அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/28/17

தாய்மொழியும் வெளிநாட்டு வாழ் இந்தியரின் பிள்ளைகளும்


                                                                                      
தாய்மொழி
============


(இது ஜி எம் பி ஐயா அவர்களின் சமீபத்து பதிவை பார்த்து என்  மனதில் உதித்தது )

                                                                                     
                           


                                    எங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி முதல் அனைவருமே நன்கு படித்தவர்கள் ஆனாலும் வீட்டில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள் .பாட்டி 1929 இல் ஆசிரியப்பணி புரிந்தவர் தாத்தா ஆயர் மற்றும் ஆர்மியில் இருந்தவர் ..நான் தாத்தாவை பார்த்ததில்லை ஆனால் பாட்டி ..அவரது  மகன்களுடனோ இல்லை பேரப்பிள்ளைகளுடனோ ஆங்கிலத்தில் பேசி நான் பார்த்ததில்லை அந்த காலத்து ஆங்கில ஆசிரியை .அவரது பிள்ளைகளும் அப்படியே ஆங்கில புலமை எல்லாம் பணியிடத்தில் மட்டுமே ..எங்களுக்கும் வீட்டில் மம்மி டாடி போன்ற சொற்பிரயோகம் தடா ..
நாங்கள் வளர்ந்த பகுதி ஆங்கிலோ இந்தியர் அதிகம் வசித்த பகுதி ஆதலால் அவர்களுடன் பேசும்போது விளையாடும்போது மட்டும் ஆங்கிலம் .மற்றபடி வீட்டில் தமிழ் ...தமிழ் மட்டுமே ..நான் வாழ்ந்த வளர்ந்த சூழல் என்னை தமிழில் பேச யோசிக்க வைத்தது ..ஆனால் தமிழ் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு மேல் நான்  எடுத்ததில்லை என்ற உண்மையை இங்கு கூறிக்கொள்கிறேன் ..
இன்னொரு விஷயம் எங்கள் வீட்டில்  ழ ள ல வித்தியாசம் தெரியாமல் ஒருவரும் பேசவே முடியாது அனைவருக்குமே ஒவ்வொரு வார்த்தையும் தெள்ளத்தெளிவாக வரும் ..இந்த மூன்றையும் ஒரே மாதிரி ள என்று மகள்  உச்சரிப்பது தந்தை வழி மரபணு :)
இதைப்பற்றி இங்கே சொல்லியிருக்கிறேன் பார்க்கவும் ..http://kaagidhapookal.blogspot.co.uk/2015/10/loud-speaker-29.html


                         மகள் ஜெர்மனியில் பிறந்தவள் ..அங்கு மழலை மருத்துவர் kinderartzt //pediatrician இடம் குழந்தை  பிறந்து ஒரு வாரத்தில் எடுத்து செல்ல வேண்டும் அப்போது அவர் எங்களுக்கு அறிவுறுத்தியது .நீங்கள் உங்கள் வீட்டில் என்ன மொழியில் பேசுகிறீர்களோ  அதாவது உங்கள் தாய்மொழியில் மட்டுமே குழந்தையுடன் உரையாடுங்கள் அவள் கிண்டர்கார்ட்டன் சென்றவுடன் தானே ஜெர்மன் மொழியை அங்கு கற்றுக்கொள்வாள் வேறு பல மொழிகளையும் அவளால் கற்கும் இயல்பு தானே உருவாகும் ஆகவே உங்கள் தாய்மொழியில் மட்டுமே பேசுங்கள் என்றார் .. தாய் மொழியின்றி வேறெந்த மொழியிலும் பிற்காலத்தில் பிள்ளைகளால் தேர்ச்சியடைய முடியாது என்று திட்டவட்டமாக கூறினார் அந்த ஜெர்மன் மருத்துவர்.அவ்வாறே அவளது 3 வயது வரை வீட்டில் தமிழில் மட்டுமே பேசினோம் எங்களை சுற்றி ஜெர்மானியர் மட்டுமே ஐந்தாறு இலங்கை தமிழர் குடும்பங்கள் தவிர .. .


                               3 வயதில் மழலையர் பள்ளி சேர்ந்த 4 மாதத்தில் நன்கு ஜெர்மன் மொழியை பேச ஆரம்பித்துவிட்டாள் மகள் அப்போதும் நாங்கள் வீட்டில் தமிழில் பேசுவதை நிறுத்தவில்லை .பல நேரம் நாங்கள் ஜெர்மன் மொழியில் தவறான உச்சரிப்பு செய்யும்போது எங்களை திருத்தவும் முனைவாள் .அவள் தமிழில் சிந்தித்து ஜெர்மன் மொழியில் நீச்சலடித்தாள்..அப்போதே நான்  நிறைய தமிழ் மழலையர் பாடல்களை அவளுக்கு கற்று கொடுத்திருக்கிறேன் மற்றும் எங்கள் கிறிஸ்தவ கீர்த்தனைகள் பல சொல்லி கொடுத்தேன் பிறகு அவளது 5 வயதில் இங்கே இங்கிலாந்து வந்தோம் காரணம் அவள் அங்கிருந்தா ஆங்கிலம் தெரியாமற்போய்விடுமோ என்ற ஐயத்தால் அப்போ எனது பெற்றோர் உயிருடன் இருந்ததால் இந்தியாவில் செட்டிலாகும்போது ஆங்கிலம் உதவியாக இருக்குமென்ற காரணத்தாலும் இங்கு குடிப்பெயர்ந்தோம் ..பிறகு இங்கு வந்த  உடனே அவள் ஆங்கிலத்தை இலகுவில் கற்க ஆரம்பித்து விட்டாள் எல்லாம் பிள்ளைகள் வளரும் சூழல் பொறுத்தே ஒரு மொழியை இலகுவில் கற்று தேற முடிகிறது என்பது எனது கணிப்பு ..இதற்கிடையில் நானும் எவ்வாறேனும் அவளுக்கு தமிழ் எழுத வாசிக்க கற்றுக்கொடுக்க தீர்மானமாக இருந்தேன் வந்தது வும் வந்தது தெரியாம அடுத்த வந்த யில் அவளது தமிழ் கற்கும் ஆசைக்கு ஆப்பு வந்தது ..
பிடிவாதமாக "இல்லை" எனக்கு இந்த curly எழுத்து வேண்டவே வேண்டாம் என்று அழ ஆரம்பித்து விட்டதால் நானும்  எழுத பழக்கு வதை நிறுத்தி விட்டேன் ..பிறகு 2008 களில் சாட்டிலைட் சானல் ஜெயா  டிவி மட்டும் தெரியும் அதில் மொழி மாற்றம் செய்த கிருஷ்ணா மற்றும் ராமாயணம் தொடர்களை மகள் விரும்பி பார்க்க ஆரம்பித்தாள் ..அதில் வருவது போல //அன்னையே தந்தையே 
நீங்கள் வாருங்கள், அமருங்கள் உணவு தாருங்கள் ,நீராடி வருகிறேன்  என்றெல்லாம் உரையாடி எங்களை மயங்கி விழ வைத்தாள் :)..


          அவளது விருப்பத்திற்கேற்ப நாங்களும் கந்தன் கருணை திருவிளையாடல் சரஸ்வதி சபதம் போன்ற தூய தமிழ் படங்களை வாங்கி போட்டு காட்டினோம் .ஆனால் அப்போதே அவள் கேள்வி கேட்க துவங்கினாள் எதற்கு நீங்கள் அடிக்கடி pig எனும் வார்த்தையை உபயோகிக்கிறீர்கள் ..அது ஒன்றுமில்லை இதை பண்ணி அதைப்பண்ணி என்று நான் பண்ணி வார்த்தையை  பேசுவது குழந்தையை குழப்பி விட்டது போலும் :) 
பிறகு திடீரென  சன் டிவி மற்றும் இதர சானல்களும் தெரிய  துவங்க .மகளின்  தமிழ் கொஞ்சம் நடனமாட ஆரம்பித்தது அது மானாட மயிலாட குஷ்பூ நமீதா கலகலக்கலாகா புண்ணியத்தில் :) இதென்ன நமக்கு வந்த சோதனை என்று பயம் துளிர்க்க ஆரம்பித்தது அதற்குள் சாட்டிலைட் சானல்கள் வேறு சாட்டிலைட் நெட்ஒர்க்கிற்கு மாற மகளின் தமிழ் பிழைத்தது ..இதற்குள் இந்தியா பயணம் இருமுறை ஊரில் உறவினர்கள் நம்ம ஊர் தமிழும் மற்றும் ஆங்கிலத்தில் பேச முனைய இவளோ அழகிய தமிழில் பதில் கூற அவர்களுக்கே ஆச்சர்யம் எப்படி எவ்வாறு இவள் தமிழில் பேசுகிறாள் என்று வியந்தோருக்கு நான் சொன்னது அவளது தாயும் தந்தையும் தமிழர்கள் நாங்கள் வீட்டில் பேசுவது தமிழ் அதனால் இதில் வியப்பேதுமில்லை என்றேன் ,அதற்கு ஒரு உறவினர் சொன்னார் ..பரவாயில்லை நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழை மறக்கவில்லை ..இங்குள்ளோரே பெருமைக்கு வீட்டில் வெளியில் ஆங்கில எருமையை மேய்க்கும்போது நீங்கள் தமிழை மறக்கவில்லை என்றார் .எனக்கு மனதில் தோன்றியது ..தமிழில் பேசினேன் வளர்ந்தேன்  எழுதினேன் எப்படி எனக்கு மறக்கும் .


                      நான் ஏற்கனவே முகப்புத்தகத்தில் நெவில் என்பவர்  பற்றி கூறியிருக்கிறேன் .இவர் எங்கள் நண்பர் 90 வயதாகிறது .அவரது தாத்தா தென்னிந்தியர் பெயர் ராஜ்குமார் என்றார் வேறொரு தகவலும் தெரியலை ஆனால் தாத்தா ஊரில் தென்னை மரங்களும் ரப்பர் தோட்டமும் இருந்தது என்கின்றார் நெவில் ..ஆனால் அவர் பேச்சு நாங்கள் பேசுவதைப்போல ஒலித்தது என்றார்  ..(நாங்கள் தமிழில் மற்றொரு தமிழருடன் பேசுவதை கேட்டார் )
இவரது தாத்தா குடும்பம் செயின்ட் வின்சன்ட் தீவுகளுக்கு பல ஆண்டுகள் முன்பு குடிபெயர்ந்தனர்  அங்கே ஆங்கிலத்தில் மட்டும் பேசியதில் தமிழோ அல்லது அவர்களது மலையாளமோ எதோ என்ன தாய்மொழி என்று இவருக்கு சொல்ல தெரியலை .

                           இந்நிலை வருங்கால சந்ததிக்கு ஏற்படக்கூடாது என்றால் பெற்றோர் நாம் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் ..அது வீட்டில் அவரவர் தாய்மொழியை பிள்ளைகளுக்கு பேசவாவது கற்று கொடுக்க வேண்டும் ..இப்போ வெவ்வேறு மாநில கணவன் மனைவியாக இருந்தால் ஏதேனும் ஒரு இந்திய மொழியை ஈகோ பாராமல் தேர்வு செய்து அதில் பேச வேண்டும் ..இங்குள்ள இரண்டாம் மூன்றாம் தலைமுறை பஞ்சாபியரும் குஜராத்தியரும் அவர்களது கலாச்சாரத்தை பிள்ளைகளுக்கு சொல்லி தருகிறார்கள் நவராத்திரி தீபாவளி பைசாகி அனைத்தும் தெரியும் ஆனால்  பல பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மொழி வீட்டில் புழங்கும் ஆங்கிலமாகிவிட்டது .ஆனால் இலங்கை தமிழர் குறிப்பாக யாழ்ப்பாணத்து ஈழத்து தமிழர்கள் வீட்டிலும் வெளியிலும் தாய் மொழி தமிழில் பேசி பழகுகிறார்கள் ..தமிழை  உயர்வகுப்பிலும் எடுத்து படிக்கிறார்கள் ..இங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் அவர்களாலேயே புத்துயிர் பெறுகிறது ஆனால் நம் சினிமாக்கள் புண்ணியத்தில் லொள்ளு ஜொள்ளு ,வொய் திஸ் கொலவெறி ,அசால்ட் வரலாம்வரலாம் பயப்படுறியா கொமாரு கொண்டே புடுவேன் மச்சி குவார்ட்டர் சொல்லேன் , போன்ற வார்த்தைகள் இப்போது காதில்  விழுகிறது கொஞ்சம் வேதனை :( தருகிறது ..

எங்கள் மகள் //அப்பா ..நீங்க அம்மாவை ரொம்ப கிண்டல் செய்யாதீங்க அப்புறம் அம்மா இன்னிக்கு சமையல் செய்ய மாட்டாங்க //
என்று என்னை கிண்டலடிக்கும்  அளவுக்கு தமிழ் பேசுகிறாள் ..ஆங்கிலத்தில் யோசித்தாலும் தமிழில் பேசுவதால்  சில குழப்பங்களும்  நேரிடாமலில்லை ..
mum has allergy என்பதை அம்மா அலர்ஜி வச்சிருக்காங்க ,mom has severe migraine  என்பதையும் அப்படியே அம்மா தலை வலி  வச்சிருக்காங்க என மழலை தமிழில் பேசினாலும் அவளுக்கு தாய்மொழி தமிழ் என கூறிக்கொண்டு மேலும் தமிழை வளர்க்க தீக்குளிக்கவோ இல்லை ஆங்கில எழுத்துக்கள் மீது சாணி அடிக்கவோ ,கரி பூசவோ அல்லது தூய தமிழில் பெயர் வைக்கவோ தேவையில்லை ..செந்தமிழ் அரசி ,தேன்மொழி என்று பெயரிட்டு ஒரு வார்த்தை கூட தமிழ் பேச முடியாத தமிழ் பிள்ளைகளையும் நான்  பார்த்திருக்கிறேன் 1994 களில் நம்ம சென்னையில்தான் .. ஆங்கிலமும் ஹிந்தியும் நமக்கு எதிரியில்லை..தமிழில் சுவாசித்து பிற மொழிகளில் நீச்சலடிப்போம்   ..நாம் அவரவர் நம் வீட்டில் தாய் மொழியில் பிள்ளைகளுடன் பேசினாலே எழுத வாசிக்க தெரிந்தாலே  போதுமானது தமிழ் நீடூழி   வாழும்  என்று எனது சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன் ...
========================================================================

74 comments:

 1. தமிழ் வாழ்க .. தமிழுடன் வாழ்க!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா ..எந்த தொலைவில் இருந்தாலும் தமிழ் வாழும் நாம் வாழ வைப்போம்

   Delete
 2. மொழி என்பதே Just a way of Communication க்கு பயன்படக்கூடியது மட்டுமே. இதில் நாம் உயர்வு தாழ்வு ஏதும் பார்க்க வேண்டாம் என்பது எனது எண்ணமாகும். இன்று அனைத்து மொழியினரும் தங்கள் வேலை நிமித்தமாகவும், பிழைப்புக்காகவும் உலகெங்கும் பரவி வாழ வேண்டியுள்ளது. பலமொழிகள் கற்று தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் காணும் போது எனக்கு மிகவும் பெருமையாகவும் சற்றே பொறாமையாகவும்கூட இருப்பது உண்டு.

  தாங்களும் தங்கள் முன்னோர்களும் எங்கு வாழ்ந்திருப்பினும் தமிழை மறக்காமல் மதித்து, அதனையே வீட்டிலும் பேசிவந்து, தங்கள் குழந்தைக்கும் அதனை கற்பித்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது.

  தாங்கள் சொல்வது போல எந்த மொழியும் நமக்கு எதிரியல்ல.

  //தமிழில் சுவாசித்து பிற மொழிகளில் நீச்சலடிப்போம்.//

  அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக நன்றி கோபு அண்ணா ..இங்கே உள்ள ஆங்கிலேயருக்கு எங்க மகள் மற்றும் பிற இந்திய பிள்ளைகள் தாய்மொழி ஆங்கிலம் மற்றும் எக்ஸ்டரா மொழி ஜெர்மன் பிரென்ச் என பேசுவதில் ஆச்சர்யம் .
   எனக்கும் வாய்ப்பு அமைந்திருந்த ஊரில் நிச்சயம் ஹிந்தி கற்றிருப்பேன் .இங்கேயுள்ள இலங்கை தமிழர் தன் கஸ்டமர்களுடன் உடன் வேலை புரியும் குஜராத்தியருடன் ஹிந்தியை பேசி பேசி தேர்ந்து விட்டார் ..என்னமாய் பேசுகிறார் ஹிந்தி ..இன்னொரு பஞ்சாபி என்னை பார்த்து சொன்னார் நீங்கள் சென்னை காரர்கள் தான் இந்தி பேசுவதில்லை ஆனால் பார் இந்த இலங்கையர் எப்படி வெளுத்து வாங்குகிறார் என்று

   Delete
 3. வந்திட்டேஏஏஏஏஏன்ன்ன்ன் அஞ்சு இந்த வசனம் கொஞ்சம் இடிக்குதே....
  //// எங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி முதல் அனைவருமே நன்கு படித்தவர்கள் ஆனாலும் வீட்டில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள் ///
  அதாவது நன்கு படித்தவர்கள் தமிழில் இல்லை என்பதுபோல பொருள்படுதே....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) அப்போதெல்லாம் மம்மி டாடி என்று அழைக்கும் கலாச்சாரமும் ஒரு வார்த்தையும் தமிழில் பேசக்கூடாது என்ற சில குடும்பங்களையும் கண்டு வளர்ந்த அனுபவத்தில் சொன்னேன் அதிரா ..இதைப்பற்றி சொன்னா அனுமார் வால் ஆகிடும் ஏற்கனவே பெரிய பதிவு ஆகிவிட்டது

   Delete
  2. ல்லை அப்படியில்லை அர்த்தமில்லை ..ஹையோ பூனை அதாவது பணியிடத்தில் ஆங்கிலத்தில் ஆங்கிலேயருடன் உரையாடினாலும் வீட்டில் ஒன்லி தமிழ் என்பதை சொன்னேன்

   Delete
  3. அது சில எங்கள் குடுமப நண்பர்கள் மற்றும் நான் வேலை செய்த இடத்தில பார்த்ததை வைத்து எழுதியது

   Delete
 4. //// ..இந்த மூன்றையும் ஒரே மாதிரி ள என்று மகள் உச்சரிப்பது தந்தை வழி மரபணு :)////
  நோஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா

  நான் மேலுருந்துதான் கீழே வருகிறேன்ன்ன் அஞ்சுவைப்போல கீதாவைப்போல தலைகீழாகத் தொங்க மாட்டேன்ன்ன் ... இனி ஈவினிங் தொடர்கிறேன்ன்ன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) இதுக்குதானயாரையும் கிண்டல் செய்யக்கூடாது என்பது உங்களை கசடதபற சொல்ல வைச்சேன் கடைசீல என் நிலைமையை பாருங்க வீட்லரேண்டு பேருக்குமே ழ வராது :)

   Delete
 5. //mum has allergy என்பதை ’அம்மா அலர்ஜி வச்சிருக்காங்க’, mom has severe migraine என்பதையும் அப்படியே ’அம்மா தலை வலி வச்சிருக்காங்க’ என மழலை தமிழில்//

  மிகவும் ரஸித்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) ஆமாம் அண்ணா ..ஆரம்பத்தில் ரசிச்சிட்டே நிறுத்தாம இருந்தோம் பிறகு அவளை திருத்தி ஒழுங்கா பேச வைக்கிறோம் :)

   Delete
 6. ஒன்றிலிருந்து ஒன்று என்பது போல் என் பதிவு உங்களை சிந்திக்க வைத்து ஒரு இண்ட்ராஸ்பெக்ட் செய்ய வைக்கிறது காண மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி .உண்மையில் உங்கள் பதிவு என்னை பலகோணங்களில் சிந்திக்க வைத்து எழுத வைத்தது ..இன்னும் நிறைய உதித்தது ஏற்கனவே பெரிய பதிவாகிவிட்டதால் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன் ..

   Delete
  2. மற்றவ்ரகளிம் பதிவை படிக்கும் போது நம் மனதில் எழும் சிந்தனைகள்தான் பல புதிய பதிவுகள் உருவாவதற்கு காரணம் என்னுடைய பல பதிவுகள் இப்படிதான் மற்றவர்களின் பதிவில் வந்த ஒரு வரி நம்மை சிந்திக்க வைத்து பதிவுகள் எழுத தூன்டும்

   Delete
  3. ///என்னுடைய பல பதிவுகள் இப்படிதான் மற்றவர்களின் பதிவில் வந்த ஒரு வரி நம்மை சிந்திக்க வைத்து பதிவுகள் எழுத தூன்டும்///
   ஆமாம் ஆமாம் இதை நான் படுபயங்கரமா வழிமொழிகின்றேன்... என் போஸ்ட் ட்ராவ்ட் உள்ளே வந்து, புடலங்காய் பதிவு படிச்சதனாலதான், தனக்கும் புடலங்காய் ரெசிப்பி போடும் எண்ணம் வந்திருக்கு என்பதை பப்ளிக்கில் ஒத்துக்கொண்ட உங்கள் உயர்ந்த குணத்தை நான் மதிக்கிறேன் ட்றுத்:).

   Delete
  4. ஆமாம்! ஏஞ்சல், மதுரை அதிரா எனது பதிவுகள் கூட பல இப்படித்தான் பலரது பதிவுகள் பார்த்து அதிலிருந்து எழும் சிந்தனைகள்...அந்தப் பதிவுகளைக் குறிப்பிட்டும் சொல்லி...ஆனால் இன்னும் அப்படி எழுந்த பதிவுகள் பாதியிலேயே அப்படியே இருக்கின்றன..ஹிஹிஹி சூடும் ஆறிவிட்டது !!! மதுரை தமிழன் சொல்லியிருப்பது போல் ஒரு வரி கூட எழுத வைக்கும்...

   கீதா

   Delete
 7. ஆகா ..
  மகிழ்ச்சிதரும் பதிவு

  சாட்டிலைட் டி விகள் இன்னொரு பக்கம் ஆச்சர்யம்

  முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..மிக்க நன்றி ..ஐயா ஜி எம் பி அவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும் :) என் மனதில் இருந்தவற்றை அப்படியே வெளிக்கொணர வைத்தது அவர் பதிவும் அங்கு பின்னூட்டத்தில் பகிரப்பட்ட பல பதிவர்களின் கருத்துக்களும்..
   ஆஸ்ட்ரா ஹாட் பேர்ட் யூரோபேர்ட் என பல இங்குண்டு ..நாங்கள் 2009 முதல் கனெக்சனை நிற்பாட்டி விட்டோம் மீண்டும் நல்ல தமிழ் சானல்கள் மக்கள் தொலைக்காட்சி போன்றவை அலைவரிசை கிடைத்தால் மட்டும் கனெக்ஷன் கொடுக்க நினைத்துள்ளோம்

   Delete
  2. என் வீட்டு குழந்தை தமிழ் கற்றுக் கொண்டது தமிழ் டிவியை பார்த்தும் மூவிகளை பார்த்தும்தான் அவ நல்லா கிண்டல் பண்ணுவா அவளுக்கு பிடித்த நடிகை மனோரம்மா கோவை சரளா நடிகர் வடிவேல் போன்ற காமெடி ஆட்கள்தான் அதனால்தான் என்னவோ அவளிடம் கிண்டல்கள் அதிகம்

   Delete
  3. நாங்கள் தமிழ் கற்றுகொடுக்க முயற்சித்தோம் ஒரு பள்ளியில் சேர்த்து ஆனால் அது ஒத்துவரவில்லை இன்னொரு பள்ளி சற்று தொலைவிலும் ஞாயிற்று கிழமை மட்டும் கற்றுதருவதால் அதை விட்டு வீட்டோம் காரணம் அன்றுமட்டுதான் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக் இருக்கும் நேரம் என்று......


   ஆனால் என் குழந்தைக்கு ஹிந்தி கற்று கொடுத்து இருக்கிறோம் எழுத படிக்க தெரியும் மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்வாள் ஆனால் தொடர்ந்து பேசிப் பழகாத்தால் பேச்சு கொஞ்சம் கஷ்டமே


   பள்ளியில் அவள் ஸ்பானிஷ் கற்றுக் கொண்டு இருக்கிறாள்

   Delete
  4. haa haa :) அது உங்ககிட்டயிருந்து வந்ததுன்னு தோன்றுகிறது ..அந்த நகைச்சுவை உணர்வு :) இயல்பாகவே பெண் பிள்ளைகள் தந்தையின் குணத்தை பெற்றிருப்பார்கள் அது வடிவேலு கோவை சரளா பார்த்து இன்னமும் கூடியிருக்கும்

   Delete
  5. எங்க பொண்ணுக்கு வடிவேலு அடிவாங்குவது பிடிக்காது :) ஆனால் வடிவேலு காமெடிகள் மிகவும் பிடிக்கும் .

   Delete
  6. உங்கள் மகள் ஸ்பானிஷா ..ஓஹ் இங்கேயும் ஸ்கூலில் பிரென்ச் ஸ்பானிஷ் ஜெர்மன் இருந்தது .ஜெர்மன் எங்களுக்கு ஈஸி என்பதால் அவளும் அதை தேர்ந்து எடுத்தாள் ..எத்தனை மொழிகளை வேணும்னாலும் படிக்கட்டும் இக்கால பிள்ளைகள் ரொம்ப க்ளெவர் எளிதில் புரிந்து மனதில் இருத்துவார்கள் .எந்த மொழியானாலும் தொடர்ந்து பேசலைன்னா டச் விட்டுப்போயிடும்

   Delete
  7. என் மகன் அமெரிக்காவில் ஒரு வருடன் படித்த போது ஸ்பானிஷ் தான் எடுத்துக் கொண்டான். இங்கு வெட்னரி சேர்வதற்கு அது கிடைக்கும் முன் சென்னை கிறித்தவ கல்லூரியில் சேர்ந்திருந்தான். அப்போது தமிழுடன், ஜெர்மன் மொழியும் எடுத்துக் கொண்டான். அவனுக்கும் நிறைய மொழிகள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் உண்டு..ஆனால் அவன் குறைபாடே எழுதுவது மற்றும் வாசிப்பது...இப்போதும் எழுதுவது கொஞ்சம் கஷ்டப்படுகிறான் என்றாலும், வாசிப்பது நன்றாகவே செய்கிறான். உரையாடவும் வாசிக்கவும் கற்றுக் கொள்ளலாமே!! அது போதுமே!! பிழைத்துக் கொள்ளலாம்...

   கீதா

   Delete
 8. ///பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு மேல் நான் எடுத்ததில்லை என்ற உண்மையை இங்கு கூறிக்கொள்கிறேன் ..///


  என்னா தன் அடக்கம் என்னா தன் அடக்கம் ஏஞ்சலுக்கு அந்த காலத்தில் 75 எடுப்பது எல்லாம் கஷ்டம்தான் ஏஞ்சல் உண்மையை சொன்ன பிறகு நான் உண்மையை சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது அதனால் நானும் ஒரு உண்மையை சொல்லுறேன் நான் எல்லா பாடத்திலும் 35 மார்க் எடுத்திடுவேன் அட ஏஞ்சல் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது எல்லாப்பாடத்திலும் சேர்த்து முப்பதைந்தா என்று.... நான் மிக சூப்பாராக படிப்பேன் அதனால் ஒவ்வொரு பாடத்திலேயும் 35 மார்க் எடுத்திடுவேன் இங்க ஒன்று சொல்ல மறந்துட்டேன் 36 மார்க் எடுத்த்தேன் என்பதைவிட எங்க வாத்தியார் பல சமயங்களில் இந்த மதுரைத்தமிழன் படிக்கலைன்னாலும் மிக நல்ல பையனாக அமைதியா அப்பாவியாக இருக்கிறானே அதனால் இவனுக்கு பாஸ் மார்க் போட்டுவிடுவோம் இவன் மனசை நோக அடிக்க வேண்டாம் என்று நினைத்து போட்டு இருப்பார்கள் ஏனென்றால் நாம் கண்டிப்பாக பெயிலாகி விடுவோம் என்று நினைத்து உறுதியா இருப்பபோம் ஆனால் அந்த வாத்தியார் என்னை பாஸாக்கி குழப்பத்தில் தள்ளிவிடுவார்

  ReplyDelete
  Replies
  1. அப்போ நீங்க 35 எடுத்திருக்கலாம் ..ஆனால் இப்போ வேலை யில் வாழ்க்கையில் பதிவெழுதுவதில் பழகுவதில் என 100 க்கு 100 வாங்கி விட்டீர்கள் நண்பரே . பட் ஐ லைக் யுவர் நேர்மை :) சத்தியமா எல்லாத்திலும் 35 என்றே நினைத்தேன் :)
   அப்புறம் அந்த வாத்தியார் அட்ரஸ் கிடைக்குமா :))

   Delete
  2. நானும் அந்த வாத்தியார் விலாசங்களை தேடிக் கொண்டிருக்கிறேன் அது மட்டும் கிடைத்தால் அவர்கள் உயிரோட இருந்தால் முதலில் அவர்களை கட்டி வைத்து உரித்துவிடுவேன் அவர்கள் மட்டும் என்னை பெயிலாக்கி இருந்தால் அவமாஅம் தாங்காமல் நன்றாக படித்து இருப்பேன் அல்லவா

   Delete
  3. மதுரைத் தமிழன் பரவால்ல நீங்க 35 வது எடுத்தீங்களே! நான் ஆங்கிலம், தமிழ், சோசியல் இதைத் தவிர எல்லா பாடத்திலும் ஃபெயில் தான் ஆவேன் ஹிஹிஹி...

   என் பையன் எல்லா பாடத்திலுமே வீக்காகத்தான் இருந்தான்...ஃபெயில் ஆவான். தத்தளித்துத்தான் வந்தான்....அவனது குறைப்பாட்டுடன் முட்டாள் என்ற பட்டத்துடன் இங்கு அப்படித்தான் நகர்த்த வேண்டியிருந்தது. கல்லூரி வந்ததும் அவன் விரும்பிய பாடம் வந்ததும் தான் குறைபாடு இருந்தாலும் ஆசிரியர்கள் இவனது உழைப்பையும், அறிவையும் புரிந்து கொண்டனர்.

   35 எல்லாம் பரவாயில்லை அதைவிட முக்கியம் நம் வாழ்க்கை அதில் நீங்கள் ஏஞ்சல் சொல்லியிருப்பதை வழி மொழிகிறேன்..

   கீதா

   Delete
  4. மதுரைத் தமிழன், நீங்கள் 35 எடுத்திருந்தாலும் இன்று நன்றாக எழுதுகிறீர்கள்...ஆனால் நான் ஆங்கிலத்திலும், தமிழிலும் படிக்கும் காலத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், மார்க் மட்டுமில்லை கற்பனையும் அதிகமுண்டு, கட்டுரை, பேச்சு, நாடகம் என்றிருந்தாலும் இப்போது இரு மொழிகளுமே இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கு எழுதவும் வருவதில்லை ஹிஹிஹி

   கீதா

   Delete
 9. டேய் யாரும் ஏஞ்சல் கிட்ட வால் ஆட்டாதீங்க அவர் தாத்தா ஆர்மியில் இருந்தவாராக்கும் அப்படியும் மீறி வாலாட்டினால் அவர் இருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்து செல்வார்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) ஒரு உண்மையா சொல்லியாகணும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது முதலில் ஒரு இந்தியன் ஆர்மி சம்பந்தம் வேணும்னு அப்பா பிடிவாதமா இருந்தார் ..கடவுளே என் நிலை என்னாகியிருக்கும் !! ஆனால் அந்த ஆர்மி தப்பிச்சிடுச்சி :)

   Delete
 10. பை பை ஈவினிங் வந்து கச்சேரியை வைச்சு கொள்கிறேன்...வேலையில் நேரம் கிடைத்தால் மீண்டு வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. okay bye for now .have a blessed day

   Delete
 11. சுற்றிலும் அதிகமாகப் பேசப் படும் மொழிதான் எளிதில் மனதில் பதியும்.ஆனால் தாய் மொழியை விடாது வீட்டில் பேசிப் பழக்குவதற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ..இந்தியாவிற்கு லுத்தரன் மிஷேனறியாக வந்த சீகன் பால்கு என்ற ஜெர்மன்காரர் தமிழை எழுதவும் பேசவும் செய்தபோது ஏன் நம் மக்களால் பிள்ளைகளால் பல மொழிகளை கற்க முடியாது என்றும் யோசித்தேன் .முயற்ச்சி திருவினையாக்கும் ..என்னால் இயன்றவரை அவளுக்கு தமிழை பயிற்றுவிப்பேன்

   Delete
 12. உங்க மகளுக்கு முடிந்தவரை தமிழ் பழக்கிட்டீங்கபோல இருக்குது அஞ்சு, மூத்த பிள்ளைக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பது எனக்கு ஈசிபோல தெரியுது ஆனா இரண்டாவதுக்கு கஸ்டம்.. ஏன் தெரியுமோ...

  எங்கள் வீட்டில் மூத்தவர் பிறந்து 2 வது பிறந்து வளரும்வரை, மூத்தவர் எம்மோடயே பேசுவார் அப்போ தமிழ் பழக்கிட்டோம்.

  ஆனா 2 வது அதிகமா அண்ணாவோடு பேசிப்பேசி விளையாடத் தொடங்குவார்கள் அப்போ நம் தமிழை விட அண்ணாவின் ஆங்கிலம் அதிகம் ஒட்டிவிடும்.. இதுதான் நடந்திருக்கு எங்கள் வீட்டில். மூத்தவர் நன்கு பேசுவார், இரண்டாவது புரியும்.. ஆனா ஆங்கிலம் கலந்த தமிழ்தான் வருது... அதிலும்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா இங்கே பஞ்சாபி நட்பும் அதைத்தான் சொன்னார் முதல் மகள் பேசுவா அப்புறம் பிறந்த மகள் அக்காவுடன் சேர்ந்து ஒன்லி ஆங்கிலமாம் :)

   Delete
  2. இது பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்...இரண்டாவது முதல் குழந்தையிடமிருந்துதானே பலதும் கற்றுக் கொள்கிறது...

   கீதா

   Delete
 13. அதிலும் நீங்க சொனதுபோல உங்கள் மகள் சொல்வது போல.. தண்ணி வாங்கி வாங்கோ எனச் சொன்னால் போய்க் கேட்பார் , அம்மாவுக்கு தண்ணி வேணும்... இப்படி.. தமிழில் பேசுங்கோ என்றால்ல்... “எனக்கு குளிக்க வேணும்” என்பார்.. குளிக்க போறேன் என சொல்ல வராது.. இருப்பினும் விடுவதில்லை, ஊருக்கு கூட்டிப்போனால் நல்லா பழகிடுவார்கள் எனும் நம்பிக்கை இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நான் தப்பா சொல்லிட்டேன்ன்.. “அம்மா தண்ணி வேணும்” எனக் கேட்பார்ர்.. அம்மாவுக்கு தண்ணி வேணுமாம் என்பதை.. ஹையோ இப்போ எனக்கே குழப்பமாகுதே:)

   Delete
  2. அதிரா அந்த சென்னை தோழி போலில்லாமா நாம் இவ்வளவாவது பேச கற்றுக்கொடுத்திருக்கோமே அதுவே பெரிய விஷயம்
   ஹா ஹா இல்லை என்கிறத இருக்கில்ல என்பா சில நேரம் ..ஆனா இப்போ ஒரு ரகசியமும் பேச முடியாது எல்லாமே புரியுது இவளுக்கு :)

   Delete
 14. எனக்கு பிள்ளைகளுக்கு தமிழ் நன்கு தெரியும் எனச் சொல்லும்போதுதான் பெருமை, பெரிசாக தமிழ் பேச வராது என சொல்லும்போது ஏதோ வெட்கமாக இருக்கும்.. நம்மொழியை மறக்க விடக்கூடாது என.

  உண்மை அஞ்சு, முடிஞ்சவரை தமிழ் சொல்லிக்கொடுப்போம், இப்போ மகனுக்கு சொல்லியிருக்கிறேன், எக்ஸாம்ஸ் முடியட்டும் எழுத படிக்க சொல்லித்தாறேன் என.

  ஆரம்பம், அப்பா அம்மா நிறைய எழுத வாசிக்க திருக்குறள் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.. இடையில் கைவிட்டதும் மறந்திட்டினம்

  ReplyDelete
  Replies
  1. பிற்காலத்தில் இவர்கள் தமிழ் பிள்ளைகள் என்று சொல்லவாவது ஒரு ஐடென்டிட்டி இருக்கணும் அதற்கேனும் நல்ல பேச வைக்கணும் .இப்போ gcse முடிஞ்சதும் எழுத வைக்க போறேன் இவளை ..என்னது மலையாளம் ஹிந்தி படிக்கணுமா .நான் சொல்லித்தரட்டா ..முதலில் அட்வான்ஸ் பீஸ் 100 பவுண்ட்ஸ் அனுப்புங்க கோர்ஸ் மெடீரியல்ஸ் அனுப்பிடறேன்

   Delete
 15. எனக்குக்கூட இப்போ ஹிந்தி படிக்க ஆசை, மலையாளம் படிக்க ஆசை.. நிஜமாத்தான்..

  இந்த தாய்மொழி தமிழ்மொழி பற்றி இன்னும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது....

  முன்பு ஒரு சென்னைத் தமிழ்த்தோழி ஒருவர்... படு பயங்கரமாக ஏசினார் உடைபற்றி, அதாவது நம் தமிழ்ப்பிள்ளைகள் , சென்னையில் வெளிநாட்டு ஸ்டைலில் ஆடை அணிகிறார்கள் அசிங்கமாக இருக்கு, நான் என் பிள்ளைகளை அதுக்கு அனுமதிப்பதில்லை என முழக்கினார்ர்..

  சில நாளில்.. இனொரு விசயம் சொன்னார்.. அதுவும் பெருமையாக... “என் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது”.. என... இத்தனைக்கும் சென்னையில்தான் இருக்கிறார்கள்.

  அப்போ உடை பிடிக்கவில்லை, அது வெளிநாட்டு ஸ்டைல்.. தன் பிள்ளை போடுவதில்லை என பெருமை அடிப்பவருக்கு, தன் பிள்ளைக்கு தன் நாட்டு மொழி தெரியாது, வெளிநாட்டு மொழிதான் தெரியும் எனச் சொல்வதில் பெருமையாக இருக்கு... உலகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்குது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) இதெல்லாம் டூ மச் உடை பற்றி ஏசுபவர் தமிழ் கற்றுக்கொடுக்காமலிருப்பது ..இப்படி நிறைய சென்னைவாசிகளை எனக்கும் தெரியும் அதிரா ..ஒரு நண்பர் ஆவது மகனுடன் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவார் யார் பேசினாலும் அவர்களையும் அந்த பிள்ளையுடன் ஆங்கிலமே பேச சொல்வார் ..அவர் மகன் பெயர் வெற்றி வேந்தன் ஆனா தமிழ் தெரியாது ஆங்கிலமும் ஹிந்தி மட்டுமே தெரியும் தமிழில் பேசினால் என்னமோ ஒரு இழிவு அவர்போன்றோருக்கு :( ..இதுங்களை பிடிச்சி தனி ரூமில் போட்டு வெறும் தூய தமிழ் வசனம் வரும் பராசக்தி மனோகரா படங்களை 100 முறை பார்க்க விடணும்

   Delete
 16. என் கணவரோடு ஆரம்பம் வேலை பார்த்த ஒரு பெண் டொக்டர்.. டெல்லியைச் சேர்ந்தவ, அவவின் கணவரும் டொக்டர்தான்.. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை, நம் மூத்தவரின் வயது, அப்போ பிள்ளைகளுக்காக அடிக்கடி மீட் பண்ணுவோம், அந்நேரம் நாம் மகனோடு தமிழில் பேசுவதைப் பார்த்து அவ சொன்னா, தன் மகனோடு தான் ஆங்கிலம் மட்டுமே பேசுவேன், ஆனா கணவர்தான் சொல்லிக்கேட்காமல் ஹிந்தியில் பேசுகிறார்.. அவன் ஹிந்தி பேசி என்ன சாதிக்கப் போகிறான்.. நாம் ஹிந்தியில் பேசியும் ஆங்கிலம் இருந்தமையாலதானே டொக்டர் ஆனேன் இங்கு வந்தேன் எனச் சொன்னா.. இதுக்கு என்னத்தை சொல்வது...

  இன்னொன்றும் சொன்னா.. சொல்லிடறேன்ன் இருங்கோ...

  ReplyDelete
  Replies
  1. அதிரா அவர் சொல்வது தவறு ஆங்கிலம் தேவைதான் .எங்க நாட்டில் உங்க நாட்டில் கூட தமிழ் மொழிவழி படித்த மருத்துவர்கள் இங்கும் இருக்கிறாரார்கள் ..ஆங்கிலம் ஒரு பிரிட்ஜ் இங்கு வர அவ்வளவே மற்றபடி பிற்காலத்தில் அந்த பிள்ளை என்னவென்று சொல்லும் தன்னை இங்கே பிரிட்டிஸ்காரரும் எந்த ஸ்டேட் என்று கேட்கிறாங்க இப்போல்லாம் அவர்களுக்கும் கேரளா ஆந்திரா பஞ்சாப் வித்தியாசம் தெரிகிறதே ..நாளை அந்த பிள்ளை ஏதும் தெரியாமல் தனது பூர்வீகம் தெரியாமல் தாத்தா நெவில் போல திண்டாடுவான்

   Delete
 17. அவவுக்கு ஒரு தம்பி மட்டும்தானாம், ஆனா தனக்கு ஒரு குழந்தை போதுமாம், கணவர்தான் இன்னொன்று வேணும் என்கிறாராம்... அப்போ சொன்னா,
  நான் தம்பியோடு பிறந்து என்னத்தைக் கண்டேன்ன், எப்போதாவது ஒருதடவை ஃபோனில் பேசுகிறோம், அப்போ எதுக்கு ஒரு பிள்ளை போதும் என்றா... பிறகு இடம் மாறிப் போய் விட்டனர், இப்போ என்ன ஆச்சோ தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் அடடா ! அவருக்கு புரியலை அதிரா ..பேசுவதற்கு ஒரு தம்பியாவது இருக்கிறாரே என்று அவர் சந்தோஷப்படணும் ..

   Delete
 18. ///என்று எனது சிற்றுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன் ///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வன் அவரா மின்னி முழக்கிப்போட்டு.. சிற்றுரையாம்ம்ம்ம்ம்:) இதைக் கேட்க இங்கின ஆருமே இல்லயோ?:)..

  ReplyDelete
  Replies
  1. யாருமேயில்லை எல்லாரும் மயங்கி விழுந்திட்டாங்க :) எனக்கு இரண்டு பாகமா பிரிக்க ஆசையில்லை அதான் ஒரே பதிவில் எல்லாவற்றையும் சொல்லிட்டேன் :))))))

   Delete
 19. //.செந்தமிழ் அரசி ,தேன்மொழி என்று பெயரிட்டு ஒரு வார்த்தை கூட தமிழ் பேச முடியாத தமிழ் பிள்ளைகளையும் நான் பார்த்திருக்கிறேன்///

  ஹா ஹா ஹா கரீட்டு... பெயர் வைக்கும்வரை தமிழை நினைப்பார்கள் பின்பு பிள்ளை தமிழில் பேசினால் அவமானம் என நினைக்கினம்... இன்னொரு குடும்பம்.. அவர்கள் இலங்கைதான் கொழும்பு... பெற்றோருக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம், ரஷ்யன் லங்குவேஜ்... எழுத படிக்க பேச நல்ல அழகா தெரியும்... ஆனா பிள்ளைக்கோ தமிழ் புரியக்கூட மாட்டுது... ஒன்லி இங்கிலீசு:).. பிள்ளைகள் பலமொழி தெரிஞ்சிருந்தால் நமக்குப் பெருமைதானே.. நான் நேரடியாகவும் சொல்லிப்பார்த்தேன்.. உங்களுக்கு இத்தனை மொழி தெரியுமே.. பிள்ளைக்கு தமிழில் பேச மட்டுமாவது பழக்கலாமே தமிழை என... அது சொன்னால் பேசுறாரில்லை என்பார்கள்... சொல்ல வெளிக்கிட்டால் குறையாகவே சொல்ல வருதே என மனதுக்கு கஸ்டமாக இருக்குது, அதனால இத்தோடு நிறுத்திடுறேன்ன்:)..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா ..நானும் நிறைய சம்பவங்களை எடிட் செய்திட்டேன் :)

   Delete
 20. குழந்தைகளிடம் ஆரம்ப காலத்தில் தாய் மொழியிலேயே பேசவேண்டும் என்பது நல்ல பயிற்சி.

  மகளின் மொழிப்பயிற்சி பற்றிய விவரங்கள் சந்தோஷப்பட வைக்கின்றன. பண்ணி / பன்னி சிரிக்கவைத்தது. எழுத்துக்களும் கூட இன்னும் வளர்ந்தபின் காலப்போக்கில் கற்றுக்கொண்டு விடலாம். இப்போது எத்தனை மொழிகளில் புலமை பெற்றிருக்கிறார்! பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. அவ அப்படி பன்னி பற்றி சொன்னதில் இருந்து நான் பேசும்போது கவனமா இருக்கேன் :) அடுத்தது அவளுக்கு பழைய படங்கள் அதுவும் ராஜா ராணி சாமி படங்கள்னா ரொம்ப விருப்பம் ஆசையா பார்ப்பாள் ..எனக்கும் படத்தை போட்டு விட்டுட்டு என் வேலைகளை கிச்சனில் பார்க்கலாம் ஓடோடி வந்து வார்த்தைகள் அர்த்தம்லாம் கேட்பா :) அடுத்தது அவளுக்கு இதிகாசங்கள் பற்றிய கதைகள் அமர்ச்சித்திர கதையெல்லாம் ரொம்ப பிடிக்கும் ..நிறைய புத்தகங்கள் வச்சிருக்கா .

   Delete
 21. தமிழில் பேசினாலும், வகுப்பில் தமிழ் இலக்கணம் படுத்தும் என்னை!

  ReplyDelete
  Replies
  1. அதே தன் எனக்கும் :) இலக்கணம் கொஞ்சம் பாடுபடுத்தும் ஆனா தப்பி வந்திட்டேன் :)
   அந்த டென்த் வகுப்பில் அலகிடுதல் என்று ஒன்று வருமே ஹையோ !!! நான் படாத பாடில்லை :)

   Delete
 22. இங்கயும் அதே கதைதான். அம்மா, அப்பா என்று அழைப்பதில் இருக்கும் அழகு மம்மி, டாடியில் இருப்பதில்லை. ஆகவே, மம்மி டாடிக்குத் தடா. தவிர, ல ள ழ உச்சரிப்பு பிள்ளைகளுக்கு இன்னும் சரியாக வரவில்லை. சில முறை முயற்சித்திருக்கிறேன், போகப்போக சரியாகிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சரவணன் ....அதேதான் அம்மா அப்பா என்று அழைக்கும்போது இருக்கும் சந்தோஷம் மம்மி டாடியில் வரவே வராது ..
   இங்கும் இன்னும் ழ வராது அப்பா மகள் இருவருக்கும் :)) நானும் விட்டுட்டேன் அதைவிட முக்கியம் மற்ற வார்த்தைகளை தெளிவா பேசறா அது போதும்னு விட்டேன் ..

   Delete
 23. நாங்களும் வீட்டில் தமிழில்தான். சில சொற்கள் புரியாவிட்டால் மகனார் கேட்பார். அதற்கு டொச் ல் புரியவைத்தால் புரியும். தமிழ் ஸ்கூல் சென்றதால் ஈசியா இருக்கு. இப்போ எங்களுடன் சேர்ந்து படங்கள், டிவி பார்ப்பது வீட்டில் பேசுவது என்ற நிலையால் தமிழ் வாழ்கிறது எங்க வீட்டில் ஆனா சில வசனங்கள் அப்படியே பேசுவார். சமைச்சாச்சா ? என்பதை சாப்பாடு கிடைக்குமா என்பார்.சுகந்திப்பூ மாறவேஇல்லை. அனுமதி கேட்பது எல்லாமே முடியுமா என்கிற வசனம்தான் வரும்.(விளையாட போகலாமா என்பது நான் விளையாட போகமுடியுமா என்று) இப்படி அவங்க பேசுவது கேட்டு சிரிப்பும் வரும். ஆனா எல்லாமே நல்லா விளங்கும் அவங்களுக்கு..
  ஸ்கூலிலும் இவருக்கு அதிக மொழி தெரியும் என்கிற ப்ளஸ் இருக்கு. இப்போ 2 பாடம் ஆங்கில வழி கல்வி. 2வது மொழி ஆங்கிலம். ப்ரெஞ்,ஸ்பானிஷ் எழுத,வாசிக்க தெரியும். பாடசாலையில் கேட்பாங்களாம் வீட்டில் எந்த மொழியில் பேசுறீங்க என.
  எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் ஜேர்மன் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். அவர்கள் 2பிள்ளைகளிடம் தாய்மொழி என்ன என்றால் தமிழ் என்பார்கள். ஆனாலும் இங்கும் வீட்டில் தமிழ் பேசுவதை கெளரவ குறைச்சலா நினைக்கிறவங்களும் இருக்காங்க அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ப்ரியா தமிழ்நா கவுரவக்குறைவா நினைக்கும் சில உறவுகள் எங்களுக்குமுண்டு :( அதுங்களை எல்லாம் அந்நியன் பாணியில் பனிஷ்மென்ட் குடுக்கணும் ..
   சுகந்திப்பூ :)) நானும் மறக்கலை ..மகள் இப்படி நிரைய வார்த்தைகள் சொல்வா ஒரு காலத்தில் ரசிச்சோம் பிறகு திருத்திட்டோம் :)
   ஆனா :) இன்னும் ழ மட்டும் ள வாவ் வருது :))
   சந்தோஷமாயிருக்கு ப்ரியா நம்ம பிள்ளைங்க தமிழில் வளர்வதை கேட்க

   Delete
  2. எங்க மகளும் நாங்க பேசும்போது அர்த்தம் கேட்பாள் :) கேட்டு படிக்கும்போது இன்னும் மனதில் நிற்கும்

   Delete
 24. எங்கள் வீட்டில் எல்லாம் மலையாளம்தான். நான் தமிழ் மொழி ஸ்வாசித்து வளர்ந்திருந்தாலும்.அதையே நான் என் தாய்மொழி என்றாலும்.......வீட்டு மொழி மலையாளம் என்பதால்...வீட்டில் ஆங்கிலம் கலக்காத மலையாளம் 99% தான் பேச்சு...ஆனால் மலையாளம் என்பது சமஸ்க்ருதம், தமிழ் இரண்டும் கலந்த மொழிதான்...மலையாளத்தில் நிறைய அக்மார்க் தமிழ் சொற்கள் அதாவது தமிழ்நாட்டில் கூட பழக்கத்தில் இல்லாத தமிழ் வார்த்தைகள் நிறைய உண்டு. அதுவும் வழக்கத்தில்.

  கீதா: அயோ பெரிய கருத்து அடித்து அப்படியே போய்விட்டது..

  ஏஞ்சல் முதலில் உங்களு வாழ்த்துகள்..நானும் அப்படியேதான் மகனுக்குத் தமிழ்ல்தான்...அவனும் அதையேதான் விரும்பினான். பள்ளியில் கம்ப்ள்யின்ட் வந்த போது மகனுக்கு வீட்டில் ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி கொடுக்க முயற்சி செய்த போது "அம்மா ப்ளீஸ் வீட்டுல உன்னோடும் அப்பாவோடும் சொந்தக்காரங்களோடும் தமிழ்லயே பேசுறேன்...ஆங்கிலம் வேண்டாம்...அது ஃபார்மலா இருக்கு...உங்கூட விலகி இருக்காப்ல இருக்கு...ஜோக் அடிக்க முடியலை அப்படினு தமிழ்லதான் பேசுவான்...இப்பவும் அப்படியே..அமெரிக்காவுல இருந்தாலும்...அவன் தமிழ் பேசுறதுல இப்ப சில இளைஞர்கள் பேசுறா மாதிரி வராது...திடீர்னு, "அம்மா சிறிது காத்திருக்கிறாயா நான் இயற்கையின் அழைப்பைக் கவனித்துவிட்டு வருகிறேன்..." "அம்மா, கண்ணழகி, மரநிறத்தவள் (ப்ரௌனி ஆங்கிலப் பெயராம் ஹிஹிஹி) எல்லோரும் நலம்தானே? உணவு சரியாக உண்கின்றார்களா?" அப்பா நலமா....."அம்மா நான் மின்சார அடுப்பில் அமுதும், காய்கறிகளும் வைத்திருக்கிறேன். அப்படியே அலைபேசியை அணைத்துவிடாமல் தொடர்பில் இரு. " என்றெல்லாம் பேசி திக்குமுக்காட வைப்பான்..."என்னடா ஆச்சு உனக்கு" நு கேட்டா எம்மா நீ தானெமா நான் தமிழ் லாம் நினைவு வைச்சுருக்கனானு கேட்ட அதான்....அப்படிம்பான்...

  நீங்கள் சொல்லியிருக்கும் அந்த மருத்துவர் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். ஆம் தாய்மொழி வந்துவிட்டல் பிற மொழிகள் கற்பதும் எளிது. பல விஷயங்களை நாம் நம் மொழியில்தான் சுவைக்க முடியும்...குறிப்பாக நகைச்சுவை, உணர்வு பூர்வமாகப் பேசுவது, நமது அன்பை வெளிப்படுத்துவது அக்கறையைக் காட்டுவது என்பதெல்லாம் தாய்மொழியில்தான் வெளிப்பட வேண்டும் அதுதான் உறவை பலபப்டுத்தும்...

  உங்கள் கருத்துகளே எனதும்...இப்படித்தான் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்..

  மொழிப் பற்று உண்டு...ஆனால் வெறி இல்லை. மலையாளம் கொஞ்சம் தெரியும், ஹிந்தி கொஞ்சம் தெரியும்...சமாளிக்கும் அளவு...எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை.

  பிரார்த்தனை கூட தமிழில்தான் மகனும்..

  அருமையான பதிவு ஏஞ்சல்...உங்களுக்குப் பாராட்டுகள்!!

  கீதா

  ReplyDelete
 25. ஆமாம் ..கீதா ..அதனால் தான் நான் போனில் நிறைய நேரம் பதிவுகளை பார்த்தாலும் பின்னூட்டங்களை கணினி திறந்து ஜாலியா தமிழில் தருவேன் ..அதில் கும்மி அடிக்கிற சந்தோசம் ஆங்கிலத்தில் இல்லை :)
  தமிழ் மட்டுமில்லை அவரவர் அவங்க தாய்மொழியில் வீட்டில் பேசினாத்தானே அது தழைத்தோங்கும் ..இங்கு வளரும் பல இந்திய பிள்ளைங்கள் என்ன காரணத்தாலோ தாய்மொழி தெரியாமலே இருக்காங்க ...கீதா !!கேட்கவே சந்தோஷமா இருக்கு உங்கள் மகன் நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர் இப்படி நகைசுவை உணர்வு அனைவருக்கும் வராது :)என் பொண்ணு திருவிளையாடல் படம் பார்த்து ராமாயண சீரியல் ம்பார்த்து பேசினப்போ இப்படித்தான் இருந்தது ஹா ஆஹா :) வீட்டில் நம் மொழியில் பேசுவதே நல்லது அது ஒரு அன்பு பிணைப்பை உண்டாக்கும்
  துபாய் ஏர்போர்ட்டில் ட்ரான்சிட் பிளைட்டுக்கு நிற்கும்போது நிறைய காட்சிகள் பார்த்திருக்கேன் .அதில் மலையாளம் ஒரு பக்கம் தெலுங்கு ஒருபக்கம் கன்னடம் இப்படி பல மொழிகள் அனகாங்கிருந்து கேட்கும் ஒரு பக்கமிருந்து ஆங்கிலம் கேட்டால் அது நம்ம சென்னை தமிழர்கள் :(

  ReplyDelete
 26. அன்னையே தந்தையே
  நீங்கள் வாருங்கள், அமருங்கள் உணவு தாருங்கள் ,நீராடி வருகிறேன் என்றெல்லாம் உரையாடி எங்களை மயங்கி விழ வைத்தாள் :)..


  செம்ம ..

  ReplyDelete
 27. ரொம்ப பெரிய பதில் எழுதினேன் அஞ்சு..ஆன போஸ்ட் பண்றதுக்குள்ள ...ஆல் அவுட்..

  so திரும்ப முதலில் இருந்து...


  same pinch...பசங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி, கன்னடா பள்ளியில்..

  ஆன வீட்டில் தமிழ் மட்டும் தான்..பெரியவர் சுமாராக எழுதவும் செய்வார்..
  சின்னவர் இப்பொழுது உயிர் மெய் எழுத்தில் உள்ளார்..

  இந்த விடுமுறையில் இன்னும் தேறுவார் என நினைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..மகன்களுக்கு இத்தனை மொழிகள் தெரிந்திருபது நல்லது ....
   பின்னூட்டம் எனக்கும் நிறைய நேரம் அப்படி நடக்கும் சேவ் ஆகாம அப்டியே டிலீட் ஆகிடும் .நன்றி அனு

   Delete
 28. தமிழை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்ல அயல்நாட்டுவாழ் தமிழர்கள் படும் பாடுகளும் எடுக்கும் முயற்சிகளும் அநேகம். மகளைத் தமிழ்பேச வைக்க மேற்கொள்ளும் உங்களது முயற்சிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ஏஞ்சலின். என் பிள்ளைகள் ஓரளவு விவரம் தெரிந்தே அதாவது நன்கு தமிழ் பேசத்தெரிந்த வயதில் இங்கு வந்தோம் என்பதால் அவ்வளவாகப் பிரச்சனையில்லை.. ஆனாலும் இப்போது அவர்கள் சிந்தனை ஆங்கிலத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. இவருக்குக் கீழே அவர் பணி புரிகிறார் என்பதை ஆங்கிலத்திலிருந்து அப்படியே இவருக்கு அடியில் அவர் வேலை செய்கிறார் என்று சொல்வதுண்டு. மகன் பேசும்போது ல, ழ பிரச்சனை வரும்.. அவ்வப்போது திருத்திக்கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா ,,தாய்மொழி தெரியாமல் வளரும் பிள்ளைகளின் எண்ணிக்கை இங்கு அதிகம் ..ஒரு தமிழர் குடும்பம் அவர்களது மூத்த மகளுக்கு 6 வயதிருக்கும்போது இங்கே வந்தார்களாம் பிறகு 3 பிள்ளைகள் இங்கே பிறந்தவர்கள்.தாயும் தகப்பனும் அட்வொகேட்ஸ் இருவரும் தமிழ் ஆனாலும் வெட்டிப்பந்தாக்கு பிள்ளைகளுக்கு தமிழ் வீட்டில் கூட பேசாமல் ஆங்கிலம் மட்டுமே பேச வைத்து இப்போ ஒரு பிள்ளைக்கும் தமிழே தெரியல எல்லாருக்கும் 40 வயசுக்கு மேலாகுது
   தமிழ் என்பது அவர்களின் கடவுசீட்டில்பெர்த் சர்டிபிகேட்டில் மட்டுமே இருக்கபோது :(

   அந்த வார்த்தைகள் ஒரே வார்த்தைக்கு பலவேறு வார்த்தைகள் தமிழில் இருக்கு அது நம்ம குழந்தைகளுக்கு புரியலையா அதான் தானே ட்ரான்ஸ்லேட் செய்து பேசறாங்க :) என் மகளும் அப்படிதான் :)

   Delete
 29. எந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்தாலும் குழந்தைகள் தாய்மொழியில் பேசுவது அழகுதான்...

  என் மகனுக்கு தமிழே வராது என இங்கு உதார் விடும் பலரைப் பார்த்திருக்கிறேன்... ஆனால் குழந்தைகள் நம்மிடம் தமிழில் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்...

  நல்ல பகிர்வு அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க குமார் ..அதேதான் நானும் நிறைய நம்ம தமிழ் மக்களிடம் பார்த்தது இப்போ நேற்று சூப்பர் மார்க்கெட் போனேன் அங்கே புதிதாக ஒரு ஐடி வேலை செய்றவர் குடும்பம் பிள்ளைங்க தமிழில் பேசறாங்க அவங்கம்மா சொல்றாங்க ஷ் ஷ் ஸ்பீக் இங்கிலிஷ் ..
   .பிரிட்டிஸ்காரன் அவன் பிள்ளைக்கிட்ட ஆங்கிலத்தில் பேசலாம் நாம் நாம தாய்மொழில பேசினா தப்பா ?
   இன்னும் நிறைய இதை போல சம்பவங்கள் இருக்கு எழுதினா குற்றம் மட்டுமே பெரிதாகி நிக்கும்னு தன் அவற்றை சுருக்கிட்டேன்

   Delete