அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/9/17

முகப்புத்தக ஸ்டேட்டஸ் ..CCTV :)

                                                   
 நம்ம சென்னையில் பேருந்துகளில் பயணம் என்பது மிக கடினம் ..எப்பவும் பிதுங்கி வழியும் கூட்டமா இருக்கும் ..அதற்காகவே ட்ரெயினில் போவேன் ..எனக்கு ட்ரெயின்ல போக பயமில்லை
ஆனா ப்ரிட்ஜ் ஏற இறங்க பயம் ..நிறைய கூட்டமிருந்தா அவங்களோட ஏறி கூட்டத்தோட கூட்டமா போயிடுவேன் :) தனியா என்னிக்கும் ப்ரிட்ஜ் எற மாட்டேன் நைசா லைன் கிராஸ் பண்ணி போயிடுவேன் .(ஆனா இப்போ விஷயமே வேறு தைரியமா ப்ளென்லையே தனியா போயிட்டு வரேன் ).ஒரு நாள் மாலை வீட்டுக்கு திரும்பும்போது வீட்ல அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க காத்திருக்காங்க ..செம திட்டு ..எவ்ளோ தைரியம் உனக்கு என்று மட்டும் ரிப்பீட்டடா காதில் விழுது ..விஷயம் என்னன்னா யாரோ ஒரு சி ஐ டி நான் பிளாட்பாரம் வழியா இறங்கி லைன் க்ராஸ் செயறத வீட்ல அம்மாகிட்ட போட்டு கொடுத்திருக்கு :)

                                     அப்படிதான் திருமணம் நிச்சயமான புதிதில் எங்க வீட்ல ISD வசதி இல்ல இவர் கிட்ட பேச தங்கச்சிய தாஜா செஞ்சு கையூட்டு லஞ்சம்லாம் கொடுத்து ISD கால்
பேசிட்டு வருவேன் .அப்பா வேலை முடிஞ்சி வந்தவுடன்
கேப்பார்...என் மருமகன் நலமா :) அங்கே வெதர்  எப்படின்னு 😁
எப்படி இவர்க்கு தெரியும்னு திருதிருன்னு முழிப்பேன்.
.அந்த கடைகாரர் அப்பாவின் ப்ரண்டாம் ...சார் உங்க வீட்டு பாப்பா 
பாரின் கால்பேச வந்தாங்கன்னு கொட்டியிருக்கு அந்த உண்மைவிளம்பி .. ஒருசின்ன விஷயம் கூட மறைச்சு ஒளிச்சு செய்ய முடியாது அப்போவெல்லாம்...சென்ட்ரல்ஸ்டேஷன்ல வெங்காய சமோசஸ் சாப்பிட்டாலும் உடனேதகவல் போயிரும் ..எனக்கு மூச்சுண்டை சாப்பிடறதில் அவ்ளோ ஆசை அதுவும் வெங்காய சமோசா செம டேஸ்ட்டா இருக்கும் ..வீட்டில்  எனக்கு தடா இப்படி மூச்சுண்டை வெளியில் வாங்கி சாப்பிட :)  எப்பவும் சாப்பிட்டு அப்புறம் கஷ்டப்படுவேன் ......  அந்த சமோசா சாப்பிட்டதை போட்டு தந்தது ஒரு ரெயில்வே டிக்கட் செக்கர்  அப்பா ப்ரண்டு ...
ஒரு தடவை நுங்கம்பாக்கம் Loyola போக ட்ரெயின் ஏறிட்டேன் ஸ்டேஷன் இறங்கிபார்த்தா ஷாக் இறங்கி க்ராஸ் பண்ணி தான் கல்லூரிக்குள்ள போகணும் அதற்கு ப்ரிட்ஜ் வருது ஒரு ஈ காக்கா கூட்டம் ஒண்ணுமில்லை தேம்பி அழாத குறை..
அப்போ ஒரே ஒரு ஜீவன் என்னை நோக்கி வருது / மேடம் லயோலாக்குஎப்படி போகணும்??,,
..கிடைச்ச சான்சைவிடுவேனா. கடவுள் நமக்குன்னே அனுப்பி வைச்ச மாதிரி இருந்தது ..அவர் மதுரையில் இருந்து ஸ்டூடன்ட் கல்லூரி காம்பெடிஷன்க்கு வந்தவர் .. நான் அங்கே தான் போறேன்னு கூட நடந்து போய்ட்டேன்..பயம் வந்தா மான அவமானம்லாம் நமக்கு இல்லவேயில்லை :)
அந்த மதுரை என்னயோசிச்சுதோ தெரில :) 
ஆனா எனக்கு யாரோ என்னை நோட் பண்ற மாதிரி ஒரு உள்ளுணர்வு ..தூர போய் திரும்பினா அதே சமோசா மேட்டர்ல போட்டுக்கொடுத்த டிக்கட் இன்ஸ்பெக்டர் :) .வீட்டுக்கு போனதும் நானே மதுரை மாணவருக்கு ரூட் சொன்னதையெல்லாம் அப்டியே ஒப்பிச்சுட்டேன் ..ஆனா வெங்காய சமோசா சாப்பிட்டதை காட்டி கொடுத்தவர் ஒன்னும் சொல்லலை வீட்ல ..இல்லை சொல்லி வாங்கி கட்டினாரான்னு ம் தெரில
முதல் முதலா சினிமாக்கு கிளாஸை கட் அடிச்சு போய் வசமா மாட்டினேன் எங்க பக்கத்து வீட்டு ஆன்டிஅங்கிள் அதே தியேட்டர்ல 😂 ..நம்மை சுற்றி சிசி டிவியா இருந்த காலம் அது..
இந்த நடமாடும் சிஐடி சிசிடிவிக்களால் சில பல நன்மைகளும் நடந்திருக்கு ..அக்கம் பக்கமுள்ள பாட்டிகள் சிறு குழந்தைங்களை சின்ன அடிபட்டாலும் உடனே கை மருத்துவம் செய்ய ஓடி வருவாங்க ..
இது முகப்புத்தகத்தில் போட்ட ஸ்டேட்டஸ் இங்கேயும் பகிர்ந்தாச்சு 
புகைப்படத்தை போட்டு சில நினைவுகளை மீட்டெடுக்க உதவியதற்கு நன்றி தம்பி சித்தார்த் :)..18 comments:

 1. சிறுவயது அனுபவங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் !

  பீரோவில் வைத்த சாக்லேட் பார்களில் எறும்புகள் வந்ததைப் பற்றிய கதையை ஏனோ எழுதவில்லை போலிருக்குது. :)

  பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) அந்த சாக்லேட் எறும்பு விஷயத்தை காட்டி கொடுத்தது நாலுகால் சிஐடி ..எறும்பு ஷெல்ப்புக்கு போற ரூட்டை பார்த்துட்டே இருந்தத அம்மா கவனிச்சு என்கிட்டே கேட்டு மாட்டிகிட்டேன் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ..சில நினைவுகள் நினைவுபடுத்தி பார்க்கும்போது சந்தோஷம் கண்ணீர் எல்லாம் கலந்து வரும் அவ்ளோ அழகிய நினைவுகள்

   Delete
 2. ஹா ஹா ஹா அஞ்சு.. படிச்சு சிரிச்சுக்கொண்டிருக்கிறேன், படம் பார்க்கப் பார்க்க சிரிப்பை அடக்க முடியுதில்லை... உண்மையில் படத்துக்கேற்ப பொருத்தமா எழுதிட்டீங்க... அந்தநாள் ஞாபகம்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு சித்தார்த் இந்த படத்தை fb யில் போட்டதுமே இந்த பழைய நினைவுகள்தான் வந்தது எத்தனை எத்தனை CID சங்கர்களும் CID சகுந்தலாக்களும் நாம பார்த்திருக்கோம்னு சிரிச்சுகிட்டே இருந்தேன் :)

   Delete
 3. ///.அவர் மதுரையில் இருந்து ஸ்டூடன்ட் கல்லூரி காம்பெடிஷன்க்கு வந்தவர் .. நான் அங்கே தான் போறேன்னு கூட நடந்து போய்ட்டேன்..//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப்பிட்டீங்க.. இந் நாட்களில் எனில் அப்பூடியே கடத்திப் போடுவினம்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அந்த மதுரை மாணவர் கொஞ்சம் பயந்த சுபாவம் போல ..இல்லிங்க ரூட் சொல்லுங்க ரூட் சொல்லுங்கன்னு ரிப்பீட்டடா சொன்னார் ..அநேகமா அவர்தான் என்னை பார்த்து பயந்திருக்கணும் ..எனக்கு இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது :)அது ஒரு காலம் அதிரா ..நைட் 10 மணிக்கும் ரோட்டில் நடந்தா நம்ம ஏரியா நாலு கால்ஸ் கூட ..தூங்கிட்டிருந்தாலும் தலையை தூக்கி பார்க்கும் ..வீடு வாசலில் நைட் ஷிப்ட் முடிஞ்சு வர கணவர்களுக்கு மனைவியர் காத்திருப்பாங்க ..விவித் பாரதி பாடல் கேட்கும் ..பயமே இருக்காது எல்லாரையும் நம்புவோம்

   Delete
  2. அப்போ இப்ப நீங்க யாரையும் நம்பமாட்டீங்களாக்கும்?? ரொம்ப ஷார்ப் ஆகிட்டீங்களோ??? வாணாம்ம்ம் நான் எதுவும் ஜொல்லாமல் போறேன்ன்:)

   Delete
  3. ஆஹா பூஸ் ஆரம்பிச்சுடுச்சு

   Delete
 4. நல்ல சுவாரஸ்யம்தான். இப்படியா ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஸ்பை இருப்பாங்க!

  மூசுண்டையா மூச்சுண்டையா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் ..அப்பாக்கு ஊரெல்லாம் தெருத்தெருவுக்கு நண்பர்கள் என்னை சுற்றி பல காமிரா கண்கள் தான் ..நான் என்றில்லை நிறைய பேர் சிசிடிவி கண்காணிப்பில் மாட்டியிருப்பாங்க .கைப்பேசி கூட இல்லாத காலகட்டத்தில் சிசிடிவிக்கள் பெரும் உபகாரம்தான் :) பெற்றோருக்கு ..அப்போதைய காலகட்டத்தில் நிறைய உறவுகளும் நட்புக்களும் ஒரு பாதுகாப்பு அரண் போல இருந்தாங்க ..அதே போலத்தான் ஆலயத்திலும் ..

   அது மூசுண்டை யாகத்தான் இருக்கும் ..நான்தான் ச் அடிஷனலா சேர்த்து விட்டிருப்பேன் பேசும்போதும் அதே பழக்கம் ப் உம் ச் உம் சேர்த்தே பேசுவேன் அதான் டைப்பும்போதும் ச் வந்திருக்கு .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 5. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தனபாலன் சகோ ..இப்போ பழைய நினைவுகளை அப்போ நடந்த சம்பவங்களை நினைத்து பார்த்தால் ஆனந்தமும் கண்ணீரும் சேர்ந்து வருகிறது ..இப்போ நம்ம ஊரில் இதே போன்ற சூழல் கூட்டு குடும்பங்கள் நண்பர் கூட்டம் உரிமையுடன் கடிந்து கொள்ளும் மூத்தோர் எல்லாம் இருக்கா தெரில ..

   Delete
 6. நல்ல அனுபவம்தான்!! ஹஹ் இப்படி உங்களைச் சுற்றி செம ஸ்பை போல...!!! அதுவும் சிசிடி காமேரால் இல்லாத காலகட்டத்தில்...பரவால்ல இப்படிப் பதிவெழுத ஒரு அனுபவம் கிட்டியதே!!ஹிஹி

  கீதா: ஹஹ்ஹஹஹஹ் ஏஞ்சல் என்னங்க இது என்னைச் சுற்றித்தான் இந்த ஸ்பை காமெரா கண்கள் இருந்துச்சுனு பார்த்தா உங்களுக்குமா அதுவும் மாநகரத்தில். நான் இருந்ததாவது கிராமம்....சரி நிறைய இருக்கு....பதிவாக்கிடலாம்..உங்கள் அனுபவம் நல்ல ஸ்வாரஸ்யம்தான்!!! ரசித்து வாசித்தோம்...இந்தப் படம் வாட்சப்பில் வலம் வந்தது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா :) உடனடியே மெசேஜும் போயிருச்சே அந்த காலத்தில :) செம சூப்பர் வேகம்தான் சி ஐ டிஸ் ..எழுதுங்களேன் எனக்கும் படிக்க ஆசையா இருக்கு கிராமத்தில் மூச்சு கூட விட முடியாதே :)
   எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய நட்புக்கள் தடுக்கி விழுந்தா நட்பு கூட்டம் அதான் எனக்கு பெரிய ப்ராப்லம் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா அண்ட் துளசி அண்ணா .வாட்ஸாப் படமா :) நான் முகப்புத்தகத்தில் தான் பார்த்தேன் .ஆனாலும் இந்த படத்தை படைத்தவர் என்னை மாதிரி எத்தினி சிசிடிவி கிட்ட மாட்டினாரோ :)

   Delete
 7. சுவையான பதிவு! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  http://ChellappaTamilDiary.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா .எனது வலைப்பூவிற்கு முதல் முறையா வருகை தந்திருக்கிங்க .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 8. உண்மையிலே நல்லதொரு மறக்கமுடியாத நாட்கள். பசுமையான நினைவுகளை அழகா தந்திருக்கீங்க. படமும் சூப்பரா பொருத்தமா இருக்கு. எனக்கும் இப்படி சமோசா, றோல்ஸ் சாப்பிட ஆசை. ஆனா ப்யம்.யாராவது பார்த்து வீட்டில சொல்லீட்டா என. அப்படியிருந்தும் ஒரு கடையில வாங்கி சாப்பிட்டுவிட்டு நான் பட்ட அவஸ்தை எனக்குதான் தெரியும்.

  ReplyDelete
 9. தங்களது அனுபவம் நன்று கண்களை விட காமிரா ஏது.....

  ReplyDelete