அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/17

Loud Speaker ...44.ஆல்பர்ட் தாத்தா ,டிம் பிராட்பரி ,நாடியா செய்த சாய்ந்த கேக் :) கால்பந்து விளையாடும் தேனீ


இன்றைய பதிவில் ஆல்பர்ட் தாத்தா ,டிம் பிராட்பரி ,நாடியா செய்த சாய்ந்த கேக் :) கால்பந்து விளையாடும் தேனீ 

இது எங்க வீட்டு மலர் :)

நான் பெரும்பாலும் படங்கள் பார்ப்பதில்லை ..ஆனால் குறிப்பிட்ட கதா பாத்திரங்கள் பற்றி  சர்ச்சை அல்லது பாராட்டு ஏதேனும் கிளம்பினால் .. உடனே படத்தை பார்த்து விடுவேன் அப்படி பார்த்தது மெட்ராஸ் படம் அதில் வரும் ஜானி காரக்டருக்காக .
அதே போல ஒரு தாத்தா ஆங்கிலோ இந்தியர் எங்க ஏரியாவில் இருந்தார்   எல்லார் வீட்டிலும் அவருக்கு சாப்பாடு கொடுப்பாங்க தான் சாப்பிட்டது போக மிச்சத்தை பிறருக்கு கொடுப்பார் ..எங்க வீட்டு கொய்யா மரத்தில் இருந்து விழும் பழங்களை  பொறுக்கி செல்வார் நாங்களும் நினைப்போம் அவர்தான் சாப்பிடறாருன்னு ..ஒரு நாள் எங்க தெரு  பிள்ளைங்க கைகளில் இவர் ஒவ்வொரு பழத்தை கொடுப்பதை பார்த்தேன் :) ..அம்மாகிட்ட சொல்லியிருக்கார் ஸ்வீட் வாங்க பணமில்லை அதனால் தெருக்குழந்தைகளுக்கு பழங்களை ஸ்வீட் மாதிரி விநியோகிச்சிருக்கார் .  இந்த மெட்ராஸ்  படம் பாத்ததும் அவர் நினைவு வந்தது தங்கச்சிக்கு போன் போட்டு விசாரிச்சேன் ஆல்பர்ட் அங்கிள் எப்படி இருக்கார்னு ..அவ சொன்னா  ரொம்ப முதுமையடைந்ததால் ஆங்கிலோ இந்தியர் கம்யூனிட்டி சேவை செய்வோர் அவரை ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்த்து விட்டார்களாம் .மாதம் ஒருமுறை அங்குள்ள ஒருவருடன் வந்து தெருக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குகிறாராம் !
========================================================================
டிம் ப்ராட்பரி 
==============
இது யூ டியூப்பில் சமீபத்தில்  மிக அதிகமாக பார்க்கப்பட்ட  காணொளி :)
எங்க நாட்டுக்காரர் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர்   ..மிமிக்ரி செய்து போனில் கலாய்ப்பது இவர் வழக்கம் :)
அப்படி மூன்று வயது சிறுவன் குரலில் ஸ்கூலுக்கு போன் செய்த வீடியோ 


                                       


அடுத்த காணொளி இவர் டென்டல் ப்ராக்டிசுக்கு போன் செய்து டூத் fairy தனது பல்லுக்கு பணம் தரலை என்று கம்ப்ளெயின் செய்யும் காமெடி காணொளி :)


                                         

நாடியாவும் மகாராணியும் 
நாடியா 
========
இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் இங்கே லண்டனில் வசிக்கிறார் Great British Bake Off champion பட்டத்தை வென்றவர் .பிரிட்டிஷ்
மகாராணியின் பிறந்தநாளுக்கு கேக் செய்த பெருமைக்குரியவர் ..ஆனால் கொஞ்சம் டென்ஷானாகிட்டார் போல கேக் செய்யும்போது ஸ்பிரிட் லெவல் பயன்படுத்தாததால் கேக் சாய்ந்து இருப்பது போல வந்துவிட்டது ..எல்லாரும் முகப்புத்தகம் மற்றும்  எல்லா மீடியாவில் இவரை வறுத்து எடுத்துவிட்டனர் ..ஆனாலும் பங்களாதேஷ் சிங்கம் எதற்கும் அசையலை :) //“If I cared about what people said, I would never leave my house,” //என்று சொல்லி    க்ரோனிக்கல்ஸ் of நாடியா என்ற புதிய  நிகழ்ச்சி ஒன்றினை உடனடியாக தொலைக்காட்சியில் துவங்கினார் ..அஞ்சா பெண் சிங்கம் :)

-------------------------------------------------------------------------------------------------------------------------
இதோ இவர்களும் டேவிட் பெக்காமுக்கு போட்டியா கால்பந்து விளையாட போறாங்களாம் :)

                                                                        

                                                                                  
                                       


மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..


39 comments:

 1. முதல் இரண்டு வீடியோ மிக அட்டகாசம் பார்த்து பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்தேன். இன்றைய நாள் மிக சிரிப்புடன் இருக்க செய்தற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நேற்றைய நாள் எப்பூடிக் கழிந்ததென சொல்லவே இல்ல:)

   Delete
  2. கடவுளின் ஆசிர்வாதத்தால் நேற்று இன்று நாளை என்ற அனைத்து நாட்களும் இதுவரை மாமியோடு சந்தோஷமாகவே கழிகின்றது அதுமட்டுமல்ல்லால் உங்களை போன்றவ்ர்களாலும் கிண்டலும் கேலியாகவும் சந்தோஷமாகவே இருக்கின்றது

   Delete
  3. "Avargal unmaigal ..வருகைக்கும் :) காணொளிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி :)
   இந்த டிம் பேசறமாதிரிதான் நிஜம்மாவே நிறைய குட்டீஸ் போனை போட்டு கலாட்டா பண்ணுங்க :)

   Delete
 2. அனைத்துத்தகவல்களும் படங்களும் அருமை. காணொளிகள் ஏனோ இப்போது என்னால் காண முடியாமல் உள்ளன. பிறகு எப்போதாவது ஓபன் ஆனால் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா ...கட்டாயம் பாருங்க ..நீங்க ரசிப்பீங்க அந்த காணொளிகளை

   Delete
 3. // இது எங்க வீட்டு மலர் :) //

  யாரோ கையில் பிடித்துள்ள அவைகள் மிகவும் அழகோ அழகாக உள்ளன. :)

  ReplyDelete
 4. உங்க வீட்டு மலர் அடுக்குரோஜா அழகு.

  மெட்றாஸ் கேரக்டர் பற்றித் தெரியாது. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதைப் படிக்கும்போது 'உன்னால் முடியும் தம்பி' மரம் வளர்க்கும் தாத்தாவும்,'அக்கம் பக்கம் பாரடா சின்னராசா' பாடலும் நினைவுக்கு வருகின்றன.

  நல்ல மனங்கள் வாழ்க.


  பிராட்பரி சுவாரஸ்யமான மனிதர்தான்.

  //எங்க நாட்டுக்காரர்// நீங்க எந்த நாடு?!!!


  நாடியாவின் மனவுறுதி வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. Good question:)... I am waiting for the answer:).

   Delete
  2. @ ஸ்ரீராம் :) நான் இப்போ வசிக்கும் நாடு எங்க நாடு இங்கிலாந்து :)
   அது போன வருஷம் வந்த படம் ரத்தம் கொஞ்சம் அதிகம் நான் fwd பண்ணிட்டே சில சீன்ஸ் மட்டும் பார்த்தேன் அந்த ஜானி காரக்டருக்காக ..சிலர் மனதை விட்டு அகலமாட்டாங்க அந்த மாதிரிதான் இந்த தாத்தாவும்
   நாடியா இடத்தில் நானிருந்தா அதோட கேக் செய்யவே மாட்டேன் :)
   தைரியசாலிப்பெண் விமரிசனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் அவரிடம் நிறைய உள்ளது

   Delete
  3. ஹலோ நாலுகால் ஒரு வால் குண்டு பூனை ..ரிப்லை தந்தாச்சு

   Delete
  4. நோஓஒ பிஸ்ஸூ .. எனக்கொரு டவுட்டூ.. அப்போ நீங்க பிறந்தது இங்கிலாந்திலயா?:).. இதையும் கொஞ்சம் கிளியர் பிளீஸ்ஸ்ஸ்:).

   ///நாடியா இடத்தில் நானிருந்தா அதோட கேக் செய்யவே மாட்டேன் :)///
   கேக் செய்ய தெரியாது எனச் சொல்லாமல் இப்பூடி ஒரு பில்டப்பூஊஊ ஹையோ ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

   Delete
 5. ஆஹா இந்த ஸ்பீக்கர் இப்போதானே பட்டுது, மஞ்சள் பூ யாருக்கு மகிக்கா?:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) அது லேட் நைட் பப்லிஷ் செஞ்சேன் ..மஞ்சள் பூ உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க

   Delete
  2. நோஓஓஓஓஓ நேக்குப் பிங் கலரிலதான் வேணும்:).

   Delete
  3. //மஞ்சள் பூ உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க// Grrrrrrr!!
   //நோஓஓஓஓஓ நேக்குப் பிங் கலரிலதான் வேணும்:).// Good gal!! :D

   Beautiful Rose and nice post!!

   Delete
 6. மெட்றாஸ் தாத்தா ரொம்ப நல்லவர், இப்படியானோரை யாராலும் மறக்க முடியாது, ஏன் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லயோ?

  ReplyDelete
  Replies
  1. இல்லை அதிரா ..அப்பா அம்மா அவர் பதின்மத்தில் இருக்கும்போதே இறந்துட்டாங்களாம் எல்லார் வீட்டிலும் எடுபிடி வேலை செய்வார் ..கல்யாணமும் ஆகலை பாவம் தனியாள்

   Delete
 7. வீடியோக்கள் ஆர் ஜே பாலாஜியை நினைக்க வைக்குது... டுத் பெயரி ஹா ஹா எங்கள் பிள்ளைகள் இருவரும் பல்லு விழுந்த அடுத்தநாள், பில்லோவுக்கு கீழே தேடித் தேடி பணம் சேர்த்து எடுத்த நினைவுகள் வருது.

  ReplyDelete
  Replies
  1. செம காமெடி இல்ல :) 3 நியர்லி 6 னு சொல்லியே சிரிக்க வச்சார் :)
   நான் பணம் வைக்க பதிலா toys வச்சேன் முதல் 6 பல்லுக்கு அப்புறம் டூத் பெயரி ரொம்பகிட்ஸ் இருக்காங்கன்னு சொல்லி ஒன் பவுண்ட் காயினுக்கு மாறினாங்க :)

   Delete
 8. நானும்தான் நாடியா ஆன்ரியுடன் சண்டை போட்டேன், அம்மம்மாவின் கேக்கை இப்படி சரிச்சமைக்காக:), இதைவிட அழகான கேக் நான் செய்திருப்பேன் என எண்ண தோணுது....

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் நானும் நினைச்சேன் ஒரு மகா ராணியின் பெர்த்டே கேக்கை இவ்ளோ கேவலமா யாரும் செய்திருக்க மாட்டாங்க ..

   நெஸ்ட் இயர் உங்க பேரை நாமினேட் செய்றேன் dont worry :)

   Delete
  2. அதுக்கு முதல்ல குயின் அம்மம்மா உயிரோடு இருக்கோணும் என ப்பிரே பண்ணுங்கோ:)

   Delete
 9. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ டிடி .

   Delete
 10. காணொளி அருமை, மலர்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி அக்கா .அது எங்க வீட்டு மலர் இப்போ செடி துளிர்க்குது மீண்டும்

   Delete
 11. அதிரா ப்ளாக்ல கமெண்ட் போடலாம்னு ஓபன் செய்தா கமெண்ட் செக்‌ஷன் ஓபன் ஆகவே மாட்டுது...!! ?!! அதிரா, வாட் ஹேப்பண்ட் ?! எனக்கு லேப்டாப் கையில் கிடைச்சு, கமெண்ட் போட டைமும் கிடைச்சா மியாவ் ப்ளாக் இப்பூடி பண்ணுதே!!! அவ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
  Replies
  1. அநேகமா பூனை டாஷ் போர்டை உருட்டிட்டிருந்த நேரம் நீங்க கமெண்ட் போட முயற்சித்திருப்பீங்க அதான் இன்டெரப்ஷன் :)

   Delete
  2. ஆவ்வ்வ்வ் மஞ்சள் பூஊஊஊஊ... நோஓஓஓஓஒ ஆரோ செய்வினை வச்சிட்டினம்ம்ம்ம்:)).. அதுதான் இப்பூடி ஆகியிருக்கு.. நோஓஓஓ விட மாட்டேன்ன்ன்ன்... இப்பவே போறேன்ன்ன்ன்.. செய்வினைக்கே செய்வினை செய்ய:))).. ட்ரை அகயின் மகி:).

   Delete
 12. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 13. வீடியோ பாக்காமல் வாசிச்சதால எதுவுமே புரியவே இல்ல.வழக்கம் போல மறுபடியும் வரும்போது கொஞ்சம் கொஞ்சமா வீடியோ பாப்போம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஜினி ..வீடியோ தனி எழுதியிருப்பது வேற .கட்டாயம் நேரமிருக்கும்போது அந்த வீடியோஸ் பாருங்க :) நிச்சயம் ரசிப்பிங்க

   Delete
 14. bees வீடியோ சூப்பர்! ரொம்பவே ரசித்தோம்!!

  ReplyDelete
 15. ரோஜா ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சல் சகோ/ஏஞ்சல்

  அந்தத் தாத்தா ஸோ ஸ்வீட்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ..வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி ...ஆம் அந்த தாத்தா ரொம்ப நல்ல sweet தாத்தா

   Delete