அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/31/17

உள்ளுணர்வு மற்றும் கனவு ...2உள்ளுணர்வு  மற்றும் கனவு ...முதல் பகுதி தொடர்ச்சி 


Intuitive feeling

---------------------

ஸ்ரீராம் எங்கள்  பிளாக் கேட்டு வாங்கி போடும் கதை பகுதிக்கு கதை கேட்டிருந்தார் நான்  இரண்டு கதைகள் எழுதினேன் ஒன்று மல்ட்டி கதை மற்றொன்று  ectopic pregnancy எனும் கருக்குழாய் கர்ப்பம் பற்றிய ஒருவரது உண்மை சம்பவம் ..சில முக்கிய குறிப்புகள் மருத்துவ குறிப்புகள் சேர்த்து குழந்தை வரம் எனும் தலைப்பில் எழுதினேன்

உள்ளுணர்வு மற்றும் கனவு ...1


ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவங்க கூடவே வாழ்ந்து கொண்டிருக்கும் .சிலர் அது அவர்களை வழிநடத்துவதை உடன்  இருப்பதே அறியாமல் வாழ்நாளை நகர்த்துவார்கள் .உள்ளுணர்வை புரிந்து கொண்டவர்களுக்கு அது ஒருவிதமான பகுப்பாய்வு .
சாலையில் நடந்து செல்லும்போது எந்த திசையில் சாலை கிளை சாலையாக பிரிகிறது என்று நமக்கு தெரியாது ஆனால் நமது உள்ளுணர்வு நம்மை சரியான வழியை நோக்கி நடத்தி செல்லும் .


உண்ணும்உ ணவுகளை கட்டுப்படுத்தி உடலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தெரிந்த நாம் நமது உள்ளுணர்வுகளை மதிக்கிறோமா இல்லை பொருட்படுத்துகிறோமா  என்பது பலருக்கு புரியாத விஷயம் ..

1/30/17

ஒரு ஸ்பெஷல் பதிவு ..நட்புக்காக

அதிராவுக்கு அறிமுகம் தேவையில்லை :)
இந்த ஸ்வீட் 61 மியாவ் பதிவுலகில் அடியெடுத்து நான்கு கால்களால் நடந்தும் குதித்தும் 9 வருடங்கள் ஆகிறதாம் ..கடந்த 9 ஆண்டுகளாக எங்களை கீறி பிராண்டி எடுத்ததற்கு மற்றும் 200 வது பதிவிற்கும் இனிய வாழ்த்துக்கள் மியாவ் :)

1/24/17

Loud Speaker ...41..

இன்றைய ஒலிபெருக்கியில் :)
===============================

பேலியோ சில குறிப்புகள்,மன அழுத்தம் ,கோபத்தை கட்டுப்படுத்தும் அறை ..rage room ,நான் தோசை செய்முறை சொல்லித்தந்தபோது :) 
ராஜ்கிரா முறுக்கு , ,வீகன் வல்லாரை ஸ்மூத்தி ..மற்றும் கம்பரின் உள்ளுணர்வு 

1/17/17

சில மனிதர்களும் நாலு கால் நட்புக்களும் நானும் ...(2)

சில மனிதர்களும் நாலு கால் நட்புக்களும் நானும் ...(2)
                                                                      


அமீர் 
======
அமீர் எங்கள் மகளின் பிரைமரி பள்ளியில் படித்த ஒரு சிறுவன் நர்சரி வகுப்பு .நான்  பள்ளி விட்டு மகளை அழைத்து வரும்போது அவனது தந்தையுடன் செல்வதை பார்த்திருக்கிறேன் சிறு புன்னகை அவ்வளவே ..ஒரு நாள் அவனது அப்பா அரட்டை கச்சேரியில் நண்பர்களுடன் ஆழ்ந்துவிட ..மகனை மறந்து விட்டார்

1/12/17

சில மனிதர்களும் நாலு கால் நட்புகளும் நானும் ,,மார்லீ ,லின்


 அன்றாடம் பலவகையான மனிதர்களை சந்திக்கிறேன் ..மனிதர்கள் மட்டுமில்லை நாலு கால் ஜீவராசிகளையும்தான் தினமும் சந்திக்கிறேன் அப்படி சந்தித்து மனதில் நீங்கா இடம் பிடித்த சிலர் பற்றிய பதிவு இது ..
வாலண்டியரிங் செல்வதால் பல்வேறு மன நிலையிலுள்ள மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குண்டு .. .மேலும் ஆலயத்திலும் பல்வேறு மனிதர்களை சந்திப்பதால் அவர்களும் இப்பதிவுகளில் இடம் பெறுவர் ..

லின் 
---------

எங்கள் ஆலயத்துக்கு 3 வருஷமா வருகிறார் லின் ..பிரிட்டிஷ் பெண்மணி 50 வயதிருக்கும் ..அவருக்கு அவரது தந்தை 12 வயது முதல் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி அதற்கு அடிமையாகி அதனால் பல அவதி பட்டு பிறகு இப்போ ட்ரீட்மெண்ட் எடுத்து சுகமாகி வந்துட்டார் கடந்த 3 ஆண்டுகள் குடியை தொடவில்லை ..குடிப்பழக்கம் மற்றும் அதில் இருந்து விடுபட எடுத்த சிகிச்சை மருந்துகள் அவரை பாடாய் படுத்தி விட்டது .. வித்ட்ராயல் சிம்ப்டம்ஸால் முன்பு அடிக்கடி வலிப்பு வரும் ..ஆரம்ப காலத்தில் அவருக்கு குட் மார்னிங் சொன்னா முறைப்பார் ,,மருந்துகளின் வீரியம் தான் காரணம் ..எதையும் கண்டால் கோபப்பட்டு அடிப்பாராம் ..இப் போதெல்லாம் நல்ல மாற்றம் அளவுக்கதிகமா சந்தோஷமா இருக்கார் ..அரசாங்கம் அவருக்கு தனி வீடு கொடுத்திருக்கு அவ்வப்போது SEIZURES வரும் முன்பு இப்போ அப்படி இல்லை மிக சந்தோஷமாக இருக்கார் ..இது அவர் ஆலயத்தில் அனைவருக்கும் கொடுத்த கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் ....அவர் வீட்டருகே ஒரூ பூனையை யாரோ விட்டு சென்று விட அதை எடுத்து வளர்க்கிறார் .அந்த பூனைக்கு ஒரு கண் தான் தெரியுமாம் ,,ஆனால் இவருடன் மிக அன்பாக இருக்காம் ..வாழ்த்துமடலில் பூனை எழுதுவதை போல அவர் எழுதியிருக்கார் .


வலிப்பு வந்தப்போ ஒருமுறை அவர் அருகில் இருந்தேன் .வாழ்க்கையில் வலிப்பு வந்த ஒருவர்  கிட்ட இருந்து அவர் பட்ட கஷ்டத்தை முதல் முறையா பார்த்தேன் மனசே நொறுங்கிப்போச்சு அவர் உடையெல்லாம் விலகி அந்த நிலையிலும் கைகளால் டி ஷர்டை இழுத்து விட்டார் பாவமா போச்சு நான் போட்டிருந்த சம்மர் ஜாக்கெட்டை போட்டு விட்டேன் அவர்  மீது ,எனக்கு  பல நாள் தூக்கம் போச்சு அவரை அப்படி பார்த்ததில் ,,இப்படியெல்லாம் கூட மனிதர்களுக்கு துன்பம் வருமா என்று வருந்தினேன் ..


ஒரு முறை பிரசங்க நேரம் வலிப்பு வந்து பிரசங்கம் தடை ஏற்பட்டது ..ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது  எழும்பி ஆம்புலன்ஸ் இல் போகுமுன் பாதிரியாரிடம் தன்னால் ஏற்பட்ட தடங்கலுக்கு அந்நிலையிலும் நடந்து சென்று மன்னிப்பு கேட்டார் அவர்  ..தன்னிலையில் இல்லை ஆனாலும் தன்னால் ஒரு தடை ஏற்பட்டதே என்ற வருத்தம் அவருக்கு ..அதை பார்த்ததில் அழுகை வந்து விட்டது ..இப்போது தொடர்ந்து ஆலயம் வருகிறார் ..

தன்னாலான உதவிகளை அனைவருக்கும்செய்கிறார் ..

மார்லீ 
=======

மார்லீ  பற்றி கேட்டு வாங்கி போடும் கதை முன்னுரையில்  ஏற்கனவே சொல்லியிருந்தேன் 
மார்லீ  staffordshire bull terrier வகை நாலு கால் ஜீவன் ..
தற்போதைய உரிமையாளர் அதை அதன் முன்னாள் உரிமையாளர்களிடமிருந்து காப்பாற்றி வளர்க்கிறார் .முன்னாள் உரிமையாளர்கள் மார்லீயை மிகவும் துன்புறுத்தி இருந்தார்களாம் .அதனால் எதற்கெடுத்தாலும் பயப்படுமாம் பாவம் ..
மார்லீயையும் இப்போதைய wild life rescue டீமை சேர்ந்த Mr .ஜார்ஜையும் தினமும் canal வழியே நடக்கும்போது சந்திப்பேன் .. தூரத்தில் நான் நடந்து வருவது தெரிந்தாலும் மார்லீ மிஸ்டர் ஜார்ஜிடம் வாலையும் தலையையும் ஆட்டி அலெர்ட் செய்யும் என்று அவர் சொல்வார் ..நம்மையும் நினைவுகூருகிறதே ஒரு ஜீவன் என்று ஆச்சர்யமாகிப்போனது எனக்கு :)

இந்த canal வழியாதான் வாக்கிங் போவேன் 

தூரத்தில் தெரிவது மார்லீயும் அதன் ஓனரும் ..கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சில நாட்கள் அவர்களை பார்க்க முடியவில்லை ஒரு வாரம் விடுமுறைக்கு பின்  மீண்டும் வாக்கிங் செல்லும்போது தூரத்தில் ஒரு சிறு கருப்பு உருவம் என்னை பார்த்து ஓடி வந்தது :)
மார்லீதான் ..கன்னத்தில் ஒரு இச் கட்டிப்பிடித்து அன்பு மழை பொழிந்தது :)  ஜார்ஜுக்கே ஆச்சர்யம் இந்த மார்லீ ரொம்ப பிடிச்சவங்களோடுதான் இப்படி பழகுமாம் ..கொஞ்சம் நேரம் ஊர் கதை பேசியபின் ஜார்ஜ் ..ஓகே ஏஞ்சலின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்னு சொல்லிவிட்டு ரெண்டு எட்டு நடந்தவுடன் மார்லீ மீண்டும் என்னை நோக்கி வந்து இரு கைகளால் (முன்னங்கால்கள் )என் கைகளை பிடித்து எதோ சொல்லிவிட்டு மீண்டும் ஜார்ஜை நோக்கி ஓடியது ..
எனக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லியிருக்கும்னு நினைக்கிறேன் :)


அடுத்த பதிவில் கிட்டுவும் லியனார்டோவும் பற்றி எழுதுகின்றேன் .


1/9/17

முகப்புத்தக ஸ்டேட்டஸ் ..CCTV :)

                                                   
 நம்ம சென்னையில் பேருந்துகளில் பயணம் என்பது மிக கடினம் ..எப்பவும் பிதுங்கி வழியும் கூட்டமா இருக்கும் ..அதற்காகவே ட்ரெயினில் போவேன் ..எனக்கு ட்ரெயின்ல போக பயமில்லை

1/3/17

ராஜ்கிரா தோசை ,ராஜ்கிரா ஆலூ டிக்கி

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .
புது வருஷத்தில் சமையல் குறிப்போடு ஆரம்பிக்கிறேன் :)


க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்களுக்கு இது உகந்தது ..

சென்னையில் கிடைக்குமிடம் 
இந்த சுட்டியில் இருக்கிறது 

http://dhanyam.in/category?path=23
http://dhanyam.in/contact

Gluten Free Rajgira Dosa , Rajgira Aloo Tikki ,Rajgira Mixed Vegetables Tikki 
Instant Gluten Free Dosai ,உடனடி தங்க தோசை 
======================================
ராஜ்கிரா ,ஆளி விதை ,க்ளூட்டன் இல்லா மாவு மற்றும் க்ளூட்டன் இல்லா ஓட்ஸ் சேர்த்து செய்த தோசை ..
ராஜ்கிரா ..Amaranth ,ஆளி விதை ...Golden Flax Seed 

இதில் ராஜ்கிரா என்பது வேறொன்றுமில்லை தண்டுக்கீரை முளைக்கீரை விதைகள் தான் ;முற்ற விட்டு அதை சேமித்து மாவாக அரைத்து பயன்படுத்துகிறார்கள் ..

வட இந்தியர்கள் நவராத்திரி விரத நாட்களில் இந்த ராஜ்கிரா சேர்த்த உணவுகளை அதிகம் சேர்க்கிறார்கள் ..இந்த ராஜ்கிராவை ..ராம்தானா தங்கம் என்றே இங்கு அழைக்கிறார்கள் ..

க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்கள் கோதுமை மற்றும் சில உணவுகளை சேர்க்க முடியாதவங்க .இந்த தங்க தோசையை உடனே செய்து சாப்பிடலாம் ..

தேவையான பொருட்கள் 
======================

ராஜ்கிரா /amaranth grains .....1/4 கோப்பை 
இந்த ராஜ்கிரா மாவாகவும் கிடைக்கும் .நான் பயன்படுத்தியது முழு ராஜ்கிரா 

ஆளிவிதை ............ஒரு ஸ்பூன் .
சும்மா கையளவு சிறிது சேர்த்தால் போதும் 

க்ளூட்டன் இல்லா ஓட்ஸ் .....ஒரு ஸ்பூன் 

அரிசி மாவு ......இரண்டு ஸ்பூன் ..

(நான் க்ளூட்டன் இல்லா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து செய்தென் )
முதலில் ராஜ்கிரா மற்றும் ஆளிவிதைகளை மிக்சியில் நன்கு பவுடராக்கி கொள்ளவும் பிறகு அவற்றுடன் ஓட்ஸையும் சேர்த்து நன்கு அரைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தயிர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடித்து வைக்கவும் 
அதில் பொடியாக அரைத்த மாவு மற்றும் அரிசி மாவு உப்பு சேர்த்து கலக்கவும் ..
தோசைக்கல்லை சூடாக்கி உடனே தோசையாக வார்த்து சாப்பிடலாம் .
நான் சொன்ன அளவில் 8 தோசைகள் வரும் ..
இந்த தோசையுடன் நான் உளுந்து சேர்க்காத பீர்க்கங்காய் தோல்மற்றும் தேங்காய் காய்ந்த மிளகாய் புளி சேர்த்தரைத்த துவையல் தொட்டு சாப்பிட்டேன் .

இதோட 

இந்த கரைத்த மாவு கலவையில் singoda எனும் water chestnut மாவையும் ஒரு கரண்டி சேர்க்கலாம் மற்றும் buckwheat எனும் kuttu ஆட்டா /பாப்பாரை சேர்த்து அரைக்கலாம் .அதிக மொறுமொறுப்பாக வரும் ..ஆனால் டயட் இருப்பவர்களுக்கு சிங்கோடா தவிர்த்தல் நல்லது ..சிங்கோடாவில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால் எடையை கூட்டிவிடும் ..

இதே கலவையில் கேழ்வரகு மாவு ,தினை மாவு கூட சேர்க்கலாம் .

முக்கிய குறிப்பு ஆளிவிதை ஜெல்லி போலாகும் தன்மையுடையது அதனால் கரைத்தவுடன் உடனே தோசை சுட வேண்டும் .

===================================================
ராஜ்கிரா ஆலூ டிக்கி aka உருளை கட்லட் 
============================================

வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிது இஞ்சி .கொத்த மல்லி தழை மெலிதாக அறிந்து ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் வதக்கி உப்பு சிறிது சேர்த்து அத்துடன் வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பொடித்த மிளகுத்தூள் சேர்த்து பிசிறி வைத்தேன் .
1/2 கோப்பை ராஜ்கிரா விதைகளை மிக்சியில் அரைத்து பவுடராக்கி அதனை வெறும் வாணலியில் லேசாக வறுத்து கிழங்கு / மிக்ஸ்ட் வெஜிடபிள் கலவையில் பிரட்டி கையில் வடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி சுட வேண்டும் .
இந்த முறையில் முட்டை சேர்க்க வேண்டாம் rajgira கலவையை எந்த வடிவிலும் தட்ட உடையாமல் வரும் .எண்ணெய் கொஞ்சமாக தேக்கரண்டி அளவு சேர்த்து இருபக்கமும் திருப்பி பொரித்தால் போதும் .
நன்கு மொறு மொறுவென இருக்கும் ருசியும் அபாரம் .


(இது ஏற்கனவே முகப்புத்தகத்தில் போட்ட பதிவுதான்) 
 எங்கள் பிளாக் ஸ்ரீராம் என்னிடம் சமையல் குறிப்பு கேட்டு மெயில் அனுப்பின மாதிரி ஒரு கனவு வந்தது கொஞ்சம் ஓவர் confidence தான் எனக்கு ..ஆனாலும் எதற்கும் தயாராவே இருப்போம்னு உடனே தயார் செய்து போட்டோவெல்லாம் எடுத்து ரெடியா வச்சேன் ..ஓரிரு நாளில் இன்பாக்சில் ஸ்ரீராம் மெசேஜ் !!!  கேட்டு வாங்கி போடும் பகுதிக்கு கதை எழுதுமாறு ..
..இந்த உள்ளுணர்வு கனவு பற்றி ஒரு பதிவு விரிவா  எழுத இருக்கிறேன் ...


தொடர்ந்து சந்திப்போம் ..