அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/17/17

பச்சை சொக்காவும் மஞ்சள் சொக்காவும் ..பார்ட் ..2

பச்சை சட்டையும்  மஞ்சள் சட்டையும்    ..பார்ட் ..2

=========================================================


போன வருஷம் ஒரு பதிவு போட்டேன் அதன் லிங்க் கீழே தருகிறேன் ..அதில் ரெண்டு குட்டி பொண்ணுங்களைப்பற்றி சொல்லி நான்  யாருனு கேட்டிருந்தேன்..இந்த முறை ஒரு பொண்ணு பற்றி சொல்லப்போறேன்.. 

உறவினர் ஒருவரது வீட்டில் காந்தாரி வெள்ளை மிளகாய் செடி ஒன்று தொட்டியில் வளர்ந்து வந்தது அந்த உறவினர் தோட்டத்தை   மிக அழகாக பராமரித்து வந்தார் தோட்டத்தில் ரோஜாக்களும் க்ரோட்டன்ஸ்சும் நிறைய இருந்தாலும் அந்த சிறுமிக்கு அந்த வெள்ளை நிற காந்தாரி மிளகாய் செடி மீது ஆச்சர்யம் .
.எல்லா பூவும் விரியும் அந்த வெள்ளை பூ மட்டும் விரியாமல் அழகாய் இருக்கிறதே என்று வியப்பாள் ..மிளகாயை மலரென்று அந்த குழந்தை நினைத்து கொண்டது ..அதுவும் அந்த உறவினர் மிளகாய் செடியை மட்டும் மிக அதிகமாக பராமரிப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்து வந்தது ..ஒரு நாள் யாருமில்லாத நேரத்தில் அந்த அறிவு செறிந்த குழந்தை  ஆராய்ச்சியில் இறங்கியது ! எல்லா செடியும் தரையில் இருக்கே இந்த காந்தாரி மிளகாய் மட்டும் ஏன் தொட்டியில் தனிமையில் வாடணும் என நினைத்து (பாருங்கள் நட்புக்களே அந்த குழந்தை அப்போவே தனிமை விரும்பியில்லை யாரும் தனித்திருந்தாலும் பிடிக்காது அதற்கு ) ஒரு காரியம் செய்தது ..அது ...அந்த செடியை கஷ்டப்பட்டு தொட்டியில் இருந்து எடுத்து விட்டது ..பிறகு அதை கூட்டத்தோடு கூட்டமாக நட இடம் தேடியது !!அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்கவும் அவசரஅவசரமாக அதே தொட்டியில் நட்டு விட்டு தப்பித்தோம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து ஓடி வீட்டுக்குள் ஒளிந்து கொண்டது ..
உறவினர் வந்தார் ..யார் மிளகாய் செடியை தொட்டது என கோபத்துடன் அனைவரிடமும் கேட்டார் .குழந்தைக்கு ஆச்சர்யம் நாமதான் ஒழுங்கா நட்டோமே எப்படி அங்கிள் கண்டுபுடிச்சார் என ?.எல்லாரும் தெரியாது என சொன்னார்கள் மெதுவாய் அந்த குழந்தை வெளியே வந்து பார்த்தது அதற்கு பேரதிர்ச்சி ..

ஏனென்றால் அவசரத்தில் குழந்தை மிளகாய் செடியை வேர் மேலே தெரிகிறமாதிரி  தலை கீழா நட்டு வைத்திருக்கு :)
அந்த குழந்தை ஹீஈஹீ :) நானேதான் ..
அப்புறம் ஒரு சின்ன FLASHBACK ....

போன வருடம் கஷ்டப்பட்டு பாடுபட்டு சிறகு அவரை விதைகளை காய வைத்து குட்டி செடிகளாக வளர்த்து படம் போட்டேன் நினைவிருக்கா !

மூன்று வாரங்கள் கழித்து அந்த குட்டி செடிகளை எடுத்து வெளியில் தொட்டியில் நட்டு நத்தை பூச்சிகளிடம் இருந்து பாதுகாத்து வளர்த்தேன் ..செடிகள் வளர்ந்தனசெடி கொடியாக மாறாமல் குட்டையாகவே இருந்தது DWARF வெரைட்டி என சமாதானம் செய்து கொண்டேன் .. பிறகு  மலர்கள் வந்தன ..கொஞ்சம் சந்தேகமும் எனக்கு துளிர்த்தது !! மலர்களிலிருந்து வட்ட வட்ட காய்கள் வர துவங்கின ..பிறகு அந்த காய்களை சேகரித்து மணத்தக்காளி காய்  குழம்பு செய்தென் :)))))))
விதைத்தது  ஒண்ணு  வளர்ந்தது ஒண்ணு ..எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று எனக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை என் செல்லம் :) அவளே சொல்லிட்டா ...
என்ன நடந்தது என்றால் ..நான்  படமெடுத்து போடும் வரை அது சிறகவரை செடிதான் .பிறகு ஒரு நாள் எங்க வீட்டு குட்டி சாத்தான் ஜெஸி ஜன்னலில் ஏறி அங்கிருந்த குட்டி தொட்டியில் வளர்ந்திருந்த நாற்றுகளை பிய்த்து போட்டிருக்கு ..நான்  தினமும் சிறகவரை செடிகளுடன் பேசுவதை அவற்றை ரசிப்பதை  மகள் கவனிச்சிருக்கா என் மனது கவலைப்படக்கூடாதென்று தோட்டத்தில் வளர்த்து வந்த மணத்தக்காளி நாற்று செடிகளை அங்கே எடுத்து நட்டு வைத்திருக்கா ..எனக்கு சொல்லலை அதைப்பற்றி :)
அவளுக்கு அவை செடி என்பது மட்டுமே தெரியும் என்ன செடின்னு தெரியாது :) ஸோ சிறகவரை மணத்தக்காளியாகி விட்டது :))

மற்றுமொரு பதிவில் சந்திப்போம் ....

44 comments:

 1. ஓ அந்த அழகிய மிளகாய்ச் செடிகளைத் தலை கீழாக நட்டுப் படப் பண்ணிய கொயந்தை நீங்கதானோ கர்ர்ர்ர்ர்:).....

  அதற்குப் பிராயச் சித்தமாகத்தான் இன்றுவரை மரம் தறிப்போருக்கு எதிராகப் போராட்டம் நடத்துறீங்களோ???

  என்ன நடாத்தினாலும் விட மாட்டேன்ன்ன் மிளகாய்ச் செடியைப் பிடுங்கியதும் இல்லாமல் தலை கீழாக நட்ட குற்றத்துக்காக இதோ புறப்பட்டுவிட்டேன்ன்ன் காண்ட் கோர்ட்டுக்கு... விரைவில் சங்கிலி வரும் கைக்கு:)

  வீட்டுக்குள் ஒளிச்சாலென்ன ஜெசிக்குப் பின்னால ஒளிச்சாலென்ன விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் நேக்கூஊஊஊ நீதி தேவைஐஐஐ:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிரா வாங்க :) அந்த குழந்தை அமைதியான அன்பான குழந்தை அப்பாவி குழந்தை அதை ஒண்ணுஞ்சொல்லக்கூடாது

   Delete
 2. ///// ட்டியில் தனிமையில் வாடணும் என நினைத்து (பாருங்கள் நட்புக்களே அந்த குழந்தை அப்போவே தனிமை விரும்பியில்லை யாரும் தனித்திருந்தாலும் பிடிக்காது அதற்கு ////
  பாவம் "மிஸ்டர் அஞ்சு"..... அவருக்கு என் அனுதாபங்கள்:).

  ReplyDelete
  Replies
  1. !"££$%^&I)))(*&^%$£"!¬!"£RTYUI)(*&%$£
   why why whyyyyyyyyyyyyyy?

   Delete
 3. எத்தனையோ வருடங்களுக்குப் பின்பு போன கிழமைதான் எங்கள் தமிழ்க் கடையில் சிறகவரை பார்த்து ஆசையில் வாங்கி வந்து சமைத்தேன்...

  காய்ச்சதோ அஞ்சு உங்களுக்கு??

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா சிறகவரை மணத்தக்காளி ஆச்சா?? அஞ்சு வீட்டில அதிசயம் என பிபிசி ல சொன்னாங்கோ.... அது இது தானா????:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) அங்க வரைக்கும் நியூஸ் பரவிடுச்சா ..நான் பிரபலமாகிட்டேன்

   Delete
 5. ஓ அந்த அழகிய மிளகாய்ச் செடிகளைத் தலை கீழாக நட்டுப் படப் பண்ணிய கொயந்தை இப்போ வூட்டுகாரரையும் அப்படி தலைகிழாக கட்டி தொங்கவிட்ட கதையை அடுத்த பதிவில் படிக்கலாம் ஹீஹீ வேலைக்கு நேரமாச்சு இப்ப எஸ்கேப்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) சில ரகசியங்கள் வெளி வருவதில்லை :)
   have a nice day ..நானும் வாக் போறேன் மகளோடு :) எங்களுக்கு டெர்ம் ஹாலிடேஸ் இப்போ ..சத்தமா சொல்லிக்கறேன் அதிராவுக்காக :)

   Delete
  2. haa haaa :) why cat is roaring :)

   Delete
 6. கதை செம க்யூட் அக்கா !! உங்க ஜெசி உங்களாட்டம் தானே இருக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜி :)
   அவசரப்பட்டு ஜெசியை குட்டி சாத்தான்ன்னு எழுத்திட்டனோ :)) என்னை மாதிரின்னா நான் பெரிய........ :))))

   அந்த ரெண்டு கால் பொண்ணுக்கும் நான் தான் அம்மா

   Delete
 7. rofl ... nice write up indeed
  life itself has several hilarious events..

  ReplyDelete
  Replies
  1. Thanks Kasthurirengan ..hope you all are keeping fine ..
   yes especially ours was a mini farm house ..i enjoyed every thing surrounding me .theres a lot more to come :) will share them here ..

   Delete
 8. // போன வருஷம் ஒரு பதிவு போட்டேன் அதன் லிங்க் கீழே தருகிறேன் ..அதில் ரெண்டு குட்டி பொண்ணுங்களைப்பற்றி சொல்லி நான் யாருனு கேட்டிருந்தேன்..இந்த முறை ஒரு பொண்ணு பற்றி சொல்லப்போறேன்..

  https://kaagidhapookal.blogspot.co.uk/2015/07/loud-speaker-27.html//

  அதிரா ..... நான் வேலை மெனக்கட்டு மேற்படி பதிவுக்குச் சென்று பார்த்தேன். அதில் காணப்படும் இரண்டு குட்டிக்குழந்தைகளும் சம வயது போலவே காட்சியளிக்கிறார்கள். அதில் மஞ்சள் சட்டை தன் பெண் எனச் சொல்லியிருந்தார்கள் உங்கள் அஞ்சு. அதில் உள்ள பச்சை சட்டை தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். ஒரே கொயப்பமாக உள்ளது.
  இதனால் உங்கள் பாஷையில் என் நித்திரை போச்சு.

  ஒருவேளை அவர்கள் இருவரும் குட்டியூண்டாக இருந்தபோது, தனித்தனியாக எடுக்கப்பட்ட போட்டோக்களாக இருக்குமோ என்னவோ. அம்மாவையும் பெண்ணையும் நேரில் பார்த்துள்ள தாங்கள் தான் இதனைத் தெளிவு படுத்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) 6/7 வயதில் எடுத்த படங்கள் கொலாஜில் போட்டேன் அந்த உடை நிறத்துக்காக .
   மேலும் இதுவரை நாலுகால் அதிராவை நான் இதுவரை சந்தித்ததில்லை ... என்னை பார்த்துள்ளார்கள் ஒருவர் பாயிஜா அவர் முகப்புத்தகம் பக்கமே இருக்கார் ..பிளாக் பக்கம் வந்தா சொல்லச்சொல்றேன் :)

   Delete
  2. கோபு அண்ணன் உங்கட நித்திரை இண்டைக்கும் போனாலும் பறவாயில்ல, நான் ஒண்ணே ஒண்ணுதான் டெல்லுவேன்:) அதாவது அம்மா.... ஜாடி மாதிரி இருப்பா:), எனக்கு அங்கின ஒன்று இங்கின ஒன்று பேசும் பயக்கம் இல்லை:), ஹையோ மீ காசிக்குப் போக வலது லெக்கைத் தூக்கி பிளேன் படியில வச்சிட்டேன் பாய் பாய்ய்ய்ய்ய்ய்:).

   Delete
  3. என்னாதூஊஊ 67 வயசிலயாஆஆஆஆ?????

   Delete
 9. //மிளகாயை மலரென்று அந்த குழந்தை நினைத்து கொண்டது ..அதுவும் அந்த உறவினர் மிளகாய் செடியை மட்டும் மிக அதிகமாக பராமரிப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்து வந்தது//

  ஆஹா, அந்தக் குழந்தையின் கற்பனை மிகவும் அழகு.

  //ஏனென்றால் அவசரத்தில் குழந்தை மிளகாய் செடியை வேர் மேலே தெரிகிறமாதிரி தலை கீழா நட்டு வைத்திருக்கு :) அந்த குழந்தை ஹீஈஹீ :) நானேதான் ..//

  நினைத்தேன். குழந்தைத்தனத்தை ரஸித்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் கோபு அண்ணா ..அது எங்க அம்மா வழி மாமா வீடு :) அவர் தோட்டமெல்லாம் ரோஜா சம்பங்கி என பூத்து குலுங்கும்
   கொய்யாவில் 3 வெரைட்டி மாதுளை ராம்சீதா என்று தோட்டமெல்லாம் இருக்கும் மல்லி... றோஸ் போல ஒரு பூ வெரைட்டி அவர் வீட்டில் மட்டுமே இருந்தது அவர் இப்போ இல்லை ஆனால் மகன் தோட்டத்தை கவனிக்கிறார் .
   பல வருஷமுன் நடந்ததை அவர்கள் குடும்பமே இன்னும் நினைவு கூறும் :)

   Delete
  2. /////நினைவு கூறும்////
   றீஈஈஈஈஈஈஈஈச்சர்ர்ர்ர்ர் ஓடியாங்கோஓஓ ஸ்பெல்லிங் மிசுரேக்க்க்க்கூஊஊஊஊ

   Delete
 10. //எனக்கு சொல்லலை அதைப்பற்றி :) அவளுக்கு அவை செடி என்பது மட்டுமே தெரியும் என்ன செடின்னு தெரியாது :) ஸோ சிறகவரை மணத்தக்காளியாகி விட்டது :)) //

  நல்லவேளையாக, வேறு ஏதேனும் சமையலுக்குப் பயன்படாத (பயன் படுத்தக்கூடாத) செடிகளை தங்கள் குழந்தை, தங்களுக்குத் தெரியாமல் அதே இடத்தில் நட்டு வைக்காமல் இருந்தாளே. அதுவரை நல்லதே.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா எங்க தோட்டத்தில் அதுவும் சம்மரில் மட்டுமே காய்கறி கிச்சன் கார்ட்டனிங் செய்றோம் ..இந்த மணத்தக்காளி விதைகள் செடியிலிருந்து பழுத்து விழுந்த விதைகள் தோட்டமெல்லாம் முளைக்கும் சம்மரில் அதனால் பிரச்சினையில்லை அந்த இலை ஷேப் பார்த்து கொண்டு வந்து நட்டிருப்பா :)

   Delete
 11. இரண்டுமே சுவாரஸ்யமான, புன்னகைக்க வைத்த நிகழ்வுகள். இப்படியா பதட்டத்தில் தலைகீழாக நடுவது? !!!

  வெள்ளை மிளகாய்னாலே அப்பாவின்னு அர்த்தம். அதை இப்படியா செய்வது! ...ஹா. ஹா.... ஹா...

  ஜெஸியின் குறும்பும், மகளின் மனமும் புன்னகைக்க வைக்கிறது. நல்ல மனங்கள் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க சகோ ஸ்ரீராம் :) அந்த குழந்தைக்கு வெள்ளை மனம் அதனால் நட வேண்டும் என்ற அவசரத்தில் வேரும் தலையும் இடம் மாறிடுச்சு ..வெள்ளை மிளகாய் அந்த வீட்டில் பார்த்தது தான் அதன் பின் எங்குமே காணகிடைக்கலை ..ருசியா இருக்குமோ !
   இன்னொரு விஷயமும் இருக்கு அந்த பச்சை சட்டை போட்ட குழந்தை கத்திரி விதை போட்டதா நினைச்சி dandelion என்ற weed செடியையும் வளர்த்து வந்தது ஜெர்மனியில் :)

   Delete
 12. "ஒரு சிறகு அவரை மணத்தக்காளி ஆகிறது" என்று சினிமா தலைப்பு போல வைத்திருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) தலைப்பு நல்லா இருக்கு ..இந்த பச்சை சட்டை மஞ்சள் சட்டை இன்னும் நிறைய பகுதிகளாக சிங்கம் சினிமாவையும் மிஞ்சும் வகையில் வரலாற்று நிகழ்வுகள் வெளிவர இருப்பதால்.. ஒரே தலைப்பிருந்தா வருங்கால சமூகம் ஈஸியா படித்து பயன்பெறலாமென்ற ஆசைதான் :)

   Delete
 13. அந்த குழந்தைய நானும் யூகிச்சுட்டேன் நீங்கதானென்று...போட்டது ஒன்னு வந்தது ஒன்னு என்றாலும் சமச்சு சாப்ட்டு யோசிச்சிங்களாக்கும்.என் கதை ஒன்னு இருக்கு fb ல் சொல்றேன் .சுண்டைக்கா கதை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க ஆச்சி வாங்க :)
   நாமெல்லாம் யாரு ஒரே மாதிரிதானே இருப்போம் :)
   பூ வந்ததும் சஸ்பென்ஸ் போச்சுது சரி வருவது வரட்டும்னு வளர விட்டேன் .எங்க தோட்டத்தில் மணத்தக்காளி கொச்ச கொசன்னு வளர்ந்திடும் சம்மருக்கு அதனால் ஐடென்டிபை பண்றது ஈஸியா இருந்தது :)
   சீக்கிரம் போடுங்க சுண்டைக்காய் மேட்டரை :)

   Delete
 14. குழந்தைக்கு வாழ்த்துகள்...(!)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ டிடி :)
   சின்ன குழந்தையை தானே சொன்னிங்க :) இப்போ 11 ஆம் வகுப்பில் இருக்கா .
   தலை கீழா செடி நட்ட குழந்தையும் நல்ல குழந்தையே என்ன கொஞ்சம் அவசரப்பட்டு அவ்வளவே :)

   Delete
 15. மலரும் நினைவுகள் அருமை.
  மகளும் அம்மா வருத்தப்படக்கூடாது என்று செடி நட்டது அருமை.
  அன்பு உள்ளங்கள். வாழ்க.
  பயணத்தில் இருப்பதால் பழைய பதிவுகளை வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா ....நினைவுகள் இன்னும் மலரவிருக்கின்றன :) பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
   வருகைக்கும் பாராட்டுக்களும் நன்றிக்கா

   Delete
 16. சிறகவரை பற்றி முன்னர் நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஹஹ சிறகவரை மணத்தக்காளியானது!! நிகழ்வுகளை படு ஸ்வாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! ரசித்தோம். வெள்ளை மிளகாய் அழகு! ஜெசியின் குறும்பு அஹ்ஹஹஹ...உங்கள் மகள் உங்களைப் போல மனம் கொண்டவளாக வளர்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  கீதா: எங்கள் ஃப்ளாட்டும் மிகச் சிறியது.இருந்தாலும் என் ஆர்வத்தின் காரணமாக வீட்டுச் சிறு பால்கனிகள் இன்றிலிருந்து தோட்டமாகிறது. செடிகள் வளரட்டும் நன்றாக வந்ததும் படம் போடுகிறேன்....

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) இந்த செடி சம்பவங்களும் எப்பவும் உங்கள் நினைவிலிருக்கும் ..வரலாற்று புகழ் வாய்ந்தவையாச்சே கீதா அன்ட் துளசி அண்ணா ..இது போல நிறைய விஷயங்கள் இருக்கு இன்னும் சொல்வேன் :)
   என் மகள் சில விஷயங்களில் மட்டுமே என்னை மாதிரி பல விஷயங்களில் அவள்தான் எனக்கு ஆசான் :)
   மிக தெளிவான சிந்தனைகள் உண்டு அவளுக்கு .
   வாவ் பால்கனி தோட்டம் போடறீங்களா சந்தோஷம் போட்டோஸ் போடுங்க விரைவில்

   Delete
  2. இன்னொரு விஷயமும் இருக்கு அந்த பச்சை சட்டை போட்ட குழந்தை கத்திரி விதை போட்டதா நினைச்சி dandelion என்ற weed செடியையும் வளர்த்து வந்தது ஜெர்மனியில் :)

   Delete
 17. ஹா ஹா :)) சிறகவரை காய்த்திருந்தால்கூட இவ்வளவு சுவாரசியமிருந்திருக்காது !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) வாங்க சித்ரா ..அந்த குட்டி செடிங்களை ரொம்ப பத்திரமா வெளியில் பிரிச்சி நட்டேன் :)
   பூ வந்தப்போவே நினைச்சேன் எங்கேயோ எதோ நடந்திருக்குன்னு :)
   வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி :)
   நமக்குன்னே வித விதமான அனுபவங்கள் ..நோ நோ பல்புகள் :)

   Delete
  2. இன்னொரு விஷயமும் இருக்கு அந்த பச்சை சட்டை போட்ட குழந்தை கத்திரி விதை போட்டதா நினைச்சி dandelion என்ற weed செடியையும் வளர்த்து வந்தது ஜெர்மனியில் :)

   Delete
 18. அப்பப்பா இந்த மிளகாய் செம காரமா இருக்குமெல்லோ அஞ்சு. இங்கனயும் விக்கிறாங்க சுப்பர்மார்கெட் ல.
  இப்படியான வேலை உங்களை விட்டா யார் செய்வாங்க. வாசிக்கும்போதே தெரிஞ்சிபோச்சு.
  நல்ல மனசு ஷரோனுக்கு. அம்மா மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு செய்திருக்கா. ஜெஸிக்கு நல்ல அடிதான் போடனும் குழப்படி.
  சுவாரஸ்யமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க ப்ரியா ..ஏற்கனவே உருளைக்கிழங்கில் ரோசாவை நட்டு அது கிழங்கு வளர்ந்ததே அந்த நினைவிருக்குன்னு நினைக்கிறன் ..ஆமா ஜெசி ரொம்ப குறும்பு

   Delete