அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/12/17

சில மனிதர்களும் நாலு கால் நட்புகளும் நானும் ,,மார்லீ ,லின்


 அன்றாடம் பலவகையான மனிதர்களை சந்திக்கிறேன் ..மனிதர்கள் மட்டுமில்லை நாலு கால் ஜீவராசிகளையும்தான் தினமும் சந்திக்கிறேன் அப்படி சந்தித்து மனதில் நீங்கா இடம் பிடித்த சிலர் பற்றிய பதிவு இது ..
வாலண்டியரிங் செல்வதால் பல்வேறு மன நிலையிலுள்ள மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குண்டு .. .மேலும் ஆலயத்திலும் பல்வேறு மனிதர்களை சந்திப்பதால் அவர்களும் இப்பதிவுகளில் இடம் பெறுவர் ..

லின் 
---------

எங்கள் ஆலயத்துக்கு 3 வருஷமா வருகிறார் லின் ..பிரிட்டிஷ் பெண்மணி 50 வயதிருக்கும் ..அவருக்கு அவரது தந்தை 12 வயது முதல் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி அதற்கு அடிமையாகி அதனால் பல அவதி பட்டு பிறகு இப்போ ட்ரீட்மெண்ட் எடுத்து சுகமாகி வந்துட்டார் கடந்த 3 ஆண்டுகள் குடியை தொடவில்லை ..குடிப்பழக்கம் மற்றும் அதில் இருந்து விடுபட எடுத்த சிகிச்சை மருந்துகள் அவரை பாடாய் படுத்தி விட்டது .. வித்ட்ராயல் சிம்ப்டம்ஸால் முன்பு அடிக்கடி வலிப்பு வரும் ..ஆரம்ப காலத்தில் அவருக்கு குட் மார்னிங் சொன்னா முறைப்பார் ,,மருந்துகளின் வீரியம் தான் காரணம் ..எதையும் கண்டால் கோபப்பட்டு அடிப்பாராம் ..இப் போதெல்லாம் நல்ல மாற்றம் அளவுக்கதிகமா சந்தோஷமா இருக்கார் ..அரசாங்கம் அவருக்கு தனி வீடு கொடுத்திருக்கு அவ்வப்போது SEIZURES வரும் முன்பு இப்போ அப்படி இல்லை மிக சந்தோஷமாக இருக்கார் ..இது அவர் ஆலயத்தில் அனைவருக்கும் கொடுத்த கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் ....அவர் வீட்டருகே ஒரூ பூனையை யாரோ விட்டு சென்று விட அதை எடுத்து வளர்க்கிறார் .அந்த பூனைக்கு ஒரு கண் தான் தெரியுமாம் ,,ஆனால் இவருடன் மிக அன்பாக இருக்காம் ..வாழ்த்துமடலில் பூனை எழுதுவதை போல அவர் எழுதியிருக்கார் .


வலிப்பு வந்தப்போ ஒருமுறை அவர் அருகில் இருந்தேன் .வாழ்க்கையில் வலிப்பு வந்த ஒருவர்  கிட்ட இருந்து அவர் பட்ட கஷ்டத்தை முதல் முறையா பார்த்தேன் மனசே நொறுங்கிப்போச்சு அவர் உடையெல்லாம் விலகி அந்த நிலையிலும் கைகளால் டி ஷர்டை இழுத்து விட்டார் பாவமா போச்சு நான் போட்டிருந்த சம்மர் ஜாக்கெட்டை போட்டு விட்டேன் அவர்  மீது ,எனக்கு  பல நாள் தூக்கம் போச்சு அவரை அப்படி பார்த்ததில் ,,இப்படியெல்லாம் கூட மனிதர்களுக்கு துன்பம் வருமா என்று வருந்தினேன் ..


ஒரு முறை பிரசங்க நேரம் வலிப்பு வந்து பிரசங்கம் தடை ஏற்பட்டது ..ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது  எழும்பி ஆம்புலன்ஸ் இல் போகுமுன் பாதிரியாரிடம் தன்னால் ஏற்பட்ட தடங்கலுக்கு அந்நிலையிலும் நடந்து சென்று மன்னிப்பு கேட்டார் அவர்  ..தன்னிலையில் இல்லை ஆனாலும் தன்னால் ஒரு தடை ஏற்பட்டதே என்ற வருத்தம் அவருக்கு ..அதை பார்த்ததில் அழுகை வந்து விட்டது ..இப்போது தொடர்ந்து ஆலயம் வருகிறார் ..

தன்னாலான உதவிகளை அனைவருக்கும்செய்கிறார் ..

மார்லீ 
=======

மார்லீ  பற்றி கேட்டு வாங்கி போடும் கதை முன்னுரையில்  ஏற்கனவே சொல்லியிருந்தேன் 
மார்லீ  staffordshire bull terrier வகை நாலு கால் ஜீவன் ..
தற்போதைய உரிமையாளர் அதை அதன் முன்னாள் உரிமையாளர்களிடமிருந்து காப்பாற்றி வளர்க்கிறார் .முன்னாள் உரிமையாளர்கள் மார்லீயை மிகவும் துன்புறுத்தி இருந்தார்களாம் .அதனால் எதற்கெடுத்தாலும் பயப்படுமாம் பாவம் ..
மார்லீயையும் இப்போதைய wild life rescue டீமை சேர்ந்த Mr .ஜார்ஜையும் தினமும் canal வழியே நடக்கும்போது சந்திப்பேன் .. தூரத்தில் நான் நடந்து வருவது தெரிந்தாலும் மார்லீ மிஸ்டர் ஜார்ஜிடம் வாலையும் தலையையும் ஆட்டி அலெர்ட் செய்யும் என்று அவர் சொல்வார் ..நம்மையும் நினைவுகூருகிறதே ஒரு ஜீவன் என்று ஆச்சர்யமாகிப்போனது எனக்கு :)

இந்த canal வழியாதான் வாக்கிங் போவேன் 

தூரத்தில் தெரிவது மார்லீயும் அதன் ஓனரும் ..கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சில நாட்கள் அவர்களை பார்க்க முடியவில்லை ஒரு வாரம் விடுமுறைக்கு பின்  மீண்டும் வாக்கிங் செல்லும்போது தூரத்தில் ஒரு சிறு கருப்பு உருவம் என்னை பார்த்து ஓடி வந்தது :)
மார்லீதான் ..கன்னத்தில் ஒரு இச் கட்டிப்பிடித்து அன்பு மழை பொழிந்தது :)  ஜார்ஜுக்கே ஆச்சர்யம் இந்த மார்லீ ரொம்ப பிடிச்சவங்களோடுதான் இப்படி பழகுமாம் ..கொஞ்சம் நேரம் ஊர் கதை பேசியபின் ஜார்ஜ் ..ஓகே ஏஞ்சலின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்னு சொல்லிவிட்டு ரெண்டு எட்டு நடந்தவுடன் மார்லீ மீண்டும் என்னை நோக்கி வந்து இரு கைகளால் (முன்னங்கால்கள் )என் கைகளை பிடித்து எதோ சொல்லிவிட்டு மீண்டும் ஜார்ஜை நோக்கி ஓடியது ..
எனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லியிருக்கும்னு நினைக்கிறேன் :)


அடுத்த பதிவில் கிட்டுவும் லியனார்டோவும் பற்றி எழுதுகின்றேன் .


26 comments:

 1. மிக அருமையான + ஆச்சர்யமான சில விஷயங்களைத் தங்கள் மூலம் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..இப்படி பல சம்பவங்கள் வித விதமான மனிதர்களை சந்திக்கிறேன் ..லின் படம் இருக்கு ஆனா இவர்கள் vulnerable அதாவது people in need of special care, support, or protection because of டிசெபிலிட்டி அதனால் படம் போட்டா பிரச்சினையாகும் ..பிரார்த்தனை செய்யுங்க இவர் போன்றோருக்கு .நமக்கெல்லாம் நல்ல வழி நடத்த பெற்றோருண்டு ஆனால் இவர் போன்றவர்களுக்கு :(

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஆவ்வ்வ் மீ லாண்டட்.. முதலில் படங்கள் பார்த்தேன், இனித்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கப் போறேன், இம்முறை கோபு அண்ணனோ லாப் எலி?:) ஹா ஹா ஹா... மீ சேவ்ட்:)

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எல்லாம் தலை கீழா தெரியுதே !! அடடா அதிரா லாண்டட் அதான் :) வருக மியாவ்

   Delete
 4. லின் இன் கதை படிக்க கஸ்டமாக இருக்கு, குடிப்பழக்கம் ஒருவரை எவ்வளவு கஸ்டப்படுத்துகிறது, இருப்பினும் அவர் அதிலிருந்து மீண்டது மகிழ்ச்சி, ஆனா குடியிலிருந்து மீழ்வது இவ்வளவு கஸ்டம் கொடுக்காதே, இவருக்கு வேறும் ஏதோ பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.

  என்னோடு வேர்க் பண்ணும் இன்னொரு ஆசிரியை இப்போ 36 வயசு, அவ 12 வயதிலிருந்தே சிகரட்டுக்கு அடிமை, அதனால் கை நடுக்கம், நகங்கள் கறுத்து, தோல் உரிந்ததாம், இதற்குள் திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர்... ஆனா இப்போ 4,5 வருடமாக நிறுத்திவிட்டாவாம் ஆனா அதன் மருந்து தாக்கத்தால் உடம்பு மிகவும் பெருத்துப் போய் இருக்கிறா, மெதுவா குறையுமாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா அவரை யாரோ சிறு வயதில் abuse செய்திருக்காங்க பாவம் ..அப்புறம் சில ட்ரக்ஸ் பழக்கமும் இருந்ததாம்

   Delete
 5. ////.தோலை தூரத்தில் நான் நடந்து வருவது தெரிந்தாலும் //// வாவ்வ்வ்வ் அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:))...

  அஞ்சு வோக்கிங் போகும் பாதை பார்க்க பயமா இருக்கு, தனியே போயிடாதீங்க.

  ReplyDelete
  Replies
  1. தோலை// where where :)))

   காலைநேரம் நிறையபேர் போவாங்க ..அவங்களோட நானும் போயிடுவேன் :) நிறைய வாத்து சீகல்ஸ் moor ஹென்ஸ் அப்புறம் அலாட்மென்ட் ஓனர்ஸ் எல்லாம் இருப்பாங்க இருட்டில் போக மாட்டேன்

   Delete
 6. ///மார்லீ மீண்டும் என்னை நோக்கி வந்து இரு கைகளால் (முன்னங்கால்கள் )என் கைகளை பிடித்து எதோ சொல்லிவிட்டு மீண்டும் ஜார்ஜை நோக்கி ஓடியது ..
  எனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லியிருக்கும்னு நினைக்கிறேன் :)///
  நோஓஓஓஓஒ நான் நினைக்கிறேன் அது ஐ லவ் யூ தான் சொல்லியிருக்கும்.. எதுக்கும் மீண்டும் ஒருக்கால் கேட்டுப் பாருங்கோ.

  ReplyDelete
  Replies
  1. haaa haa :) இருக்கலாம் :) ரொம்ப அன்பான செல்லம் அதிரா அது ..

   Delete
  2. அதிரா அந்த கிரீட்டிங் கார்ட் படிச்சீங்களா

   Delete
  3. பின்ன அது பூஸ் எழுதிய கார்ட் அல்லோ.. முதல்லயே படிச்சேன்ன்ன்... நம்மை விட லின் சூப்பரா கதை எழுதுறா:) புளொக் எழுதச் சொல்லுங்கோ:)..

   Delete
 7. லின் நெகிழ வைக்கிறார், மார்லீ நெகிழ்ச்சியோடு ஆச்சர்யப்படவும் வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நாலு கால் ஜீவன்கள் மிகுந்த ஞாபக சக்தி உள்ளவை லேசில் மறக்காது ..லின் போன்றோர் இங்கே நிறைய பேர் உண்டு சரியாய் கவனிக்கப்படவில்லையென்றால் அவ்வளவுதான் ....வாழ்க்கையை சீர் செய்துகொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை முறையாய் பயன்படுத்தி கொண்டார் ..

   Delete
 8. நடைபயிற்சியின் போது சந்தித்தவர்களை சிந்தித்து ஒரு கட்டுரை. ஒருவாரம் உங்களைப் பார்க்காமல் இருந்த மார்லீ உங்களிடம் வாழ்த்து சொன்னது நெகிழ்ச்சியான சம்பவம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளங்கோ அண்ணா ..ஆமாம் மார்லீ extremely friendly என்று சொன்னார் ஜார்ஜ்

   Delete
 9. நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதையைப் பார்த்தபோது அதிரா சொன்ன மாதிரிதான் எனக்கும் தோன்றியது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ..உண்மைதான் ..எங்களுக்கு அடிக்கடி நடந்து பழகியதால் பயமா தெரில்லை ..சம்மர் நேரம் நிறைய boats போகும் ஒற்றையடி பாதை மாதிரி ..அப்பப்போ canal volunteers போவாங்க ஆனால் மாலை 3 மணிக்கு மேலே நான் போனதில்லை இப்பெல்லாம் இருட்டுது சீக்கிரமே ..நிறையபேர் மீன் பிடிச்சிட்டு இருப்பாங்க தூண்டில் போட்டு

   Delete
 10. லின் பாவம்...மனதை நெகிழ வைத்துவிட்டார். மார்லி ஆம் நீங்கள் கேட்டுவாங்கிப் போடும் க்தையில் முன்னுரையில் சொல்லியிருந்தீர்கள்...செம க்யூட் பா..மீண்டும் உங்களை வந்து கை கொடுத்தது ஆம் விஷ் ஆகத்தான் இருக்கும். தன் எஜமானர் ஏதோ சொல்லுகிறாரே நாமும் சொல்வோம் என்று தன் அன்பைத் தெரிவித்திருக்கிறது!! நாலுகால் எல்லாமே வியப்பும் வினோதமும் தான். அழகு!

  நீங்கள் செல்லும் பாதை மிக அழகாக இருக்கிறதே!!!

  நாலுகால்கள் பற்றி என்ன எழுதினாலும் மகிழ்வுதான்!! ரசித்தோம் ஏஞ்சல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி கீதா அண்ட் துளசி அண்ணா ..
   லின் மாதிரி அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குவோர் நிறைய இருக்காங்க கீதா ..
   இன்னும் நிறைய விஷயங்கள் எழுதுகிறேன் இந்த நாலு கால் செல்லம்ஸ் பற்றி

   Delete

 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ

   Delete
 12. உங்களுக்கு இப்படியான அனுபவன்கள் நிறைய கிடைக்கும்போல.. லின் போல் இங்கும் எத்தனை பேர் இருக்காங்களோ தெரியல அஞ்சு. பெற்றார்களால் கெடும் பிள்ளைகள் இங்கு அனேகம். மகனுடன் கூட படிப்பவர் 13வயதிலே எல்லாம் ஆரம்பிச்சாச்சு.
  இங்கு நடக்கும் பாதைகள் இப்படித்தான் இருக்கும். ஆறு அருகில் ஓடும். எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் பாதை எல்லாம் கலந்து வரும். சம்மரில் நடக்க அழகா இருக்கும்.
  மார்லீ க்கு உங்க மீது அன்புதான். பொதுவா பிடித்துவிட்டா நாலுகால் செல்லங்கள் மறக்கமாட்டினம். பக்கத்துவீட்டுகாரி கூட்டிக்கொண்டுபோவா பெயர் புறுனோ. என்னை கண்டா நின்று வாலை ஆட்டி முனங்கிவிட்டுதான் செல்லும். ஜன்னலால் கண்டு கூட்பிட்டாலும் நின்று மேலே பார்த்து வாலை ஆட்டும்,குதிக்கும்.ஆனா நான் கிட்டபோய் தொட்டது கிடையாது. பாவம் இப்ப கொஞ்சம் சுகமில்லை. அவைழின் அறிவும் அன்பும் சொல்லமுடியாது.

  ReplyDelete