அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/16/17

மின்தூக்கி ..சில நினைவுகள்

மின்தூக்கி ..சில நினைவுகள் 
---------------------------------------------------


                                                                  இந்த மின்தூக்கியை சின்ன வயதில் ஏதாவது திரைப்படங்களில் ஹோட்டல் ஸீன் அப்புறம் வெளிநாட்டு படக்காட்சிகளில் மட்டுமே பார்த்திருக்கேன் ..அதெப்படி ஒரு பெட்டி முழுதுமாக மூடி அப்படியே மேலே தூக்கிட்டு போகுதுன்னு சின்ன வயசில் யோசிச்சிருக்கேன் ..பிறகு நான்  நேரில் முதல்முதலில் பார்த்த மின்தூக்கி மற்றும் எஸ்கலேட்டர்ஸ் ஸ்பென்சர்ப்லாஸாவில் .

எனக்கு  இதெல்லாம் பார்த்தா பயமில்லை ஆனா தனியா ஏறிப்போக  மாட்டேன்.. .ஏரோப்பிளேன்லயே விண்டோ சீட் கேக்காத பயணி நான்தான் :) நடு வரிசையில்தான் உக்காருவேன் அதைப்பற்றி வேறொரு பதிவில் சொல்றேன் ..இப்போ லிப்டை பற்றி பார்ப்போம் ..இங்கே வெளிநாட்டில் கால் வச்ச நிமிடமுதல் எங்கு காணினும் இந்த மின்தூக்கிகள் அதுவும் 24 ,40 மாடிகள் ஏர்போர்ட்டில் சின்ன கடைகளில் என இந்த எஸ்கலேட்டரும் மின்தூக்கிகளும் இருக்கு ..

                                                                                  
நான்  எப்பவுமே ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் என்பதால் மாடிப்படிகளை மட்டுமே பயன்படுத்துவேன் ..இதனால் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் அவசியமிருந்தால் தேவையிருந்தால் மட்டுமே லிப்டில் ஏறுவேன் ..கலோரிஸ் குறைக்க மாடிப்படிகளே சிறந்தவை ..மற்றபடி எனக்கு பயமெல்லாம் கிடையாது எஸ்கலேட்டரில் நடந்தே போயிருக்கேன்:) 
அது ரிப்பேர் ஆகியிருந்த சமயம் :)

                                                                              இந்த சம்பவம் போன வருடம் நடந்தது ..எங்க ஏரியாவில் range என்றொரு கடை இருக்கு அதில் தோட்ட மையமும் காபி ஷாப்பும் மற்றும் கிராப்ட் ஐட்டம்ஸ் என அனைத்தும் கிடைக்கும் .ரொம்ப பெரிய கடை ..நான் அடிக்கடி அங்கே சென்று வருவேன் ,கடையில் இரண்டு தளங்கள் உண்டு ..மேல் தளத்திற்கு செல்ல எஸ்கலேட்டரும் ஒரு ஆதிகாலத்து லிப்ட் அதாவது அம்பாஸடர் டைப் லிப்டும் உண்டு ..அம்பாஸடர் லிப்ட் எப்படி வேலை செய்யும் என இந்த காணொளியை பாருங்கள் .கொஞ்சம் தலை சுற்றும் யாரோ வீடியோ சரியா எடுக்கலை .இது யூ டியூப் காணொளி ..
அன்று வழக்கம்ப்போல நான் கடைக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் கீழ்த்தளத்தில் ஒரு இளம்ஜோடி வந்தார்கள் அந்த பெண் கிராப்ட் பக்கம்லாம் பார்த்திட்டு என்னை பார்த்து ஒரு ஸ்மைல் வீசிவிட்டு அப்படியே அந்த லிப்ட் பக்கமா போனாங்க அவரின் கணவர் வேறு  பக்கம்  போயிட்டார்னு நினைக்கிறேன் ..அப்போ இந்த பெண் லிப்ட்ல ஏறி அந்த பட்டனை அழுத்தி மேலே செல்ல ட்ரை பண்ணாங்க திடீர்னு திரும்பி பார்த்தா ஒரு பிரிட்டிஸ்காரர் நெஞ்சை பிடித்துக்கொண்டு நிற்கிறார் ..அந்த லிப்ட் பாதியிலேயே நிக்குது உள்ளே அந்த பெண் தலையை குனிந்து அழுவது தெரியுது வெளியிலிருந்து எனக்கு என்ன செய்வதுன்னு தெரில ..அப்போ இன்னொருவர் வந்து அந்த லிப்ட் பட்டனை வெளியிலிருந்து ஆபரேட் செய்து கீழே வர வைத்தார் ..என்ன நடந்திருக்குனா அந்த வகை லிப்டில் பட்டனை அழுத்திக்கொண்டே மேலே செல்லும்வரை கையை எடுக்காமலிருக்கணுமாம் .இந்த பெண் ஒரு அழுத்து அழுத்திட்டு கையை எடுக்கவும் அது பாதியிலேயே நின்றுவிட்டது .அப்போ அந்த பெண்ணின் கணவர் அங்கே வரவும் இந்தப்பெண் பயந்து அழுதார் அவர் கணவர் சிரித்துக்கொண்டே வந்து சொன்னதுதான் இந்த சம்பவத்தின் ஹைலைட் :) ..ஸிமி அச்சோ நான்  பக்கத்தில் இருந்திருந்தா நீ உள்ளே மாட்டிக்கிட்டதை வீடியோ செய்திருப்பேனே :) ..(ஒருவேளை இது அமெரிக்காவா இருந்திருந்தா நிச்சயம் அந்த பெண்ணின் கணவர்  அவர்கள் உண்மைகள்னு கன்பார்ம் செய்திருப்பேன் :)
இந்த சம்பவத்துக்கப்புறம் அந்த பக்கம் போகும்போதெல்லாம் அது நினைவில் வந்து செல்லும் :).

அப்புறம் நட்புக்களே இத்தனை நாளும் இமெயில் சப்ஸ்க்ரிப்ஷன்ல மற்றும் பதிவில் எனது மெகா கட்டுரைகள் வந்து அதை பார்த்து உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும் :)இனிமே ரீட் மோர் மட்டுமே வரும் .மேலும் இனிமேல் சுருக்கமான பதிவுகளை எழுத நினைத்துள்ளேன் .இந்த Read More  ஆப்ஷனை சொல்லிக்கொடுத்தது சகோதரர் டிடி .மிக்க நன்றிங்க .

                                                             ************************


69 comments:

 1. முதலில் நன்றி சகோதரி...

  இந்த மாதிரி லிப்ட் இருந்தால் சிரமம் தான்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ,பல பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் சொல்லித்தருகிறீர்கள் மிக்க நன்றி ..அதேதான் இம்மாதிரி ஆதிகால லிப்ட்கள் இன்னும் பல இடங்களில் இருக்கு இங்கிலாந்தில் /வாஷிங் மெஷின் பெரிய உபகரணங்களை கொண்டு செல்ல இவைதான் வசதிங்கறாங்க கடைகளில்

   Delete
 2. இரண்டோ அதற்கு மேற்பட்டோரோ லிஃப்டில்வேறு வேறு தளங்களுக்குப் போக எல்லோரும் போக வேண்டிய தளத்தி ந்பட்டனை அழுத்திக் கொண்டே இருக்கணுமா

  ReplyDelete
  Replies
  1. இல்லை .இது ஸ்பெஷலா வீல் சேர் பயன்படுத்துவோர் அப்புறம் ப்ராமில் குழந்தைகளை கொண்டுசெல்ல மட்டுமே இந்த லிப்ட் யூஸ் பண்ணுவாங்க 5 பேருக்குமேல் நிற்க முடியாது ஒருவர் பொத்தானை அழுத்தி பிடித்தால் போதும் ..ஒரே ஒரு தளம் தான் இருக்கும் .
   இப்படி ஒரே ஒரு floor உள்ள கடைகளில் மட்டும் இந்த லிப்ட் உண்டு ..
   வருகைக்கும் எனது பதிவுகளை தொடர்வதற்கும் மிக நன்றி

   Delete
 3. //மற்றபடி எனக்கு பயமெல்லாம் கிடையாது எஸ்கலேட்டரில் நடந்தே போயிருக்கேன்:)
  அது ரிப்பேர் ஆகியிருந்த சமயம் :)//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சூப்பர் !

  ReplyDelete
  Replies
  1. ஹையோ வாசிச்சிட்டீங்களா :) ஹா ஹா எனக்கு கொஞ்சமே கொஞ்சூண்டு பயம் இப்போ இல்லை ஆனா

   Delete
 4. //என்ன நடந்திருக்குனா அந்த வகை லிப்டில் பட்டனை அழுத்திக்கொண்டே மேலே செல்லும்வரை கையை எடுக்காமலிருக்கணுமாம். இந்த பெண் ஒரு அழுத்து அழுத்திட்டு கையை எடுக்கவும் அது பாதியிலேயே நின்றுவிட்டது//

  இந்த லிஃப்ட், பவர் ஸ்டீரிங் இல்லாத பழையகால அம்பாஸிடர் கார் போல இருக்கும் போலிருக்குது. பாவம் அந்தப்பெண்.

  ReplyDelete
 5. //மேலும் இனிமேல் சுருக்கமான பதிவுகளை எழுத நினைத்துள்ளேன்//

  அதுதான் மிகவும் நல்லது. பதிவு எண்ணிக்கைகளும் கூடும். படிப்பவர்களுக்கும், பின்னூட்டம் கொடுப்பவர்களுக்கும் அலுப்புத்தட்டாமல் இருக்கும்.

  //இனிமே ரீட் மோர் மட்டுமே வரும்//

  ’ரீட் மோர்’ என்று வந்தாலே எனக்கு மிகவும் எரிச்சலாகி உடனே நான் வெளியேறி விடுவேன். அது என்னவோ எனக்கு அப்படியொரு வழக்கம் + பொறுமையின்மை. :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோபு அண்ணா ..இத்தனை நாளும் பெரிய பதிவுகளா எழுதி தள்ளியிருக்கேன் சில நேரம் ஒரே பதிவில் பல தகவல்கள் ..படித்தவங்களுக்கே மறந்திடும் அதான் இனி short ஸ்வீட் போஸ்டல் எழுதலாம்னு தோணிச்சு

   Delete
  2. ///’ரீட் மோர்’ என்று வந்தாலே எனக்கு மிகவும் எரிச்சலாகி உடனே நான் வெளியேறி விடுவேன். அது என்னவோ எனக்கு அப்படியொரு வழக்கம் + பொறுமையின்மை. :)///

   நோஓஓஓ கோபு அண்ணன் இப்பூடி எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. என்னைப் பாருங்கோ இந்த சுவீட் 16 லயே எவ்ளோ பொறுமையா இருக்கிறேன்ன்ன்:).. நீங்கபோய் பொறுமையில்லை என்றால் விட்டிடுவமோ:)..
   இப்போ தெரிஞ்சுபோச்சு, வாங்கோ உச்சிப்பிள்ளையார் பார்க்கலாம் என மொட்டை மாடிக்குக் கூட்டிப் போய்ய்..... அங்கிருந்தே ஸ்ரெயிட்டா..... தீர்த்தக்கேணிதான்ன்ன் :)

   Delete
  3. ....கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2) -

   நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது...

   அறிவை நீ நம்பு - உள்ளம் தெளிவாகும் -
   அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது...   காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
   கண் முன்னே தோணுவது சாத்தியமே...

   காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
   கண்ணுக்கு தோணாத சாத்தியமே...

   போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்...

   புரியும் அப்போது மெய்யான கோலம்...

   ....புரிந்தவர்களுக்கு புரிந்தால் நன்மை...

   நன்றி சகோதரி... Go ahead...

   Delete
  4. இன்னும் நிறைய விஷயங்கள் உங்கள் பக்கம் நான் கற்றுக்கொள்ளனும் சகோ சந்தேகம் வரும்போதெல்லாம் உங்களிடம் கேட்டு தெளிவாக்கிக்கொள்கிறேன் ..இதே சிஸ்டத்தை எனது ஆங்கில பக்கத்துக்கும் போடணும் ..இந்த தமிழ் பக்கத்திலும் எல்லா பதிவுகளுக்கும் நேரம் கிடைக்கும்போது போட்டுடறேன்

   Delete
  5. ///...கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2) -///
   அஞ்சூஊஊஊஊ வெளில வாங்கோ.. நான் சொன்னா நீங்க கேட்கமாட்டீங்க.. இப்ப பாருங்கோ சகோ டிடி உங்களுக்குப் பாடியிருக்கிறார்ர்:).. முதல்ல உங்கட பக்கம் இருக்கும் லேபல்களை எல்லாம் அழிச்சுப் போட்டு புதுசா லேபல் பண்ணுங்கோ... உச்சியில் இருந்து உள்ளங்கால் தாண்டி மண்ணுக்குள் போகுது லேபல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
  6. ஹையோ எனக்கு ரெண்டு மூணு நாளா இந்த லேபிள் விஷயம் உறுத்தலா இருந்திச்சி ..ஒருவாரம் கும்மிக்கு லீவ் கொடுத்து ஒவ்வொரு போஸ்டுக்கும் லேபிள் மாற்றப்போறேன்

   Delete
 6. வேலைக்கு போகும் நேரம் வந்துவிட்டதால் அப்பலாக்க வருகிறேன் அதுவரை அதிரா நிஷா போன்றவர்கள் கருத்துகள் போட 144 தடை இப்போது அமுலுக்கு வந்துவிட்டது

  ReplyDelete
  Replies
  1. வேலைக்கு போயிட்டே வாங்க அதுக்குள்ளே நாங்க உங்கள கலாய்ச்சி முடிச்சி தூங்க போயிடுவோம்

   Delete
  2. ஒரு முக்கியமான விஷயத்தை அதிரா கீதா வந்ததும் அவங்களுக்கு மட்டும் கமெண்டில் சொல்வேன் :)

   Delete
  3. /////Avargal UnmaigalMarch 16, 2017 at 1:37 PM
   வேலைக்கு போகும் நேரம் வந்துவிட்டதால் அப்பலாக்க வருகிறேன்////

   அச்சச்சோ அஞ்சூஊஊஊஉ இப்பூடிப் பின்னூட்டம் போட்டால்ல்ல்,... இனி வரமாட்டேன்ன் இப்போஸ்ட்டுக்கு என அர்த்தம்:) நம்பாதீங்கோ... நான் அனுபவத்தில் சொல்றேன்ன்ன்:)..

   Delete
  4. நோ நோ :) அப்படியெல்லாம் இருக்காது அவர்கள் நல்லவர் வல்லவர் உண்மையானவர் நேர்மையானவர் சிறந்தவர் பதிவுலக தளபதி :)

   Delete
  5. இங்கே பாருங்க ட்ரூத் நான் நீங்க சொன்ன மாதிரியே உங்களை புகழ்ந்திட்டேன் :) சீக்கிரம் வந்து ஏதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் கமெண்ட்ல இருக்கானு செக் பண்ணவும்

   Delete
  6. ஹையா எனக்குத் தடை இல்லை!! மதுரைத் தமிழன்!!! தாங்க்ஸ்!!!

   ஏஞ்சல் என்ன ஏஞ்சல் இப்படிப் போட்டு மதுரைத் தமிழன சொல்லிட்டீங்க....அவரு அப்படி வீடியோ எடுத்தா நம்ம சகோதரி பூரிக்கட்டையை அப்படியே தூக்கி அடிப்பதும் வீடியோவில் விழுந்துருமே!!!! அவங்க எப்பவுமே பூரிக்கட்டைய ரெடியா பையில வைச்சுட்டுத்தான் நடப்பாங்களாம்....ஹஹஹ

   கீதா

   Delete
 7. Ha ha padivu arumai. unmai solum vidam alagu. vaalthukal.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜயகுமார் ..முதல் முறை எனது பக்கம் உங்களை பார்க்கிறேன் :) வருகைக்கும் ரசித்து பின்னூட்டமிட்டதற்கும் நன்றி ..

   Delete
 8. ஆஹா!! நான் நம்பிட்டேன் உங்களுக்கு பயமில்லை என்பதை...ஹி.ஹி... நான் லிப்ட் ல போகும்போது நினைப்பேன் இடையில நின்றுவிட்டால் என்ன செய்வது என. தனிய போறதெண்டா படிதான். யாராவது போனால் போவேன். . இங்கு இப்படி லிப்ட் நான் காணேலை அஞ்சு. லண்டனில் பழமை பேணுவதால் இதனையும் பேணிபாதுகாக்கிறாங்களோ...!!
  அதிரா எங்க இருக்கீங்க கெதியா வாங்கோஓஓஓ.......

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன் ம்முலூஊஊஊஊஊஊஊ... எங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க.. அஞ்சு லிவ்ட்டில் மாட்டியா?:) ஹா ஹா ஹா கொஞ்ச நாளைக்கு விடுங்கோ.. அங்கயே இருந்து இன்னும் அஞ்சுகிலோ மெலிவாக்கும், பின்பு போலீசுக்கு அடிச்சு கூப்பிடலாம்.. அதுவரை கண்ணாடிக்குள்ளால புறுணம் பார்ப்போம்.. இந்தாங்கோ கச்சால் அல்வா.. இப்பத்தான் செய்தேன் சுடுது பார்த்து:).

   Delete
  2. வந்திட்டீங்களோ அதிரா. நான் அலுவலா வெளியில போனேன். கச்சான் அல்வாவோ குடுங்கோ எனக்கு விருப்பம்.
   முதலிலிருந்து கொமண்ட் வாசிக்கேல்லை போல. ட் ரூத் அண்ணை என்னவோ சொல்லியிருக்கார். பாருங்கோ...

   Delete
  3. அதிரா !!உங்களுக்கு 144 போட்டிருக்கார் ட்ரூத் :) நீங்க வாயே திறக்கக்கூடாது இங்கிருந்து அஞ்சாங்கல்லு வீசுவேன் அது நியூ ஜெர்சில விழும் :) அவர் சொல்லியும் டீ போட்டா அவருக்கே அடி

   Delete
  4. //பின்பு போலீசுக்கு அடிச்சு கூப்பிடலாம்.. அதுவரை கண்ணாடிக்குள்ளால புறுணம் பார்ப்போம்//

   அவ்வ்வ்வ் என்னா ஒரு கியூரியாசிட்டி வில்லங்க கூட்டம் கண்ணாடிக்குள்ள என்ன நடக்குன்னு பார்க்க கச்சான் வேணுமா கர்ர்ர்ர் ..
   இப்போ லிப்ட் வார்த்தையை கேட்டாலே நடுங்குதே

   Delete
  5. //ஹி.ஹி... நான் லிப்ட் ல போகும்போது நினைப்பேன் இடையில நின்றுவிட்டால் என்ன செய்வது //
   PriyAஹா ஹா :) எனக்கும் தோணியிருக்கு அதனாலதான் நானா கூட்டத்தோட கூட்டமாத்தான் ஏறுவேன் தனியா போகவே மாட்டேன் :)
   :)

   Delete
  6. ப்ரியசகி நோ நோ நோ என்னை அண்ணன் என்று எல்லாம் கூப்பிடக்கூடது அ.உ ன்னு அல்லது மதுரைத்தமிழன் அல்லது ட்ரூத்ன்னு கூப்பிடலாம் ஆனால் அண்ணன் என்று மட்டும் சொல்லக் கூடாது காரணம் எனக்கு என்றும் பதினாரு வயசுதான்...


   ஹலோ ஏஞ்சல் அதிரா பிரியாணிக்கு ஆட்டை கூட்டிவரும் போது விளக்கம் சொல்லி கூட்டி வரக் கூடாதா? உங்களை எல்லாம் வைத்து நான் எப்படி கட்சி ஆரம்பித்து நடத்துறதாம் ஹும்ம்ம்

   Delete
  7. ஆமா !!@ப்ரியா நான் உங்களுக்கு தெளிவா தானே சொன்னேன் பெரியண்ணா பெரியண்ணா !!
   அப்படித்தான் ட்ரூத் அவர்களை கூப்பிடனும் ..நீங்க வெறும் அண்ணான்னு சொல்ல கூடாது சரியா :)

   @அவர்கள் ட்ரூத் இப்போ தெளிவா சொல்லிட்டேன் :)

   நயன்தாராவையே இவருக்கு தங்கச்சியாக்கினவங்க நாங்க இல்லையா அதிராவ் இவர் உங்களுக்கு போட்டியா 16 னு சொல்றாரே :)

   Delete
  8. என் கட்சியிலே நீங்க உள்குத்து பண்ணும் ஆளாக இருப்பதால் உங்கள் பதவி பறிக்கப்பட்டு அதிராவை இன்று முதல் செயலளாரக நியமிக்கிறேன்

   Delete
  9. ஹையோ நானாவது சொல்லிட்டு செய்றேன் :) பூனை எல்லாத்தையும் தடாலடியா செய்வாங்க :) என்ன பண்ணுவீங்க

   Delete
  10. அவர் அண்ணனும் இல்ல பெரியண்ணாவும் இல்ல.. அங்கிள் ஆக்கும்:) சபை நாகரீகம் கருதி நான் பெயர் சொல்லி அழைக்கிறேன்ன்.. அதில வேறு இப்போ நான் பாவிக்கும் என் கொப்பி வலது வசனங்கள் சொற்களைத் திருடிப் பாவிப்பதுமில்லாமல்.... தான் சுவீட் 16 ஆம்மே....:) சுவீட் ஓகே... அதுதான் பாவக்காய் மட்டரில் புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா 16 என்பது என் கொப்பி வலதூஊஊஊஊஊஊஉ .. அஞ்சு இதை கொஞ்சம் விளக்கமா சொல்லக்கூடாதோ ட்றுத்துக்கு:) இல்லையெனில் தேம்ஸ்ல தள்ளுவேன்ன்ன் அஞ்சுவை சொல்லிட்டேன்ன்:).

   Delete
 9. ///அந்த லிப்ட் பாதியிலேயே நிக்குது உள்ளே அந்த பெண் தலையை குனிந்து அழுவது தெரியுது வெளியிலிருந்து எனக்கு என்ன செய்வதுன்னு தெரில///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜம்ப் பண்ணி கண்ணாடியை உடைச்சு அவர்களைக் காப்பாற்றாமல் புறுணம்:) பார்த்துக்கொண்டிருந்திருக்கிறீங்க:).

  ReplyDelete
  Replies
  1. செய்திருக்கலாம் ஆனா எனக்கு அடிபட்டா கண்ணாடி கைல பட்டு ரத்தம் வருமே அதான் உடைக்காம வேடிக்கை பார்த்தேன் .நெக்ஸ்ட்டைம் யாராச்சும் இப்படி மாட்டிக்கிட்டா உங்களுக்குதகவல் அனுப்பறேன் ஹெலிகாப்டர் ஏறி வந்து கண்ணாடியை உடைச்சி காப்பாத்துங்க

   Delete
 10. ////அப்போ அந்த பெண்ணின் கணவர் அங்கே வரவும் இந்தப்பெண் பயந்து அழுதார் அவர் கணவர் சிரித்துக்கொண்டே வந்து சொன்னதுதான் இந்த சம்பவத்தின் ஹைலைட் :) ..ஸிமி அச்சோ நான் பக்கத்தில் இருந்திருந்தா நீ உள்ளே மாட்டிக்கிட்டதை வீடியோ செய்திருப்பேனே :)///


  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வந்தவேலையைப் பார்க்காமல் கடேஏஏஏஏஏசி வரைக்கும் விடுப்ஸ் பார்த்திருக்கிறீங்க ஹா ஹா ஹா:).. இதெல்லாம் இன்னமும் ஆர் கண்ணிலும் படவில்லைப்போல:) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)

  ReplyDelete
  Replies
  1. அன்னிக்கு அது காலை நேரம் நாலைந்து பேர்தான் இருந்தாங்க கடைல எல்லாரும் லிப்ட் முன்னாடி கூடிட்டாங்க :) பாதில லிப்ட் நின்னது நிறையபேருக்கு அதிர்ச்சி போல :) அதான் என்ன நடக்குதுன்னு பக்கத்தில் இருந்து பார்க்க முடிஞ்சது :)அவங்க கேரளா போல தமிழ் கலந்து பேசியதால் நல்ல புரிஞ்சிச்செ

   Delete
 11. சின்ன வயதில் குடும்பமாக, கொழும்பில் அப்போ ஆரம்பம் ஒரு 20 மாடிக் கட்டடத்தில் மட்டுமே லிவ்ட் இருந்தது.. அதில் ஏறி, அப்பா சொல்லச் சொல்ல பட்டனை அமுக்கி.. மேலே போய், அங்கிருந்த ரெஸ்ரோரண்ட்டில் சாப்பிட்டு... மொட்டைமாடியில் நின்று பார்த்து, எந்தாப்பெரிசா இருக்கு கொழும்பு சிட்டி என வியந்தது, இப்பதிவு படிச்சதும் மனதில் தோன்றி மறைஞ்சது.

  ReplyDelete
  Replies
  1. பார்த்திங்களா :) என் கண்ணால் பார்த்ததுதான் இப்ப உங்களுக்கு இந்த நினைவு வருது :)

   Delete
 12. ///இனிமே ரீட் மோர் மட்டுமே வரும் .மேலும் இனிமேல் சுருக்கமான பதிவுகளை எழுத நினைத்துள்ளேன் .இந்த Read More ஆப்ஷனை சொல்லிக்கொடுத்தது சகோதரர் டிடி .மிக்க நன்றிங்க .///
  நான் நினைச்சேன்ன்.. நீங்க சொல்லிட்டீங்க... வலையுலகமெல்லாம்.. இப்போ ரீட் மோர் தான்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா..:).

  ReplyDelete
 13. லிப்ட் என்பது எப்போதும் பயம்மயம் தான் ! எந்த நேரத்தில் எங்கு நிக்கும் என்பது தெரியாது தான்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..உங்க பதிவுகள் நீங்க .கொம் மாற்றியதில் இருந்து தெரியாமலே போச்சு இப்போ மீண்டும் இணைந்துவிட்டேன்
   ..லிப்டனா எல்லாருக்கும் சின்ன பயம் இருப்பது உண்மையே

   Delete
 14. இனித்தான் டிடியின் செயலை செய்து பார்க்க வேண்டும் நான் பதிவு எழுதுவது ஐபோனில் தான் அதனால் புதிய முறைக்கு போக அதிக பொறுமை தேவை!

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்க நேசன் பிளாக் உடனே வேகமா திறக்குது

   Delete
 15. ஓ, இது அந்த மாதிரி லிப்டா? நிக்காம மேல போய் இடிச்சிட்டா என்ன செய்யறது?

  எனக்கு லிப்ட் இங்க சென்னை அலுவலகத்துக்கு வந்த பிறகுதான் பழக்கமாச்சு. கரண்ட் இல்லாத சமயத்தில் மட்டும்தான் அது ஒரு பெரிய விஷயமா தெரியும் :)

  ReplyDelete
  Replies
  1. இது ஒரே ஒரு மேல்தளம்தான் :) பாவம் அந்த பொண்ணு ..நானாயிருந்தாலும் மயக்கமே வந்திருக்கும் ..அந்த லிப்ட் முக்கியமா கேழே இருந்து வீல்சேர் அப்புறம் சோபா பெரிய டேபிள்ஸ் பெட் ஐட்டம்ஸ் ஏற்ற என்பதற்க்காக வச்சிருக்காங்க .மேலும் மாற்று திறனங்ளிகள் இங்கே எல்லா இடங்களுக்கும் போவாங்க அவர்களை எஸ்கலேட்டர்ல கொண்டு செல்ல கடினம் அவங்களுக்கும் இந்த லிப்ட்தான் கடையில் .எங்க ஊர்ல கரண்ட் எப்பவுமே இருக்கும் :) கரண்ட் போகவே போகாது

   Delete
 16. மின் தூக்கியை நானும் பின்னாட்களில்தான் பார்த்தேன்! எனக்கு அதற்குள் செல்ல முதலில் என்ன தயக்கம் என்றால் எந்த பட்டனை அமுக்குவது பயம்தான். ஆனால் முன்பெல்லாம் லிஃப்ட் என்றால் கட்டாயம் உள்ளேஒரு ஆபரேட்டர் இருப்பார். இந்த லிஃப்ட் - பட்டன் அமுக்குவது சம்பந்தமாக கேள்வி பதில் போன்ற ஒரு கதை உண்டு!

  எஸ்கலேட்டர் சம்பந்தமாக பதிவொன்று இட்டிருந்தேன். நகிச்சுவைப்பதிவு. படித்திருப்பீர்கள்! அக்கா, மாமாவுடன் பயணம் செய்தபோது அசடு வழிந்த கதை!

  பாவம் இந்தப் பெண். அதென்ன, பட்டனை அமுக்கிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது? தளம் வந்ததும் தப்பாக பட்டனை ரிலீஸ் செய்தால் அரைகுறையாக நின்றால் என்ன செய்வது!

  ReplyDelete
  Replies
  1. அதான் ஸ்ரீராம் அது ஆதிகாலத்து டைப் லிப்ட் கிரவுண்ட் தளத்தில் இருந்து மேலே உள்ள ஒரே ஒரு தளம் மட்டும் போகும் ரொம்ப சோர்ட் டிஸ்டன்ஸ் :)யெஸ் நினைவிருக்கே அந்த பதிவு :)

   நம்ம ஊர் லிப்ட்ல ஆபரேட்டர் இன்னும் இருக்காங்களா ? இங்கெல்லாம் நாமே தான் செய்யணும் ..க்ளோஸ்ட் லிப்ட் பரவாயில்லை சிலது கேப்ஸ்யூல் டைப் உள்ளஇருக்கறவங்களுக்கு வெளில அப்படியே தெரியும் .
   இன்னமும் தனியா நுழைய எனக்கு பயம்தான் ..பாதியில் கீழும் மேலுமா தெரிஞ்சதல்தான் அந்த பொண்ணு மயக்கம் வர ஸ்டேஜுக்கு இருக்கு ..அதுக்கப்புறம் நானும் கணவ்ரும் அதில் போய் பார்த்து ஆராய்ச்சி செஞ்சோம் பிரெஸ் செய்ரதாஹி நிப்பாட்டினதும் லிப்ட் பாதில நின்னுச்சி மீண்டும் அழுத்தினதுமே மேலே போச்சு நானா பயப்படலை ஏன்னா இவர் இருந்ததால்

   Delete

 17. //ஒருவேளை இது அமெரிக்காவா இருந்திருந்தா நிச்சயம் அந்த பெண்ணின் கணவர் அவர்கள் உண்மைகள்னு கன்பார்ம் செய்திருப்பேன்/////


  அந்த பெண்ணின் கணவர் அவர்கள் உண்மைகள் என்றால் அழுகிட்டு இருந்தது அந்த பெண்ணாக இருந்திருக்காது.... ட்ரூத்துதான் அழுதுகிட்டு இருந்திருக்கனும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா இல்லை :) அப்படி இருக்காது ..ஜனகராஜ் ஒரு படத்தில் குதிப்பாரே அந்த மாதிரி .என் பொண்டாட்டி லிப்ட்ல மாட்டிகிட்டான்னு சந்தோஷத்தில் டான்ஸ் அடியிருப்பீங்க :)

   Delete
  2. அந்த காலமாக இருந்தால் ஜனகராஜ் மாதிரி குதிக்கலாம் ஆனால் இப்ப காலம் மாறி புதிய டெக்னாலஜி எல்லாம் வந்துடுச்சு அதனால் குதிச்சா உங்களை மாதிரி ஆட்கள் ஸ்மார்ட் போனில் வீடியோ எடுத்து என் மனைவிக்கு அனுப்பிடுவீங்க என்று தெரியும் நானெல்லாம் படா உஷார் பார்ட்டீங்க மனசு ஆட்டம் போட்டா கூட அது வெளிய தெரியாத மாதிரி காண்பிச்சுகுவேன்

   Delete
  3. அவ்ளோ பயமா மாமிக்கு :) கடவுளே இவர் என்னல்லாம் நினைக்கிறாரோ அதெல்லாம் மாமிக்கு உடனே தெரியுற மாதிரி ஓர் app கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணுங்க எனக்கு :)
   Delete
 18. நல்லதோர் அனுபவம்
  அம்பாசடர் லிப்ட் நல்ல அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கஸ்தூரிரங்கன் ..இங்கே பிரிட்டிஷ்க்காரங்க இன்னும் பல ஆதிகாலத்து பொருட்க்ளை சிஸ்டம்ஸை பத்திரமா வச்சிருக்காங்க .இன்னும்பலர் BT பிரிட்டிஷ் கியாஸ் இப்படி 40 வருஷமா ஒரே நெட்ஒர்க் லேயே இருக்காங்க :)

   Delete
 19. ஏஞ்சல் நானும் லிஃப்ட் பயன்படுத்த மாட்டேன் வேற வழி இல்லைனாத்தான் பயன்படுத்துவேன்....படிகளில் ஏறுவது இதயத்துக்கும் நல்லதுனு...அப்புறம் நானும் ஸ்வீட்டியாச்சே...

  அப்புறம் லிஃப்ட் ந உடனே ஒரு சம்பவம் நடந்து 4 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு அடையாரில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில், தங்கள் வீட்டுக் கல்யாண அழைப்பிற்காக ஒரு குடும்பம் மேலே செல்வதற்கு லிஃப்டில் ஏறியிருக்கிறார்கள். க்ரவுன்ட் ஃப்ளோரில். கதவைத் திறந்து கல்யாண அழைப்பிதழ் வைக்கும் பெரியவர் அவர் மகன் மகள் எல்லோரும் உள்ளே போன பிறகு கடைசியில் பெரியவரின் மனைவி அதாவது அம்மா...நுழையும் போது கதவு மூடி லிஃப்ட் செல்லத் தொடங்க அந்த அம்மாவின் உடல் ...அவ்வளவுதான்...யாரும் பட்டன் எதுவும் அழுத்தவில்லை. கதவிலும், கீழே ல்ஃபிட் மூடும் பகுதியிலும் சென்சார் வேலை செய்யவில்லை போலும்....மெயிண்டனென்ஸ் அந்த லட்சனம்....

  இது ஜஸ்ட் ஒரு விழிப்புணர்விற்குத்தானே அல்லாமல், பயப்படுத்த அல்ல...முதலில் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்...ஆனால் கவனமாக இருக்கச் சொல்லலாமே என்றுதான் இங்கு குறிப்ப்ட்டேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி சம்பவங்களுக்கு விழிப்புணர்வாக இங்கே ஆராம்பப்பள்ளிக்கூடத்திலிருந்தே சொல்லிக்குடுத்தாடாரங்க கீதா .
   ரோட் க்ராஸ் செய்ரது போலீஸ் கூப்பிடறது மற்றும் எமெர்ஜென்சியில் என்ன செய்யணும் இப்படி .. first aid கோர்ஸ் 4 மணிநேரம் சொல்லிகுடுத்து அதுக்கு சான்றிதழும் தராங்க .என் மகளே போன மாதம் எடுத்துட்டு வந்தா இரண்டு வருஷம் வேல்யூ அப்புறம் மீண்டும் புதுப்பிக்கணும் ..ஆபத்து நேரத்தில் என்ன செய்யணும்னு நிறைய கோச்சிங் கொடுப்பாங்க இங்கே .
   நீங்க பகிர்ந்து இருப்பது நல்லதே ,
   Delete
 20. சிறு வயதில் எனக்கும் இதைப் பார்த்தெல்லாம் ரொம்ப வியப்பாக இருக்கும். பயம் இருந்ததில்லை. சிறு வயதிலேயே மின் தூக்கியில் ஏறிய அனுபவம் உண்டு. ஆனால் மின் ஏணியில் (எஸ்கலேட்டர்) சென்னை வந்துதான் பழக்கம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இது மாத்திரமா :) சின்ன வயசில் பார்த்ததெல்லாம் நமக்கு வியப்புதான் ..எஸ்கலேட்டரும் முதலில் பயமாத்தான் இருந்திச்சி இப்போ இல்லை ..இந்த காலத்து குட்டீஸ்க்கு நம்ம பழைய மாடல் கையால் சுற்றும் போன்ஸ் ஆச்சார்யம் ஹா ஹா

   Delete
 21. நாங்களும் இனிதான் டிடி அவர்கள் சொல்லியிருக்கும் ஜம்ப் ப்ரேக் செய்ய வேண்டும். அதைப் பல நாட்கள் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டு விட்டோம். இப்போது டிடி பதிவு மீண்டும் நினைவு படுத்தியுள்ளது...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ஈஸி ..மேலும் வெகு விரைவில் பிளாக் போஸ்ட் திறக்குது ..விரைவில் செய்யுங்க

   Delete
 22. அதிராவின் முதல் லிப்ட் அனுபவம் உங்களுக்காக அதிரா மேலை நாடு சென்ற பொழுது கடையின் வாசலில் Push என்று இருந்தை பார்த்த அவர் கணவ்ர் சொன்னார் இப்படி இருந்தால் கதவை தள்ளி திறக்கனும் அது போல pull என்று இருந்தால் இழுக்கனும் என்று சொல்லி இருக்கிறார் அவரோ உடனே இதெல்லாம் எனக்கு தெரியும் என்று அலட்டிக் கொண்டே லிப்ட் இருந்த இடத்திற்கு சென்றவுடன் Lift என்று இருப்பதை பார்த்தவுடன் அங்கிருந்த டோரை தூக்க முயற்சித்திருக்கிறார் அதை கண்டதும் அவர் கணவர் உள்பட பலரும் சிரித்து இருக்கிறார்கள் அந்த காலத்தில் செல்போனில் கேமிரா இல்லாததினால் அதை வீடியோவாக எடுக்க முடியலை ஹும்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) செம ..இன்னும் வேறே ஏதாவது இருக்கா இந்த மாதிரி செய்திகள் :) இருந்தா வீக்லி ஒன்று ரிலீஸ் பண்ணுங்க :)

   Delete
  2. தேம்ஸ் ஐக் கண்டால்.. ட்றுத்தைக் காணம்:) ட்றுத்தைக் கண்டால் தேம்ஸ் ஐக் காணம்:).. நான் பழமொழியை கரெக்ட்டாத்தான் சொன்னேன்:)..

   என்பதுபோல நான் இருக்கும்போது மாட்ட மாட்டேன் என்கிறாரே:).. அடுத்தமுறை வரும்போது பிடிச்சு லொக் பண்ணி வச்சிட்டு எனக்கு ஒரு தந்தி அனுப்புங்க அஞ்சு.. ரொக்கட்டில் வாறேன்ன்:)

   Delete
 23. முடிந்தவரை லிப்டில் செல்வதை தவிர்த்து விடுவேன்; நடுவழியில் நின்று விட்டால் என்ன செய்வது? என்ற பயம்தான்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக நன்றி அண்ணா .நம்ம ஊர் லிப்ட்களில் மிக கவனமுடன் இருப்பது நல்லது .

   Delete