அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/21/17

நட்பு


நட்பு 
=====
கெய்லியும் அவளது உற்ற நட்பு வாத்தும் ,கிம் கர்தாஷியனுக்கு கடிதம் ,பிரபு எனது மியாவ் நட்பு .


இந்த காணொளி யூ டியூபில் வேறெதையோ தேடும்போது கண்ணில் பட்டது .
இது ஒரு டேலன்ட் ஷோவில் பதிவானது ..ஒரு 5 வயது சிறு பெண்ணும் அவளது பெஸ்ட் நட்பு வாத்தும் பற்றிய காணொளி
.
kylie and snowflake 
==============

                                           


இந்த வாத்து அந்த சிறு பெண் போகுமிடமெல்லாம் செல்கிறது .தோட்டத்தில் இருக்காமல் இப்பெண்ணுடன் வீட்டினுள் சுற்றுவதால் அந்த வாத்துக்கு ஸ்பெஷல் டயப்பர் தைத்து வைத்து அணிவித்துள்ளார்கள் :).

கிம் கர்தாஷியனுக்கு கடிதம் 
===============================
இது மகளின் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் ..ஜெர்மன் வகுப்பில் நடைபெற்ற ஒரு பரீட்சையில் மாணவர்கள் அனைவரும் தங்களது நட்புக்கு (அவர் வெளிநாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும் ) தனது எதிர்கால திட்டங்கள் குறித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் .பரீட்சை விடைத்தாளில் தங்கள் பெயரை எழுத கூடாது  என ஆசிரியர் கூறியுள்ளார்.எல்லா மாணவர்களும் ஜெர்மன் மொழியிலேயே கடிதத்தை எழுதி முடித்து வினாத்தாளை கொடுத்து உள்ளார்கள் ..ஆசிரியர் ஒவ்வொரு வினாத்தாளை வாசித்துக்கொண்டு வந்த போது ஒரு வினாத்தாளை தூக்கி சிரித்தவாறே டிம் நீதானே இந்த கடிதத்தை எழுதியது என்றாராம் ..

ஒன்றுமில்லை அந்த மாணவன் நட்புக்கு எழுதும் கடிதத்தில் ஹாலிவுட் பிரபலம் கிம் கர்தாஷியனுக்கு லெட்டர் எழுதி  வைத்திருக்கிறான் ..
டியர் கிம் கர்தாஷியன் என ஆரம்பித்து liebe என்று ஒவ்வொரு பத்தியிலும் குறிப்பிட்டுள்ளான் :) ..இங்கே வெளிநாட்டில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் பழகும் பாணி தனிதான்.ஒவ்வொரு ஆசிரியருக்கும் தங்களது மாணவர்களை பற்றி நன்கு தெரியும் .ஒரு வகுப்பில் 26 மாணவ மாணவியர் மட்டுமே இருப்பர் . ,இதையே நம்மூரில் நான் படித்த காலத்தில் எழுதியிருந்தா :) ஆசிரியர் என்ன செய்திருப்பார்னு யோசிக்கறேன் ..

--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வாசகம் ஒரு பிரபல பத்திரிகையில் தொடராக வந்த பகுதியிலிருந்து எடுத்தது  யார் யாரிடம் சொல்லியிருப்பார் என்று யூகியுங்கள் ..

//நாம் நல்லதை நினைத்துக்கொண்டு பேசும் பேச்சு, செய்யும் செயல் ஆகியவை சில நேரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும். பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கக் கூட நமக்கு வாய்ப்பு கிட்டாது. உங்கள் வெள்ளை உள்ளம் சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. டேக் கேர்...//’

--------------------------------------------------------------------------------------------------------------------------

விலங்குகளும் ஐ லவ் யூ சொல்லுமா !!
------------------------------------------------------------------
எங்க வீட்டுக்கு ஒரு விசிட்டர் பிரபு அடிக்கடி வந்து போவார் முன்பே சொல்லியிருக்கேன் .பிரபு என நான் பெயர் சூட்ட காரணம் அவன் மியாவ் என்று கூப்பிடும்போது  பிரபு நடிகரின் குரல் போலவே அழுத்தி கரகரவென ஒலிக்கும் :)


                                                                                      

ஒரு நாள் வீட்டுக்கு வந்தான் ரத்த ரணகளம் ..இவன் வேறெங்கோ தொலைவில் இருந்து நித்தம் எனக்கு ஹாய் சொல்கிறான் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரியும் .ஒருநாள் காலை  நேரம் கணவரும் மகளும் ஸ்கூலுக்கு போகும்போது இவன் ரோட்டை கடந்து எங்கள் வீட்டுப்பக்கம் வருவதை பார்த்துள்ளார்கள் .
இப்படி இவன் வரும்போது அருகில் யார் வீட்டிலோ உள்ள doggy நன்கு கடித்து விட்டிருக்கு நெஞ்சு பகுதியில் காதோரம் எல்லாம் ரத்தம் வழிய வந்து மியாவ் என கத்தினான் .துடைத்து வீட்டில் இருந்த wound பவுடரை போட்டேன் ..பிறகு தொடர்ந்து வந்து என்னிடம் மருந்து போட்டு செல்வான் ..காயத்துவங்கினதும் ஆலிவ் எண்ணெய் தேய்த்து விட்டேன் 2 வாரங்கள் கழித்து முடி மீண்டும் வளர துவங்கி விட்டது ..ஒவ்வோர் நாளும் போகுமுன் என்னை பார்த்து விழிகளை மூடி திறப்பான் எனக்கு புரியவில்லை ..ஒரு நாள் மகளிடம் காட்டவும் அவள் சொன்னாள் //அம்மா பிரபு உங்களுக்கு தாங்க்யூ ஐ லவ்  யூ சொல்கிறான் // பூனைகள் தங்கள் நன்றியை இப்படித்தான் தெரிவிப்பார்கள் என்றாள் .


மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..

                                               *******************************

48 comments:

 1. பல்சுவை பதிவாக மிகவும் நன்றாக இருந்தது... நிஷா நோட் பண்ணுங்கள் பதிவு அருமை என்று சொல்லாமல் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்.. வேலைக்கு போகும் நேரத்தில் படித்ததால் இந்த அளவுதான் கருத்து இட முடியும்

  ப்ளீஸ் எனக்கு பதிலாக நீங்கள் வந்து ஒரு பெரிய பதிவாக சாரி கருத்தை சொல்லிவிட்டு போகவும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஹா ஹா :) நிஷா அங்கே முகப்புத்தகத்தில் இருப்பர் இல்லைன்னா இவெண்ட் ஏதாவ்துபிஸியா இருப்பார் ..வந்து சொல்லும் வரை காத்திருப்போம்

   Delete

 2. ஏஞ்சல் பதிவிற்கு தலைப்பை மற்றவர்களை ஈர்த்து இங்கு வந்து படிக்கும்படி செய்யுங்கள்... உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் இனி கவனம் எடுத்து தலைப்பை எழுதுகிறேன்

   Delete
  2. ஏஞ்சல் மதுரை சொல்லுவது போல்...."விலங்குகளும் ஐ லவ் யூ சொல்லுமா" என்றோ அல்லது அதையும் விட..."பிரபு சொன்ன ஐ லவ் யு" "என்னிடம் ஐ லவ் யு சொன்ன பிரபு" என்று வைத்திருந்தால்....!!!!!!!

   கீதா

   Delete
  3. இரண்டாவதாகச் சொன்ன தலைப்பு எல்லாம் மதுரை தமிழன் பாணி ஹிஹிஹிஹிஹி....

   கீதா
   கீதா

   Delete
  4. ஹா ஹாங் :) கீதா உண்மையில் பிரபு ஏன் ஐ லவ் யூ சொன்னான் என்று வைக்க யோசிச்சேன் :)

   உண்மைல பிரபு பூனைன்னு தெரிஞ்சா கூட்டமா சேர்ந்து மொத்தி இருப்பாங்க மக்கள் என்னை அதான் ரிஸ்க் எடுக்கலை .
   ஆனா இனிமே வில்லங்கமா டைட்டில் வச்சு ,,தலைப்பு உபாயம் மதுரை தமிழன்னு வச்சா நான் தப்பிக்கலாம்னு தோணுது

   Delete
 3. முற்பிறவியில் இருந்து தொடரும் நட்பாகக் கூட இருக்கலாம்!..

  காலமெல்லாம் வாழ்க - அன்பு!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா ..ஆமாம் இருக்கலாம் ..பல இப்படிப்பட்ட வளர்ப்பு பிராணிகள் மிகவும் நேசத்துடன் பழகும்போது எனக்கும் அப்படி தோன்றும்

   Delete
 4. காணொளிகளை என்னால் ஏனோ காண முடியவே இல்லை. அதில் www.youtube.com took too long to respond என்று மட்டுமே வருகிறது. உங்களுடையது மட்டுமல்ல. யாருடைய காணொளி காண வேண்டும் என்றாலும் என்னால் முடியாமல் இது போலவே வருகின்றது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) நீங்க போனில் பார்க்கிறீர்களா இல்லை லாப்டாப்பிலே ..எனக்கும் இந்த காணொளிகள் போனில் தெரியாது
   நேரம் கிடைக்கும்போது பாருங்க .உங்களுக்கு பிடிக்கும்

   Delete
  2. Angelin March 21, 2017 at 7:23 PM

   //வாங்க கோபு அண்ணா :) நீங்க போனில் பார்க்கிறீர்களா இல்லை லாப்டாப்பிலே .. எனக்கும் இந்த காணொளிகள் போனில் தெரியாது. நேரம் கிடைக்கும்போது பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.//

   நான் என் மொபைலை என் நெருங்கிய நண்பர்களுடன் + உறவினர்களுடன் மட்டும், அதுவும் பேசுவதற்கும், வாட்ஸ்-அப் பகிர்வுகளுக்கும் மட்டுமே உபயோகப்படுத்தி வருகிறேன்.

   மற்றபடி நான் என் வலைப்பதிவுக்காக உபயோகிப்பது, பிறரின் பதிவுகளைப் படிப்பது போன்ற அனைத்து வேலைகளுக்கும், என்னிடம் என் படுக்கை அருகேயே எப்போதும் உள்ள, மிகப்பிரும்மாண்டமான ஸ்க்ரீன் உடைய டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே செய்து வருகிறேன்.

   அப்படியும் கொஞ்ச நாட்களாக இந்த வீடியோக்கள் மட்டும் எனக்கு ஏனோ தெரிவதே இல்லை.

   அதனால் எனக்கு ஒன்றும் குறையாகவும் தெரியவில்லை. தொல்லை விட்டது என நினைத்துக்கொண்டு சந்தோஷமாக மட்டுமே உள்ளேன். :)))))

   எனினும் நம் அஞ்சு வெளியிட்டுள்ள இதனைப் பார்க்க முடியவில்லையே என்ற மாபெரும் வருத்தம் மட்டும் எனக்குள் இருக்கத்தான் இருக்கிறது.

   [அதிரா to please note this :))))) ]

   Delete
 5. //நாம் நல்லதை நினைத்துக்கொண்டு பேசும் பேச்சு, செய்யும் செயல் ஆகியவை சில நேரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும். பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கக் கூட நமக்கு வாய்ப்பு கிட்டாது. உங்கள் வெள்ளை உள்ளம் சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. டேக் கேர்...//

  இதை யார் யாரிடம் சொல்லியிருந்தாலும் எனக்கே சொன்னதுபோல உள்ளது. மிக்க நன்றி. நானும் இனி கவனமாகவே இருக்கப்போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்போ கோபு அண்ணன் தனக்கு வெள்ளை உள்ளம் என சொல்லாமல் சொல்கிறாரோ?:).. விடுங்கோ விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:)).. முடியல்ல முருகா:)..

   Delete
  2. அந்த வசனம் யார் சொன்னது சரியா சொல்லுங்க பார்ப்போம் :) ஒரு க்ளூ இருவரும் கலைத்துறை

   Delete
  3. நான் பெரிய மனசு பண்ணி இக்கேள்விக்கு விடையளிக்காமல் போகிறேன்ன்..:) ஏனெனில் ட்றுத் பாவமெல்லோ, இப்போ அவசரத்தில பதில் சொல்ல முடியாமல் போயிட்டார் வேலைக்கு:)... வந்து சொல்லுவார்ர் வெயிட் அஞ்சு:).. பார்த்தீங்களோ நான் சொன்னேனே மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:)..

   Delete
  4. athira March 21, 2017 at 7:07 PM

   //அப்போ கோபு அண்ணன் தனக்கு வெள்ளை உள்ளம் என சொல்லாமல் சொல்கிறாரோ?:).. விடுங்கோ விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:)).. முடியல்ல முருகா:)..//

   எங்கட அதிராவே இப்படி கோபு அண்ணனில் வெள்ளை உள்ளத்தைப் புரிந்துகொள்ளாமல் சந்தேகப் பட்டுட்டாங்களே என நினைத்து [ஒரு பெரிய பண்டில் டிஷ்யூ பேப்பர்களுடன்] அழுதுகொண்டே உள்ளேன்.

   நானும் இப்போது காசிக்கே கிளம்பிட்டேன் .... எதற்கு?

   எங்கட அதிராவைத் தேடி அங்கு கண்டு பிடிக்கத்தான். :)))))

   Delete
 6. //ஒரு நாள் மகளிடம் காட்டவும் அவள் சொன்னாள் //அம்மா பிரபு உங்களுக்கு தாங்க்யூ ஐ லவ் யூ சொல்கிறான் // பூனைகள் தங்கள் நன்றியை இப்படித்தான் தெரிவிப்பார்கள் என்றாள்.//

  சூப்பர் ! மொத்தப் பகிர்வுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபு அண்ணா .அந்த வசனத்தை சொன்னது யார்னு கண்டுபிடிச்சிட்டீங்களா

   Delete
  2. Angelin March 21, 2017 at 7:26 PM

   //அந்த வசனத்தை சொன்னது யார்னு கண்டுபிடிச்சிட்டீங்களா//

   இல்லை. இங்கு எனக்கு இப்போதுள்ள ஏராளமான வேலைகளால், எதையும் யோசிக்க என் மரமண்டையால் முடியவில்லை.

   என் படைப்புகள் அனைத்தையும் மின்னூல் ஆக்குவதில் முழு மூச்சுடன் மூழ்கியுள்ளேன். அதிலிருந்து நான் ஒட்டுமொத்தமாக வெளியே வர ஓரிரு மாதங்களாவது ஆகிவிடும்.

   அதிராவிடமும் இதனைச் சொல்லி வையுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   Delete
  3. ஆ!!! மின்னூலா ..சந்தோஷம் அண்ணா .அப்படியே உடல்நலனையும் கவனிச்சுக்கோங்க கணினியில் கால நேரம் பார்க்காமல் இருக்க வேண்டாம் ..பிரேக் ரெஸ்ட் எடுத்து செய்யவும்

   Delete
  4. நோஓஓஓ நேரமில்லை எனில் அஞ்சு பக்கம் வந்திடாதீங்க கோபு அண்ணன் ஆனா எப்பூடியாவது அதிரா பக்கம் வந்திடுங்கோ ஏனெனில் மீ காசிக்குப் போக உள்ளேன்ன்ன் போக முன் எல்லோரையும் சந்திக்க ஆசையாக இருக்கு அதான்:)

   Delete
 7. அச்சச்சச்சோஒ ஒரு மனிசர் நிம்மதியா சாப்பிட முடியுதா.. தூங்க முடியுதா... டக்குப் பக்கெனப் பதிவு போட்டால்ல்.. நான் என் குட்டிக் காலால எப்படி ஓடி ஓடிப் பின்னூட்டம் போடுவதாம்ம்ம் கர்ர்ர்:)).. ரொம்ப களைச்சிட்டேன்ன் கூலா ஒரு கப் ரீ பிளீஸ்ஸ்:)..

  இது எல்லாத்துக்கும் காரணம் கோபு அண்ணந்தான்:) அவரைத்தான் நான் இப்போ தேடிட்டு இருக்கிறேன்ன்ன்:)..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிராவ் வாங்க உங்களுக்கு கொடுக்கன்னே ரெண்டு சமோசா ஒளிச்சி வச்சிருக்கேன் காலைலேருந்து நம்ம ட்ரூத்தும் கோபு அண்ணாவும் இங்கே இல்லை இந்தாங்க எடுத்துக்கோங்க

   Delete
  2. அதிரா நான் சீக்கிரம் 300 ஐ தொடணும் அதுக்குதான் இவ்ளோ வேகமா பதிவுகள் வருது :)
   நீங்க என்ன கிப்ட் கொடுக்கப்போறீங்க :)

   Delete
  3. என்னாதூஊஊஊஊஉ மூனைத் தொடப்போறீங்களோ?:) ஹையோ ஆண்டவா 2 சமோசா சாப்பிட்டாலே மூணு நாள் ஹவுஸ் அரஸ்ட்:) இதில மூணு நூறாஆஆஆஆஅ?:)).. ஹா ஹா ஹா கெதியா தொடுங்கோ.. உங்களுக்குப் பிடிச்ச சமோசாவில ஒரு 10 பார்சல் பண்ணி விடுறேன்ன்.. நான் நப்பியில்லை சமோசா விசயத்தில்:)..

   ஊசிக்குறிப்பு:)
   எனக்கு சமோசா சும்மா கொடுத்தாலும் வாணாம் சாமீஈஈஈ. நான் ஸ்கூலுக்குப் போகோணும்:).

   Delete
  4. அன்பா கொடுத்தா வாங்கி சாப்பிடணும்னு நீங்க சொன்னீங்க அதனால் நான் அனுப்புவேன் நீங்க சாப்பிட்டே ஆகணும்

   Delete
  5. ஆமா..ரொம்ப வேகமா இப்படி பதிவு போட்டா எப்படி பதில் போடுறது...மீ very tired..

   ஆனாலும் சீக்கிரம் 300 தொட்டு...500 தாண்டி...1௦௦௦ க்கும் மேல் பதிவுகள் செல்ல வாழ்த்துக்கள்...

   Delete
  6. இந்தாங்க அனு வல்லாரை ஜூஸ யாருக்கும் தெரியாம குடிச்சிருங்க டயர்ட் ஓடிடும் :)300 க்கே மூச்சு முட்டுது ஹா ஹா :) நான் லேபிள்ஸ் பற்றி சொன்னேன்

   Delete
 8. அடடா வாத்து வீடியோ மனதைக் கொள்ளை கொண்டு விட்டது... எந்தப் பிராணியும் பழக்கினால், அன்பு காட்டினால்.. எம்முடன் ஒட்டிவிடும்...

  பிரபுப்பிள்ளை வளர்ந்திட்டார்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா .நாமெல்லாம் எலிக்குட்டிகளையே அன்பாய் பழக்கினவங்க .எல்லா உயிரும் ஜீவராசிகளும் நாம் காட்டும் அன்புக்கு தங்களது அன்பை தரும்

   Delete
  2. பிரபு நல்லா குண்டு கொழுக்கு மொஸுக்குன்னு இருந்தான் அந்த கடி இன்ஸிடன்டுக்கு அப்புறம் பயங்கரமா மெலிந்து விட்டான்

   Delete
 9. அதிசய வாத்து. எனக்குத் தோட்டம் வேண்டாம் என்று அந்தப் பெண் பின்னாலேயே சுற்றுகிறது. என்றாலும் என் அற்ப மானிட மனம் அதனிடமிருந்து இன்னும் சில வித்தைகளை எதிர்பார்த்து ஏமாந்தது!


  கடிதம் எழுதும் பயிற்சி நல்ல பயிற்சி. நெருங்கிய, பழகியவர்களாயிருந்தால் யார் எழுதியது என்று கண்டுபிடித்து விடலாம்.

  நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும்வரிகளைச் சொல்லியிருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை!

  ஸ்வீட் பிரபு.

  ReplyDelete
  Replies
  1. அதேதான் நானும் யோசித்தது ..இன்னமும் அதிகமாக பழக்கியிருக்கலாமோ என்று ஏனென்றால் எங்க வீட்டில் இந்தியாவில் வளர்த்த வாத்துக்களே நான் வரும் நேரம் பப்லுவுடன் போட்டிபோட்டு என்னை வரவேற்கும் பார்த்தவுடன் வரும் :)கடிதம் ..இங்கு ஆசிரியர்கள் மிக புத்திசாலிகள் மாணவர்கள் பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளனர் ..ஒரு பிள்ளை யூனிவெர்சிட்டியில் என்ன சப்ஜெக்ட் எடுத்தா சரியாக படிப்பார் என்பது முதல் அனைத்தும் அத்துப்படி

   Delete
 10. ஓ... அந்தப் பிரபலம் ஜெயலலிதா. சந்திரபாபுவிடம் சொன்னது! சரியா?

  ReplyDelete
  Replies
  1. Yes 😃😃😃😃😃😊😊😊😊

   Delete
  2. சரியா கண்டுபிடிச்சிட்டீங்க :) நான் முழு தொடரையும் வாசித்தேன் ..அத்தனை லிங்கும் இருக்கு என்னிடம்

   Delete
 11. நட்பின் தொகுப்புகள்...அனைத்தும் சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..மிக்க நன்றிப்பா

   Delete
 12. ரீட் மோர் வைச்சதாலோ,சின்னதா எழுத நினைச்சதாலோ டக்கு டக் கென போஸ்ட் போடுறீங்க. எனக்கு உடனே அதிரா,உங்களதும்,இன்னும் சிலபேரது போஸ்ட் காட்டுதுதில்லை. உங்க பக்கம் வந்துதான் எல்லா போஸ்ட் ம் படித்து கருத்து எழுத வேண்டியிருக்கு.
  வாத்து பார்த்தும் எங்க வீட்டில் நின்ற 2 வாத்துக்கள்தான் ஞாபகம், அவையளும் இப்படிதான் ஓடி வருவாங்க பின்னால. ஆனா வீட்டுக்குள் விட தடை. அவையள் உள்ளே வந்துடுவினம். எல்லா பிராணிகளுமே நன்கு பழகினால் அன்பாயிடுவினம்.
  தன் அன்பை,நன்றி எப்படி சொல்வது அதான் பிரபு பார்வையால் சொல்லாமல் சொல்லுகிறார் போல.
  வெகு விரைவில் 300 ஆவது பதிவை எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..டாஷ்போர்ட் காமிக்கலையா ரீட் மோர் குடிச்சப்புறம் :)
   பரவாயில்லை லேட்டானாலும் வந்துட்டீங்க ..வாத்து கோழிகளில் பிரச்சினையே அவங்க ப்ரீயா எல்லா இடத்தையும் பெட்ரூம் பாத்ரூமாக்குவதால்தான் :) இங்கே வெளிநாட்டில் அவங்களுக்கும் diaper போடறாங்க ஹா ஹா :)
   பிரபு ரொம்ப அன்பு ப்ரியா :) எங்கிருந்தோ வாரான் என்னை தேடி ..இன்னும் 24 பதிவு இருக்கு 300 தொட ..அதில தெரியாம நேற்று பழைய போஸ்டோன்னை ரி பப்லிஷ் செய்து அப்புறம் ஹைட் செஞ்சிருக்கேன் பாப்போம் விரைவில் பார்ட்டி வைக்கிறேன்

   Delete
 13. எப்படி மிஸ் பண்ணினோம்....இந்தப் பதிவை...அருமையான பதிவு...பல விஷயங்களைப் பேசியிருக்கிறீர்கள்...வாத்து, பிரபு எல்லாரும் சூப்பர்...அந்த வரிகளை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை இருவருக்குமே!..

  கீதா: சரி மிஸ் ஆனாலும் வந்துட்டோம்ல...சரி சரி ஏஞ்சல் அந்த வாத்தைக் கொஞ்சம் என் பக்கம் டைவர்ட் பண்ணி விடச் சொல்லுங்கள்..ஸோ ஸ்வீட்...மனதைக் கொள்ளை கொள்ளுகிறது....ரொம்பச் சமத்து...

  பிரபு பற்றி நீங்கள் முன்னரே சொல்லியிருக்கிறீர்கள்....ஏன் இந்தப் பெயர் என்பது எல்லாம்... பாவம் அவன். ஷரன் சொல்லுவது சரிதான்....அது நன்றியும் தன் அன்பையும் தெரிவிக்கிறது. எல்லா செல்லங்களுக்கும் உண்டு ஒவ்வொரு மொழியில்....நாம் தான் அதைக் கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். என்று தோன்றுகிறது....

  கடிதம் எழுதுவது நல்ல பயிற்சி....அருமை...அதுவும் வகுப்பில் சூப்பர்!!!

  ReplyDelete
  Replies
  1. நேற்றுதான் பதிவிட்டேன் கீதா அன்ட் துளசி அண்ணா .
   அந்த வரிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சந்திரபாபு கிட்ட சொன்னது :)
   நடிகர் சந்திர பாபு விளையாட்டுத்தனமா சில செயல்கள் பேச்சு என செய்வாராம் அது அங்கிள் mgr அவரை ஹிந்து நாளிதழில் கோபப்படுத்தியிருக்காம்
   இந்த விவரம் எல்லாம் என்னருமை தோழி என்ற தொடரில் வந்தது ..
   வாத்தை அனுப்பி விடறேன் :) அழகா இருக்கில்ல எல்லா ஜீவனும் அன்பு செலுத்தகுவதில் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன .
   பிரபு எப்பவும் வரும்போதே பெரிய மியாவோடு தான் வந்து ப்ரசண்ட் சொல்றான்

   Delete
  2. கடிதம் எழுதுதல் பல மொழிகளில் இங்கே கட்டாயம் பள்ளிகளில் .ஆனா மாணவன் ரொம்ப கிம் கரடாஷியன் ரசிகசிகாமணி போலிருக்கு :) அதனை உணர்ச்சிவசப்பட்டு அவருக்கே எழுதித்தான்

   Delete
 14. எனக்கு ஒரு திரைப்படத்தில் அம்பிகா பாக்கிய ராஜிடம் வாத்து என்று சொல்வார் வாத்து என்பது மக்கு என்பதைக் குறிக்குமோ வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் கவனம் தேவை நாம் எந்த அர்த்தத்தில் சொன்னாலும் சேருமிடத்தில் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் வருத்தம்தான் நாய் பூனை இவற்றை வளர்ப்புப்பிராணிகளாகப் பார்த்த எனக்கு வாத்துஅணில் போன்றவையும் வளர்க்கப்படுவது ஆச்சரியச் செய்தியே முன்னூறு என்பது ஒரு குறியீடே இலக்கை அடைய வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நானும் வாத்து மடதனம் கேள்விபட்டுக்ள்ளேன் ..அது ஒரு வாத்தை பிடித்து கோணியில் அல்லது கூடையில் அடைக்க மற்றதெல்லாம் ஓடோடி தானே வந்து அடையுமாம் அதற்குத்தான் மடத்தனம் என்கிறார்கள்
   வெளிநாடுகளில் எலி ஓணான் ஆமைக்குட்டி எல்லாமே வளர்ப்பு பிராணிகள்தான் ,,300 என்பது சும்மா ஒரு டார்க்கிட் அவ்வளவே :)

   Delete
 15. அருமையான பகிர்வு. வாத்துடன் ந்டபாய் இருக்கும் குழந்தை வாழ்க!
  பூனையின் (பிரபு) காயத்திற்கு மருத்து கொடுத்த தேவதைக்கு நன்றி சொன்னவிதம் அருமை.
  அழகான நட்பு.
  நட்பு வாழ்க!

  ReplyDelete
 16. காணொளிகள் அருமை.

  ReplyDelete