அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/5/16

நான் இரசிக்கும் இயற்கை

வணக்கம் நட்புக்களே :)

மகளுக்கு பரீட்சை அப்புறம் கால நேரம் பார்க்காமல் இயற்கையை ரசிப்பது என்று நேரமில்லாமல் போய் விட்டது ..

முகநூலில் நிறைய இயற்கை காட்சிகளை ,காணொளிகளை பகிர்ந்தேன் 
சிலவற்றை இங்கும் பகிர்கிறேன் ..

நானும்  கணவரும் பேலியோ உணவு முறை ஆரம்பித்ததில் இருந்து தினமும் காலையில் நடைபயணம் செல்கிறோம் எங்க பகுதி கால்வாய் ஓரம் ..

தினமும் நாங்கள் நடக்கும் canal /கால்வாய் வழி இது ..மிகவும் அமைதியா இயற்கையை ரசிச்சுக்கிட்டே நடக்கலாம் .இருமருங்கிலும் அழகிய காட்டு செடிகள் புதர் என ரொம்ப அழகா இருக்கும் .இங்கிலாந்தில் ஒரு காலத்தில் இந்த canals தான் போக்குவரத்துக்கு பயன்பட்டிருக்கு இன்னமும் அந்த படகுகளை வாடகைக்கு வாரம் மாதக்கணக்கில் எடுத்து செல்வோரும் உண்டு .                                                                                   
ஒரே ஒரு மாஸ்க்கோவி ஆண் வாத்து 


இவங்க raft சவாரி போறாங்களாம் :)

அம்மாவும் ஏழு வாத்து பிள்ளைங்களையும் தொடர்ந்து ஒரு மாதமா பார்க்கிறேன் ! அம்மா கூடவே அழைத்துக்கொண்டு செல்கிறது மகள்களை :)

இதோ அம்மாக்கூட வேகமா நீந்துதே இந்த வாத்து பாப்பா 
இது நேற்று வாக் போகும்போது தனியா குவாக் குவாக்ன்னு கத்திக்கிட்டு 
அவங்கம்மாவை தேடி அழுதுகொண்டிருந்தது .எனக்கு பாவமா இருந்தது .
கணவர் பாக் பாக்ன்னு குரல் கொடுக்க வேகமா ஒரு மூலைலேருந்து 
எங்களை பார்த்து கத்திகிட்டே வந்தது ..என்னால் குனிந்து பிடிக்கவும் முடியலை அதால் மேலேறி வரவும் முடியலை ..அங்கேயே எல்லா சாமிங்ககிட்டயும் பாப்பாவுக்கு வேண்டிக்கிட்டு அம்மாவோட சேரணும்னு 
வீட்டுக்கு வந்தேன் .இன்னிக்கு காலைல பார்த்தா அம்மாவோட வேகமா நீச்சல் ..எங்களை சட்டை கூட பண்ணலை :)

நீரில் நீந்தும் எலிகள் ,வண்ணத்திப்பூச்சிகள் அழகிய மலர்கள் 
இப்படி கண்கொள்ளா காட்ச்சிகளை தினமும் ரசிக்கிறேன் ..
ரசித்தவற்றை உங்களோடு பகிர்கிறேன் :)


அன்புடன் ஏஞ்சல் ...

 .

15 comments:

 1. ஓ! ஏஞ்சல் பேலியோ டயட்டா...அந்தக் காலத்து உணவு முறை ஆனால் உடல் எடை குறைத்து நல்ல சக்தி தரும் உணவு முறை. நான் பின்பற்ற நினைப்பதுண்டு ஆனால் வீட்டில் எல்லோரும் ஒத்துவந்தால் நல்லது...நானும் மகனும் என்றால் பெரும்பாலும் அப்படித்தான். இப்போது மகன் இன்டெர்ன்ஷிப் கிடைத்துப் போயாச்சு....அதனால்..

  இயற்கை ஒரு வரம்! அருமையாக இருக்கின்றன படங்கள், காணொளிகள் அதை விட அதில் வரும் கதாநாயகர்கள் நாயகிகள்....வாத்துகளைப் பாருங்கள் குழந்தைகளும் அம்மாவும் என்ன ஒரு அழகு. அதுவும் தன் கழுத்தை உயர்த்தி நீட்டி, தலையை அங்கும் இங்கும் வெட்டிக் கொண்டு ஹும் பாருங்கள் மனிதர்களே என்னைப் போல், என்கு அழகு குழந்தைகளைப் போல், என் அழகான குடும்பம் போல் உங்களில் உண்டோ என்று பெருமையுடன் சொல்லிச் செல்வது போல் உள்ளது....

  அனுபவியுங்கள் ஏஞ்சல். நான் நடைப்பயிற்சி செய்யும் வழியில், நிறைய நாரைகள், மான்கள், பன்றிகள் கூட்டமே உண்டு. ஆனால் அதைப் படம் வீடியோ எடுத்துப் போடலாம் என்றால் நம் சென்னையின் மானம் கப்பலேறும் ....(ஹும் ஏற்கனவே அது என்றோ ஏறியாச்சேனு சொல்றீங்களோ. சரி ராக்கெட் ஏறும் சொல்லிக்கலாம்...அந்த அளவிற்குக் குப்பைகள் அழுகி, காணவே சகிக்காததாக உள்ளது. கார்ப்பரேஷனுக்குச் சொன்னால் அவர்கள் கண்டு கொள்வது இல்லை. இது மத்திய அலுவலகங்கள் இருக்கும் இடம் அதனால் அது அதன் கீழ் வருகிறது. நம்மாலும் எதுவும் செய்ய இயலாது. பெரிய ஏரியா கருவேலம் மரங்களின் ஆக்ரமிப்பு வேறு. அங்கிருக்கும் வளாகத்தில் சொன்னால் இது அவர்கள் ஏரியா இவர்கள் ஏரியா என்று பதில் வேறு...ஆனால் அத்தனை அசிங்கமாக இருக்கிறது.

  நல்ல பகிர்வு ஏஞ்சல்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா ..
   அந்த அசிங்கங்கள் இங்குமிருக்கு முகப்புத்தகத்தில் எழுதியதை இங்கே போடலை :)
   பியர் டின் ,பாட்டில்ஸ் சிப்ஸ் பாக்கெட் எல்ல்லாம் குப்பையா கிடக்கின்றது ..ஆணலால் உடனே வாலன்டியர்ஸ் துப்புரவு செய்றாங்க ..தினமும் ஒருவர் சைக்கிளில் சென்று பார்வையிடுவார் நாம் கம்ப்ளெயிண்ட் கொடுத்தா உடனே ஆக்க்ஷன் எடுப்பாங்க ..பேலியோ தொடர்வது முக்கியமா க்ளூட்டன் அலர்ஜிக்காகத்தான் ..இப்போ அதுதான் எனக்கு ஹே பீவரிலிருந்தும் நிவாரணம் தருது ..
   விரிவா ஒரு பதிவு எழுதறேன்

   Delete
  2. நிறைய நேரம் இந்த வாத்துங்களை இமை மூடாமல் ரசிப்பதுண்டு நானும்... கொள்ளை அழகு

   Delete
 2. ஃபேஸ்புக்கிலும் ரசித்தேன். வலைத்தளங்களில் விடீயோ ஓடுவதில்லை என் கணினியில். அங்கு ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் ..வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி

   Delete
 3. ஈடிணையில்லாதவை இயற்கை காட்சிகள் அஞ்சு. பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படுவதில்லை. மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அழகான காட்சிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா .இதுக்காகவே காலையில் சுத்தி நடந்து சர்ச்சுக்கு போவேன் நடைக்கு நடையாச்சு ..இயற்கையை ஆழமா ரசிச்சத்தும் ஆச்சு .மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தினமும்

   Delete
 4. ஹை, ஒத்தையடிப் பாதை ! நம்ம ஊரு மாதிரியே இருக்கே !! இடம் அழகா இருக்கு அஞ்சு, படங்களும்தான் !!

  கொஞ்ச நாளா நான் மட்டும்தான் வாத்து மேய்க்கிறேன்னு நெனச்சேன் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வாங்க சித்ரா ..எனக்கும் அவ்ளோ சந்தோஷம் இந்த வாத்துங்களை மேய்க்கிறதில் ..ஆமாம்ப்பா அழகான அமைதியான இடம்தான் ஆனா அசிங்கமான சில மனுஷங்க குப்பையாக்கிடறாங்க அழகான இடத்தை வாலன்டியர்ஸ் மனந்தளராம தினமும் க்ளீனிங் செய்வாங்க

   Delete
 5. முகநூலில் கண்டு ரசித்த காட்சிகள், மீண்டும் இங்கும் கண்டு களித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதியக்கா ..இங்கேயும் இனிமே தொடர்ந்து பதிவுகள் போடுவேன் .வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி

   Delete
 6. அடடா..அழகானஇடம்...

  இங்கும் ஏரிக்குள் உள்ள நடைபாதை எல்லாம் நன்றாக பராமரிப்பதால்...நடைபயிற்சி செய்வது மிகவும் மகிழ்வான நேரமாகஉள்ளது...

  ஆனால் ஏரிக்கு செல்லும் சாலை பாவம் பராமரிப்பு இல்லாமல்.. கீதா அம்மாசொன்னது போல் உள்ளது..

  ReplyDelete
 7. பேலியோ வாவ்

  வாழ்த்துகள்
  தொடர்க

  ReplyDelete
 8. அருமையான பதிவு
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete