அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/2/17

பார்வைகளும் எண்ணங்களும் பலவிதம் ..Nail polish toxic trio,பார்வைகள் பலவிதம் 
=======================

இந்த படத்தில் தெரிவது என்ன ?  
                                                                                     

                                                                                


நாம் அனைவருமே மனிதர்கள் தான் ஆனால் அனைவருமே ஒரே மாதிரி சிந்திப்பதும் செயல்படுவதுமில்லை .எனக்கு சரி எனப்படுவது வேறொருவருக்கு  தவறாகப்படும் ..அதற்காக நான் சொன்னது தான் சரி எனது முடிவே இறுதி தீர்ப்பு என நான் அடம் பிடிக்க முடியாது :)  .. ..ஆங்கில வார்த்தைகளில் ஒரே வார்த்தைக்கு பல மீனிங் வரும்..சில வார்த்தைகள் ஒரே ஸ்பெல்லிங் இருந்தாலும் அர்த்தம் வேறுபடும்
..உதாரணம் ..stoned   ..
கல்லால் அடித்து கொல்லுதல் /ட்ரக்ஸ் எடுத்து மயக்க நிலைக்கு செல்வது என இரண்டு அர்த்தம் வரலாம் .. ..இன்னொரு வார்த்தை Shame..இதன் பொருள் அவமானம் என்றுதான் ஊரில் நாம் படித்திருப்போம் ஆனால் பிரிட்டிஷ் மக்கள் sad என்ற வார்த்தையை சில இடங்களில் பயன்படுத்தாமல் அதற்கு பதில் ஷேம் என்கின்றனர் ..இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது  இலங்கையை சேர்ந்த  ஒரு அண்ணாவை வழியில் போகும்போது சந்தித்தேன் ..அவர் என்னமா தங்கச்சி வேண்டப்போறீங்களா என்றார் ..நான் அவரிடம் இல்லை அண்ணா சர்ச்சுக்கு சண்டேதான் போவோம் இப்போ மினி மார்க்கட் வரை போறேன் என்றேன் அவர் குபீரென சிரித்து  விட்டார் ..அதைத்தான்மா நானும் கேட்டேன்  என்றார் ..

ஒரு பெரிய அலங்கார மீன் தொட்டி அதில் நிறைய வண்ண மீன்கள் உங்கள் முன்னே வைக்கப்பட்டிருக்கு அதைப்பார்த்ததும் ஒவ்வொருவருக்கு வெவ்வேறு எண்ணங்கள் தோன்றக்கூடும் .
                                                                               

சிலர் அழகை ரசிக்கலாம் ,சிலர் அதன் பராமரிப்பு பற்றி யோசிக்கலாம் சிலர் அதனை தாமும் வாங்கி வீட்டில் வைக்கணும் என நினைக்கலாம் ..சிலர் அடடா மனதுக்கு ரிலாக்சிங்கா இருக்கே என நினைக்கலாம் ..ஆனால்  ஒரு சிலர் ..மீன்கள் சுதந்திரமா இருக்க வேண்டியவை அவற்றை அடைத்து வைக்கக்கூடாது அந்த தொட்டியை கடலில் கொண்டு இறக்க வேண்டும் எனவும் நினைக்கலாம் :) இதுதான் மனித இயல்பு ..
                                                       

                                                      நண்பர் ஒருவர் அவரது அலுவலக ஜன்னல் வழியே எடுத்த படத்தை பகிர்ந்திருந்தார்..பலர் வாவ் சூப்பர்ப் என்று பின்னூட்டமிட்டிருந்தனர் ..ஆனால் நானும் இன்னொருவரும்  அதற்கு sad ஸ்மைலி போட்டிருந்தோம் ..நண்பர் கேட்டார் நீங்கள் மட்டும் ஏன் sad போட்டீங்கன்னு ..பிறகுதான் நானே கவனித்தேன் ..அவர் போட்டது வானம் செவ்வானம் அதனழகை அனைவரும் ரசித்த போது எங்க இரண்டு பேர் கண்ணுக்கு மட்டும் ஏரியின் கரையோரம் கொட்டி குமிந்த குப்பைக்கழிவுகள் பிரத்யேகமாக தெரிந்துள்ளது :)..ஒரே படம் ஆனால் பார்ப்பவர் மனநிலைக்கேற்ப எங்களது எண்ணமும் மாறுபட்டுள்ளது ..நான் சென்னை குப்பையை மட்டுமே பார்த்த போது  பிறர் அவரது புகைப்படத்திறமையை சிலாகித்துள்ளனர் :) ..எது முக்கியமோ அது பலநேரம் நம் கண்ணுக்கு படுவதில்லை .


இவ்ளோ பில்டப் எதுக்குன்னா இப்போ ஒரு உண்மை சம்பவத்தை பகிர்கிறேன் ..இந்த பெண்மணியை நான் நேரில் சந்தித்துள்ளேன் ..
இது விழிப்புணர்வு பதிவு சிலருக்கு பயமுறுத்துவதாக தோன்றினால் நான் பொறுப்பில்லை.. அவரவர் மனநிலைக்கேற்ப இந்த பதிவை எடுத்துக்கொள்ளும் விதத்தில் எடுத்துக்கொள்ளவும் :)

                                                                                      எலன்
======

எலனுக்கு  வயது 50 இருக்கும் அவருடைய பொழுதுபோக்கே நெயில் extension செய்து அதில் வித விதமான டிசைன்கள் கற்கள் என பொருத்தி அழகு செய்வது ..நான் சில வருடங்கள் முன்பு சின்ன மணிகளால் அணிகலன் செய்யும்  வகுப்புகளுக்கு சென்றேன் இவரை அங்கே தான் சந்தித்தேன் ..பிறகு அந்த கோர்ஸ் முடிந்ததும் அவரை சந்திக்கவில்லை .. 3 வருடங்கள் முன்பு ஒரு கண்காட்சியில் அனைவருக்கும் நெயில் டிசைனிங் செய்து கொண்டிருந்தார் ..பிறகு வேறு எங்கும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை போன வாரம் ஒருபல்பொருள் அங்காடியில் உதவிக்கு ஒரு பெண்மணியுடன் கைத்தாங்கலாக நடந்து சென்றார் ..அருகில் சென்று நலம் விசாரித்த எனக்கு அதிர்ச்சி ..விழிகள் dilated தலையில் கூந்தல் உதிர்ந்து கைகள் நடுங்கிக்கொண்டே என பார்க்கவே கொடுமையாக இருந்தது ..நலம் விசாரித்துவிட்டு அவர் விரல்களை கவனித்தேன் நகங்கள் ஓட்ட வெட்டி மொட்டையாக காட்சியளித்தது ..உன்னுடைய நெயில் ஆர்ட் பிசினஸ் எப்படி செல்கிறது என்று வினவினேன்...அதற்கு அவர் இன்று நான் நடை பிணமாக திரிய காரணமே அந்த நெயில் பாளிஷ்களில் இருந்த இரசாயனங்கள்  ,ஒரு வருடம் semi paralysis வந்து அவதிப்பட்டு இப்போது பரவாயில்லை என்றார் ..அப்படி என்னதான் இருக்கு அந்த நெயில் பாலிஷில் ஒருவருக்கு பக்க வாதம் வருமளவுக்கு என்று கேட்கிறீர்களா ..
முன்பு பல வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்திய 
நெயில் பாலிஷை  நாம் ஒவ்வொரு முறையும் குலுக்கி பின்பு பயன்படுத்துவோம் ஏனெனில் திறந்ததும் காற்று பட்டு  விரைவில் கடினமாகிடும் ..இப்போ மாற்றாக பிரபல நக பாலிஷ் நிறுவனகள் பயன்படுத்துவது டொலுவீன் ,நக பாலிஷை கடினமாக்காமல் நீர்தன்மையுடன் வைக்கும் டொலுவீன்.
இதை நம்ம வீட்டுசுவருக்கு அடிக்கும் பெயின்டிலும் கலக்கறாங்க 

நகத்தில் இப்பூச்சுக்கள் CUTICLE வழியே ஊடுருவி இரத்த ஓட்டத்தில் கலக்குமாம் ,
 .
TOLUENE 
-------------..
.இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மயக்கம் தலை வலி மற்றும் சிலகுறைபாடுகளை உருவாக்குதாம் !!!!!
சில வருடங்கள்; முன்பு வரை ..கர்ப்பிணி பெண்களை சிகரட் மற்றும் மதுபான வகைகள் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள் ..
ஆனால் இப்போ நிலைமையே வேறு ..
பெர்சனல் கேர் ப்ரொடக்ட்ஸ் அதாவது மேக்கப் /நெயில் பாலிஷ் /பெர்பியூம் போன்றவற்றில் காணப்படும் அதிகளவு இரசாயன பொருட்களால் அவற்றை தவிர்க்க சொல்கின்றார்கள் 
அடுத்தது இதில் உள்ள formaldehyde, toluene or dibutyl phthalate..
இவை மூன்றும் Toxic trio ...பார்மால்டிஹைட் ...புற்றுநோய் காரணி 
மற்ற இரண்டும் REPRODUCTIVE TOXIN .....Formaldehyde...இது பிளைவுட் //GLUE Adhesive/ பல வீட்டு உபயோக பொருட்களில் காணப்படும் ஒரு வித கடும் மணம் வீசும்இரசாயனப்பொருள் ..
இதைதான் நெயில் பாளிஷிலும் பயன்படுத்துகின்றனர் 
நெயில் பாலிஷ் பாட்டில்களில் உள்ள லேபிளில் //inflammable ///
காற்று வரும் வென்டிலேஷன் உள்ள ஜன்னல்கள் திறந்து வைத்துள்ள 
இடங்களில் பயன்படுத்தவும் // என்று குறிப்பிட்டிருப்பார்கள் ..
எத்தனை பேர்கள் இதனை விரலில் போடுமுன் வாசித்திருப்பார்கள் ??
//as of June 10, 2011, the U.S. Department of Health and Human Services updated its 
National Toxicology Program Report on Carcinogens (RoC) to state that 
formaldehyde is “known to be a human carcinogen,” //
கூடுமானவரை இரசாயன பொருட்கள் மேலே குறிப்பிட்ட TOXIC TRIO 
மற்றும் ..
DMDM Hydantoin ,
Butylparaben, Isobutylparaben 
Propylparabenகலந்திருந்தால் தவிர்க்கவும் ..


மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..

                                                                ****************

56 comments:

 1. முதல் படம் ஒரு பக்கம் முயல், ஒரு பக்கம் வாத்து தெரிகிறது.
  பார்வைகள் பலவிதம் என்பது உண்மை.
  பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..ஆமாம் இரு வேறு உருவங்கள் தெரிகிறது இல்லையா ..ஒரே படத்தில் ..

   Delete
 2. மருதாணியின் அருமை பலருக்கும் தெரிவதில்லை... புரிவதும் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா இது உண்மையே, நான் கூட மருதாணி வாங்கி 4,5 வருடங்களாகுது.. அப்படியே இருக்கு... அருமை தெரியாமலில்லை... நேரம் ஒதுக்கி செய்ய மனம் வருவதில்லை... ஆனா இப்போ கிடைப்பதெல்லாம் ரெடிமேட் மருதாணிதானே.. அதிலும் கலப்படம் நிட்சயம் இருக்கும்:)

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ டிடி ..உண்மைதான் இப்போ ஹென்னா என விற்கப்படுவதும் செயற்கை பொருள் சேர்த்திருக்காம் ..எதை பார்த்தாலும் பயமா இருக்கும் ..ஆனா அதில் அலர்ஜி டெஸ்ட் செய்து பிறகு பயன்படுத்த சொல்றாங்க

   Delete
 3. ஆமா ஆமா எண்ணங்கள் பார்வைகள் எல்லாம் ஒன்றல்ல... நான் பார்ப்பதுவா உங்க கண்ணுக்கு தெரியும்:).. இதனாலதான் என் கொப்பி ரைட் வாக்கியம்..”எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்”... எதையும் நல்ல கண்ணோட்டத்தோடு பார்க்கப் பழகி விடுவது நல்லதே...

  ReplyDelete
  Replies
  1. ///எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்”////

   என் எண்ணம் அழகாக இருந்ததினால் மட்டுமே நீங்கள் பாரக்க என் கண்ணிற்கு அழகாகவே இருக்கிறீர்கள் இல்லையென்றால் ஹீஹீ”

   Delete
 4. ஹா ஹா ஹா தமிழ் மாதிரியேதான் ஆங்கிலமும்... இன்னும் ஒன்று poor girl.. என்பார்கள். அப்படி எனில் நாம் சொல்லுவோமே அட பாவமே... பாவம் பிள்ளை... இப்படி அர்த்தம் வரும்.

  நம்மட பெரிய உதாரணம் அஞ்சு “வண்டி”... ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) இங்கே poorly னு (if some one is ill ) சொல்வாங்க நம்மஊர்ல அது ஏழைன்னு மீனிங் :)

   Delete
 5. நெயில் பொலிஸ் விசயத்தில் நீங்க என்ன சொன்னாலும் நான் அடிப்பதை நிறுத்தப் போவதில்லை:).. உடுப்புக்கு மச்சிங்கா அடிக்காட்டில், எப்பூடி ஸ்கூலுக்குப் போய் board ல எழுதிப் படிப்பிக்க முடியும் சொல்லுங்கோ:).

  ஹா ஹா ஹா நீங்க சொல்லுவது சரியேதான் அஞ்சு.. ஆனா இக்காலத்தில் நிலவுக்குப் பயந்து பரதேசம் போக முடியுமோ? அப்படி இருக்கே நிலைமை... எதைத் தொட்டாலும் சாப்பிடாதே என்கினம்... அதைப் பாவிக்காதே இதைப் பாவிக்காதே... இப்படி ஆச்சு இக்காலம்.

  அதுக்காக பயந்து பயந்து வாழ முடியுமோ எனத்தான் நினைப்பேன்... ஓரளவுக்கு கவனமாகத்தான் இருக்கோணும் ஆனா ”முட்டையில மயிர் பிடுங்குவது போல” இருக்கக்கூடாது எனத்தான் நான் நினைப்பேன்.

  எல்லாம் விதியே.. கவனமா இருந்தாலும் வருத்தம் வரோணும் என இருப்பின் வந்துதான் தீரும்..

  ReplyDelete
  Replies
  1. //எப்பூடி ஸ்கூலுக்குப் போய் board ல எழுதிப் படிப்பிக்க முடியும் சொல்லுங்கோ:).///

   என்னது நீங்க படிப்பு சொல்லிதரீங்களா? அடபாவமே

   Delete
  2. இன்னொரு விஷயத்தை சொல்லிடறேன் எங்க ஸ்கூலில் அது கத்தோலிக்க பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட் பி.டி வகுப்பில் கையை நீட்டி செக் பண்ணுவாங்க உடற்பயிற்சி ஆசிரியை ..அப்போ கைமேல் foot ரூலராலே பளீர்னு விழும் நகமிருந்தா அப்புறம் நான் அறிவியல் பாடமெடுத்தாதல் யூனிவர்சிட்டி முடியும்வரை நகத்தை வளர்க்க முடில dissection செய்யும்போது நகத்தில் அழுக்கு சேரக்கூடாதே ,அப்டியே நகம் வளர்க்கும் ஆசை போயிடுச்சி அதனால் கலரிங்கும் ஆசை வரலை :)

   Delete
  3. @Avargal unmaigal ஹா ஹா :) பாவம்ல அந்த அப்பாவி குழந்தைங்க :)

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 றுத்:).
   நான் படித்த எங்கள் கேள்ஸ் ஸ்கூலும் இதே றூல்ஸ்தான் அஞ்சு, செயின், கொலுசு , காப்பு , தூக்கணம், கியூரெக்ஸ்.... மோதிரம் எதுவும் போட முடியாது, முழங்கால் தெரிய சட்டை, ரை சொக்ஸ் சூஸ் .... சோர்ட் கெயார் அ ரெட்டைப் பின்னல் அவ்ளோதான்., பிரிட்டிஷ் ஸ்கூல் எங்களோடது.

   Delete
  5. ஆனா ஹொலிடே ஸில கியூரெக்ஸ் போடுவமே.

   Delete
  6. ஆம்! ஒவ்வொருவரின் மன நிலையும் ஒவ்வொன்று! ஒரே பிரச்சனையை ஒவ்வொருவரும் பார்க்கும் விதத்தில் ஒவ்வொரு தீர்வு கிடைக்கும். ஒருவருக்கு ஒரு தீர்வு ஓகே என்றால் மற்றொருவருக்கு அது நல்ல தீர்வல்ல….என்று தோன்றும் இப்படி ஒவ்வொன்றிலும்…
   நல்ல பதிவு

   Delete
  7. ஏஞ்சல் நான் படித்ததும் மிக மிக அருமையான கத்தோலிக்கப் பள்ளி, அதே போன்று கல்லூரியும். இன்று எனக்குப் பல நல்ல பழக்கங்கள் இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் புனித சூசையப்பர் பள்ளியும் எனது காட்மதர் என்று நான் மதித்த இரு ஆசிரியைகளும் தான். அதன் பின் யுஜி படித்த ஹோலிக்ராஸ் கல்லூரியும் பேராசிரியர்களும் தான் என்றால் மிகையல்ல. நீங்கள் சொல்லியிருக்கும் அதே அதே....நகம் வெட்டப்பட்டு அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். கடிக்கப்பட்ட நகமாக இருக்கக் கூடாது. நெயில் பாலிஷ் நோ! பூ வைக்கக் கூடாது!பல இந்துக் குடும்பங்களுக்கும் அது ஏதோ விரும்பத்தகாத ஒன்று என்று பட்டாலும் எனக்கு அது நல்ல பழக்கமாகப்பட்டது. இப்போது பல வீடுகளில் பார்க்கிறேன். பூ தலையில் வைத்துக் கொண்டு அப்படியே கீழே உதிர, அதை எடுத்துப் போடும் போதும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே போடுவதும், கல்யாணக் கூடங்களில் குப்பையாக....முடியுடன்...நான் பூ வைப்பதில்லை. அதே போன்று நகம் வளர்க்கும் பழக்கமோ நெயில் பாலிஷ் பழக்கமோ கிடையாது. பல குழந்தைகள் வளர்த்து அந்த நகத்தினால் ஏற்படும் கீறல்கள் என்று எத்தனையோ வேண்டாத நிகழ்வுகள்...

   கீதா

   Delete
  8. ஹை 5 :) கீதா ..எனக்கும் பூ வைக்கிற பழக்கம் பிடிக்காது ..செடியிலிருந்து மலர்களை பறிப்பதும் பிடிக்காது ..கல்லூரி பள்ளியில் படிக்கும்போது வீட்டில் அம்மா திட்டுவாங்க அந்த அடுக்குமல்லி றோஸ் மாதிரி இருக்கும் அதை வைத்து போக சொல்லி நான் மறந்த மாதிரி நடிச்சிட்டு போயிடுவேன் //எனக்கு அந்த மலர்கள் ப்ளீஸ் டோன்ட் செப்பரேட் மீ from மை குடும்பம்னு சொல்ற மாதிரி இருக்கும்..
   நல்லவேளை வெளிநாடு வாழ்க்கை பூ பிரச்சினை இங்கில்லை ..தமிழர் திருமணங்களுக்கு செல்லும் பழக்கமும் இல்லை :)..

   எங்கள் பள்ளியும் கத்தோலிக்க பள்ளியே 8 ஆம் வகுப்பு வரை ஸ்கர்ட் ..இரண்டு ஜடை போட்டு மடித்து கட்டியிருக்கணும் கட்டாயம் /அசெம்பிளியில் செக் செய்வாங்க ..பிறகு 9 முதல் 12 வகுப்பு வரை அரை தாவணி ஒரு ஜடை போட்டாலும் ரிப்பன் வைத்து மடித்து கட்டணும் பூ வைக்க கூடாதது பள்ளிக்கு ஏனென்றால் ஆசிரியர் சொல்வார் பலதரப்பட்ட மாணவியர் படிக்குமிடத்தில் அலங்காரங்கள் ஏற்றத்தாழ்வை உண்டாக்ககூடும்னு

   Delete
  9. எனக்கு எப்பவுமே ஓட்ட வெட்டப்பட்ட நகங்கள் தான் பிடிக்கும் :) ஒரு காலத்தில் மருதாணி வைத்தேன்

   Delete
  10. @அதிரா ..நாங்க படிச்சா ஸ்கூலில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் முடி ஷார்ட்டா வெட்ட அனுமதியில்லை ..நால்லாம் ஜமுனாபாரி ஆடு மாதிரி ரெண்டு ஜாடை போட்டு மடிச்சு ரிப்பன் வச்சி கட்டி ஸ்கூல் போவேன்

   Delete
 6. ஆனா நீங்க பகிர்ந்திருப்பது நல்ல விசயம் அஞ்சு, இதை எல்லாம் நாம் நிட்சயம் தெரிஞ்சிருக்கோணும், குழந்தைகள் விசயத்தில் கவனமாக இருக்கலாம் எல்லோ. முன்பும் Tippex பாவிப்பது கூடாது என நீங்களா சொன்னீங்க?... அதுவும் நஞ்சு கலந்ததுதானே..

  நாம் பாவிக்கும் பொருட்களில் என்ன இருக்கிறது என தெரிந்து பாவிப்பது மிக நல்ல விசயமே.

  ReplyDelete
  Replies
  1. என் மகளின் தோழிக்கு அக்குள் பகுதியில் பெரிய lump வந்து டாக்டரிடம் செல்லவும் கடைசீயில் சொல்லிட்டாங்க அதட்கு காரணம் அவ தினமும் பயன்படுத்திய Underarm Deodorant

   Delete
  2. யேஸ்ஸ் இது நானும் அறிந்திருக்கிறேன்.

   Delete
 7. இந்த படத்தில் தெரிவது என்ன ?

  RABBIT OR DUCK ... SUPERB ! :)

  >>>>> இப்படி நோக்கினால் முயல் >>>>>
  <<<<< இப்படி நோக்கினால் வாத்து <<<<<

  முயலின் காதுகள் வாத்தின் அலகுகளாக ... அருமையோ அருமை.

  தொடர்ச்சியான ஹனிமூன் பயணங்களால் மற்றவற்றை படிக்க இப்போது நேரமில்லை. பிறகு பொறுமையாகப் படிப்பேன்.

  ஹனிமூன் பற்றி மேலும் விபரங்கள் இதோ இந்தப்பதிவின் பின்னூட்டங்களில் உள்ளன.

  http://unjal.blogspot.com/2017/02/1.html

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வாங்க கோபு அண்ணா ..பயணம் சிறக்கட்டும் ..நேரமிருக்கும்போது வாங்க :)

   Delete
 8. நகத்துல எங்க பாப்பா அழகழகா ஸ்டோன் வச்சு, டிசைன் பண்ணுவா ! தெரிஞ்சே செய்வதுதான், என்ன செய்வது ! இன்னும் கொஞ்சம் நாளானால் போரடிச்சி விட்டுடுவானு நெனக்கிறேன்.

  சாப்பாடு உட்பட எந்தப் பொருளைப் பார்த்தாலும் மருந்தாத்தானே பார்க்க வேண்டியிருக்கு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா ..உண்மைதான் வெளிநாட்டில் எதில் எப்போ பிரச்சினைன்னு அவனே சொன்னாதான் நமக்கு தெரியும் ..நான் சிலநேரம் பயப்படுவேன் பலநேரம் வரது வரட்டும்னு விடுவேன் ..பாப்பா சின்ன பிள்ளைத்தானே போட்ட்டுக்கட்டும் கொஞ்ச நாளில் தனே விட்ருவா .
   என் மகளும் முதலில் ஆசையா போடுவா இப்போ சயன்ஸ் க்ளாசில் நகம் வளர்க்க வேணாம்னு சொன்னதால் விட்டுட்டா

   Delete
 9. விட்டு விட்டுத்தான் படிச்சேன் ஆனாலும் கமண்டுகிறேன்.அப்பாலிக்கா முழுக்க படிக்கிரேன்.Underarm Deodorant நெய்ல் பொலிஷ் இப்டி நிறைய விஷயங்கள் பல பேரை பாதி[ப்புக்கு உள்ளாக்கி இருந்தாலும் அதுக்கு முதலாவது காரணம் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒவ்வருவருடைய உடல் தான் பழக்கப்பட்ட விதத்துக்கு ஏற்ப ஒவொன்றையும் ஏற்றுக்கொள்ளுற விதமும் ஒரு பெரிய காரணம்.ஏனெண்டால் முழுக்க முழுக்க பாதிப்பு அப்டி முத்திரை குத்தப்பட்ட சிகரட் ஏ அதை வாழ்நாள் முழுக்க பாவிக்கிறதில 50 வீதமான ஆக்களுக்கும் குறைவானவர்களுக்குத்தான் கெடுதலை வெளிக்காட்டுறதும் பாதிக்கிறதுமா இருக்காம்.சோ மீ இப்பெல்லாம் இப்டியான பயமுறுத்தல்களுக்கு நடுங்குறதில்ல முன்ன மாதிரி.நெட்ல இருக்கும் முட்டை வேக வைக்கும்போது அந்த முட்டை ஓட்டில இருந்து ஒரு மனித பிணத்தில இருந்து வெளியேறுற கிருமிகள் அளவு வெளியேறுமாம்.அப்பறம் தண்ணிய கொதிக்க வைக்கிறதால சில கிருமிகள் அழிஞ்சு ஆற வைக்கிறப்போ நிறைய கிருமி உருவாகுமாம் .அதை நிறைய காலமா அப்டி குடிச்சதாலயே ஒராள் செத்துபோயிட்டாராம் .இப்டி நிறைய விஷயம் இருந்தாலும் நெய்ல் பொலிஷ் பற்றி நீங்க சொல்லுறது முழுக்க முழுக்க உண்மை.

  ReplyDelete
  Replies
  1. Yes, , that little girl has sickle cell anemia ...

   Delete
  2. வாங்க சுரேஜினி ..நான் இந்த எலனை நல்ல நிலைமையில் பார்த்திருக்கேன் 3 வருஷத்துக்கு அப்புறம் இப்பிடி பார்க்கவும் எனக்கே ஷாக்கிங் ..அதுவும் அவரே தான் சொன்னார் தனக்குபாராலிஸிஸ் வர காரணம் இந்த கெமிக்கல்ஸ்னு ..அதான் தைரியமா கூட கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சி எழுதிப்போட்டேன் .. அந்த டியோடரண்ட் பயன்படுத்திய பொண்ணுக்கு சிக்கிள் செல் அனிமியா இருக்கு அதனால் இம்ம்யூனிட்டி மிக குறைவு ..
   ம்ம் அப்புறம் ஊரில் பல வருஷமுன் நான் இந்த கியூட்டக்ஸ் யூஸ் செஞ்சிருக்கேன் அப்போ ஒண்ணுமே ஆகாது றேவலன் பிராண்ட் நல்ல இருக்கும் ஆனா இப்போ இருக்கறதுங்களை திறந்ததும் மயக்கம் வரும் மூச்சடைக்கிற மாதிரி பீலிங் ..
   ஹா ஹா :) தண்ணிலாம் நான் அப்படியே குழாயை திறந்து குடிச்சிருவேன் :) காய்ந்த பழக்கம்லாம் கிடையாது அதேமாதிரி டெட்டால் சாவ்லான் இதெயெல்லாம் யூஸ் பண்ற பழக்கமுமில்லை ..எங்க கோயிலில் peace கொடுத்துட்டு கையை எல்லாரும் ஹாண்ட் ஸானிடைசேர் போட்டு தேச்சுக்குவாங்க :) கடைசீல போன வருஷம் அமெரிக்காகாரனே சொல்லிட்டேன் அதனால் ஒரு பயனுமில்லைனு ..இந்த நாட்டில் பிரச்சினை ஒரு விஷயம்தான் அது எல்லாமே க்ளோஸ்ட் ,,ஜன்னல் கதவு எல்லாம் காற்று வராம இருந்தா எப்படி கெட்ட கிருமிங்க உள்ளேயே சுற்றும் தானே

   Delete
  3. ஆனா ஒன்னு சுரே ..இந்த கோக்கோகோலா பெப்சியால் எங்க வீட்டு செடிங்க பிழைச்சிருக்கு :) அதுதானே எனக்கு best insecticide pesticide :)

   Delete
  4. ஆம் ஏஞ்சல் கோக் அண்ட் பெப்சி நல்ல பெஸ்டிசைட்ஸ்!!!!!

   கீதா

   Delete
  5. யெஸ் ஏஞ்சல் சாவ்லான் டெட்டால் எல்லாம் வேஸ்ட். அதனால் ஒன்றும் பயனில்லை. அதே போன்று சானிசைசர்....அதுவும் நோ யூஸ்!

   தண்ணி கூட ஊருல இருந்த வரை அப்படித்தான் ஆனா இப்ப இங்க சென்னைலதான் வேற வழியில்லாம காய்ச்சிக் குடிக்க வேண்டிய நிலைமை...

   கீதா

   Delete
  6. நம்ம ஊர் தண்ணியை காய்ச்சலேன்னா அவ்ளோதான் தொண்டைல கிச்கிச் வருமே ..நாங்க ஊருக்கு வரும்போது ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம் ..

   இங்கே ஒரே ஒரு பிரச்சினை நிறைய கால்சியம் ப்ளோரைடு இருக்கும் அதனால் tap திறந்தா வெள்ளையா மாவு கரைச்சி மாதிரி வரும் தண்ணி அதனால் தலை முடி உதிர்வும் கூட அதனால் பில்டர் யூஸ் பண்றோம்

   Delete
  7. ஆமாம் கீதா அந்த சானிடைசர் யூஸ் செய்ற வெளிநாட்டினருக்கே அடிக்கடி இங்கே நோய் கிருமி தோற்று அதிகம் ..அதெல்லாம் யூஸ் பண்ணாத நாம் கல்லு மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கோம் :)

   Delete
 10. ஏஞ்சலின் மிகவும் பயனுள்ள பதிவு அதனால் இதை நான் சுட்டு என் தளத்தில் பகிரப்போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் பகிருங்கள் ..ஏதாச்சும் நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருந்த அதையும் கரெக்ட் செஞ்சே போடுங்க :)

   Delete
  2. அழகுக்கு பின்னே மறைந்து இருக்கும் ஆபத்து! எச்சரிக்கை http://avargal-unmaigal.blogspot.com/2017/03/nail-polish-on-fingers.html

   Delete
  3. நோஓஓஒ ஸ்ரொப் ஸ்ரொப் ..... அஞ்சூஊ ஓசில தூக்கிட்டுப் போகப் பார்க்கிறார்ர்ர்ர் விடாதீங்க காசை என் எக்கவுண்டிலயாவது போடச் சொல்லுங்கோ.... ஹையோ எல்லோரும் நோகாமல் நொங்கெடுக்க பார்க்கினமே:)

   Delete
  4. மிக்க நன்றிங்க அவர்கள் ட்ரூத் :) உங்கள் பதிவு மிக அழகா நீட்டா இருக்கு வித் அடிஷனல் தகவல்களுடன் ..
   அப்புறம் ஒரு கூண்டு ஏற்பாடு செய்ய முடியுமா :)ஒரு குண்டு பூனையை பிடிச்சு அடைக்கணும்

   Delete
 11. வருத்தத்துக்கு ஷேம் வார்த்தையை உபயோகிக்கிறீர்களா? ஆச்சர்யம்.

  அப்போ வேண்டப்போறீங்களா என்றால் என்ன அர்த்தம்? மார்க்கெட்டுக்கு என்று அர்த்தமா!

  நகப்பூச்சு கதை வியப்பளிக்கவில்லை. பாத்திரம் தேய்க்கும் பொடியை உபயோகிக்கும் சில பெண்களின் நகங்கள் பூஞ்சணம் பிடித்தது போல மாறியிருப்பதை பார்த்திருக்கிறேன்.

  டொலுவீன் விளைவுகள் பயமுறுத்துகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :) இலங்கையர் பேசும் தமிழ் எனக்கு புரியவேபுரியாது ..அந்த அண்ணா வேண்டபோறீங்களான்னு ..ஷாப்பிங் போறீங்களான்னு மீனிங் ..இலங்கையர் வாங்குவது என்ற வார்த்தை அவ்வளவா பயன்படுத்த மாட்டாங்க அதே மாதிரி நாம் மூட்டை என்பது அவங்க பொதி என்றே சொல்றாங்க ..
   ம்ம் அப்புறம் ஒருவர் சொன்னார் எனக்கு சரியான வருத்தம் ....நான் யோசிச்சேன் எதோ துக்கம் போலென்று ..ஆனா வருத்தம் என்பது இலங்கையர் வழக்கில் sick ஆம் ..

   Delete
  2. sad ...அதை ஏன் கேக்கறீங்க ..நாங்க இங்கே வந்த புதிதில் ஒரு வைபவத்துக்கு போக முடில அப்போ அவங்க பொண்ணு சொல்றாங்க இப்படி //It's a shame you couldn't come//எனக்கு உள்ளுக்குள்ள கோவம் இதிலென்ன அவமானம் இருக்குன்னு அப்புறம் ரொம்ப நெருங்கிய பிரிட்டிஷ் நண்பி கிட்ட சொன்னப்போ அவர் சிரிச்சிட்டே சொன்னார் sad என்பது அதிக துக்கம் என பொருள்படுவதால் pity என்ற அர்த்தம் shame கு பொருந்தும் ..

   Delete
  3. நான் இதைக் கேள்விப்பட்டதில்லை (ஷேம்னு சொல்றத. யாராகிலும் சொன்னா woundingஆக இருந்திருக்கும்).

   'பொதி' என்பது அருமையான தமிழ்ச்சொல். ஆனால் தமிழ்'நாட்டில் ஒரு விஷயத்துக்குத்தான் பயன்படுத்துவார்கள் (பாரு... கழுதை மாதிரி பொதி சுமக்கிறான்)

   நெயில் பாலிஷ் - நல்ல தகவல். சொல்லவேண்டிய இளையோரிடம் சொல்லிவிட்டேன்.

   Delete
  4. i've heard people pronouncing saw it as sore it with a regional accent .

   /It's unfortunate you can't join us// இதுதான் அதுக்கு மீனிங்ன்னு எங்க ப்ரண்ட் அன்னிக்கு சொல்லாட்டி நானும் கோவப்பட்ருப்பேன் :)

   இங்கே நிறைய கலந்து பேசறாங்க எல்லாம் ரீஜனல் ஆக்ஸன்ட் ஆம் ..
   உங்களுக்கு வலைப்பூ இருக்கா நெல்லைத்தமிழன் ?
   வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ..

   ஹா ஹா பொதினாலே நமக்கு கழுதை மட்டுமே நினைவிற்கு வரும் உண்மையே :)

   Delete
 12. எனக்கு முதலில் தெரிந்தது வாத்துதான். முயல் இருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மட்டும் எனக்கு முயல் தெரிந்தது. இது எனது பார்வை. மதுரைத் தமிழனும் சற்று முன் பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திக் ..எனக்கு இரண்டுமே தெரிஞ்சுதே :)
   ஆமாம் நானும் பார்த்தேன் பகிர்வை

   Delete
 13. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 14. அதே போன்று டால்கம் பவுடர் யூஸ் பண்ணுவதில்லை. என் மகனுக்கும் சிறு வயதிலிருந்தே பயன்படுத்துவதில்லை. டியோடரன்ட்....நெவர்.....ஆனால் இரு வேளை நன்றாகக் குளித்துவிடுவேன். டியோடரன்ட் போடும் நிலை வந்தால் நானும் சரி என் மகனும் சரி மேல் சட்டையில் பயன் படுத்துவோம். உடலில் சென்ட் ஆனாலும் டியோடரன்ட் ஆனாலும் போடுவதில்லை....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஸ்ட்ரோங் ஸ்மெல்ல்ஸ் எல்லாமே மைக்ரேன் triggers ..அதனால் வீட்டில் பயன்படுத்தும் க்ளீனர்ஸ் கூட ரொம்ப மைல்ட் அப்புறம் மோஸ்ட்லீ நானே வினிகர் லெமன் ஜூஸ் சேர்த்து தயாரிப்பது .தான்

   Delete
 15. முதல் படம் ஒரு பக்கம் பார்த்தால் முயல்....மற்றொரு பக்கம் பாத்தால் வாத்து!!! அழகு படம்!

  ReplyDelete
  Replies
  1. yes :) வருகைக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா ..

   Delete
 16. நெயில் பாலிஷ் போட ஊரில வீட்டிலேயே தடா. இங்கு வந்தபின்னும் அவ்வளவா போடுவதில்லை. காரணம் ஒன்று. எனக்கு என் நகத்தில் அப்படியே இருக்காது.காய்ஞ்சது 2,3 விரல்களில் உரிந்துவிடும். பின் பார்க்க பிடிக்காது உடனே ரிமூவ் செய்திடுவேன். ஸோ இந்த பிரச்சனை எனக்கு இல்லை. ஆனா அழகான டிசைன் போட்டிருக்கும் நகங்களை பார்க்கும்போது ஆசையாக ருக்கும். ரசிப்பதோடு சரி.
  இப்போ கிரீம்,ஷாம்பு எதுபார்த்தாலும் பின்னால் எழுதியிருக்கும் பொருட்களை வாசித்தால் தலைசுத்தும். ஆனா என்ன செய்வது அதிக கேர் ம் ஆபத்தில் முட்யுது. அதனால் ஓரளவு பார்த்து வாங்கி ஓத்துபோவதை பாவிக்கிறோம். எதிப்பு சக்தியை கூட்டிவைப்போம் உணவினால் வேறு என்ன செய்வது. இதை வாஇக்கும்போது இங்கு இருக்கும் இன்னொரு ப்ரெண்ட் ஞாபகம் வாறா. அவா விடம் இருக்கும் நெயில்பாலீஷ் கண்முன்னால். டெக்கரேஷன் அயிட்டம் எத்தனை. சொன்னால் கேட்கவும் மாட்டா.
  எனக்கும் முதல் வாத்து,அடுத்த நொடிகளில்தான் முயல் தெரிந்தது. அருமையான விழிப்புணர்வு பகிர்வு அஞ்சு.

  ReplyDelete