அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/13/17

Loud speaker ..43 ...முகநூல் பகிர்வுகள் ..



இன்றைய ஒலிபெருக்கியில் ஜோஹன்னா ,Lätare-Fest ஜெர்மனியின் ஸ்ப்ரிங் சீசன் வரவேற்கும் கொண்டாட்டம் ,மற்றும் A Legend Of St .Egwin 

ஜோஹன்னா 
--------------------------






அன்றாடம் பலரை சந்தித்தாலும் நன்கு பழகியிருந்தாலும் மனதில் சட்டம் போட்டு அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணி விடலாம் .2013 இல் எங்கள் ஆலயத்துக்கு  ஆயராக பொறுப்பெடுத்துக்கொண்டவர் ஜோஹான்னா .(Johanna )...எங்களுடையது ஆங்கிலிகன் ஆலயம் .

ஜோஹான்னா பொறுப்பெடுத்ததுமுதல் மிகவும் சிறப்பாக மாறியது எங்க ஆலயம் ..அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் என்னை அழைத்து பல முக்கிய பொறுப்புக்களை கொடுத்தார் ..அதில் இந்த ஆலயத்தின் பழைய 40 வருட இந்திய வம்சாவளி அங்கத்தினர்களுக்கு கொஞ்சம் வருத்தமே :) ஒவ்வொரு சனிக்கிழமையும் இலவச உணவு எங்கள் சர்ச் ஹாலில் வாலன்டியர்களுடன் சேர்ந்து தயாரித்து வழங்குவார் ..அங்கு வருபவர்கள் முன்னாள் இராணுவ வீரர்கள் ,வீடில்லாதோர் ,குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ,போதை மருந்துக்கு அடிமையானோர் என மிகவும் அடித்தட்டு மக்கள் ....அவர்களில் ஒருவர் கூட ஞாயிறு கிழமைகளில் ஆலயம் பக்கம் வரவே வராதோர் ..அவர்களது தேவை அன்பு மட்டுமே என்பார் எங்கள் ஆயர் ..
மேலும் அக்டோபர் மாதம் துவங்கி ஏப்ரல் வரை சர்ச் ஹாலில் இரவு வீடில்லாதோர் தங்குவதற்கு வசதி செய்தவர் ....ஏனென்றால் அது குளிர்க்காலம் கடும் பனியிலும் குளிரிலும் எத்தனையோ பேர் மரித்து போகும் சாத்தியமுண்டு ..ஒரு ஜீவனும் இருப்பிடமில்லாமல் தவிக்க கூடாது என்பார் ..அவருக்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே ..சமீபத்தில்  வார இறுதி கஃபேக்கு வரும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாராம் ..இவர் விடுமுறையில் சென்றபோது தனிமை வாட்டியதால் ஒருவருமே பேச துணையில்லாததால் அதிக drugs எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் .அதை கேள்விப்பட்டதுமுதல் மிகவும் நொறுங்கிவிட்டார் இவர் ..இனி தன்னால் இயன்ற உதவிகளை இப்படி யாருமிலாதோருக்கும் போதை பழக்கத்தால் வாழ்க்கையின் விளிம்புக்கு சென்றவர்களுக்கு செய்யவேண்டும் என்பதற்காக வேலைய ரிசைன் செய்து விட்டு வேறொரு இடத்திற்கு சென்று விட்டார் .
ஒருமுறை இந்த பாவ புண்ணியம் பற்றி எனக்கொரு சந்தேகம் வந்தது ..நம்ம கண்ணுமுன்னாடியே வெறுப்பு பொறாமை திருட்டுத்தனம் மற்றும் இன்னபிற சொல்ல முடியாத அழுக்குகளுடன் பலர் திரிகின்றாரகளே ஆனாலும் அவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரே கிடைக்கிறது ஆனால் எப்பவும் நேர்மையா இருக்கிறவங்களுக்கு உண்மையை பேசுவோருக்கு பிரச்சினைகள் அதிகம் வருகிறது எதனால் ..என்று கேட்டேன் ..அதற்கு அவர் சொன்னார் ..கடவுள் தூய மனதை தான் விரும்புகிறார் ..நாம் அவன் தப்பு செய்தாலும்  நல்லா இருக்கானேன்னு நினைக்கும்போது நமக்குள் வெறுப்பு எனும் அழுக்கு இடம் பிடிக்குமாம் அது கடவுளுக்கு பிடிக்காது என்றார் ..அப்புறம் பெற்றோர் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு வரும் என்கிறார்களே அது ஏன் ?குடிகாரன் பிள்ளை திருடன் பிள்ளை அதே குணங்களுடன் பாவத்தை சுமப்பதேன் என்று கேட்டேன் ..அதற்கும் அவர் பதில் இதுவே ..//ஒரு பிள்ளை எதை பார்த்து எந்த சூழலில்  வளறுகிறதோ அந்த குணங்களை ஏற்றுக்கொள்ளும் எங்காவது விதிவிலக்கா ஒரு பிள்ளை தவறு செய்யாமல் தவறான வாழ்வை தேர்ந்தெடுக்காமல் சரியாக வளர்ந்தாலும் ..பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரின் வாழ்க்கையும் முறையும் முக்கிய பங்காற்றுகிறது ..அதனால் அப்பா செய்த கொலை கொள்ளைக்கு பிள்ளைகள்  பொறுப்பாகாது என்றார் ... அன்பான நேர்மையான ஒரு ஆயர் இவரை போல ஒருவரை காண்பது அரிது .வாழ்க்கையில் அவர் விருப்பங்கள் நிறைவேறிட இறைவனை பிரார்த்திக்கிறேன் .
அவருக்கு செய்த quilled பரிசு இது .
(முகப்புத்தகத்தில் பகிர்ந்தது )

========================================================================


Lätare-Fest ..in Germany
==================
ஒரு பழைய நினைவு :)






நம்ம நாட்டில் போகி கொண்டாட பழைய குப்பைங்களை எரிக்கிற மாதிரி இது வின்டருக்கு bye bye சொல்லும் ஒரு குட்டி திருவிழா .
ஒரு கூம்பு வடிவ ரெண்டாள் உயர வைக்கோல் போரை நகரின் மையத்தில் கட்டி வைத்து மார்ச் மாதம் சம்மர் துவங்கும் ஞாயிறன்று எரிப்பார்கள் .இதில் கிண்டர் கார்டன் சிறார் சிறுமியர் ...தாங்களே கிண்டர் கார்டனில்  செய்த கிலுகிலுப்பை  முயல் மற்றும் daffodil பூ வடிவ பொம்மைங்களை எடுத்துக்கொண்டுஊர்வலம் செல்வார்கள் .வின்டர் முடிந்ததும் முயலும் daffodil  மலர்களும் வெளிவரும் ..பிள்ளைகளுடன் அந்த ஏரியாவை ஒரு சுற்று முடிந்து எரிக்கும் இடம் வருமுன் பாதி வழியில் அந்த பகுதி முதலமைச்சர் அனைவருக்கும் brezel/pretzel தருவார்  பிறகு அந்த வைக்கோல் போரை கொளுத்துவார் :) pretzel  சாப்பிட்டுக்கொண்டே  வைக்கோல் எரிவதை வேடிக்கை பார்ப்போம் :)


A Legend Of St .Egwin 
====================


                                                                                 



இந்த கோயில்களை படமெடுக்கும்போது தரையில் படுத்து எடுக்கணும் போல :) கோபுரம் காமெராவில் பிடிக்க முடில :)693 ஆண்டில் நடந்த சம்பவம்
Evesham என்றொரு பகுதியின் கத்தோலிக்க பிஷப் அவர் பெயர் egwin 
எல்லா நல்லவங்களுக்கும் எதிரிங்க இருப்பாங்க அதுமாதிரி இவர் மேலயும் நிறைய பேர் தேடித்தேடி பற்பல  குற்றம் சுமத்தியிருக்காங்க .காரணம் திருமணம் பற்றிய  இவரது மிக கடுமையான கருத்துக்கள் மற்றும் கொள்கைகள்   மக்களுக்கு பிடிக்கலை அதனால் கத்தோலிக்க சபையின் தல போப் கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுத்திட்டாங்க .தான் நிரபராதின்னு நிரூபிக்க போப் கிட்ட நேரடியாக சொல்ல ரோம் சென்றார் .போகுமுன் குற்றமற்றவர்ன்னு நிரூபணம் ஆகும் வரை கழட்ட மாட்டேன்னு சபதமிட்டு தனது காலில் இரும்பு காப்பு போட்டு அதில் பூட்டி 
சாவிய ஆற்றில் எறிஞ்சாராம் .அந்த ஆறு சர்ச்சின் பின்பக்கம் ஓடுது ..River Avon 


.ரோம் போய் சேர்ந்ததும் இவர் போப்பை பார்க்கும் நேரத்தில் சாப்பாடு செய்ய மீன் வாங்கி வந்திருக்கார் இவர் வேலையாள் அந்த மீனின் வயிற்றில் இந்த இரும்பு காப்பின் சாவி இருந்திருக்கு..இங்கிலாந்து ஆற்றில் எறியப்பட்ட சாவி பிரான்ஸ்  மீனின் வயிற்றில் இருந்ததை  கேள்விப்பட்ட போப் பிஷப் மேலிருந்த குற்றசாட்டுகளை தள்ளுபடி செய்தாராம் .. அந்த நிகழ்வின்நினைவா ஒரு இரும்பு மீன் வாயில் சாவியுடன் மாடலா நிற்கிறது..evesham நகரில் .

                                                                                   
அந்த ஏரியாவுக்கு சம்மர் நேரம் போனோம் இந்த இரும்பு மீன் உருவம் அங்கிருந்து படத்தையும் செய்தியையும் சுட்டு கொண்டு வந்தேன் :)

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ..



27 comments:

  1. /// அந்த மீனின் வயிற்றில் இந்த இரும்பு காப்பின் சாவி ///

    அறியாத புதிய தகவல் சகோதரி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ டிடி

      Delete
  2. ஹலோ சகோ பதிவை பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பாக வைத்து வெளியிடவும் அப்படி செய்தால் நிச்சயம் பல பேர் வந்து படிப்பார்கள். பலரும் படிக்கவும் நமது எண்ணத்தையும் வெளிப்படுத்தவும் நமது பொழுது போக்கிற்காகவும் தனே எழுதுகிறோம் அதனால் நான் சொன்னபடி செய்தால் இந்த பதிவுகள் நிறைய பேரை சென்று அடையும்

    ReplyDelete
    Replies
    1. சரி அப்படியே செய்றேன் ..இன்னிக்கு என் உள்ளுணர்வு அதைத்தான் சொல்லுச்சிங்க :) ஒரே ஒரு topic போடறதுக்கு ..அதையே நீங்களும் சொல்லிட்டீங்க ..இனிமே ஒரு தலைப்பு ஒரு செய்திதான் :)

      Delete
  3. அன்பான நேர்மையான ஆயர் அவர்களுக்கு தாங்கள் செய்த quilled பரிசு சூப்பர் !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு அண்ணா .வருகைக்கும் பரிசை ரசித்ததற்கும் மிக்க நன்றி

      Delete
  4. நம்ம நாட்டில் போகி கொண்டாட பழைய குப்பைங்களை எரிக்கிற மாதிரி, ஜெர்மனியில் வின்டருக்கு bye bye சொல்லும் ஒரு குட்டித் திருவிழா செய்திகளும் படங்களும் அருமை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அந்த போகிமாதிரி புகை மூட்டமிராது ,,ஒரே ஒரு ஆளுயர வைக்கப்போர் மட்டுமே முழு நகரத்துக்கும் கொளுத்தப்படும்

      Delete
  5. இங்கிலாந்து ஆற்றில் எறியப்பட்ட சாவி பிரான்ஸ் மீனின் வயிற்றில் இருந்ததைப் படிக்க நமக்கே ஆச்சர்யமாக உள்ளது.

    அதில் காட்டியுள்ள ஐந்து படங்களும் ஜோர் ஜோர் .... அதுவும் அந்த வாத்துகள் நீந்தும் படம் மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா நிறைய விஷயங்கள் இப்படி இங்கே சொல்வார்கள் அதற்கு சாட்சியாக சில படங்கள் சிலைகள் உருவங்களும் உண்டு
      இது மிக பழமைவாய்ந்த ஆலயம் .
      வாத்துக்களும் அன்னங்களும் மிக ஜோரா நீந்திக்கொண்டிருந்தாங்க அது சம்மர் நேரமாதலால்

      Delete
  6. //இந்த கோயில்களை படமெடுக்கும்போது தரையில் படுத்து எடுக்கணும் போல :) கோபுரம் காமெராவில் பிடிக்க முடில :) //

    அதிரா ..... ஓடியாங்கோ. உங்கள் அஞ்சு ஏதேதோ சொல்றாங்கோ !

    தரையில் படுத்தது உண்மையோ? :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா :) இல்லை அண்ணா படுத்து எடுத்திருந்தா ஒருவேளை உச்சி கோபுரம் தெரிந்திருக்கும் ..எனக்கு இன்னும் படமெடுக்க அவ்ளோ சரியா பழகவில்லை

      Delete
    2. itho vanthudden gopu annan.... enkeeeeeeeeeeeeeeee????

      http://www.ringophone.com/HDanimWP/Shooting%20Cat-41150.gif

      Delete
    3. //athira February 14, 2017 at 11:15 AM

      itho vanthudden gopu annan.... enkeeeeeeeeeeeeeeee????

      http://www.ringophone.com/HDanimWP/Shooting%20Cat-41150.gif//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... Shooting Cat பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. :)

      பொதுவாக ஷூட் செய்தால் எதிராளி டக்குன்னு படுத்துடுவாங்கோ எனக் கேள்விப்பட்டுள்ளேன். நல்ல ஐடியா ..... அதிரா :)

      Delete
  7. எனக்கும் 'தப்பு செய்கிறவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?' என்கிற எண்ணம் அவ்வ்ப்ப்து அவ்வப்போது தோன்றும்!

    பெற்றவர்கள் பட்ட கடனுக்கு பிள்ளைகள் பொறுப்பு என்பது போல இதையும் சேர்த்துவிட்டார்கள் போல!

    வின்டருக்கு பை சொல்லும் திருவிழா வித்தியாசமாக, எளிமையாக இருக்கிறது.

    மீன்-சாவி கதை ஆச்சர்யம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ஸ்ரீராம் ..இங்கே பல இடங்கள் ஒவ்வொன்றும் பல விஷயங்களை சேமித்தவாறு இருக்கும் .எல்லாவற்றுக்கும் ஒரு செய்தியை வைத்திருப்பாங்க .நான் போகிற இடத்தில இப்படிப்பட்ட செய்திகளை தேடி எடுத்துக்குவேன் ..விண்டருக்கு பை சொல்லும் விழா நாங்க மகளின் கிண்டர் கார்ட்டனில் பார்ட்டிசிபேட் செய்தப்போ எடுத்த படம் முதல் படம் இன்னும் நிறைய படங்கள் வைக்க இடமில்லாம loft ல பெட்டியில் வைச்சிருக்கோம் ..
      ஆனா இன்னிக்கு அந்த தப்பு தண்டனை விஷயத்தில் ஒரு சந்தோசம் ஏற்பட்டதென்னவோ உண்மை /:)

      Delete
  8. அழகான குயில்கார்ட்...

    வெளிநாட்டில் தனிமைதான் வெள்ளையர்களை மன நோய்க்கும், தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாக்குது.

    ReplyDelete
    Replies
    1. நம்ம மனசை சந்தோஷமா வச்சுக்கணும் நீங்க அடிக்கடி சொல்லும் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் மாதிரி

      Delete
  9. /////ஒரு பிள்ளை எதை பார்த்து எந்த சூழலில் வளறுகிறதோ //

    றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோஓஓஓஓஒ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஉ:)

    ReplyDelete
  10. ஜேர்மனி போகி பண்டிகை:) நல்லாத்தான் இருக்கு, ஆனா சூழல் மாசடையுமே????, பிரித்தானியா, யூரோப் எண்டாலே இப்படியான பழைமை வாய்ந்த சேர்ஜ் களுக்கு அளவே இல்லை.. இங்கு நம்மிடத்தில் ஆவிகளும் இருக்கின்றனவாமே.. இப்பவும் பத்திரமா கட்டிக் காக்கினம்.. There is a grey lady inside plese do not disturb her. என வசனமெல்லாம் எழுதிப் போட்டிர்ருக்கு ஒரு இடத்தில்.. நாங்க போய்ப் பார்த்தமே... லேடியை அல்ல:) வசனத்தை:)..

    ReplyDelete
    Replies
    1. இல்லை அதிரா புகையே வராது உடனே சுத்தம் செஞ்சிடுவாங்க .நெருப்பும் பறக்காது ..என்னாது ஆவியா !! ஹாஹா
      இந்த ஊர் ஆவிங்க ட்ரபிள் தராத நல்லாவிங்க :)
      எந்த இடம் எந்த சர்ச் க்ரே லேடி விளக்கமா பதிவு போடுங்க

      Delete
  11. நல்ல ஆயருக்கு உங்கள் பரிசு அழகு!!! வெகு அழகு!

    ஹஹ் ஆமாம் உயரமானவற்றை எடுக்க கேமராவைக் கீழே சரிவாக வைத்து நாமும் வியூ பைண்டரைப் பார்ப்பது போலும் எடுக்கலாம்...ஆனால் அடிப்பகுதி வராது (கீதா: நான் அப்படி எடுத்த ஒரு படம் தான் ஒன்று தென்னை மரங்களின் தலைகள் இடையே வானம் தெரிவது போன்ற ஒன்று எனது மூன்றாவது விழியின் பார்வையில்...) எனவே படுத்து நல்ல ஸ்க்ரீன் ஃப்ரேம் அதற்கு ஏற்றாற் போல் வைத்து எடுப்பார்கள். உங்கள் படம் அழகு! அழகாகத்தான் எடுத்திருக்கிறீர்கள்..

    ஜெர்மனி வின்டர் தகவல் போகி போன்ற ஒரு நிகழ்வு பற்றிய செய்தி அருமை. ஸோ எல்லா ஊருலயும் ஏதோ ஒரு நிகழ்வு இப்படி ஒன்னு நடக்குது. அந்தந்த ஊர் கல்சர் படி...

    ஆம்! நல்லவர்களுக்கு எப்போதுமே எதிரிகள், அவர்களைப் பழி சொல்ல ஒரு கூட்டம் என்று எக்காலக்கட்டத்திலும் இருக்கும் போல!!! வாத்துகள் படம் அழகு!!! அனைத்துச் செய்திகளும் அருமை!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ..அந்த quilling முழுதும் நடுவில் உள்ள வசனம் தவிர சாதா பேப்பரை வெட்டி செய்தது .
      words செய்வதற்கு மட்டுமே ஒரிஜினல் குவில்லிங் காகிதம் யூஸ் பண்ணேன் ,
      ஆமாமா இந்த படங்கள் எடுக்கும்போது ஒன்னு வெயில் வந்து மறைச்சிடும் நிறைய படங்கள் இருக்கு அன்னிக்கு எடுத்தது வேறொரு நாள் தனி பதிவா படங்கள் மட்டும் போஸ்ட் செய்றேன் .
      எஸ் அந்த எரிக்கும் விழா கிண்டர் கார்ட்டனில் செய்வோம் .வீடியோ கூட இருக்கு வீடியோ காமிராவில் இருந்து எடுக்கணும் 2004 இல் எடுத்தது அப்போல்லாம் மொபைல் காமிரா இல்லையே ..
      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

      Delete
  12. Happy Athira's day:) Anju..
    https://animals.desktopnexus.com/wallpaper/1226736/

    ReplyDelete
    Replies
    1. garrr your day is on the 8 th of august ,,international cats day

      Delete
  13. ஆஸ் யூஸ்வல் மிக அழகான கார்ட் அஞ்சு. நீங்க செய்தா சொல்லவேணுமா. அறிந்திராத தகவல்கள். குற்றமற்றவர்களை தெய்வம் கைவிடாது அதுதான் பிஷப் விடயத்திலும் நடந்திருக்கு.
    படங்கள் எல்லாமே அழகு.

    ReplyDelete