அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/27/17

ஐ போனும் இக்கால பிள்ளைகளும் சிரி :)

 சிரி  :)    Siri.. எனும் மெய் நிகர் உதவியாளர் ..
--------------------------------------------------------------------------------

இது கடந்த வாரம் எங்க லண்டனில்  நடந்த உண்மை சம்பவம் .லண்டன் க்ரோயிடன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அவசர தொலைபேசி  இலக்கத்திற்கு  நான்கு  வயது சிறுவன் ஒருவன் அழைத்திருக்கிறான் .சிறுவன் பெயர் ரோமன் ..அதிகாரிக்கும் அவனுக்கும் நடைபெற்ற உரையாடல் காணொளியாக சுட்டி இணைத்துள்ளேன் .இது ஆம்புலன்ஸ் வீட்டினருகே சென்றதும்                                                                                    
                                   இந்த சிறுவன் ரோமன் அவனது அம்மா  அவனது இரட்டை சகோதரன் மற்றும் இன்னொரு கைகுழந்தையுடன்  வீட்டில் இருந்தபொழுது ரோமனின் தாய் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் ..குழந்தைகளுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை ..ஆனால் உடனே இந்த ரோமன் சமயோசிதமாக அம்மாவின் ஐ போனை எடுத்து அம்மாவின் கட்டைவிரலால் அதை அன்லாக் செய்து //siri // 
ஆப் மூலம் எமெர்ஜென்சி சர்வீஸை 999 இலக்கத்தில் //Siri, call 999, emergency".// தொடர்பு கொண்டுள்ளான் ..அவர்களுக்கு சிரி ஒரு நிஜ உயிருள்ள மனிதன் என்று தோன்றியிருக்கு ..
அந்த எமெர்ஜென்சி தொலைபேசி அழைப்புகளை கையாளும் பெண்மணிக்கே மிக ஆச்சர்யமாகிப்போனதாம் பல வருட சர்வீஸில் இப்படி சின்னஞ்சிறு சிறுவன் ஒருவன் மிக சமயோசிதமாக செயல்பட்டதை நினைத்து .. இந்த சம்பவத்திற்கப்புறம் இங்குள்ள பெற்றோர் பிள்ளைகளுக்கு அவசர எண் பயன்பாடு மற்றும் இப்படிப்பட்ட சூழலில் உடனே என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி பிள்ளைகளுக்கு இன்னுமதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள் .

                                                                                      


The call transcript:Roman: Hello, I'm Roman


999: Ok, where's your mummy?

Roman: She's at home.

999: And where are you?

Roman: At home as well

999: Can you do me a favour, can you go and get Mummy?

Roman: We can't she's dead

999: You said mummy was there, what do you mean she's dead?

Roman: It means that she's closing her eyes and she's not breathing

999: Right so, do you know where you live?

Roman: *censored* Road, 22

999: Can you go to your mummy and shake her for me?

Roman: She's not waking up

999: Give her a good shake, shout out 'Mummy'

Roman: MUMMY! … It didn't work
999: Are you in Kenley?

Roman: Yes, Kenley

999: What is your name?

Roman: Roman


--------------------------------------------------------------------------------------------------------------------------


இங்குள்ள பள்ளிகளில் சேர்ந்த முதல் நாளே அதாவது முதல் வகுப்பு மற்றும் நர்சரியில் சேரும்போதே பிள்ளைகளுக்கு முதலில் சொல்லித்தருவது டாய்லெட் வந்தால் //ஐ நீட் டாய்லெட் // அது போல ரோட் க்ராஸிங் மற்றும் பல அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை ஆரம்பத்திலேயே சொல்லித்தருவார்கள் .க்ளவுடியா ஷர்மா இந்த மாதிரி நேரிட்டால் இந்த இலக்கத்தை தொடர்பு கொள்ளணும் என்று முன்பே பிள்ளைகளுக்கு சொல்லிகொடுத்திருக்கிறாராம் ஏனென்றால் 6மாதங்களுக்கு முன் இதேபோல் ஒரு 3 வயது பெண் எமெர்ஜென்சி நம்பருக்கு அழைத்திருக்கு உடல் நலமில்லாமல் மயங்கி விழுந்த தன் தாயை பார்த்து .... இந்த க்ளவுடியாவுக்கு அனீமியா என்பதால் அடிக்கடி மயக்கம் வருமாம் ..மேலும் வீட்டில் டாக்டர் ,போலீஸ் எண்கள் எல்லாம் சொல்லித்தந்திருக்கார் பிள்ளைகளுக்கு ..

ஒரு குழந்தை அம்மாவின் மூடிய கண்களை நாவால் நக்கி எழுப்ப பார்த்திருக்கு ! ஒரு குழந்தை பேசும்போது பள்ளியின் அட்ரஸை சொல்லவும் மற்றவன்  இல்லை வீட்டு  அட்ரஸை சொல் என்று பின்னாலிருந்து பேசியதும் தொலைபேசி அட்டென்ட் செய்தவர் வியப்போடு கூறுகிறார் ..


எனக்கு தெரிந்த ஒரு இந்திய பெண்மணி வீட்டை விட்டு வெளியே சென்றால் அவர் பிள்ளையிடமிருந்து 5 நிமிடங்களுக்கொருமுறை தொலைபேசி அழைப்பும் டெக்ஸ்ட் மெசேஜும் வருமாம் //அம்மா ஒழுங்கா ரோட் க்ராஸ் பண்ணுங்க ,நேரா  நடக்கவும் மெதுவாக நடங்க யாரும் கைப்பையை பறிக்க முயற்சித்தால் ஓங்கி அடிங்க இல்லை ஓவென்று கத்தவும் சும்மா சும்மா சாவி இருக்கா  பர்ஸ் இருக்கானு கைப்பையை  ஆராயாதீங்க ,காஷ்  மெஷினில் கவனம்,கையால்  மறைத்து  பின் நம்பரை அழுத்துங்க .
பச்சை சிக்னல் விழுந்தாலும் கவனமாக க்ராஸ் செய்யுங்க ..
இக்கால பிள்ளைகள் விவரமாகத்தான் இருக்காங்க ...

========================================================================

27 comments:

 1. புதிய டெக்னாலாஜியை இந்த கால குழந்தைகள் எளிதில் கிரகித்து கொள்வதால் அதை புரிந்து கொண்டு சமயோசிதமாக செயல்படுக்கிறார்கள்..

  நானும் இது போல தீடிரென்று பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது என்று மகளுக்கு சொல்லி தந்து கொண்டு இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழர் ..இன்னும் எனக்கு இந்த புதிய தொழில் நுட்பங்களை சரிவர பயன்படுத்த முடியவில்லை ..அனால் இப்போ இருக்கும் குழந்தைகளுக்கு அனைத்தையும் பயன்படுத்தவும் ஆராய்ச்சிசெய்து பார்க்கவும் தைரியமும் ஆவலும் உளது .நான் கொஞ்சம் தாமதித்து விட்டேன் பயத்தினால் ஆனாலும் மகள் அனைத்தையும் இலகுவில் செயகிறாள்

   Delete
 2. 1970க்கு பிறகு பிறக்கும் குழந்தைகளின் மூளை அமைப்பு மாறி இருப்பதாகவும் இதனால் அவர்கள் மின்னணுக் கருவிகளை எளிதில் கையாள்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. புதிய தகவல் ..ஆனாலும் இங்குள்ள பல 60 வயதுக்கு மேலுள்ள பிரிட்டிஷ்க்காரர்களுக்கு இமெயில் ஆன்லைன் பாங்கிங் பற்றியெல்லாம் சுத்தமாக தெரியவில்லை என்பது உண்மை .அவர்களுக்கென இன்னமும் இங்கே பெரிய பட்டன் உள்ள மொபைல் தொலைபேசிகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளன .ஏனென்றால் டச் ஸ்க்ரீன்லாம் அவங்களுக்கு பிடிக்கலையாம்

   Delete
 3. இந்தக்கால குழந்தைகளால் மட்டும்தான் ஐ-போனை ஒழுங்காகப் புரிந்துகொண்டு நன்றாகவும், வேகமாகவும் செயல்பட முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் உண்மையான விஷயம் அண்ணா ..3 வயது வாண்டுகள் எல்லாம் சர்வ சாதாரணமாக ஐபோனை கையாள்கிரார்கள் .

   Delete
 4. இது தொலைக்காட்சியில் காட்டினார்கள். இங்கு பிள்ளைகளுக்கு ஆரம்பபள்ளியிலிருந்து பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கின்றார்கள். ரம்பபள்ளியிலிருந்துஅவசர உதவி, ரோட் க்ராஸிங், பொலிஸ், தீயணைப்பு நம்பர் எல்லாம் சொல்லிதாராங்க. இப்போதைய பிள்ளைகளுக்கு போன் இயக்கசொல்லிதரனுமா என்ன.. நாங்கதான் கேட்டு பழகனும் அவங்ககிட்ட..

  ReplyDelete
  Replies
  1. அங்கேயும் காட்டினார்களா !அமாம் இது ஒரு விழிப்புணர்வு போலத்தான் ப்ரியா ..பெற்றோர்கள் ஆபத்து நேரிடும்போது என்ன செய்யணும் என்பதை சொல்லிக்கொடுப்பது நல்லதே மேலும் இங்கும் ஸ்கூலில் அனைத்தையுமே சொல்லிக்கொடுக்கிறார்கள் .
   பெற்றோராகிய நாம தான இன்னும் நம்மை அப்டேட் செய்யவில்லை :)

   Delete
 5. உண்மையேதான் அஞ்சு, இக்காலத்துப் பிள்ளைகள் யாரைப் பார்த்தாலும் படு சுட்டிகள்... அதிலும் Autism குறை பாட்டுடன் இருக்கும் குழந்தைகள்கூட, இந்த கொம்பியூட்டர், டெக்னோலிஜியில் மிகவும் சுட்டியாக இருக்கிறார்கள்.... காற்றில் வந்து குழந்தைகளின் கிட்னியில் கலக்கிறதுபோலும் இப்போது எல்லாம்:).

  ReplyDelete
  Replies
  1. அதிரா இந்த ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பலருக்கு நிறைய அறிவு இருக்கு ,நானா நேரில் கண்டது .
   எதோ ஒரு ஸ்பெஷல் திறமை அதை சரியான முறையில் கண்டறிந்தால் அவர்களும் நம்மைமிஞ்சிவிடுவார்கள்

   Delete
 6. அதுவும் பக்கத்து வீட்டினர் இருக்கிறார்களா இல்லயா என்றுகூட பலசமயம் தெரியாத காலகட்டம் இது, இதில் பிள்ளைகளுக்கு இப்படி விழிப்புணர்வை ஊட்டி வைத்திருப்பதே மிக நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்குநூறு உண்மை அதிரா .எனக்கும் பக்கத்துக்கு வீட்டுநபர் பெயரே தெரியாதது போஸ்ட்மேன் ஒரு பார்சலை கொடுத்து அவரிடம் சேர்க்க சொல்லும்வரை :( அடுத்து இங்கு எளிதில் பழகுவதில்லை யாரும் ஒரு தற்காப்புடனே எச்சரிக்கையுடன் ஹாய் சொல்வார்கள் ஆகவே நாம் பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக்கொடுப்பது நல்லதே

   Delete
 7. அந்த 4 வயது ரோமன் என்ன அழகாகப் பதிக் கொடுக்கிறது குழந்தை, கேட்கவே ஆசையாக இருக்கிறது.. அவ்விடத்தில் நான் இருந்து, என் அம்மாவுக்கு இப்படி ஆகியிருந்தால்.. நானும் சேர்ந்து உயிரைத்தான் விட்டிருப்பேன் பயத்தில்..:) எனக்கு வாயே திறக்காது இப்படி நேரத்தில் கை கால் எல்லாம் படபடக்கும் இதில் எங்கே ஃபோனை டயல் பண்ணிப் பேசுவதாம் ஹையோ ஹையோ..:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) நானும்தான் ..எனது அழுகை கூரையை பிய்த்து வேண்டுமானால் ஊரை கூட்டியிருக்கும் ..நிச்சயம் இந்த சமயோசித உணர்வு இக்காலப்பிள்ளைகளுக்கு ஒரு வரமே

   Delete
 8. ///அம்மா ஒழுங்கா ரோட் க்ராஸ் பண்ணுங்க ,நேரா நடக்கவும் மெதுவாக நடங்க யாரும் கைப்பையை பறிக்க முயற்சித்தால் ஓங்கி அடிங்க இல்லை ஓவென்று கத்தவும் சும்மா சும்மா சாவி இருக்கா பர்ஸ் இருக்கானு கைப்பையை ஆராயாதீங்க ,காஷ் மெஷினில் கவனம்,கையால் மறைத்து பின் நம்பரை அழுத்துங்க .
  பச்சை சிக்னல் விழுந்தாலும் கவனமாக க்ராஸ் செய்யுங்க ..///

  ஹா ஹா ஹா இது ரொம்ப ஓவர்ர்ர்ர்ர்:) இதைப் படிக்கும்போது, அந்த தாய்க்கு ஏதும் குறைபாட்டுத்தன்மை இருக்குமோ என எண்ண வைக்குது:).. இப்படி ஓவர் பயமுறுத்தியும் பிள்ளைகளை வளர்க்கக்கூடாது.. பின்காலத்தில் கஸ்டம்.. எதுக்கும் விடமாட்டார்கள் கையை இழுத்துப் பிடிப்பார்கள்.. ஹா ஹா ஹா.. இம்முறை மோர் வற்றிப்போச்சு, ஆனா இதுதான் நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அந்த பெண்மணி எங்கள் ஆலயத்தை சேர்ந்தவர் ..ஒரே மகன் தாய் மேல் அவ்ளோ நம்பிக்கை போலும் ..உண்மைதான் அந்த மகனுக்கு ரொம்ப பாசம் ஜமைக்கான் ..இதோ அடுத்த போஸ்ட் ரெடி அதை பார்த்து பத்து கப் மோர் கேப்பிங்க ஹாங்

   Delete
 9. இந்தக் குட்டிப்பையனின் பேச்சைக் கேட்கும்போதே மனசு பதறுகிறது.. நிலைமையின் தீவிரம் புரிந்தும் எப்படி இப்படி சமயோசிதமாக ஒரு பெரியபிள்ளையைப் போல நடந்துகொண்டிருக்கிறான்.. நினைக்கவே மலைப்பாக உள்ளது. பொதுவாக பிள்ளைகள் இதுபோன்ற சமயத்தில் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும் அல்லது அக்கம்பக்கத்தில் யாரையாவது அழைக்கும். ஆனால் எமர்ஜென்சிக்கு அழைத்து எவ்வளவு தெளிவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி.. அதுவும் அந்தக் கதவு நிறத்தை உறுதிப்படுத்த வெளியில் ஓடுகிறதே.. கண்கள் கலங்கிவிட்டன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..இங்கே ஒருவாரம் அவன்தான் ஹீரோ :)
   எனக்கு கண்ணீர் முட்டியது ..ஷி இஸ் டெட் என்று அவன் சொல்ல கேட்கும்போது ..4 வயதில் எத்தனை தெளிவு பாருங்க .நிச்சயம் அவர் லக்கி தாய்

   Delete
 10. ரோமனின் அம்மா பிழைத்துக் கொண்டார்தானே? குழந்தைகளின் சமயோஜிதம் மகிழ்வளிக்கிறது. விவரமாத்தான் இருக்காய்ங்க...!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம் ,க்ளவுடியாவுக்கு அனீமியா ஆகவே அவர் எடுத்த மாத்திரைகளால் இப்படி மயக்கம் வருமாம் ,
   இப்போ சரியாகிட்டார் .குழந்தைகளை டிஸ்னிக்கு விடுமுறை அழைத்து செல்கிறாங்களாம் ,,இக்கால பிள்ளைகள் எல்லாவற்றிலு விவரமானவர்கள்

   Delete
 11. இந்தச் செய்தியினை நானும் வாசித்தேன்.. வியப்பு தான் மேலிட்டது.

  விழிப்புணர்வை சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கின்றார்கள்..
  அந்த அவசர சமயத்தில் ரோமன் மிகச் சரியாக நடந்து கொண்டிருக்கின்றான்..

  இதுவும் காலத்தின் கட்டாயம் தான்..

  ReplyDelete
  Replies
  1. அங்கும் காண்பித்தார்களா ! ஆமாம் அப்போ ரோமன் இண்டெர்நேஷல் லெவலில் பிரபலமாகிட்டான் ..ஆமாம் அவசர நேரத்தில் என்ன செய்யணும்னு இங்கே எல்லா பிள்ளைகளுக்கும் சொல்லித்தருவாங்க இதில் வெள்ளைக்காரர்கள் மிக கெட்டிகார்ரகள் .சிறு வயது முதலே பிள்ளைகளை சகா அனுபவங்களுக்கும் உட்படுத்தி தயார்ப்படுத்துவார்கள்

   Delete
 12. வாவ்!!!! ஐ ஃபோனினால் நன்மைகளும் உண்டு என்பது தெளிவு!! எதையுமே நாம் பயன்படுத்துவதில்தானே இருக்கிறது!!! ரோமன் குட்டி க்குப் பாராட்டுகள்! குழந்தைகளுக்கு இது போன்ற விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களை விட சமயோசித புத்தி மிக மிக முக்கியம். என் மகனுக்கும் அப்போது எல்லாம் ஃபோன் இல்லையே ஆனால் போலீஸ் எண், வீட்டு முகவரி என்று சொல்லிக் கொடுத்தது உண்டு. என்றாலும் ஆபத்தில் சிக்கினால் என்ன செயய் வேண்டும் போன்றவை மட்டுமின்றி சிவிக் சென்ஸ்...அது மிக மிக முக்கியம்...இது மேலை நாடுகளில் சிறிய வகுப்புகளிலேயே சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள். ஜப்பான் பள்ளிகளில் முதல் பாடமே நில நடுக்கம் வந்தால் உடன் என்ன செய்ய வேண்டும், ரெடியாக எப்போதுமே ஒரு பையில் அத்தியாவசியமான பொருட்களை ரெடியாக வைத்திருப்ப்பார்களாம் சொல்லியும் கொடுப்பார்களாம்...எடுத்துக் கோண்டு வெளியில் ஓடிட. அது போன்று சுனாமிக்கு என்று பல பாடங்கள். நாட்டுப் பற்றும் சொல்லிக் கொடுக்கப்படுமாம்.

  கலிஃபோர்னியாவில் என் மகன் ஒரு வருடம் 7 ஆம் வகுப்புக்குச் சேர்ந்த போது அங்கும் நில நடக்கம் வந்தால் பள்ளி என்ன செய்யும் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அது போன்று, கார் பூலிங்க், சைக்கிள் பார்க்கிங்க், ரோடில் எப்படி க் க்ராஸ் செய்ய வேண்டும் சிக்னல் பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் எமெர்ஜென்சி நம்பர் உட்பட...அனைத்தும்...மகன் பள்ளிக்குப் புதிய பையன் இல்லையா அதனால் ..
  இப்படி நம்மூரிலும் செய்யலாமெ என்று தோன்றியதுண்டு. நான் பார்க்கும் குழந்தைகளுக்கு, வீட்டு வேலை செய்யும் பெற்றொருக்கு எல்லாம் சொல்லி வருகிறேன்...

  அருமையான ப்திவு ஏஞ்சல்!! குட்டிப்பையன் மனதைத் தொட்டுவிட்டான்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ..ஜப்பான் பற்றி இங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்திருக்கேன் ..ஆச்சர்யப்படுத்துவார்கள் .என்ன ஒரு முன் யோசனை !.இங்கே ஐபோன் பயன்படுத்தாத சிறு பிள்ளைகளே இல்லை எனலாம் ..ஆமாம் இங்கே கிண்டர் கார்ட்டனில் முதல் பாடம் லைப் ஸ்கில்ஸ் .நம்ம ஊர் பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லித்தந்தே ஆகணும் ..இன்றைய தலைமுறை ஒழுங்கை தொடர்ந்த நாளை ஆக்சிடன்ட்ஸ் தவிர்க்கப்படும் வருங்கால சமூகத்திற்கு அது நாம் செய்யும் உதவி .

   Delete
 13. இளங்கன்று பயமறியாது வசதிகளை எளிதில் புரிந்துகொண்டு காலத்துக்குத் தக்கபடி செயல்படுகிறார்கள்சிலகுழந்தைகள்வயதுக்கு மீறி புத்திசாலிகளாக இருக்கிறார்கள்பகிர்வுக்கு நன்றி ஏஞ்செல்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நூறு சதவீதம் உண்மை ..எதையும் சமயோசிதமாக யோசித்து செயல்படுகிறார்கள் இக்கால குழந்தைகள்

   Delete
 14. இன்றைய சந்ததிகள் தொழில்நுடப அறிவில் ஆபாரமான தெளிவு பெற்றவர்கள் என் மகன் கூட பாடல்கள் தேடி எடுப்பதில் என்னைவிட சூரன்!

  ReplyDelete