அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/23/17

டியூஷன் கலாச்சாரமும் ஆசிய பெற்றோரும் ..

பயிற்சி வகுப்புகள் /ஸ்பெஷல் டியூஷன் வகுப்புகள் ..அவசியமா ?
====================================================================

 நான் நடந்து வரும் வழியில்  வீட்டருகே கொஞ்சம் தள்ளி மெயின் ரோட்டில் ஒரு கட்டிடம் காலியாக இருந்தது திடீரென ஒரு நாள் அதற்கு  மேக்கப் எல்லாம் போட்டு புது ஆடை (banner ) அணிவிக்கப்பட்டு இருந்தது ..//ஸ்டார்டிங் ஸூன் //ஸ்மார்ட் கிட்ஸ் அகெடமி ..//என்ற பெயருடன் ..

                                                                            

இன்னும் ஓரிரு நாட்களில் அங்கே கூட்டம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ரோட்டில் கார் நகர  முடியாமல் டிராபிக் ஜாம் மற்றும் அந்த கட்டிட வாசலில் புற்றீசலாய் 10 -16 வயது மாணவர்கள் பள்ளி சீருடையில் சோர்வான முகத்துடன் பார்க்க பாவமா இருந்தது  ..அது ஒரு பிரபல மாலை நேர பயிற்சி மையத்தின் கிளை .

அங்கே பயிலும் மாணவர்கள் குஜராத்தி பஞ்சாபி இலங்கை தமிழ் மற்றும் பாகிஸ்தானியர் பிள்ளைகளே ..எங்கள் பகுதியில் இன்னும் தென்னிந்தியர் குடும்பமாக இல்லாததால் அவர்களை காணவில்லை அங்கு. நான்  அடிக்கடி அவ்வழியே செல்வதால் எனது பார்வை அங்கேதான் இருக்கும் .இங்கே பள்ளிக்கூடங்கள் 3:30 விட்டவுடன் பெற்றோர் காரில் பிள்ளைகளை மூட்டையாய் திணித்து ஸ்பெஷல் வகுப்புக்கு கொண்டு வருகின்றனர் ..எனது மகளுடன்  ஒருமுறை அவ்வழியே செல்லும்போது அவள் அந்த இடத்தை பார்த்து விட்டு சொன்னாள் அதில் பயில்வோர் பலர் அவளது பள்ளியில் படிக்கும் பஞ்சாபி பாகிஸ்த்தானியர் பிள்ளைங்கள் .இதில் வேடிக்கை என்னவென்றால் அனைவருமே நன்கு மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளாம் ..எதற்க்காக எதை பிடிக்க இந்த பெற்றோர் இக்குழந்தைகளை துரத்துகிறார்கள் என்பது என் சிறு அறிவுக்கு எட்டவில்லை ...


                                                                                   

                                           எங்கள் மகளுடன்  ஒரு நண்பரின் மகனும் காலையில் பள்ளிக்கு செல்கிறான் ..ஒரு நாள் அவன் பெற்றோரை சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்தேன் ..அப்போது தாய் சொன்னார் ஜி நான் அத்திக்கை டியூஷன் அனுப்புகிறேன் ..நான்  எங்கே ஸ்மார்ட் கீட்ஸில்லா என்று கேட்டேன் அதற்க்கு சொல்கிறார் ..இல்லை ஜி அங்கே படிக்கும் மாணவர்கள் இதுவரை 100 % மதிப்பெண் எடுக்கலை எந்த பாடத்திலும் அதனால் பெர்மிங்ஹாம் அனுப்புகிறோம் சனி ஞாயிறு காலை  8  -7 மாலை வரை ..வார நாட்களில் வேறொருவர் வீட்டுக்கு வந்து தினமும் 2 மணிநேரம் டியூஷன் தருகிறார் .. ..எனக்கு பாவமாக இருந்தது .....
இந்த பிள்ளைகளை காலை என் கணவரும் மாலை அத்திக்கின் தந்தையும் மாறி மாறி பள்ளியிலிருந்து அழைத்து வருவார்கள் ..நேற்று அத்திக்கின் கணக்கு பரீட்சை விடைத்தாள் கொடுத்தார்களாம் ..தந்தை அவனை வழியெல்லாம் திட்டி கொண்டு வந்தார் என மகள் கூறினாள் ..காரணம் அவன் பரீட்சையில் 50 இற்கு 47 மதிப்பெண் எடுத்ததால் :(  

இந்த பயிற்சி வகுப்புக்கள் செல்லும் மாணவர்கள் நிலை பரிதாபத்துக்குரியது காலை 8:40 பள்ளியில் இருக்க வேண்டும் பிறகு மாலை 4 முதல் 7:30 வரை டியூஷன் வீட்டுக்கு வந்ததும் வீட்டுப்பாடம் உணவு உறக்கம் மீண்டும் அடுத்தநாள் இதே தொடரும் இந்த சக்கரத்தில் எக்ஸ்டரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் பொழுதுபோக்குக்கு இடமேயில்லை ..இக்கால பெற்றோருக்கு தங்கள் பிள்ளை எல்லாவற்றிலும் முதலாக வரணும் என்ற பேராசை ..
தங்கள் ஆசைகளை இக்குழந்தைகள் மீது திணித்து குழந்தைகளை பாடாய்படுத்துகிறாரகள் ..பிள்ளைகள் படிக்கும்போது ஒரு தாய் அருகில் இருந்து கவனித்தால் போதும் அந்த பிள்ளை தனது பாடத்தை நன்கு படிக்கும் ..அதுவும் வெளிநாடுகளில் ஒரு வகுப்பில் 24 மாணவர்களுக்கு மேல் கிடையாது ....ஒவ்வொருவருக்கும் தனி கவனிப்புண்டு எந்த சந்தேகத்தையும் ஈமெயில் மூலம் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு உடனே கேட்டு தெளிவாக்கிக்கொள்ளலாம் ..இதற்கு மேல் என்ன வசதி வேண்டும் ..இந்த பேராசை பிடித்த பெற்றோருக்கு :( ..பள்ளியில் பாடத்தை கவனிக்காத பிள்ளை டியூஷன் வகுப்பில் சேர்ந்தால் மட்டும் சாதித்து விடுமா ??   உங்கள் அறியாமையை என்ன சொல்வது :(..பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவ வேண்டியது பெற்றோரே அன்றி இப்படி பயிற்சி வகுப்பாசிரியர் அல்ல .
இத்தகைய டியூஷன் வகுப்புகளுக்கு மாணவர்களை அனுப்புவது சைல்ட் அபியூஸுக்கு சமம் என்று சொல்கிறார்கள் ..
இந்த வகுப்புக்களுக்கு  இதுவரை பிரிட்டிஷ் பிள்ளைகள் சென்றதில்லை அவர்கள் எல்லாம் DOE ,SCOUTS,NCS நீச்சல் போன்றவற்றிக்கு தங்கள் பிள்ளைகளை மாலை நேரத்தில் கொண்டு செல்வர் ..ஆனால் பரிதாபத்துக்குரிய இந்திய ஆசிய பிள்ளைகளோ அங்கே பயிற்சி வகுப்பில் நாளைய மருத்துவராக அல்லது  என்ஜினியராக பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருப்பார்கள் :( இல்லை எடுக்க வைக்கப்பட்டுக்கொண்டிருப்பார்கள் ...

இது எல்லா பிள்ளையும் ஒவ்வொருவிதத்தில் ஸ்மார்ட் கிட்ஸ் என்பதை இந்த பேராசைபிடித்த பெற்றோர் உணரும்வரை இந்த பயிற்சி போதனா வகுப்புக்கள் தொடரும் ..

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ...

31 comments:

 1. வருத்தம் தரும் சூழல் ...
  ஆசிய மனநோய் இது

  ReplyDelete
  Replies
  1. வாங்க கஸ்தூரி ..ம்ம் நம் மக்கள் எங்கே போனாலும் இந்த முதல் என்னும் எண்ணத்தை மட்டும் இறுக்க பிடித்துக்கொள்கின்றனர் ..
   வேதனையான விஷயம் ..இங்குள்ள பல பிள்ளைகள் வழி மாறுவதன் மன உளைச்சலில் விழுவதன் காரணம் இந்த முதல் மார்க் மேனியாதான் ..

   Delete
 2. இதுபோன்ற குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதுதான். நான் பள்ளியில் படிக்கும் போது முதல் பெஞ்சில் முதல் மாணவனாக உட்கார்ந்து, ஆசிரியர்கள் நடத்துவதை அப்படியே கூர்ந்து கவனித்து மண்டையில் ஏற்றிக்கொள்வதோடு சரி. வீட்டுக்கு வந்துகூட அதிகம் நான் படித்தது இல்லை.

  அதேபோல என் பிள்ளைகள் மூவரையும் டியூஷனுக்கே நான் அனுப்பியது இல்லை. Maths இல் மட்டும் 100 க்கு 100 மார்க்குகளும், மற்ற சப்ஜெக்ட்களில் 80% to 90% வாங்கி முதல் 10 ரேங்குக்குள் வந்தால் போதும் என்பேன். என் பிள்ளைகளும் அதே போலவே கடைசிவரை செய்தார்கள். அவ்வப்போது மிகவும் சந்தோஷமாகப் பாராட்டி வந்தேன்.

  மூளையை சுதந்திரமாக இயங்கவிடாமல், சுயமாக சிந்திக்கவே விடாமல் செய்துவிடும், இந்த டியூஷன்கள் மூலம் ஒப்பித்து ஒப்பித்து 100க்கு 100 வாங்குவது என்பது. இதனை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்தால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..அதேதான் எங்கள் வீட்டிலும் நானும் டியூஷனெல்லாம் போகாமத்தான் படிச்சேன் ..முதல் 5 ரேங்கிற்குள் வருவேன் ..எல்லா பாடத்தையும் என் விருப்பத்திற்கு என் பெற்றோர் விட்டுவிட்டனர் ..
   என் மகளுக்கும் நானே டீச்சர் ..அவள் படிக்கும் போது அருகில் இருப்பேன் அவ்வளவே .இதுவரை அனைத்து பாடத்திலும் A ஸ்டார் எடுத்து வருகிறாள் பள்ளியில் நன்கு கூர்ந்து பாடங்களை கவனித்து டிஸ்ட்ராங்க்ஷன் இல்லாமல் வீட்டில் அதையே மறுபடியும் வாசித்தால் போதும் ..மனப்பாடம் செய்து அப்படியே விடைதாளில் புரிந்தும் புரியாமலும் அப்படியே இறக்கி வைப்பதில் பயன் என்ன ?
   இதை நாம் புரிந்துள்ளோம்..அந்த பையன் ஒவ்வொருநாளும் தனது பெற்றோருக்கு பயந்து காரில் ஏறுவானாம் ..மூன்று பிள்ளைகள் என் மக்கள் அவன் அப்புறம் இன்னொரு ஆப்பிரிக்க பெண்ணின் பெற்றோர் இவர்களில் காலை டிராப் செய்வது என் கணவர்
   எல்லா நாளும் மாலை ஆபிரிக்கப்பெண்ணின் பெற்றோர் இவனின் பெற்றோர் மாறி மாறி டிராப் செய்வாங்க ..இவன் அப்பா வந்தால் தலையை குனிந்திருப்பானாம் பயத்தில் .பாவம்

   Delete
 3. நல்லதொரு பதிவு... இது பற்றி நாமும் அடிக்கடி கதைப்பதுண்டு, ஊரில்தான் இப்படிக் கொடுமை நடக்கிறது எனில் வெளிநாட்டுக்கு வந்தும் விடுவதாய் இல்லை குழந்தைகளை. ஆனாலும் இலங்கையில் இந்த ரியூசன் கொடுமை குறைவுதான், அனுப்புவார்கள்தான் ஆனா தமிழ்நாட்டில் நான் கேள்விப்படும் அளவுக்கு அல்ல.

  இதில் சைனீஸ் காரரும் பயங்கர முன்னேற்றம்.. ஒரே ரியூசன் படிப்புத்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ அதிரா ..சென்னை விஷயத்தை எத்தோடும் கம்பேர் செய்ய முடியாது ..10 /15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த டியூஷன் ஆட்சி அங்கே ஆரம்பித்துவிட்டது .நன் படித்தது அரசு பள்ளி கத்தோலிக்க பள்ளி அதனால் அங்கு டியூஷன் இல்லை ..அந்த காலத்திலேயே வேடிக்கை பெரிய மருத்துவர்கள் அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவ சோம்பல்[பட்டு டியூஷன் சென்டர் அனுப்புவாங்க .எனக்கு தெரிந்த ஒரு ஆங்கிலோ இந்திய பெண்மணி .இந்த வீட்டுப்பாடம் செய்ய உதவியே பீரோ நிறைத்து பட்டுப்புடவை வாங்கி அடுக்கினார்90 களில் ..இப்போ அவர் லண்டனில் வசிக்கிறார் இங்கும் ஸ்போக்கன் ஆங்கில வகுப்புகள் அங்குள்ள போலிஷ் மற்றும் கிழக்கு ஐரோப்பியருக்கு எடுக்கிறாராம் :) வீட்டில் வைத்து ..

   சைனீஸ் மட்டுமில்லை இன்று நானா பார்த்தேன் சோமாலியரும் களத்தில் இருக்காங்க ..ஒவ்வொருவருக்கும் 8-10 பிள்ளைகள் சைல்ட் பெனிபிட் நலன் செலவு செய்றாங்க அதை டியூஷனுக்கு :)

   Delete
  2. ஐயோ சென்னை வொர்ஸ்ட்...ஏஞ்சல்!!! இன்னும் சேலம் நாமக்கல், ராசிபுரம் பாருங்கள் வெறுத்துப் போய்விடுவீர்கள்...

   நல்ல பதிவு ஏஞ்சல்!!

   Delete
 4. பிள்ளைகள் கொஞ்சம் குறைவாக இருப்பின் அனுப்புவதில் தப்பில்லை, இது பெற்றோருக்கு ஓவர் ஆசை.

  அன்று வெள்ளிக்கிழமை, ஸ்கூலில் என்னோடு வேர்க் பண்ணும் சக ஆசிரியை(ஸ்கொட்டிஸ்) கேட்டா, உங்கள் மகன்கள் வெள்ளிக்கிழமை இரவில் என்ன பண்ணுவார்கள்? பிரெண்ட்ஸ் வீடு போவார்களா இல்லை படம் பார்ப்பார்களா எனக் கேட்டா, நான் சொன்னேன் ஏதும் பேர்த்டே பார்ட்டி இருந்தால் போவார்கள் இல்லையெனில் வீட்டில்தான், சின்னவர் கேம் விளையாடுவார், பெரியவருக்கு ஹோம் வேர்க் அதிகமாக இருக்கும், அடிக்கடி எக்ஸாம்ஸ் நடக்கிறது அதனால பெரும்பாலும் படிப்பார் என்றேன்...

  உடனே அவவுக்கு கோபம் வந்து விட்டது.. “என்ன வெள்ளிக்கிழமையில்கூட படிக்கச் சொல்லி வெருட்டிறீங்களோ? அது தப்பு, ஏதாவது எஞ்சோய் பண்ண விடோணும்” என்றா...

  ஹையோ தெரியாமல் படிப்புக் கதையை சொல்லிட்டனே என நான் சமாளிக்கப் பட்டபாடு:)..

  இங்கே வெள்ளிக் கிழமைகளில் ஹோம் வேர்க் கூட கொடுத்து அனுப்ப மாட்டினம் ஸ்கூலில் இருந்து. இங்கத்தைய பிள்ளைகள் எவ்வளவு சுகந்திரமாக வளர்கிறார்கள் இந்த விசயத்தில்... அதுக்காக இங்கே டொக்டேர்ஸ், எஞ்சினியேர்ஸ் என உருவாவதில்லையா என்ன..

  ReplyDelete
  Replies
  1. இங்குள்ள வெள்ளைக்காரர்கள் கிட்ட மட்டும் படிப்பு பற்றி வாயே திறக்க கூடாது ..என் நண்பி ஒருவர் எந்நேரமும் ..//இந்தியர்கள் பிள்ளைகளை டார்ச்சர் செய்வதாக குற்றம் சாட்டுவார் :) ஒன்றுமில்லை ஒரு சனிக்கிழமை ஸ்விம்மிங் பூல் போக இவளை துணைக்கு அழைத்தார் நானா சொன்னேன் இவளுக்கு எக்ஸாம் இருப்பதால் படிக்கிறாள் அவ்வளவுதான் ..எனக்கு திட்டு ..நீ பிள்ளைக்கு ஸ்ட்ரெஸ் தருகின்றாய் அது இது என்று :) .அதேதான் அவர்களிலும் டாக்டர்ஸ் இஞ்சினீர்ஸ் இருக்காங்க டியூஷன் எல்லாம் அனுப்பமாட்டாங்க ,,12 வயதிலேயே பாய் ப்ரண்ட் இருந்தாலும் அவர்கள் படிக்கச் வேண்டிய நேரத்தில் படிப்பில் கவனம் தருவாங்க ..

   ஒரு நாள் இந்த பையனின் அப்பா ..என்னுடன் படிப்பு பற்றி டிஸ்கஷன் செய்யணும் உங்க மக்கள் ரிப்போர்ட்டை காட்டுவீங்களா என் மகனோடத்தோட நான் கொண்டு வரேன் அவன் இதில் குறைவாக இருக்கிறான் என்று எனக்கு அப்போதுதான் தீர்மானிக்க முடியும் என்றார் ..என்னால் பொய் சொல்லவும் முடிலா அன்னிக்கு இவள் ரிப்போர்ட் கொட்டுவந்தது அவர் கவனிச்சிருக்கார் .ந வேடிக்கைன்னா இவள் 11 ஆம் வகுப்பு அவன் 10 ஆம் வகுப்பு .இதில் என்ன ஒப்புமை :)

   Delete
 5. உண்மையில் இந்த சிறுவர் பராய உலகை நவீன தலைமுறை தாய் தந்தையர்கள் தம் பிள்ளைகளை மந்தைகள் போல் ஆக்கும் நிலையை நினைத்து நானும் வேதனைப்படுகின்றேன்! நான் எல்லாம் அதிகம் டியூசன் வாசம் பெறாதவன்!நல்லாத்தாகதான் நாட்டிலும் இங்கும் போட்டி போடுகின்றேன் பலரும் புரியாத இந்த மோகம் என்று தீருமோ!அதுவும் இலன்டனில் நம்மவர்கள் அதிகமாக பள்ளிப்பிள்ளைகளை டியூசன் என்றே வதைக்கின்றார்கள் எனலாம் !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நேசன் லண்டனில் மிக அதிகமாம் நானும் அறிந்தேன் ,நானும் டியூஷன்லாம் போனதில்லை .மகளுக்கு நானே சொல்லித்தருவேன் அவ்வளவே .நாம் நல்லாதானே படிச்சி முன்னேறினோம்ம்

   Delete
 6. ஏஞ்சல் என்னாது இது??!!!! உங்க ஊர்லயுமா??!!!! ரொம்ப வியப்பாக இருக்குது....அதை நடத்துபவர்கள் இந்தியரா? அல்லது ஏதேனும் நம்ம நாட்டைச் சுத்தி இருக்கற நாட்டைச் சேர்ந்தவர்களா?

  இதுவும் ஒரு மன நோய்! பெற்றோரது மன நோய் பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொள்கிறது..

  இங்குதான் இப்படி என்றால் அங்குமா....

  சுயமாகச் சிந்திக்க விடாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மார்க் என்று போவதால் எதிர்காலத்தில் இக்குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் என்று பல விதங்களில் அவர்களது மொராலிட்டியே போய்விடுகிறது....

  இதைப் பற்றி நிறைய எழுதத் தோன்றுகிறது...அதுவும் உளவியல் ரீதியாக..இது நம்மூரில் தொன்றுதொட்டு வளர்ந்து வரும் ஒன்று சமீபகாலத்தில் இது வரம்பை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆட்டுமந்தைக் கூட்டம் என்று சொல்லுவார்கள் ஆனால் அப்படிச் சொல்லி ஆடுகளைக் கேவலப்படுத்த நான் விரும்பவில்லை.

  இந்த ட்யூஷன் ஃபீவர், ஸ்மார்ட் கிட்ஸ், மார்க் பற்றி எல்லாம் எனக்கும் எவ்வளவோ எழுத தோன்றும்...ஆனால் இப்போதெல்லாம் ஏனோ தெரியவில்லை எழுத முடியவில்லை....அக்கருத்துகளைத் தொகுத்து எழுத வர மாட்டேன் என்கிறது....மூளையில் பல ஓடிக் கொண்டிருப்பதால் மூளை கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணுவதில் ஸ்லோவாகிவிட்டது ஹஹஹஹ்ஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா இங்கிலாந்தில் தான் இந்த டியூஷன் கூத்து .நடத்துவோர் பஞ்சாபியர் குஜராத்தியர்கள் லண்டனில் தமிழர்கள்
   kuman என்றொரு டியூஷன் சென்டரும் வேகமா பரவி வருது ...அந்த பிள்ளைங்களை நானா பார்ப்பேன் பாவமா இருக்கும் அப்படியே ஸ்கூல் யூனிபார்மில் டயர்டான உக்கார்ந்திருப்பாங்க .இங்கே கண்ணாடி கதவு ஜன்னல் அப்படியே வெளியிலிருந்து பார்க்க தெரியும் .
   என்னிடமே 6 பேர் கேட்டிருக்காங்க அவங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க ..அதுவும் 5 வயது பிள்ளைக்கு எதுக்கு டியூஷன் ..
   இந்த ஊர் பேரன்ட்ஸ் கொஞ்சம் சோம்பேறிகள் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க டுயூஷனுக்கு அனுப்பிட்டு தப்பிக்கிறாங்க .
   டியூஷனால் மன உளைச்சல் தான் கூடும் மாணவர்களுக்கு பாவம் விளையாட்டு இன்னபிற பொழுது போக்குகள் இல்லை இவர்களுக்கு

   Delete
  2. கீதா நீங்கள் நிச்சயம் உளவியல் ரீதியாக அருமையாக இந்த விஷயத்தை பற்றி அலசி ஆராய்ந்து எழுதுவீங்க ஆகவே முதலில் ஸ்டார்ட் பண்ணுங்க எழுத ..நான் இன்னும் எழுத நினைத்து பதிவு எஸ்ஸே ரேஞ்சுக்கு போய் விடக்கூடும்னு நினைத்து நிறுத்திட்டேன்
   நீங்க தொடருங்க இதைப்பற்றி

   Delete
  3. மன நோய்தான் ..நேற்று மகளுடன் பள்ளி பெண் அழுத்திட்டே வந்திருக்கா /கணிதத்தில் அவளை மீண்டும் பவுண்டேஷன் செய்ய சொல்லியிருக்காங்க சொல்லியிருக்காங்க பள்ளியில் .என்ன விஷயமென்றால் அவளுக்கு வீட்டில் பெற்றோர் இருவரும் வேலை உடன் யாரயுமில்லை படிப்பில் கீழே போயிட்டா பாவமா இருக்கு பெற்றோரின் பண பேராசை அந்த பிள்ளையை பாதிக்குது

   Delete
 7. பாவம் பிள்ளைகள். பொழுதுபோக்கோ, சந்தோஷமோ எதுவும் இல்லாமல் எப்போதும் மனா இறுக்கத்துடனேயே இருப்பார்கள். டியூஷன் மட்டும் என்றில்லை, கோடை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் ஏதாவது சில வகுப்புகளில் சேர்த்து விடுவார்கள். விடுமுறையின் மகிழ்ச்சியைக் கூட உணரமுடியாமல் அவர்கள் வகுப்பு படிப்பு ன்றே இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸ்ரீராம் ..நாமெல்லாம் மே மாத லீவில் வீட்டில நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்து பளபளப்பா ஜூன் மாதம் போவோம் பள்ளிக்கு பிரெஷா இக்கால பிள்ளைகள் நிலை பாவம் .ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் அவங்க படிப்பும் பாழ் அது பெற்றோருக்கு புரிவதில்லை

   Delete
 8. நானும் டியூஷன் சென்றிருக்கிறேன். பத்தாம் வகுப்பில் கனக்குப் பாடத்தில் மிகக் குறைவான மார்க் எடுத்ததற்காக திங்கள் புதன் வெள்ளி மாலைகளில் ஒருமணிநேரம் டியூஷன், அந்தப் பள்ளியிலேயே இன்னுமொரு மூத்த ஆசிரியர் எடுப்பார்.

  ReplyDelete
  Replies
  1. அது நம்ம ஊரில் ஸ்கூலிலேயே எடுப்பாங்க .பீஸ் கூட கொஞ்சூண்டுதான் இருக்கும் அது பரவாயில்லை ..இது 90 மதிப்பெண் எடுக்கும் பிழையை 100 /100 எடுக்க இந்த ஊரில் நம் மக்கள் செய்யும் கூத்து .நாம நாட்டை பொருட்ச் வரை போராடி படிக்கணும் வேலை செய்யணும் ஆனா வெளிநாட்டில் நிச்சயம் சாதிக்க பல துறைகளுண்டு ஆனா இந்த பெற்றோர் அவர்கள் கனவை kids மேலே திணிப்பது தான் வேதனை

   Delete

 9. ஏற்கனவே ஒரு ஜெனரேஷன் மக்களை நாசப்படுத்திவிட்டு இன்னும் அதி வேகமாக அடுத்த ஜெனரேஷனையும் நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள் இப்படி படிப்பு படிப்பு என்று படிப்பவர்கள் இறுதியில் வாழக்கையில் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். இப்படி வாழக்கை முழுவது போட்டி போட்டு கொண்டு நல்ல பணத்தை சேர்த்து அதே நேரத்தில் வாழாமல் மடிந்துவிடுகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மையே ..அதுதான் நானும் சொல்கிறேன் ..பணத்தை புகழை தேடி ஓடறாங்க அது கிடைக்கும்போது அனுபவிக்க நேரமும் காலமும் இருக்காது .போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் ..இந்த பிள்ளை என் நம்பருப்பின் மகன் இப்போவே இளைத்து துரும்பாகிட்டான் ..விளையாட்டு குறும்பு என்ற எதுவுமே இல்லை அவனிடம் ..ஒவ்வொரு நேரமும் மகளிடம் கேட்பானாம் //நான் ஏதாவது ஷாப்பில் வேலைதான் செய்வேனோ என பயமா இருக்கு அப்பா அமமா என்னை ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக்க நினைக்கறாங்க என்பானாம் ..

   Delete


 10. மேலும் இங்கு நாம் கவனிக்க கூடிய விஷயம் இப்படி படிக்க வைப்பதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமெனக்கிடுகிறார்கள் மற்ற குழந்தகைகளைவிட தன் குழந்தை படிப்பில் ஒருபடி மேல் இருக்க வேண்டும் என்ற போட்டி பொறாமைதான் இதற்கு காரணம்

  ReplyDelete
  Replies
  1. மிக சரியா சொன்னீங்க ..உண்மையில் சில தாய்மார்களை கண்டால் கோபமாக வரும் அவர்களின் பேராசை தங்கள் சக நட்புகள் மத்தியில் தன பேர் கெடக்கூடாதுன்னு போட்டியில் தான இதை செயகிறாரகள் ..அதெப்படி இந்த ஆசியர்களுக்கு மட்டுமிது ஒரு தீரா நோயாக அமைந்துவிட்டது என்று புரியலை ..போட்டி பற்றி சொல்கிறேன் ..

   Delete
  2. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விஷயத்தில் பெஸ்ட் என்பதை அவர்கள் எப்போ உணருவார்கள் :(

   Delete
 11. அங்குமா....கொடுமை

  எங்க வீட்ல இதுவரை பசங்கள் டியூசன் போனது இல்ல...நீங்க சொன்ன மாதிரி அவங்க படிக்கும்போது கண்டிப்பா நான் கூட அமருவேன்...நானும் ஏதாவது படிப்பேன்..

  extra டென்னிஸ் வகுப்புக்கு மட்டும் போறாங்க..அதுவும் ரொம்ப ஜாலியா இருக்கும்..  ஆன மத்த பசங்க ஹிந்தி டியுசன், அபகஸ், drawing கிளாஸ்....அப்பப்பா

  எல்லா அம்மாக்களும் ரொம்ப பிசி..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா அனு ..எல்லா புகழும் நம்ம ஆசிய மக்களுக்கே .போற நாட்டிலெல்லாம் சப்பாத்தி பஜ்ஜி தோசை குருமா எடுத்துக்கிட்டு போறதோட நிறுத்தாம இந்த டியூஷன் பழக்கத்தையும் விசா இல்லாம கொண்டாந்துட்டாங்கப்பா ..
   நல்லது நீங்க செய்வதே சிறந்தது ,நானும் மக கிட்ட அமர்வேன் அவ்வளவே .நன்றாகவே படிக்கிறாள் ..டென்னிஸ் பழகரா ..மனது ஹாப்பியா இருந்தா அந்த பிள்ளை நல்லா எல்லா துறையிலும் சிறந்து விளங்கும் ..

   Delete
 12. நானும் பார்த்திருக்கேன் அஞ்சு லண்டனில். என் ப்ரெண்ட் கூட டியூசன் அனுப்பிகிட்டே இருந்தா. போட்டி அதிகம் எங்க ஆட்களிடையே.
  இங்கு ஜேர்மனியில் இது மிக குறைவு என்றே சொல்லலாம். (இருக்கு. ஆனா குறைவு.)இங்கு டியூசனுக்கு அனுப்பினால் அவ்வளவுதான். சொத்து விற்கவேண்டும். 1 மணித்தியாலத்திற்கு 10, 15யூரோ. இங்கு பாடசாலையில் நல்லமுறையில் படிப்பிக்கிறாங்க. பிள்ளைகளும் பாடசாலையில் படிப்பதோடு புரிந்து படிக்கிறார்கள். 11ம் வகுப்பில்தான் பிள்ளைகள் 3மணிக்கு வருவாங்க. மற்றைய வகுப்பில் 1மணிக்கு வீடு வந்துவிடுவாங்க. மகனும் அப்படிதான். வந்து டேபிள்டெனிஸ் ட் ரெயினிங் போயிடுவார். வீட்டுப்பாடம் கூட சிலவேளை பாடசாலையிலேயே செய்துவிடுவாங்க.
  அடிக்கடி பாடசாலையில் கேட்கப்படும் கேள்வி , வீட்டில் படிபடி என திணிக்கிறாங்களா, வெளியில் விளையாட போவீங்களா, என்று.
  இங்கு நாங்க வெள்ளைகாரங்க கூடதான் போட்டி.
  //இங்குள்ள வெள்ளைக்காரர்கள் கிட்ட மட்டும் படிப்பு பற்றி வாயே திறக்க கூடாது// ஆமா அஞ்சு. சேம் பின்ச்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..ஆமாம் அதேதான் நானும் நினைப்பேன் ஜெர்மன் லைப் ஸ்டைல் ரொம்ப வித்தியாசம் ..இங்கே பணம் பேரண்ட்ஸ்கிட்ட நிறைய ..அங்கே ஜெர்மனில சின்ன திருட்டுத்தனமும் கவுன்சில் கண்டுபிடிச்சிடும் இங்கே அப்படியில்லை அதான் நிறைய பணம் பல வழியில் கிடைக்குது இவர்களுக்கு ..இங்கேயும் பள்ளிகளில் நல்லாத்தான் சொல்லித்தராங்க ஆனால் பேராசை அன்ட் போட்டி எங்க மக்களுக்குத்தான் எல்லாவற்றிலும் முதல் வரணும் ..வீடு வாங்கறது லேட்டஸ்ட் ஐ போன் வாங்கறது ட்ரிப் போறது இப்படி பிள்ளைங்க படிப்பு என நில்லாமல் தொடருது ..மகன் டென்னிஸ் செய்றாரா நலல்து கட்டாயம் ஒரு சப்போர்ட் ஆக்டிவிட்டி இருக்கணும் பிள்ளைகளுக்கு .வெள்ளைக்காரர்களுக்கு நாம் பிள்ளைகளை ill ட்ரீட் செயகிறோமென்ற உணர்வு மனதில் பதிய வச்சிட்டாங்க நம் மக்களே

   Delete
 13. ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை 90 மார்க் வாங்குபவரைவிட 95 மார்க் வாங்குபவர் புத்திசாலியா. ஒரு தவறான கண்ணோட்டத்தில் ஒப்பிட்டு நோக்குவதால்தான் இதெல்லாம் ஏஞ்செல். ட்யூஷன் சொல்லிக் கொடுப்பவர்கள் அதிக பணம் வசூலிக்கிறார்கள் பள்ளியில் ஆசிரியப் பணியை விட சிறந்தது பிள்ளைகளை இந்தப் போட்டியில் அவர்கள் விருப்பம் இல்லாமலேயே கலந்து கொள்ளச் செய்வது தாய்மார்களே என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இவர்கள் இலக்கெல்லாம் 100 க்கு 100 தான் ..இது ஒருவித போட்டி மனப்பான்மை பெற்றோர் மத்தியில் இங்கே நிலவுகிறது ..குறிப்பாக ஆசியர் மத்தியில் ..இதில் பாதிக்கப்படுவோர் அப்பாவி பிள்ளைகளே :(
   அப்பட்டமான உண்மை தாய்மார்களே இந்த முதலிடம் போட்டிக்கு காரணம்


   Delete
 14. வீட்டில் இருக்கும் இந்தத் தாய்மார்கள் இன்ன இடத்தில்தான் ஒப்பு நோக்குவார்கள் என்றில்லை. நான் மிகுமின் கொதிகலன் தொழிற்சாலையில் பணியிலிருந்தபோது கணவன் மார்களையும் ஒப்பு நோக்குவார்கள் அவருக்கு ப்ரொமோஷன் கிடைத்ததே உங்களுக்கில்லையா என்பதுபோல் பெண்களின் பிறவிக் குணம் போல் இருக்கிறதே

  ReplyDelete