அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/6/17

சில நினைவுகள்

                                               
                                                       (மகள் எடுத்த புகைப்படம் )சில நினைவுகள் 
==================


சில பதிவுகளை வாசிக்கும்போதே அவை நம் மனதில் பல பழைய நினைவுகளை மீட்டி எடுத்துவிடும் ..சொல்ல மறந்த கதைகள் பல இருக்கும் அவற்றை நினைவூட்டி விடும் :) அப்படி இரண்டு பதிவுகள் அவற்றின் சுட்டி இங்கே //கஷ்டப்படாமல் வந்த பணம் நிலைக்காதாம். சொல்வார்கள். கஷ்டப் பட்டு சேர்த்த பணம் நம் கையை விட்டும் போகாதாம்... அதாவது அனாவசியமாகத் தொலையாதாம்//எனக்கொரு பழக்கம் இருக்கு யாரும்  கிண்டல் கேலி செஞ்சாலும் பரவாயில்லை உண்மையை சொல்லிடறேன் ..நான் தெருவில் நடக்கும்போது அல்லது பாதை வழியிலோ பணம் அல்லது சில்லறை நாணயங்கள் கிடைத்தால் அதை ஆலயத்தில் சாரிட்டி காணிக்கையில் போட்டுடுவேன் எனக்கு சொந்தமில்லா  பொருளில் பணத்தில் ஈடுபாடு வைப்பதில்லை ..அப்படி எனக்கு அதிகபட்சம் கிடைத்தது ரோட்டில் முழு 20 பவுண்ட் நோட்டு இருமுறை ..மற்ற நேரங்களில் 20 , 50 ,10 என நாணயங்களே  ஒரு பவுண்ட் நாணயங்கள் நாலைந்து என  கிடைச்சிருக்கு ..இங்கே ஒரு பைசாவுக்கு அதாவது ஒரு pence க்கும் மதிப்புண்டு ஆனால் பர்சில் நிறைய வைத்தால் பாரமாகிடும்னு நிறையபேர் ரோட்டோரம் வீசிச்செல்வார்கள் ..இன்னொரு விஷயமும் அந்த பதிவில் பார்த்தது லாட்டரி டிக்கட் ..இங்கே வெளிநாட்டிலும் சுரண்டல் லாட்டரி உண்டு நிறையபேர் வாங்கி வென்றிருக்காங்க ஆனால் நாங்க வாங்குவதில்லை .என்னமோ அது மற்றவர் பணம் என்றே எனது மனதுக்கு தோன்றும் ..
சரி இப்போ பதிவுக்கு செல்வோம் ..  இந்தியா செல்லும்போது நடந்த சம்பவம் .எங்களுக்கு ட்ரான்சிட் பிளைட் கட்டார் டோஹாவில் 3 மணி நேரம் காத்திருக்கணும் அப்போ எங்கள் அருகிலிருந்த குடும்பத்தினர்  மகள் உக்கார்ந்திருந்த  (நாங்கள் அமர்ந்திருந்த நேரமே அவர்கள் அங்கு வந்தார்கள் )சீட்டின் ஓரம் சிறு சுருக்குப்பை இருந்தது அவள் அதை எடுத்து பார்த்தா அதில் ஒரு தங்க செயின் 5  சவரன் எடை இருக்கும் ..இவர்கள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு தங்கள் பையில் போட்டுவிட்டு மக்டானால்ட்ஸ் இல் நுழைந்து விட்டனர் .எனக்கு அதைப்பார்த்து மனதுக்கு கஷ்டமாகி விட்டது அது யாரோ ஒருவர் உழைப்பு அந்த பையில் நிச்சயம் ரசீது இருந்திருக்கும் அந்த கடையிலேயே கொடுத்திருக்கலாம் அல்லது  ஒரு அரை மணிநேரம் அங்கேயே யாராவது தேடி வருகிறார்களா என் காத்திருந்திருக்கலாம் என்றெல்லாம் மனதில் எண்ணவோட்டம் ஓடியது  .சிலவேளை சிசி டிவி காமிராக்கள் இவர்களை படம் எடுத்திருக்கவும் சான்ஸ் இருக்ககூடும்னு இல்லைனா அது கஷ்டப்படாம வந்த பொருளாக இருக்கவும் கூடும்னு நினைத்து 2 மணி நேரம் காத்திருந்து எங்க பிளைட்டை பிடிக்க சென்றோம் ....அதுவரை அதை தேடி யாரும் அங்கே வரவில்லை 


அதை வாங்கியவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !//கஷ்டப்படாமல் வந்த பணம் நிலைக்காதாம். சொல்வார்கள். கஷ்டப் பட்டு சேர்த்த பணம் நம் கையை விட்டும் போகாதாம்... அதாவது அனாவசியமாகத் தொலையாதாம்//

ஸ்ரீராம் பதிவில் இதை பார்த்ததும்  இந்த நினைவுகள் வந்தது,..
சரி அப்படியென்றால் அதை எடுத்து சென்ற குடும்பத்தினருக்கும் அது நிலைக்காமல் போயிருக்குமா ??? எனது மில்லியன் டாலர் கேள்வி ??

2,சகோதரர் வெங்கட் நாகராஜின் சமீபத்திய பிறந்தநாள் http://venkatnagaraj.blogspot.com/2017/03/blog-post_2.htmlhttp://venkatnagaraj.blogspot.com/2017/03/blog-post_2.htmlகொண்டாட்டம் மற்றும் ரிட்டர்ன் கிப்ட்  பற்றிய பதிவு ..பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறில்லை   .இப்போல்லாம் நம் நாட்டினரும் வெளிநாட்டினரை போல பிறந்த நாள் விமரிசையாக கொண்டாட துவங்கியுள்ளார் என நிறைய சம்பவங்கள் கேள்விப்படுகிறேன் .. ..எங்கள் வீட்டில் மகள் பிறந்தபோது அவளது முதல் பிறந்த நாள் மட்டுமே இவரது  சகோதரர்கள் குடும்பத்தினரோடு ..மொத்த கூட்டம் 14 பேர்கள்தான் சிறுவர்கள் பெரியவர்களை சேர்த்து வீட்டிலேயே கொண்டாடினோம் அதோடு முடிந்தது .பிறகு  அந்த நாளில் முதியோர் இல்லத்துக்கு செல்வோம் அதற்கான சந்தர்ப்பம்  தானாக  அமையும் எங்களுக்கு இவளது பிறந்த நாள்  வருவது டிசம்பர் கிறிஸ்மஸ் முன்பு அதனால் அப்போ கட்டாயம் ஆலயத்தினர்  குழுவாக elders ஹோம் செல்வார்கள் அங்கே அவர்களுடன் நாங்களும் கேக்குடன்  சென்று கொண்டாடி விட்டு  வருவோம் .இந்த 2016 டிசம்பர் மகள் தனது நட்புக்களுடன் ரெஸ்டாரண்ட் இல் கொண்டாட விரும்பினாள் .ஆகவே டவுனில் உள்ள ரெஸ்டாரண்டில் 6 பேருக்கு டேபிள்  முன் பதிவு செய்து தந்தோம் மொத்த செலவு இந்திய கரன்சி 4000ரூபாய் இருக்கும் (47 £) ..அதேநாளில் 16 வது  பிறந்தநாளை கொண்டாடிய நபர் (நம்ம நாட்டு பிரகஸ்பதி ) வீட்டு செலவு தனி ஹால் எடுத்து பார்ட்டி வைத்ததில் 700 £ ..இந்திய கரன்சி 57,000 ரூபாய் !!..இதில் ஹைலைட் என்னவென்றால் நண்பர் சமீபத்தில் வேலை இழந்தவர் கடன் வாங்கி பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர் ..இதை சுயதம்பட்டமாக கூறவில்லை ஆனால் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமையை சிறு வயதுமுதலே பழக்குவது நல்லது  என்று கூறிக்கொண்டு .........இந்த பிறந்தாள் செலவு கொண்டாட்டங்களில் மகளுக்கும் ஆர்வமில்லை. போன வருடம் ஒரு நாள் நாங்கள் உஸ்தாத் ஹோட்டல் எனும் மலையாள திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம் அதன் க்ளைமேக்ஸ் காட்சி  அதில் ஜெயப்ரகாஷ் என்பவர் வெளிநாட்டு வேலையை தியாகம் செய்து ஏழைகளுக்கு உணவு செய்து விநியோகிப்பார் அதற்க்கான காரணத்தையும் சொல்வார் ..ஒரு பிச்சைக்காரர் உணவின்றி தனது அழுக்கை உண்பதை கண்டதும் அவர் தனது வெளிநாட்டு வேலை வாழ்க்கையை தியாகம் செய்து
ஏழைகளுக்கு பணியாற்றுவது  போன்ற காட்சியை திரையில் கண்டதும் மகள்  தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள் (இதற்கு மகளை அழ வைத்ததற்காக தனியாக மண்டகப்படி கணவரிடமிருந்து கிடைத்தது தனி கதை  மகள் கொஞ்சம் சென்சிடிவ் டைப் அவளுக்கு 5 வயதிருக்கும்போது பாரிஸ் கார்னரில் பூக்காரம்மா ஒருவரின் குழந்தை தரையில் உறங்குவதை பார்த்து ஏன் ஏன் !! இந்தியாவில் குழந்தைகள்  ரோட்டில் படுக்கிறார்கள் தூசி படாதா வாகனங்கள் இரைச்சல் கேட்காதா என் அப்போவே அழ ஆரம்பித்தவள் ....பிறகு மல்ட்டி கதையை அவளுக்கு பேச்சு தமிழில் வாசித்து காட்டிய போதும்  இப்படித்தான் அழ ஆரம்பிச்சுட்டா !!

படம் முடிந்ததும் அவள் சொன்னது அம்மா இனிமே நான் பணத்தை,உணவை  விரயம் செய்யவே மாட்டேன் உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா ! எனக்கு ஒரு நல்ல அறிவுரையாக அமைந்தது இப்படம் என்றாள் ..புத்தகப்புழு எங்கள் மகள் வீட்டில் தனி லைப்ரரி வைக்கும் அளவு நிறைய புத்தகங்கள் வைத்திருக்க்கா இப்போதெல்லாம் வாசிக்கிறா லைப்ரரியில் எடுத்து ஆனால் விலை கொடுத்து வாங்குவதில்லை :)..

                                         மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..60 comments:

 1. தங்களின் நேர்மையான பாஸிடிவ் ஆன எண்ணங்களின் பிரதிபலிப்பாக உள்ளது இந்தப் பதிவு.

  //அம்மா இனிமே நான் பணத்தை, உணவை விரயம் செய்யவே மாட்டேன் உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா ! எனக்கு ஒரு நல்ல அறிவுரையாக அமைந்தது இப்படம் என்றாள் .. புத்தகப்புழு எங்கள் மகள் வீட்டில் தனி லைப்ரரி வைக்கும் அளவு நிறைய புத்தகங்கள் வைத்திருக்க்கா இப்போதெல்லாம் வாசிக்கிறா லைப்ரரியில் எடுத்து ஆனால் விலை கொடுத்து வாங்குவதில்லை :)..//

  ஆடம்பரம் மிக்க வெட்டிச் செலவுகள் அனைத்தையும் எல்லோரும் தவிர்க்கத்தான் வேண்டும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..முதலில் வந்த உங்களுக்கு ஒரு பாக்கெட் கோயமுத்தூர் ஸ்பெஷல் நேந்திரம் சிப்ஸ் :)
   மிக சரியா சொன்னிங்க ..உணவின் பணத்தின் அருமையை கஷ்டப்படுறவங்களை பார்த்தாதான் நாம் உணர்வோம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

   Delete


 2. // (மகள் எடுத்த புகைப்படம் )///

  அப்படியா மிகவும் நன்றாக இருக்கிறதே.....சரி சரி அடுத்தவங்க புகைப்படம் நமக்கு வேண்டாம் அதனால எங்க எடுத்தாங்களோ அங்கே போய் தொலைத்வர்கள் அங்கே இருந்தால் தேடி கொடுக்க சொல்லவும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இது இது அருமையான ஐடியா.... ஹலோ ட் ருத், உங்கடகிட்னியை கொஞ்ச நாளைக்கு வாடகைக்கு தர முடியுமோ?? :)

   Delete
  2. @ Avargal unmaigal ...garrrrrrrr for you.

   பேச்சு பேச்சா இருக்கணும் நாம் ப்ரண்ட்ஸ் நம்ம target அந்த குண்டு பூனை மட்டுமே

   Delete
  3. ஹலோ மியாவ் கர்ர்ர்ர்ர்ர் ...

   Delete
  4. இங்கே பதிவு போட்டது குண்டு பூனை என்றால் நீங்கள் சொல்வது சரி ஆனால் பதிவு போட்டது நீங்களாச்சே?

   Delete
  5. கிட்னியை வாடகைக்கு தர தயார் ஆனால் வாடகையாக நயன்தாரவை நீங்கள் தரத்தயாரா?

   Delete
  6. அது மட்டும் நடக்காது உங்களுக்கு ரித்திகா தான் :) அந்த பாக்சிங் போடற பொண்ணு

   Delete
 3. படம் அழகு .உங்களுக்கு நல்ல மகள் கிடைத்திருக்கிறாள்.எல்லாவற்றையும் ஈஸியா நியாயமா உள்வாங்கிக்கொள்கிறா. ஓம் அவ்வாறான ஆடம்பரங்களைத்தான் வெட்டி பந்தா எங்கிறது.மீ இப்பிடியான கலியாணங்கள் நிறைய பாத்திருக்கிறன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரே ..இந்த கமெண்டை கணவர் கிட்ட தெரியாம காட்டிட்டேன் ..பொண்ணு அவரை மாதிரியாம் சொல்லிக்கிறார் :)

   ஆமாம் சுரே ..நீங்க ஒரு பின்னூட்டம் போட்டீங்க முந்தி சிருஷ்டி சாய்பாபா உணவு வீணாக்க கூடாது என்பதை பற்றியது .அதிலேருந்து எனக்கும் கொஞ்சம் நடுங்கும் உணவை வீண் செய்ரதில்லை .
   எது தேவையோ அதை மட்டுமே வாங்கி செலவு செய்வோம் ...இப்போல்லாம் புகைப்பட ஆல்பத்துக்கே திருமணங்களில் லட்சக்கணக்கில் செலவாம் ஒரு பெண் தூரத்து உறவு வாங்கிய திருமண புடவை ஒன்றரை லட்சமாம் !!அதை அவரால் எத்தனை முறை கட்ட முடியும் ? வேறு கல்யாணங்களுக்கு கூட அதையே கட்டினாலும் ஓரிருமுறைதானே கட்ட முடியும் :(
   நிறையபேவ்ர் எதற்குன்னு தெரியாம பணத்தை விரயம் செய்றாங்க

   Delete
  2. ///.இந்த கமெண்டை கணவர் கிட்ட தெரியாம காட்டிட்டேன் ..பொண்ணு அவரை மாதிரியாம் சொல்லிக்கிறார் :)///
   இதை நான் படு வன்மையா ஆமோதிக்கிறேன்ன்ன், அம்மாவைப்போல அழுகிறாபோல... துன்பம் வரும்போது சிரிக்கோணும் அதிரா ஆன்ரியைப் போல எனச் சொல்லிக் கொடுங்கோ.... ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கு மேல இங்கின நிக்க மாட்டேன் ஜாமீஈஈஈஈ:)

   Delete
  3. haa haa :)இந்த இடத்தில அந்த பல்லு கடிக்கற emoji போட்டுக்கோங்க
   நற நற கர கர்ர்ர்ர்ர்ர்

   Delete
 4. என் பதிவின் மூலம் ஒரு சிந்தனை! நன்றி, நன்று!

  நானே என் பதிவில் காணாமல் போய் கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு என்றும் சொல்லியிருந்த நினைவு! ஆனால் பாவம் அந்தச் சுருக்குப்பை சொந்தக்காரர்.


  மகள் எடுத்த புகைப்படத்துக்கு, அவரின் சீரிய சிந்தைகளுக்கும் பாராட்டுகள். எங்களை பொறுத்தவரை எங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒரு பாயசத்தோடு சரி. சாப்பிடுபவர்களுக்கு நேரம் ஒத்துவந்தால் அவர்களுக்குப் பிடித்த சமையல் செய்யப்படும்!

  ReplyDelete
  Replies
  1. மிக நல்ல விஷயம் .பிறந்த நாட்களை பெற்றோருடன் குடும்ப நட்புகளுடன் கொண்டாடுவதில் தவறில்லை ஆனா ஆடம்பர செலவுகள் தான் தேவையற்றவை ..வருடா வருடம் ஒரு குட்டியூண்டு கேக் மகளுக்கு விலை 5 பவுண்ட் வரும் அவ்வளவே எங்கள் கொண்டாட்டம் .
   அதையும் கணவர் மட்டுமே சாப்பிடுவார் எனக்கும் மகளுக்கும் ஒரே டேஸ்ட் இனிப்பு பிடிக்காது ..
   எனக்கு ஒரு ஆசை இப்படி யாரவது நகை பெரிய அளவு பணத்தை தொலைத்தால் அதை உரியவரிடம் சேர்க்க எனக்கொரு சந்தர்ப்பம் அமையனும் !!!

   Delete
  2. மகள் நிறைய படங்களை எடுத்திருக்கா விரைவில் வெளியிடுகிறேன்

   Delete
 5. தனக்கு சொந்தமில்லாமல் இருக்கும் பொருளைக் கைப்பற்றினால் தங்காது என்னும் பொருளில் இணையத்தில் நடந்த சிறுகதை போட்டி ஒன்றுக்கு ஒரு கதை எழுதி இருந்தேன். கண்டுபிடித்து பின்னர் இணைப்பு தருகிறேன்!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆஆ !! அப்படின்னா உடனே தாங்க :) நமக்கு இன்னொரு பதிவு ரெடி பண்ணனும்

   Delete
  2. ஒரு வழியாய் அந்தச் சிறுகதையை தேடிக் கண்டுபிடித்து விட்டேன்! இப்போதுதான் நேரம் கிடைத்தது! மூன்றாம் விதி சிறுகதை

   http://engalblog.blogspot.com/2011/10/2011.html

   Delete
 6. லிங்க் தரும்போது தனி ஜன்னலில் திறக்கும்படி இணைத்தால் உதவியாய் இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இப்போ தனி சுட்டிகளாக இணைத்து விட்டேன்

   Delete
 7. வணக்கம்
  நல்ல எண்ணங்களின் வெளிப்பாடு நல்லதே காட்டும் மிக அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ரூபன்

   Delete
 8. மகள் எடுத்த படம் அழகு...

  எதிர்பாராமல் கிடைப்பது எதிர்பாராமல் போய்விடும் - பன்மடங்கு...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ ..ஓஹோ அப்படியும் இருக்கா ..ஆனால் பாவம் இப்படி தொலைத்தவர்கள்

   Delete
 9. >>> ஏன்.. ஏன்!.. இந்தியாவில் குழந்தைகள் ரோட்டில் படுக்கிறார்கள்?.. தூசி படாதா?.. வாகனங்கள் இரைச்சல் கேட்காதா?..<<<

  பிஞ்சு நெஞ்சில் தான் எத்தனை வேதனை...

  இரக்கமுள்ள பெரியவர்களுக்கே விளங்காத வினாக்கள்..

  எல்லாம் காலக்கொடுமையடி தங்கம்!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஐயா ..மகளை இந்தியா கூட்டிட்டு வந்தால் இப்படித்தான் நிறைய கேள்விகள் கேப்பா ..அரசியல்வாதிகள் பானர்களை பார்த்து 5 வயதிலேயே கேள்வி கேட்டா :) ..

   Delete
 10. படம்..சூப்பர்..
  நல்ல புரிதல்கள் ...படம் முடிந்ததும் அவள் சொன்னது அம்மா இனிமே நான் பணத்தை,உணவை விரயம் செய்யவே மாட்டேன் உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா !....

  அருமை...பாராட்டுகள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..மகள் Yorkshire பக்கம் ட்ரிப் போனப்போ எடுத்த படம் அது இன்னும் நிறைய இருக்கு பகிர்கிறேன் இங்கே .
   வளர வளர அவளுக்கு நிறைய அனுபவ பாடங்கள் .ஆனா அவங்கப்பா தான் குழந்தைக்கு அந்த படத்தை போட்டு காட்டின் தப்புன்னு கோச்சிக்கிட்டார் :) எனக்கும் இப்படி காட்சி வரும்னு தெரியாதே !!எப்படியோ உணவை அவள் அன்றுமுதல் வீணாக்குவதில்லை

   Delete
 11. ////சரி அப்படியென்றால் அதை எடுத்து சென்ற குடும்பத்தினருக்கும் அது நிலைக்காமல் போயிருக்குமா ??? எனது மில்லியன் டாலர் கேள்வி ??
  ///
  இதைத்தான் நானும் கேட்டு களைச்சுப் போயிட்டோம்... பயந்து பயந்து வாழ்வோரை விட கொள்ளை அடித்தும் அடுத்தவரை வருத்தியும் வாழ்வோரே நல்லா இருக்கிறார்கள் .... அதனாலேயே என் பாட்டை மாத்திக் கொண்டேன்ன்ன்ன் .....
  யாரும் நன்மை செய்தாலும் நீங்கள் தீமை செய்யுங்கள்.... யாரும் மெய்யை சொன்னாலும் நீங்கள் பொய்யை சொல்லுங்கள்... நேர்மையாய் வாழ்வதில் எதுவுமே இல்லையேஎ ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அந்த பாட்டு நினைவிருக்கே :)

   தப்பு செய்ரவங்க ஏமாற்றவங்க எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க அதிரா .இங்கே நடக்கிற கூத்து கேள்விப்பட்டா மயக்கமே வரும் .
   பெனிபிட்ஸ்சுக்காக நலல இருக்கற குழந்தையை டிஸ்லெக்சிக் என்று வற்புறுத்தி ஸ்பெஷல் நீட்ஸ் பள்ளியில் போடறாங்க பலர் எதற்கு தெரியுமா.... நிறைய சலுகைகள் :(
   நிறைய இருக்கு இப்படி .ஆனா தப்பே செய்யாத நம் போன்றோர் மனதின் ஒரு மூலையில் செய்தா என்ன தவறை என்று செய்ய நினைத்தாலும் வம்பில் மாட்டிப்போம் :)

   Delete
 12. ஹலோ பிஸ்ஸூ... லொட்டறி விழுந்தா... உங்களுக்கு வாணாம் எனில் எங்களுக்கு தாறது... ட் ருத் க்கு கொடுக்கலாம்.. சுரேக்காவுக்கு கொடுக்கலாம் அல்லது எவ்வளவோ ஓபனேஜ் இருக்கே இதுக்கெல்லாம் கொடுக்கலாம்... அதை விட்டுப் போட்டு எடுப்பதில்லை புய்க்காது என சுய நலவாதியா இருக்கப்பூடாதூ சொல்லிட்டேன்...:)
  நாங்க அப்பப்ப எடுப்பமே... இதனால இதுக்கு நாங்க கொடுத்த காசில எத்தனையோ குடும்பங்கள் வாழுகினமே ஹா ஹா ஹா வின்னேஸ் ஐச் சொன்னேன்ன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) எனக்கும் ஒரு ஆசை இருக்கு ஒருமுறையேனும் லாட்டரி விளையாடனும் அதில் வின் செய்யணும் அதுவும் முதல் பரிசு அதில் கால்வாசி எனக்கு மீதி முக்கால்வாசி நானே ஏழைகளுக்கு சென்று கொடுக்கணும் .இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கிட்ட கொடுத்தா அது அவங்களுக்கே தெரியாம உரியவரிடம் செல்வதில்லை ..ஆனா இன்னும் அந்த லாட்டரியை வாங்கத்தான் தயக்கமா இருக்கு :)
   என் பேரில் கடையில் உள்ள lotto கார்டெல்லாம் வாங்கறீங்களா ப்ளீச் :))

   Delete
 13. அதேதான் அஞ்சு, சின்ன வயதிலிருந்தே காசைக் கண்டால் மிதிக்கக்கூடாது எடுத்து கோயில் உண்டியலில் போடோணும் என சொல்லித் தந்திட்டினம், அதனால இங்கு பார்த்தால் நான் எடுப்பதில்லை ஏனெனில் உண்டியல் இல்லையே போட, ஆராவது எடுக்கட்டும் என தாண்டிப் போயிடுவோம், சமீபத்தில் ஒரு 20 பவுண்Dஸ் கதை இருக்கு பின்பு வாறேன் எதுக்குமே ரைம் இல்லாமல் இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா !இங்கே எக்கச்சக்கமா விழுந்து கிடைக்கும் சிலர் அந்த விஷிங் வெல்லில் போடுவாங்க ஆனா பலர் வீசிடுவாங்க எனக்கு கஷ்டமா இருக்கும் பார்க்க ..எங்க ஆலயத்தில் இரண்டாவது காணிக்கை இப்படி சாரிட்டிக்கு என்றே எடுப்போம் நான் அதில் இப்படி எடுத்த காசை போட்டுடுவேன்

   Delete
 14. ///
  1, நம்ம ஸ்ரீராம் வாக்கிங் போன பதிவு :)
  http://engalblog.blogspot.com/2011/08/3.html////
  என்னாதூஊஉ நம்ம ஸ்ரீராம் வாக்கிங் எல்லாம் போறாரோ? இது நாட்டுக்கு நல்லதில்லையே:)...

  ReplyDelete
 15. போட்டோ எடுத்த குட்டி ஏஞ்சலில் கைக்கு ஒரு வைர வளையல் பரிசா அளிக்கிறேன்ன்ன்... காவி வந்து இங்கே போட்ட மம்மிக்கு ஒரு கப் வல்லாரை ஊஸ் இலவசமா கொடுக்கிறேன்ன்ன்ன்:)

  ReplyDelete
 16. ///இதை சுயதம்பட்டமாக கூறவில்லை ஆனால் ///
  என்னாதூஊஉ சொல்றதெல்லாம்ம்ம் சொல்லிப்போட்டு, சுயதம்பட்டமா கூறல்லியா? ஹையோ என்னால முடியேல்ல முருகா,,,, இம்முறை தேம்ஸ்ல குதிக்க மாட்டேன்ன்ன்ன்ன் காசிக்குப் போக மாட்டேன்ன்ன்ன்ன்ன் ஆனா இதுக்கு ஒரு வெளிக்குத்துப் பதிவு போட்டே தீருவேன்ன்ன்ன்ன்ன் இது அந்த ட் ருத்தின் உப்புமா செய்த கறுப்புப் பான் மீது சத்தியம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. ennai paartha paavama thonalliya ungaluku :)

   Delete
 17. பதிவு நல்லாருக்கு. இளமையில் சொல்லிக்கொடுப்பதுதான் கடைசிவரை வரும். வெறும்ன சொல்லிக்கொடுப்பதைவிட, நாம் அதன்படி நடப்பதைப் பார்த்துத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்ளும்.

  மனித மனத்துக்கு ஆசை அதிகம். தனக்கு உரிமையில்லாதது கிடைத்தால், இறைவன் சோதிக்கிறான் என்று எண்ணிக்கொண்டாலே போதும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை தமிழன் :) சரியா சொன்னிங்க நாங்க எல்லா விஷயத்திலும் ரோல் மாடலாக இருக்கிறோம் ஆனால் எங்களுக்கும் அப்பாற்பட்டு பல நற்குணங்கள் இறைவன் கிருபையால் அவளுக்கு வந்திருக்கு .வீட்டில் பொய் சொல்வது சின்ன விஷயத்துக்கும் இல்லை ..எதை பேசினாலும் அவளை முன்னிறுத்தியே பேசுவோம் .இங்கே வெளிநாட்டு லைப்ல சில சங்கடங்கள் இல்லை எதையும் தைரியமாக பேசுவாள் மகள் ..நமக்கு கிடைத்து இருப்பதே போதுமென்ற மனமிருந்தால் பிறர் பொருள் மீது ஆசை வராது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 18. எதிர்பாரமல் கிடைப்பது மிக எழுதில் காணாமல் போய்விடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..உண்மைதான் நமக்கு சொந்தமில்லாத எதிர்பாராது கிடைத்தால் அது தங்காது

   Delete
 19. எங்கள் வீட்டிலும் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை என் குழந்தையும் அதை விரும்புவதில்லை என் குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாலம் என்று ப்ளான் பண்ணி வைத்திருந்த போது என் குழந்தையை வாழ்த்திவிட்டு அடுத்த நாள் என் தாயார் மறைந்து போனார். இரண்டாவது பிற்ந்த நாள் அன்று சென்னைக்கு வந்ததால் அங்குள்ள அனாதை ஆசிரமத்திற்கு உணவளித்து கொண்டாடி மமிழ்ந்தோம் முன்றாவது பிறந்த நாளின் போது எல்லா நண்பர்களின் வற்புறுத்தலால் அவர்களின் ஆசைக்காக கொண்டாடினோம் அதன் பின்னால் நாங்கள் கொண்டாடியதே இல்லை

  ReplyDelete
  Replies
  1. கொண்டாட்டங்கள் தவறில்லை ..அவை அளவுக்கு மீறும்போதே பிரச்சினை வரும் ,,பணம் விரயமாவதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை ..அது மகளுக்கு நன்கு புரிந்ததாலோ என்னவோ அவளும் இப்போல்லாம் விரயம் செய்யாம சேமிக்கிறா
   பேசிக்கலி நானா கொஞ்சம் கஞ்சம் :) தேவையின்றி பொருள் கூட வாங்க மாட்டேன்

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க குழந்தைக்கு பிடிக்காது எனச் சொல்லிச்சொல்லியே அனைத்தையும் அடக்கிடுவீங்கபோல இருக்கே.... அனுபவிக்கிற வயசிலதான் எதையும் அனுபவிக்கோணும்... 10 வயதில் செய்வதை 60 இல் ஆசைப்பட்டாலும் செய்ய முடியாது அதனால அந்தந்த வயதில் தாராளமா அனுபவிக்க விடோணும் , வெருட்டிடக்குடா கர்ர்ர்:)

   Delete
 20. தெருவில் பணம் கிடந்து அதனை பார்க்கும் வாய்ப்புகள் இதுவரை எனக்கு கிடைத்தது இல்லை ஆனால் இங்கு வேலை செய்யும் இடத்தில் கிழே கிடப்பதை பார்க்கும் வாய்ப்புக்கள் அதிக அளவு கிடைத்தன அப்போதுதெல்லாம் அப்படி கிடைத்த பணத்தை ஆபிஸில் கொடுத்துவிடுவேன் அப்படி கொடுக்க கார்ணம் எங்கள் ஆபிஸில் செக்யூரிட்டி டிபார்ட்மெண்டில் வேலை செய்பவர் இப்படி பணத்தை கிசே போடுவிட்டு அதன் பின் காமிரா வழியாக அதனை கண்காணித்து கொண்டிருப்பார்கள் இப்படி அவர்கள் செய்வது எங்கள் நேர்மையை சோதிக்கவே அப்படி அவர்கள் சோதிப்பார்கள் என்பது எனக்கு தெரியும் என்பதால் இடுவரை நேர்மையாளனாகவே இருந்து வந்துதிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ ..வெளிநாடுகளில் இந்த இன்விசிபிள் காமிராக்கள் எங்கிருக்கும்னு தெரியாது ..நிறையபேர் இப்படி நேர்மையா இருந்ததால் நற்பெயர் பெற்றிருக்காங்க ..எங்க ஆலயத்தில் கேர்டேக்கர் வேலைக்கு வந்த ஒருவர் இப்படி ஒரு பிளாஸ்டிக் காரி பாகை பார்த்து திறக்காமல் குப்பை தொட்டியில் போட்டார் அதற்கும் அவருக்கு திட்டு விழுந்தது அதில் முக்கிய கடிதங்கள் வைத்து இவரை சோதிச்சிருக்காங்க !!அதனால் வேலை செய்றா இன்டர்வியூ போற இடத்தில எக்ஸ்டரா கவனம் தேவை

   Delete
 21. நீங்களும் அதிராவும் வாக்கிங்க போகும் போது அந்த பகுதியில் நான் வரும் வாய்ப்பு இருந்தல் நீங்கள் கிழே போட்டு செல்வதை நான் பார்க்க நேர்ந்தால் அதை எடுத்து வைத்து கொண்டு, எடுத்தற்கு அதிகமாக இரட்டிப்பாக உங்களுக்கு திருப்பி தருவேன் அது புன்னகை என்னும் பொன் நகையை மட்டுமே ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) நான் நடக்கும்போது புன்னகை மட்டுமே வீசிச்செல்வேன் :) எனக்கு நகை அணிவதில் விருப்பமேயில்லை ..அதிரா நடக்கும்போது சிலவேளை விழுவது அவங்க பல் செட்டாகவும் இருக்கக்கூடும் :) கவனமா எடுங்க :) சொல்லிட்டேன்

   Delete
  2. என்னைப் பொறுத்து சிரிச்சிட்டுப் போவோர் எல்லாரும் நல்லவிங்க:) சிரிக்காமல் போவோர் எல்லாம் நல்லவிங்க இல்லே:)... இப்பூடிக் கணக்கெடுப்பதாலேயே நான் பலமுறை நம்பிக் கெட்டிருக்கிறேன்ன்ன்ன்:)...

   ///@அஞ்சு//// கர்ர்ர்ர்ர் எப்படா திருப்பி அடிக்கலாம் எனக் காத்திருந்தமாதிரி இருக்கே...:)... புதுசா யோசிச்சு அடிக்கோணும் மீயைப்போல ஹா ஹா ஹா:).

   Delete
  3. நான் நடக்கும்போது புன்னகை மட்டுமே வீசிச்செல்வேன் :) // ஹைஃபை ஏஞ்சல்!!!

   கீதா

   Delete
  4. அதிரா நடக்கும்போது சிலவேளை விழுவது அவங்க பல் செட்டாகவும் இருக்கக்கூடும் :) கவனமா எடுங்க :) சொல்லிட்டேன்// ஹஹஹஹஹ்ஹ அதிரா சொல்லவே இல்லை பல் செட்டுனு!!ஹிஹிஹிஹி....அது சரி தங்கப் பல்செட்டா??ஹிஹிஹிஹிஹி அப்ப மதுரைத் தமிழனுக்கு ஜாலிதான் ஹஹஹ்

   கீதா

   Delete
  5. ஹா ஆஹா :) அது ஆதிகாலத்து பல்செட்டாம் டைனோசர் போட்டதுன்னு கேள்வி :)பாவம் அவர்கள் ட்ரூத்

   Delete
 22. படம் அழகு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க மொஹம்மத்

   Delete
 23. மகள் எடுத்த படம் மிக அழகாக இருக்கிறதே!! வாழ்த்துகள் சொல்லிடுங்க குட்டி ஏஞ்சலுக்கு!

  ஆம் மகளும் குட்டி ஏஞ்சலாகத்தான் 'ஏஞ்சலாக' வளர்ந்து வருகிறார்!! பெற்றோர் எப்படி அப்படியே குழந்தைகளும் பெரும்பாலும் என்பது உறுதியாகி வருகிறது..

  நல்ல கருத்துள்ள பதிவு!!

  கீதா: மீ டூ ஏஞ்சல். கீழே கிடைக்கும் நாணயமோ, ரூபாய் தாளோ நபர் தெரிந்தால் எளிது கொடுத்துவிடலாம் இல்லை என்றால் கோவில் உண்டியலில்தான்...எனவே என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே தத்துவம்...நம் பொருள் இல்லாதது நமக்கல்ல...மட்டுமில்லை நம் பொருள் என்று சொல்லிக் கொள்வது எதுவுமே இல்லை இவ்வுலகில். எல்லாமே இயற்கை/இறைவனைச் சார்ந்தது. சட்டத்திற்காக வேண்டுமென்றால் நமது என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் இறைவனின் சட்டத்தில் அதற்கும் இடம் இல்லை... இன்று நமது நாளை யாருடையதாகுமோ??!!

  உங்களைப் போலவே நகை அணிவதில் சுத்தமாக ஆர்வமில்லை....நீங்கள் சொல்லும் உங்கள் எண்ணங்கள் என்னுடையதைப் பிரதிபலிக்கிறது ஏஞ்சல்!!! என்னவோ ஒரு கண்ணிற்குப் புலப்படாத ஒரு மெல்லிய உணர்வு பூர்வமான உறவு, நட்பு நம்மை இணைக்கிறது உறுதிப்படுத்துகிறது என்றும் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. //எனவே என்னையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்./// yes Done :)அதேதான் கீதா நிறைய விஷயங்களில் நமக்கு ஒற்றுமை அனிமல் லவ்வர்ஸ் ஒரே ஊர் ,ஒரே thoughts :)
   இப்படி நிறைய இருக்கு நமக்குள்ள :) ஊருக்கு வந்தா நிச்சயம் சந்திக்கணும் நாம்

   மகள் நிறைய படங்கள் எடுத்திருக்கா விரைவில் பதிவேற்றுகிறேன் இங்கே

   Delete