அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/20/16

பல்..லே பல்..லே..Tooth Fairy /பல் தேவதை ...

இது ஒரு பல்லே பல்லே  பல்  பதிவு :))

இந்த சிறிய trinket பெட்டி ஜெர்மனியில் இருந்தபோது மகளுக்கு வழங்கப்பட்டது . ..மூன்று  வயதானவுடன்  அனைத்து சிறுவர் சிறுமியர் வீடுகளுக்கு  aok என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் கடிதம்  அனுப்புவாங்க ..குழந்தையுடன் அங்கே செல்ல வேண்டும் .அப்படி சென்ற பிள்ளைகளிடம் இந்த சிறிய மரத்தாலான  பெட்டி வழங்கப்படும் .Milch Zahne என்றால் ஜெர்மானிய மொழியில் பால் பல் என்று அர்த்தம் .
இது ....பிள்ளைங்களுக்கு பல் விழுந்ததும் அதை பத்திரமா சேமித்து வைக்க .
                                                                  இப்படி சைக்கில் பின்னே கட்டும் கொடி,ஸ்கார்ப்,,பென்சில்,,பாக்ஸ்,டெடிபேர் ,லஞ்ச் பாக்ஸ் என்று அவ்வப்போது வயதுக்கேற்ற இலவச பரிசாக வழங்குவார்கள் .  எங்கள் மகள் ஒவ்வொரு முறை பல் விழுந்தவுடன் இதில் பத்திரப்படுத்தி வைப்பா :) ஒரு ஆறு ஏழு வயது வரைக்கும் வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் தனது யானை தந்தம் போன்ற இந்த பற்களை காட்டி மகிழ்வாள் அவ்வப்போது நாணயத்தை எண்ணுவதுபோல  மேஜையில் கவிழ்த்து கொட்டி எண்ணுவாள் :) சுமார் 10 வயது வரை கவிழ்த்து கொட்டி எண்ணும் வழக்கம் இருந்தது :) 
நேற்று ரொம்ப நாளாச்சே பதிவு எழுதி என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த பொக்கிஷபெட்டி..மகளிடம் பெர்மிஷன் கேட்டேன் இதைப்பற்றி எழுதலாமா என்று .அவள் கூறினாள் ..ஓ  !! தாராளமாக எழுதுங்கள் ..ஆனால் ஒரு கண்டிஷன் எனது பற்களை படமெடுத்து போடக்கூடாது ..ஆகவே நண்பர்களே அந்த மினி யானை தந்தங்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை :))..
பல வெளிநாட்டினர் இதுபோன்ற பெட்டிகளை வாங்கிகுழந்தைகளை  அதில் பற்களை சேர்த்து வைக்க சொல்கிறார்கள் .சிலர் முதல் விழுந்த பால் பல்லை பென்டன்ட் போல செய்தும் அணிவிப்பார்கள் குழந்தைகளுக்கு ..நம் ஊரில் தரையில் புதைக்காட்டி வாயில் பல் வளராது என்று சொல்லி விட்டதால் நான் ரொம்ப கவனமுடன் ஆழக்குழி தோண்டி புதைத்து வைத்தேன் :) ..
ஸ்பெயின் பிரான்ஸ் மற்றும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் .விழுந்த பல்லை தலையணை கீழேஅல்லது ஒரு கண்ணாடி தம்ப்ளரில் நீர் ஊற்றி பல்லை போட்டு வைத்து உறங்க செல்லவேண்டும்.....


Ratoncito Perez..//.இது ஸ்பானிஷ் எலி le petite souris,இது பிரெஞ்சு நாட்டு எலி 
                                                                                     
என்ற பெயருடைய எலிகள்  இரவில் வந்து அந்த பல்லை எடுத்து 
சென்று ஒரு இனிப்பு மிட்டாய் அல்லது ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து செல்லும் என்று குழந்தைகளுக்கு சொல்வார்கள் :)
இவங்களும் அப்படியே வைத்து தூங்கி எழும்பி பார்த்தா ...காலை நாணயமோ அல்லது மிட்டாயோ இருக்கும் ..வேற யார் வச்சிருப்பா எல்லாம் ரெண்டு கால் அம்மா அல்லது அப்பா எலிதான் ..

இங்கிலாந்தில் தலையணை கீழ் வைத்து விட்டு உறங்க வேண்டும் இரவு பல் தேவதை வந்து பல்லை எடுத்துக்கிட்டு ஒரு நாணயத்தை வைத்து விட்டு செல்லும் என்கிறார்கள்... சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் பொய் கதைகளை பரப்பகூடாது என்ற காரணத்தால் பலர் இந்த  பெட்டிகளில் மட்டும் சேர்க்க சொல்லி தாங்களே ஏதும் சிறு பரிசு பொருட்களை வாங்கி காலையில் கொடுத்து விடுவது வழக்கம் ..அதைதான் நாங்களும்  செய்தோம்..


..பல் தேவதை தெரியுமா உங்களுக்கு அதாங்க :)tooth fairy ..
இந்த பல் தேவதை பற்றி ஒரு கதை உண்டு ..இந்த பல் தேவதை ஆற்றங்கரையோரமா மரத்தின் கீழே வசித்து வந்ததாம் ..அதற்க்கு நிறைய நண்பர்கள் உண்டு பல்லி,தவளை,தலைபிரட்டை ,வண்டு மற்றும் சிறு உயிரினங்கள் இதன் விளையாட்டு தோழர்கள் ..இந்த தேவதையின் பொழுதுபோக்கு ஆற்றில் கரையோரம் ஒதுங்கும் சிறு பொருட்களை மற்றும் trinket பெட்டிகளை எடுத்து சேமித்து வைப்பது .இதற்க்கு ஒரு தனித்துவ குணமுண்டு கரையொதுங்கிய எந்த பொருளை தொட்டாலும் அது சம்பந்தமான நினைவுகள் இந்த தேவதையின் கண் முன்னே காட்சி விரியுமாம் !.
ஆற்றில் அடித்து வந்த கோலி குண்டுகளை தொட்டால் அதை விளையாடிய சிறுவர்களின் சந்தோசம் அப்படியே இதற்க்கு தெரியும் ..இப்படி இந்த தேவதைக்கு நிறைய பொக்கிஷ பெட்டிகள் கிடைத்தாலும் அதற்க்கு பற்கள் சேமித்து வைத்த பெட்டி மட்டும் இதுவரையில் காணக்கிடைக்கவில்லை ..பல் விழும்போது சிறுவர்களின் உணர்வு எப்படி  இருக்கும் என்று தெரிந்துகொள்ள தேவதைக்கு ஆவல் ..
 ஒரு நாள் தேவதை எப்பவும்போல கரையோரம் trinket பெட்டிகளை தேடிகொண்டிருந்தபோது இதன் மற்ற தோழர்கள் //அச்சோ மனுஷ பிள்ளைங்க வராங்க ஒடுங்க ஒளிங்க என்று அலறி ஓடினார்களாம் தேவதை மட்டும் தைரியமாக அந்த சிறுவர் கூட்டத்தை பார்த்தது..
 எல்லா பிள்ளைகளும் நீரில் குதித்து சேற்றில் விளையாடினர் ஒரு பெண் அவள் பெயர் லூயிஸ் அவளைத்தவிர .பல் தேவதை அவளருகே சென்றபோது லூயிஸ் கேட்டதாம் ..நீ தேவதை தானே ??
அதற்கு இதுவும் தலையாட்டி இன்னும் நெருங்கி சென்றது லூயிஸை நோக்கி ..லூயிஸின் பல் ஒன்று இப்பவோ அப்பவோ என்று ஆடிகொண்டிருந்தது  கண்டு தேவதைக்கு பயங்கர குஷி தானும் அப்பல்லை மெதுவா ஆட்டி பார்த்ததாம் ..அப்போ லூயிஸ் கேட்டுச்சாம்  ..உனக்கு இந்த பல்வேணுமா என்று ..அதைகேட்டதும் தேவதைக்குசொல்லொணா சந்தோஷம்..உடனே வேண்டும் என்றதாம் அதற்க்கு லூயிஸ்...இன்று இரவு இந்த பல் அனேகமா விழுந்துவிடும் நீ எங்க வீட்டுக்கு வந்து என் தலையணை கீழே இருக்கும் எடுத்துக்கோ ..அதைக்கேட்டதும் தேவதைக்கு சந்தோஷம் லூயிசுக்கு ஏதாவது பரிசு தரனும் என்று இரவு செல்லும்போது ஒரு வெள்ளி நாணயத்தை கொண்டு வைத்துவிட்டு பல்லை எடுத்துக்கொண்டு வந்ததாம் .அடுத்தநாள விழித்த லூயிசுக்கு சந்தோசம் அந்த நாணயத்தை பள்ளிக்கு எடுத்து சென்று காண்பித்தாளாம் !  அவளின் நண்பிகள் நம்பவேயில்லை அப்போ லூயிஸ் சொன்னது நீங்களும் உங்க பல்லை தலையணை கீழே வைங்க அடுத்த நாள் தேவதை உங்களுக்கும் பரிசு கொடுக்கும் ..அடுத்தநாள் மற்றொரு பெண் ஒரு நாணயத்தை தூக்கிட்டு ஓடி வந்தாளாம் !இப்படியாக பல் தேவதைபரிசு தரும் கதைகள் பரவி விட்டது உலகெங்கும் பல வித்தியாச கதைகள் வடிவில் ....


அமெரிக்காவில் இந்த tooth fairy இற்கு மியூசியமே இருக்கு !
இந்த சுட்டியில் சென்று பார்க்கவும் ..

https://enchantedamerica.wordpress.com/2014/06/10/the-tooth-fairy-museum-deerfield-il/

..................................................................................................................................................................


நானே வீட்டில் விதை சேகரித்து வளர்த்த என் சிறகவரை செடி :)
சமையலுக்கு வாங்கிய சிறகவரைகளில் ஒன்று மிகவும் முற்றியதாக இருந்தது அதை காயவைத்து விதை எடுத்து நட்டு வைத்தேன் ..
மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ..
                                                                   ***********************