அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/20/16

பல்..லே பல்..லே..Tooth Fairy /பல் தேவதை ...

இது ஒரு பல்லே பல்லே  பல்  பதிவு :))

இந்த சிறிய trinket பெட்டி ஜெர்மனியில் இருந்தபோது மகளுக்கு வழங்கப்பட்டது . ..மூன்று  வயதானவுடன்  அனைத்து சிறுவர் சிறுமியர் வீடுகளுக்கு  aok என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் கடிதம்  அனுப்புவாங்க ..குழந்தையுடன் அங்கே செல்ல வேண்டும் .அப்படி சென்ற பிள்ளைகளிடம் இந்த சிறிய மரத்தாலான  பெட்டி வழங்கப்படும் .Milch Zahne என்றால் ஜெர்மானிய மொழியில் பால் பல் என்று அர்த்தம் .
இது ....பிள்ளைங்களுக்கு பல் விழுந்ததும் அதை பத்திரமா சேமித்து வைக்க .
                                                                  இப்படி சைக்கில் பின்னே கட்டும் கொடி,ஸ்கார்ப்,,பென்சில்,,பாக்ஸ்,டெடிபேர் ,லஞ்ச் பாக்ஸ் என்று அவ்வப்போது வயதுக்கேற்ற இலவச பரிசாக வழங்குவார்கள் .  எங்கள் மகள் ஒவ்வொரு முறை பல் விழுந்தவுடன் இதில் பத்திரப்படுத்தி வைப்பா :) ஒரு ஆறு ஏழு வயது வரைக்கும் வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் தனது யானை தந்தம் போன்ற இந்த பற்களை காட்டி மகிழ்வாள் அவ்வப்போது நாணயத்தை எண்ணுவதுபோல  மேஜையில் கவிழ்த்து கொட்டி எண்ணுவாள் :) சுமார் 10 வயது வரை கவிழ்த்து கொட்டி எண்ணும் வழக்கம் இருந்தது :) 
நேற்று ரொம்ப நாளாச்சே பதிவு எழுதி என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த பொக்கிஷபெட்டி..மகளிடம் பெர்மிஷன் கேட்டேன் இதைப்பற்றி எழுதலாமா என்று .அவள் கூறினாள் ..ஓ  !! தாராளமாக எழுதுங்கள் ..ஆனால் ஒரு கண்டிஷன் எனது பற்களை படமெடுத்து போடக்கூடாது ..ஆகவே நண்பர்களே அந்த மினி யானை தந்தங்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை :))..
பல வெளிநாட்டினர் இதுபோன்ற பெட்டிகளை வாங்கிகுழந்தைகளை  அதில் பற்களை சேர்த்து வைக்க சொல்கிறார்கள் .சிலர் முதல் விழுந்த பால் பல்லை பென்டன்ட் போல செய்தும் அணிவிப்பார்கள் குழந்தைகளுக்கு ..நம் ஊரில் தரையில் புதைக்காட்டி வாயில் பல் வளராது என்று சொல்லி விட்டதால் நான் ரொம்ப கவனமுடன் ஆழக்குழி தோண்டி புதைத்து வைத்தேன் :) ..
ஸ்பெயின் பிரான்ஸ் மற்றும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் .விழுந்த பல்லை தலையணை கீழேஅல்லது ஒரு கண்ணாடி தம்ப்ளரில் நீர் ஊற்றி பல்லை போட்டு வைத்து உறங்க செல்லவேண்டும்.....


Ratoncito Perez..//.இது ஸ்பானிஷ் எலி le petite souris,இது பிரெஞ்சு நாட்டு எலி 
                                                                                     
என்ற பெயருடைய எலிகள்  இரவில் வந்து அந்த பல்லை எடுத்து 
சென்று ஒரு இனிப்பு மிட்டாய் அல்லது ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து செல்லும் என்று குழந்தைகளுக்கு சொல்வார்கள் :)
இவங்களும் அப்படியே வைத்து தூங்கி எழும்பி பார்த்தா ...காலை நாணயமோ அல்லது மிட்டாயோ இருக்கும் ..வேற யார் வச்சிருப்பா எல்லாம் ரெண்டு கால் அம்மா அல்லது அப்பா எலிதான் ..

இங்கிலாந்தில் தலையணை கீழ் வைத்து விட்டு உறங்க வேண்டும் இரவு பல் தேவதை வந்து பல்லை எடுத்துக்கிட்டு ஒரு நாணயத்தை வைத்து விட்டு செல்லும் என்கிறார்கள்... சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் பொய் கதைகளை பரப்பகூடாது என்ற காரணத்தால் பலர் இந்த  பெட்டிகளில் மட்டும் சேர்க்க சொல்லி தாங்களே ஏதும் சிறு பரிசு பொருட்களை வாங்கி காலையில் கொடுத்து விடுவது வழக்கம் ..அதைதான் நாங்களும்  செய்தோம்..


..பல் தேவதை தெரியுமா உங்களுக்கு அதாங்க :)tooth fairy ..
இந்த பல் தேவதை பற்றி ஒரு கதை உண்டு ..இந்த பல் தேவதை ஆற்றங்கரையோரமா மரத்தின் கீழே வசித்து வந்ததாம் ..அதற்க்கு நிறைய நண்பர்கள் உண்டு பல்லி,தவளை,தலைபிரட்டை ,வண்டு மற்றும் சிறு உயிரினங்கள் இதன் விளையாட்டு தோழர்கள் ..இந்த தேவதையின் பொழுதுபோக்கு ஆற்றில் கரையோரம் ஒதுங்கும் சிறு பொருட்களை மற்றும் trinket பெட்டிகளை எடுத்து சேமித்து வைப்பது .இதற்க்கு ஒரு தனித்துவ குணமுண்டு கரையொதுங்கிய எந்த பொருளை தொட்டாலும் அது சம்பந்தமான நினைவுகள் இந்த தேவதையின் கண் முன்னே காட்சி விரியுமாம் !.
ஆற்றில் அடித்து வந்த கோலி குண்டுகளை தொட்டால் அதை விளையாடிய சிறுவர்களின் சந்தோசம் அப்படியே இதற்க்கு தெரியும் ..இப்படி இந்த தேவதைக்கு நிறைய பொக்கிஷ பெட்டிகள் கிடைத்தாலும் அதற்க்கு பற்கள் சேமித்து வைத்த பெட்டி மட்டும் இதுவரையில் காணக்கிடைக்கவில்லை ..பல் விழும்போது சிறுவர்களின் உணர்வு எப்படி  இருக்கும் என்று தெரிந்துகொள்ள தேவதைக்கு ஆவல் ..
 ஒரு நாள் தேவதை எப்பவும்போல கரையோரம் trinket பெட்டிகளை தேடிகொண்டிருந்தபோது இதன் மற்ற தோழர்கள் //அச்சோ மனுஷ பிள்ளைங்க வராங்க ஒடுங்க ஒளிங்க என்று அலறி ஓடினார்களாம் தேவதை மட்டும் தைரியமாக அந்த சிறுவர் கூட்டத்தை பார்த்தது..
 எல்லா பிள்ளைகளும் நீரில் குதித்து சேற்றில் விளையாடினர் ஒரு பெண் அவள் பெயர் லூயிஸ் அவளைத்தவிர .பல் தேவதை அவளருகே சென்றபோது லூயிஸ் கேட்டதாம் ..நீ தேவதை தானே ??
அதற்கு இதுவும் தலையாட்டி இன்னும் நெருங்கி சென்றது லூயிஸை நோக்கி ..லூயிஸின் பல் ஒன்று இப்பவோ அப்பவோ என்று ஆடிகொண்டிருந்தது  கண்டு தேவதைக்கு பயங்கர குஷி தானும் அப்பல்லை மெதுவா ஆட்டி பார்த்ததாம் ..அப்போ லூயிஸ் கேட்டுச்சாம்  ..உனக்கு இந்த பல்வேணுமா என்று ..அதைகேட்டதும் தேவதைக்குசொல்லொணா சந்தோஷம்..உடனே வேண்டும் என்றதாம் அதற்க்கு லூயிஸ்...இன்று இரவு இந்த பல் அனேகமா விழுந்துவிடும் நீ எங்க வீட்டுக்கு வந்து என் தலையணை கீழே இருக்கும் எடுத்துக்கோ ..அதைக்கேட்டதும் தேவதைக்கு சந்தோஷம் லூயிசுக்கு ஏதாவது பரிசு தரனும் என்று இரவு செல்லும்போது ஒரு வெள்ளி நாணயத்தை கொண்டு வைத்துவிட்டு பல்லை எடுத்துக்கொண்டு வந்ததாம் .அடுத்தநாள விழித்த லூயிசுக்கு சந்தோசம் அந்த நாணயத்தை பள்ளிக்கு எடுத்து சென்று காண்பித்தாளாம் !  அவளின் நண்பிகள் நம்பவேயில்லை அப்போ லூயிஸ் சொன்னது நீங்களும் உங்க பல்லை தலையணை கீழே வைங்க அடுத்த நாள் தேவதை உங்களுக்கும் பரிசு கொடுக்கும் ..அடுத்தநாள் மற்றொரு பெண் ஒரு நாணயத்தை தூக்கிட்டு ஓடி வந்தாளாம் !இப்படியாக பல் தேவதைபரிசு தரும் கதைகள் பரவி விட்டது உலகெங்கும் பல வித்தியாச கதைகள் வடிவில் ....


அமெரிக்காவில் இந்த tooth fairy இற்கு மியூசியமே இருக்கு !
இந்த சுட்டியில் சென்று பார்க்கவும் ..

https://enchantedamerica.wordpress.com/2014/06/10/the-tooth-fairy-museum-deerfield-il/

..................................................................................................................................................................


நானே வீட்டில் விதை சேகரித்து வளர்த்த என் சிறகவரை செடி :)
சமையலுக்கு வாங்கிய சிறகவரைகளில் ஒன்று மிகவும் முற்றியதாக இருந்தது அதை காயவைத்து விதை எடுத்து நட்டு வைத்தேன் ..
மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ..
                                                                   ***********************

16 comments:

 1. பல் பற்றிய பல்வேறு தகவல்கள் அருமையாக உள்ளன.

  பல் தேவதை பற்றிய கதையும் புதிதாகக் கேள்விப்படுகிறேன்.

  //சிறகவரை செடி :)//

  கேள்விப்பட்டதே இல்லை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..இந்த பல் தேவதை போல பல கதைகள் வெளிநாட்டில் உண்டு ,,worry doll ,care bear இன்னும் நிறைய இருக்கு ..சிறகவரை செடி ..கேரளாவில் அதிகம் விளையும்

   Delete
 2. //தாராளமாக எழுதுங்கள் ..ஆனால் ஒரு கண்டிஷன் எனது பற்களை படமெடுத்து போடக்கூடாது ..ஆகவே நண்பர்களே அந்த மினி யானை தந்தங்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை :))..//

  அதற்காக வருந்துவோர் இதோ இந்தப்பதிவினில் போய் அனைத்துப் படங்களை ஆசை தீர பார்த்து மகிழலாம்:

  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

  அதில் ஏராளமான பற்கள் தாராளமாகக் காட்டப்பட்டுள்ளன. அதிலும் பல அனிமேஷன் படங்கள். ஒரு பல் டூயட் கூட ஆடுது. :)

  -=-=-=-=-

  பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வவ் அண்ணா கண்டுபிடிச்சிட்டேன் அது பஞ்சாமியின் பல் தானே :))

   Delete
 3. இந்த பல் பெட்டி எங்க வீட்டிலும் இருந்தது. வீடு மாறும்போது காணாமல் போய்விட்டது. ஆனாலும் அபி சிலவேளை தேடிபார்ப்பார் இருக்குமோ என. இங்குள்ள பிள்ளைகள் பொக்கிஷமா பார்ப்பார்கள்.
  சேம் பின்ச் அஞ்சு.. நானும் புதைத்துஇருக்கேன். ஆனா அங்கு ஒரு பாட்டு பாடி பல்லை கூரை மேல் எறிவார்கள். பல் பற்றி எத்தனை விதமான கதைகள்..
  பல்தேவதை கதை இன்ரஸ்டிங்..!
  சிறகவரை செடி வளர்ந்து காய்த்ததும் படம் போடுங்க.
  (loud speaker கன நாளா காணலையே என நினைத்தேன்)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..பெரிய இடைவெளி விட்டுட்டேன் ஈஸ்டர் விடுமுறை கொஞ்சம் சர்ச் வேளையில் பிசி என தாமதமாகி விட்டது .சிறகவரை வளர வெயில் வரணும்னு வேண்டிக்கோங்க :)
   இங்கே இந்த பல் பெட்டி 5.99£ விலை! ஜெர்மனில freeyaa கொடுப்பாங்க

   Delete
 4. பல் பற்றி சிரிப்பான பகிர்வு.செடி மரமாக வளரும் வரை காத்து இருப்பீங்களா இல்லை அதையும் சாம்பார் ஆக்குவீர்களா[[[லொல்லு[[

  ReplyDelete
  Replies
  1. வெயில் ஒரு 5 கிலோ பார்சல் அனுப்புங்க சாம்பார் கூட்டு தோரன் எல்லாம் செஞ்சிடறேன் :))

   Delete
  2. ஹ அஹா நேசன் பல் என்றால் உங்களுக்கு யார் நினைவோ வரணுமே :) புன்னகை இளவரசி snake aaa

   Delete
 5. அதிராவும் எலியோட பல் தேடுகின்றாவாம் டெல்லியில் [[

  ReplyDelete
 6. பல் கதை சுவாரஸ்யம். இது போன்ற கதைகள் எல்லா இடத்திலும் உண்டு என்பது சற்றே ஆறுதலும் கூட! ஹிஹிஹி...

  மிகச் சமீபத்தில் தான் இந்த சிறகவரை பற்றி நானும் என் சகோதரியும் பேசிக் கொண்டிருந்தோம். சென்ற ஞாயிறு என்று நினைக்கிறேன். நாங்கள் அதைப் பல வருடங்களுக்கு முன்னால் சாப்பிட்டது. என் சகோதரி அதை வேறு மாதிரிக் குறிப்பிடுவாள். இதை எழுதும் வரை எனக்கு அந்தப் பெயர் நினைவுக்கு வரவில்லை!

  ReplyDelete
  Replies
  1. இறகு அவரைஅல்லது சதுர அவரை என்றும் சொல்றாங்க ..
   இங்கே பல்லுக்கு மட்டுமில்லை பல விஷயங்களுக்கு பின்னால் பல குட்டி கதைகள் இருக்கு ..கதைகளை விதவிதமா சொல்வதில் நமக்கு நிகரானவங்க வெளிநாட்டினர் .

   Delete
 7. பல்லே பல்லே பலே பலே!!!!

  ஜெர்மனியில் உறவினர் இருந்த போது சொல்லியிருக்கிறார் அந்த ஊர் பல் பெட்டி பற்றி அப்புறம் ஃப்ரென்ச் என்று நீங்கள் சொல்லியிருக்கும் பெட்டி விஷயங்கள். அவர் முதலில் இத்தலி, அப்புறம் ஜெர்மனி என்று இருந்ததால்...கூடவே சாக்கலேட் அதிகம் சாப்பிடக் கூடாது பல் கெட்டுவிடும் என்று, குழந்தைகளுக்குச் சொல்வார்களாம்...

  //ஆகவே நண்பர்களே அந்த மினி யானை தந்தங்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை :))..// ஹஹஹஹஹஹ்...பரவால்ல எங்க யானைத் தந்தம் பல் போலத்தானே இருந்திருக்கும் ஹிஹிஹி..

  அந்த ஃபெயரி கதை அறிந்ததில்லை. சுவாரஸ்யமாக இருக்கிறது...ம்ம்ம் பல்லுக்கெல்லாம் எவ்வளவு மரியாதை பாருங்கள் ம்யூசியம் வைக்கும் அளவு.....நம்ம மக்கள் என்னடான்னா "பல்லை உடைச்சுருவேன்" அப்படினு கோபத்துல பல்லைக் கடிப்பது என்று....ஹஹஹ்..

  பலே பலே பதிவு!!!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இந்த சாக்லேட்சில் சின்ன வயசிலிருந்தே விருப்பமில்லை எந்த இனிப்பும் கொஞ்சமும் பிடிக்காது கணவர் அப்படியே opposite நாலு பல்லு போச்சு இனிப்பலேயே :)
   என் குணம் அப்படியே மகளுக்கு வந்ததால் தப்பித்தேன் அவளுக்கு காரசாரமான நொறுக்கு மட்டுமே பிரியம் ..அடுத்தது ஜெர்மனியை விட இங்கிலாந்தில் எல்லா வைபவங்களுக்கும் சாக்லேட் பெட்டியா தருவாங்க ..ஈஸ்டருக்கு பத்து எக்ஸ் கிடைத்தது ஒவ்வொன்றும் இரண்டு காலிப்ளவர் அளவு :) அப்படியே சர்ச்ல உள்ள பிள்ளைங்களுக்கு கொடுத்திட்டோம் ..தேவதை கதைகளை உருவ்வாகிய பெருமை ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் ரஷ்யர்கள் ஜெர்மானியர்கள் அனால்லும் நம்ம பாட்டி வடை சுட்ட கதைக்கு எதுவும் ஈடில்லை

   Delete
 8. பல் கதை மிக நன்றாக இருக்கிறது. சிறு வயதில் பல் விழுந்த போது பசுஞ்சாணியில் சுற்றி அதை கூறை மேல் போட சொல்வார்கள். பல்பெட்டி கேட்கவே சந்தோஷமாய் இருக்கிறது.
  சிறு அவரை கொடிதானே? செடி வகையா?

  ReplyDelete