அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/23/17

குழந்தை மனசு ..Joy

குழந்தை மனசு ..Joy 
=====================
லூயிஸ் 
========
எங்க ஆலயத்தின் பாடகர் குழு மாஸ்டரின் மகன் ..தந்தை வெஸ்ட் இண்டீஸ் தாய் பிரித்தானியர் இவர்களுக்கு பிறந்த 5 வது மகன் ..இவனுக்கு இப்போ 5 வயது ..நல்ல கொழுக் மொழுக் பாப்பா ..
இயல்பாகவே இந்த வயது குழந்தைகளின் குறும்பு மும்மடங்கு அதிகமாக இருக்கும் இவனிடம் :) ஆலயத்தில் சர்வீஸ் sermon நடக்கும்போது ஓடுவதும் விளையாடுவதும் குதித்து செல்வதுமாக இருப்பான் ..அதனால் ஆலயத்துக்கு வரும் பெரும்பான்மை தாத்தா பாட்டிகளுக்கு இவனை அறவே பிடிக்காது ..எந்நேரமும் ..கீப் கொயட் ,நோ டிஸிப்ளின் அட் ஆல்  என்று அவனை திட்டிக்கொண்டே இருப்பார்கள் ..எனக்கு பாவமாக இருக்கும் ..அதற்கு முன் ஒரு விஷயம் சொல்லிடணும் இந்த ஊர் பிள்ளைங்களை அடக்குவதென்பது மிக கடினம் ..எந்த நாட்டிலும் நான் பார்க்காத ஒன்றை இங்கே இங்கிலாந் தில் மட்டுமே பார்க்கிறேன் அது child leash போட்டு குழந்தைகளை நடத்தி கூட்டிப்போவாங்க .

எங்க வீட்ல ஊர்ல நாய் தான் அப்படி கூட்டிப்போயிருக்கோம் .. எனக்கு மிக பாவமா இருக்கும் பிள்ளைகளை பார்க்கும்போது ..அப்படிதான் 2 வயது வரை லூயிஸும் வந்தான் ஆலயத்துக்கு ..கிருஷ்ணரை உரலில் கட்டி வச்ச மாதிரி லீஷின் மறுமுனை அம்மா அப்பா கையில் இருக்கும் ..கொஞ்சம் தூரம் நகரும்போது இழுப்பாங்க மேலும் நகராதபடிக்கு ..
..மூன்று வயதுக்குப்பின் லூயிஸின் லீஷ் காணாமற்போனது :)
அதனால் பட்டாம்பூச்சி மாதிரி துள்ளி குதிச்சி ஓடுவான் எங்கும் ..
வெள்ளிக்கிழமைகளில் பாட்டு  பிராக்டிஸ் சமயம் ரொம்ப சத்தம் போடுவான் அவங்கப்பா திட்டினா எதிர்த்து பேசுவான் உரக்க கத்துவான் ..எனக்கு பாவமாக இருக்கும் ..சரி அவனை அமைதியா வைக்க ஏதாச்சும் செய்வோம்னு தெரியாம ஒரு விஷயம் செஞ்சுட்டேன் ..அது ஒரு ஸ்னோ மான் Olaf  காரக்டரை காகிதத்தில் வரைந்தேன் ..அவ்வளவுதான் அப்படியே நேரே என் பக்கம் வந்து விட்டான் :)வாராவாரம் எனக்கு காகிதத்தில் எழுதி தருவான் சில கார்ட்டூன் காரெக்டர்ஸை அவற்றை நான் பென்சிலால் வரைய வேண்டுமாம் .

ஒரு முறை அவன் அப்பாவின் மிக முக்கியமான மியூசிக் நோட் ஷீட்ஸ் அள்ளிக்கிட்டு வந்துட்டான் அவன் அப்பா  அலறி ஓடி வந்தார் ஏஞ்சலின்  முக்கியமான நோட்ஸ் காணவில்லை லூயிஸ் எடுத்து வந்தானா   படம் வரைய என கேட்டார் ...இப்படி மை லிட்டில் போனி ,சின்ட்ரெல்லா ,ஸ்னோ ஒயிட் அப்புறம் frozen காரக்ட்டர்ஸ் பார்பி காரக்டர்ஸ் என பெரிய லிஸ்ட் ஹோம் ஒர்க்காக  வரும் ....நானும் மறவாமல் வரைந்து எடுத்து செல்வேன் அவனுக்கு..இப்போ ரொம்ப நெருக்கமாகிட்டான் லூயிஸ் என்னுடன் ..பார்த்தவுடன் ஓடி வந்து மடியில் அமர்வான் ..கேள்வி கணைகள் தொடரும் :) பச்சக்குன்னு எச்சில் பதிய முத்தம் தருவான் :)

உனக்கு திருமணமாகிவிட்டதா ?உன்னருகில் அமர்கிறார் அவர் உனது boy friend ஆ .நான் இல்லை கணவர் என்றேன் ..உடனே கேட்பான் அப்போ எங்கே உனது மோதிரம் ?நான் சொல்வேன் வீட்டில் பத்திரமா வைத்துள்ளேன் என ..
உனது காதில் கம்மல் எப்படி வந்தது .இந்தியர்கள் சல்வார் மட்டுமே அணிகிறாரகள் நீ மட்டுமேன் ஜீன்ஸ் அணிகிறாய் !!
தலைமுடியை எதற்கு போனி டெய்லாக கட்டுகிறாய் ? நீ இன்டியன் என்றால் உனக்கேன் பஞ்சாபி தெரியலை ..உன் மேல் இந்தியன் வாசனை இல்லை ?? (இந்தியர்கள் கோட்/ஜாக்கெட்  குழம்பு வாசனையுடன் வலம்  வருவார் இங்கே) 
ஸப்ப்பா :) எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பிள்ளைங்க ..:)

பிறகு திடீரென உன் பெயர் joy என மாற்றியாச்சு இனிமே உன்னை ஜாய் என்றுதான் அழைப்போம் அத்துடன் உன் செர் நேம் குடும்பப்பெயரும் தாம்சன் இனிமே நீ எங்க வீட்டுக்கே வந்துடலாம் நீயும் என்னை மாதிரி தாம்சன் குடும்பத்தை சேர்ந்தவள் என்று அன்றுமுதல் என் பேரையே மாற்றிட்டான்... .என்னை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதும் சந்தோஷத்தில் கத்துவதும் இந்த ஆலயத்துக்கு வரும்  வயதானோருக்கு பிடிக்காது :)இப்போதெல்லாம் என்னையும் சேர்த்தே முறைக்கிறார்கள் :)) ஹாஹா ..
ஜாய் என்று பெயர் மாற்ற காரணம் என்னை காணும்போது அவனுக்கு சந்தோஷமாக இருக்கிறதாம் அதனால் ஜாய் என்று பெயர் மாற்றினானாம் ..
போன வாரம் அவனது அட்டகாசம் தாங்க முடியாம கொயர் பிராக்டிஸ்   நேரம் அவனது அப்பா அடித்து விட்டார் ..சில நிமிடம் தனியே உக்காந்து அழுது கொண்டிருந்தான் பிறகு நேரே வந்து என்னை அணைத்து துக்கத்தை இளைப்பாறி இறக்கி வைத்து  விட்டு சென்றான் ..ஆச்சர்யம் என்னவென்றால் அங்கே அவனது அக்கா அத்தை மற்ற கசின்ஸ் அனைவரும் இருந்தும் அக்குழந்தை என்னை தேடி வந்து அன்பாய் அணைத்தது ..அதுதான் குழந்தை மனசு ....குழந்தைகளாகவே இருப்பது நல்லது அல்லது நாமும் குழந்தைகளாக மாறிவிடுவதும்  நல்லது ..

மீண்டும் சந்திப்போம் .....59 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ வடை எனக்கே....:)

  ReplyDelete
  Replies
  1. வடை எல்லாம் பழைய fashion ..இந்தாங்க டோனட்ஸ் :)

   Delete
 2. மிக உண்மையான குழந்தை மனசை அழகாகச் சொல்லிட்டீங்க அஞ்சு.. சில நேரங்களில் இப்படித்தான் காரணமே இல்லாமல் சில பெரியவர்களும் சரி குழந்தைகளும் சரி எம்மோடு ஒட்டி விடுகின்றனர்.. முன் ஜென்ம பந்தமாக இருக்குமோ என நினைப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை அதிரா ..குழந்தைகள் மட்டுமில்லை நிறைய pets என்னுடன் ஒட்டிடுவாங்க பெரிய மனுஷங்களும் தான் ..இவன் லூயிஸ் என்கிட்டே இருக்கிறதை பார்த்து புதிதா சர்ச்சுக்கு வந்த ஒரு லேடி கேட்டார் :) இஸ் ஹி யுவர் சன் :))..அந்தளவு என்னோடயே இருப்பான்

   Delete
 3. இங்கு லூயிஸ் மிக நல்ல சுட்டியாக இருக்கிறார்... நல்ல முறையில் பெற்றோர் வழிநடத்தினால் நிட்சயம் நல்ல ஒரு இடத்திற்கு வந்திடுவார் என்பதில் ஆச்சரியமில்லை.

  உங்களுக்கே, அதுவும் சேர் நேம் கூட மாற்றத் தெரிந்திருக்கிறது எனில் ... றியலி அ கிரேட் சைல்ட்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா :) இந்தக்கால பிள்ளைங்களுக்கு சகலமும் தெரியுதே ..சண்டே மகள் சிக்கா இருந்தா சர்ச்சுக்கு வரலை ..என்னை கேட்கிறான் // why did you லீவ் ஹெர் அலோன் ?ஹௌ கான் ஷி லுக் ஆப்டர் ஹெர் ஸெல்ப் வென் ஷி இஸ் இல் //நான் சொன்னேன் வீட்ல சிஸ்டரின்லா இருக்கார் பார்த்துப்பார்ன்னு ..4 வயசில் எவ்ளோ யோசிக்கிறான் பாருங்க

   Delete
 4. உங்களுக்கும் குழந்தை மனசு என்பதில் மனம் நிறைகிறது சகோதரி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ..உண்மையில் இப்படி சின்ன பிள்ளைகளுடன் பழகும்போது நானும் குழந்தையாகிடறேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோ

   Delete
 5. மனசுக்கு ரொம்ப சந்தோசமாவும், வருத்தமாவும் இருக்கு...

  சந்தோசத்திற்கு காரணம் angeline..எவ்வோளோ அழகா அந்த குழந்தையை மகிழ்விக்கிறீங்க..nice.. ஹாய் ஜாய்...nice name alsoo...

  வருத்தம்...பாவம் அந்த குழந்தை... but அதிரா சொன்ன மாதிரி ரொம்ப அறிவாளி பையன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அனு :) ஜாய் என்று பேரை சூட்டி அதற்கான காரணத்தையும் சொல்றான் :)
   சின்ன பிள்ளைங்களுக்கு தவறு சரி தெரியாது எல்லா இடத்தையும் வீடா நினைச்சி கொஞ்சம் சத்தம்போட்டு விளையாடுவாங்க அது சில வயதானோருக்கு பிடிக்காது ..ஒரு வருஷத்தில் அவன் குறும்புகள் மறையும் :) வளர்ந்தபின் இப்படி குழந்தைத்தனமா இருப்பானோ தெரில

   Delete
 6. குழந்தைகளுக்கு இப்படி பெல்ட் போட்டுக் கூட்டிப் போவதென்பது தப்பாக தெரியவில்லை எனக்கு, ஏனெனில் அது ஒரு சேஃப்ட்டிக்காக மட்டுமே. ரோட்டால் போகும்போது, குழந்தை நடக்கவே ஆசைப்படும்.. வாகனம் நிறைந்த இக்காலத்தில்.. கொஞ்சம் பராக்குப் பார்த்தால் போதும் கையை உதறிட்டு ஓடிடுவார்கள்.. அதிலும் சுட்டி ஆன குழந்தைகள் எனில் சொல்லவே வேண்டாம்...

  அதனால இது ஓகேயாகவே எனக்குப் படும்.

  சில பெற்றோர்.. எப்பவும் ஃபோனில் அலட்டியபடி, சிகரெட் குடித்தபடி.. குழந்தையோடு போவார்கள்.. இப்படியான இடங்களில் குழந்தையை பாதுகாக்க இது உதவும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Yeah its true here in UK. But haven't seen this scene in Germany. .german parents are very responsible. .they wouldn't even give a slight smack

   Delete
 7. குழந்தை மனசு என்ற தலைப்பை பார்த்ததும் ஏதோ என்னை பற்றித்தான் எழுதி இருக்கிறீர் என்று ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டிர்களே ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோஒ நேற்றுக் கு.ரங்குப்பிள்ளையாயிட்டேன் என்றார்.. இன்று லூயிஸ் ஆஆஆஆ?:)... அந்தரம் ஆபத்துக்கு இங்கின ஒரு சுவர் கூடக் கிடைக்குதில்லை என் தலையைக் கொண்டுபோய் முட்ட:)..

   Delete
  2. வாங்க அதிரா ப்ளீஸ் ஒரு கை குடுங்க இல்லன்னா அந்த ஜேசிபி யை ஓட்டிட்டு வாங்க :)ஒரு முக்கியமான வேலை இருக்கு நமக்கு

   Delete
  3. Herr ட்ரூத் இது உங்களுக்கே அதிகமா படல்லியா :) யாருப்பா குழந்தை

   Delete
  4. ஹலோ வயசானால் பெரியவங்களும் குழந்தை மாதிரிதான் உங்களுக்கு இரண்டு பேருக்கும் பாட்டி வயசாகியும் இது கூட தெரியலேன்னு எனக்கு வருத்தமாக இருக்கு

   Delete
  5. ///வயசானால் பெரியவங்களும் குழந்தை மாதிரிதான் உங்களுக்கு இரண்டு பேருக்கும் பாட்டி வயசாகியும் இது கூட தெரியலேன்னு எனக்கு வருத்தமாக இருக்கு// yes yes that's second infancy haa haa

   Delete
  6. தோஓஓஓஒ வாறேன்ன்ன்.. நேரே வண்டலூர் ஷூல கொண்டுபோய் விட்டிட வேண்டியதுதான்:).. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூண்டில மாறி மாறி இருக்க வசதியாக இருக்கும் ட்ருத்துக்கு:)

   Delete
  7. ஏஞ்சலின் அண்ட் அதிரா நோட் திஸ் பாயின்ட் மதுரைத் தமிழன் தாத்தா ஆகிவிட்டார்!!!!! //குழந்தை மனசு என்ற தலைப்பை பார்த்ததும் ஏதோ என்னை பற்றித்தான் எழுதி இருக்கிறீர்// / /ஹலோ வயசானால் பெரியவங்களும் குழந்தை மாதிரிதான் // ரெண்டுமே மதுரையின் கமென்ட்களே!!!ஹிஹிஹிஹி ஸோ ஈக்வேஷன் கரெக்ட்டுதானுங்களே??!!

   கீதா

   Delete
  8. ஹா ஹா :) ஆமாம் கீதா செகண்ட் இன்பன்சி கேள்விப்பட்டிருக்கோம் அவர்தான் இங்கே :) வயதான குழந்தையாகிட்டார்

   Delete
 8. இப்படி ஓடியாடி விளையாடும் குழந்தையை இப்படி ரிகார்ஷல் நடத்தும் இடத்துக்கு க்கூட்டி வருவது பெற்றோர்களிலின் தவறே

  ReplyDelete
  Replies
  1. ஆமா சகோ ஆனா வேற வழியில்லை ..அவன் வருவேன்னு துடிப்பானாம் :) அடுத்தது சண்டே சர்விஸ்லயும் விளையாட்டுதான் :) பிஷப் வந்தாலும் இவர் லூட்டி அடங்காது :)என்னிடம் மட்டும் கொஞ்சம் அமைதியா இருப்பாங்க ..இப்போல்லாம் ஒரு லேடி சொல்ரரர் /நீ அமைதியா இல்லைனா ..ஜாய் வெளியேற்றப்படுவார்னு :) அதுக்கு பயந்து கொஞ்சம் கொயட் ஆகி இருப்பான் :) ஆனா இந்த குறும்பு 5 வயது வரைக்கும் இருக்கும்

   Delete
  2. எங்க சர்ச்சில் நிறைய சீனியர் சிட்டிசன்ஸ் .அந்த அந்தக்காலத்து ஆன்டி அங்கிள்ஸ்க்கு இப்படித்தான் வார்டன் மாதிரி இருப்பாங்க :)இவனும் அதை கேர் பண்ண மாட்டான் :)

   Delete
  3. ////எங்க சர்ச்சில் நிறைய சீனியர் சிட்டிசன்ஸ்/// ஏஞ்சலும் சீனீயர் சிட்டிசன்னா? சீனியர் சிட்டிசனாகத்தான் இருப்பார்கள் தினமும் வாக் போறாங்கண்ணு கேள்விபட்டு இருக்கோம் ...இப்ப கன்பார்ம் ஆயிடுச்சு. நம்ம மாதிரி என்றும் 16 என்றால் ஜாகிங்க போவாங்க ஆனால் சீனியர் சிட்டிஷன் என்பதால் வாக் போறாங்க போல

   Delete
  4. Garrrrrrr😈😈😈😈😈😈

   Delete
  5. Thoongittu nalaikku themba varen

   Delete
  6. ஏஞ்சலின் மதுரையும் சீனியர் சிட்டிசன் தான் தினமும் காலைல தன் செல்லப் பிள்ளையுடன் வாக் போறார் தெரியுமா?!!! நீங்க கூட சொல்லுவீங்களே நீங்க வாக் போகும் போது ஒரு வயதானவர் தன் செல்லத்துடன் வருவார்னு....அப்படி ஹிஹிஹிஹிஹி

   கீதா

   Delete
  7. ஆஹா !! அப்போ அது அவர்தானா :) ஆனா அவர் இப்போ கேர்ள் பிரண்டோட cruise ஷிப்ல போயிருக்காரே ! மாமிகிட்ட இந்த தகவலை எப்படியாச்சும் சேர்த்திடணுமே :)

   Delete
 9. அருமை.......இப்படியான குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வருவார்கள்.வேற்றுமையின்றிப் பழ்குவார்கள்.இந்த வயதில் பதிவது பசுமரத்தாணி போல்....... நன்று,தொடரட்டும்............

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணன் ..இப்படி வேற்றுமை தெரியாம பழகுவதை நிச்சயம் நல்ல விஷயம் ..நிறைய பேசுவான் .என் கைகளை பிடித்துக்கொண்டு முழு சர்ச்சுக்கு சுற்றுவான் :) யாரையும் கண்டு பயமில்லை அவனுக்கு ஆனா எல்லாரும் அவனைவிட்டு என்னை முறைக்கிறாங்க இப்போ :)

   Delete
 10. // எங்கே உனது மோதிரம்///


  என்ன மோதிரம் கழட்டி வச்ச்சிட்டு இந்த வயசிலும் நான் சிங்கில் என்று எல்லோர் முன்னாலும் வலம் வருகிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. //என்ன மோதிரம் கழட்டி வச்ச்சிட்டு இந்த வயசிலும் நான் சிங்கில் என்று எல்லோர் முன்னாலும் வலம் வருகிறீர்களா?

   Reply///
   ஹா ஹா ஹா கரீட்டு:)..

   Delete
 11. //.உன் மேல் இந்தியன் வாசனை இல்லை ??//

  வீட்டுல சமைச்சால் அல்லவா இண்டியன் வாசனை வரும்


  ///(இந்தியர்கள் கோட்/ஜாக்கெட் குழம்பு வாசனையுடன் வலம் வருவார் இங்கே///

  அங்கே மட்டுமல்ல இங்கேயும் அப்படிதான் அதிலும் முக்கியமாக நான்வெஜ் சமைக்கும் இண்டியர்கள் அணிந்து வரும் ஜாக்கெட் அதிக வாசனையுடன் வருவார்கள் அதனால்தான் இங்கே அமெரிக்கர்கள் இந்தியர்களை smelly person என்று கேலி செய்வார்கள்..


  நிறைய இந்தியர்களுக்கு ஜாக்கெட்டை எப்படி பாதுகாப்பது என்று தெரியவில்லை. வீட்டில் க்ளோசட்டில் ஜாக்கெட்டை போடும் பொது அதை லாங்க் ப்ளாஸ்டிக் கவர் உள்ளே வைத்து தொங்கவிடவேண்டும் அப்போதுதான் நாம் சமைக்கும் போது அந்த வாசனைகள் இந்த கோட்டின் மீது படியாது அதுமட்டுல்ல அந்த ஜாக்கெட்டை ட்ரையரில் பேஃப்ரிக் சாப்டனர் போட்டு அதை அவ்வப்போது ஒடவிட வேண்டும் அப்பொதுதான் smell அடிக்காது

  ReplyDelete
  Replies
  1. Goodness me! Angeyumaa. .there's a lot more to write about this asian cooking smell. .shall write tomorrow. .We had a bangladeshi neighbour who used to prepare dry fish curry with home made salted dried sprats that would make me faint. .shall give the link tomorrow

   Delete
  2. ஒரு லிங்க் தரேன் நான் எழுதிய பழைய பதிவு ..ஆரம்பத்திலேயே வார்ன் செஞ்சிடறேன் ஏன்னா அது பெரிய கட்டுரை ரேஞ்சுக்கு எழுதின பதிவு ..இப்போல்லாம் சுருக்கமா எழுத பழகிக்கொண்டு வரேன் நீங்க சொன்னபிறகே :)

   அதென்னமோ தெரில எனக்கு 2 மார்க் கேள்வியே கட்டுரை வடிவில் அன்சர் செய்றா பழக்கமுண்டு :) இந்த லூயிஸ் பதிவில் கூட நிறைய இருந்தது வாசிப்பவருக்கு சலிப்பு வரக்கூடாதுன்னு எடிட் செஞ்சிட்டேன் :)

   Delete
  3. https://kaagidhapookal.blogspot.co.uk/2016/02/loud-speaker-37.html

   Delete
  4. கோட் ஜாக்கெட் மட்டுமில்ல அமெரிக்காவில் இந்தியர்கள் குடியிருந்த வீடு என்றால் கரி ஸ்மெல் கிச்சன் என்று ரொம்பவே கமென்ட் அடிப்ப்பார்கள்

   Delete
  5. ஏஞ்சலின் நானும் அப்படித்தான் உங்க கேஸ்தான் 2 மார்க்க் கேள்வியே கட்டுரை வடிவில் ஹஹஹஹ் மதுரை சொல்லிச் சுருக்க முயற்சி செய்கிறோம்....என்றாலும் எல்லா பதிவுகளையும் சுருக்க முடியய்வில்லை...

   கீதா

   Delete
  6. சுருக்கி எழுதுதல் எனக்கு வரவே வராது :) நல்ல விரிவா எழுதினாதான் மனதுக்கு கல்யாண விருந்து வாழையிலையில் சாப்பிட்ட உணர்வு வரும் எனக்கு :) என் மக்ளும் அதே காட்டகிரி :) ஹை 5 கீதா :)

   Delete
 12. குழந்தை மனம் இருந்தால் குழந்தைகளுடன் குதுகலிக்கலாம். குழந்தை உள்ளத்தை தொலைக்காமல் இருந்தால் என்றும் இன்பம் தான் இந்த உலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா ..ஆமாக்கா குழந்தைகளுடன் பழகும்போது நாமும் குழந்தையாகவே மாறிவிடுகிறோம் மனக்கஷ்டங்கள் கவலைகள் எல்லாம் காணாமாப்போகின்றன .

   Delete
 13. நல்ல மனம் வாழ்க. பொறுமை அதிகம் உங்களுக்கு. பெண்களுக்கு இயல்பான பொறுமையும், தாய்மை உணர்வும்தான் உங்களுக்கு அந்தச் சிறுவனிடம் அன்பைத் தோற்றுவித்திருக்கிறது. உண்மையாக சொல்லப்போனால் எனக்கு அந்தப் பொறுமை கிடையாது!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஸ்ரீராம் :)
   ..ஒருகாலத்தில் பொறுமை எனக்கும் அவ்வளவா இல்லை ..இப்போ இங்கே பல்வேறு விதமான மக்களுடன் பழகுவதால் சகிப்புத்தன்மை பொறுமை எல்லாம் வந்து சேர்ந்துகொண்டது ..அதுவும் இந்த மாதிரி குட்டிஸ் கிட்ட ரொம்ப கவனமா பதில் சொல்லணும் ..நாங்கள் தாலி , ரிங் இரண்டும் அணியும் வழக்கமுள்ள கிறிஸ்த்தவர்கள் அதனால் ரிங் அணியலைனாலும் தாலி இருக்கும் .. அவனிடம் சொன்னால் கழட்டி காட்ட வைப்பான் :) ஏற்கனவே என் காது தோடுகள் பற்றி நிறைய கேள்விகள் ..எப்படி கம்மலை காதில் போட்டார்களென்று :) எப்படி அங்கே ஹோல் வந்ததுன்னு ..நான் உடனே சொல்லிட்டேன் அதெல்லாம் என் அப்பா அம்மாவுக்குத்தான் தெரியும் என்றும் எனக்கு நினைவில்லைன்னும் ..

   Delete
 14. >>> ஆச்சர்யம் என்னவென்றால் அங்கே அவனது அக்கா அத்தை மற்ற கசின்ஸ் அனைவரும் இருந்தும் அக்குழந்தை என்னை தேடி வந்து அன்பாய் அணைத்தது.. அதுதான் குழந்தை மனசு.. <<<

  மகிழ்ச்சி தான் மகிழ்ச்சியைத் தரும்..
  மகிழ்ச்சி தான் மகிழ்ச்சியை அழைத்து வரும்!..

  என்றென்றும் மகிழ்ச்சி வாழ்க.. மகிழ்ச்சியுடன் வாழ்க!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி துரைசெல்வராஜ் ஐயா

   Delete
 15. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி சகோ மொஹம்மத்

   Delete
 16. //எங்க வீட்ல ஊர்ல நாய் தான் அப்படி கூட்டிப்போயிருக்கோம் // க்கும் சமயத்துல எல்லாம் ஒண்ணுதான்.ச்சேச்சே பப்பியே பரவாயில்ல.

  // உன் மேல் இந்தியன் வாசனை இல்லை ?? (இந்தியர்கள் கோட்/ஜாக்கெட்  குழம்பு வாசனையுடன் வலம்  வருவார் இங்கே)// நம்மூர்ல முந்தி இந்தியன் ஆர்மி ரோந்து வருவாங்க அஞ்சு பல நேரங்களில இலையால மறைச்சு மரம் மாதிரி எங்காச்சும் ஒளிச்சு நிப்பாங்க .அப்போ நாமெல்லாம் ரெம்ப சின்ன புள்ளைகள் நாமளே சொல்லீடுவோம்,பக்கத்தில எங்கேயோ ஆர்மி ஒளிச்சு நிக்கான் நு.அம்புட்டு வீசும் சப்பாத்தியும் நெய்யும்.அவங்களால தேடப்படுற ஆக்களுக்கு அது வசதி மணத்தை வச்சு அலேர்ட் ஆகீட்டு வந்து சொல்லி சிரிப்பினம். 

  ReplyDelete
  Replies
  1. Haa haaa 100 percent true. .The odour and that mustard oil smell ..Our area is little punjab and gujarath. .

   Delete
  2. வட இந்தியரின் உணவு ஒரு தனி மணம் வீசும் சுரே ..டயட்டிங் ஆரம்பிச்சு வெளில வாக் போனா மூலை முக்கெல்லாம் இவங்க சாப்பிட்டு வாசனை சமோசா வாசனை பஜ்ஜி வாசனை மூக்கை துளைக்கும் ..அதைவிட லண்டன்ல போய் இறங்கறோம் அன்டர்க்ரவுண்ட் ஸ்டேஷன்ல எனக்கு பஜ்ஜி பொரிக்கிற வாசனை அடிக்குது :) அவ்ளோ மணம் அவங்க பெருங்காயம் அஜ்வேயின் கடுகு எண்ணெய் அதிகம் யூஸ் பண்றதால்தான் இந்த வாசனைன்னு நினைக்கிறேன்

   Delete
  3. ம்ம் அந்த ஹார்னெஸ் பற்றி நீங்களும் எழுதியிருந்திங்க இல்லையா ..உண்மைல ரெண்டு குட்டீஸ் வச்சிக்கிட்டு கடினமே ..எங்க வீட்ல ஒண்ணே ஒன்னு அதுவும் கலாட்டா செய்யும் யாருக்கும் தெரியாம சந்தடி இல்லாம செஞ்சி வைப்பா ....ஏர்போர்ட்ல கட்டாயம் ஹார்னெஸ் யூஸ் பண்ணனும் அங்கிங்கா ஓடினா எஸ்கலேட்டர்லாம் இருக்குமே .

   Delete
 17. ஏஞ்சல் சகோ! உங்கள் குணம் வியக்க வைக்கிறது! அன்பு அன்பு அன்பு என்பது மட்டுமே இல்லையா!! மென்மையான மனது!!

  கீதா: ஏஞ்சலின் ஹைஃபை!! நானும் இது போன்று குழந்தைகளுடன் விளையாடுவதுண்டு. என்னிடம் குழந்தைகள் ஈசியாக ஒட்டிக் கொள்வார்கள்!!! அருமையான பதிவு..உங்கள் மென்மையான மனம் உங்கள் பதிவுகளெ சொல்லிவிடும்....வாழ்த்துகள் பாராட்டுகள் ஏஞ்சல்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டங்களுக்கு நன்றிகீதா ..இன்னிக்கு கொயர் பிராக்டிஸ் இருக்கு வருவான் லூயிஸ் :) போன சண்டே பெரிய லிஸ்ட் கொடுத்தான் நான் வீட்டில் வரைஞ்சி எடுத்திட்டு போகணும் ..cute chubby பாப்பா அவன் :) ஆனா கொஞ்சம்ஜெலஸ் ஆகிறான் லியனார்டோ என்னருகில் வந்தால் அதுதான் கவலையா இருக்கு ..லியனார்டோ மாற்று திறனாளி குழந்தை

   Delete
 18. நான் வாசிக்கும் போதே நினைச்சேன் ஜேர்மனியில இப்படி இல்லையே என அதிராவுக்கு சொல்லியிருக்கீங்க. இங்க இப்படி செய்யமுடியாது.
  அறிவான பையனா வருவான். நல்ல அன்பா பழகிட்டான். நல்ல பேர்தான் செலக்ட் செய்திருக்கான் உங்களுக்கு.
  ஆஹா இந்த மணம் வீசும் ஜாக்கெட்டுகளால் நாம் படும்பாடு சொல்லிமாளாது. சுப்பர்மார்க்கெட் ல ,பஸ்ல, ட் ரெயினில மணத்தாலே உடனே தெரிந்துவிடும். ஜாக்கெட் க்கு எங்க வீட்டில தனி ஷெல்ப்தான் 3வருக்கும். அதை விட வெளியில இருந்ததை பார்த்தால் கோபமா வரும். அதனால ஜாக்கிரதையா இருப்போம். சில பேர் வீட்டுக்கு விசிட் வந்துட்டு போனாலும் அந்த ஸ்மெல் வீட்டில அப்படியே இருக்கும். சிலபேர் திருந்தவே மாட்டாங்க அஞ்சு.இதனால் ஒழுங்கா இருக்க ஆட்களையும் தப்பா நினைக்கிறாங்க.
  துருக்கிகாரங்க கிட்டவும் ஒருவித மணம் இருக்கு.சிலநேரம் தாங்க முடியாது.

  ReplyDelete