delete
  5. //அதுதான் நாம் இங்கே சந்திக்கிறோமே பிளாக்ல :) இதை விட்டு போகணும்னு தோணும்போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்லிட்டே போவேன் :)//

   பேஸ்புக்குல போகும் போதே சொல்லலையாம் ஆனால் இங்கே இருந்து போகும் போது சொல்லிட்டு போவாங்களாம் GRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR

   Delete
  6. சரி இதுக்கு என்ன பனிஷ்மென்ட் :)

   Delete
  7. பயமுறுத்தினேனா?

   Delete
 9. போலி ஐடிகளுக்கு பயந்து நாம் மூட்டை கட்டிக் கொண்டு போவது சரியல்ல இருந்தாலும் அது உங்கள் விருப்பம் என்பதால் மறுத்துதான் சொல்ல முடியுமா என்ன? முக நூளை எப்படி கையாள வேண்டும் என்று படித்த உங்களுக்க தெரியாதா என்ன?

  ReplyDelete
  Replies
  1. என்னாது பயமா எனக்கா :) அதெல்லாம் இல்லை திடீர்னு சர்ச்ல் இருக்கும்போது இந்த முகப்புத்தகம் லென்ட் பீரியடில் விடணும்னு ஒரு ஸ்பார்க் அடிச்சது அப்போ உடனே சாயங்காலம் வந்து விலகிட்டேன் ..இந்த போஸ்ட் கூட என் வட்டத்தில் இருக்கும் பெண்கள் யாரும் என் பெயரில் ரிக்வஸ்ட் வந்த நானுன்னு நினைச்சிடக்கூடாதே அதுக்குதான் போட்டேன்

   Delete
 10. நீண்ட நாட்களுக்குப்பின் நட்பு புதுப்பிக்கப்பட்டு மகிழ்ச்சியளிப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே.

  மருத்துவத்துறையில் உதவும் பைரவர் பற்றிய செய்தி + காணொளி அருமை.

  இந்தக்காலத்திலும் ஸ்டாம்ப் சேகரிக்கும் மகள், அதை ஊக்குவிக்கும் தாய் + அவற்றின் மீதே படுத்துறங்கும் பூனையார் ஜெஸி ஆகியவை ஆச்சர்யமான தகவல்களாக உள்ளன.

  //எது மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருகிறதோ அதை மட்டும் செய்ய நினைத்தேன், அதையே இப்போது செய்கிறேன்.//

  வெரி குட். நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா அந்த காணொளி பார்த்திங்களா .இங்கே பைரவர்கள் தான் பலருக்கு கைடே :)
   அரசாங்கமே வளர்த்து இயலாதோருக்கு கொடுக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி அண்ணா

   Delete

 11. ஸ்டாம்பு சேர்க்கும் பழக்கம் இப்ப இல்லையென்றாலும் அதை விடாமல் சேர்க்க முயற்சிப்பது மிகவும் பாராட்டதக்கது எந்து அண்ணன் சிறிய வயதில்ல் இப்படி ஸ்டாம்புகளை சேர்த்து வந்தான் அதை பார்க்க பார்க்க சந்தோஷமாக இருக்கும். நமது போட்டோ ஆல்பத்தில் பழைய படங்களை பார்ப்பதைவிட இப்படி பல நாட்டு ஸ்டாம்புகளை சேர்த்து பார்ப்பது என்பதும் மிகவும் அலாதியான விஷயம்

  ReplyDelete
  Replies
  1. அதேதான் எனக்கும் :)மகள் சேர்ப்பதை பார்க்க சந்தோசம் ..ஆனா நானா வெறும் குப்பைகளை மட்டுமே சேர்க்கிறேன் ரீசைக்ளிங் குவில்லிங் செய்ய

   Delete
 12. நாய் என்று யாரவது திட்டினால் பாராட்டாகவே எடுத்து கொள்ள வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ///Avargal UnmaigalMarch 14, 2017 at 5:22 PM
   நாய் என்று யாரவது திட்டினால் பாராட்டாகவே எடுத்து கொள்ள வேண்டும்///

   என் டயறியில் நோட் பண்ணிட்டேன்ன்... எப்பவாவது.:) யாரையாவது~) பாராட்ட உதவும்:))

   Delete
  2. என்னை நாய்ன்னு சொன்ன மிகவும் சந்தோஷப்படுவேன் ஆனால் என்னை நல்லவன் என்று மட்டும் சொல்லிடாதீங்க அப்புறம் எனக்கு செம கோபம் வந்துடும்

   Delete
 13. ம்ம்ம்ம் இந்த பதிவை முழுக்க படிச்சுட்டன் .படிக்க வேண்டி வந்துட்டு.முகநூல் பற்றி சொன்னதால .ஓம் தெரியும் நீங்கள் அங்க இல்லை எண்டு அறிஞ்சனான்.எதுல நாங்கள் சுயம் தொலைக்காமல் சீண்டுப்படாமல் சந்தோசமா போய்ட்டு இருக்கோமோ அந்த பாதைக்கு சட்டெண்டு மாறுரது கூட புத்திசாலித்தனம்தான். மீ க்கு மனசு கொஞ்ச நாளா ப்ளாக் ஐ மூடீட்டு கிளம்பு இது உனக்கு வாண்டாம் என்னுட்டே கிடக்கு பாப்போம்..ஸ்டாம் முன்னாடி சேர்த்தேன் அப்பறமா வீட்ல ஆளாளுக்கு சேர்க்காமல் குடும்பத்தில ஆர் ரெம்ப ஆர்வமா அதிகமா வச்சிருக்கினமோ அவைக்கு குடுப்போம் எண்டு முடிவெடுத்து எல்லாரும் சேர்ந்து அக்கா ஹஸ் க்கு குடுத்துட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. நோ :) சுயம்லாம் சீண்டப்படலை ..ஆனா பிளாக் அதிக சந்தோஷத்தையும் நேரத்தையும் கொடுக்குது ..நீங்க அப்படி அவசரப்படக்கூடாது .அருமையான பதிவுகள் உங்களுடையவை ..நான் பிளாக் அராம்பிச்சப்போ 5 பேர் இப்போ 270 பதிவுகள் வந்துட்டேன் .இங்கே எத்தனை காலமும் எழுத்துக்கள் பத்திரமா இருக்கும் .fb யில் தேட கஷ்டம் ..அதனால் ப்லாகில் இருங்க ..

   Delete
  2. நானும் ஊரில் இருந்தப்போ சேர்த்த ஸ்டாம்ப்ஸ் அப்படியே உறவினர் மகனுக்கு கொடுத்தேன் ..அது மிகவும் நல்லது

   Delete
  3. ஏன் சுரேக்கா.. எதுக்காக கைவிடோணும்... உங்களால் முடியுமெனில் இரண்டையும் மெயிண்டைன் பண்ணுங்கோ.. என்னால முடியல்ல.. நேரமே போதவில்லை.. அதனால்தான் ஒன்று மட்டும் போதும் என நினைச்சேன் இப்போதைக்கு:).

   Delete
  4. /இரண்டையும் மெயிண்டைன் பண்ணுங்கோ//

   @அதிரா ஒன்றை வைத்து மெயிண்டைன் பண்ணுவதே கஷ்டமாக இருக்குது அந்த ஒன்றிடம் இருந்து பூரிக்கட்டையால் அடிவாங்குறவன் கஷ்டம் எனக்குதானே தெரியும் ஆனால் நீங்க இரண்டை வைத்து மெயிண்டைன் பண்ணுங்கோ என்று அட்வைஸ் பண்ணும் போது எனக்கும் இரண்டு வைத்து மெயின்டை பண்ண ஆசை மனதில் வருது..

   இப்படியா ஒரு சின்ன பையன் மனதில் ஆசையை வளர்ப்பது ஹும்ம்ம்ம்

   Delete
  5. garrrrrrrrrrr for avargal truth

   Delete
 14. ஆஹா நியூ போஸ்ட்.. இப்போதான் பார்க்கிறேன்ன்.. கார்ட்ஸ் எல்லாம் அழகாக சேகரித்து வைத்திருக்கிறீங்க...அழகான கார்ட்ஸ்.

  எனக்கு இப்படிப் பழக்கம் சின்னனில் இருந்து இருந்துது.. கடிதங்கள் கார்ட்ஸ் எல்லாம் சேகரித்து வைத்திருந்தேன்ன்.. எங்கள் நாட்டுப் பிரச்சனையால் அடிக்கடி ஏற்படும் இடம்பெயர்வுகளால்ல்.. அத்தனையையும் தொலைத்து விட்டேன்ன்.. அன்றோடு எடுத்த முடிவு இனி எதையும் சேகரிப்பதில்லை என்பது.. இப்போ உடனுக்குடன் எறிந்துவிடுவேன்ன்... அதனல வீடும் துப்பரவாக இருக்கு:).

  ReplyDelete
  Replies
  1. இவை அத்தனையும் கிறிஸ்டின் அனுப்பியவை இதில்லாம ஒரு மூட்டை கார்ட்ஸ் இருக்கே ..அதில் மாமனார் இப்போதில்லை அவர் அனுப்பிய கார்ட்ஸ் பாப்பா பிறந்தப்போ அப்புறம் எங்க வெட்டிங்குக்கு தந்தது அம்மாஅப்பா அனுப்பியது எல்லாம் இருக்கு ஆனா அவங்க இப்போ இல்லை

   Delete
  2. சரி சரி :) நானா கொஞ்சம் நிறைய சேர்த்து வச்சிட்டேன் :) வீச முடியாதே

   Delete
  3. அன்றோடு எடுத்த முடிவு இனி எதையும் சேகரிப்பதில்லை

   @அதிரா இனிமே தங்க நகைகள் மட்டும் பணத்தை தூக்கி எறிய வேண்டாம் எனக்கு அனுப்பிவிடுங்கள் நான் சேர்த்து வைத்து கொள்கிறேன்

   Delete
  4. ஒரு பச்சைக்கல் மோதிரம் அந்த நெக்லஸ் எனக்கு

   Delete
 15. என்னாதூஊஊஊஊ வதனப் புத்தகத்தை மூடிட்டீங்களோ??? சொல்லவே இல்ல?:)... சரி விடுங்கோ எனக்கு சொல்லாட்டிலும் பறவாயில்லை.. கடசி .. அவர்கள் ட்றுத் க்காவது சொல்லியிருக்கலாம்ம்ம்:)..

  நான் அதை மூடி வைத்திருப்பதற்கு காரணம்.. எந்தப் பயத்தாலும் இல்லை.... இரு தோணியில் கால் வைத்து எதையும் ஒழுங்காக நடத்த இயலவில்லை... அதனால புளொக்தான் நல்லது, நிறைய படங்கள்.. விசயங்களை பொக்கிசமாக சேமித்து வைக்கலாம் என நினைத்து இங்கு வந்தேன்ன்...
  விரும்பியவுடன் போய்த் திறப்பேன்ன்.. அது எப்ப என தெரியாது:).

  ReplyDelete
  Replies
  1. நோ நான் திறக்க மாட்டேன் :) எனக்கு இங்கே தான் பிடிச்சிருக்கு ..
   ஹையோ ட்ரூத் இப்போ இன்னும் கோச்சுக்கப்போறார் ..நாமதான் இங்கே மீட் பண்றோமேன்னு சொல்லலை ..ஆனா அவர் என்னை அங்கே தேடலை பாருங்க :) நான் இல்லைன்றதே நான் சொல்லித்தான் அவருக்கு தெரியுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  2. ஆங்ங்ங்ங்ங்ங் இது பொயிண்ட்:).. விடாதீங்கோ ட்றுத்தை.. ஏன் தேடல்ல எனக் கேட்டு ஒரு உண்ணாவிரதம் ஆரம்பிப்போம்ம் தேம்ஸ் கரையில்:)

   Delete
  3. நான் உண்ணா விரதம் நீங்க உண்ணும் விரதம் இருப்போமா :)

   Delete
  4. @அதிரா நீங்க என் கட்சியில் இருந்து எனக்காக வாதாடியதற்காக மிகவும் நன்றி அதனால் உங்களுக்காக கூடிய விரைவில் அவசிச்ச முட்டையில் செய்யும் ரிசிப்பபி சொல்லுறேன் ஆனால் ஏஞ்சல் கட்சியில் சேர்ந்தா உங்களுக்கு சாப்பாடே கிடைக்காது

   Delete
  5. @ ஏஞ்சல் பேஸ்புக்க்கில் இருந்து விலகியதை சொல்லாமல் என் மனதை சுக்கு நூறாக உடைத்துவிட்டு இப்ப நான் தேடவில்லை என்று குற்றம் சொல்லுவது நியாமா?

   காட் இஸ் வாட்சிங்க்

   Delete
  6. GARRRRRRR!""£$%&&p{p_)(*^%""rh

   Delete
  7. Haiyo athiraa they are snake eggs. Hss ss hsssssss

   Delete
  8. அதிரா மதுரைத் தமிழ்னின் முட்டையோ, முட்டை ரெசிப்பியோ இன்னும் வந்துக்கிட்டே இருக்கு....!!!!!

   கீதா

   Delete
 16. மகளின் ஸ்ராம்ப் கலெக்சன் சூப்பரா இருக்கு.. தொடர்ந்து ஊக்கம் கொடுங்கோ... நாய்ப்பிள்ளைக்கு உடம்பில் பாம் போல மெசின் பூட்டியிருக்கு...

  ஜெஸிப்பிள்ளை ஓவர் செல்லம்:)

  ReplyDelete
  Replies
  1. thanks dear ..did you watch the video ....yes jesie is a spoiled brat

   Delete
  2. Yes I watched, can't beleive...

   Delete
 17. என் பெயரைச்சொல்லி பேஸ்புக்குகே முழுக்கா? அம்மாடி மீ பாவம் என தோணவே இல்லையா? என்ன சொன்னாலும் நான் எதையும் விட்டு விலகுவதாக இல்லப்பா. நேரம் கிடைக்கும் போது நான் எல்லா இடமும் உலாவுவேன்.

  சின்ன வயதில் முத்திரைச்சேகரிப்பு என்னிடமும் இருந்தது. இன்னும் பல கிரிட்டிங்க அகட்டுகள் 28 வருடம் முந்தையது கூட வீட்டின் ஸ்டோர் ரூமில் ஒரு பெரிய பெட்டிக்குள் பத்திரமாக இருக்கும், நான் எதையும் வீசுவதில்லை. சேம் சேம் ஏஞ்சல். டேக் கேர்ப்பா

  ReplyDelete
  Replies
  1. வெரி GOOD ..அப்டியே சேமிச்சு வைங்க பிள்ளைங்க பிற்காலத்தில் பார்ப்பாங்க ..லவ்லி மெமரிஸ்

   Delete
 18. சகோதரி... மிகவும் சந்தோசம்... நன்றிகள் பல...

  ஏனென்றால் உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்தை பார்த்தேன்...

  நம் தளம் அழகுக்கு மட்டுமல்ல... முக்கியமாக :-

  (1) உங்கள் தளத்தில் email subscribe செய்தவர்களுக்கு இனி உங்களின் முழு பதிவும் போகாது... பதிவின் தலைப்பும் + படமும் + "jump break" முன்பு உள்ள சில வரிகளும் + "Read more >>"மட்டும் செல்லும்...

  (2) இதே போல் தான் Blog I Follow-விலும் தோன்றும்...

  (3) Reader-ல் பதிவுகளை வாசிப்பவர்களும், இனி உங்கள் முழு பதிவை படிக்க, உங்கள் தளம் தான் வர வேண்டும்...

  (4) இதை விட முக்கியமான விசயம் என்னவென்றால் :- நம் பதிவுகள் சற்று பெரியதாக (நீண்ட பதிவாக) இருந்தால், email subscribe செய்தவர்களுக்கு, அதைப் பதிவு செல்லாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க .என் பதிவுகள் கிலோ மீட்டர் கணக்கில் நீளமா போகும் .பாவம் இத்தனை நாள் மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் செய்தவங்க .இனி சுருக்கமா போகும் நோட்டிபிகேஷன் மெயில் :)

   Delete
 19. அஞ்சல் முத்திரைகளைச் சேகரிப்பதில் நானும் மிக்க ஆர்வம் உடையவன்..

  தங்களது சேகரிப்புகளைக் கண்டதும் பழைய நினைவுகளுக்குள் ஆழ்ந்து விட்டேன்..

  மகிழ்ச்சியுடன் அன்பின் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக நன்றி ஐயா ..இன்னமும் வைத்திருக்கீர்களா அவற்றை ?
   வாழ்த்து அட்டைகள் மட்டுமே எனது சேமிப்பு .முத்திரைகள் என் செல்ல மகளின் சேமிப்பு

   Delete
 20. அந்த நண்பரை சந்தித்தது மகிழ்ச்சி. முகப்புத்தகம் பிரியவிடதுகுது இல்லை பல புதிய நட்புக்களை பெற்று இருக்கின்றேன், மூடுவது என்பது ஆன்மீகப்பக்கம் போகின்ற போது மட்டும் தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் fb நம்மை விடாது அதான் நானே அதை தள்ளி விட்டு வந்துட்டேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 21. கிறிஸ்டியைச் சந்தித்து வந்தது மிக்க மகிழ்ச்சி. அதுவும் அவரது மகன் அவருக்காகவே ஸ்பெஷல் வீடு பார்த்து தங்களுடன் வைத்துக் கொண்டது மிகவும் மனதிற்கு இனிமையாக உள்ளது. அவரை ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்!

  ஸ்டாம்ப் கலெக்ஷ்ன் அட!! வெரிகுட்...வாழ்த்துகள்! மகளுக்கு..

  முகநூல் விலகல் அது உங்கள் விருப்பம். (துளசி: நான் முகநூலில் இருக்கிறேன் அவ்வளவே ஆக்டிவாக இருப்பதில்லை. பல மாதங்கள் ஆகிவிட்டது முகநூல் பார்த்து....கீதா: முகநூலில் இல்லவே இல்லை..)

  ReplyDelete
 22. ஜெசி அழகு! சேட்டை..!! என் செல்லங்களும் இப்படித்தான் நான் எதையாவது அடுக்கும் போது கலைத்துவிடும், இழுக்கும் அவர்களை நாம் கவனிக்க வேண்டும் அதான்...சேட்டைகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்...

  நான் கூட ஒரு பதிவில் எழுதியிருந்தேன் மனிதர்களை நாய் என்று திட்டி நாயைக் கேவலப்படுத்தக் கூடாது. அப்படி அழைத்ததாலேயே நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் உங்களைப் போலவே பைரவர், என்று சொல்லுவது வழக்கம்...

  என் மகனும் முதலில் இப்படித்தான் சொல்லி வந்தான்...இப்போது நாங்கள் இருவருமே, ' நாயே, எருமை மாடே கழுதை, பன்னி அப்படினு திட்டினா சந்தோஷப்படுறோம்....நம்மை எவ்வளவு உயர்வாகச் சொல்லுறாங்கனு...நன்றி சொல்லிடுவோம்...ஹஹ்ஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா ..
   உண்மையில் என் கணவர் போன வருடமே போய் பார்க்கணும்னு சொல்லிட்டிருந்தார் ..நான் தான் கொஞ்சம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன் ..இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு ..
   ஹ்ம்ம் யெஸ் நானும் நாலு கால் வாலாட்டும் செல்லமனே சொல்றது அடுத்தது இல்லாட்டி doggi செல்லம்னுவேன் பைரவர் தான் பெஸ்ட்

   Delete
 23. சின்ன வயசுல நான் நிறைய ஸ்டாம்ப் கலெக்ஷன், காயின் கலெக்ஷன் செய்வேன். மகனும் தொடர்ந்தான்..இப்ப கூட அன்னைக்கு அவன் ஷெல்ஃபை க்ளீன் செய்யும் போது அவன் சேர்த்து வைச்சுருந்த ஸ்டாம்ப், காயின் எல்லாம் திரும்பவும் பத்திரப்படுத்தி வைச்சுட்டேன்...அவனும் சொல்லிட்டுப் போனது அதான்...

  நம்ப நாலு கால் செல்லங்கள் பைரவர்கள் சிறந்த டாக்டர்கள்..மனனிலை சரியில்லாதவர்கள், நட்சத்திரக் குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் கூட இவர்களை ப்ளூக்ராஸ் அனுப்புவது வழக்கம்...ஆனால் இப்போதும் உண்டானு தெரியலை.....நானும் நிறைய வாசித்திருக்கிறேன்.....இந்த லிங்கையும் பார்க்கிறேன்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மகனும் ஸ்டாம்ப்கலெக்ட் பண்ணினாரா ! ஓஹ் நைஸ் ..இப்படி பிள்ளைகளை நிறைய விஷயங்களில் ஈடுபாடு கொள்ள வைக்கணும் கீதா ..அந்த பிரிட்டிஷ் தாத்தா சேர்த்தத்தைத்தான் இப்போ ஆல்பம்ஸ் மற்றும் சிறு பெட்டிகளில் பலநாட்டு ஸ்டம்ப்ஸ் கார்ட்ஸ் என விற்கிறார் ..அதுவும் மலிவாக பிற்கால சந்ததிக்கு உதவட்டும் என .
   நாலு கால் செல்லம் நியூஸ் நிறைய இருக்கு கீதா என்ன ன்ன சில விஷயங்கள் மனதை பாரமாக்கிடுது முடிவு சந்தோஷமாக இருந்தாலும் அடித்த வீடியோ என்று யூ டியூப் காட்டி உள்ளதை நொறுக்கிடுது அதனாலேயே இப்பெல்லாம் நிறைய வெளி செல்லங்கள் செய்தியை பகிர்வதில்லை

   Delete
 24. கிறிஸ்டின்ன பார்த்துடீன்களா..ரொம்ப சந்தோசம்..வாழ்த்துக்கள்..

  fb நான் செலவழிக்கும் நேரம் மிக மிக குறைவு..சில நிமிடங்கள் தான்...


  ஸ்டாம்ப் collection ன ..nice...

  ReplyDelete
 25. ஓ, இதுதான் ரகசியமா? இந்தப் பதிவை இப்போதான் பார்த்தேன்.

  ReplyDelete
 26. அஞ்சுக்கா நான் உங்க ப்ளாக் வரல, ஸோ நீங்க FB டி ஆக்டிவேட் செய்தது எனக்கு தெரியாது, என்னடா அஞ்சுக்கா ஆளயே காணோமேனு FB la இன்பாக்ஸ் ல மேசேஜ் பண்லாம்னு last week தேடும்போது தான் தெரிந்தது, நீங்க டி ஆக்டிவேட் பண்ணது, ஏன் என்னாச்சு ரொம்ப குழப்பம், அதான் நம்ம பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டேன், அப்புறம் சுரேக்கா கேட்டேன், அவங்க தான் நீங்க இங்க இருக்கீங்க சொன்னாங்க அதான் இந்த போஸ்ட், என் பழைய பிளாக் பாஸ்வேர்டு மறந்துப்போச்சு, புது பிளாக் ஓபன் பண்ணிட்டு வர்றேன், இருந்தாலும் இப்படி சொல்லாம ஓடிப்போய்ட்டீங்க...... மிஸ் யூஊஊஊ அஞ்சுக்கா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுபீ ..நலம்தானே ..ஆமாம் அன்னிக்கு காலை வரை டிஅக்டிவேட் செய்யும் ஐடியா இல்லை .பிறகு திடீர்னு தோன்றியது அப்போ அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் கிட்ட மட்டும் சொன்னேன் .நான் ஸ்டேட்டஸா போட்டாலும் டிஅக்டிவேட் செய்தா அதுவும் மறையும் அதான் சொல்லலை ..இனிமே இங்கே பிளாக் பக்கம் வாங்க .

   Delete