அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/3/17

மகிழ்ச்சி


Christine 
=======

                                                                                       

                                                      

நான் ரொம்ப்ப்ப  சந்தோஷமா இருக்கேன் இது அவசர அவசரமா எழுதிய பதிவு ..சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க :)

கொஞ்சம்  பின்னோக்கி செல்கிறோம் ..நாங்க இந்த நாட்டுக்கு வந்த புதிதில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம் சுமார் 1  வருடம்  அங்கு வசித்தோம் ..என் கணவரை பக்கத்து வீட்டு ஜன்னல் வழியே குதிக்க வைச்சேனே யாருக்கு நினைவிருக்கோ இல்லையோ அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நினைவிருக்கும் :) ..இப்ப பதிவுக்கு வரேன் 
அந்த வீட்டின் ஒரு பக்கம் வசித்தது  வஹீதா குடும்பம் அடுத்த பக்கம் இருந்தது கிறிஸ்டின் ஆல்ப் என்ற பிரிட்டிஷ் குடும்பம் .அவர்கள் இருவருக்குமே 60 வயதிருக்கும் மிக அன்பானவர்கள் அதில் க்றிஸ்டினுக்கு varicose veins பிரச்சினை உண்டு ரொம்ப கஷ்டப்படுவார் அவர்களுக்கு ஒரே மகன் ..இந்த கிறிஸ்டின் அழகான கார்ட்ஸ் வித விதமாக செய்வார் ..என் கணவர் குப்பை bin வாராவாரம் அவர்களுடையதையும் எடுத்து வெளியில் வைப்பார் அவர்கள் பகுதியையும் துப்புரவு செய்வார் .கிறிஸ்டின் எங்க மகளின் பிறந்த நாளுக்கு தவறாமல் கார்ட்ஸ் தருவார் .அது நாங்க  வீடு மாறி வந்தபின்னும் தொடர்ந்தது ,,..பிறகும் தவறாமல்  கிறிஸ்துமஸ் மற்றும் மகளின் பிறந்த நாளுக்கு தனது  கையால் செய்த கார்ட்ஸ் அனுப்புவார் ..நான்  கார்ட் மேக்கிங் ஹாபி தேர்வு செய்ய காரணம் க்ரிஸ்ட்டின் தான்  .அடிக்கடி வெளியில் செல்லும்போது மார்க்கெட்ல கிறிஸ்ட்டினை சந்திப்பேன் ..பிறகு மூன்று வருடங்கள் முன்பு alf இறைவனடி சேர்ந்தார் ..அப்புறம் கிறிஸ்டின் வேறு வீடு மாறி செல்வதாக புது அட்ரஸ் எனக்கு அனுப்பி வைத்தார் ..நானும் எனது குவில்லிங் கார்ட்ஸ் அவரது முகவரிக்கு வருடந்தோறும் அனுப்பி வைப்பேன் ஒரு முறை அனுப்பி வைத்த கார்ட் எங்களுக்கு மீண்டும் வந்தது .

                                                                                    
.அப்போ மனசுக்கு கவலையா போச்சு மீண்டும் அடுத்த வாரமே அவரது கார்ட் புதிய முகவரியிலிருந்து  வந்தது  அதில் புதிய முகவரிக்கு மாறி விட்டதாக போன் நம்பரும் தந்தார் .உடனே அலைபேசினேன் அவருடன் ..

பிறகு போன வருடம் அவரிடமிருந்து மகளுக்கோ அல்லது கிறிஸ்துமஸுக்கோ கார்ட்ஸ் வரலை :( தொடர்ந்து 10 வருடம் வர தவறாதது அவர் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் .. அவங்க முகவரியை தேடிப்பார்த்தால் அவர்கள் அங்கில்லை ..என் சிறந்த பாதி(கணவர் ) நல்லா  திட்டினார் என்னை ..நிறைய முறை அவர்களை சென்று பார்க்கணும்னு சொல்வார் நான் கொஞ்சம் shy type ..எதற்கு தொல்லை கொடுக்கணும்னு அவர் சொல்லும்போதெல்லாம் தவிர்த்து விட்டேன்  ..நான் ஒரு நாள் அவரது மொபைலுக்கு  தொடர்பு கொண்டு அழைக்க  நாட் இன் யூஸ்  என வந்தது ..அழுது விட்டேன் .சிறந்த பாதியும் இன்னுமென்னை அழ வைத்தார் .எண்ணை அழிக்க மனமின்றி அப்படியே வைத்திருந்தேன் ..சுரேஜினியின் பதிவு ஒன்றை பார்த்ததும் இன்னும் அழுகை எனக்கு அச்சோ க்ரிஸ்டினை சந்திக்காமல் போனோமே என .அவர் எண்ணை மற்றும் அவரனுப்பிய கார்ட்ஸை பார்க்கும்போது மனதை பிழியும் ....நாங்க  வருடா  வருடம் கிறிஸ்துமஸ் நேரம் வாழ்த்து அட்டைகளை தனியே நூலால் கட்டி தொங்க விடுவோம் ..இந்த 2016 கிறிஸ்துமஸுக்கும் அவற்றை மாட்டி படமெடுத்து முகப்புத்தகத்தில் பதிந்தேன் ..(இப்போ நான்  அங்கில்லை அதனால் அப்படங்கள் அங்கேயே இருக்கு) .அதை பார்த்து இன்னும் மனது வலிக்கும் ..இன்று போஸ்ட் மேன் லெட்டர்ஸை போட்டு சென்றார் ..நானும் ரொம்ப நேரம் கழித்து ஹாலுக்கு சென்று பார்த்தா !!! ஆச்சர்யம் !!!! எனக்கு பரிச்சயமான கிறிஸ்டினின் கையெழுத்து ..

                                                                                     
ஒரு கார்ட் அனுப்பியிருக்கார் .வீட்டு .முகவரி மாறியது என குறிப்பிட்டு இருக்கார் ..இம்முறை நிச்சயம் அவர்களை சந்திக்கணும் ..

அவர் எங்களுக்கு அனுப்பிய கார்ட்ஸ் அனைத்தும் பத்திரமா பெட்டில இருக்கு இப்போ எடுக்க முடியலை முன்பு ஒரு பதிவுக்கு எடுத்த படத்தை இங்கு இணைக்கிறேன் .கிறிஸ்டின் போன்ற அன்பானவங்க எப்பவும் நோய் நொடியின்றி நல்ல இருக்கணும்னு இறைவனை வேண்டுகிறேன் ...


பின் குறிப்பு.. ..அந்த ஜாய் கார்ட் திரும்பி வந்ததும் அதை அப்போ மொபைல் போனில்  படமெடுத்து வைத்திருந்தேன் இவரைப்பற்றி பதிவொன்று எழுத நினைத்து அப்படியே கிடப்பில் விட்டது ...இன்று அது பயன்பட்டிருக்கு ..அது  2014 கிறிஸ்மஸ்  நேரம் செய்தனுப்பிய கார்ட் ..

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..


38 comments:

 1. மந்தையிலே இருந்து இரண்டு ஆடுகள்.... எங்கோ திசை மாறிச் சென்று விட்டன..... இரண்டும் சந்தித்தபோது..... பேச முடியவில்லையேஏஏஏஏஏ....
  ஓ மை கடவுளே எல்லோரும் நல்லா இருக்கணும் சாமீஈஈஈ.... நானும்தேன்ன்ன்ன்ன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா :) காணாமல் போன ஒரு ஆட்டுக்காக தான் 99 ஆடுகளை விட்டுவிட்டு அதை மேய்ப்பன் தேடி அலைவாராம் அது கிடைத்ததும் பெரிய சந்தோஷமே

   Delete
  2. அதிரா நீங்க நல்ல இருப்பிங்க ஆனா உங்களை சுற்றி இருப்பவர்கள் நல்லா இருக்கணுமே என்றுதான் எனக்கு கவலையா இருக்கு கடவுலே எல்லாதையும் நீதான் காப்பாற்றணும்

   Delete
  3. ஆஹா இந்த வருஷம் எனக்கும் கார்ட் வந்தாலும் வரலாம்

   Delete
  4. Address anuppunga ..card thedi varum 😇

   Delete
  5. ஆடு மட்டுமா மரமும் அப்படித்தான் என்று சொன்ன தோழிக்கு வாழ்த்துக் கவிதை எழுத இந்த வாரம் முன்னர் போல தனிமரம் மாடு மேய்க்க்க முடியவில்லை [[[

   Delete
  6. //காணாமல் போன ஒரு ஆட்டுக்காக தான் 99 ஆடுகளை விட்டுவிட்டு அதை மேய்ப்பன் தேடி அலைவாராம்//

   ஆம். இது எல்லா மனித மனங்களுக்கு பொருந்தும்.

   Delete
  7. @ஸ்ரீராம் :) ஆமாம்

   Delete
 2. ஆமா ஆமா ட் ருத் க்கு கார்ட் வராது, கைக்கு சங்கிலி வருது வெயிட் பண்ணுங்கோ... அஞ்சுட ஆத்துக்காரர் பக்கத்து வீட்டு ஜன்னலால உள்ளே நுழைவதற்கு நீங்க உடந்தை என சொல்லிட்டா... எழுத்தில ஆதாரம் கிடைச்சிருக்கெனக்கு.... இனியும் பொறுப்பனோ பொயிங்கிட்டேன்ன்ன்ன்...

  எப்படியாவது தண்டனை கிடைக்கும் மினிமம் என் சந்தித்தவேளை ரிவியூ 10 தரம் படிக்கோணும் என்றாவது தீர்ப்பு வழங்க போராடுவேன்.... பூஸ் ஒன்று புலியாகுதே....

  ReplyDelete
  Replies
  1. Haiyo paavam 😂😂😂😂 avargalunmaigal bro ..ithukku neenga British jail porathu better

   Delete
 3. ////அப்போ மொபைலில் படமெடுத்து வைத்திருந்தேன் ////// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆஆ சுய தம்பட்டம் தாஆஆஆஆங்க முடியல்ல முருகா... சுவீட் 16 இலயே எனக்கு பிறசர் வந்திடப்போகுதே.... தன் மொபைலில் படமும் எடுக்கலாமாமாஆஆஆஆஆஆஆஆம்ம்ம்ம்:) விடுங்கோ மீ காசிக்கே போயிடுறேன்ன்ன்ன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. Avasaramaa type senjenaa phone missed :) 😆😆😆😆😆😆

   Delete
 4. ////
  இது அவசர அவசரமா எழுதிய பதிவு .////
  இதைத் தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லயாஆஆஆ??? அவசரமா எழுதினதே 6 மைல் தூரம் போகுதே... அப்போ ஆறுதலா எழுதியிருந்தா அதிராட கதி என்னாகியிருக்கும்:) என்னால முடியல்ல முருகாஆஆஆ.... எனக்கு காசி ல ஒரு ஏசி ரூம் புக் பண்ணித் தாங்கோ ஆராவது ... புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு:).

  ReplyDelete
  Replies
  1. அதிரா :) தாங்க்ஸ் ..பெரிய பதிவு போட்டா bp ஏறும்னு உன்மையை சொன்னதற்கு அடுத்த பதிவு உங்களுக்கே :)

   Delete
  2. பாலா பாலான்னு ஒரு டைரக்டர் இருக்கார் அவர்கிட்ட சொன்னா உங்களுக்கு காசி யில் இடம் புக் பண்ணுவார் ..அவருக்கு நிறைய ப்ரண்ட்ஸ் அங்கிருக்காங்க :) டவுட்னா நான் கடவுள் படம் பாருங்க

   Delete
  3. ஏன் காசிக்கு போவது ! அங்கு விரைவில் எல்லாம் போக முடியாது அதிரா[[ என்னூடன் அஞ்சலின் அக்காச்சியை சபரிமலைக்கு வரச்சொல்லுங்க நம் அவலம் எல்லாம் வழிநெடுக பேசியே/சொல்லியே/ கொல்ல தயார் ஆனால் சினேஹா பற்றி எதுவும் கேட்கக்கூடாது டிலா நோ டிலா[[ [[

   Delete
  4. முன்பு பசுமையா இருக்கும்னு சொல்வாங்களே சபரி மலை பயணம் செய்தவங்க ..இப்போ அந்த இடத்தையும் அசுத்தமாக்கிட்டாங்களா :(

   Delete
 5. உங்க அன்பு/நேசம் எல்லாம் நிச்சயம் போலி அல்ல அஞ்சலின்,! ஏதோ வலை தந்த நல்ல அக்காசியை நானும் தொடர்கின்றேன் நட்பில்! பதிவி மனதை நெருடியது ! நீங்கள் காட் போட்டீங்க நான் இன்னும் மெயில் போட்டுக்கொண்டே இருக்கின்றேன் என் தங்கையை தேடி வாத்து நலமா இருக்க !

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..ஆமாம் ..மெயில் போகவில்லை ரிட்டர்ன் ஆகிறது ..பிரார்த்திப்போம் ..நலமாக இருக்கட்டும் தங்கை
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. வாவ்!! உலகம் சிறியதுதான் ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்!!!

  நம் அன்பு உண்மை என்றால் அது நிச்சயமாகத் தொடரும்! எத்தனை வருடங்கள் ஆனாலும்!!! இது உறுதி!

  கீதா: ..//என் கணவரை பக்கத்து வீட்டு ஜன்னல் வழியே குதிக்க வைச்சேனே யாருக்கு நினைவிருக்கோ இல்லையோ அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நினைவிருக்கும் :) ..// ஹலோ எனக்கும் நினைவிருக்காக்கும்!! ஹப்பா இன்னும் மறதி நோய் வரலைப்பா....ஹிஹிஹி!!!

  ReplyDelete
  Replies
  1. ருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா ..எனக்கு அந்த கார்டை பார்த்ததும் அவ்வளவு சந்தோசம் ..
   அடுத்த ஞாயிறு செல்கிறோம் அவர்களை சந்திக்க .நேற்றே செல்வதாக இருந்தது ..பயங்கர மழை அதான் போகல்ல

   @கீதா :) ஹா ஹாங் :) அவ்வ நானே வாயை (லிங்க் )குடுத்து மாட்டிகிட்டேன் :)
   ஒரு அழி ரப்பர் அனுப்பறேன் மனசில் அதை மட்டும் அழிச்சிருங்க :)

   Delete
  2. ஹஹஹஹ்

   நெட் இல்லாமல் போனதால் வர இயலவில்லை ஏஞ்சல்! எல்லோரிடமும் நீங்கள் மிகவும் அன்புடன் இருப்பதற்கு உங்களுக்கு வாழ்த்துகள்...மிக மிக நல்ல ஒரு விஷயம்....மிக்க சந்தோஷம் இந்த நிகழ்வு!!!

   கீதா

   Delete
 7. பழகியவர்கள் மேல் இவ்வளவு அன்பு வைக்கும் நீங்கள் வாழ்க. அவர் மீண்டும் தன் இருப்பைத் தெரிவித்த சந்தோஷத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் :) நான் எப்பவுமே திடீர்னு யாராச்சும் காணாமப்போனா தேடுவேன் பிளாக்கில் மற்றும் முகப்புத்தகத்தில் ..இவர் நன்கு பழகியவர் தொடர்ந்து 10 வருடங்கள் அவர் கார்ட்ஸ் அனுப்பினார் இந்த கிறிஸ்துமஸ் மட்டும் வரல்லைன்னதும் ரொம்ப துக்கமாகிடுசி .அநேகமா அவர் இப்போ உடல் நலமில்லாமலிருக்கிறார்னு தான் நினைக்கிறேன் ..எப்பவும் கைப்பட கார்ட் செய்றாவர் கடையில் வாங்கி அனுப்பியிருக்கார் இந்த கார்டை ..அடுத்த வாரம் அவரை சந்திக்க போறோம்

   Delete
 8. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் எனது மகிழ்ச்சியில் பங்குகொண்டதற்கும் நன்றி சகோ

   Delete
 9. அழகான நட்பு, நட்பு தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் எனது மகிழ்ச்சியில் பங்குகொண்டதற்கும் மிக்க நன்றி கோமதி அக்கா

   Delete
 10. பரவாயில்லை. ஞாபகம் வச்சிருக்காங்களே. இங்க சொந்தக்காரங்களே முகத்தைத் திருப்பிட்டுப் போறாங்க....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சரவணன் ..இங்கே வெளிநாட்டினர் இப்படித்தான் .மிக அன்பானவர்கள் அதுவும் முதியோர்கள் பேசுவாங்க பேசுவாங்க :)நாம் தலையாட்டி கேட்பதில் அவர்களுக்கு சந்தோசம் ..ஒரு பெண்மணி எனக்கு குவில்லிங் சாதனங்கள் விலையுயர்ந்தவை ஒரு பெட்டி நிறைத்து தந்தார் இன்னொருவர் மணிகள் இப்படி நிறைய பேர் அவர்களின் நினைவாக சிலவற்றை என்னிடம் வைத்துள்ளேன் ..
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. மனதில் அன்பு கொன்டவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவதும் அவர்கள் அளித்த பரிசுகளை பொக்கிஷமாய்க் கொண்டாடுவதுமாய் இருக்கும் உங்களின் உண்மையான, அன்பான மனது என்றும் மகிழ்வுடனிருக்க மனதார வாழ்த்துகிறேன் ஏஞ்சலின்!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா ..இங்கே பல வருஷ வாழ்க்கையில் நான் சந்தித்தவர்கள் அநேகம் பேர் இப்படித்தான் ..கிறிஸ்டின் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் விரைவில் படமெடுற்றது போடுகிறேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா

   Delete
 12. அழகான நட்பு... சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் எனது மகிழ்ச்சியில் பங்குகொண்டதற்கும் மிக்க நன்றி சகோ குமார்

   Delete
 13. "இம்முறை நிச்சயம் அவர்களை சந்திக்கணும் .." - அப்படின்னு திருப்பியும் லேட் பண்ணிறாதீங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை தமிழன் :) அதேதான் இந்த முறை கண்டிப்பா விசிட் செய்யறோம் அவங்களை ..போன ஞாயிறு போவதக இருந்தது இங்கே ஹெவி ரெயின் அதனால் அடுத்த ஞாயிறு மாற்றிட்டோம் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete