அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/7/17

சில மனிதர்களும் நாலுகால் நட்புக்களும் நானும் ...3 , Mute swans,என் நட்பு செல்லம்ஸ் அன்னங்கள் ,Mute Swans 
                                                                                                                        
நாங்க  அடிக்கடி நடைபயிற்சி  செல்லும் pond வழியே இவங்களை 2016 ஜூன் மாதம்  பார்த்தோம் அப்போதான் முட்டையில் இருந்து வெளிவந்து ஓரிரு நாட்களிருக்கும் ..அன்னப்பறவை 35-42 நாட்கள் அடைகாக்கும் .வாத்துக்களும் முட்டையிலிருந்து வெளிவர  40 நாட்கள் ஆகும் ..இந்த ஸ்வான்ஸ் வகைகள் பல உண்டு ..

http://www.wildfowl-photography.co.uk/identification/identswan.htm


..அன்னங்களின் குட்டி பாப்பாக்களை cygnets என்பார்கள் ..இந்த அப்பா அம்மா ஒரு பாப்பா அம்மாவின் சிறகடியில் ஒளிந்திருந்தது  .. தினமும் நடக்கும்போது இவங்களை பார்ப்போம் அவங்க ரொம்பவே ப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க குழந்தைங்க ஓடி எங்ககிட்ட வரும் அப்பாவும் வருவார் ஆனால் அம்மா மட்டும் கொஞ்சம் சந்தேக  டைப் கீப் யுவர் லிமிட் என்பது போல பார்ப்பாள் :) ..ஒன்றாகவே இரவிலும் இருப்பாங்க .ஒரு ஆங்கிலேயர் சொன்னார் குறைந்தது ஒரு வருஷம் பிள்ளைங்களை பத்திரமா பாதுகாக்குமாம் இவை பிறகு ..தனியே போங்கன்னு துரத்திடுங்களாம் ..அவர் சொன்னார் மனுஷங்க நாம் இவற்றிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் ..பிள்ளைகளை  அமுக்கி நம் கையிலேயே அடக்கி வைக்கக்கூடாது என்றார் ..

இது நவம்பர் மாதம் எடுத்த படம் 


இது  அவங்களை டிசம்பர் மாதம் பார்த்தப்போ எடுத்த படம் ..முதலில் புஸுபுஸுன்னு அழுக்கு நிறத்தில் இருந்தாங்க அப்புறம் சாம்பல் நிறம் பிறகு கொஞ்சமா வெண்ணிறம் எட்டிப்பார்த்தது 
எப்போ முழு வெண்ணிறம் வரும்னு ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் .ஜனவரி சில நாட்கள் pond பக்கம் போகலை மகள் சொன்னாள்  சிலவேளை அன்னங்கள் மைக்ரேட் செய்திருக்குமென .மனசுக்குஎன்னவோ போலிருந்தது ..பிறகு மீண்டும் ஜனவரி இறுதியில் ப்ரிட்ஜ் மேலே செல்லும்போது காரை நிறுத்தி இருட்டில் pond ஐ மேலிருந்து பார்த்தோம் குடும்பமே அழகா ஒன்றா நீந்திக்கொண்டிருந்தாங்க :) பிறகு போன வாரம் அதே பாண்டின் அடுத்த பக்கம் சூப்பர் மார்க்கெட்  இருக்கு அங்கே நடந்து செல்லும்போது வானில் படபடன்னு ஹெலிகாப்டர்  டேக் off ஆகிற மாதிரி இந்த நாலு பேரும்  பறக்கிறாங்க ..எனக்கு அழுகையே வந்துவிட்டது .
செல்லங்கள் மைக்ரேட் செய்றாங்க போலிருக்கு எத்தனை மைல் தொலைவு பறப்பார்களோ யார் அவர்களுக்கு சாப்பாடு தருவா டயர்ட் ஆகுமா இப்படியெல்லாம் மனது படபடத்தது ...அங்கேயே நின்னு சாமிக்கிட்ட குழந்தைகளுக்காக வேண்டிக்கிட்டேன் ..
வீட்டுக்கு வந்து இவர்களின் பயணம் பற்றி ஆராய்ச்சி செய்ததில் இவர்கள் mute swans ஆகவே தொலை தூரம்   போக மாட்டார்களாம் ..இங்கிலாந்தில் மறு பக்கம் குளிருக்கு உறையாத சூழல் உள்ள இங்கிலாந்தின் பகுதிக்கு அல்லது இன்னும் ஆழமான நீர் நிலைகளுள்ள பகுதிக்கு மட்டுமே இவை செல்லும் என கூகிளார் தகவல் தந்து என் மனதை அமைதி படுத்தினார் ..டேக் கேர் செல்லம்ஸ் சி யூ ஸூன் :)
ராக்கி தாத்தா 
-------------------------
நான்  நடைபயிற்சி செல்லும்போது சந்திக்கும் நபர் அவர் பெயர் தெரியாது ஆனால் அவர் செல்லத்தின் பெயர் ராக்கி ..தாத்தாவுக்கு 82 வயது ..இந்த தாத்தா தினமும் ராக்கியுடன் செல்லும்போது என்னுடன் பேசுவார் ////எனக்கு டிசம்பர் மாதம்  28 வயது ஆகப்போது என்று சிரித்தவாறே சொன்னார்...இதை 7 டு 8 முறை அவர் என்னிடம் சொல்லியிருக்கார் :)  ..oh யு லுக் வெரி யங் என்பேன் நான் :)..
அவர் சிரித்தவாறே என் வயதை திருப்பி போட்டுப்பார் 82 ..28ஆகிடும் இல்லையா என்பார் ..நான்  மனதுக்குள் நினைத்தேன் .நம்ம வயசை இந்த வருஷம் எப்படி போட்டாலும் அதே தான் வரும்னு :)..
தாத்தா ரொம்ப ஜோவியல் டைப் பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டார் ..ஒரு நாள் காலை தாங்கி  தாங்கி நடந்து வரவும் ..என்னாச்சுன்னு வினவியபோது சொன்னார் பெட்டி ஒன்றை தூக்கினத்தில் முதுகு  சுளுக்கு என்று .பிறகு அரை மணிநேரம் அதையே சொல்லி முடித்தார் .. 

அவருக்கு ஒரு வாழ்த்து அட்டை சிம்பிளா செய்து ஹாண்ட் பாகில்  வைத்திருந்தேன் .. அவரை வழியில் பார்க்கும்போது கொடுக்க ..அதன்பின் அவரை பார்க்கவில்லை 3 வாரங்கள் கழித்து ராக்கி வேறொருவருடன் வாக்கிங் சென்றது ..எனக்கு மனதுக்குள் நடுக்கம் ஆனா தினமும் என்னை பார்த்து பழகியதால் ராக்கி என்னை நோக்கி வரவும் ..ஹாய் ராக்கி என்றேன் அதனுடன் வந்தவர் உனக்கு இதை தெரியுமா என்றார் ..நான் ஆம் என்றேன் ..வேறொருவருடன் ராக்கி வரும்போது சந்தித்துள்ளேன் என்று தயங்கித்தயங்கி சொல்லி முடிக்குமுன் அவர் சொன்னார் ..நீ பார்த்தது என் அப்பா அவர் அவரது காதலியுடன் ஹாலிடேஸ் போயிருக்கார் 2 மாதங்கள் cruise  ஷிப் பயணம் ..மனதுக்கு அப்போதான் நிம்மதி ஆனது ..

சில பெண்களும் பொறாமையும் 


இந்த பொறாமை இருக்கே அது ஒரு பொல்லாத குணம் அழகான மனசை அழுக்காக்கும் ..பொறாமை இல்லாத மனிதரும் இல்லை பொறாமை இல்லாத செல்லங்களுமில்லை :) 
எங்க வீட்ல மல்ட்டி  வந்ததில் இருந்தது ஜெஸிக்கு பொறாமையின் அளவு கூடிவிட்டது அப்பப்போ பாவம் மல்ட்டியை மிதிக்கும் கடிக்கும் சேர்ல உக்கார விடாது தூங்கும்போது டமால்னு உருண்டு விழும் ..இந்த படத்தில் மல்ட்டி வாலை அமுக்கி பிடிச்சிருக்கு ஜெசி :)
முன்பு சென்னையில் எங்க வீட்ல வளர்த்த கோழிக்கும் பொறாமை இருந்தது என்றால் பார்த்துக்கோங்களேன் :)
அந்த கோழி சண்டைக்கோழி வகை ..முழுதும் சாம்பல்  நிறம் 

இந்த லிங்கில் சென்று சண்டை கோழி வகைகளை பார்த்து ரசியுங்கள் ..எங்க டும்மர் கோழி படம் மேலே attic இலிருக்கு வேறொரு நாள் தேடி போடறேன் ..
எங்களோடது பெண் கோழி எப்பவும் சேவல்களுடன் சரிசமமா சண்டை போடும் ..பொல்லாத பெண் கோழி முழு ஓணானை  பிடித்து கொன்று சாப்பிடும் ரவுடி ..மற்ற கோழிகள் குஞ்சுகளுடன் சென்றால் இதற்கு பொறாமை ..அந்த குஞ்சுகளை முரட்டு டீச்சர்ஸ் இருப்பாங்களே  அவங்களை மாதிரி தலையில் கொட்டி  கொத்தி விடும் .ஏனென்றால் அதற்கு முட்டை இட  முடியாது .ராணி மாதிரி சுற்றி வருவாள் ..ஒரு சேவல் வேறு கோழியுடன் இருந்தால் நடுவே சென்று பிரிச்சி விடும் :)

சில வருடங்கள்முன் நிபி என்ற ஹாம்ஸ்டர் வளர்த்தோம் அவசரமா ஊருக்கு போக வேண்டிய சூழலில் உறவினர் வீட்டில் 2 வாரங்கள் விட்டுச்சென்றோம் .அது கூண்டில் இருப்பதால் பிரச்சினையில்லை ..அவர்கள் வீட்டிலும் ஒரு பெண் ஹாம்ஸ்டர் இருந்தது நிபி வீட்டுக்குள் வந்தது முதல் அதற்க்கு பொறாமை உறவினர்கள் நிபியை கவனிப்பதை உணவிடுவதை தூரத்தில் இருந்து முறைத்து பார்க்குமாம் ..பிறகு என்ன தோணுச்சோ தெரியலை அதுனால் வரை கடிக்கும் பழக்கமில்லாத அந்த பெண் ஹாம்ஸ்டர் டெலிபோன் ஒயர் பேப்பர் டிவி ஒயர் என நிபி அங்கிருக்கும் நாட்களெல்லாம் நித்தம் ஒன்றை கடித்து துவம்சம் செஞ்சிருக்கு :) ..நாங்க ஊருக்கு வந்தபின் நிபியை எடுத்து வந்தபிறகு எதையும் கடிக்கவில்லையாம் அது :) அடுத்தது மனிதர்களில் பொறாமை :)
எங்கள் பள்ளிக்கூட நாளிலேயே ஆசிரியர்கள் சொல்வார்கள் மாணவர்களிடையே போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது ..இந்த பொறாமை மனிதரை அழிக்கும் ..
நல்ல குணங்களை நம்மிடமிருந்து நீக்கிவிடும் ..சின்ன விஷயங்களுக்கெல்லாம் பொறாமை பட்டா அது கொஞ்சமா சேர்ந்து சேர்ந்து பூதாகரமாக வெடிக்கும் ....என்னுடன் பள்ளியில் படித்த ஒரு மாணவி அவளும் கிறிஸ்டியன்தான் ..வகுப்பில் எப்பவும் அவள்தான் முதல் மதிப்பெண் எடுப்பவளாம் நான்  அந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பிலமாற்றலாகிவந்து சேரும் வரை ..நான் வந்ததும் அந்த முதல் ரேங்கை தட்டி பறித்ததில் அவளுக்கு கோபம் ..ஆனால் என்னுடன் நட்பாகி விட்டாள் ..நான் இல்லாத நேரம் எனது பரீட்சை தாள்களை எடுத்து தனது தாள்களுடன் ஒப்பிட்டு பார்ப்பாளாம் ..எதனால் தனக்கு மதிப்பெண் குறைந்தது என புலம்புவாளாம் .. ..மற்ற நட்புக்கள் சொன்னபோது மனதுக்கு கஷ்டமாகிப்போனது ..என்னிடம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன் நான்  இல்லாத நேரம் எனது தாளை refer செய்ய  என ஆசிரியரிடம் கேட்டு குற்றம் கண்டுபிடிப்பதில் என்ன ஆனந்தமோ :( ..இது ஒரு வகை மன நிலை தனது இடத்தை ஒன்னொருவர் பிடித்துக்கொண்டார்களே என்ற ஜெலஸ் :).மேலும் தான் மட்டுமே லைம்லைட்டில் இருக்கணும் என்ற குணமும் காரணம் . அதைவிட முக்கியமான விஷயம் முதல் ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்கு பள்ளி அசெம்பிளியில் பாட்ஜ் தருவாங்க அந்த பாட்ஜ் தரும் நாள் அவள் லீவ் போட்றுவா :) பாட்ஜ் வாங்கறது நானாச்சே ..பிறகு இரண்டுமுறை அவள் முதல் ரேங்க்  எடுத்தபோது நான் ஓடிச்சென்று வாழ்த்தி எனது சந்தோஷத்தை வெளிக்காட்டினேன் ..ஆனால் அவள் திருந்தலை :)..சிலருக்கு பொறாமை குணம் சாகுமட்டும் தொடரும் போல ...இதை பற்றி  பேசினால் இன்னும் நீளும் என்பதால் இந்த டாப்பிக்கை இங்கேயே முடித்து கொள்கிறேன் :)
மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் ..ஒரு  நட்பின் வலைப்பூ அறிமுகம் ..https://surejini.blogspot.co.uk/
எங்கள் நண்பி  சுரேஜினி முகப்புத்தகத்தில் அழகாக கைவினை சமையல் குறிப்பு  மற்றும் கதை , கிச்சன் கார்டெனிங் ,கிராப்ட்  குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றையும் பற்றி அழகாக எழுதுவார் இங்கே வலைப்பூ பக்கம் வந்திருக்கார் அவரது வலைப்பூ =======================================================================40 comments:

 1. ஆஹா அன்னப்பறவைகள் எனக்கும் இங்கு ஃபிரெண்ட்ஸ் இருக்கிறாங்க.. நிறைய ஃபோட்டோஸ் எடுத்து வச்சிருக்கிறேன், ஒரு நாளைக்கு வெளிவரும்.

  உண்மைதான் அஞ்சு, நம்மைப் பார்த்தால் ஓடி வருவாங்க, கையில் ஏதும் எடுத்துப் போகாது விட்டால் கவலையாக இருக்கும்.. கிட்ட வந்து பார்த்திட்டு ஏமாந்து போவாங்க... கையைக் கையைப் பார்ப்பாங்க...

  உங்க ஃபமிலிக்கு இரு குழந்தைகள்போல... இங்கு இம்முறை 5 குட்டீஸ் ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா முதல் வருகைக்கு ஏதாச்சும் தரணும் :)
   இந்தாங்க ஜெஸி ட்ரீட்ஸ் :)

   ஆமாம் அதிரா அன்னங்கள் விர்ருனு ஓடி வருங்க தண்ணில பார்க்க கொள்ளை அழகு
   மூணு குடும்பங்கள் பாப்போம் அதில் இந்த ரெண்டு உள்ளவங்க எங்க ஏரியா .I USED TO CARRY BREAD FOR THEM :)

   Delete
 2. ///திருப்பி போட்டுப்பார் 82 ..28ஆகிடும் இல்லையா///

  ஹா ஹா ஹா ஆனா 16 ஐ எல்லாம் இப்பூடித் திருப்பிப் போட்டுப் பார்க்க முடியாது கர்ர்ர்ர்ர்:)

  ReplyDelete
 3. ///நீ பார்த்தது என் அப்பா அவர் அவரது காதலியுடன் ஹாலிடேஸ் போயிருக்கார் 2 மாதங்கள் cruise ஷிப் பயணம் ..மனதுக்கு அப்போதான் நிம்மதி ஆனது ..///
  ஸ்ஸ்ஸ்ஸப்பா கொஞ்ச நேரம் நானும் நடுங்கிப்போயிட்டேன்ன்ன்.. எப்பவும் நல்லதையே நினைக்கோணும் என்பினம், ஆனா இப்படியான தருணங்களில் தப்பாத்தான் நினைக்க தோணுது.. அவரின் வயசும் ஒரு காரணம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா ..மனசு குரங்காச்சே நமக்கு நெகட்டிவா நினைக்ககூடாத்தினாலும் எதோ ஒரு உணர்வு யோசிக்கவைக்கும்

   Delete
 4. ///சில பெண்களும் பொறாமையும் ///
  ஹா ஹா ஹா நல்லவேளை இந்த லிஸ்ட்டில் நான் இல்லை:)) ஏனெனில் மீக்கு 4 கால்:))

  ReplyDelete
  Replies
  1. நாலா இருந்தா நாலுமடங்கு பொறாமையும் இருக்கும் :)
   நீங்கதான் அந்த லிஸ்டின் முதல் ஆள்

   Delete
 5. ///எங்க வீட்ல மல்ட்டி வந்ததில் இருந்தது ஜெஸிக்கு பொறாமையின் அளவு கூடிவிட்டது///
  ஹா ஹா ஹா அவட மம்மியைப் போலவேதானாக்கும்..க்கும்..க்கும்.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) இப்போதைக்கு இந்த வெடி போதும்... மிகுதிக்குப் பின்பு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் ஜெசி அப்படியே அதோட ஆன்ட்டி அதிரா மாதிரி :)

   Delete
  2. கர்ர்ர்ர்ர் ஒரு சின்ன திருத்தம்:) ஜெஸியோட யங்கஸ்ட் சிஸ்டராக்கும்:)

   Delete
 6. அன்னங்களின் படங்களும், அவற்றுடனான தங்களின் நட்பும், அவற்றைப் பற்றிய தங்களின் தனி அக்கறையும் பார்க்கவும் படிக்கவும் மிகவும் அழகாக உள்ளன.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஒவ்வொன்றையும் தனியே ரசித்து கருத்திட்டமைக்கும் மிக நன்றி கோபு அண்ணா

   Delete
 7. //அவர் அவரது காதலியுடன் ஹாலிடேஸ் போயிருக்கார் //

  கொடுத்து வைத்த சூப்பர் தாத்தா.

  //நம்ம வயசை இந்த வருஷம் எப்படி போட்டாலும் அதே தான் வரும்னு :)..//

  33 அல்லது 44 இதற்குள் ஏதோ ஒன்றாகவே இருக்கணும் என நினைத்துக்கொண்டேன். :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இல்ல இல்ல கோபு அண்ணன் 55 அல்லது 66.. இதனுள் ஒன்றாகத்தான் இருக்கும்:).. ஆனா 77 நிட்சயமா இல்லை:).. ஏனெனில் இன்னும் கை கால் நடுக்கம் தொடங்கவில்லை:)) நான் பார்த்தேனே:)) ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊஊஊ:)

   Delete
  2. GOPU அண்ணா சரியா கண்டுபுடிச்சீங்க :)

   Delete
  3. @ATHIRAAAV GARR !"££$!""£$%^&*()y%£"!%^*()^%£$thswqrhbnhkerw""£$juytg!"£$%^&*()_)(*&^%$£"

   Delete
 8. //அவர்கள் வீட்டிலும் ஒரு பெண் ஹாம்ஸ்டர் இருந்தது நிபி வீட்டுக்குள் வந்தது முதல் அதற்க்கு பொறாமை உறவினர்கள் நிபியை கவனிப்பதை உணவிடுவதை தூரத்தில் இருந்து முறைத்து பார்க்குமாம் ..பிறகு என்ன தோணுச்சோ தெரியலை அதுனால் வரை கடிக்கும் பழக்கமில்லாத அந்த பெண் ஹாம்ஸ்டர் டெலிபோன் ஒயர் பேப்பர் டிவி ஒயர் என நிபி அங்கிருக்கும் நாட்களெல்லாம் நித்தம் ஒன்றை கடித்து துவம்சம் செஞ்சிருக்கு :) ..நாங்க ஊருக்கு வந்தபின் நிபியை எடுத்து வந்தபிறகு எதையும் கடிக்கவில்லையாம் அது :) //

  கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  //அதைவிட முக்கியமான விஷயம் முதல் ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்கு பள்ளி அசெம்பிளியில் பாட்ஜ் தருவாங்க அந்த பாட்ஜ் தரும் நாள் அவள் லீவ் போட்றுவா :) பாட்ஜ் வாங்கறது நானாச்சே ..//

  அதிரா ..... இதெல்லாம் ஒருவேளை உண்மையாக இருக்குமா ? :)))))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. விலங்குகளின் வாழ்க்கை முறை மிக அருமையானது ..நான் சிறுவயது முதல் கவனித்திருக்கேன் ..
   அண்ணா நான் சொல்வதெல்லாம் உண்மை :)என்னிக்காவது ஸ்வீட் 16 என்று நான் சொல்லியிருக்கேனா :)
   நம்பனும் அஞ்சு சொல்வதை

   Delete
  2. ////அதிரா ..... இதெல்லாம் ஒருவேளை உண்மையாக இருக்குமா ? :)))))

   >>>>>////
   இல்ல இல்ல இல்லவே இல்ல.... இது அந்த அஞ்சு வீட்டில் மல்ட்டி படுக்கும் பில்லோ மேல் அடிச்சு சத்தியம் பன்றேன்ன்ன்ன்ன்:)

   Delete
 9. வீடியோவில் நீஞ்சும் இரு குஞ்சுகளும் பார்க்க மிகவும் அழகோ அழகாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அழகா இருக்காங்க இல்லையா அண்ணா ..குழந்தையில் எல்லாமே அழகு :)

   Delete
  2. ஆமா ஆமா அதிராவைப்போலவேதான்ன்ன்ன்:)

   Delete
 10. ///.ராணி மாதிரி சுற்றி வருவாள் ..ஒரு சேவல் வேறு கோழியுடன் இருந்தால் நடுவே சென்று பிரிச்சி விடும் :)//

  ஹா ஹா ஹா இது மனிசரை விட மோசமா இருக்கே:)

  ReplyDelete
  Replies
  1. ஹா :)ஹா ஆமா அதிரா ..சீரியல் வில்லி தான் அவ ..பேன் பார்க்குற மாதிரி ஆண் சேவல் கழுத்தையே மொட்டை அடிச்சிவிட்ருவா

   Delete
 11. ///மற்ற நட்புக்கள் சொன்னபோது மனதுக்கு கஷ்டமாகிப்போனது ..என்னிடம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன்////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகவும் ஓவரா நல்ல பிள்ளையா நடிக்கக்கூடா.. பிறகு எனக்கு BP வந்திடும் சொல்லிட்டேன்ன்:)... நானும்தான் எத்தனையோ நாளா கேட்கிறேன்ன் இன்னும் தரவேயில்ல:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் அது என்னோட எக்ஸாம் பேப்பர்ஸை சொன்னேன் ..உங்க ஆசை என்ன சொல்லுங்க :) நான் வைச்சிருக்க ஹெலிகாப்டர் உங்களுக்குத்தான் போதுமா

   Delete
  2. kinder surprise helicopter :))

   Delete
 12. ///சிலருக்கு பொறாமை குணம் சாகுமட்டும் தொடரும் போல ...///

  ஆமா ஆமா என் வைரக்கல்லு மோதிரத்திலும் சிலருக்கு சாகும்வரை பொறாமை:))

  ReplyDelete
  Replies
  1. இல்லியே எனக்கு அந்த மோதிரம் வேணாம் உங்க Lamborghini Veneno மட்டும் போதும் :)

   Delete
 13. வாசித்துவிட்டோம் ஆல் செல்லம்ஸ் சூப்பர் தாத்தா உட்பட...

  கீதா: ஏஞ்சல் இதோ மீண்டும் வருகிறேன்...இப்ப வாக்கிங்க் போய்ட்டு வரேன்..வந்ததும் மீண்டும் கமென்ட்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா :) நீங்களும் அந்த ஸ்வான்ஸ் படங்களை போடுங்க

   Delete
 14. அன்னங்கள் பிறப்பது ஓரிடம். வளர்வது ஓரிடம் என்று தெரிகிறது. அவ்வப்போது உங்களை அவை சந்திக்க வரக்கூடும்.

  ராக்கி மற்றொருவருடன் வந்தது என்றதும் உங்கள் பயம் எனக்கும் வந்தது. நல்லவேளை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :) நமக்கு நட்புக்களில் இரண்டு கால்களை விட இந்த பறப்பன நீந்திபறப்பன பௌ பௌஸ் மியாவ்ஸ் எண்ணிக்கை அதிகம் :) ராக்கி தாத்தா மட்டுமில்ல எனக்கு அடிக்கடி சந்திப்போர் ஒரு நாள் பார்க்கலைன்னாலும் மனசு திக்குனு அடிக்கும் ..
   ஒரு ஜோடி புறாக்கள் சம்மர் நேரம் சரியா எங்க வீட்டு பின்பக்கம் வருவாங்க ஓட்டு மேலே தினமும் அமர்ந்து கதைபேசி நான் வைத்துள்ள பறவை உணவை சாப்பிட்டு போவாங்க ;;இந்த ஜெசி நண்பர்கள் கொடுத்தால் வரவேண்டிய பல பறவைகள் இப்போல்லாம் வர்ரதில்லை ..இந்த அன்னங்களை மீண்டும் சந்திக்கணும் நேற்று கால்வாய் அருகே வாக் போனப்போ மனசு வலிச்சது குழந்தைகளை காணாது

   Delete
 15. அன்னங்கள் கலக்கல்ஸ்......ஆம் அன்னம் அழகுதான்...அது சரி நீங்கள் அன்னம் போல நடை நடந்து" (அதிரா நோட் திஸ் பாயின்ட்!!!) வாக்கிங்கா!!!! ஹஹஹஹ்
  ஆமாம் இவை நம்மைப் பார்த்தால் அழகாக ஓடி வரும்!!! நாம் ஏதேனும் கொடுப்போமா என்று வேறு பார்க்கும்...நான் கூட சமீபத்தில் ஃபோட்டோ எடுத்து வைத்துள்ளேன்...

  ராக்கி தாத்தா ராக்ஸ்!!!!

  பொறாமை ஆம்!! மனிதர்களிடம் கேட்கவே வேண்டாம்...அந்தப் பொறாமையை வெல்லும் வழி நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர்களிடம் சென்று பாராட்டுவது...இல்லை என்றால் நாமே நம்மைக் குறை சொல்லிக் கொள்வது..ஒன்றும் தெரியவில்லை என்பது போல ..அதையும் நல்ல எண்ணத்துடன் தான் அதாவது பொறாமைப் படுபவர்களை நல்லது எண்ண வைக்கலாமெ என்ற நோக்கில்..(உள்ளுக்குள் நம் தன்னம்பிக்கை அப்படியே தான் இருக்கும்...) கொஞ்சம் புகை அடங்குமே என்ற நல்லெண்ணத்தில். அதையும் மீறி புகையும் என்பது வேறு. வெடித்துவிட்டால் கூட பரவாயில்லை. புகைவதுதான் ஆபத்து...திருத்த முடியாது...

  செல்லங்களின் பொறாமை ரசிக்க வைப்பவை!!!! எங்கள் வீட்டிலும் என் மகன் என் மடியில் படுத்தால் கண்ணழகிக்குப் பொறாமை வந்துவிடும். அவளும் மடியில் படுக்க முயற்சி செய்வாள். அதே போன்று ப்ரௌனியைக் கொஞ்சி விட்டு கண்ணழகி இருக்கும் ரூமுக்கு வந்தால் கண்ணழகி கூடுதலாக என்னைக் கொஞ்சச் சொல்வாள்!! சில சமயம் அவள் முகத்தைப் பார்க்க வேண்டும்...இருவரும் ஒரே வெல்பிங்கில் பிறந்தவர்கள் சேலஞ்சிங்க் எனவே இருவரையும் தனித்தனியாகத்தான் கட்டிப் போட்டு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. யாரேனும் ஒரு மகள் மகனின் சித்தப்பா வீட்டிற்குச் சென்றால் இங்கு நம் வீட்டில் இருப்பவள் ஃப்ரீயாகச் சுற்றுவாள். செல்லங்கள் எப்போதுமே அது பொறாமையாக இருந்தாலும் தெ ராக்!!! உங்க ஜெஸி ரொம்ப க்யூட் மல்டியைப் படுத்துவதைப் பார்க்கும் போது ஹஹஹ்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அங்கும் இருக்கா !!அன்னங்கள் ! நானாக முந்தி geese வளர்த்தோம் mcc லேப் பழவேற்காட்டில் இருக்கு அங்கும் பார்த்திருக்கேன் அப்புறம் பூண்டி மீன் பண்ணையிலும் நிறைய கீஸ் இருக்கும் இன்டெக்ரேட்டட் பண்ணையாதலால் பூச்சிகளை சாப்பிட வளர்ப்பாங்க .. இந்த அன்னங்கள் என்னை பார்த்தவுடன் வேகமா நீந்தி வருவாங்க அவற்றுடன் moor hens மற்றும் மல்லார்ட் வாத்துகளும்தான் கண்கொள்ளா காட்சி அதுவும் இந்த மூர் ஹென்ஸ் குஞ்சுகளை பார்த்தா ஆசைப்படுவீங்க குட்டி கரு நிற டேபிள் டென்னிஸ் பந்து அளவுதான் இருப்பாங்க தாமரை இல்லை மேல் உக்கார்ந்திருப்பாங்க சிலநேரம் ..
   ஹா ஹா பொறாமை பற்றி சரியா சொன்னீங்க விலங்குகளின் பொறாமையை ரசிக்கலாம் ஆனால் மனிதரில் :(

   அப்புறம் விலங்குகளில் நிறைய எழுதலாம் இடம் போதாதுன்னு விட்டேன் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா

   Delete
 16. swans அழகா இருக்கு...

  ராக்கி தாத்தா செம்ம சூப்பர்...

  பொறாமை...சிலபேருக்கு மாற்ற முடியாத இயல்பு ..என்ன செய்வது..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனுராதா :) ராக்கி தாத்தாக்கள் நிறையப்பேர் இங்கிருக்காங்க .வாழ்க்கையை அனுபவித்து வாழ்வாங்க ..
   ஆமாம்பா பொறாமையையம் பொறாமை கொண்டோரையும் மாற்ற முடியாதது ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 17. அன்னங்கள் அழகு...
  அருமை...

  ReplyDelete
 18. நடைபாதையில் அருகே ஆறுகள் எல்லா இடமும் இங்கு இருக்கும் போல அஞ்சு. அதிரா.நீங்க,ஏன் நான் நடக்கும் பாதையே பெரிய biggesee தான். (biggesee germany என டைப் செய்யுங்க பார்க்கலாம் எங்க ஆறு) இவங்க ராஜ்ஜியம் தான் அங்கும் பெரிய ஸ்வான்,சின்னதுமா இருக்கு. சத்தம் ஊரையே கூட்டும் என்னா சத்தம். வைட்,சாம்பல் சேர்ந்தது அழகு.

  ஸோ ..ஸ்வீட் ஜெஸீஈஈஈ... எனக்கு ஜெஸியோட பொறாமை பிடிச்சிருக்கூஊஊ. அவங்கட இடத்துக்கு போட்டியா வந்திட்டாங்கன்னு கூட புரியுதுதானே. இவங்க பேசினாங்கன்னா என்ன ஆகும் நம் நிலமை, என்ன பேசுவாங்க இப்படியெல்லாம் நான் யோசிப்பேன் அஞ்சு. ரவுடி கோழி என்னா வில்லத்தனம்..அப்பப்பா.

  படிப்பு விடயத்திலும் விட நல்லாயிருக்கும் வாழ்க்கை, பிள்ளைகள் வாழ்க்கை என இந்த பொறாமை யாரிலும் இருக்கு அஞ்சு. நீங்க சொல்வது போல் பெண்கள்தான் முன்னனி..

  ReplyDelete