அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/20/17

கடிதம் மற்றும் வாழ்த்து அட்டை

கடிதம் மற்றும் வாழ்த்து அட்டை 
-------------------------------------------------------------
                              இந்த கடிதம் எழுதுவதே நம்மில் பலருக்கு மறந்து போயிருக்கும் ..கணினியில் நான்  கூகிளில் டைப் செய்வதால் அன்புள்ள //A ன்புள்ள.//  என்று எழுதும்போது வந்துவிடும் ..நான் கடைசியாக எழுதிய கடிதம் அதுவும் தமிழில் ஏறக்குறைய 18 /19 வருடங்களுக்கு முன்பு ஊரில் எங்க  வீட்டு வேலை செய்பவருக்கு அரசு அலுவலகம் ஒன்றுக்காக தமிழில் எழுதி கொடுத்தது ..திருமணம் முடிந்தபின்பு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஓரிரு முறை நாலு வரி ஆங்கிலத்தில் எழுதியிருப்பேன் அவ்வளவே ..எல்லா உரையாடலும் தொலைபேசி வழியே ஸ்கைப் வழியே தான் நடைபெற்றது ..
ஆனால் எனது கணவரின் தந்தையோ  (இப்போ உயிருடன் இல்லை அவர்) தனது மகன்களுக்கு 5 பேருக்கும் தனது மரணம் வரை தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார் .இன்னமும் எனது கணவர் அவற்றை பத்திரமாக வைத்துமிருக்கிறார் .

                       எங்கள் மகள் பிறந்தப்போ அவரால் கடிதம் எழுத முடியவில்லை ஆனால் வாழ்த்து அட்டையில் கஷ்டப்பட்டு வாழ்த்து எழுதி அனுப்பினார் அதை நான் அவளது ஆல்பமில் ஒட்டி வைத்துள்ளேன் ..இந்த வாழ்த்து அட்டை அனுப்பும் கலாச்சாரம் வெளிநாட்டில் தான்  அதிகம் .நானும் கையால் செய்த வாழ்த்து அட்டைகளை சிலருக்கு தவறாமல்  அனுப்பி வருகிறேன் ..

 நட்பு ஒருவருக்கு அனுப்பிய  பிறந்த நாள் வாழ்த்து அட்டை இது .
                                                                                     
                                                                             
16 வருடங்கள் முன்பு மகள் பிறந்தப்போ அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை மற்றும் 16 வருடங்கள் பின் மகளது பிறந்த நாளுக்கு நான் செய்த வாழ்த்து அட்டை இரண்டும் அருகருகே ..

                                                                                    
                                                                                

அதில் குழந்தை இயேசுவுடன் மேரி ஜோசப் .அப்போ மகள் பிறக்கும் தருணம் சரியாக டிசம்பர் 25 முன்பு ஆகவே அந்த படமுள்ள வாழ்த்து அட்டையை அம்மா அனுப்பியுள்ளார் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் நேரம் அனைத்து கார்ட்ஸையும் நாங்க வீட்டில் வைத்து அலங்கரிப்போம் அப்படி வைத்த பழைய வாழ்த்து அட்டை அருகில் மகளின்  16 வது  பிறந்த நாள் வாழ்த்து அட்டை .இதை அதன் அருகில் வைக்கணும்னு வைக்கல ஆனா படம் எடுத்த பிறகே கவனித்தேன் எனக்கு ஆச்சர்யமாகிப்போனது ..அப்பாவும் அம்மாவும் இப்போ இல்லை ஆனா மானசீகமான அவங்க வாழ்த்தினாற்போல் எனக்கொரு உணர்வு ..

நாமெல்லோருமே வாழ்க்கையில் சிறிய தவறுகளை செய்திருப்போம் அதை பெற்றோரிடமிருந்து மறைத்துமிருப்போம் .அப்படி நான் செய்த ஒரு சின்ன தப்பு அதை அப்பாவுக்கு சொல்லவேயில்லை அந்த வருத்தம் இன்னமும் இருக்கு .
ஒரு சின்ன கடிதமாக அதை எழுதறேன் ..யாரவது இம்மாதிரி தவறுகளை செய்யாமல் தவிர்க்ககூடுமல்லவா ..

அன்புள்ள அப்பாவுக்கு ,மேலுலகில் நீங்களும் அம்மாவும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் .அப்பா நான்  ஒரு சில சின்ன தவறுகளை செய்திருக்கிறேன் .அதில் முக்கியமான ஒன்று நீங்க என் திருமணத்திற்கு செய்த அந்த மாங்கா டிஸைன் நெக்லஸை பழைய மாடல் என்று ஊருக்கு வந்த புதிதில் உங்களுக்கு தெரியாம மாற்றிவிட்டேன் ..இதில் அம்மாவும்  உடந்தை ..ஆனால் நீங்க அன்புடன் தந்த நெக்லஸை கொடுத்து வாங்கிய அந்த புதிய நெக்லஸை பல வருடங்கள் அணியவும்  மனம் வரவில்லை குற்றவுணர்விலேயே இருந்தேன் மன்னித்து விடுங்கள் அப்பா .அப்புறம் அப்பா உங்களுக்கு  மிகவும் பிடித்த அந்த அரசியல்  கட்சியையும் முகப்புத்தகத்தில் இருந்த வரை வாரோ வாரென்று வாரியுள்ளேன் .இனி அப்படி செய்ய அதிக சந்தர்ப்பம்  இருக்காது என்றும் கூறிக்கொள்கிறேன் .

உயிருடன்இருக்கும்போதே நகை விஷயத்தை சொல்லியிருக்கலாம் .பரவாயில்லை இப்போ மனசு லேசாகி விட்டது .மேலும் பானுமதி அவர்களின் மாங்கா நெக்லஸ் கதை எங்கள் பிளாக்கில் கேட்டு  வாங்கி போடும் கதையில் பின்னூட்டத்தில் அவர் சொன்னார் குற்றவுணர்வு வேண்டாம் என்று ..கூடும்மான வரை பெற்றோர் தரும் அன்பளிப்புகளை பத்திரமா வைக்க முயலுங்கள் நட்புக்களே .

                             =========================================


அடுத்த கடிதம் இது மகளுக்கு எழுதிக்கொண்டுவரும் ஒரு ஸ்க்ராப் புக்கிலிருந்து அவளது 18 ஆவது வயதில் கொடுக்க தீர்மானித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் படத்துடன் தயாரித்து வருகிறேன் ..
இங்கே அதன் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு ..


நானும் நீயும் ..
==============
அன்பு மகளுக்கு !
==================

எதிர்பாராமல் நினையாத நேரத்தில் இறைவனது கிருபையால்  கிடைத்த பொக்கிஷமே !
ஒருமுறை நள்ளிரவு உனது அப்பா இரவுப்பணி நான் மட்டும் வீட்டில்  தனியே.. என்னுள்ளே நீ  ..அன்று மிக மோசமான இடி ஓசை  கோடைக் காலமாதலால் சாளரங்களை திறந்து வைத்து விட்டேன்  என்னால் அந்த பலத்த இடி ஓசையை  கேட்க முடியவில்லை .எழுந்து சென்று மூடவும் பயம் ..பயத்தில் சுருண்டு படுத்திருந்தேன் நீயோ அதுவரை அம்மாவை உதையோ உதையென்று உதைத்துக்கொண்டிருந்தாய் எனக்கோ வலி தாங்க முடியவில்லை ..வயிற்றில் வளரும் குழந்தைக்கு வெளியில் நாம்  பேசுவது மற்றும் பாடல்கள் இசை கேட்பது கேட்குமாம் ..அது உண்மைதான் போலும் இந்த  இடி சத்தம் கேட்டதும் நீ அமைதியாகி  விட்டாய் !
பிறகு தான் நான்  தூங்கினேன்.எனக்கே பாவமாக இருந்தது . சுமார் 3 மணிநேரம் கழித்து இடியோசை கேட்பது நின்றதும் மெதுவாக மீண்டும் உதைத்தாய் ! நான் இருக்கிறேன் என்னுடன் பேசுவதை விட்டு உனக்கென்ன நிம்மதியான  உறக்கமென !பட்டு பாதங்களால் உதைத்து பார்த்தாய் நினைவிருக்கிறதா மகளே ..//

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்..
                                                            ****************** 

83 comments:

 1. Replies
  1. வருகைக்கும் ரசித்து அருமை என பாராட்டியதர்க்கும் நன்றிங்க விஜயகுமார்

   Delete
 2. கடிதங்கள் எழுதுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது. ஏன் இல்லை என்றே சொல்லலாம் நான் 1950களில் என் தந்தை எழுதி இருந்த கடிதங்கள் சிலவற்றைப் பத்திராமாய் பொக்கிஷம்போல் பாது காத்து வருகிறேன் என் பதிவு ஒன்றிலும் பகிர்ந்திருக்கிறேன் கடிதங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதப் பட்டன. சில உணர்வுகளைத் தயக்கமில்லாமல் சொல்ல ஆங்கிலம் உதவுகிறது/ எனக்குட் தெரிந்த மெத்த படித்த நண்பர் ஒருவர் தமிழில் பேசும்போது மிகவும் பணிவாக அழகாகப் பேசுவார் ஆனால் ஆங்கிலத்தில் பேசும்போது அவரது எல்லா குணங்களும் வெளிப்படும் ஒரு வேளைவீட்டில் தமிழில் உரையாடல் சிறப்பாகக் கண்காணிக்கப் பட்டிருக்கலாம் இப்பதிவு ஏதேதோ எண்ணங்களை விதைத்துச் செல்கிறது

  ReplyDelete
  Replies
  1. //950களில் என் தந்தை எழுதி இருந்த கடிதங்கள் சிலவற்றைப் பத்திராமாய் பொக்கிஷம்போல் பாது காத்து வருகிறேன்//
   மிக்க சந்தோஷமாக இருக்கு ..சிறந்த பொக்கிஷம் அல்லவா அப்பா எழுதிய கடிதம் .என் தந்தை வருஷந்தோறும் எனக்கு பட்டுப்புடவை எடுத்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார் இறுதியாக அனுப்பியது 2008 டிசம்பர் கனகாம்பரம்பூ நிற பட்டுப்புடவை அதையும் அது வந்த பார்சல் அதில் அப்பாவின் கையெழுத்து இருக்கு அதையும் பத்திரமா வைத்திருக்கேன் .
   நிறைய பொருட்கள் இருக்கு அப்பா அனுப்பிய பிள்ளையார் படம் போட்ட பை இப்படி நிறைய இங்கேயும் படம் போட்டுள்ளேன் .
   ஆமாம் தமிலும் ஆங்கிலமும் உணர்வூகளை மன ஓட்டங்களை வெளிப்படுத்துவதில் வேறுபட்டுள்ளது ..
   வீட்டுப்பாடம் இப்போ ஆன்லைனில் செய்றாங்க மாணவர்கள் எழுதுதல் கொஞ்சமாக அழிந்து வருகிறதோ என தோன்றுகிறது


   Delete
 3. //நானும் கையால் செய்த வாழ்த்து அட்டைகளை சிலருக்கு தவராமல் அனுப்பி வருகிறேன் ..//

  இதில் ’தவராமல்’ என்பது தவறாக உள்ளது. அதைத் ‘தவறாமல்’ என்று தவறாமல் மாற்றி விடுங்கோ அஞ்சு.

  நம் தமிழ் புலமை வாய்ந்த அதிரா வந்து கூச்சல் போட்டு றீச்சரை கூவி அழைப்பதற்குள் மாற்றி விடுங்கோ, ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) ஆமாமா அதிரா தமிழில் டீ வாங்கினவங்க :) ஆனா ழ ள ல மட்டும் வராது . நான் சரி செஞ்சிட்டேன் மிக்க நன்றி

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபு அண்ணன்.. வந்தமா படிச்சமா கொமெண்ட்ஸ் போட்டமா என போய் விட்டு.. எனக்கு ரகசியத் தகவல் அனுப்பியிருக்கோணும்:) நான் மின்னல்மியாவாக வந்து கையும் களவுமாப் பிடிச்சிருப்பனே.. இப்போ திருத்திட்டாவே:) ஜஸ்ட்டூஊஊஊ மிஸ்ட்டூஊஊஊ:)..

   இருப்பினும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்:).. அஞ்சுவுக்கு ற,ர விட கண்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)... போன தடவை விறல்:) எனப்போட்டா.. நான் ஏதோ விறால் என ஒருவகை மீனை சொல்றாவாக்கும் என ஓடி வந்தால்.. அது விரல்:)...

   புஸ்பா அங்கிள் கடையில் வாங்கிய புகை வராத கற்பூரத்தின் மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்.. இது தவறிப் போட்ட ர அல்ல:).. இது தெரியாமல் போட்ட ர.....

   அஞ்சு ஓடிப்போய்க் கண்ணாடிக்கு முன்னால நிண்டு, நிலத்தைப் பார்த்தபடி.. 50 தடவை பாடுங்கோ.... ரா...ஆஆஆஆஆஆ றாஆஆஆஆஆஆஆஆஆ சுரசிக்கு ரா.....ஆஆஆஆஆஆஆ றாஆஆஆஆஆஆஆஆஅ:)

   Delete
  3. அது ர ர இல்லை ரா ரா :) சந்திரமுகி ராரா

   Delete
 4. வாழ்த்து அட்டைகள் எல்லாமே அழகாக உள்ளன. ஒவ்வொன்றையும் பத்திரமாக பத்திரப்படுத்தி வைத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒவ்வொன்றையும் பத்திரப்படுத்தும் பழக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது எனது கணவர் தான் :)

   Delete
 5. மேலுலகில் உள்ள அப்பாவுக்கு எழுதியுள்ள கடிதமும், மகள் வயிற்றினில் இருந்த சம்பவத்தை வர்ணித்து மகளுக்கு இப்போது கற்பனையுடன் எழுதியுள்ள கடிதமும் சூப்பராக உள்ளன. நல்ல உருக்கமாகவும் உள்ளன.

  உங்களுக்குள் ஓர் மிகச்சிறப்பான WRITING SKILL ஒளிந்து கொண்டுள்ளது இப்போதுதான் இந்தக் கடிதங்களின் மூலமாகத்தான் அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

  விடாதீங்கோ.... தொடர்ந்து இதுபோல யோசித்து ஆக்கபூர்வமாக மட்டுமே எழுதுங்கோ. எழுத்துலகில் தாங்கள் மேலும் நன்கு பிரகாசித்து ஜொலிக்க என் வாழ்த்துகள் + ஆசிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா .. மிக்க நன்றி ..அப்படியே நீங்க சொன்ன மாதிரியே செய்கின்றேன் .
   இன்னும் நிறைய மனதில் வந்து சென்றது.. நான் ஒரே பதிவில் லிமிட் தாண்டாமல் எழுத நினைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன் :) இல்லேன்னா இந்த பதிவு இன்னும் ஐந்து மடங்கு பெரிதாகி நிறையபேரை மயக்கம்போட்டு விழ வைத்திருக்கும் :)

   பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா ..

   Delete
  2. //அப்படியே நீங்க சொன்ன மாதிரியே செய்கின்றேன்.//

   வெரி குட். [Good Girl ! ... அதிரா to please note this]

   //இன்னும் நிறைய மனதில் வந்து சென்றது..//

   மனதில் அவ்வப்போது வருவதையெல்லாம், உடனுக்குடன் மறக்காமல் ஓர் இடத்தில் Rough ஆக எழுதி சேமித்து வைத்துக்கொள்ளுங்கோ.

   //நான் ஒரே பதிவில் லிமிட் தாண்டாமல் எழுத நினைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன் :)//

   அதுதான் மிகவும் நல்லது. பதிவுகள் எப்போது VERY SHORT & SWEET ஆக மட்டுமே இருக்க வேண்டும். இதை நானே மிகவும் தாமதமாகத்தான் தெரிந்துகொண்டேன்.

   //இல்லேன்னா இந்த பதிவு இன்னும் ஐந்து மடங்கு பெரிதாகி நிறையபேரை மயக்கம்போட்டு விழ வைத்திருக்கும் :)//

   ஆமாம். அதுபோல வளவளன்னு எழுதினால் படு போராகி விடும். சோம்பலில் யாரும் எதையும் ஊன்றிப் படிக்கவே மாட்டார்கள்.

   வெட்டியாக சிலர் மட்டும் வந்து, பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல், ஏதேனும் ஒருவரி கமெண்ட் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். வேறு சிலர் தங்கள் கமெண்ட்ஸிலும் நம்மை நன்கு போர் அடிப்பது உண்டு. :)

   மிகப்பெரிய பதிவாகக் கொடுத்த உங்களின் கடும் உழைப்பும் இதனால் வீணாகி விடும். அதனால் Very Short, Sweet & Interesting to read ஆக மட்டுமே கொடுங்கோ.

   மனமார்ந்த நல்வாழ்த்துகளுடன்
   கோபு அண்ணா

   Delete
  3. ///விடாதீங்கோ.... தொடர்ந்து இதுபோல யோசித்து ஆக்கபூர்வமாக மட்டுமே எழுதுங்கோ. எழுத்துலகில் தாங்கள் மேலும் நன்கு பிரகாசித்து ஜொலிக்க என் வாழ்த்துகள் + ஆசிகள்.///

   ஹையோ முருகா இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...அஞ்சுவை ஆயிரம் லேபல்கள் போட வச்சிடுவீங்க போல இருக்கே:) அஞ்சுவின் புளொக்கின் வலது பக்கத்தை கொஞ்சம் திரும்பி பாருங்கோ குமிஞ்சுபோய்க் கிடக்கு லேபல்கள்...

   அஞ்சூஊஊஊஊஊஊஊஉ இனி இந்த லேபல்களை ஒழுங்கு படுத்தாமல் அடுத்த போஸ்ட் போட்டால்ல்:), தேம்ஸ்ல.. காலில் கல்லைக் கட்டிப்போட்டுத் தள்ளிப்போடுவேன்ன் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:))

   Delete
  4. ///மிகப்பெரிய பதிவாகக் கொடுத்த உங்களின் கடும் உழைப்பும் இதனால் வீணாகி விடும். அதனால் Very Short, Sweet & Interesting to read ஆக மட்டுமே கொடுங்கோ. ///
   ஹா ஹா ஹா கரீட்டூஊஊஊஉ:) ஆனா என் அடுத்த போஸ்ட்... அந்தாட்டிக்காவைத் தொடுமளவுக்கு பெரிசாகிட்டே போகுதூஊஊஊஉ எழுத எழுத முடியுதில்லை:).. எல்லோரும் அஜீஸ் பண்ணோனும் சொல்லிட்டேன்ன்:)..

   Delete
  5. ///======================= ... அதிரா to please note this] //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஓஓஓ என் கண்ணுக்கு எதுவுமே தெரியல்ல இங்கின:).. நில்லுங்கோ ஒரு கப் கூலாஆஆஆஆஆ மோர் குடிச்சிட்டு ஓடி வந்திடுறேன்ன்ன்:) அது ஒன்றும் வயிறு புகையல் எல்லாம் இல்லை.. சரியான தண்ணி விடாயாக்கும்:)..

   Delete
  6. Yeah will sort out the labels asap

   Delete
  7. லேபிள்ஸை சரி செயகிறேன் என்று டாஷ் போர்டில் காலை வச்சேன் மயக்கமே வருது ,,எப்படி செய்றதின்னு திணறுகிறேன்

   Delete
 6. நானெல்லாம் இப்போது கடைக்கு போகும் போது சில சமயங்களில் வீட்டுக்கு தேவையான கிச்சன் ஐட்டங்களை ஒரு தாளில் தமிழில் எழுதி கொண்டுதான் செல்வேன்

  ReplyDelete
  Replies
  1. Very good. Can you tell how to write courgette in tamil 😆😆😆😆😆😆😆😆

   I never make or carry list ..and would never send my hubby with a list because he would loose it and buy whatever he sees at super market

   Delete
 7. அப்பாக்கு மகளுக்கு கடிதம் எழுதிய நீங்கள் அத்தானுக்கு எழுதப்போகும் காதல் ரசம் சொட்டும் கடிதங்களை படிக்க நாங்கள் ரெடியாக இருக்கிறோம் ஹ்ஹீஹ்ஹீ

  ReplyDelete
  Replies
  1. Haaaa haaa 😂 vanthu comments podaren

   Delete
  2. ஆசை தோசை அப்பளவடை

   Delete
  3. மதுரை தமிழன்!! மாமிக்கு நீங்கள் எழுதியதுண்டா.....மாமி உங்களுக்கு அன்புடன்த, செல்லமாகத் தரும் பூரிக்கட்டை மொத்துகள் ஃபேமஸ்....பதிலுக்கு நீங்கள் எழுதுவது....ஏஞ்சல் கேளுங்கப்பா...

   கீதா

   Delete
 8. நானெல்லம் ரொம்ப நல்லவன் அதனால் நீங்கள் கல்லூரிகாலத்தில் காதலித்த ஆண்களுக்கு கடிதம் எழுத சொல்லி அதிரா நிஷா கீதா கூட சேர்ந்து போராட்டம் எல்லாம் நடத்தமாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்க போராட்டம் எல்லாம் நடத்த வாணாம்ம்ம்.. உண்ணா விரதம் இருங்கோ:)..

   Delete
  2. All those 3 guy's are married and settled so there's no use.

   Btw they are arvindsamy rahman and ajith haaa haaa,

   Delete
  3. அதிரா, ஏஞ்சல், நிஷா மதுரைத் தமிழன் ஏதொ ஒரு ஆங்கிலோ இந்தியன் பொண்ணு மதுரைல ....என்னைக் கூடத் தேடித் தரச் சொல்லியிருந்தார்....மதுரைத் தமிழன் முதல்ல அந்தப் பொண்ண பத்தி ஏதேனும் கொஞ்சம் சொன்னால்தானே தேடித் தர முடியும்....

   என்ன சொல்றீங்க அதிரா, ஏஞ்சல், நிஷா??!!!! நான் சொல்லுறது சரிதானே!!!

   கீதா

   Delete
  4. மாம் பொண்ணு பேரையும் குடும்ப பேரையும் சொன்னா போதும் நாங்க மத்ததை பார்த்துப்போம் அவங்கப்பா பெயரை மட்டும் சொல்லிடுங்க :) ஆங்கிலோ இந்தியர்கள் அசோசியேஷன் உறுப்பினர் ஒருவர் எனக்கு தெரியும் :)

   Delete
 9. ///நாமெல்லோருமே வாழ்க்கையில் சிறிய தவறுகளை செய்திருப்போம்///

  நோ நோ நோ நான் பெரிய தவறை எல்லாம் நிறைய செய்து இருக்கிறேன் அதில் ஒன்றுதான் என் கல்யாணம் ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. கrrrrrrrr :) மாமி இவர் ரொம்ப பேசறார் ஒரு வாரத்துக்கு விடாம அடிங்க

   Delete
  2. மாமிக்கு நியூஸ் போயாச்சு!!! ஹிஹிஹி....ஏஞ்சல் நீங்க ப்ரெஸ்ஸர் அனுப்பினீங்களா இல்லையா?!!!!

   கீதா

   கீதா

   Delete
  3. கீதா இவர் வீட்டு அட்ரசுக்கு அனுப்பினா இவர் தான் கையெழுத்து போட்டு வாங்கறாராம் .மாமியின் அலுவலக அட்ரஸ் இல்லைனா ரெக்கார்டட் டெலிவரி வித் சைன் போஸ்டில் அனுப்பனும் அப்போதான் மாமி கையில் கிடைக்கும்

   Delete
 10. // நீங்க என் திருமணத்திற்கு செய்த அந்த மாங்கா டிஸைன் நெக்லஸை///


  உங்க அப்பா என் கனவில் வந்து சொன்னார் அந்த நெக்லஸ் உங்க அம்மாவிற்கு செய்ததாம் ஆனால் அவர்கள் அதை ப்ழைய மாடல் என்று சொல்லிவிட்டதால் உங்களுக்கு திருமண பரிசாக தந்துவிட்டாராம் அவருக்கு தெரியுமாம் நீங்கள் ஏமாளி என்று

  ReplyDelete
  Replies
  1. ஹையோ எப்படி கண்டுபுடிச்சீங்க :) அது மாற்ற சொன்னதே அம்மாதான் ..எங்கப்பா உங்க கனவில் வந்து என் மகளுக்கு 10 கிலோ நேந்திரம் சிப்ஸ் அனுப்பணும்னு சொன்னாரே அதை ஏன் இன்னும் அனுப்பலை நீங்க

   Delete
  2. என்ன ஏஞ்சல் ஷரனுக்கு மாமா சீர் இம்புட்டுத்தானா??!!! பெரிசா கேப்பீங்கனு நினைச்சேன்....ஹஹஹ்ஹ்

   கீதா

   Delete
  3. ஹையோ கீதா ஆமால்ல ஏதாச்சும் பெரிசா கேட்டிருக்கணும் இவராகிட்ட
   and that nenthiram chips is for me :))

   Delete
 11. வழி விடுங்கோ வழி விடுங்கோ.. அஞ்சு புயுப்:) போஸ்ட் போட்டிருக்கிறாவாம்ம்ம்... நான் கொஞ்சம் காலைவாரி விடோணும்:).. வெரி சொறி டங்கு ஸ்லிப்ட்:).. நான் கொமெண்ட்ஸ் போடோணும் ஆரும் குறுக்கே நிக்காதீங்கோ... ஹையோ இதாரது மறைக்கிறது 220 கிலோ எடையோடு:).. சரி சரி எனக்கெதுக்கு வம்பு:) பெயர் எல்லாம் சொல்ல மாட்டேன்ன்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:)..

  ///கடிதம் மற்றும் வாழ்த்து அட்டை////
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எவ்ளோ காலமா புளொக் எழுதுறாவாம்.. ஒழுங்கா தலைப்புக்கு பெயர் சூட்டத் தெரியல்ல:))
  -------------------------------------------------------------


  ////இந்த கடிதம் எழுதுவதே நம்மில் பலருக்கு மறந்து போயிருக்கும் ..கணினியில் நான் கூகிளில் டைப் செய்வதால் அன்புள்ள //A ன்புள்ள.// என்று எழுதும்போது வந்துவிடும் ..நான் கடைசியாக எழுதிய கடிதம் அதுவும் தமிழில் ஏறக்குறைய 18 /19 வருடங்களுக்கு முன்பு ஊரில் எங்க வீட்டு வேலை செய்பவருக்கு அரசு அலுவலகம் ஒன்றுக்காக தமிழில் எழுதி கொடுத்தது///

  எனக்கொரு டவுட்டு:) நம்மில் பலருக்கு... தான் தமிழில் எழுதுவதில்லை எனச் சொல்வதில் ஒரு பெருமை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

  என் காண்ட்பாக்கை செக் பண்ணுங்கள் இப்பவும்.. அழகான வண்ணத்திப்பூச்சி பிங் கலரில் போட்ட நோட் புக்கும், பிங் கலரில ஒரு பென்சில் கேசும் இருக்குது:).. எனக்கு ரைம் கிடைக்கும் போதெல்லாம் பாடல் வரிகள், பொன்மொழிகள் பழமொழிகள்... ஏதும் போஸ்ட் போடலாமே எனும் நினைப்பு வந்தால்.. அதற்கான தலைப்பு, சின்ன குறிப்பு... இப்படி ஏதாவது கிறுக்கியிருப்பேன். பெரும்பாலும் காரில் பிள்ளைகளைப் பிக்கப் பண்ண தனியே வெயிட் பண்ணும் நேரங்களில் எல்லாம் கிறுக்குவேன்...

  அடுத்து அப்போ ஆரம்பித்த என் பொன்மொழிகள் டயரி.. இப்பவும் எழுதுகிறேனே.. எனக்கு எழுதுவது.... அதுவும் கலர் கலரா, டிசைன் பண்ணுவது எல்லாம் பிடிக்கும்.. அதனால்தான் இப்படி.

  ஏன் அதிராவுக்கு டெய்லி ஒரு கடிதம் எழுதி போஸ்ட் பண்ணலாமே:) நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))

  ReplyDelete
  Replies
  1. Naan sonnathu ..I haven't written in tamil for nearly a decade. .garrrrrrr.

   I didn't say I don't know to write. .I was just explaining how taminglish transliteration and writing have over taken our letter writing .I still use Google mail to write tamil fonts .all these years. I have never used nhm writer or sellinam in my phone or laptop. .

   Delete
  2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் திரும்ப பாருங்கோஒ.. ஐ வோண்ட் டமில் ரிப்ளை:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா ..நான் இப்போதான் லாப்டாப் திறந்தேன் அதான் ஆங்கில கமெண்ட்ஸ் போனிலிருந்து ..
   நான் சொன்னது பேப்பரில் letter எழுதும் பழக்கம் மறைந்து விட்டது என்பதைத்தான் சொன்னேன் .மிக பெரிய விஷயம் நீங்கள் இன்னும் டைரி தமிழில் எழுதுவது ..நானா ஆங்கில எழுத்தில் தட்டச்சும்போது பின்னே வரும் தமிழ் வார்த்தையை காபி பேஸ்ட் செய்வேன் அதில் நான் என்று டைப்பும்போது பலநேரம் நானா என்றே வந்துடும் அது தெரியாம (நனையும்) நானும் பாருங்க இதில் நனையும் என்று தட்டச்சியிருக்கேன் நானும் என்பதை ..பார்க்காமல் அப்படியே பின்னூட்டமிடுவேன் அதேபோல தான் ர ற அதெல்லாம் பச்சை மிளகாய் மிஸ்டேக்ஸ்சாக்கும் :)

   Delete
  4. //ஏதும் போஸ்ட் போடலாமே எனும் நினைப்பு வந்தால்.. அதற்கான தலைப்பு, சின்ன குறிப்பு... இப்படி ஏதாவது கிறுக்கியிருப்பேன். பெரும்பாலும் //இது நல்ல ஐடியாவாயிருக்கே .நான் பதிவெழுத்துமுன் யோசிப்பதில்லை அப்படியே ஒரு ப்ளோவில் வரத்தை எழுதிடறேன் அது தவறு இனிமே ஆற அமர்ந்து யோசிச்சி எழுதறேன்

   Delete
 12. ///ஆனால் எனது கணவரின் தந்தையோ (இப்போ உயிருடன் இல்லை அவர்) தனது மகன்களுக்கு 5 பேருக்கும் தனது மரணம் வரை தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார் .இன்னமும் எனது கணவர் அவற்றை பத்திரமாக வைத்துமிருக்கிறார் .//

  மிக நல்ல விசயம்தான், ஆனா திறந்து படிக்க கஸ்டமாக இருக்கும்... ஆனா மனதுக்கு கவலையைக் கொடுத்தாலும் அதனைப் படிச்சு, பழைய காலங்களை நினைப்பது சிலநேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. அத்தனை பெரும் ரவுண்டா டேபிள் சுற்றி உக்கார்ந்து படிப்பாங்க ..அவர் 85 இயர்ஸ் சாமிகிட்ட போகும்போது

   Delete
 13. 3டி எபெக்ட் வாழ்த்து அட்டை மிக அழகு..

  //16 வருடங்கள் முன்பு மகள் பிறந்தப்போ அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை மற்றும் 16 வருடங்கள் பின் மகளது பிறந்த நாளுக்கு நான் செய்த வாழ்த்து அட்டை இரண்டும் அருகருகே ..///

  இரண்டுமே அழகானவை... திரும்பிப் பார்க்க முன் காலம் ஓடிவிடுகிறது...:(

  ReplyDelete
  Replies
  1. அதேதான் 16 வருடங்களாகி விட்டதே ..காலம் பறக்கிறது

   Delete
  2. 3 D CARD தாங்க்யூ ..அது பதிவுலக தங்கை ஒருவருக்கு சர்ப்ரைஸா அனுப்பியது :)

   Delete
 14. kஅடந்துபோய் விட்டவற்றை இரை மீட்கக்கூடாது, அதனால்தான் சொன்னேன் பழைய கடிதங்கள் வாழ்த்து அட்டைகளைப் பார்த்தால் கவலைதான் மிஞ்சும்...

  வேணுமென்று யாரும் எதுவும் செய்வதில்லைத்தானே... அதனால அதிலொன்றும் தப்பில்லை.. நெக்லெஸ் சொல்லியிருக்கலாம், பேச்சு விழுந்திருந்தாலும் பறவாயில்லை என... அப்படித்தான் நான் நினைப்பதுண்டு. நடந்தவை/ கடந்தவை யாவும் நடந்தவைதானே.. அதைப்பற்றி எண்ணி வருந்தி, இப்போதைய சந்தோசத்தை இழக்கக்கூடாது... இன்று பொழுதாகிவிட்டால், நாளை எழுந்து இன்றைத் தேட முடியாதே... அதனால உங்களுக்கு பழசை நினைக்கத் தடா:(.. போடுகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நினைக்ககூடாதுதான் ..ஆனால் அன்பாக வாங்கி தந்தது இன்னும் கொஞ்சம் குற்றவுணர்வு இருக்கு ..அதன் விலை ஒரிஜினாலிட்டி இப்போ கிடைக்காது அதுபோல ..தடா நானும் அடிக்கடி போட்டாலும் எங்கிருந்தாவது ஏதாவது நினைவு வந்துவிடும் எனக்கு :(

   Delete
  2. //நடந்தவை/ கடந்தவை யாவும் நடந்தவைதானே.. அதைப்பற்றி எண்ணி வருந்தி,//

   நூற்றுக்கு நூறு உண்மை கடந்தவை சந்தோஷமோ துக்கமோ திரும்பி பார்க்காமல் இருப்பது இப்போதைக்கு நல்லது மிக நன்றி அதிரா இனிமேல் திரும்பி பார்க்க மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்

   Delete
 15. //நானும் நீயும் ..
  ==============
  அன்பு மகளுக்கு !
  ==================///

  ஆஹா சூப்பர் அருமை... இதுக்கு மட்டும் நல்ல தலைப்பு வைக்கத் தெரியுது...

  வாழ்க கவிஞர் அஞ்சலை:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு.. கவிஞை அஞ்சு... உண்மையில் சூப்பரா எழுதுறீங்க அஞ்சு.. தொடருங்கோ நல்ல விசயம்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் சில நினைவுகள்னு எத்தனை தலைப்பு வைக்கிறது அதான் கடிதம் வாழ்த்து அட்டைனு வச்சேன் .

   Delete
  2. இன்னும் தலைப்பு விஷயத்தில் நான் சறுக்கியிருக்கிறேன் என்பது உண்மை ..இனி கவனமுடன் டைட்டில் வைக்கிறேன்

   Delete
 16. பொங்கல் வாழ்த்துகள் குவியும் காலத்தை நினைவு படுத்துகிறது கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை. கடிதம் எழுதும் பழக்கம் மறைந்துபோய் மறந்துபோய் எவ்வளவு வருடங்களாகி விட்டன? முன்பெல்லாம் தவறாது எழுதிக் கொண்டிருந்தோம். என் அப்பா, என் அக்கா, என் மாமா போன்றோர் இலேன்ட் லெட்டரை அதன் மடித்த உல் மடிப்புகளில் எழுதி, ஒட்டிய பிறகும் வெளியில் அனுப்புனர் முகவரி எழுதும் இடத்திலும் எழுதுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் .இப்பவும் இன்லேண்ட் லெட்டர் இருக்கா நம்ம ஊர்ல ..அப்புறம் ரிசல்ட் தெரிய பள்ளிகளில் என்வலப் கொடுப்போம் அதில்தான் 6-9 வகுப்பு தேர்வு ரிசல்ட் வீட்டுக்கு வரும் .இப்போ எப்படினு தெரில .
   அந்த கடிதம் மூலைமுடுக்கெல்லாம் எழுதும் பழக்கம் நிறைய பேரிடமுண்டு :)

   Delete
 17. என் அக்காவும், என் மாமாவும் சுவைப்படக் கடிதம் எழுதுவார்கள். அவர்களிடமிருந்து கடிதம் வந்தால் சுவாரஸ்யமாகப் படிப்போம். என் அம்மா அபூர்வமாக எழுதுவார். அவரின் கையெழுத்தை அவரின் நினைவாக வைத்திருக்கிறேன். அப்பா ஆன்னா ஊன்னா கடிந்தம் எழுதிடுவார். நிறைய எழுதுவார்... பக்கம் பக்கமா எழுதுவார்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அப்போ நிரைய கடிதங்கள் உங்களிடமிருக்கும் ..எங்கப்பா எழுதினா அவர் மட்டுமே வாசிக்க முடியும் ..டாக்டர் கையெழுத்து :)
   என் கையெழுத்து முத்து போலிருக்கும் இப்போ அவசர கையெழுத்தாகிடுச்சி

   Delete
 18. ஒரு ரகசியம்.. நாங்கள் பழகிய காலத்தில் என் பாஸ் எனக்கு எழுதிய கடிதங்களை பாஸுக்கே தெரியாமல் இன்னும் நான் (ஒளித்து) வைத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. high 5 :) ஹா ஹா :) நானும்தான் அவர் அனுப்பியது அப்புறம் நான் அவருக்கு அனுப்பியது ரெண்டையும் ஒளிச்சி வச்சிருக்கேன் .அவர் ஒருமுறை எங்க அட்ரஸ் எழுதறதுக்கு பதிலா டு அட்ரஸில் என் பெயரும் அவர் அட்ரசும் எழுதி அவருக்கே திரும்பின கடிதமும் இருக்கு அதில் .

   Delete
 19. அப்பாவுக்கு கடிதம் நெகிழ்ச்சி. ஒரு குடிநீர் விளம்பரத்தில் அப்பாஅவிடம் மன்னிப்பு கேட்கும் பெண் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? நான் மிக மிக ரசித்த விளம்பரம் அது. கின்லே என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இல்லையே ..சமீபத்து விளம்பரமா ..டிவி சானல் தமிழ் வராது .யூ டியூபில் இருக்கன்னு பார்க்கிறேன்

   Delete
 20. >>> நான் இருக்கிறேன்.. என்னுடன் பேசுவதை விட்டு உனக்கென்ன நிம்மதியான உறக்கம்!.. - என, பட்டுப் பாதங்களால் உதைத்துப் பார்த்தாய்... நினைவிருக்கிறதா மகளே?.. <<<

  கவிதை.. கவிதை!..

  நலம் வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 21. வணக்கம்
  நல்ல ஆலோசனைகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன் .அனுபவங்கள் தான் சில நேரம் இப்படி வெளி வரும்

   Delete
 22. ஆம்! ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்.....கடிதம் எழுதும் பழக்கம் இப்போதெல்லாம் மிகவும் குறைந்துவிட்டது. எல்லாம் மொபைலாகிப் போனது...உங்கள் வாழ்த்து அட்டைகள் அனைத்தும் அழகு!!! அருமை! மேலை நாடுகளில் கைவினைப் பொருட்கள் செய்வது ரொம்பஃபேமஸ்....மட்டுமல்ல அதற்கான பொருட்களும் அவ்வளவு தரமாகக் கிடைக்குமே!!இல்லையா...ரொம்ப அழகு!!! வாழ்த்துகள்!!

  கீதா: ஆனால் துளசி இன்னமும் எழுதுவது பேப்பரிலதான்....இணுக்கி இணுக்கி இடம் சொட்டும் விடாமல் எழுதிட்டு அதிலும் சிலதைக் கடு செய்து அப் ஆரோ போட்டு இரு வரிகளுக்கு இடையில் இணுக்கு எழுதுவார்....இல்லை என்றால் மேலிருந்து அல்லது கீழிருந்து பெரிய ஆரோ போட்டு சைடில் இணுக்கு எழுதுவார்...இப்படி...அதை நான் வாசித்து எழுதுவது..ஹஹஹஹ்
  எனக்கு இப்போதெல்லாம் கணினிதான்...வாழ்த்து அட்டை முன்பெல்லாம் செய்து அனுப்புவதுண்டு...எனது 35 வயது வரை செய்திருக்கிறென் அப்புறம் விட்டாச்சு....அதன் பின்னும் கூட ஒரு 3 வருடங்கள் முன்பு வரை ஃவில்லிங்க், எல்லாம் செய்து கசின் பெண் விற்பதற்காகச் செய்து கொடுத்து அதுவும் இப்போது விட்டாச்சு....மதுபானி பெயின்டிங்க், வர்லி பெயின்டிங்க் எனது ஒரு சாரியில் செய்து ஹெரிங்க் போன் ஸ்டிச் போட்டு வுடன் பாசி வைத்துத் தைத்து, எனது சல்வாரில் ரிப்பன் எம்ப்ராய்டரி செய்து.. என்று....சென்ற 3 வருடங்களாக ஒன்றுமே செய்யாமல் ஒன்லி ப்ளாக் நணப்ர்கள் ஷீட் பண்ணினால் அதில் பங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது..

  உங்கள் வாழ்த்து அட்டைகளைப் பார்க்கும் பொது பல நினைவுகள்!!

  வாழ்த்துகள் ஏஞ்சல்!! மிக அழகாகச் செய்கிறீர்கள்! பெர்ஃபெக்ட்....கடையில் விற்கப்படுவது போல்!!

  ReplyDelete
  Replies
  1. //அதற்கான பொருட்களும் அவ்வளவு தரமாகக் கிடைக்குமே!!இல்லையா...ரொம்ப அழகு!!!//ஆமாம் கீதா .இங்கே ரொம்ப அழகான பொருட்கள் க்ராப்ட்ஸ் செய்ய கிடைக்குது ..நான் அந்த மின்தூக்கி போஸ்டில் சொன்ன கடையில் நிறைய கார்ட் மேக்கிங் ஐட்டம்ஸ் இருக்கும் ..ஒவ்வொன்றையும் பார்க்க ஹாப்பியா இருக்கும் ..நம்ம ஊரில் வடக்கே மற்றும் பெங்களூரில் கிடைக்கிறது சென்னையையும் இருக்கு புரசை அப்புறம் அடையார் தி நகரில் கடைகள் இருக்குன்னு கேள்விப்பட்டேன்
   ITSY BITSY என்ற ஆன்லைன் தளத்திலும் வாங்கலாம் .
   http://itsybitsy.in/

   Delete
  2. என் கையெழுத்து ஒரு காலத்தில் முத்து முத்தா இருந்தது காலப்போக்கில் கிறுக்கலாகிடுச்சி :)
   யார் கையால் எழுதினதையும் இப்போ வாசிக்க கிடைப்பதில்லை எக்ஸப்ட் மகளின் எழுத்துக்கள் :)
   முன்பெல்லாம் உணர்வுகளை நிதானமாக யோசித்து எழுதுவோம் பிடிக்கலைன்னா கிழித்தெறிந்து மீண்டும் எழுதுவோம் ..அனால் கணினி மொபைல் எல்லாம் அவசரம் உணர்வுகளையும் அவசரப்பட்டு கோபத்தோடு சிந்துகிறோம் :(
   கையால்க எழுதிய டிதம் தான் சிறந்தது

   Delete
  3. நான் பெரும்பாலும் ரிசைகில்ட் ஐட்டம்ஸ் வைத்தே கார்ட்ஸ் செய்வது அபூர்வமா இப்படி வாங்கி DECOUPAGE போல கடையில் கிடைப்பதை வாங்கி செய்வேன் ....இங்கே TRIMCRAFT என்ற கிராப்ட் தலத்தில் நானா மெம்பரா இருந்தேன் அங்கே நிறைய டிப்ஸ் சொல்லித்தருவங்க

   Delete
 23. வாழ்த்து அட்டைகள் எல்லாமே ரொம்ப அழகு...

  (நான் எட்டாவது படிக்கும் போதே நிறைய பூக்களை பதப்படுத்தி, பென்சில் சீவியது என வித்தியாசமா பல பல வாழ்த்து அட்டைகள் செய்து சொந்தங்களுக்கு அனுப்புவேன்...அப்போ அக்கா பையன் வந்து ..அய்யோ அனு சித்தி யோட கார்டு எல்லாம் காஞ்சு போன செடி எல்லாம் தான் இருக்குனு சொல்ல...எல்லாரும் அமைதியா பார்த்துட்டு தான் இருதாங்க...அதுக்கு அப்புறம் அதுமாதிரி செய்றது..அனுப்புறதுன்னு எல்லாமே ரொம்ப கம்மியாடுச்சு...)


  ஆனாலும் ஆர்வத்துல இன்னும் கார்டுல வரையறது மட்டும் தொடருது.....

  ReplyDelete
  Replies
  1. அடடா அனு ..இதுதான்ப்பா நம்ம ஊருக்கும் இங்கே வெளிநாட்டுக்கு வித்யாசம் .இங்கே ஹாண்ட் மேட் கார்ட்ஸ்னா ஸ்பெஷல் ..என் மகளின் நண்பிகளுக்கு என் கையால் செய்யும் கார்ட்ஸ்னா அவ்ளோ இஷ்டம் .
   ன்னேங்க காய்ந்த மலர்கள் இலைகளை ஒட்டி வீட்டில் பிரேம் போடுங்க ..நானும் முந்தி மஞ்சள் நிற ரோட்டோர பூவை பறித்து காயவைத்து ஒட்டியிருக்கேன் ,,பேக்க்ரவுண்ட் கருப்பு அட்டை .அடுத்தாஹ் நாள் அத்தனையும் காணாம போச்சு :) என்ன காரணம் தெரியுமா ..நான் மைதா பசை போட்டு ஓட்டினேன் கரப்பான் பாச்சா வந்து சாப்ப்பிட்டிருக்கு :)

   விடாம கன்டின்யூ செய்யுங்க அனு கார்ட்ஸ் செய்வதை

   Delete
 24. எங்கள் ப்லோக்ளையும் அந்த மங்கா நெக்கலஸ் பத்தி சொன்னிங்க...அறியாமல் நடந்தது...பரவாயில்ல நம்ம அப்பாவுக்கு நம்மை பத்தி தெரியதா...அதுனால வருத்தப்படாதிங்க....நானும் அந்த நினைவுக்கு தடா போடுறேன்..ம்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிப்பா அனு ..சில நினைவுகள் வருத்தத்தை அளிக்கிறது என்பது உண்மை .தடா அமுல்படுத்தத்ப்பட்டுவிட்டது இனிமேல் :)

   Delete
 25. நானும் நீயும் ..
  ==============
  அன்பு மகளுக்கு !....


  அமர்க்களம்...தொடருங்க....

  ReplyDelete
  Replies
  1. அவ்வப்போ நானும் நீயும் பகிர்கிறேன் இங்கே :)

   Delete
 26. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

   Delete
  2. அன்பு மகளுக்கு என்று தொடங்கி நான் யாருக்கு எழுத. இருவருமே ஆண்பிள்ளைகள் ஒரு ஐடியா உங்களுக்கு நான் ஏன் எழுதக் கூடாது முகவரி இருக்கா தேடணும்

   Delete
  3. எழுதலாமே :) மகன்களுக்கும் எழுதலாம் ..அவர்கள் சிறு வயது சேட்டைகள் அவர்களின் பேரப்பிள்ளைகள் வாசிக்கும்போது இன்னும் அதிக சந்தோஷத்தை மற்றும் அதிக bond தரும் ..

   Delete
 27. வாழ்த்து அட்டைகள் அழகா இருக்கு. எத்தனையோ பழக்கங்கள் மறைந்து வருகின்றன. அதில் கடிதம் எழுதுதல் ஒன்று. முன்பு வெளிநாட்டிலிருக்கும் சகோதரங்களுக்கு,நட்புகளுக்கு கடிதம் எழுதின காலம் என்று ஒன்று உண்டு. இப்போ திருமண பத்திரிகை கூட மெசேஜ் ல் வரும் காலமா போச்சு. நானும் அப்பாவின் கடிதங்கள்,அவர், அம்மா தந்த பொருட்கள் என இன்னும் வைத்திருக்கேன். பார்த்தால் கவலையாகவும் இருக்கும்.
  ஷரோனின் பரிசை பார்க்க ஆவலாக இருக்கு. உண்மையில் ரெம்ப அழகா எழுதுறீங்க அஞ்சு. வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும். கவிதையும் இனி முயற்சிக்கலாம்...!! முயற்சிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..சில கடிதங்கள் பொக்கிஷங்கள் பத்திரமா வைத்து பார்க்க நல்ல நினைவுகள் ..இன்னும் பள்ளிக்கூடங்கள் இந்த கடிதம் கட்டுரை பழக்கங்களை விடாம தொடர்கிறார்ங்க ..பழைய பொருட்கள் சிலநேரம் கவலை தரும் ப்ரியா நானும் போட்டோக்களை பார்ப்பதில்லை இப்போதெல்லாம்

   Delete
  2. மீ !! கவிதையா ..அயோயே யாரோ பாறாங்கல்லு தூக்கிட்டு வர மாதிரி இருக்கே

   Delete