அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/31/17

உள்ளுணர்வு மற்றும் கனவு ...1


ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவங்க கூடவே வாழ்ந்து கொண்டிருக்கும் .சிலர் அது அவர்களை வழிநடத்துவதை உடன்  இருப்பதே அறியாமல் வாழ்நாளை நகர்த்துவார்கள் .உள்ளுணர்வை புரிந்து கொண்டவர்களுக்கு அது ஒருவிதமான பகுப்பாய்வு .
சாலையில் நடந்து செல்லும்போது எந்த திசையில் சாலை கிளை சாலையாக பிரிகிறது என்று நமக்கு தெரியாது ஆனால் நமது உள்ளுணர்வு நம்மை சரியான வழியை நோக்கி நடத்தி செல்லும் .


உண்ணும்உ ணவுகளை கட்டுப்படுத்தி உடலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தெரிந்த நாம் நமது உள்ளுணர்வுகளை மதிக்கிறோமா இல்லை பொருட்படுத்துகிறோமா  என்பது பலருக்கு புரியாத விஷயம் ..

இரண்டாம் உலகபோர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தேன் 
இந்த சர்ச்சில் போர் காலகட்டத்தில் உலக நாடுகளுடன் ஒப்பந்தங்கள் பேச்சு வார்த்தைகள் என ஒவ்வொன்றையும் திட்டமிட்டு தீர யோசித்தே செய்வாராம் ..அவரது உள்ளுணர்வே பல நேரங்களில் அவருக்கு வழிகாட்டி எனலாம்  ...

ஜெர்மனியின்  விமானங்கள் லண்டன் நகர்மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன.

வின்சன்ட் சர்ச்சில்  தான் அப்போ இங்கிலாந்தின் பிரதமர். எவ்வளவு யுத்த நெருக்கடியில் இருந்தாலும் உள்ளுணர்வை மதிக்கும் ஒரு நபர்.

ஒர் நாள் தனது வீட்டிற்கு 3 மந்திரிகளை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்து ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே விமானத்தாக்குதல் ஆரம்பமாகியது. சடாரென இருக்கையை விட்டு எழுந்த சர்ச்சில் நேரடியாக சமையல் அறைக்குச்சென்று பணியாளர்களிடம்  " சாப்பாட்டை மேஜையில்  வைத்து விட்டு.. உடனே பாம் ஷெல்டர் /பதுங்கு  பகுதிக்கு சென்றுவிடுங்கள்..." என கட்டளை இட்டுவிட்டு திரும்பி வந்தார்.

3 நிமிடங்களுக்குப்பிறகு  அவர் வீட்டு மையல் அறை மீது குண்டு விழுந்து சமையலறை சுக்குநூறாகியது. சமையலறை ஊழியர்கள் சர்ச்சிலின் உள்ளுணர்வால்  எச்சரிக்கப்பட்டு உயிர் தப்பினர் ..
மேலும் இந்த சர்ச்சில் PROPHESY சொல்வதில் சிறந்தவர்   :) அவரது உள்ளுணர்வால்   இந்திய சுதந்திர போராட்ட நேரத்தில் சொன்னது //

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் இந்நாடு ரவுடிகளின் ,முரடர்களின் //போராட்ட கலகக்காரர்களின்  அடி முட்டாள்களின் கைக்கு போகும் தாழ்மையான நிலைக்கு தள்ளப்படும் அரசியல் வாதிகளுக்குள் சண்டை நடக்கும் ..நீருக்கும் காற்றுக்கும் கூட வரி கட்டுவார்கள் இந்தியர்கள் .//.
என்று சொன்னார் ..அது உண்மை அவரது உள்ளுணர்வு வெளிப்படுத்தியதை சொல்லியிருக்கார் ..
இராக் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் பணிபுரிவோருக்கு பல நேரம் இந்த உள்ளுணர்வே அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளதாம் ..ஆர்மியில் இருப்போர் உள்ளுணர்வை அறியும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஓரிடத்தில் படித்தேன் ..சில நேரத்தில் ஆஹா ! சூப்பர் ஐடியா என நம்மை நாமே பாராட்டிக்கொள்ளுவோம் ..அந்த ஐடியாவை தந்தது நமது உள்ளுணர்வாகத்தான் இருக்கும் ..
அனைவருக்கும் உள்ளுணர்வு ஏற்படும் வரும் ஆனால் பலர் அதை பொருட்படுத்துவதில்லை ..
சில  நேரம் அதை செய்யாதே என உள்ளுணர்வு சொல்லும் அதை மீறினால் நிச்சயம் ஏதாவது பாதிப்பு ஏற்படும் ..


இந்த சுட்டியில் சென்று வாசிக்கவும் நிறைய விஷயங்கள் உள்ளுணர்வு பற்றி இருக்கு இந்த உள்ளுணர்வு யாருக்கெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் கொஞ்சம் கிரியேட்டிவ் மைண்ட் மனிதர்களுக்கு உள்ளுணர்வு தொல்லை அதிகம் இருக்குமாம் :)) கொஞ்சம் எனக்கும் இருக்கே ....எப்போலாம் உள்ளுணர்வு அலெர்ட் பண்ணுதோ அப்போ வயிற்றில் பூச்சி ஓடற உணர்வு ஒரு வித அன் ஈஸினெஸ்  ஏற்படுமாம் சிலருக்கு ..

மேலும் உள்ளுணர்வு யாருக்கு  அதிகமா வருகிறதோ அவர்கள் கோபப்படக்கூடாதாம் ..இதுவும் எனக்கு பொருந்துகிறது :)
உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்  இல்லைனா எதிர்மறை எண்ணங்களை வெல்வது கடினம் என்கிறார்கள் மேதகு உள்ளுணர்வாளர்கள் ..


Intuitive seeing//clairvoyant,
-------------------------------------
ஒருவர் ஒரு வீட்டை வாங்குமுன் அடுத்த நாள் அதை பார்க்க செல்ல இருக்கிறார் .இரவு ஒரு வீடு கனவில் வருகிறது அடுத்த நாள் இவர் பார்த்த வீடு முந்தைய நாள் கனவில் வந்த வீடே ..அப்போ எப்படி இருந்திருக்கும் ..அவரது உள்ளுணர்வு அவருக்கு இந்த வீட்டை வாங்குமாறு கட்டளையிட்டு காட்டியிருக்கிறது ....


இப்போ எனக்கு ஏற்பட்ட சில உள்ளுணர்வுகள் ....
-----------------------------------------------------------------------------------
பல வருடங்கள் முன்  முதுகலை பட்டம் மற்றும் ஆசிரிய பயிற்சி முடித்தபின் உடனே ஓரிரு பிரபல பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்லூரிகளில் M.Phil சேர அப்ளிக்கேஷன் போட தயாரானேன் ..ஆனால் உள்ளுணர்வு ..ஜெர்மன் வகுப்புக்கு போக சொல்லி கொண்டேயிருந்தது ..எனக்கு ஒரே குழப்பம் ..நம்ம நாட்டு ஹிந்தியே எனக்கு தெரியாது எப்படி ஜெர்மன் நான் படிக்கணும்னு தோன்றியது . அப்போ புரியலை ஆனா சரியா ஒரு வருடத்தில் ஜெர்மனியில் இருந்த   இவருக்கு பெண் கேட்டு வந்தாங்க :) முதலில்  தூர இடத்தில திருமணம் வேணாம்னு மறுத்து  ....பிறகு விதி வலியது :)  அவர் பொல்லாத நேரம் நானே மணாளி :) மேலுள்ள படத்தில் இருப்பது எங்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் இருக்கும் திருவிருந்து ஆராதனை பொருட்கள் .....ஆலயத்தில் திருவிருந்து ஒவ்வோர் ஞாயிறும் நடக்கும் ..திராட்சை ரசம் தண்ணீர் அதெற்கென உபகரணங்கள் அனைத்தையும் ஆயத்தம்  செய்வது எனது பொறுப்பு .ஆலயத்தில் உள்ள எல்லாருக்கும் சாவி இருக்காது பொறுப்பு அதிகம் மற்றும் பணம் இன்னபிற artifacts இருக்கும் .ஆகவே என்னிடம் மற்றும் இன்னொருவரிடம் மட்டுமே சாவி இருக்கும் ..அந்த மற்றவர் சொன்னார் ஒவ்வொரு ஞாயிறும் நீயே செயகிறாய் இந்த அரேஞ்சமென்ட்டை ..நீ வரவில்லைனா திடீர்னு கஷ்டமாகிடும் ஆகவே எப்படி ஆயத்தம்  செய்ரதுன்னு எனக்கு சொல்லிக்கொடு என்றார் .நான்  அவரிடம் அனைத்தையும் புகைப்படமாக எடுத்து ஷெல்பில் வைக்கிறேன் என்று சொன்னேன் .வழக்கம்போல சனிக்கிழமை இரவு உறங்க சென்றேன் இரவு கனவில் திரு விருந்துக்கு அந்த அப்பம் வைக்கும்  வெள்ளி தட்டு சிதறி விழுந்து அப்பங்களை தாறுமாறாக கொட்டுவது போல கனவு .. காலையில் எழுந்து கணவரிடம் சொன்னேன் ..அவர் என்னிடம் கவனமாக அடுத்த நாள் நடக்க சொன்னார் ..நான் கொஞ்சம் வேகமாக நடக்கும் பழக்கமுடையவள் .அடுத்த நாள் காலை சீக்கிரமே ஆலயம் சென்று ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தேன் ..அப்போது மனக்கண்ணில் மீண்டும் சிதறி விழும் காட்சி ....சடாரென தோன்றி மறைந்தது ..

கொஞ்சம் பயத்துடன் அடுக்கி முடித்து விட்டு ஆராதனைக்கு அமர்ந்தேன் ..திருவிருந்து நடக்கும் நேரம் ..அனைவரும் ஆல்டர் அருகில் முட்டி போட்டு அப்பத்திற்காக காத்திருக்கும்போது அந்த 84 வயது ஆயர் நீண்ட அங்கி தடுக்கி அப்படியே விழுந்தார் ..அப்பம் மற்றும் அந்த வட்ட தட்டு  கனவில் வந்ததை போலவே சிதறி கிடந்தது :( 
நல்லவேளை அடி  ஏதும் படவில்லை அவருக்கு ..இதில் மிகுந்த வருத்தம் மகளுக்கே அவள் அவருக்கு உதவி செய்து விட்டு இறங்கி கொயரில் பாட வந்துவிட்டா ..அருகில் இருந்தாலும் 15 வயது சிறுமியால் அவரை விழாமல் பிடித்திருக்க முடியாது ..ஏன்மா என்கிட்டே சொல்லலை நான்  தாத்தா அருகில் இருந்திருப்பேனே என்றாள் ..அவருக்கு அடிபடாமல் பிழைத்தது பெரும் புண்ணியம் .
(மகள் ஆல்டர் ஹெல்ப்பர் )

பதிவு மிகவும் பெரிதாகி விட்டதால் இரண்டாக பிரித்து விட்டேன் :)

...தொடரும் 

41 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் ஓஒடியாங்கோஒ.. அஞ்சு முதேல்ல்ல் தடவையா ஞானியாகிட்டாஆஆஆஆ.. சத்தியமா இதுக்கு நான் பொறுப்பல்ல...:)
  ஹா ஹா ஹா கொஞ்சம் லேட்டா வாறேன் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல் பதிவை படிக்கும் போதே மூச்சு வாங்குது இதில வேற நீங்க எல்லோரும் ஓடிவாங்க என்றால் எப்படி நீங்க இரெண்டு பேரும் எதோ சதி திட்டம் திட்டி இருக்குற மாதிரியல்லவா இருக்குது

   Delete
  2. இல்ல இல்ல தமன்னாக்கா:) உங்களுக்கேதான்ன்:))

   Delete
  3. ஹா ஹா :) நான் நல்ல கவனிச்சேன் ஒருத்தர் கொஞ்சம் பயந்துட்டா மாதிரி இருக்கு இந்த பதிவை படிச்சி :)))
   என்னென்னமோ செஞ்சு பார்த்தோம் ஒருத்தரை அசைக்க முடில .உள்ளுணர்வு பதிவு பயங்காட்டிருச்சே :))

   Delete
  4. சேசே தமன்னா வேணாம் நான் சொல்ற பொண்ணு அழகு :) இறுதி சுற்று ஹீரோயின் அந்த பொண்ணு பேர் நினைவில்லை ஆனா பாக்சிங் போடும் :)))

   Delete
 2. ஹலோ இவ்வளவு பெரிசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ வா பதிவி போடுறது இப்படி பெரியச பதிவை படித்து கருத்து சொல்லும் போது முதலில் என்ன படித்தோம் என்று மறந்துவிடுகிறது


  அதனால இறுதியில் படித்ததை ஞாபகம் வைத்து கருத்து போடுறேன்.. அந்த பஞ்சாபி மாதிரி நான் இந்தியாவிற்கு போனால் எதவாது அழகான பொண்ணு சிக்குமா? நயன் தாராதான் கைவிட்டு போச்சு ஹும்ம்

  ReplyDelete
  Replies
  1. கிக்கிக்கீயே ..நாங்க மனசில் வஞ்சகம் இல்லாதவங்க :) அதான் கணக்கு வழக்கு பாக்காம எழுதி விட்டுட்டேன் :)
   அதெப்படி அந்த பஞ்சாபி மேட்டர் மட்டும் சரியா பிடுச்சி நினைவில் வந்துச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  2. ஹா ஹா போங்க ஊருக்கு போனா பூலான்தேவியோட அஸிஸ்டண்ட்ஸ் தான் கிடைப்பாங்க

   Delete
  3. இல்லை ,,நான் எழுதும்போதே யோசிச்சேன் கொஞ்சம் பெரிய பதிவுதான் ..நாங்கல்லாம் ஒன் வர்ட் கொஸ்டினுக்கே பாராகிராஃபா எழுத்து பழகிட்டோம் :)
   கொஞ்சம் அடஜஸ்ட் ப்ளீச்

   Delete
  4. திருப்பி வாசிச்சு பார்த்தேன் எனக்கே மயக்கம் வர மாதிரி இருந்திச்சி இரண்டா பிரிச்சிட்டேன்

   Delete
 3. நீங்கள் கொடுத்த இணைப்பிற்கு செல்கிறேன்... நன்றி...

  அதற்குள் உங்களின் அடுத்த பதிவு வந்து விட்டது... அதற்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தனபாலன் ..இதை ஒரே பதிவாக போட்டு பிறகு இரண்டாக பிரித்தேன் .போஸ்ட் பெரிதாகிவிட்டதால் ..
   .வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி

   Delete
 4. ///இந்த உள்ளுணர்வு யாருக்கெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் கொஞ்சம் கிரியேட்டிவ் மைண்ட் மனிதர்களுக்கு உள்ளுணர்வு தொல்லை அதிகம் இருக்குமாம் :)) கொஞ்சம் எனக்கும் இருக்கே ///
  ஓ மை கடவுளே.. கடகடவென வாசிச்சுக்கொண்டு வந்த நான்ன்.. இவ்விடத்தில் நிறுத்தி.. ஐஸ் வோட்டர் குடிக்கிறேன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் ..வாட்டர் குடிகாரத்துக்கு அந்த ஐஸையே சாப்பிடுங்க ஈஸியா இருக்கும்

   Delete
 5. ///எனக்கு ஒரே குழப்பம் ..நம்ம நாட்டு ஹிந்தியே எனக்கு தெரியாது எப்படி ஜெர்மன் நான் படிக்கணும்னு தோன்றியது . அப்போ புரியலை ஆனா சரியா ஒரு வருடத்தில் ஜெர்மனியில் இருந்த இவருக்கு பெண் கேட்டு வந்தாங்க :)////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உள்ளுக்குள்ளால மெயில் அனுப்பி லவ்வூ பண்ணிப்போட்ட்ட்டு:)) இப்போ எங்களுக்கு கதை விடுறா உள்ளுணர்வாம்ம்ம்... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. ஆமா அப்படியே அனுப்பிட்டாலும் //ரெஸ்பெக்டட் மேடம் ..உங்களது கடிதம் பரிசீலனையில் உள்ளதுன்னு அவங்கப்பாவுக்கே மெயிலை அனுப்பி வச்சிருப்பார் இவர் :))

   Delete
 6. உங்களுக்குள்ள ஏதோ சக்தி இருக்கு... அதை சரியான விதத்துல பயன்படுத்தினா உலகத்தையே வெல்லலாம்... :)

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல் குள்ள ஆத்தா வந்து இறங்கி இருக்கா அதுனாலதான் பெரிய பதிவா எழுதி ஆத்தாநம்மை கொடுமை படுத்துறா

   Delete
  2. ஹா ஹா சக்தி எல்லாம் இல்லைப்பா :) எதோ அப்பபோ தோணும் அதெல்லாம் நடந்திடும் ..ஒருமுறை ப்ரண்டு ஆனா மாதிரி கனவு கண்டேன் அடுத்த நாள் அவளே கால் செய்றா ..சந்தோஷ விஷயம்னு ..இப்படி சந்தோஷம்னா மனசுக்கு நிம்மதி பயப்படும் விஷயமான உடனே ஜெபம் பண்ணிடுவேன் கவனமா இருப்பேன்

   Delete
  3. @அவர்கள் உண்மைகள் :) இது பெரிய பதிவா :) இதில எவ்ளோ பரக்ராப் கட் செஞ்சேன் தெரியுமா :) முதலில் எழுதியதை போட்டிருந்தா நீங்களே மயங்கி விழுந்திருப்பிங்க :)
   அப்படின்னா எனக்கு தட்சிணை வேணும் :) உடனே அனுப்பவும்

   Delete
 7. Omg.இந்த உள்ளுணர்வு கனவு இவைகளால் எனக்கு மிகுந்த பயம் உண்டு.பல விசியங்கள் அப்டியே நடந்திருக்கு,பல விசியங்கள் உல்டாவாகவும் நடந்திதுக்கு.

  ஆனாலும் இந்தியாவைப் பற்றி அப்பவே அப்டி சொல்லிட்டாரா சர்ச்சில்.ஆனாலும் இங்க வந்தால் சித்தம் பித்தம் தெளிந்த மாதிரியே ஆகிடுவோம்.fb லதான் சிறுபிள்ளையாய் சுற்றலாம் வாங்க

  ReplyDelete
  Replies
  1. சர்ச்சில் கொஞ்சம் ரேசிஸ்ட் டைப் ..அந்தாளுக்கு வெறுப்பு இந்தியாவை விட்டுக்கொடுப்பதில் ..ஆனா மனுசன் சொன்ன மாதிரிதான் நடக்குது பாருங்க எவ்ளோ பிரிவினை சண்டைகள் ..FB வருவேன் அப்பபோ இதுதானா எனக்கு பிடிச்சிருக்கு :)

   Delete
 8. சர்ச்சிலின் உள்ளுணர்வு சம்பவம் படித்திருக்கிறேன். எனக்கு அப்படி உள்ளுணர்வு ஏதாவது முன்னதாக வந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஊ....ஹூம்!

  ReplyDelete
  Replies
  1. நான் இங்கே லைப்ரரியில் வந்த புதிதில் படிச்சேன் ..ஹிட்லர் வெர்சஸ் சர்ச்சில் ..அப்புறம் வாழ்க்கை வரலாறு ..

   உள்ளுணர்வு தோணாதவங்க கொடுத்து வைத்தோர் :)

   Delete
 9. எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இந்த கனவும் உள்ளுணர்வும் எச்சரிக்கிறது .அதுக்காகவே நாங்கள் நாய் ,பூனை,மீன்,பேர்ட் எல்லாம் வளர்ப்பதை தவிர்க்கிறோம்.பெரும்பாலாக நடந்து கொண்டிருக்கிற விஷயங்கள் ஏற்கனவே கனவில் வந்ததாகவும் இருக்கு.ஆனாலும் இதை நான் வெறுக்கிறேன்.இந்த எச்சரிக்கையில் பயம் தான் மிச்சம் எதையும் தவிர்க்கவோ தப்பிக்கவோ முடிவதில்லை.எனக்கும் இது பற்றி படிக்க விருப்பம் .லிங் குடுத்ததுக்கு நன்றி அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. நாய் பூனை வளர்த்தா நிறைய உள்ளுணர்வு வருமா ? நான் தான் வாழ்க்கைமுழுக்க வளர்த்துக்கிட்டு வரேன் அப்படியும் இருக்கலாம் ..
   எஸ் செய்யாதேன்னு மனசு சொன்னா அதை கேட்டு நடக்காம செஞ்சி கவலைப்பட கூடாதது ..இது சிக்ஸ்த் சென்ஸ் மாதிரிதான் ..

   எச்சரித்தும் நானா கவனமில்லாம இருந்திருக்கேன் அந்த கோயில் சம்பவத்தில்

   Delete
  2. வருகைக்கும் பின்னூட்டங்களும் நன்றிப்பா சுரேஜினி

   Delete
 10. ஹலோ உங்க உள்ளூணுர்வு என்னைப்பத்தி ஏதும் சொல்லுதா ? நிச்சயம் இவன் மோசமான ஆளாக இருப்பான் என்று சொல்லி இருக்கணுமே

  ReplyDelete
  Replies
  1. ///நிச்சயம் இவன் மோசமான ஆளாக இருப்பான் என்று சொல்லி இருக்கணுமே///

   ஹா ஹா ஹா இது அவர்கள் ட்ருத்:) இன் உள்ளுணர்வு:))

   Delete
  2. ஹா ஹா :) அதிராவ் ட்ரம்ப் அங்கிளின் மைத்துனர் மெலனியக்காவின் தம்பி தங்கமான நியூஜெர்சிக்கார் எனக்கொரு பரிசு கொடுத்திருக்கார் ..ஐ அம் வெர்ர்ர்ர்ர்ய் ஹாப்பி :)
   தலையை மேலே தூக்கி பாருங்க .அந்த கோல்ட் செயின் கழட்டி என்கிட்டே கொடுத்துட்டு பாருங்க ..பிக்காஸ் நீங்க பார்த்துட்டேஇருப்பீங்க ..

   Delete
  3. @Avargal unmaigal ..ஹா ஆஹா :) எனக்கு ஒருத்தர் மேலே நம்பிக்கை வந்துட்டா அதையாராலும் தகர்க்க முடியாதது ..
   அந்த மாதிரி முதல் உங்க பிளாக் பக்கம் வந்தப்பவே எனக்கு இவர் நல்லவர்னு தோணிச்சி ..
   மனசுக்கு குட்டி நெருடல் இருந்தாலும் நானா ஆணோ பெண்ணோ தூரத்தில் ஓடிடுவேன்

   Delete
  4. ஓ பார்த்தேனே ரொம்ப சூப்பரா இருக்கு... அஞ்சூ அதுக்கான பீஸ் ஐ என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்கோ.....

   Delete
 11. உள்ளன்புடன் எழுதியுள்ள உள்ளுணர்வு பதிவின் முதல் பகுதி அருமை. அடுத்த பகுதிக்குப் போக உள்ளேன்.

  [அதிரா ஜில் வாட்டர் குடித்ததாகச் சொன்னதைப் படித்தேன். ரஸித்தேன். சிரித்தேன்.]

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டங்களும் நன்றி கோபு அண்ணா

   Delete
 12. உண்மையில் இந்த உள்ளுணர்வு நல்ல வழிகாட்டி என்பதை நானும் அறிந்து இருக்கின்றேன்.அருமையான பகிர்வு .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டங்களும் நன்றி நேசன் ..ஆன்மீகத்தில் நாட்டமுள்ளோருக்கு இன்னுமதிகமா இந்த உள்ளுணர்வுகள் இருக்கும் என்று நினைக்கிறன்

   Delete
 13. சர்ச்சிலின் உள்ளூணர்வு பற்றி வாசித்திருக்கிறோம்...

  எங்கள் இருவருக்குமே இந்த உள்ளுணர்வு அதன் தாக்கம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதுவும் குறிப்பாக பிரார்த்தனை செய்யும் போது அல்லது அது முடிந்த்தும்....முடிவுகள் அதை ஒட்டியே ...பெரும்பாலும்...

  அனைவருக்கும் உள்ளுணர்வு ஏற்படும் வரும் ஆனால் பலர் அதை பொருட்படுத்துவதில்லை ..// யெஸ் உண்மை...அது உள்ளூணர்வு என்றில்லாமால் எதிர்மறையாக வந்தால் எதிர்மறை வேண்டாம் என்று புறம் தள்ளுவதாலும் இருக்கலாம்.

  மட்டுமல்ல சில சமயங்களில் இந்த உள்ளூணர்வு பாசிட்டிவாகவும் சொல்லும்.

  கீதா: ஏஞ்சல் எனக்கும் அந்த வயிற்றில் பூச்சி அன் ஈசினஸ் ஏற்படும்.....ஆனால் மனதில் நினைப்பது நடக்கும்....அது சில சமயம் நான் என்ன நடக்க வேணும் என்று நினைக்கிறேனோ இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்ரு நினைப்பது அது நடக்கும்..பாசிட்டிவாகத்தான்..

  சுட்டி செல்ல வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அன்ட் கீதா ..நானா எப்பவும் கலக்கமான உள்ளுணர்வு வந்தா உடனே ப்ரேயர்தான் ..உள்ளுணர்வை நான் எச்சரிக்கை மணி போல உணர்கிறேன் ..நாம் தான் சரியான முடிவுகளை எடுக்கணும் ..எனக்கும் அந்த gut feeling உண்டு கீதா ..
   பல விஷயங்களை எழுதலை ..அப்புறம் எல்லாரும் பயந்திடுவாங்க :)

   எல்லாரும் ஹில்லாரி தான் வெல்வார்னு கணித் தப்போ எனக்கு தோணுச்சு :( இந்த மனிதன்தான் வரப்போகுதுன்னு அதனால் பிரச்சினைகள் கூடும்னு எப்போ ஒரு வருஷமுன்னயே ..விதி ..பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் சில நேரங்களில்

   Delete
 14. இந்த உள்ளுணர்வு வந்தாலே எனக்கு முதல்ல நடுக்கமாக இருக்கும். மனசெல்லாம் படபடக்கும். தீமையானதெனில் நடக்ககூடாது என வேண்டினாலும் அப்படியே நடந்திருக்கு. நன்மை,தீமை என எனக்கும் வந்திருக்கு அஞ்சு. இன்னொன்னும் இருக்கு எனக்கு நான் யாரில் அன்பு அதிகமா இருக்கோ அவர்களிடத்தில் சொல்ல,அல்லது கேட்க நினைக்கும் செயல் எனக்கு அப்படியே நடந்திருக்கு. முன்னாடி அப்பா. இப்போ என் கணவர். இதும் மனம் உள்ளுணர்வு சம்பந்தப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். எங்க வீட்டில அப்பா,நான்,3வது அக்கா மூனுபேருக்கும் இருக்கு இது.
  கனவு குறைவு. ஆனா உள்ளுணர்வு வந்திட்டே இருக்கு. இப்பவும். அதுவும் ஒருத்தரை பார்த்தால் டக் கென மணி அடிக்கும் பழகலாமா,வேண்டாமா என. ஒன்றிரண்டு தப்பியிருக்கு அனேகம் சரியாக வந்திருக்கு. என் ப்ரெண்ட் க்கு கூட சொல்லி அவளும் சொல்வாள்,. நீ சொன்னது சரிதான் என. சில சமயம் ஏண்டா வருது என இருக்கும். நானும் ப்ரே பன்னுவதுதான்..
  ஆனா உங்களுக்கு அப்படியே சரியா வருதே அஞ்சு.. .

  ReplyDelete
  Replies
  1. ப்ரியா ,நான் நிறைய விஷயத்தை சொல்லலை அதிகம் நான் தொடர்பில்லாத பழகத்தவங்க கூட என் கனவில் வராங்க .எதையாவது நினைத்தால் யாரையாவது நினைத்தால் அவர்களுக்கு வேறு தொலைதூரத்தில் இருந்தாலும் எதோ ஒரு பிரச்சினையில் இருப்பாங்க அது கனவில் காட்டிக்கொடுக்கும் ..நட்புக்களானா பரவாயில்லை சம்பந்தமில்லாதவர்கள் பற்றிய விஷயமும் வந்துவிடுத்து ..
   லின் பற்றி சொன்னேனே அவருக்கு மீண்டும் வலிப்பு வருவதுபோல தோணுச்சு அன்று மீண்டும் பல மாதங்கள் பிறகு அவருக்கு அப்படி ஏற்பட்டது ..

   Delete