அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/21/17

மியாவ் ஸ்பெஷல் :)

இன்று மியாவ்  பிறந்த நாள் ஸ்பெஷல் :)


கேக் எடுத்துக்கோங்க :)               பிறந்த நாள் பேபி யார்னு தெரிஞ்சிருக்கும் ..கொஞ்சம் முதலில் அவரது புகழை பாடுகின்றேன் :)


கப் கேக் மேக்கரில்இட்லி வைத்தவர்  அதாவது அவித்து வைத்தவர் 

கண்ணு பட்ட தோசை ரெசிப்பி தந்தவர்  அதாவது கண்ணில் பட்ட பொருட்களை ஊறவைத்து தோசையா அரைத்தவர் 


அப்புறம் முக்கியமானது சமையலறையில் சூரியகாந்தி செடியை வளர்த்து சாதனை புரிந்தவர் :)ஒரு ரொட்டி செய்து சிலகாலம் என்னை  செலக்டிவ் அம்னீஷியாவில் விழ வைத்தவர் ..எனக்கு அதோட பெரிய சந்தேகமே வந்திருச்சு இப்படித்தான் ரொட்டி இருக்குமோன்னு :) 
பல வருடங்களாக ஒரே வயதை சொல்லி அதையே  மெயின்டைன் செய்பவர் :))

அவர் வயதை ,கடைசியில் சொல்றேன் :)
பிங்க் கலர் பார்த்தே கண்டுபிடிச்சிருப்பீங்க :)
                                                                  
பூனை ஸ்பெஷல் பதிவு ,அதாவது பதிவுலக பூனையின் பிறந்தநாளுக்கு 22.02.2017 எனது பதிவு .. ஆதலால் சில பூனை படங்கள், meme மற்றும் ஓவியங்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன் ..


 ஓவியர்  Carmen 
================
..அவரது ஓவியங்களில் அணில்கள்  நரிகள் ,முயல்கள் ,பூனைகள் எல்லாம் அழகாக உடையணிந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள் ..நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள் 
Carmen cat art என்று கூகிளில் தேடினால் விதவிதமான பூனைகள் வரும் .
அவரது வலைப்பூ ..அவரது ஓவியங்களில் ஒரு சில ..

இந்த ஐஸ்க்ரீம் சாப்பிடும் பூனை :)

மலரேந்திய இளவரசி பூனை :)
பார்க்க சின்ன வயது அதிரா மாதிரியே இல்லை :)


காற்றை ரசித்து சுவாசிக்கும் குட்டி நரி 
சாக்லேட் சுமந்து நிற்கும் எலிக்குட்டி 


இப்படி விதவிதமான அழகிய படங்களை கார்மென் வரைந்துள்ளார் அவர் தளம் சென்று ரசியுங்கள் ..


இந்த பூனைகளுக்கு மட்டும் அட்டை பெட்டினா எவ்ளோ ஆசை :)

இது  ஜெஸி :)

                                                     மகள்  அவளுடைய நட்புக்கு 
                               செய்த பரிசை ரகசியமாய் தோண்டும் ஜெஸி ..


                                                                                  


ஹாஹா அதே அதிரா 
இதுவும் அதிராவே 


இதுவும் அதிராவே  இன்று நம் தோழி அதிராவுக்காக மிக ஸ்பெஷலா .
அதிராவுக்கு மிகவும் பிடித்த அடிக்கடிஅவர் கேட்கும் பாடலை !
இங்கே அவருக்காக தேடி டெடிகேட் செய்கிறேன் :)
இந்த படம் வெளி வந்தபோது  அவர் மட்டுமே பிறந்திருப்பார் :)

இதே பாடல் ஆங்கில மெட்டில் :)இதே போன்ற செவிக்கினிய அந்தக்கால தமிழ் பாடல்களை வேம்பார் மணிவண்ணன் 
யூ டியூபில் தொகுத்து உள்ளார் லிங்க் இங்கே இணைத்துள்ளேன் 

பூனைகள் ரொம்ப அட்டகாசம் ஆனால் மிக்க சந்தோஷத்தை தருபவை என்பது மறுக்க முடியாத உண்மை ..நம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அன்பு மியாவ் அதிராவுக்கு இன்று 80 வது பிறந்தநாள் :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிரா மியாவ் ..
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் :))
இறைவன் எல்லா சந்தோஷத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அளவில்லாமல் தர  பிரார்த்திக்கிறோம் ..நட்புக்களே உங்களது பரிசுகளை பொற்காசுகளாக இதில் போடுமாறு வேண்டிக்கொள்கிறேன் :)நானே அவற்றை மியாவிடம் சேர்த்து விடுவேன் :)

தாள்கள் அக்செப்ட் செய்வதில்லை .ஏனென்றால்  மீன் கருவாடுன்னு பேப்பர்ல எழுதி போட்டுவைப்பார்கள் சிலர்  :)

அன்புடன் ஏஞ்சல் ....

49 comments:

 1. அதிராவின் இனிமையான 80-வது பிறந்தநாளுக்கு நன் நல் வாழ்த்துகள் + நமஸ்காரங்கள். மேலும் 100-120 ஆண்டுகள் வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபு அண்ணன் அதில ஒரு சைபர் ஐ அழிச்சுப் போட்டு ரெண்டால பெருக்குங்கோ:)... அஞ்சுவுக்கு கணக்கு வீக்கு:)) அதனாலதான் இப்பூடி பிழை விடுறா:)

   Delete
  2. வாழ்த்துக்கு மியாவும் நன்றி... முதலாவதாக வந்து வாழ்த்திய உங்களுக்கு.. அஞ்சுவின் அலுமாரியைத் திறந்து, முதலாவது ட்றோயரில், பச்சைப் பெட்டிக்குள் இருக்கும் 2 பவுண் பிரேஸ்லட்டை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்ன்:)

   Delete
 2. மேலே என் பின்னூட்டத்தில்
  நன் = என்

  -=-=-=-

  அப்போ நேற்று எங்கள் ப்ளாக்கில் வெளியிடப்பட்டுள்ள அதிராவின் போட்டோ சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு சுமார் 40 வயதான போது எடுக்கப்பட்டதாக இருக்கும் போலிருக்குது.

  அவரின் இன்றைய 80 ஆவது வயது போட்டோவையே இங்கு போட்டிருந்தால் மேலும் நல்ல பழுத்த பழமாக காட்சியளிக்கக்கூடும்.

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணன் நீங்க நீண்ட ஆயுளோடும் நலமோடும் இருங்கோ.. என் 80 ஆவது வயதில் ஒரு போட்டோ போடுறேன்ன்...

   ஊசிக்குறிப்பு:
   சாத்திரப் பலன்படி என் ஆயுட்காலம் 80 வயசாமே அவ்வ்வ்வ்:)

   Delete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபு அண்ணா

   Delete
 3. http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89

  ReplyDelete
  Replies
  1. THATS your trade mark kitty image isnt it :)

   Delete

 4. என்னது அதிரா 80 வயசு இளமங்கையா நான் என்னவோ 100 க்கும் மேலே இருப்பாங்கன்னு நினைச்சு இருந்தேன் சரி அவங்களுக்கு என் வாழ்த்தை தெரிவிச்சு கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. டுத் அதுதான் சைபர் ஐக் கட் பண்ணிப்போட்டு ரெண்டால பெருக்குங்கோ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
  2. அய்யகோ நான் கணக்குல ரொம்ப வீக்காச்சே

   Delete
  3. ஹாஹா இருங்க நான் டியூஷன் எடுக்கறேன் ..1 அன்ட் 1 இஸ் 11

   Delete
 5. அதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வயது என்பது உடம்புக்குத்தானே? அவர் மனது என்றும் இளமைதான். வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //ஸ்ரீராம். February 22, 2017 at 12:40 AM
   அதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வயது என்பது உடம்புக்குத்தானே? அவர் மனது என்றும் இளமைதான்.//

   ஆமாம் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’! நீங்கள் சொல்வது மிகவும் கரெக்ட்டூஊஊஊ.

   உடம்பு நாளுக்கு நாள் முழு வெள்ளரிப்பழம் போல பழுத்து, பருத்து, வீங்கி வந்தாலும்கூட, அதிராவுக்கும், எனக்கும், இன்னும் மற்ற சிலருக்கும், எங்கள் மனது எப்போதுமே பொடி வெள்ளரிப்பிஞ்சு போல என்றும் இளமையோ இளமைதான்.

   -=-=-=-=-

   ஊசிக்குறிப்பு:-

   எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டும்தான் என நிஜமாலுமே நினைத்திருந்தேன் நேற்றைய உங்களின் பதிவினில் அந்தப்படத்தினைப் பார்க்கும்வரை. :)))))

   இதனைப் படித்ததும் கிழித்து கூவத்தில் போட்டுவிடுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். வேறு யாருக்கும் இது விஷயம் தெரியக்கூடாதூஊஊஊஊ.

   Delete
  2. ///அவர் மனது என்றும் இளமைதான்///
   ஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்.. இதை கொஞ்சம் இன்னும் உரக்கச் சொல்லுங்கோ:) அஞ்சுக்கு வர வரக் காதிலயும் பிரச்சனையாம்ம்.. சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. மிக்க நன்றி.

   Delete
  3. என்னையும் ஸ்வீட் சிக்ஸ்ட்டின் என்று உங்க கூட சேர்த்திருந்தா டவுட் வந்திருக்காதில்லா :)
   ஓகே ..இப்போ நாமெல்லாம் ஸ்வீட் 16 :)

   Delete
 6. Happy Birthday Ms.Myaav!! Many more happy returns!! 🎂🐺🎊🎉

  ReplyDelete
  Replies
  1. மஹியை பிளாக் பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி ..நன்றி மஹி

   Delete
  2. ஆவ்வ்வ் மஞ்சள் பூ... எப்படி இருக்கிறீங்க? அம்மாவும் குட்டியும் நலம்தானே?.. இந்த நேரத்திலும் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மகி.

   Delete
 7. நல்வாழ்த்துகள்.. நலமே நிறையட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துரை செல்வராஜ் ஐயா

   Delete
  2. மிக்க நன்றி.

   Delete
 8. சின்னப் பெண்ணான போதிலே!...

  மனதிற்குப் பிடித்த இனிய இந்தப் பாடலுடன்
  இதனுடைய ஆங்கில ஒலிவடிவினையும் காதாரக் கேட்டதில்
  காலைப் பொழுது இனிமையாயிற்று.. மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா மிக இனிமையான ஆங்கில வெர்ஷனிலிருந்து தமிழில் எடுத்திருக்கிறார்கள் இரண்டுமே இனிமை .ஆங்கில பாடலை பானுமதி அவர்களும் ஒரு படத்தில் பாடியுள்ளார் அது அத்தனை இனிமையில்லை .ஜிக்கி குரல் அழகு

   Delete
 9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies

  1. வாங்க சகோ டிடி ..மிக சிறப்பான தொகுப்புகள் அவர்பக்கம் இருக்கு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
  2. மிக்க நன்றி.

   Delete
 10. மியாவ் மியாவ் மியாv, மியாவ் ஹிஹி இது தான் அதிராவிற்கு வாழ்த்துகள்! அன்பான பூஸ்!! வாழ்த்துகள்! அதிரா எனும் பூஸ் வயதானாலும் குழந்தையான பூஸ் குட்டிக்கு எப்போது நல்ல உடல் நலனையும் மகிழ்வையும் ஆண்டவன் அளித்திட வேண்டி பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!

  தலைமையகத்தில் கரன்ட் இல்லை அதனால் கமென்ட் காலையிலேயே அடித்தும் பப்ளிஷ் பண்ணாமல் வைத்து...இதோ இப்போது....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா அன்ட் துளசி அண்ணா ..அதிரா எப்பவும் குட்டி குண்ண்டு பூஸ் குட்டிதான் நமக்கு

   Delete
  2. ஆவ்வ்வ்வ்வ் இன்னும் கொஞ்சம் பலமா சொல்லுங்கோ கீதா.. தேம்ஸ் கரையில இன்னும் ஓவரா புகையட்டும்:)

   Delete
 11. அதிரா இன்று மதுரைத் தமிழன் உங்களுக்கு முட்டைப் பொரியல் செய்து பார்சல் அனுப்பினாரா உங்கள் பிறந்த நாள் ஸ்பெஷலாக...!!!!!
  ஹஹஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அவர் இன்னும் உண்டியலில் கிப்ட் போடலை :) பொற்காசுகள் வரட்டும் முதலில் .

   Delete
  2. ஹா ஹா கீதா அவர் இப்போதான் தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்ர், இனிமேல்தான் அவர் சமையல் பற்றிச் சொல்வார்ர்... எதுக்கும் நாங்க ஜாக்க்ர்ர்ர்தையா இருப்பது நல்லதே:))

   Delete
 12. அதிரா நீங்கள் என்றுமே ஸ்வீட் 16 தான் என்னைப் போல ஹிஹீஹிஹி..இப்படி சைக்கிள் சந்துல நுழைந்து நம்மளயும் சொல்லிக்கணும்ல

  கீதா

  ReplyDelete
  Replies
  1. Hi five Geetha :) mee three mee three

   Delete
  2. ஹா ஹா ஹா ஹையோ என் கொப்பி வலதை எல்லோரும் கொப்பி பண்றாங்க.. விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:) அப்போ எல்லோரும் வாங்கோ என்னோடு காசிக்கு:)

   Delete
 13. ///நட்புக்களே உங்களது பரிசுகளை பொற்காசுகளாக இதில் போடுமாறு வேண்டிக்கொள்கிறேன் :)நானே அவற்றை மியாவிடம் சேர்த்து விடுவேன் :)////

  ஆவ்வ்வ்வ்வ் போடாதீங்க.. போடாதீங்க.... பிஸ் தனக்கு ஏதோ வைர ஒட்டியாணம் வாங்கி தன் 44 இஞ்சி இடுப்பில் கட்டோணும் எனச் சொல்லிட்டிருந்தா:) அதுக்குத்தான் இந்த ஐடியா.. நான் வேணுமெனில் என் எக்கவுண்ட் நெம்ம்ம்ம்பர் தாறேன்ன்ன்:).. பவுண்ட்டில அனுப்பிடுங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. திஸ் இஸ் நொட் குட் :)
   வர வர நான் நினைக்கறது செய்யப்போறது எல்லாமே உங்களுக்கு தெரியுது :)

   Delete
 14. இரண்டு பாடல்களும் மிக அழகு... ஆனா எனக்கு ஏனோ தெரியாது இப்பாட்டுக் கேட்டால் கொஞ்சம் கவலைதான் வரும்.. சின்னவயசு நினைவுகள் ஊர் நினைவு.. ஸ்கூல் நினைவெல்லாம் வந்து கவலையாகிடுவேன்...

  ஊசிக்குறிப்பு:
  எனக்கு எதுக்கு கவலைப்படோணும் எதுக்குப் படக்கூடா என்றே தெரிவதில்லை:))... சில படங்கள் பார்த்திட்டு... தேம்பித் தேம்பி அழுது.. பின்பு வீட்டில் ஏச்சு விழுமே என ஓடிப்போய் பாத்ரூமில் நின்றும் மிகுதி அழுதிருக்கிறேன்ன்ன் ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. garrrrrrr :) நானும் அப்படிதான் எங்காவது எதையாச்சும் பார்த்து நாள் புல்லா மூட் அவுட்டாகிறுவெண்
   நிறைய டைம் ரோட்ல கண்ணீரோட நடந்திருக்கேன் :) பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க வீட்ல பிரச்சினைன்னு தானே :)
   என்ன பண்றது குட்டி பிள்ளை நினைவுகள் எங்களுக்கு பசுமையான சந்தோஷமான விஷயங்கள் ..
   அடுத்து நான் வருஷம் நிக்காம ஓடுதேன்னு கூட அழுவேன் :) வெயிட் :) இதுக்கெல்லாம் அடிக்க கூடாது

   Delete
 15. மொத்தத்தில் மிகவும் கலர்ஃபுல்லான, அழகான ஒரு பதிவு அஞ்சு... எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல்ல... அனைத்துப் படங்களும் சூப்பர்ர்.. ஒரே பூஸ் மயமான பதிவாக இருந்துதா.. அப்படியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:)).. மிக்க மிக்க நன்றி அஞ்சு..

  அந்த ட்ரீட் தா இல்லையேல் பிளக்கை பிடுங்குவேன் பூஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா...:).

  ReplyDelete
  Replies
  1. ஜெசி படங்களை கோலாஜில் போட்டு வச்சிருந்தேன் அதை போட்டுட்டு டிலீட் செஞ்சேன் :) மியாவ் ஸ்பெஷலுக்கு ஜெசி எதுக்குன்னு

   Delete
 16. இன்னும் ஒன்று சொல்லியே ஆகோணும் அஞ்சு... என்னாலயே என் படங்கள் தேட முடிவதில்லை என் புளொக்கில், பொறுமையா, அனைத்தையும் நினைவு வைத்து லிங் எடுத்து போட்டிருக்கிறீங்க...

  அந்த சூரியகாந்தி லிங் கிளிக் பண்ணி உள்ளே போனேன்ன்ன்..

  மாயாவின் பின்னூட்டங்கள் பார்த்து மனம் கனத்து விட்டது... வலையுலகில் நல்ல ஒரு தம்பியை, சகோதரனை, நட்பை இழந்துவிட்டோம்ம்..

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம் :( நானும் கிரிஜா மாயா கமெண்ட்ஸ் பார்த்து அப்செட் நேத்து

   Delete
 17. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அதிரா ...

  angelin ரொம்ப அழகா தொகுத்து வாழ்த்து சொல்லி இருக்கீங்க..சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அனு.

   Delete
 18. மன்னிப்பு வழங்கவும் .நான் வாழ்த்தவில்லை ஆனால் உங்களுக்காக ப்ரே பண்ணினேன் மீயோவ் ஓக்கே.எனக்கு ஒரே ஞாபகம் வந்து கொண்டு இருந்தது .ஆனா 23 நேரம் வந்தாலும் 22 கஷடம் .அதால மகளுக்கு கோயிலுக்கு போகேக்க கும்பிட்டனான்.இந்த ப்ளாக் பக்கம் வர நினைச்சும் கொஞ்சநாள் முடியவே இல்ல. அன்பான மனம் நிறைந்த பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆங் பரவாயில்லை..தாமதமானாலும் நினைவு வைத்து வாழ்த்தினத்துக்கும் முக்கியமா கோயிலில் ப்ரே செய்ததுக்கும் நன்றி .பூனை பிறந்த நாளை ஒரு மாசம் கொண்டாடிடுவோம் :)

   Delete
 19. நானும் என் தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அதிரா.
  அழகா தொகுத்திருக்கீங்க அஞ்சு. சூப்பர் ரெம்ப பொறுமைதான்.

  ReplyDelete