அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/24/17

Loud Speaker ...41..

இன்றைய ஒலிபெருக்கியில் :)
===============================

பேலியோ சில குறிப்புகள்,மன அழுத்தம் ,கோபத்தை கட்டுப்படுத்தும் அறை ..rage room ,நான் தோசை செய்முறை சொல்லித்தந்தபோது :) 
ராஜ்கிரா முறுக்கு , ,வீகன் வல்லாரை ஸ்மூத்தி ..மற்றும் கம்பரின் உள்ளுணர்வு 

Rage Room /Anger Room 
===================

இதை பற்றி அல்ஜசீரா தொலைக்காட்சி சானலில் பார்த்தேன் ..மனிதர்கள் மனஉளைச்சலில் இருந்து விடுபட கோபத்தை கட்டுப்படுத்த  எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என சிரிப்பு வந்தது .இத்தனை மன உளைச்சலா மக்களுக்கு எனும் ஆச்சர்யமும் ஏற்பட்டது ..
ரஷ்யா ,அமெரிக்கா ,இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்போது விரைவாக பரவி வருகிறது இந்த கோபத்தை ஆத்திரத்தை கட்டுப்படுத்தும் அறை ...இதற்கென தனி கட்டணம் செலுத்தி அந்த அறைக்குள் கோமாளிகள் :) மன்னிக்கவும் கோபாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் அவர்களுக்கு பெரிய கட்டை போன்ற உடைக்கும் ஆயுதங்கள் அளிக்கப்படும் ..ரேஜ் அறையில் உள்ள பழைய தொலைக்காட்சி பழைய கணினி மற்றும் சோபா நாற்காலி ஆகியவற்றை ஆத்திரம் தீருமட்டும் அடித்து துவைக்கலாமாம் !!
////Our facility is a place where you can let your hair down, gear up and destroy real-life mocked rooms that simulate an actual workplace, living area or kitchen.

1. Sign up with your email or click the link above to reserve a room.
We don’t share your email address to spammers.

2. Choose from one of our 3 packages. (plus any extras)
– I need a break (5 minutes) $25
– Lash Out (15 minutes) $45
– Demolition (25 minutes) $75

3. Show up 10 minutes before appointment to be equipped
with safety gear like goggles and full suits to protect your
clothes.

4. Bash *ish UP!!!!

5. Take breather, maybe a few drinks and Enjoy the rest of your Day!//
மேலேயிருப்பது ரேஜ் ரூம் கட்டணங்கள் :)

 அறைக்குள் சென்று உடைக்குமுன் முகத்தை மாஸ்க்கினால் மூடிடுவார்களாம் ..உள்ளுக்குள்ள இருக்கும் மிருகம் அப்படியே வெளில வந்து தனது கோபத்தை தணித்தபின் குழந்தையாய் மாறி வீட்டுக்கு செல்கிறார்கள் என்கின்றனர் ..

நோட் திஸ் பாயிண்ட் .இந்த ரேஜ் அறைகளுக்கு செல்வது 60 % பெண்களாம் ..ரேஜ் அறைக்கு சென்று வந்ததும் மன அழுத்தம் குறைந்ததுபோல உணர்கிறார்களாம் :) நம்ம நாட்டிலயும் வந்தா நல்லா  இருக்கும்னு தோணுது ..

பேலியோ சில குறிப்புகள்
----------------------------------------------
நான் கடந்த ஒரு வருடமாக இந்த உணவு முறையை பின்பற்றி வருகிறேன் ..முதலில் சைவ உணவுகளுடன் முட்டை மட்டும் எடுத்து வந்தேன் .முட்டையை சாப்பிட பிடிக்காததால் ஸ்ட்றா போட்டாவது குடிக்கலாம்னு முயற்சி செய்து தோல்வி அடைந்து இறுதியில் முட்டையை கைவிட்டு வெறும் சைவம் மற்றும் வீகன் ஸ்மூத்தியில்  இறங்கிவிட்டேன் .மேலும் பேலியோ உணவுமுறை பற்றி அறிந்துகொள்ள விருப்பமிருப்போர் இந்த சுட்டியில் சென்று வாசிக்கவும் 
http://paleogod.blogspot.co.uk/2015/08/munnor-unavu-pdf-first-tamil-paleo-guide.html


தேவையற்ற குப்பை உணவுகள் ப்ராஸஸ்ட் உணவுகள் எண்ணெயில் முக்கி குளிக்கவைக்கப்பட்ட உணவுகள் மற்றும் கலர் கலர் பானங்கள் இவற்றை வேண்டாமென்று ஒதுக்கினாலே ஆரோக்கியம் நம்மை வந்தடையும் ..நாங்கள் பெப்சி கோக் போன்றவற்றை வீட்டில் அனுமதிப்பதில்லை ..அதேபோல கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கமுமில்லை ..என் கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது அதையும் நடைப்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் சரியாக்கிட்டோம் ..எனக்கு இருந்த அலர்ஜி .வருஷா வருஷம் மே மாதம்  துவங்கி செப்டெம்பர் வரையிலும் எனக்கு சில வகை மலர்களின்  மகரந்தத்தினால் ஒவ்வாமை ஏற்படும் .அதற்கென அளிக்கப்பட்ட மருந்துகளால் இன்னமும் அதிகம் பிரச்சினை ஏற்பட்டது .இரவு நிம்மதியா படுக்க முடியாது மூச்சு அடைக்கும் ..
கண்கள் வீங்கி ஒரு வேலையும் செய்ய முடியாது .பேலியோவில் இந்த அலர்ஜிக்கு முதலில் சொல்லப்பட்டது ..கோதுமை உணவை தவிர்க்க வேண்டுமென .அதை தவிர்த்ததில் 2016 இல்  ஒரு அலர்ஜியும் இல்லை ..இதில்  சந்தோஷமான விஷயம் என்னவென்றால் எனது எடையும் 12 கிலோ குறைந்துவிட்டது :) எல்லாம் அந்த சப்பாத்தியும் ,ஓட்ஸும் காபி டீயில் போட்டு குடித்த இனிப்பும்தான் அந்த 12 கிலோக்கள் ..முக்கியமான விஷயம் தினமும் 40-60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவேண்டும் ..நான் தினமும் செல்கிறேன் ..
                                             *****************************
இந்த  வீகன் ஸ்மூத்தி வீட்டில் செய்து சாப்பிடலாம் ..
பசியை குறைக்கும் ..இரத்தத்தை சுத்திகரிக்கும் .

தேவையான பொருட்கள் 
வல்லாரை  கீரை ...ஒரு கோப்பை 
கொத்தமல்லி கீரை ...ஒரு கோப்பை 
மா இஞ்சி ..சிறுதுண்டு 
தக்காளி ..ஒன்று 
பசு மஞ்சள் ..சிறு  துண்டு 
வெள்ளரிக்காய் தேவையான அளவு ..

எல்லாவற்றையும் மிக்சியில் அடித்து அதன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம் ..
இது உடலிலுள்ள வேண்டாத நச்சுக்களை நீக்குகிறது என்கிறார்கள் .

ராஜ்கிரா முறுக்கு 
-------------------------------

மகளுக்காக செய்தது 
ஒரு கப் அரிசி மாவு ஒரு கப் ராஜ்கிரா மாவு கால் கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து செய்தது ..

ராஜ்கிரா /amaranth பற்றி இங்கே பார்க்கவும் ..
http://www.indiatimes.com/health/healthyliving/health-benefits-of-rajgiraamaranth-240859.htmlவெள்ளிக்கிழமை தோசைக்கு அரைத்து பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு வழக்கம்போல கொயர் பிராக்டிஸ்க்கு  மகளை அழைத்து கொண்டு சென்றேன் ..எனக்கு மிகவும் பிடித்த தருணம் அது   . மகள் மனதில் உள்ளதையெல்லாம் பேசிக்கொண்டு வருவாள் நானும்  பதில் கூறிக்கொண்டே நடப்பேன் ..கடந்த வெள்ளியன்று 
எங்களுக்குள் நடந்த உரையாடல் 
மகள் ..அம்மா நீங்க தோசை எப்படி செய்வீங்க ??
நான் :)  ..ஆஹா மகளுக்கு பொறுப்பு வர ஆரம்பித்து விட்டதே ..இன்னும் இரண்டு வருடங்களில் யூனிவர்சிட்டி போகணும்.சின்ன மேடம் வேறு அமெரிக்கா சுவிஸ் என்று பிளான் வச்சிருக்கா  அங்கு தானே சமைத்து உண்ணத்தேவை வரும் அதனால் கேட்கிறாள் என்று மிக விலாவரியாக தோசை செய்முறை பற்றி சொல்ல ஆரம்பித்தேன் .

ஷாரோ முதலில் 2 கப் இட்லி அரிசி மற்றும் 1/2 கப் முழு தோலில்லா உளுந்து இரண்டையும் நன்கு அலசி சுமார் 4-5 மணிநேரம் ஊறவைக்கணும் ..அதோடு ஒரு டீஸ்பூன் வெந்தயம் தனியே நீரில் ஊற வைக்கணும் பிறகு கிரைண்டரை கழுவி முதலில் வெந்தயத்தை போட்டு அரைத்து அத்துடன் ஊறவைத்து கழுவிய  உளுந்தை போட்டு அரைக்கவேண்டும் அது பாதி அரைந்தபின் அதோடு கழுவிய இட்லி அரிசியையும் சேர்த்து பக்குவமாக அரைக்கவேண்டும் .தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது .
அரைத்தபின் ஒரு பாத்திரத்தில் எடுத்து மூடி வைக்கவேண்டும் .
இது மாவு நன்கு புளிக்க அதாவது ferment ஆக நமது ஊரில் சுமார் 10 மணிநேரம் வைக்கணும் இந்தியா என்றால் காலையில் சுடலாம் இங்கே குளிர் என்பதால் 10 மணிநேரம் மிக அவசியம் .இட்லிக்கு அரைக்கனும்னா உளுந்தையும் அரிசியையும் தனியா அரைச்சு ஒன்றாக கலந்து வைக்கணும்....என்று மூச்சு வாங்க அபிநயத்துடன் சொல்லி முடித்தேன் ..

எல்லாத்தையும் கேட்டு முடித்தபின் மகள்  சொன்னது ..!!!!!!
#அப்பாடி இன்னிக்கு சப்பாத்தி கிடைக்கும் ..நீங்க மாவு அரைச்சதை பார்த்தேன் ஒருவேளை இரவுக்கே தோசை உடனே சுடுவீங்களோன்னு பயமா இருந்தது அதனால்தான் எப்படி செய்வீங்கன்னு கேட்டேன் ....

....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க இந்த காலத்து  பிள்ளைங்க..எப்படியெல்லாம் நம்ம கிட்டயே போட்டு வாங்கறாங்க ..:)  இந்த பல்ப் வாங்கி அசடு வழிவதில் நான்  மகாராணி :)

                                               ********************************
உள்ளுணர்வு மற்றும் கனவுகள் தொல்லை எனக்கு அடிக்கடி  ஏற்படும் ..நாம் அனைவருமே இந்த உள்ளுணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருப்போம் ..சில நேரம் இதை செய்யாதே என நமக்கு தோன்றி இருக்கும் அது காப்பாற்றும் உள்ளுணர்வு .நாம நினைப்பதையே நமது நண்பரும் நினைப்பதும் ஒருவித உள்ளுணர்வு ..நான் அன்று வெளியே கணவருடன் வெளியே நடந்து செல்லும்போது அவரது நண்பரை பற்றி கேட்டேன் ..சிறிது தொலைவு சென்றதும் அந்த நண்பர் எங்கள் முன்பு நடந்து வந்தார் !!
இப்படி கம்பரின் உள்ளுணர்வு அம்பிகாபதிக்கு தெரிய வந்ததைப்பற்றி ஒரு இடத்தில் வாசித்ததை இங்கு பகிர்கிறேன் ..


//அம்பிகாபதியின் தந்தை கம்பர் ஒருசமயம், இரவு நேரத்தில் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தார். அந்த காட்டில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்த காளிதேவி சிலைக்கு பூதங்கள் பூஜை செய்து கொண்டிருந்தது. இந்த காட்சியை மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார் அம்பிகாபதியின் தந்தை. அப்போது ஒரு பூதம் காளிதேவிக்கு படைப்பதற்காக பிரசாதத்தை தயார் செய்து கொண்டு வந்தது. இதை கண்ட மற்றோரு பூதம் காளிதேவிக்கு படைக்கும் முன்பே அந்த பிரசாதத்தை ருசி பார்த்தது. இதனால் கோபம் அடைந்த வேறோரு பூதம் பிரசாதத்தை ருசி பார்த்த பூதத்தின் கையை வெட்டியது. இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த கம்பர், “அட…என்ன ஆச்சரியம் இது. பூத கணங்களுக்கு கூட இவ்வளவு பக்தியா?” என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார். அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது? அந்த ஆயுதத்தின் பெயர்என்ன? என்று சிந்தனையிலேயே தன் வீட்டின் கதவை தட்டினார். அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த. மகன் அம்பிகாபதி, கதவை திறந்து ‘அந்த ஆயுதம் கேள்வி குறியை போல இருக்கும். அவ்வாயுதத்தின் பெயர் கோடாரி.’ என்று தூக்க கலக்கத்திலேயே பதில் கூறினான். இதை சற்றும் எதிர்பாராத அம்பிகாபதியின் தந்தை, “எங்கோ நடந்த சம்பவங்களை இங்கிருந்தபடியே கனவில் கண்டு சொல்கிறானே அம்பிகாபதி“ என்று ஆச்சரியம் அடைந்தார். ///

இனி வரும் சில பதிவுகளில் எனக்கு ஏற்பட்ட வந்த  சில  கனவுகள் உள்ளுணர்வுகளை பகிர இருக்கிறேன் :)  தயாராக இருக்கவும் ..
64 comments:

 1. ///நோட் திஸ் பாயிண்ட் .இந்த ரேஜ் அறைகளுக்கு செல்வது 60 % பெண்களாம் /// ஹா ஹா ஹா ஆண்களின் கோபமெல்லாம் பெண்கள் மீது காட்டப்படுமாக்கும்:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹாங் :)ஆண்கள் மேலுள்ள கோபமெல்லாம் பாவம் டிவி , கணினி வாங்கிக்கட்டுதுங்க ..இமாஜின் பனி பாருங்க அந்த பொருட்கள் நிலை .
   பேசாம கருங்கல் அண்ட் ஹாமர் கொடுத்தா காலு உடைச்சி போட்ட மாதிரியானது

   Delete
 2. ///அதை தவிர்த்ததில் 2016 இல் ஒரு அலர்ஜியும் இல்லை ..இதில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் எனது எடையும் 12 கிலோ குறைந்துவிட்டது :)////
  நோஓஓஓஓஒ இது நான் நம்பமாட்டேன்ன்ன்:) ஆதாரத்துடன் நிரூபிக்கோணும்:))

  ReplyDelete
  Replies
  1. உங்க மெயில் ரிப்லை போட்டுட்டா :)

   Delete
 3. ராஜ்கிரா முறுக்கு சூப்பரா இருக்கு, எனக்கொரு டவுட்டு இந்த ராஜ்கிரா என்பது ஏதோ மாவுகளின் கலவையோ? அதன் இன்கிறீடியன்ஸ் என்ன என கொஞ்சம் பக்கட்டைப் பார்த்துச் சொல்லுங்கோ பீஸ்ஸ்ஸ்... கிந்தியில் ராஜ்மா எனில் பீன்ஸ் ஆம்... அப்போ இது???

  ReplyDelete
  Replies
  1. Garrrrrrrrrr that's amaranth flour .keerai vidhai araichu seyrathu

   Delete
  2. https://www.buywholefoodsonline.co.uk/organic-amaranth-flour-1kg.html?gclid=CKCbyuS629ECFawp0wodTmgHrw

   Delete
  3. https://m.tarladalal.com/glossary-rajgira-flour-1297i

   Delete
 4. ///எல்லாத்தையும் கேட்டு முடித்தபின் மகள் சொன்னது ..!!!!!!
  #அப்பாடி இன்னிக்கு சப்பாத்தி கிடைக்கும் ..நீங்க மாவு அரைச்சதை பார்த்தேன் ஒருவேளை இரவுக்கே தோசை உடனே சுடுவீங்களோன்னு பயமா இருந்தது அதனால்தான் எப்படி செய்வீங்கன்னு கேட்டேன் ...///
  ஹா ஹா ஹா... ஆரம்பமே இப்போதான் அஞ்சுவுக்கு:) இனித்தான் போகப்போக இருக்கும் இன்னும் நிறைய:))

  ReplyDelete
  Replies
  1. தினமும் வருத்து எடுக்கறா ..டெயிலி பல்புகள் வாங்கிட்டே இருக்கேன்

   Delete
 5. ///இனி வரும் சில பதிவுகளில் எனக்கு ஏற்பட்ட வந்த சில கனவுகள் உள்ளுணர்வுகளை பகிர இருக்கிறேன் :) தயாராக இருக்கவும் ..///
  இந்தக் கம்பரைக் கொண்டு வந்து, தன்னோடு ஒப்பிட்டுப் பேசுதே இந்த பிஸ்ஸூ:) என்னா தைரியம்:)).. எதுக்கும் நான் ஒருமாதம் அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. irunga church poyittu vanthu mottharen

   Delete
 6. அஞ்சு அந்த ரேஜ் ரூம் இப்போ இங்கு ஸ்கூல்களிலும் இருக்கிறது, புதுசா கட்டும் ஸ்கூல்களில் நிட்சயம் ஒரு ரூம் இருக்கும் “quite room" எனும் பெயரில் இருக்கு. எங்கள் ஸ்கூலிலும் இருக்கு. கொஞ்சம் கோபக்காரப் பிள்ளைகளை உடனே அங்குதான் அனுப்புவோம், கோபம் அடங்கியதும் வகுப்பு வரும்படி சொல்லி அனுப்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. yeah ive heard about that .but these guys are smashing and breaking things funny innit

   Delete
 7. //நம்ம நாட்டிலயும் வந்தா நல்லா இருக்கும்னு தோணுது ..//

  நம்ம நாட்ட்டிற்கு வர தேவையில்லை காரணம் இங்குள்ள பெண்கள் இதற்கு பதிலாக பூரிக்கட்டையை ஏற்கனவே பயன்படுத்துகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஆனா ஒரு effect இல்லையா :) ஸோ வி வாண்ட் ரேஜ் ரூம் .appothana oda mudiyaathu

   Delete
  2. ஹா ஹா ஹா அனுபவம் பேசுது:)இவருக்கு..

   Delete
 8. எங்க நாட்டுல இப்படி ரூம் வைச்ச அதற்கு அதிக செலவாகிறது என்பதால் அதற்கு பதிலாக டோனல்ட் ட்ரம்பை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் அவரின் கோமாளித்தனமான பேச்சை கேட்கும் போது டென்ஷன் எல்லாம் குறைந்து போய்விடுகிறது

  ReplyDelete
  Replies
  1. haa haaa :) akka hubbyai kindal panna koodaathu

   Delete
  2. பொய் சொல்றார்ர் “அவர்கள் உண்மைகள்” ட்ரம்ப் அங்கிளை நீங்க தேர்ந்தெடுத்தமைக்கு முக்கிய காரணமே.. அவரின் வைவ் அழகா இருக்கிறா என்பதுதானே?:)) ஹையோ அஞ்சூஉ பிளீஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈ:)

   Delete
  3. ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பதுபோல நமக்கு எல்லாம் நயந்தாராதான் அதுனால் ட்ரம்ப் மனைவியோ அல்லது மகளின் மீதோ ஆசை எல்லாம் கிடையாது ச்சீ இந்த பழம் புளிக்கும்

   Delete
 9. ///என் கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது/

  என் இருக்காது சொர்ணம்மா போல இருக்கும் உங்களை கட்டிக் கொண்டா பிறகு பிரஷ்ர வராமாலா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. கிக் கிக் கீஈஈஈஈ என்னா மாதிரிக் கண்டு பிடிச்சீங்க அவர்கள் உண்மைகள் உங்களுக்கு இதோ ஒரு Porches கார் பரிசு:)

   Delete
  2. ஹலோ போய்யும் போயும் காரை பரிசாக தருகிறீர்களே மனசுக்கு பிடித்ததைதான் பரிசாக தரணுமாக்கும் எனக்கு நயந்தாரா பிடிக்கும் என்பதை நீனைவ்வுட்ட விரும்புகிறேன்

   Delete
  3. வெறி சாரி :) உங்களுக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிச்சிருந்தா விட்டுக்கொடுப்பதே தமிழர் பண்பாடு ..
   நயனை விக்கி அதான் சிவன் விக்கிக்கு பிடிச்சிருக்கு அதனால் உங்களுக்கு பொன்னாத்தா from முதல்மரியாத மூவி பரிசோடு வராங்க

   Delete
  4. ஹா ஹா ஹா எனக்கு திரும்படியும் வடிவேல் அங்கிளின் பயமொயி:) நினைவுக்கு வருதே.... ஒருத்தருக்கு எழுந்து நிற்கவே முடியல்லியாம்ம்ம்.. நயன்ன்ன்ன் கேட்குதோ.. ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))

   Delete
 10. ///என் கணவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது/

  என் இருக்காது சொர்ணம்மா போல இருக்கும் உங்களை கட்டிக் கொண்டா பிறகு பிரஷ்ர வராமாலா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. QEW$%YTGFT@@$^&&POJMNVDTRVNMV!@@#$%^&I<>"::::P:POI((*&^%%

   Delete
 11. எனக்கும் ஸ்பிரிங்க் மாதங்களில் இங்கே அமெரிக்கா வந்த சில பல ஆண்டுகளுக்கு பின் நீங்கள் சொல்லும் மாதிரியான போலான் அலர்ஜி வந்தது அதனால் அந்த மாதங்களில் மாத்திரை தினமும் எடுத்து கொல்வேன் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக் நாய்குட்டி வாங்கி வளர்த்து அதன் கூடயே படுத்து உறங்குவதால் இப்போது அந்த அலர்ஜி வருவதே இல்லை

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆனா எனக்கு க்ளூட்டன் அலர்ஜியா;தான் போலன் அலர்ஜி கூடி அந்த மருந்துகள் பக்கவிளைவுகள்னு ரொம்ப கஷ்டப்பட்டேன் ..நானா போனியா நாய் மற்றும் பறவைகளுடன் வளர்ந்தவள் எப்படி எனக்கு இந்த அலர்ஜி வந்ததென்னே தெரில இதில் ஒரு டாக்டர் ஜெசியை குடுத்துட சொன்னார் ..பிரச்சினை பூனை நாய் முடியில் இல்லை கோதுமையில்தான் எனக்கு ..
   அணிமல்சால் ஒரு அலர்ஜியும் மனிதன்க்கு வராது ..இதை க்யுழப்பி விடுவது மருத்துவர்கள் தான்

   Delete
  2. இனம் இனத்தோடு சேரும்போது அலர்ஜி வராதாம் என எங்கோ கேள்விப்பட்டேன்ன்:) நேக்கு எதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

   Delete

 12. நீங்கள் 12 கிலோ எடை குறைந்தற்கு காரணம் நீங்கள் பொட்டு இருந்த தங்க நகைகளை கலச்ஸ்டி வைத்ததுதான் காரணம் மீண்டும் அதை போட்டு எடை பாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) நானா தங்க நகைகளை அணிவதில்லை :) ஒரு பொண்ணு வெயிட் குறைச்சிட்டானதும் எவ்ளோ ஜெலஸ் ..கர்ர்ர்ர்

   Delete
 13. இந்த வீகன் ஸ்மூத்தி வீட்டில் செய்து சாப்பிடலாம் ..//

  இதைதான் நாங்க கழினி தண்ணி என்று அழைப்போம் இதையெல்லாம் மாடுகள்தானே குடிக்கும் ஹீஹீ நான் உங்களை மாடுன்னு சொல்லவில்லை

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :) கழனித்தண்ணில இஞ்சி தக்காளி எல்லாம் இருக்குமா ??
   இது ரொம்ப உடலுக்கு நல்லது மாமிக்கு இந்த ரெசிப்பி fwd செயுங்க உங்களுக்கு தினமும் இதே தண்ணி கிடைக்கும் :)இங்கே வெளிநாட்டிலேயே குடிக்கிறாங்க இப்போ இதைத்தான்

   Delete
  2. ஹா ஹா ஹா முடியல்ல முருகா:)

   Delete
  3. ஹலோ மாமியும் குழந்தையும் உடம்பு ஹெல்தியாக இருக்கனும் என நினைத்து இங்கே அடிக்கடி ஸ்மூத்தி செய்துதான் சாப்பிடுகிறார்கள் ஆனால் அவர்களின் உடல்நிலைதான் அப்ப அப்ப டேமேஜ் ஆகிறது ஆனால் நான் எப்போவாவது "மருந்து" எடுத்து கொண்டால் பாரேன் இது உடம்பை கெடுத்து கொள்ள கண்ட மருந்தை எல்லாம் குடிக்கிறடு என்பார்கள்கோக்கனட் உடலுக்கு நல்லது என்பதால் நான் கோக்கன்ட் ப்ளேவர் ரம்தான் என்ற மருந்தைதான் அருந்துகிறேன் அது தப்பா?

   Delete
  4. நாங்க மருந்தே சாப்பிடறதில்லை ..கோகொனட் பிளேவர் ரம் ??? ஆப்பம் செய்ய யூஸ் செய்யலாமா ..எனக்கு ஆப்பம் சுட்டா தோசை மாதிரியே வருது அதான் கேட்டேன்

   Delete
 14. கணவர் வேலைக்கு போய்விட்டதால் அவர் மீதுள்ள கோபத்தை இப்படி முறுக்கு பிழிந்து காட்டி இருக்கிறீர்கள் என்று அதிரா என்னிடம் சொல்லிவிட்டு அதை உங்களிடம் சொல்லிவிட வேண்டாம் ரகசியம் என்று சொல்லிவிட்டார் அதனால் இதை அதிராவிடம் நான் சொன்னதாக சொல்லிவீடாதீர்கள் ஒகேவா

  ReplyDelete
  Replies
  1. அதை முறுக்கு இல்லேன்னு யாராச்சும் சொல்லிடுவாங்களோன்னு பயந்தேன் :)
   நல்லவேளை நீங்களே அக்செப்ட் செய்ததால் பிழைத்தேன் ...முறுக்கு பிழியறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ??
   இனிமே அவர் இருக்கும்போதுதான் சுடனும் ..நான் அப்பாவிகள் மீது கோபப்படுவதில்லை என்று கூறிக்கொள்கிறேன் :)

   Delete
  2. நானில்ல நானில்ல மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

   Delete
 15. அந்தந்த ஊர்களுக்கேற்பதான் சிந்தனை அமையும் போலும். கோபத்தைக் குறைக்க நம்மூரில் அமைதியான தியானத்தைப் பழக்குவார்கள்.

  மகள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க விட்டு, பல்பு தருவதில் கில்லாடி (கில்'லேடி') போலும்.

  உள்ளுணர்வு - ஓகே.. வெயிட் பண்ணறோம்!

  ReplyDelete
 16. அந்தந்த ஊர்களுக்கேற்பதான் சிந்தனை அமையும் போலும். கோபத்தைக் குறைக்க நம்மூரில் அமைதியான தியானத்தைப் பழக்குவார்கள்.

  மகள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க விட்டு, பல்பு தருவதில் கில்லாடி (கில்'லேடி') போலும்.

  உள்ளுணர்வு - ஓகே.. வெயிட் பண்ணறோம்!

  ReplyDelete
  Replies
  1. மெடிடேஷன் யோகா நம்ம வழி .இவங்களுக்கு அடிச்சி உடைப்பதுதான் மனா அமைதி தருதாம் ..ஆச்சர்யமா இருக்கு :)
   மனிஷ மனம் எவ்ளோ கோபத்தை அடக்கி வச்சிருக்கு பாருங்க
   பொண்ணு எப்பவும் என் காலை வாரி விடயத்தில் கில்லாடி தான் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 17. //இதை பற்றி அல்ஜசீரா தொலைக்காட்சி சானலில் பார்த்தேன் .. மனிதர்கள் மனஉளைச்சலில் இருந்து விடுபட கோபத்தை கட்டுப்படுத்த எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என சிரிப்பு வந்தது. இத்தனை மன உளைச்சலா மக்களுக்கு எனும் ஆச்சர்யமும் ஏற்பட்டது ..//

  இதனைப் படிக்கும் எனக்கும் மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா இந்த வெளிநாட்டுக்காரர்கள் செயல்கள் பாதிக்குமேல் விந்தையானைவைத்தான்

   Delete
  2. ஏஞ்சலினும் வெளிநாட்டுக்காரர் என்று சொல்லி அமர்கிறேன் ஆமென்

   Delete
 18. ராஜ்கிரா முறுக்கு .. படத்தில் பார்க்கும் போதே சாப்பிடணும் போல ஆசையாக உள்ளது.

  கனவு நிகழ்ச்சியை நினைக்க உண்மையாக இருக்குமா என்ற கேள்விக்குறி ? யே மனதில் வருகிறது.

  //இனி வரும் சில பதிவுகளில் எனக்கு ஏற்பட்ட வந்த சில கனவுகள் உள்ளுணர்வுகளை பகிர இருக்கிறேன் :) தயாராக இருக்கவும் .. //

  அதிரா டு நோட் திஸ் ...... நாம் நல்லா மாட்டினோம் ! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..எனக்கு ஏற்பட்ட உள்ளுணர்வுகளை கனவுகளும் 99 % நடந்திருக்கு அதனால் நானும் ஆச்சர்யப்பட்டு போயிருக்கேன்
   வேற வழியே இல்லை காலத்தின் கட்டாயம் நீங்க உள்ளுணர்வு பதிவை படிச்சே ஆகணும் :)

   Delete
  2. கனவுகள் நடந்திருக்கா அல்லது கனவு காணும் போது நடந்துகிட்டு இருந்தீங்களா?

   Delete
  3. அதை ஏன் கேக்கறீங்க ..எதை பார்த்தாலும் மனசுக்குள்ள தலைல டொமினோவ்ஸ் சீட்டுக்கட்டு விழற மாதிரி flash அடிக்குது ..விவரமா சொல்றேன்

   Delete
 19. கனவுகளுக்காக காத்திருக்கிறேன்...

  பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் சகோ ..அடுத்த பதிவு அதுதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 20. ராஜ்கிரா முறுக்கு ...சூப்பர்..

  இந்த மாதிரி பசங்கட்ட பல்ப் வாங்கறது எல்லாம் ரொம்ப சாதாரணம் இங்க...ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு .அங்கே ராஜகிரா மாவு கிடைக்குது நீங்களும் செய்து பாருங்க ..பல்ப் வாங்கறது நமக்கெல்லாம் பழகிடுச்சுப்பா :)

   Delete
 21. கோபத்தை அடக்க ரூமா....வித்தியாசமா இருக்கே,,காமடியாவும் இருக்கு..எப்படிஎல்லாம் பிழைப்பு...!!

  உங்க பெண் ஷரன் செம காமெடி! வாசிக்கும் போதே தெரிந்தது பெண் ஏதோ ட்ரிக் வைச்சுருக்க பாவம் அம்மா செம ட்யூப்லைட்டா இருப்பாங்க போல னு நினைச்சோம்...ஹிஹிஹிஹி

  உள்ளுணர்வு ஆம் சில சமயம் நடப்பதுண்டு..உங்கள் அனுபவம் ஸ்வாரஸ்யம்...அதே போன்று கதை இப்போதுதான் அறிகிறோம்...

  கீதா: ஸ்மூதி அண்ட் முறுக்கு நோட்பண்ணியாச்சு...சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ..பொண்ணு கிட்ட பல்ப் வாங்கறது எனக்கு சகஜம் :)
   முறுக்கு நல்லா வந்தது க்ளூட்டன் இல்லாத சமைக்கணும்னா பொட்டுக்கடலையை கூட தவிர்க்கலாம் ..

   Delete
 22. ஆஹா.. வல்லாரை அடிக்கடி சமைப்பது. ஆனா சாலட்,பச்சடி அலுத்துவிட்டது.இனிமே இப்படி செய்கிறேன் கொஞ்சநாளைக்கு.
  இங்கு இப்ப யோகா,தியானம் வகுப்புகள் அதிகமா கிராக்கி வந்துவிட்டது அஞ்சு. இந்த மாதிரி அறையில் நீங்க சொல்வதுபோல கல்லு உடைக்கச்சொன்னால் நல்லாயிருக்கும். அநியாயம் டிவி,மற்றைய பொருட்களை உடைப்பது.
  ஆவ்வ்வ்.. ஷரோன்..!! இப்படியெல்லாம் பேசறாங்களா. செம.. என்ன செய்வது பல்பு இன்னும் எத்தனை வாங்கபோறீங்களோ.. இங்கனயும் எழுதக்கூடியதை எழுதுங்க அஞ்சு. வாசிச்சு ரசிப்போம். பிள்ளைகளுக்கு இப்ப அறிவு ஜாஸ்தியா போச்சு. இங்கன பல்பு வாங்குவது அப்பாதான். ஆனா நல்லா பார்வேர்ட் ஆ பேசறாங்கப்பா இப்ப பசங்க. .நாங்க அவங்க கிட்ட கத்துக்க நிறைய இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அது பழைய ரிப்பேரான டிவி கணினி ப்ரியா :) அத்தகைதான் உடைக்கறாங்க .
   எஸ் நல்லாவே பேசறாங்க இந்த கால பிள்ளைகள் .#
   அப்புறம் ப்ரியா நீங்க வல்லாரை கீரை வாங்கினா வேர் இருக்கிற ஒரு துண்டை தொட்டில நட்டு வைங்க நல்ல வளரும் .வீட்டுலயே

   Delete
  2. நான் துவையலும் அப்புறம் இப்படி ஸ்மூத்தி சில நேரம் சாம்பார் கூட செய்வேன் வல்லாரையை

   Delete