அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/17/17

சில மனிதர்களும் நாலு கால் நட்புக்களும் நானும் ...(2)

சில மனிதர்களும் நாலு கால் நட்புக்களும் நானும் ...(2)
                                                                      


அமீர் 
======
அமீர் எங்கள் மகளின் பிரைமரி பள்ளியில் படித்த ஒரு சிறுவன் நர்சரி வகுப்பு .நான்  பள்ளி விட்டு மகளை அழைத்து வரும்போது அவனது தந்தையுடன் செல்வதை பார்த்திருக்கிறேன் சிறு புன்னகை அவ்வளவே ..ஒரு நாள் அவனது அப்பா அரட்டை கச்சேரியில் நண்பர்களுடன் ஆழ்ந்துவிட ..மகனை மறந்து விட்டார்
..மகன் அப்பா நடந்து வருகிறார் என்று நினைத்து ரோட்டை கடந்து சென்று விட்டான் .paappa papa என்று அழுதுகொண்டு சிக்னல் இல்லாத ஹெவி டிராபிக் இடத்தில ஓடிக்கொண்டிருந்தான் ..நான்  அவனை நிறுத்தி மீண்டும் பள்ளி அலுவலகத்தில் கொண்டு சேர்த்தேன் ..திரும்பி வரும்போது ஒரு உருவம் கத்தி அழுதுகொண்டு செல்கிறது .
அவர் அமீரின் அப்பா !!
அவரிடம் சொன்னேன் உங்க மகன் ஸ்கூலில் இருக்கான் என ..
அடிச்சி பிடிச்சி ஓடினார் ..பிறகு ஒரு மாதம் கழித்து மனைவியுடன் செல்வதை பாத்தேன் ..பயந்து பயந்து ஹலோ சொன்னார் ..அதற்குள் அமீர் மொத்த விஷயத்தையும் அம்மாவிடம் கொட்டி என்னை பற்றி சொன்னான் ..அவர் என்னிடம் வந்து ..இவ்ளோ நடந்திருக்கு இந்த யூஸ்லெஸ் மனிதன் என்கிட்டே ஒண்ணுமே சொல்லலை என்றார் ..நிச்சயம் அன்று மண்டகப்படி நடந்திருக்கும் அமீர் அப்பாவுக்கு :) 
அந்த அமீர் இப்போ செகண்டரி ஸ்கூல் செல்கிறான் இன்னமும் எங்கே பார்த்தாலும் கையசைப்பான் ....


இதை சொல்ல காரணம் :)

 ஜெர்மனியில் நடந்த ஒரு சம்பவம் .திருமணமான புதிதில் கணவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்து சென்றார் ..அங்கே ஒரு சிறுமி அவளது பெற்றோருடன் கண்டோம் என்னை பார்த்து ஹலோ ஆன்டி என்று அழகாக அன்புடன் பேசினாள் ..கொஞ்ச நேரம் கழித்து மார்க்கெட்டில் சுற்றி வரும்போது என் கணவர் சொன்னார் அந்தகுட்டி பெண் பொல்லாதது என் காலை  மிதிச்சு விட்டு சென்றது ..அந்த  பெண்ணை கொஞ்சம் தெரியாதமாதிரி கவனியுங்களேன் என்று கூறினார் ..நான் மெதுவாக  அவளுக்கு தெரியாமல்  பார்க்க அந்த பெண் என் கணவரை பார்த்து பழிப்பு காட்டுகிறது .நான் நேராக பார்க்கும்போது அழகாக புன்னகைக்கிறது .
எனக்கு ஒரே குழப்பம் வீட்டுக்கு வந்தவுடன் சொன்னார் ..அந்த பெண் வீட்டுக்கு இவரும்  இவரது தம்பியும் டின்னர் சாப்பிட போனார்களாம் ..அப்பெண்ணை திருக்குறள் சொல்லு தமிழ் ஆத்திசூடி சொல்லு என்று பாடாய் படுத்தியிருக்காங்க இவங்க ..
அது மனதில் அதை வைத்து பார்க்கும் இடமெல்லாம் காலை மிதிச்சிட்டு போகிறதாம் :)
எதை செய்கிறோமோ அதுவே நமக்கு திருப்பி தரப்படும் என்றேன் இவரிடம் :))


அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம் :)

மல்ட்டியும் மகளும் சில மாதங்கள் முன்பு எங்கள் வீட்டில் செட்டில் ஆகுமுன் எடுத்த படம் கிட்டு 

======
கிட்டு பற்றி ஏற்கனவே முகப்புத்தகத்தில் சொல்லியிருக்கேன் இங்கே வலைப்பக்கத்தில் சொல்லியிருக்கேன்னு நினைவிருக்கு .
கிட்டு ஒரு ஆண் பூனை..எங்க பின் தோட்டத்திற்கு அவ்வப்போது வருவான் வாரம் இருமுறை விசிட் செய்து என்னிடம் கொஞ்சம் உணவுகேட்டு வாங்கி சாப்பிட்டு போவான் ..ஆரம்பத்தில் நான் நினைத்தேன் இவன் ஒரு ஹோம்லெஸ் பூனை என ..ஆனால் அவன் எங்கிருந்தோ வந்து என்னை சந்தித்து விட்டு சென்றிருக்கிறான் .கடந்த டிசம்பர் மாதம் வந்தான் அப்போ எடுத்த படம்


அதன் பின் அவனை எங்கும் காணவில்லை ..அடிக்கடி சந்திக்கும் ஒரு நபர் திடீர்னு காணாமப்போனா மனசுக்கு வருத்தமா இருக்கும் .எனக்கும் அப்படிதான் இருந்தது ..கணவரிடம் /பாவம் கிட்டுக்கு என்னாச்சோ என்று புலம்புவேன் // 

ஒரு நாள் அவர் வெளி விட்டு வரும்போது பக்கத்து தெருவில் வேகமாக கிட்டு செல்வதை பார்த்தேன் என்றார் ..ஆனால் நான் நம்பவில்லை ..என்னை சமாதானப்படுத்த பொய் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டேன் ..போன வாரம் மாலை நேரம் நாங்கள் காரில் பக்கத்து தெரு வழியே வந்தோம் அப்போ சாலையோரம் கிட்டு நடந்து செல்வதை பார்த்தேன் .ரோட்டில் ஆளில்லாததால் அங்கேயே இறங்கி 

கிட்டூ என்று அழைத்ததும் //எங்கேயோ கேட்ட குரல் என்று கிட்டு திரும்பி பார்த்தது //அதற்கு ஆச்சரியம்  ஓடி வந்து காலை சுற்றி வந்தது ..அதற்குள் கணவர் அழைக்க மீண்டும் காரிலேறி சென்று விட்டோம் ..எப்படியோ அவன் நன்றாக இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது .அடுத்த நாள் நான் நடந்து அதே தெரு வழியாக சென்றேன் ..எனக்குள் ஒரு உள்ளுணர்வு யாரோ என்னை பார்ப்பது போல மெதுவாக திரும்பினால் ..கண்ணாடி ஜன்னல் வழியே ஒரு புசு புசு உருவம் கண்ணாடி மீது இரண்டு கால்களையும் ஊன்றி  என்னை பார்த்துக்கொண்டிருக்கு ..அது கிட்டு ..
வீட்டில் உள்ளே வைக்கிறார்கள் போல இப்போதெல்லாம் ..  :)


ஜெஸியும் மல்ட்டியும் ..

=======================ஒன்றாக படுத்து தூங்குவதால் ஏமாறவேண்டாம் இன்னும் ஜெசிக்கு மல்டி மேலே ஒரு பொறாமை இருக்கு :) வேணும்னே அது தூங்கும்போது மேலேறி நடக்கும் .துரத்தி துரத்தி மேலே போய் தொபுக்கடீர்னு விழும் :)

லீ 
==
இவன் நைஜீரிய சிறுவன் ..cerebral palsy யால்  பாதிக்கப்பட்ட குழந்தை 
இவனது பெற்றோர் கடந்த ஒரு வருடமாக எங்கள் ஆலயத்துக்கு வருகிறார்கள் ..இச்சிறுவனுக்கு இரண்டு சகோதரிகள் இருவருமே நல்ல உடல் நலனுடன் இருக்கிறார்கள் ஆனால் இவன் மிகவும் 
பாவம் பேச இயலாது ..ஒழுங்காக நடக்கவும் முடியாது ..கைவிரல்கள் எல்லாம் அசையாமல் ஒருங்கிணைக்க முடியாமல் இருக்கும் .
வலது பக்கம் தனது அக்காவுடன் இருப்பது லீ 


போன மாதம் அவனுக்கு பிறந்தநாள் .எங்கள் ஆலயத்தில் யாருக்கு பிறந்த நாளோ அவர்களுக்கு ஸ்பெஷலா ஆர்கனிஸ்ட் மியூசிக் இசைத்து ஹாப்பி பெர்த்டே பாடுவோம் ..அந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடுவோருக்கும் அதே தான் ..

இவனது சகோதரி என்னிடம் இன்று தம்பிக்கு  பிறந்த நாள் என்று சொன்னாள் ..நான் அவனை அனைவர் முன்பாக  கை பிடித்து அழைத்து சென்றேன் ..பாடலை கேட்டதும் அவனுக்கு மிகுந்த சந்தோஷம் ..இப்போதெல்லாம் என்னை பற்றி சைகையால் அவன் அம்மாவிடம் கேட்கிறானாம் ..little deed of affection அச்சிறுவன் மனதில் நான்  நீங்கா  இடம் பிடித்து விட்டேன் ..ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்தில்  என்னருகே தான் அமர்கிறான். இப்போதெல்லாம் ..
பேச முடியாத அச்சிறுவனின் அன்பில் நெகிழ்கிறேன் ...அடுத்த பதிவு உள்ளுணர்வும் கனவுகளும் ..மீண்டும் சந்திப்போம் ..

24 comments:

 1. மிகவும் அழகான பதிவு.

  நாலு கால்களோ இரண்டு கால்களோ உங்கள் அன்பைப் பெற்றவர்கள் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் .... நம் அதிரா உள்பட :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அஞ்சூஊ இங்கு ஆராவது என் பெயரை உச்சரிச்சிருக்கினமோ??? :)

   Delete
  2. வாங்க கோபு அண்ணா ..வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி ..வாழும் காலத்தில் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை ..

   Delete
  3. ஹாஹா :) ஆமாம் அதிரா என்ற ரெண்டு கால் பூனை பற்றி கோபு அண்ணா சொன்னார்

   Delete
 2. Replies
  1. வாங்க சகோ டிடி ..ம்ம் ஆமாம் சில விஷயங்கள் வேதனையூட்டும் நான் பட்டும்படாம சொல்லி செல்வேன் ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

   Delete
 3. ஆவ்வ்வ் அஞ்சு அருமையான பகிர்வு. அமீரின் கதை படிக்க பதறுது.. நல்லவேளை மல்ட்டியைப் போல வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்திடாமல் ஸ்கூலில் ஒப்படைச்சிருக்கிறீங்க.. பொறுப்பில்லாமல் இருப்போருக்கு ஒரு பொறுப்பை உணர வைக்க கடவுள் நடத்தும் நாடகம் இது...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க அதிராவ் ..பூனையை மறைச்சு ஒழிக்கலாம் இது பிள்ளை அதான் பத்திரமா கொண்டு சேர்த்துட்டேன் ..
   உண்மையில் யோசிப்பேன் நம்ம நாட்டில் ரோட்டில் தவறும் பிள்ளைகள் எப்படி இருக்கும் பாவமில்லையா :(
   டவுட்டே இல்லை அமீரின் அம்மா அன்னிக்கு அடிச்சிருப்பார் அப்பாவை :) லெபனீஸ் பீப்பிள் அவங்க

   Delete
 4. ஆஹா மல்ட்டி ஷரனோடு தோளில் தூங்குவதுபார்க்க உண்மையில் ஜெலஸ் ஆக இருக்கு:) எங்கள் டெய்சிக்கு தூக்குவது பிடிக்காது.. அவ கற்புக்கரசி:) யாரையும் தொட விடமாட்டா ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. அதேதான் இங்கே ஜெஸியும் ..தூக்குவது பிடிக்காது ஆனா அவளே மேலேறி படுப்பா தொட கூடாது :)
   மல்டி உண்மையா அன்புக்கு எங்கும் குழந்தை ..அப்படியே கட்டி அணைக்கும் மனித பிள்ளைங்க மாதிரியே

   Delete
 5. கிட்டுவை நான் மறந்தே போனேன்.. எப்பூடி கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?.. அவருக்கு நல்ல காலம் பிறந்திருக்குது போல.. குருமாற்றமாக இருக்கும்:)..

  ReplyDelete
  Replies
  1. நமக்கு மனுஷ முகம் மறந்தாலும் மறக்கும் நாலு கால்ஸ் முகம் மனசில் அச்சடிச்சாப்போல பதிஞ்சிருக்கும் :)
   அவநும் மறக்கலையே

   Delete
 6. ////அப்பெண்ணை திருக்குறள் சொல்லு தமிழ் ஆத்திசூடி சொல்லு என்று பாடாய் படுத்தியிருக்காங்க இவங்க ..
  அது மனதில் அதை வைத்து பார்க்கும் இடமெல்லாம் காலை மிதிச்சிட்டு போகிறதாம் :)////
  ஹா ஹா ஹா சூப்பர் குட்டிப்பெண்:), இப்பூடித்தான் இருக்கோணும்:) இனிமேல் யாரிடமாவது ஆத்திசூடி கேட்பீங்க?:)) ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ரொம்ப ரசிச்சிருக்கீங்க ..உங்களையும் யாராவது இப்படி திருக்குறள் சொல்ல வச்சாங்களோ :)
   என் தங்கச்சி ரொம்ப ஸ்ட்ராங் இந்த விஷயத்தில் யாராவது இப்படி பாடம் ரைம்ஸ் சொல்ல சொன்னா ..ஸாரி எனக்கு வாய் வலிக்குது என்று போயிடுவா :)

   Delete
  2. ஹா...ஹா.... அதிராஆஆ..

   Delete
 7. லீ.... நானும் சில ஸ்கூல்களில் இப்படிப் பார்க்கிறேன் குழந்தைகளை.. அவர்கள் நல்ல சந்தோசமாக இருக்கிறார்கள், இங்கத்தைய கவன்மெண்ட்டும் நன்கு கவனிக்கிறது இப்படியான குழ்ந்தைகளை, ஆனா பார்க்கும் நமக்குத்தான் நித்திரை வருவதில்லை:(.

  ReplyDelete
  Replies
  1. உண்மை அதிரா .எனக்கு மனசெல்லாம் வலிக்கும் ..அவன் எப்படி தனக்கான விஷயங்களை கேட்பான் ..பின்னாளில் அவனை யார் கவனிப்பா இப்படிலாம் யோசிக்கிறேன்

   Delete
 8. காலை மிதிக்கும் சிறுமி புன்னகைக்க வைக்கிறாள்!

  மல்ட்டி அழகாகி விட்டது போல.

  (சிறை) ஜன்னல் வழியே பார்க்கும் கிட்டு! ரசிக்க வைக்கிறது.

  லீ நெகிழ வைக்கிறான்.

  உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஸ்ரீராம் ..அந்த சிறுமிக்கு போன மாதம் திருமணம் நடந்தது ஜெர்மனியில் :)
   மல்ட்டி ரொம்ப க்ளீனாக அழகா ஆகிடுச்சு முடியெல்லாம் பாட்ச் PATCH ஆ கொட்டும் முந்தி இப்போ எல்லாம் சரிபண்ணிட்டேன்

   கிட்டு என்றில்லை வாயில்லா ஜீவன்கள் லேசில் மறக்காதாம் தனக்கு அன்பு பாராட்டினவங்களை ..
   லீ ..உண்மையில் மிகுந்த அன்புள்ள ஒரு சிறுவன் ..

   Delete
 9. angelin ...பேரைப் போல் நீங்க ஒரு தேவதை தான்...

  யாரல்லாம் மற்ற உயிருக்காக இரக்கம் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் இந்த பூமியின் தேவதைகள்...

  அருமையான பகிர்வுகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா அனு ..இங்கே நிறைய விஷயங்கள் மனதை பாதித்துவிடும் ..நம்மூரில் எனக்கு இப்படியெல்லாம் செய்ய சிறு வயதில் வாய்ப்பு கிடைக்கலை ..இப்போ நிறைய சந்தர்ப்பங்கள் ..பயன்படுத்திக்கொள்கிறேன்

   Delete
 10. அமீர் பாவம்! எப்படியோ உங்கள் கண்ணில் பட மீண்டும் பெற்றோருடன் இணைந்தான்...மண்டகப்படி ஹஹஹஹ் நிச்சயமாகக் கிடைத்திருக்கும்!!

  ஷரனின் தோளில் மல்டி ஸோ க்யூட்!! கிட்டு மனதை நெகிழ்த்திவிட்டான். கிட்டு பற்றி தெரியுமே நீங்கள் முன்பே சொல்லியிருக்கீங்க...

  பின்ன அந்தக் குட்டிப் பொண்ண இப்படி எல்லாம் சொல்லச் சொன்னா அதுவும் ரைம்ஸ் இல்ல நமக்கே தெரியாத திருக்குறள், ஆத்திச்சூடிய சொல்லச் சொன்னா ஹிஹிஹி இப்படித்தான் சபாஷ் குட்டிப் பொண்ணே!!! (நமக்கு யார் முன்னாடியாவது சொல்லச் சொன்னா கடுப்ஸ்தான்!!ஹஹஹ)

  செரிப்ரல் பால்சி லீ குட்டிப்பையன் பாவம்...பிரார்த்தனைகள் அவனுக்கு! உங்கள் மனதைப் போற்றுகிறோம் ஏஞ்சல்!!! வாழ்க பல்லாண்டு!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா ...அந்த பெண்மணிக்கு கோபம் கணவர் மீது நிச்சயம் ஆதி வாங்கியிருப்பார் வீட்டுக்கு போனதும் :)

   எனக்கும் சின்ன வயசில் யாராவது டான்ஸ் ஆடு பாட்டுப்பாடு என்றால் கோபம் தான வரும் :)நாமெல்லாம் அமைதியா புழுங்கியிருப்போம் அந்த குட்டிப்பொண்ணு பொங்கி மிதிச்சிட்டா ..

   ஹ்ம்ம் பாவம் அந்த பையன் பேசவும் முடியுமா சைகையால் ஏதேதோ சொல்றான் ஆனா சந்தோஷமா இருக்கான் ..
   அவன் அக்கா மிகுந்த பொறுப்புடன் கவனிக்கிறா அவனை..
   மல்ட்டி இப்போ நல்லா வந்திட்டா ரொம்ப கேரெடுத்தேன் .உணவு கூடா ஸ்பெஷல் ஹோம் மேட் தந்துதான் சரியாச்சி உடம்பு ....
   வருகைக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி

   Delete
 11. விசிட்டர்ஸ் வந்தாலே நான் ஒளிஞ்சிடுவன்.அப்பா விடமாட்டார். கூப்பிட்டுவிடுவார். இப்படி எங்கெல்லாம் யோசனை வரேல்லை. சூப்பர் குட்டிப்பெண்.
  அருமையான பதிவு அஞ்சு. தினமும் எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு. ஜெஸின் குழப்படி சிரிப்பா இருக்கு. சேட்டைகளை நேரில பார்க்கோனும் போல இருக்கு. பொதுவா பூஸ் செய்யும் சுட்டித்தனம் ரசிக்ககூடியதா இருக்கும்.பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதுவும் போட்டியா ஒரு ஆள் வந்தால் கேட்கவே வேண்டாம். எனக்கும் ஊரில இவங்களோட அனுபவிச்சிருக்கேன்.
  லீ மாதிரியானவங்களுக்கு கடவுள்தான் துணையிருக்கனும். நானும் நினைப்பேன் எப்படி இவர்கள் வாழ்க்கை இருக்குமென.
  வாழ்த்துக்கள் அஞ்சு. என்றும் கடவுள் உங்களையும்,குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் நல்ல மனதுக்கு.

  ReplyDelete