அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/15/17

எனது கைப்பேசியில் சிறைப்பிடித்தவை :) flowers butterfly nature,

எனது கைப்பேசியில் சிறைப்பிடித்தவை :)

என்னுடைய டாப்லெட் போன் எல்லாவற்றிலும்  எக்கச்சக்கமான படங்களை அடைத்து  வைத்துள்ளேன் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ...


போகும் பாதை தூரமில்லை .....மலர்களே மலர்களே !!பூப்பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா :)#நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா ..பட்டாம்பூச்சிக்கும் நம்ம சட்டை மேலே ஒரு கண்ணு :)


                                                                நேற்று வீட்டில் 


                                                               இன்று இலையில் 

நாளை மொட்டும் ,,மலரும் 


மாலை நேரத்து மயக்கம் :)

இது மத்திய உணவின் பின்னான மயக்கம் இன்று நான் நாளை நீங்களாகவும் இருக்கக்கூடும் என சொல்கிறதோ பொம்மையாய்  நிற்கும் டைனோசர்கள்  ..
இவர்கள் யானையின் நெருங்கிய சொந்தங்களாம் 
செஸ்டர் ஜூ போகும் வழியில் சிறைப்பிடித்த தேவாலயம் ..
கோடையில் ஜொலிக்கும் எங்கள் ஊர் 


இன்று குளிரில் கைப்பேசியில்நிறைய கைதிகள் இருக்காங்க :)அவ்வப்போது ரிலீஸ் செய்வேன் ..


43 comments:

 1. Replies
  1. வாங்க சகோ முதல் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

   Delete
 2. அனைத்துப்படங்களும் அழகோ அழகாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா

   Delete
 3. //கைப்பேசியில் நிறைய கைதிகள் இருக்காங்க :) அவ்வப்போது ரிலீஸ் செய்வேன் ..//

  அதிரா அந்தக் கைப்பேசியை சீக்கரமாகக் களவாடி கடத்திக்கொண்டு செல்லக்கடவது.

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓஒ நான் மாட்டேன்ன்ன்.. என்னையும் ஜெயில்ல பிடிச்சுத் தள்ளும் பிளான்போல:))..

   ஹா ஹா ஹா... இருங்கோ கோபு அண்ணன், பட்டரியைப் பிடுங்கி தேம்ஸ்ல போட்டிடுறேன்:)).. ஃபோனைக் களவெடுத்தால்தானே பொலீஸ் பிடிக்கும்:) எப்பூடி என் ஐடியா?:)

   Delete
  2. வாங்க அதிரா வாங்க கைவிரல்களில் அந்த வைர மோதிரத்தோட வாங்க ப்ளீஸ்

   Delete
 4. முதல் படம் மிக அருமை ஆனால் அதில் அந்த பெண் நடந்து செல்வதற்கு பதிலாக சேலை அணிந்த பெண் நடந்து சென்றபடி இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்... ஒரு வேளை அப்படி சேலை அணிந்த பெண்ணின் படத்தை போட்டு இருந்தால் இந்த மதுரைதமிழன் இதயம் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்துதானே இந்த படத்தை நீங்கள் வெளியிட்டு இருக்கிறீர்கள் மிகவும் நல்ல மனசம்மா உங்களுக்கு....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. Haiyo exactly kandupidichitteenga 😃

   Delete
  2. என்ன ஏஞ்சல் சிங்கம் ஒன்னு வந்து கர்ர்ர்ர் நு உறுமிட்டுப் போவுது...ஹஹஹ்ஹ்

   Delete
  3. என்ன ஏஞ்சல் சிங்கம் ஒன்னு வந்து கர்ர்ர்ர் நு உறுமிட்டுப் போவுது...ஹஹஹ்ஹ்

   கீதா

   Delete
  4. @அவர்கள் ட்ரூத் ..உண்மைல அன்னிக்கு புடவை கட்டி ஒரு லேடி அந்த பாதையில் போன்னாங்க அவங்களுக்கு 75 வயசு இருக்கும் ஒரு ஸ்ரீலங்கன் குடும்ப பாட்டி ..அப்புறம் ஐரோப்பிய பெண்கள் நிறைய 18 -25 இருந்தாங்க ..அந்த படத்தை நான் போடலையே ஹா ஹா :)
   அப்புறம் 40 ப்ளஸ் பெண்மணி ஒருத்தவங்க கூட செல்பி எடுத்தாங்க அவங்க படத்தையும் போடலையே :)))

   Delete
  5. @GEETHA ஹா ஹா @ கீதா ..சிங்கத்துக்கு ரெண்டு ஆப்ஷன்
   A ..ஒரு பிளேட் உப்புமா
   B ..நா ரெண்டு வரி Limericks கவிதை எழுதுவேன்
   அவர் உப்புமா தட்டை தூக்கிட்டு ஓடிடுவார் :)

   Delete

  6. 75 அண்ட் 40+ எல்லாம் வயசானவங்க , ஐரோப்பிய பெண்கள் நிறைய 18 -25 வேஸ்ட்டுங்க 30 டூ 40 ஒகே அதுவும் மாம்பழ கலர் சேலைக்கு குங்கும கலர் ரவிக்கை அணிந்து தலையில் மல்லிகை மலர் சூடி நெற்றியில் அழகாக சின்னதாக பொட்டு வைத்து இருந்தா நமக்கு ஒகே அப்படிபட்ட படம் இருந்தால் போடுங்க அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் யாரோ 40+ செல்பி எடுத்தாக சொன்னிகளே அந்த 40+ என்பது வயதா அல்லது ஆளின் சைஸா தெளிவா சொல்லுங்க ஹீஹீ

   Delete
  7. மாம்பழக்கலர் புடவையோ :) மாமி இங்கே வரவும் ..
   எனக்கு ரொம்ப நீங்க மாமியை இங்கே பிளாக் பக்கம் வரை வைங்களேன் வாரம் ஒரு போஸ்ட் போட்டாலும் போதும் .மாமிகூட பழக நான் அதிரா கீதா கிரேஸ் எல்லாரும் மிக ஆவலாக இருக்கோம் :)

   Delete

 5. இரண்டாவது படம் உள்ள இடத்தில்தான் நீங்களும் உங்கள் வூட்டுகாரரும் வேலண்டைன் டே அன்று டூயட் பாடிக் கொண்டிருந்ததாக அதிரா என்னிடம் ரகசியமாக சொல்லி சென்றார் அவர் சொன்னார் என்று மட்டும் அவரிடம் போய் சொல்லிவிட வேண்டாம் இது உங்களுக்கும் எனக்கு மட்டுமான ரகசியம்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) படம் கூட செல்பி எடுத்தோம் அனுப்பட்டா :)

   Delete
  2. யேஏஏஏஏ ஸ்ஸ் சிதம்பர ரகசியமாக்கும்:)

   Delete
 6. குளிர் நேரத்தில் உங்கள் ஊரில் ஒரு பயல் கூட வெளியே வரமாட்டார்களா என்ன ஒரு காரைக் கூட காண முடியவில்லையே

  ReplyDelete
  Replies
  1. Morning 10:15 am ..ellam lazy guys ..but I walked to church in this foggy day

   Delete
  2. அந்த ஏரியா முழுக்க cost cutters அன்ட் ரெஸ்டாரண்ட்ஸ் இருக்கும் ரோடு மிட்நைட் 1 வரைக்கு திறந்திருப்பாங்க காலை 10 க்கு தான் எழும்பி கதவை திறப்பாங்க .அன்னிக்கு புதன்கிழமை 9 மணிக்கு ஸ்கூல் டைம் ஹெவி டிராபிக் இருக்கும் அப்புறம் குறையும்

   Delete
 7. //என்னுடைய டாப்லெட் போன் எல்லாவற்றிலும் எக்கச்சக்கமான படங்களை அடைத்து வைத்துள்ளேன் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ...
  ///
  என்னாது tablet phone ஆ? அதெப்போ ரிலீஸ் ஆச்சு?:)) மாத்திரை ஃபோன்?:) வியக்கம் பீஸ்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. சூப்பர ஸ்டார் ரஜினி ரீலீஸ்பண்ணிய போன்தான் இந்த டாப்லெட் போன் அது லிமிட்ட் எடிசன் என்பதால் உலகில் உள்ள முக்கியாமனவர்களுக்கு மட்டும் அதை வாங்கும் பாக்கியம் கிடைத்தது அதனால் அது உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்புக்கள் இல்லை

   Delete
  2. ஹொயோ ஹையோ :) நா இன்னும் அவ்ளோ அட்வான்ஸ்ட் டெக்கி அயிட்டம்ஸ்குலாம் போக மாட்டேன் ..அது விஷயம் என்னன்னா டாப்லெட் க்கும் போனுக்கும் நடுவுல கமலாவை சை சை கமாவை போட மறந்துட்டேன் அது ஒரே வார்த்தையா காட்டியிருக்கு @அவர்கள் ட்ரூத் அன்ட் தட தடா அதிராவ்

   Delete
  3. ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு கமா எல்லாம் தெரியுமெல்லோ:)

   Delete
 8. //என்னுடைய டாப்லெட் போன் எல்லாவற்றிலும் எக்கச்சக்கமான படங்களை அடைத்து வைத்துள்ளேன் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ...
  ///
  என்னாது tablet phone ஆ? அதெப்போ ரிலீஸ் ஆச்சு?:)) மாத்திரை ஃபோன்?:) வியக்கம் பீஸ்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
 9. ///மலர்களே மலர்களே !!///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க? கலர் மட்டும்தானே தெரியுது கண்ணுக்கு?:) மலர்கள் எங்கேஏஏஏஏஏஏஎ?:))


  ////பட்டாம்பூச்சிக்கும் நம்ம சட்டை மேலே ஒரு கண்ணு :)////
  நோஓஓஓஓஓ இது அஞ்சுட சட்டை இல்லை.. மீயை ஏமாத்த முடியாது..:)

  ReplyDelete
  Replies
  1. !""££$^*O)(*&^!"£$%^&*()garrr
   நான் நம்ம மனுஷங்க சட்டைன்னுதானே சொன்னேன் :) என் சட்டைநா சொன்னேன் அது ஷாரனின் டி ஷர்ட்

   Delete
 10. //// நேற்று வீட்டில் /// இன்று இலையில் ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பூடி இதையெல்லாம் கண்ணால பார்த்துப் படமும் எடுக்கிறீங்க அஞ்சு.. ஹையோ உடம்பெல்லாம் கூசுது...

  ஆனா வண்ணாத்துப் பூச்சி ஆனபின் என்னா ஒரு அழகு... அழகழகான பட்டுப் பட்டு வண்ணத்துப் பூச்சிகள்.. நமக்கு இங்கு வருவதே இல்லை... மொத் மட்டுமே பறக்கும்...

  அந்த சொண்டு நீண்ட வாத்துக்கள் எங்கே இருக்கின்றன..?.. அழகு.

  ReplyDelete
  Replies
  1. பூச்சினா பூனைக்கு பயமா :) 50 கம்பளி பூச்சி பார்சல் பண்றேன் உங்களுக்கு :)
   என் பொண்ணு tarantula கைல புடிச்சா பட்டர்ப்பலை தோட்டத்தில் :)


   we saw that pelican at bird park gloucestershire

   Delete
 11. ///இன்று நான் நாளை நீங்களாகவும் இருக்கக்கூடும் என சொல்கிறதோ பொம்மையாய் நிற்கும் டைனோசர்கள் ..///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. ஏன் நாளைக்கு பிஸ்ஸு .. டைனோசர் ஆகப்போகுதோ?.. கேட்பாரில்லை என வாயில வருவதை எழுதுறா:)).. அதிரா கேள்வி கேட்பேனெல்லோ:))..

  ஹா ஹா ஹா அழகிய படங்கள்... பொக்கிசங்கள்... தொடர்ந்து போடுங்கோ .. நானும் இப்படித்தான் காசா பணமா.. ஃபோன் கமெராதானே லெவ்ட்டு ரைட்டு என எடுப்பதுதான் இப்போ எல்லோருக்கும் தொழிலாப்போச்ச்ச்ச்:)).

  ReplyDelete
  Replies
  1. Dinosaurs are extinct now, , like wise we homo sapiens could be next nu sonnen garrrrrrrrrr cat

   Delete
 12. எல்லா படங்களும் அழகு.
  இனி அடிக்கடி கண்களுக்கு விருந்து என்று கேள்விபடும் போது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ..உங்களுக்கு விதவிதமா பறவைகள் ,கிடைக்குதே கொள்ளை அழகு அவங்க ..இங்கே ஜெசி நண்பர்களால் பறவைங்க ஓடிடறாங்க ..கிடைத்ததை சேமித்து வச்சிருக்கேன் பகிர்கிறேன் .வருகைக்கு நன்றிக்கா

   Delete
 13. அழகிய இடங்கள். அழகிய படங்கள். ரசனை, சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஸ்ரீராம் :) ஒருமுறை குளிரில் ஐஸ் பிடித்த சிலந்தி வலையை படமெடுத்தேன் அது எங்கேன்னு தெரில உண்மைல அழகு நல்லவேளை பூச்சி வலையில் இல்லை

   Delete
 14. சூப்பர் படங்கள் சகோ/ஏஞ்சல்!!

  கீதா: அழகு படங்கள்! அதுவும் வண்ணத்துப் பூச்சி உங்கள் கமென்ட் "சொக்கா" ரசித்தேன். மொட்டு விரியும் போது...பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை!!!..என்று பாட வேணும் போல் இருக்கு.

  குளிர் படம் வாவ்! எனக்குக் குளிர் ரொம்பப் பிடிக்கும்..யானையின் உறவுகாரர் அழகா இருக்கங்களே!! பன்றி மாதிரியா...

  வாத்து, அந்த உடையில் உட்கார்ந்திருக்கும் வண்ணத்த்ப்பூச்சி மற்றும் எல்லா வண்ணத்துப் பூச்சிகளும் என்ன கலர் பா...இயற்கையின் அதிசயம்!!!

  எல்லாமே அழகு. இன்னும் தொடர்ந்து நிறைய போடுங்க ஏஞ்சல்!! ரசிக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா :) வண்ணத்துப்பூச்சி பண்ணை இங்கே ஸ்ட்ராட்போர்ட்ல இருக்கு அடிக்கடி சம்மர்ல போவோம் ..இன்னும் நிறைய படங்கள் பழையவை டெஸ்க்கிட்டாப்ல இருக்கு அதிலிருந்தும் எடுத்து போடறேன் இங்கே ..அந்த அன்னங்களின் அப்பா அம்மா பிள்ளைங்களை தனியா விட்டு வேலண்டைன்ஸ் டே கொண்டாடிட்டிருந்தாங்க :) மாலை நேரம் 6 மணி படமெடுக்கும்போது :)
   இங்கே குளிர் எலும்புக்குள்ள போகும் ...சில ஏரியாஸ் இருக்கு கண்ணே தெரியாதது புகை மூட்டம் ..ஜெர்மனில அப்படிதான் இருந்தது
   மலைபக்கம்லாம் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்

   Delete
 15. ஏஞ்சல்,

  ரிலீஸ் பண்றேன்னு, எல்லோரையும் பண்ணிடாதீங்க !

  படங்கள் எல்லாம் அழகா இருக்கு ! அதிலும் முதல் படம் சூஊப்பர் !

  ReplyDelete
  Replies

  1. வாங்க சித்ரா வாங்க :) எல்லாரையும் ரிலீஸ் செய்ய மாட்டேன் :)
   அந்த முதல் படமெடுத்த பிளேஸ்ல நானும் எடுத்துக்கிட்டேன் படம் அதே இடத்தில ..சம்மர் நேரம் அமைதியான அழகான இடமது

   Delete
 16. கண்ணுக்கு குளிர்ச்சியா...அழகான படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனுராதா .வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

   Delete
 17. அழகான படங்கள். வண்ணத்துப்பூச்சி அழகா இருக்கு. இப்படி புகை,பனி மூட்டமெல்லாம் இங்கேதான்னு நினைத்தேன். இம்முறை ஊரில எனக்கே குளிரா இருந்தது. ஒருநாள் ஆளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம். அன்று நான் சுடுநீரில்தான் குளியல் ரெம்ப வருஷம் கழிச்சு. ஆவ்வ்வ்வ்வ்.

  ReplyDelete