அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/10/17

எள் உருண்டையும் எங்க (டமில் ) தமிழ் நாடும் ,Quilling

எங்க மகளின் வயலின் டீச்சரோட மகனுக்கு ஒரு வயதாகிறது இது அவனுக்கு செய்த வாழ்த்து அட்டை ..
                                                                              Baby Giraffe     எள் உருண்டையும் எங்க (டமில் ) தமிழ் நாடும் ..

----------------------------------------------------------------------------------

  மஹியின் பக்கம் ஒருமுறை செய்திருந்தாங்க ..

அதில் சியா விதைகள் கருப்பு எள்ளு வெல்லம் வேர்க்கடலை சேர்த்திருந்தது   நான் வேர்க்கடலை சேர்க்காமல்  முந்திரி பருப்பு  லின்சீட் /ஆளி விதைகளையும்  சேர்த்து அரைத்து உருண்டை பிடிச்சேன் .மிகவும் சத்து  நிறைந்த உருண்டை .இந்த சியா சீட்ஸ் தண்ணியில் போட்டதும் உப்பி வரும்..
சப்ஜா விதைகள் மாதிரிதான் ஆனா இவை வேற 
இங்கே சென்று இந்த சியா சீட்ஸ் பற்றி பார்க்கவும் ..

செய்முறை 
--------------------
ஒரு கப்  வறுத்த கருப்பு எள்
1/4 கப் வாணலியில் வறுத்த முந்திரிப்பருப்பு  
1/4 கப்  வெல்லம் ..துருவியது 
1/4 கப்  சியா விதைகள் 
1/4 கப் ஆளி விதை (இதை கடைசியில் வாணலியில் போட்டு உடனே எடுக்கணும் ) இல்லன்னா தீவாளி பட்டாசு மாதிரி எல்லா இடத்திலையும் பறக்கும் ..

இப்போ வறுத்த  பொருட்களை எடுத்து ஆறவைத்து மிக்சியில் கொரகொரவென அரைத்து  அதில் கொஞ்சம் கொஞ்சமாக துருவிய வெல்லத்தையும் சேர்த்து மீண்டும் அரைத்து அனைத்தையும் மீண்டும் சட்டியில் அல்லது வாணலியில் லேசாக சூடு படுத்தி இறக்கவும் ..சூடாக இருக்கும்போதே சிறு உருண்டைகளாக பிடிக்கவும் ..உருண்டை பிடிக்கும்போது கையில் எண்ணெய் வழியும் அதுதான் சிறந்த பதம் ..இனிப்பு நான்  குறைவாகவே சேர்த்தேன் ..விருப்பப்பட்டா இன்னும் சேர்த்துக்கலாம் .

சரி இப்போ டமில் நாடு பற்றி பார்ப்போம் ..
இந்த உருண்டை செய்ய நான் sainsbury  சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் jaggery  gur  தான்  பயன்படுத்துவேன் ..அன்னிக்கு ,என் வரிசையில் ஷாப் அசிஸ்ட்டண்ட் ஒரு பஞ்சாபி அக்கா ..அக்கா இங்கே 30 வருஷமா இருக்காங்க ஆனா ஆங்கிலம் இன்னும் வராது ..கூட்டமா இருந்தா கடகடன்னு பில் போட்ருவாங்க யாருமில்லைனா ..வார்த்தைக்கு வார்த்தை ஹாஞ்ஜி ஹாஞ்ஜி,டீக் ஹை ஆல் ரைட்  இப்படித்தான் பேசுவாங்க ..அதே மார்க்கெட்ல வேலை செஞ்சாலும் இவ்வளவு வருஷமா அங்கே கிடைக்கற அஸ்பாரகஸ் சமைச்சதில்லையாம் ..
வெல்லத்தை பார்த்து என்ன செய்ய போற என்று கேட்டாங்க நான் செஸமீ  ஸ்வீட்ஸ் என்று சொன்னேன் ..உடனே வளவளன்னு பஞ்சாபியில் பேச ஆரம்பிச்சாங்க நான்  சொன்னேன் யக்காவ் மே மதராஸி  ..எனக்கு ஹிந்திலாம் தெரியாதுன்னு ..உடனே ..நான்  அவ்ளோ தெளிவா சொன்னதுக்கப்புறமும் கேரளவா பெங்களூரா என்று கேட்டாங்க ..அதுக்கப்புறம் கொஞ்சம் இந்திய வரைபடத்தை காற்றிலேயே மேப் போட்டு விளக்கி நாம் இருக்கும் இடத்தை காட்டினேன் ..உடனே நீ என்ன மொழி  பேசுகிறாய் வீட்டில் தாய்மொழி என்னன்னு கேட்டாங்க நான் பெருமையா தமிழ் என்றேன் ..அதுக்கு அந்தக்கா .......................
ஓஹோ டமில் !!அப்படின்னா  நீ ஸ்ரீலங்காவா னு கேட்டாங்க .. ஆமாக்கா ஆமாங்கா நான்  ஸ்ரீலங்காதான் என்று சொல்லிட்டு வந்துட்டேன் ..வீட்டுக்கு வந்து உலக  வரைபடத்தில் நம்ம தமிழ்நாட்டை பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டேன் ..
--------------------------------------------------------------------------------------------------------------------------


இது உலக வரைபடத்தின் வளைவுகளில் முகத்தை வரைவது .
இதில் ஸ்பெஷலிஸ்ட் ed fairburn

இது மகள் வரைந்தது அனைவருக்கும் ஹாப்பி வீக்கெண்ட் ..
மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..

********************************************************************************

46 comments:

 1. ஹா ஹா ஹா இது முடிவு படிச்சு சிரிச்சிட்டுப் போறேன்ன்ன்.. பின்பு வாறேன் உருண்டை மட்டருக்கு:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா முதல் மல்ட்டி எள் உருண்டை உங்களுக்கே :)

   Delete
 2. ///.உடனே வளவளன்னு பஞ்சாபியில் பேச ஆரம்பிச்சாங்க நான் சொன்னேன் யக்காவ் மே மதராஸி ..எனக்கு ஹிந்திலாம் தெரியாதுன்னு ///

  அருமையான பதில் அவங்க பஞ்சாபியில் பேசினாங்க நான் எனக்கு ஹிந்தி எல்லாம் தெரியாது என்று ஹீஹீ நீங்க எனக்கு பஞ்சாபி தெரியாது என்று அல்லவா சொல்லியிருக்கனும்.... அந்த பஞ்சாபி லேடி சிரிச்சு இருப்பாங்க இந்த தமிழ் பொண்ணு சரியான லூசா இருக்கும் போல நான் பஞ்சாபியில் பேசினா ஹிந்தி தெரியாது என்று

  ReplyDelete
  Replies
  1. வாங்க அவர்கள் ட்ரூத் :) வெயிட் வெயிட் :) நானா ரொம்ப விவரமாக்கும் ..இந்த பஞ்சாபி குஜராத்தில் கிட்ட கவனமா பேசணும் //நான் பஞ்சாபி தெரியாதுன்னு ஒரு அங்கிள் கிட்ட சொன்னேன் உடனே சொன்னார் நான் பஞ்சாபி பேசறேன்னு உனக்கு தெரியுதுன்னா நீ சுலபமா எங்க மொழியை படிக்கலாம்னு ..ஒரு இன்சூரன்ஸ் பிராடு கிட்டயும் இதை சொல்லி மாட்டிகிட்டேன்

   Delete
 3. வாழ்க தமிழ்...!

  மகள் வரைந்தது அழகு... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

   Delete
 4. இந்த ஆளி விதை எல்லாம் போட்டு எங்கள் தோழி ஆரோக்ய சமையல் ஹேமா தினமும் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். நான் அவபத்தியச் சமையல்காரன். அவர்கள் ஆரோக்ய சமையல்!

  இதெல்லாம் போடாமல் எல், வெல்லம் மட்டும் போட்டு எங்கள் வீட்டு திவசங்களில் செய்வார்கள். எனக்கு மிகவும் பிடித்த உருண்டை அது! வெல்லத்தைப் பாகு பிடித்துச் சேர்ப்பார்கள்.

  மகள் வரைந்திருக்கும் ஓவியம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. /////எல்///// றீஈஈஈஈஈஈஈச்சர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோஓ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊ விட்டிட்டார்ர்ர்ர்ர்ர்ர்... ம்ஹூம்ம்ம் என்னட்ட ஆரும் தப்பவே முடியாதாக்கும்:).

   Delete
  2. //என்னட்ட ஆரும் தப்பவே முடியாதாக்கும்:).//
   ஆமாம் நீங்க தமிழ்ல டீ வாங்கினது உலகத்துக்கே தெரியுமே ..ழ ல ள வராம உங்களுக்கு டி கொடுத்த வாத்தியார் மட்டும் எங்கிட்ட மாட்டினா அவ்ளோதான்

   Delete
  3. .வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீராம் ....இல்லை இந்த ஸ்வீட் நிஜம்மா நல்லாவே இருக்கு ..எனக்கே ரொம்ப ஆசையா இருந்தது சட்டியில் சூடாகும்போது gur இளக்கிடும் அதனால் பாகு காச்ச வேணாம் ..செய்து பாருங்க ..ஆரோக்கிய சமையல்னா போய் பார்க்கணும் அவங்க ரெசிப்பீஸ்

   Delete
 5. எள் உருண்டையைப் போல பதிவும் சுவை..

  அன்பின் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா ..

   Delete
 6. கார்டு அருமை ஏஞ்சல்!!! வாவ்!!! என்ன திறமையப்பா உங்களுக்கு! என்னை மாதிரியே எல்லாத்துலயும் இன்ட்ரெஸ்ட் ஆனா நான் நுனுப்புல் ஹிஹிஹிஹி...

  எள்ளுருண்டை அஹா!! மிகவும் பிடித்த விஷயம். நாங்க ஸோ ஸ்வீட் ஆனாலும் வெல்லம் கலந்த இதை எல்லாம் விடுவதில்லை ஹிஹிஹி! ஆளி விதை சேர்ப்பதுண்டு ஆனால், சியா விதைகள் பார்த்ததில்லை. சப்ஜா தெரியும்....சர்பெத்தில், ஃபெல்லூடாவில் சேர்ப்பதுண்டு. ஆனால் சியா பார்க்க வேண்டும் இங்குகிடைக்கிறதா என்று..நாட்டு மருந்து கடையில் கேட்டு பார்த்துவிடலாம்...

  ஒன்று தெரியுமா நமக்கு வட இந்தியாவைப் பற்றி அறிந்திருப்பது போல வட இந்தியர்களுக்குத் தென்னகத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. மதராசி என்றாலே தென்னகத்து நாலு மாநிலங்களையும் கணக்கில் கொள்ளுகின்றார்கள். பரவாயில்லை தமிழ் என்றால் இலங்கைத் தமிழ் நினைவுக்கு வருவதில் தவறே இல்லை. ஏன் தெரியுமா அவர்கள் தான் உலகில் எங்கு சென்றாலும் நம் மொழியை மறக்காமல் பேசி, வீட்டிலும் பேசுகிறார்கள். ஏஞ்சல் பல தமிழர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். இங்குமே..இலங்கயானு கேட்டதை வாசித்த..அதிரா இப்போ க்ளவுட் 9 ல் இருப்பார்களே!! பார்த்து ஏஞ்சல் அதிராவிடம் சொல்லுங்க கீழ விழுந்துராம இருக்க பாராசூட் கொடுத்துடுங்க..லைட் வெயிட்னாலும் பரவால்ல......ஹிஹிஹி!! அதிரா மீ எஸ்கேப்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அன்ட் கீதா .சியா சீட்ஸ் ஆர்கானிக் பாரடைஸ் என்ற இடத்தில கிடைக்குதாம் ..சைனா இம்போர்ட் மட்டும் வாங்காதீங்க .
   செஞ்சு பாருங்க நல்லாவே இருக்கு நான் அடிக்கடி செயறதில்லை அவ்ளோ டேஸ்ட் கண்ணுமண்ணு தெரியாம உள்ளே போகும் :)
   கார்ட் பிடிச்சிருக்கா :) இன்னும் கொஞ்சம் டைம் குவில்லிங்குக்கு செலவழிக்கநும் நான் .
   அதேதான் அவங்களுக்கு மதராஸின்னா கேரளா ஆந்திரா மட்டுமே தோணும் நடுவுல இருக்கற அப்பாவிங்க நானாக காணாமப்போயிடறோம் :).
   அதிரா இப்போ நிலவில் :) பாட்டி சுடறது வடையா பஜ்ஜியானு ஆராய்ச்சியாம் ..பாவம் அந்த பாட்டி :)உங்களுக்கு நம்ம பூமி ஒரு மாதிரி ஆடுற மாதிரி தெரியுதா :)

   Delete
  2. Please don't disuturppuuu meeeeeeee.. I am getting ready to go to Kaasiiiiii:).

   Delete
 7. மகளின் படம் அருமை!!! நல்ல திறமை!!

  வாழ்த்துகள்! ஆமா ஹேப்பி வீகென்ட்!!!

  கீதா

  ReplyDelete
 8. குயிலிங் கார்ட் சூப்பரோ சூப்பர் அஞ்சு, ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோலவே இருக்கு, மிகவும் அருமை. கண் ரெடிமேட் ஆ?... நானும் செய்ய நினைச்சு இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, ஆரம்பித்தாம் முடிச்சிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா எல்லாமே பேப்பர்ஸ்தான் ..googly eyes போட்டா அது கார்ட்டூன் எபெக்ட் தரும் .சீக்கிரம் செய்ய ஆரம்பிங்க .ரொம்ப நாளாச்சு நீங்க குவில்லிங் செய்து

   Delete
 9. /////எள் உருண்டையும்////
  நோஓ என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ முதலில் இது /" மல்ட்டி உருண்டை" என தலைப்பை மாத்துங்கோ.... இதை நான் சாப்பிட்டு ஆளிவிதை அலர்ஜி வந்து டொக்டரிடம் போய் எள்ளுருண்டை சாப்பிட்டேன் என்றான் அவர் இது ஏதோ ஒரு உருண்டை உருளுதுவயிற்றில்... இருங்கோ டி என் ஏ ரெஸ்ட் எடுக்கலாம் என்றிடப் போறாரே .... இது எனக்குத் தேவையாஆஆஆஆஆ?????

  ReplyDelete
  Replies
  1. உருண்டுச்சின்னா அது எள் இல்லை கல் இல்லைனா டைனோசர் முட்டையா இருக்கும் :)
   நீங்க தியான் முட்டை சாப்பிடாரத்தில் எக்ஸ்பட் ஆச்சே ஹாஆ ஹாங்

   Delete
 10. ////நீ ஸ்ரீலங்காவா னு கேட்டாங்க .. ஆமாக்கா ஆமாங்கா நான் ஸ்ரீலங்காதான் என்று சொல்லிட்டு வந்துட்டேன் ..வீட்டுக்கு///
  பேச்சுப் பேச்சா இருக்கோணும் சொல்லிட்டேன்ன்:) இனி எங்காவது இல்ல நான் இந்தியா எனச் சொல்வதைப் பார்த்தேன்ன்ன்ன் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்ன்.....

  இதுகூடப் பறவாயில்லை, இங்கு கேட்டார்கள் நீ பாகிஸ்தானியா என... இன்னொருநாள் பமிலியா அதுவும் சுவிமிங் பூலில் நிக்கும்போது ஒரு ஸ்கொட்டிஸ் .... அஸ்லாமுஅலைக்கும் என்றார்... என் கணவருக்கு சரியாப் பதில் சொல்ல தெரியாமல் திரும்பவும் அஸ்லாமுஅலைக்கும் எனச் சொல்லிட்டார்... :), எதுக்கு அப்படி சொன்னீங்க என கேட்டேன்ன் ... ஒருவேளை அவர் முஸ்லிம்மாக இருக்கலாம் என்றார்... ஏனெனில் இங்கு பல ஸ்கொட்டிஸ் காரர்கள் இஸ்லாமியர்களை மறிபண்ணியிருக்கினம்:).

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) அது பரவாயில்லை சிலர் என்னை கொரியா ஜப்பான் தாய்லாந்து மிக்சிங் மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க :)
   இவர் சொல்வார் .
   இங்கே நிறையபேர் என்னை பாகிஸ்தானி என்று நினைப்பாங்க ..ஒரு சம்பவம் நினைவுக்கு வருது அடுத்த போஸ்ட்ல சொல்றேன் :)

   Delete
 11. மகள் வரைந்திருப்பது அழகு... அது என்ன உருவம் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை...

  ReplyDelete
  Replies

  1. மகள் வரைந்த படம் அருமை @அதிரா படத்தில் ஒரு பெண்ணின் முகமும் இன்னொரு பெண் நிற்பது போலவும் இருப்பது கண்ணிற்கு தெரியவில்லையா? கண்ணாடி போடும் அள்வீர்கூ வயசாகிவிட்டதா என்ன?

   Delete
  2. @athira and @avargal unmaigal ..this is a combination of cartography and art ..
   she is supposed to to an artist copy of all the pictures of certain unique special artists .she chose ed fairburn who is a specialist in converting maps into art

   Delete
 12. எள்ளில் கருப்பு எள்ளு, வெள்ளை எள்ளு என்று இருவகை உண்டு.

  இதில் வெள்ளை எள் + வெல்லப்பாகு கலந்து செய்யப்படும் எள்ளு உருண்டை தான், சாப்பிட டேஸ்டாகவும் ஜோராகவும் இருக்கும். ஸ்ரீராம் சொல்வதுபோல எனக்கும் இது மிகவும் பிடித்தமான ஐட்டம்தான். எள் சாப்பிட்டால் அதிகம் உழைக்கணும் என்றும் சொல்லுவார்கள்.

  குதிரை சாப்பிடும் கொள்ளு என்பதை நாம் சாப்பிட்டால் கொழுப்பு குறைந்து குதிரைபோல வலிமை ஏற்படும் எனவும் சொல்லுவார்கள்.

  எள்ளுருண்டையில் போய் ஏதேதோ ‘சியா விதை’ ‘ஆளி விதை’ன்னு கேள்விப்படாத பெயர்களையெல்லாம் சேர்த்து விடுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். :(((((( கர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நீங்க சொல்ற அந்த பாகு காய்ச்சிய எள்ளுதான் சுவை ..அனால் இந்த ஆளி விதைகள் அதிக அளவில் ஒமேகா 3 இருக்கும் உணவு ..அசைவத்தில் மீன் சாப்பிட முடியாதவங்க இதை சாப்பிட அதே நன்மைகள் விட்டமின்ஸ் கிடைக்கும் அதனாலே சேர்த்தேன்

   Delete
 13. பஞ்சாபிக்காரியுடன் பேசிவிட்டு, கடைசியில் இலங்கைக்காரிதான் என ஒத்துக்கொண்டு வந்துள்ளது, நல்ல நகைச்சுவையாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இயன்ற வரை விளக்க முயற்சித்தேன் இறுதியில் ஆமாம் சொல்லிட்டு வந்துட்டேன் :) வேறு வழி ?

   Delete
 14. மகள் வரைந்துள்ள படம் அருமை. ஒருவேளை அதிரா ஆண்டியைப் பார்த்துட்டு உடனே வரைந்திருப்பாளோ?

  பகிர்வுக்கு நன்றிகள்.

  //எங்க மகளின் வயலின் டீச்சரோட மகனுக்கு ஒரு வயதாகிறது இது அவனுக்கு செய்த வாழ்த்து அட்டை .. Baby Giraffe //

  குட்டியூண்டா க்யூட்டா இருக்குது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) இருக்கலாம் அண்ணா ..வருகைக்கும் குட்டி ஒட்டக சிவிங்கியை ரசித்ததற்கும் நன்றி

   Delete
 15. உங்கள் பதிவையும் வந்துள்ள கருத்துரைகளையும் ர்சித்துப் படித்தேன். அந்த அம்மணிக்கு தமிழ் என்றதும் டமில்நாடு நினைவுக்கு வராமல் ஸ்ரீலங்கா ஏன் நினைவுக்கு வந்தது என்று புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளங்கோ அண்ணா ..இங்குள்ள வட இந்தியருக்கு அப்துல் கலாமை தமிழரா தெரில ஆனா ஸ்ரீதேவியும் ரஜினிகாந்தும் தெரியுது அதுவும் தமிழராக அல்ல தமிழ் படங்களாலும் அல்ல ..மெட்ராஸ் என்றால் அவர்களை பொறுத்தவரை கேரளா பெங்களூர்னு நினைக்கிறாங்க .இவர்களில் பலர் ஜிம்பாபவே நைஜீரியா கென்யாவிலிருந்து வந்த இந்தியர்கள் இலங்கை தமிழர் என்ற அடையாததால் அவர்கள் மட்டுமே தமிழர் என்று நினைக்கிறார்ங்க ..நான் ஒரு இலங்கை பெண்மணியுடன் பேசுவதை கண்ட பிரிட்டிஷ்காரர் கேட்டார் ..நீ வேற நாடு அவங்க வேற நாடு அப்புறம் எப்படி ரெண்டு பேரும் ஒரே மொழி பேசறீங்க ?? :)

   Delete
 16. மகளின் கைவண்ணம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நேசன் ..பிரியனுக்கு மூன்று வயதாகிவிட்டிருக்குமே ..கிண்டர்கார்ட்டன் போறாரா

   Delete
 17. வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்பதை அந்த பஞ்சாபி அக்கா படிச்சிருப்பாங்க போல))

  ReplyDelete
  Replies
  1. ஆமா நேசன் அது உண்மைதானே ..நாம் காணாமலேயே போய்டுவோமோன்னு பயம் எழாமலில்லை

   Delete
 18. உங்க பாப்பா நல்லா வரையறாங்க அஞ்சு :) நாங்க இதை பொருளங்கா உருண்டைனு சொல்லுவோம்.

  நம்மிடம் அவர்களில் சிலர் முதலில் கேட்பது, " தமிழ்நாட்டுக்காரங்களுக்கு ஹிந்தி தெரியாது, இல்ல ?" என்பதுதான். "உங்களுக்கு தமிழ் தெரியாதில்ல, அப்படித்தான் எங்களுக்கும் " என்பேன்.

  நம்ம ஊர்காரங்களே "இலங்கையா?"னு கேட்டிருக்காங்க :))

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா ..பொரிவிளங்கா உருண்டையா !!அது நானும் சாப்பிட்டிருக்கேன் .அது ஒவ்வொன்னும் டென்னிஸ் பாலுக்கு சமமாச்சே :)
   என்னையும் நிறையபேர் //ஏன் சவுத் இந்தியன்ஸ் ஹிந்தி பேச மாட்டேங்கறீங்க என்று கேப்பாங்க :) இங்கே 30 வருஷத்துக்கு மேலே இருக்கற இந்திய குஜராத்திஸ் இன்னும் ஹிந்திலயே பேசித்திரியறாங்க ..இலவச ஆங்கில வகுப்பு கூட போக மாட்டாங்க .


   ஆமாம்பா :) என் பொண்ணு ஊருக்கு கூட்டிப்போனப்போ எல்லாருக்கும் ஆச்சர்யம் ..மக தமிழில் பேசறாளேன்னு ..நானா சொன்னேன் அவ அம்மா தாய் மொழி தமிழ் அதனால் அவளும் தமிழ் பேசுவான்னு .
   நன்றிப்பா மக 11 ஆம் வகுப்பு gcse பாடத்தில் 12 சப்ஜெக்ட்ஸ் இருக்கு அதில் ஒன்று ஆர்ட் அதுக்குதான் இவ்ளோ வரைஞ்சி வச்சிருக்கா .

   Delete
 19. கார்டு, மகள் வரைந்த ஒவியம்...
  எள் உருண்டை... டமில்... ரசிப்பாய்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி குமார் வருகைக்கும் ரசித்து பாராட்டியதற்கும் நன்றிகள்

   Delete
 20. எள் உருண்டை செய்முறை சுவை
  உலக வரைபடத்தில் முகம் வரைதல் செமை
  தொடர்க

  ReplyDelete
  Replies
  1. வாங்க கஸ்தூரி ரங்கன் ..இந்த ஆர்ட் மாதிரி வித விதமா வரையனும் இங்கே 11 ஆம் வகுப்பில் ..ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆர்டிஸ்ட்கள் அவர்களது படங்களை வரைந்து காட்டணும் ..வருகைக்கும் பாராட்டுக்களும் நன்றி

   Delete
 21. அருமை பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க சகோ மொஹம்மத்

   Delete