அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/31/17

உள்ளுணர்வு மற்றும் கனவு ...2உள்ளுணர்வு  மற்றும் கனவு ...முதல் பகுதி தொடர்ச்சி 


Intuitive feeling

---------------------

ஸ்ரீராம் எங்கள்  பிளாக் கேட்டு வாங்கி போடும் கதை பகுதிக்கு கதை கேட்டிருந்தார் நான்  இரண்டு கதைகள் எழுதினேன் ஒன்று மல்ட்டி கதை மற்றொன்று  ectopic pregnancy எனும் கருக்குழாய் கர்ப்பம் பற்றிய ஒருவரது உண்மை சம்பவம் ..சில முக்கிய குறிப்புகள் மருத்துவ குறிப்புகள் சேர்த்து குழந்தை வரம் எனும் தலைப்பில் எழுதினேன்
..அந்த சம்பந்தப்பட்டவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் . ஜெர்மனியில் நெருங்கிய நட்பு அவர் வாயால் சொல்ல மற்றும் நான்  பார்த்ததை அப்படியே எழுதினேன் அவர் அனுமதி கொடுத்தார் ..தான்  பட்ட கஷ்டம் வேதனை எல்லாம் அவர் சொல்ல கேட்டு எழுதினேன் ..ஆனால் எனது உள்ளுணர்வு அதை அனுப்ப வேண்டாம் என கூறியது அவர் எதோ துக்கத்தில் இருக்கும் தோற்றம் மனக்கண்ணில்  வந்தது ..குழந்தையின் இழப்பு வேதனை தருவதுதான் என்று நினைத்தேன் ஆனாலும் அனுப்புமுன் மகளிடம் கணவரிடம் இரு விரல் மற்றும் பத்து விரல்கள் நீட்டி தொடுமாறு கேட்ட போது  அவர்கள் இருவருமே மல்ட்டி கதையை தொட்டனர் ..இதில் வேடிக்கை  8 விரல் எக்டோபிக் இரண்டு மல்ட்டி என வைத்து காட்டியும் அவர்கள் தொட்டது மல்டியையே ..அது டிராப்ட்லேயே இருந்தது மீண்டும் பதிவுகள் ஆரம்பிக்கும்போது அதை போடலாமென்று நினைத்து சிலநாட்கள் கழித்து  தட்ட அப்படியே டிலீட் ஆகி விட்டது ..

சில வேளை  அந்த கதை வெளியிட்டிருந்தால்  யாரையேனும் குழந்தை இழந்தோரை வருத்தமுற்ற செய்திருக்கலாம் ..நல்லவேளை அழிந்தது என்று  நினைத்தேன் ..


எப்போதும் ஹாட் டாபிக் என்றால் நிச்சயம் எனது பதிவும் அது சம்பந்தமாக வரும் ,,ஆனால் இம்முறை ஜல்லிக்கட்டு விவாதத்தில் நான் தலை மூக்கை நுழைக்கவில்லை ..ஆரம்பத்திலேயே உள்ளுணர்வு சொல்லிவிட்டது இதில் தலையிடாதே என்று :)


அதேபோல  சில வருடங்கள் முன்பு ஒரு நபருடன் பேசும்போது எதோ மனதில் தட்டியது //வேண்டாம் பேசாதே   இவரால் உனக்கு பெருத்த அவமானம் ஏற்படப்போகிறது //என்று ..அது அப்படியே பலித்து தொலைத்தது அந்த நபர் நான் அவமானப்பட்டபோது திரும்பியும் பார்க்கவில்லை ...
அங்கே எனது உள்ளுணர்வு வென்றது .நான் தோற்றேன் :( காரணம் உள்ளுணர்வை மதிக்காமல் விட்டதால் ...


இப்போது எனக்கு உள்ளுணர்வு மேல் மிக அதிக நம்பிக்கை வந்துவிட்டது ..இனிமேல் உள்ளுணர்வை மிக கவனமுடன் கையாளப்போகிறேன் ..


clairaudient
---------------
இது  அகக்காதுகளுக்கு கேட்காது ஆனால் வண்டி ஓட்டும்போது நிறுத்து என மனம் ஓலமிட்டு சொன்னால் அதை கேட்டு நிறுத்த வேண்டும்  ..என்  நண்பருக்கு இப்படி நடந்தது ஒருமுறை //ஸ்டாப் //
என யாரோ  சொன்னாற்போலிருந்ததாம் ஒரு 4 வயது குழந்தை திடீரென ரோட்டில்  ஓடியிருக்கு இவரது காருக்கும் முன் காருக்கும் நடுவில் எப்படி ஓடியதுன்னே தெரில சடாரென காரை நிறுத்தி இருக்கார் ..இவரது உள்ளுணர்வு குரலால் குழந்தை தப்பியது .. 

இப்படி தூங்கும்போது எனக்கொரு குரல் கேட்டது அப்படியே பலித்தது :)

ஜெர்மனியில் குழந்தை கருவில் இருக்கும்போது பல மருத்துவர்கள் ஆணா  பெண்ணா என சொல்ல மாட்டார்கள் அது சர்ப்ரைஸாக இருக்கட்டும்னு .அதனால் குழந்தைகள் பயன்படுத்தும் பாத்டப் நியூட்ரல் நிறத்திலேயே வாங்கி வைப்பார்கள் சிலர் பிறந்த உடன் உடனே வாங்குவர்  அப்படிதான் இரண்டு பெயர்கள் தேர்வு செய்து மருத்துவமனையில் கொடுக்கணும் அட்மிட் ஆகும்போது ..
நாங்கள் இரண்டு பெயர் ஒன்று ஆண் எட்வர்ட்  பெண் ஷாரன் என்று தேர்வு செய்து வைத்தோம் ஒரு நாள் கனவில் உனக்கு எட்வார்ட் இல்லை edith தான் என்று யாரோ சொல்வது போல இருந்தது edith என்பது பெண் பெயர் :) பிறந்தது பெண் தானே எனக்கு :) பிறகு பார்த்தால் edith மீனிங்  Old English words éad, meaning 'riches or blessed..இந்த clairaudient  பற்றி மற்றுமொரு சம்பவம் ..
எங்கள் ஆலயத்தில் அனீஷ்  சித்து எனும் பஞ்சாபி ஒருவர் ரெகுலராக வருவார் ..இங்குள்ள பஞ்சாபியர் 1960 மற்றும் 70 களில் இங்கே வந்தவர்கள் 20  வயதில் திருமணமாகி அவருக்கு இப்போ 58  வயதிருக்கும் .கடந்த ஆண்டு மனைவி இறந்தார் ..mohammad rafi பாட்டெல்லாம் இறுதி பயணத்தில் ஒலிக்க செய்து பிரம்மாண்டமாக இறுதிக்கிரியை செய்தார் ..மனைவி மீது பேரன்பு அவருக்கு ..
பிறகு ஒரு வருடம் கழிந்தது 2016 அக்டொபர்  மாதம் ஒரு நாள்/ ஜி ..நான் 10 நாள்  லூதியானா  செல்கிறேன்  பல வருஷங்கள் ஆகிவிட்டது என் சொந்த ஊருக்கு சென்று என்றார் ..
3/4 பெர்மூடாஸ் தலையில் tint கலர்  டை கூலிங் க்ளாஸ் என ஒரு வித்தியாசமா காணப்பட்டார் ..//பாரேன் அனீஸ் யங் பாய் கல்யாண மாப்பிளை  போல ஊருக்கு  பொண்ணு பாக்க போறார் ..என தோன்றியது மனதுக்கு ..:)  

சரியா 10 நாள் கழித்து வந்ததும் தனது ஐ பேடை தூக்கிகிட்டு ஓடி வந்தார் என்னிடம் ..ஜி ..உங்களிடம் தான காட்டணும் முதலில் ..இங்கே பாருங்க எனது மனைவி கமல் அழகாய் இருக்கிறார்  இல்லையா ..அவரது புன்னகைதான்  எனக்கு மிக பிடித்தது என ஒரே கமல் புராணம் :)) ..நான் ஊரில் திருமணம் செய்து கொண்டேன் ..விரைவில்  இங்கிலாந்து வருகிறார் ..என்று சொல்லி முடிக்கவும்.... ..என் நிலையை யோசித்து பாருங்கள் மக்களே :)  சும்மா கல்யாணம் பண்ண போற புது மாப்பிள்ளை  மாதிரி இருக்கார்னு நினைச்சது அப்படியே நடந்து விட்டது :) உண்மையில் அனீஷுக்கு  பெட்டர் ஹாஃப் தான் கமலுக்கு 30 வயது :)..#அனீஷ் மகளுக்கு  34 வயது ..

காதலுக்கு வயது ஒரு பொருட்டில்லை  என்று மனதை தேற்றிக்கொண்டேன் :)எனது உள்ளுணர்வுகள் அவ்வப்போது தொடரும் ...அடுத்தவர இருக்கும்  பதிவு பொறாமையும் சில பெண்களும்  :) ஹா ஹா :)


27 comments:

 1. உள்ளுணர்வை பகிர்ந்து கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும்... உங்களின் நிறையவே உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தனபாலன் ..இதை ஒரே பதிவாக போட்டு பிறகு இரண்டாக பிரித்தேன் .போஸ்ட் பெரிதாகிவிட்டதால் ..
   ஹீ ஹீ ..சிலதை சொல்லவில்லை ..தோணுவதையெல்லாம் சொல்லிட்டா அவ்ளோதான் ..எதோ சிலதை மட்டுமே பகிர்ந்துள்ளேன் .வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி

   Delete
 2. பதிவை இரண்டாகப் பிரித்தது சரி.. ஒரே நாளில் வெளியிடாமல் வெவ்வேறு நாட்களில் வெளியிட்டிருக்கலாம்! அழிந்து போன அந்தச் சிறுகதை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தனை ஓடுகிறது. உள்ளுணர்வு என்று சொல்வது ஆவியின் வேலையாக இருக்குமோ?!!!!! (கோவை ஆவி அல்ல!)

  ReplyDelete
  Replies
  1. அது ஆமா செய்திருக்கலாம் ..நமக்குத்தான் அவசரமாச்சே ..இன்னொன்னு நானா சமையல் சமைச்சாலே ப்ரிட்ஜில் வைக்கும் பழக்கமில்லை :)
   அதான் ஒரேயடியா ரிலீஸ் செஞ்சிட்டேன் .
   ஆவியா !! நான் இல்லை முந்தி நான் பீச்சில் என் பாத சுவடு போட்டேன் ..எழும்பி அச்சு வெளிப்பக்கம் வந்திருந்ததே அதைப்பார்த்து என் கணவர் சொன்னார் ஒருவேளை நீங்க ஆவியான்னு :)

   Delete
 3. அட கடவுளே ,பஞ்சாபி அடுத்த கண்ணாலம் பன்னிட்டாரா....

  உங்க உள்ளுணர்வு போஸ்ட் படிச்சு ஒரு மாதிரி சுற்றி விட்டது போலவே ஒரு உளளுணர்வு

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஆச்சி :) எஸ் பொண்ணு இன்னும் ஊருக்கு வந்து சேரலை :) ஆனாலும் மனுஷன் படு குஷிலா இருக்கார் .
   சுத்தி விட்ட மாதிரி இருக்கா ? :) ஹா ஹா இருங்க தண்ணி அடிச்சி விடறேன்

   Delete
 4. நீங்கள் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்சலின்!
  உள்ளுண‌ர்வு செய்திகள் அமானுஷ்யக்கதைகள் போல இருந்தது. எல்லோருக்குமே சில சில நேரங்களில் இந்த அனுபவங்கள் ஏற்படுவதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா ..அனைவர்க்கும் தோன்றுவதுதான் இம்மாதிரி உணர்வுகள் ..நான் கொஞ்சம் அதிகமாவே யோசிக்கும் டைப் அதனாலோ என்னவோ கலர்கலரா தினுசா கனவும் உள்ளுணர்வும் வருது :)
   வருகைக்கு பின்னூட்டத்திற்கு நன்றிக்கா

   Delete
 5. பஞ்சாபியர் லூதியானா சென்று திரும்பிய விஷயம் சுவாரஸ்யமாக உள்ளது. :)

  மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான பதிவுகள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோபு அண்ணா :) நானே எதிர்பார்கலை ..இனிமே கவனமா தான் யோசிக்கணும் போலிருக்கு

   Delete
 6. ///ஸ்ரீராம்.January 31, 2017 at 4:56 PM
  பதிவை இரண்டாகப் பிரித்தது சரி.. ஒரே நாளில் வெளியிடாமல் வெவ்வேறு நாட்களில் வெளியிட்டிருக்கலாம்!///

  கரீட்டு இதை நான் வன்மையா வழிமொழிகிறேன்ன்... இந்த ஃபிஸ்ஸு ரொம்ப அவசரக்குடுக்கை:)) கர்ர்ர்ர்ர்:) மீயைப் போல ரொம்பப் பொறுமையா இருக்கப் பழகோணும்:)

  ReplyDelete
  Replies
  1. உங்க பொறும்மையை நினைச்சி நினைச்சி நேத்துகூட சிரிச்சேன் நட்ட நடு ராத்திரி KIKKIEEE

   Delete
 7. பாதியில போய் பாதியாப் பிரிச்சுப் போட்டதால எங்கின விட்டேன்ன் சாமீஈஈஈஈ.. போட்டதுக்கே திரும்ப வேறு விதமா பின்னூட்டம் போட்டிடப் போறனே முருகா!!!:))..

  அந்த வண்ணாத்துப் பூச்சிப் படகு ரொம்ப ரொம்ப சூப்பர்ர்.. பார்த்திட்டே இருக்கலாம்போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அதிரா இந்த பட்டாம்பூச்சி படகு ஒரு வகை ஆர்ட் அதுபற்றி இன்னொரு பதிவில் சொல்றேன் ..மகள் தான் எனக்கு டீச்சர் இந்த ஆர்ட்ப்பற்றி சொன்னது அவதான்

   Delete
 8. ஆஹா உள்ளுணர்வுப் பகிர்வு அருமை, உண்மையில் எனக்கு உள்ளுணர்வை விட கனவுகளில் அதிகம் காட்டிவிடும்... என்னை விட எங்கள் அம்மாவுக்கே உள்ளுணர்வு அதிகம்.. நான் வெள்ளாந்தியாக எல்லோரையும் நம்புவேன், ஆனா ஒருவரைப் பார்த்தவுடன் அம்மா சொல்லுவா... எனக்கென்னமோ நல்லவர்போல தோணவில்லை பார்த்து நட என்பா.. அது கரெக்ட்டாகவே இருக்கும்...

  உள்ளுணர்வு ஏற்படும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான், ஆனால் உள்ளுணர்வுக்கு அடிமையாகிட்டால் அதுவும் ஒரு நோய்போலாகிடும், எனவே உள்ளுணர்வோடு கிட்னியையும் பாவிச்சு செயல்படுவது நல்லதெனக் கூறிக்கொண்டு.. விடை பெறுகிறேன் நன்றி.. கூலா ஒரு நெக்ட்டோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. //எனக்கென்னமோ நல்லவர்போல தோணவில்லை பார்த்து நட என்பா.. அது கரெக்ட்டாகவே இருக்கும்// அதே அதே நானும் கண்டுபிடிச்சிடுவேன் அதிரா ..ஒரு திருட்டு முழி பெர்சன் பற்றி சொல்றேன் அடுத்து வரும் பதிவில் :)
   கனவுத்தொல்லை நம்ம எல்லாருக்கும் இருக்கும் போலிருக்கே ..

   Delete
 9. ஆம் ஏஞ்சல் சில உள்ளுணர்வுகளை வெளியில் சொலக் கூடாது தான்...அதுவும் எதிர்மறை என்றால்....சிலது யாருக்கேனும் சங்கடம் விளைவிக்கும் என்றால்....எதிர்மறை என்றால் நான் உடன் பிரார்த்தனை செய்வேன்...தொடருங்கள்.....தொடர்கிறோம்...ஸ்வாவாரஸ்யங்களை

  ReplyDelete
  Replies
  1. அதேதான் துளசி அண்ணா அன்ட் கீதா ..சில விஷயங்கள் சொல்லி யாரும் வருத்தமடையக்கூடாது அதனால் நான் சொல்ல மாட்டேன்.அந்த 84 வயது ரெவெரென்ட் கால் தடுக்கி விழுந்ததுதான் மனசுக்கு கஷ்டமா போச்சு ..பாசிட்டிவ் விஷயங்கள் நடந்திருக்கு ..மக்கள் நல்லா சிரிச்சிட்டே ஸ்கூலில் இருந்து வர மாதிரி தெரியும் மனதுக்கு அதே மாதிரி சந்தோஷமா வந்திருக்கா முதல் மார்க் எடுத்துக்கிட்டு

   Delete
 10. அப்பாடா அழிஞ்சு போச்சுதாம் நல்ல வேளை.கரு அழிதல் சம்மந்தமான அனு் பவங்களை என்னை கொல்லுற மாதிரியே அழுத்தும் .எனக்கு மட்டுமல்ல அனுபவம் கொண்ட எல்லோருக்குமே.சில அனுபவங்கள் மற்றவைக்கு உதவுறதை விட தேவையில்லாத பயத்தை உண்டுபண்ணி அந்த பயத்தாலேயே விபரீதம் நடக்க வைக்கும் .அதுல மிக முக்கியமானதா நான் நினைக்கிறது இந்த வயிற்றில் இருக்கும் கரு சம்மந்தமான பிரச்சனைகள்.உள்ளுணர்வு பதிவு அருமை.எங்களுடைய பிஸி ஐ ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்படாத பலவிதமான வழிகளில அதிகரிச்சால் உள்ளுணர்வு எச்சரிக்கைகள் தோன்றது குறையும் என்று என் டாக்டர் சொல்லி இருக்கார்.உண்மையும் கூட.

  ReplyDelete
  Replies
  1. YESஅம்மாடியோவ் நல்லகாலம் அது டிலீட் ஆச்சு .. எனக்கு உண்மையா விறுவிறுன்னு எழுதி முடிச்சாலும் மனசுக்குள்ள வலி :( அதை சொல்ல தெரில /..ஆனா அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் ..மருத்துவ விஷயங்கள் குறிப்பா குழந்தை விஷயங்கள் மட்டும் மிக கவனமா கையாளனும் சுரே ..யார் மனசும் புண் பட கூடாது ..TRUE SUREJ .,,

   Delete
  2. ..//அந்த பயத்தாலேயே விபரீதம் நடக்க வைக்கும் .அதுல மிக முக்கியமானதா நான் நினைக்கிறது/எங்க பக்கத்துக்கு வீட்ல இருந்தவங்க ஒரு மதர் கேர் புக் குடுத்தாங்க நான் கன்சீவ் ஆனப்போ ..அந்த லேடிக்கு 3 மிஸ்காரேஜ் 4 வது டைம் தான் குழந்தை நார்மலா பிறந்து .அந்தம்மா புத்தகத்தில் நாம பயப்படும் குறிப்புகள் வரும் இடத்தில டார்க் அண்டர்லைன் பண்ணி வச்சிருந்தது ..அதை பார்த்து எனக்கு நடுக்கம் படிச்சி முடிசிட்டேன்னு உடனே குடுத்திட்டேன் .நம்ம கண்ணுதான் எது பளீர்னு தெரியுதோ அதை கெட்டியா புடிச்சி தொலைக்குமே

   Delete
 11. முதலில் உங்கள் ஃபோனில் இருக்கும் வீடியோவை உங்கள் கணினிக்கு மாற்றுங்கள்... அது எப்படி...? உங்க ஃபோன்- அதாவது மொபைல் எந்த மாடல், எந்த கம்பெனி என்றே தெரியாது... வாங்கிய இடத்தில் "ஃபோனில் (mobile) இருக்கும் வீடியோவை உங்கள் கணினிக்கு மாற்ற" வழி சொல்லி கொடுப்பார்கள்... அப்புறம் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி, அது போல் செய்யவும்...

  https://www.youtube.com/watch?v=PECLd821AXY

  நன்றி...

  ReplyDelete
 12. கீழே உள்ள எனது நண்பரின் பதிவும் உதவும்... நன்றி...

  Insert Video (காணொளியை இணைக்க) : http://www.bloggernanban.com/2010/12/how-to-add-videos-in-blogger.html [கவனிக்க : Compose Mode-டில் செய்ய வேண்டும்]

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ..சென்று பார்க்கிறேன்

   Delete
 13. எனக்கும் அந்த வண்ணத்துப்பூச்சி படகு பிடிச்சிருக்கு. நல்லாயிருக்கு. இந்த உள்ளுணர்வு பற்றி நான் ஒருவருடன் பேசும்போது அவர் சொன்னது எதிர்மறை எண்ணங்களை விடுத்து நல்லதா சிந்தித்தால் கூடுதலாக நல்ல உள்ளுணர்வுகள் வருமென. எங்க அது கொஞ்சம் கஷ்டம் ஆச்சே என்றேன். அப்படி எண்ணம் வரும்போது சத்தமா சொல்லி அதை அப்பால விரட்டி நல்லதை நினைக்கலாம் கொஞ்சம் கஷ்டம் விடாம முயற்சிக்கனும் என்பார். அப்போ உள்ளுணர்வுகள் நல்லதை காட்டும் என்றார்.
  கூடுமானவரை கெட்ட்து நினைக்காமல் எல்லோடும் அனபாக இருக்கும் மட்டும் இருங்கன்னு கடைசீல சொல்லிவைத்தார்.
  என் ப்ரெண்ட் சம்பவம் கூட எனக்கு ஊரில உள்ளுணர்வு சொல்லியது அஞ்சு. அப்போ அவங்க அம்மாவிடம் கேட்டேன்.சுகமா இருக்காளா என. ஆனா அவா ஓம் என்று சொன்னா.ஆனா எனக்கு தான் பதில் திருப்தி இல்லை. பின் போன் கூட செய்தேன் அவளுக்கு. ஆன்சர் இல்லைன்னதும் ,மனசு தவியா தவித்தது. ஆனா ஏதோ நடந்திட்டது என மனம் சொல்லிட்டே இருந்தது. உள்ளுணர்வு என்பது முக்கியமானது சிலநேரங்களில் அலட்சியமா இருக்க கூடாது.
  அதிரா சொன்ன மாதிரி அது ஒரு நோயாக,அல்லது அடிமையாக மாறவும் விடக்கூடாது.. பாலன்ஸ் ஆ பாவிக்கனும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ப்ரியா ..ஆனா மனுஷ குணம் பெரிய வெள்ளை தாளில் இருக்கும் குட்டியொயூண்டு கருப்புப்புள்ளி மட்டுமே பார்க்க சொல்லும் .என்னதான் பாஸிட்டிவா நினைத்தாலும் அடி மனதில் அது நடக்குமா என்ற ஒரு பயம் தோணிட்டே இருக்கும் ..எனக்கு வேண்டாம் வேண்டாம்னு பல நேரம் உள்மனசு சொல்லியும் கேக்காம செய்து அடிவாங்கியுமிருக்கேன் அதனால் ரொம்ப கவனமா இருக்கிறேன் இப்போல்லாம் .
   உங்கள் ப்ரண்ட் போலவே எனக்கு மாயா நினைவிருக்கா அவர் இறக்குமுன் ஒரு மாதமுன் அடிக்கடி தோணும் இவருக்கு எதோ பிரச்சினைனு அப்போ அவ்ளோ அதிகம் மெயில் கூட தொடர்பில்லை .நானா நினைச்ச மாதிரியே அவரும் போயிட்டார் :(

   சரி இப்போ நீங்களும் கன்பியூஸ் ஆகாதீங்க :) உள்ளுணர்வில் ஜாலியான மேட்டர் மட்டும் எடுத்துப்போம் எங்க ஆலயத்தில் அந்த கல்யாணம் கட்டிகிட்டாரே அவர் மாதிரி நிகழ்வுகளை நினைச்சி கொள்ளணும்

   Delete