அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/3/17

ராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .
புது வருஷத்தில் சமையல் குறிப்போடு ஆரம்பிக்கிறேன் :)


க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்களுக்கு இது உகந்தது ..

சென்னையில் கிடைக்குமிடம் 
இந்த சுட்டியில் இருக்கிறது 

http://dhanyam.in/category?path=23
http://dhanyam.in/contact

Gluten Free Rajgira Dosa , Rajgira Aloo Tikki ,Rajgira Mixed Vegetables Tikki 
Instant Gluten Free Dosai ,உடனடி தங்க தோசை 
======================================
ராஜ்கிரா ,ஆளி விதை ,க்ளூட்டன் இல்லா மாவு மற்றும் க்ளூட்டன் இல்லா ஓட்ஸ் சேர்த்து செய்த தோசை ..
ராஜ்கிரா ..Amaranth ,ஆளி விதை ...Golden Flax Seed 

இதில் ராஜ்கிரா என்பது வேறொன்றுமில்லை தண்டுக்கீரை முளைக்கீரை விதைகள் தான் ;முற்ற விட்டு அதை சேமித்து மாவாக அரைத்து பயன்படுத்துகிறார்கள் ..

வட இந்தியர்கள் நவராத்திரி விரத நாட்களில் இந்த ராஜ்கிரா சேர்த்த உணவுகளை அதிகம் சேர்க்கிறார்கள் ..இந்த ராஜ்கிராவை ..ராம்தானா தங்கம் என்றே இங்கு அழைக்கிறார்கள் ..

க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்கள் கோதுமை மற்றும் சில உணவுகளை சேர்க்க முடியாதவங்க .இந்த தங்க தோசையை உடனே செய்து சாப்பிடலாம் ..

தேவையான பொருட்கள் 
======================

ராஜ்கிரா /amaranth grains .....1/4 கோப்பை 
இந்த ராஜ்கிரா மாவாகவும் கிடைக்கும் .நான் பயன்படுத்தியது முழு ராஜ்கிரா 

ஆளிவிதை ............ஒரு ஸ்பூன் .
சும்மா கையளவு சிறிது சேர்த்தால் போதும் 

க்ளூட்டன் இல்லா ஓட்ஸ் .....ஒரு ஸ்பூன் 

அரிசி மாவு ......இரண்டு ஸ்பூன் ..

(நான் க்ளூட்டன் இல்லா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து செய்தென் )
முதலில் ராஜ்கிரா மற்றும் ஆளிவிதைகளை மிக்சியில் நன்கு பவுடராக்கி கொள்ளவும் பிறகு அவற்றுடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு அரைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தயிர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடித்து வைக்கவும் 
அதில் பொடியாக அரைத்த மாவு மற்றும் அரிசி மாவு உப்பு சேர்த்து கலக்கவும் ..
தோசைக்கல்லை சூடாக்கி உடனே தோசையாக வார்த்து சாப்பிடலாம் .
நான் சொன்ன அளவில் 8 தோசைகள் வரும் ..
இந்த தோசையுடன் நான் உளுந்து சேர்க்காத பீர்க்கங்காய் தோல்மற்றும் தேங்காய் காய்ந்த மிளகாய் புளி சேர்த்தரைத்த துவையல் தொட்டு சாப்பிட்டேன் .

இதோட 

இந்த கரைத்த மாவு கலவையில் singoda எனும் water chestnut மாவையும் ஒரு கரண்டி சேர்க்கலாம் மற்றும் buckwheat எனும் kuttu ஆட்டா /பாப்பாரை சேர்த்து அரைக்கலாம் .அதிக மொறுமொறுப்பாக வரும் ..ஆனால் டயட் இருப்பவர்களுக்கு சிங்கோடா தவிர்த்தல் நல்லது ..சிங்கோடாவில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால் எடையை கூட்டிவிடும் ..

இதே கலவையில் கேழ்வரகு மாவு ,தினை மாவு கூட சேர்க்கலாம் .

முக்கிய குறிப்பு ஆளிவிதை ஜெல்லி போலாகும் தன்மையுடையது அதனால் கரைத்தவுடன் உடனே தோசை சுட வேண்டும் .

===================================================
ராஜ்கிரா ஆலூ டிக்கி aka உருளை கட்லட் 
============================================

வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிது இஞ்சி .கொத்த மல்லி தழை மெலிதாக அறிந்து ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் வதக்கி உப்பு சிறிது சேர்த்து அத்துடன் வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பொடித்த மிளகுத்தூள் சேர்த்து பிசிறி வைத்தேன் .
1/2 கோப்பை ராஜ்கிரா விதைகளை மிக்சியில் அரைத்து பவுடராக்கி அதனை வெறும் வாணலியில் லேசாக வறுத்து கிழங்கு / மிக்ஸ்ட் வெஜிடபிள் கலவையில் பிரட்டி கையில் வடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி சுட வேண்டும் .
இந்த முறையில் முட்டை சேர்க்க வேண்டாம் rajgira கலவையை எந்த வடிவிலும் தட்ட உடையாமல் வரும் .எண்ணெய் கொஞ்சமாக தேக்கரண்டி அளவு சேர்த்து இருபக்கமும் திருப்பி பொரித்தால் போதும் .
நன்கு மொறு மொறுவென இருக்கும் ருசியும் அபாரம் .


(இது ஏற்கனவே முகப்புத்தகத்தில் போட்ட பதிவுதான்) 
 எங்கள் பிளாக் ஸ்ரீராம் என்னிடம் சமையல் குறிப்பு கேட்டு மெயில் அனுப்பின மாதிரி ஒரு கனவு வந்தது கொஞ்சம் ஓவர் confidence தான் எனக்கு ..ஆனாலும் எதற்கும் தயாராவே இருப்போம்னு உடனே தயார் செய்து போட்டோவெல்லாம் எடுத்து ரெடியா வச்சேன் ..ஓரிரு நாளில் இன்பாக்சில் ஸ்ரீராம் மெசேஜ் !!!  கேட்டு வாங்கி போடும் பகுதிக்கு கதை எழுதுமாறு ..
..இந்த உள்ளுணர்வு கனவு பற்றி ஒரு பதிவு விரிவா  எழுத இருக்கிறேன் ...


தொடர்ந்து சந்திப்போம் ..

21 comments:

 1. அடடே..... சொல்லவே இல்லை? கனவு வந்த பிறகுதான் உங்களிடம் நான் கதை கேட்டேனா? என்ன ஆச்சர்யம்?

  ராஜ்கிரண் மன்னிக்கவும் ராஜ்கிரா சமையல் குறிப்பு ஓகே. ஆளிவிதை, சாமை அரிசி, போன்ற ஆரோக்கிய சமையல் எல்லாம் என் தோழி ஹேமா செய்வார். நான் எங்கே? நான் அவபத்தியச் சமையல்காரன்!

  வலைப்பதிவைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு வந்த கனவு பற்றிய பதிவில் நான் பின்னூட்டத்தில் இதை பற்றி சொன்னேன் :)

   Delete
  2. அப்போ அதில் மல்டி கதை பற்றி விரிவா சொன்ன சஸ்பென்ஸ் போயிடும்னு அப்படியே பாதில விட்டேன்

   Delete
  3. //பிரபல பதிவர் ஒருவரிடமிருந்து சமையல் குறிப்பு கேட்டு மடல் வர மாதிரி கனவு கண்டேன் :) மடல் வந்தது வேறு குறிப்பு கேட்டு

   அதேபோல அவர் கொடுத்த நாளுக்குள் அதை முடிக்க நேரம் இருந்தது ஆனால் அன்றே முடிக்க உள்ளுணர்வு சொன்னது ,,அதை முடித்து அனுப்பினதும் என் கணினியில் உள்ள தமிழ் fonts எல்லாம் போச்சு//http://engalblog.blogspot.com/2016/11/blog-post_3.html

   Delete
 2. அட செம ரெசிப்பிஸ்.....ராஜ்கிரா வாங்கவில்லை...வாங்கணும்னு நினைச்சு நினைச்சு..இதோ இப்பவே வாங்கிடனும்...

  ஆளி விதை ஆமாம் கொழ கொழ என்று வரும்...நான் முட்டைக்குப் பதிலாக பேக்கிங்க் ஐட்டெம்ஸ் எல்லாத்துலயும் இதச் சேர்ப்பது வழக்கம்...பௌடரை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து.....

  நல்ல ரெசிப்பிஸ் செய்து பார்த்திடனும்...மிக்க நன்றி ஏஞ்சல்...

  உள்ளுணர்வு ஆம் எனக்கும் நேர்ந்ததுண்டு இப்படி...எழுதுங்கள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..க்ளூட்டன் இல்ல பொருட்களை தான் இப்பெல்லாம் சாப்பிடறேன் ..4/5 வருஷமா கஷ்டப்படுத்தும் pollen அல்லர்ஜி போயி போச்சு இந்த 2016வருஷம் வரவேயில்லை..
   கனவு உள்ளுணர்வு பிரச்சினை இப்போ கொஞ்சம் அதிகமாகிடுச்சி ! உங்களுக்கும் வருமா உள்ளுணர்வு ?
   பேசாம தொடர் பதிவா எழுதிடுவோமா விரைவில் ..நல்ல கனவுகள் விட எச்சரிக்கையூட்டும் கனவுகள் நிறைய வருது எனக்கு
   வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

   Delete
 3. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி துரை செல்வராஜூ அய்யா

   Delete
 4. ராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி....சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அனுராதா

   Delete
 5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அஞ்சு..... இந்த வருடத்தில சமையல் குறிப்பாகவே போட்டு அதிராவைத் தேMஸ்ல தள்ளுவேன் என உறுதிமொழி எடுத்திருப்பதாக எனக்கு கனவு வந்து உள்ளுணர்வு சொல்லிச்சே.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பூனை ..இல்லியே எனக்கு வந்த கனவுப்படி நான் உங்களை தள்ளிவிட்டுட்டேனே :)))

   Delete
 6. I already posted about intuition in my blog.... will continue later kundu fish:)

  ReplyDelete
 7. wish you a happy new year ..
  need to learn this ..

  ReplyDelete
 8. சூப்பர் ரெசிபிகள்...

  ReplyDelete
 9. எப்படியோ உங்கள் கனவு பலித்து விட்டதே. அது போதும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஷா ..கனவு பலித்தது இது மட்டுமில்லை உள்ளுணர்வு அடிக்கடி சிலவற்றை காட்டும் எனக்கு அதெல்லாமும் நடப்பது ஆச்சர்யமாவும் பயமாவும் இருக்கும்

   Delete
 10. புத்தாண்டு வாழ்த்தோடு போஸ்ட் என்பதால் (காலம் தாழ்த்தியண்டு, ஆனா வரும்) புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  இங்கு இந்த விதைகளை bioshop ல பார்த்திருக்கேன் அஞ்சு. கொஞ்சம் விலை அதிகம்.
  எனக்கும் கனை விட ,இந்த உள்ளுணர்வு இருக்கு. சொன்னா சரியா இருக்கும். அதன்படி நடந்து இருக்கு.

  ReplyDelete