அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/10/16

Loud Speaker...39


இன்றைய பதிவில் மைக்ரோசிப்பிங் ,ஹெமி , சுந்தராவும் மீள் சுழற்சி சோப்பும் மைக்ரோ சிப்பிங் (Microchipping) 
--------------------------------------------------------
இங்கே இங்கிலாந்தில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் அனைத்து நாலுகால் நாய்கர்களுக்கும் மைக்ரோசிப்பிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
அரிசி அளவு ஒரு சிப் அதை ஊசி வழியே தோள் பட்டை நடுவில் பொருத்துவார்கள் அதற்கு 15 எண்களுள்ள ஒரு கோட் இருக்கும் petlog இல் நமது வீட்டு அட்ரஸ் பெயர் ஆகியவற்றுடன் பூனை அல்லது நாய் போன்ற செல்ல பிராணிகளின் தகவலும் அதில் இருக்கும் நமது அட்ரசை மாற்றினால் அவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் .நாயோ பூனையோ தொலைந்தால் முதலில் வெட்னரியன்ஸ் மைக்ரோசிப் செய்யப்பட்டுள்ளதா என்று ஒரு detector  வைத்து பார்ப்பார்கள் ..அதில் உள்ள தகவலை வைத்து காணாமல்  போன ஜீவனை உரிமையாளருடன் சேர்த்து விடுவார்கள் .நாங்க எங்க ஜெசிக்கும் செய்து வைச்சிருக்கோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹெமி 

---------------------அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் ராபர்ட்டின் குடும்பம் வசித்து வந்தது ராபர்ட் கப்பல் மற்றும் நிலப்படை (marine ) நேவி வீரர் ..இவரது வீட்டில் ஹெமி என்ற பூனையை வளர்த்து வந்தனர் இவர் Posttraumatic stress disorder, or PTSD,இனால் பாதிக்கப்பட்டவர் .இந்த நோய் தீவிரவாத தாக்குதல்கள்  பேரழிவுகள் நிலநடுக்கம் போன்றவற்றை நேரில் பார்த்தவர்கள் ,போரில் ஏற்படும் அழிவை கண்ணால் கண்டதினாலும் மற்றும் சில நெருங்கிய உறவினரின் பிரிவு மரணம் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்த நோய்(PTSD is a serious potentially debilitating condition that can occur in people who have experienced or witnessed a natural disaster, serious accident, terrorist incident, sudden death of a loved one, war, violent personal assault such as rape, or other life-threatening events)

இவரது பூனை இவரது நோயை மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியிருக்கு .இவருக்கு இரண்டு குழந்தைகள் அந்த குழந்தைகள் பிறக்குமுன் இந்தபூனைதான் இவரின் உற்ற தோழன் ஆழ் மன இரகசியங்கள் துக்கங்களை கூட இப்பூனை ஹெமியிடம் ராபர்ட் பகிர்ந்ததாக கூறுகிறார் ..ராபர்ட்டுக்கு மீண்டும் வேறொரு போர் நடக்கும் நாட்டிற்கு பணிமாற்றம் காரணமாக செல்லவேண்டிய சூழ்நிலை அவர் பயணிக்கவும் அதே நேரம் ஹெமியும் காணமால் போய் விட்டது அவரின் மனைவி அந்த பக்குதியில் தேடி பார்த்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார் குடும்பத்தினருடன் ..நான்கு வருடங்கள் கழித்து பணியில் இருந்து ஓய்வுபெற்று வட  டகோட்டா விற்கு சென்றதும் இவர்களுக்கு pet log /stray cat அனிமல் ஷெல்டரிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது உங்கள் பூனை எங்களிடமுள்ளது பெயர் ஹெமி மைக்ரோ சிப் எண்  ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தனர் ..பூனைகளின் குணம் ஓரிரு நாள் காணாமல் போனாலும் எப்படியாவது கண்டுபிடித்து நம்மை அடைந்துவிடும் இந்த பூனையும் வட  கரோலினா பகுதியிலேயே நான்கு வருடங்களாக  சுற்றிகொண்டிருந்திருக்கு ....மனதை நெகிழ்த்தும் விஷயம் என்னவென்றால் வடகரொலினாவிர்க்கும் வட டகோட்டவிற்கும் உள்ள தொலைவு 2235.22 km  !!!மேலும் இந்த பூனைக்கு உடலில் சில குறைபாடுகளுண்டு காது மடங்கி பற்களில் சில துருத்திக்கொண்டு ஆனால் இந்த பூனைதான் ராபர்ட்டின் மன அழுத்தத்தை குறைக்க உதவியிருக்கு ..அந்த அன்பு நட்புக்காரணமாகவே  இத்தனை தொலைவில்  இருந்து ராபர்ட் அந்த அனிமல் ஷெல்ட்டருக்கு வந்து ஹெமியை அழைத்து சென்றுள்ளார் ..

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெஸ்ஸி ..
==========
(சில நாட்கள் முன்பு நடந்தது எங்க வீட்டில் )  முகபுத்தகத்தில் பகிர்ந்தேன் 
இங்கும் போட்டாச்சு இப்போ ..

காட்சி 1... ஜெஸி காரக்டர் ...இது ஜெஸியின் மைண்ட் வாய்ஸ் 
----------------------------------------------------------------------------------------------------------

அச்சோ அச்சச்சோ நான் தப்பு பண்ணிட்டேனே ..இந்த கருவாண்டி பேச்சை கேட்டிருக்கக்கூடாது :((((
அவன்தான் வா அங்கே சின்னதா எதோ ஓடுது எலி மாதிரி இருக்கு போய் பார்க்கலாம்னு alley way பக்கமா கூட்டிட்டு போனான் ..
சுற்றிலும் இருட்டு கருவாண்டியும் இருட்டுப்பய அவன் என்னை விட்டு ஓடிட்டான் வழி தெரியல இப்போ எனக்கு அந்த பக்கம் டெரர் டைகர் காத்திட்டிருக்கு என்னை விழுங்க ...இந்த பக்கம் கார்களா நிக்குதே  நான் எந்த பக்கம் போகணும் ..இதில் எந்த வீடு எங்க வீடு >>
எல்லாமே ஒரே மாதிரி இருக்கே ?? அம்மா என்னை தேட ஆரம்பிக்கறதுக்குள்ள கண்டுபிடிச்சி போயிடனும் வீட்டுக்கு ..முந்தி இப்படிதான் ஒரு முறை அதிகாலை 3 மணி வரைக்கும் என்னை காணோம்னு அம்மா அழுதாங்களாம் சொன்னாங்க ...
ஐயோ அங்கே கார் கிட்ட பிரவுன் கலரில் தெரியுதே ! கண்ணு ரெண்டும் பளபளன்னு அம்மாடியோவ் ..அது ரெட் குள்ள நரி ..அப்பா சொல்லிட்டிருந்தாங்க எங்க வீட்டு தெருவின் மூலையில் ஒரு ஏரியும் குளமும் இருக்கு சில நேரம் நரி அங்கு உலாவுதாம் எப்படி போவேன் எங்க வீட்டுக்கு 
நரி என்னை சாப்பிடுமா ?
கருவாண்டி இனிமே நீ என் பிரண்ட் இல்ல ..தனியே ஏண்டா விட்டுட்டு போன என்னைய 
நிறைய கார் ஓடுது எனக்கு ரோட் க்ராஸ் பண்ண கூட தெரியாது நான் எந்த பக்கம் போகணும் ?
எதுக்கும் நடந்து பார்ப்போம் ....

ஒரு வீட்டில் இருந்து லைட் எரியுது சப்பாத்தி சுட்ட வாசனை வருது கொஞ்சம் சின்னமன் dhoop ஸ்டிக் வாசனையும் அதோட அம்மாவின் வாசனையும் வருதே !! எதுக்கும் தட்டி பார்ப்போம் .
ஆஆ அமாம் இது எங்க வீடுதான் .(ஜெசி உடம்பை வச்சி முட்டி மோதி கதவை தட்டுது )
காட்சி ..2 ..ஏஞ்சல் காரக்டர் 
---------------------------------------------
(எப்பவும்போல லாப்டாப்பில் போஸ்ட் ஒன்று தயாரித்துக்கொண்டும் பிளாக்ஸ் விசிடிங் செஞ்சிகொண்டும் அதிரா ஸ்டேடசுக்கு fb கமெண்ட் ரெயில் நீளத்துக்கு கலாட்டா  நடந்துகொண்டும் இருக்கிறது ) 

கதவு 11 :30 க்கு யாரோ தட்டும் சத்தம் கேட்டதும் மேடம் அலறி மாடிக்கு ஓடுகிறார் ,,இங்கே வாங்க எனக்கு பயமா இருக்கு யாரோ கதவை மடார் மடார்னு தட்டறாங்க ,,திருடன்தான் துப்பாக்கிஎதுவும் வச்சிருப்பான் போலிசுக்கு கால் பண்ணுங்க என்று மூச்சு விடாமல் பேசி முடிக்கவும் கணவர் ஜன்னலை மெதுவாய் திறந்து மேலிருந்து பார்த்தால் !!
ஜெசி கதவை முட்டி மோதிக்கொண்டு திருமதி ஏஞ்சல் குரல் சத்தத்துக்கு இன்னும் அதிகமாக மியாவ் மியாவ் என்று கத்திகொண்டிருக்கு ..கணவர் கீழே வந்து கதவை திறந்ததுதான் தாமதம் ..ஜெசி வேகமாக ஓடி வந்துவிட்டது வீட்டிற்குள் ..
........................................................................................................

எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை எங்கள் ஜெசி வீட்டின் முன்பக்கத்தை பார்த்ததேயில்லை ஜன்னல் வழியே விண்டோ வாட்சிங்க் மட்டுமே செய்யும் ..பின் வழியே தோட்டம் மட்டுமே அறிந்தது .alley way எங்கள் வீட்டில் இருந்து ஐந்து வீடு தள்ளி இருக்கு .முன்பக்கம் தவறி சென்ற ஜெஸி .எப்படி கண்டுபிடித்தது எங்கள் வீட்டை ??....

எழுத படிக்க தெரிந்த பூனையாம் ஜெஸி கணவர் சொல்கிரார் :))) டோர் நம்பர் பார்த்து கண்டுபிடித்திருக்ககூடுமாம் :)) ஹா ஹா ..மோப்ப சக்தியும் தாயை போலவே இருந்திருக்கும்  அதான் சரியா இருட்டிலும் வாசனை வச்சி கண்டுபிடிச்சிருக்கா ஜெஸ்ஸி 
------------------------------------------------------------------------------------------------------------

Erin Zaikis மற்றும் சுந்தரா 
------------------------------------------சுந்தரா என்றால் சமஸ்க்ரிதத்தில் அழகிய என்ற பொருள் .சக மனிதருக்கு அதுவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும்போது நம்மின் அக அழகு நம்மையும் மீறி வெளிப்படும் நாம மிக அழகானவர்களாக உணர்வோம் என்கின்றார் எரின் ..

இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் மிச்சிகன் பல்கலைகழகத்தில் பயின்றவர் ..slumdog millionaire  படத்தை பார்த்ததுமுதல் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்கு 
தாய்லாந்தில் மியான்மர் எல்லையில்  ஒரு  சாரிட்டி நிறுவனத்துடன் பணிபுரிகையில் அங்குள்ள குழந்தைகள் மத்தியில் சோப் பற்றிய மற்றும் உணவு சாப்பிடுமுன் கைகழுவும் பற்றிய விழிப்புணர்வே இல்லையென்பது இவருக்கு அதிர்ச்சியாக இருந்ததாம் .அப்பிள்ளைகளுக்கு சோப் பற்றியும் தெரியவில்லை ..அப்போது துவங்கப்பட்டதுதான் இந்த ரீசைக்ளிங் சோப் மற்றும் சுந்தரா எனும் தன்னார்வ நிறுவனம் ..

இவர்கள் பெரிய 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு சென்று அங்கு வீணாகும் சோப்புகட்டிகளை மீள் சுழற்சி  செய்து மற்றவற்றை மீண்டும் சுத்திகரித்து சோப்பு பார்கள் ஆக்குகிறார்கள் அவற்றை உகாண்டா மியான்மர் மற்றும் நம்ம இந்திய நாட்டிலுள்ள ஏழைகுழந்தைகள் இருக்கும் பள்ளிகள் வீடுகளுக்கு வினியோகிக்கிறார்கள் .ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் சுகாதாரமின்மையாலேயே pneumonia, diarrhea வால் மரணிக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன . ..
யூனிலீவர் நிறுவனம் சொல்கிறது 70 இலட்சம் இந்தியர்கள் சோப்பு பயன்படுத்துவதில்லையாம் .
இந்தியாவில் 30 மும்பை  5 நட்சத்திர ஹோட்டல்களில் ஹவுஸ் கீப்பிங் பணிபுரிபவர்கள் அதற்கேன உள்ள பைகளில் பயன்படுத்திய சோப்புகளை சேகரிக்கிறார்கள் பிரபலங்கள் ஒரு நாள் அல்லது சில மணிநேரமே தங்குவார்கள் ..ஒவ்வொரு முறையும் புதிய சோப் வைக்கப்படும் ஒரு பயன்பாட்டுக்கு பின்னர் அவை குப்பையில் வீசப்படும் இந்த சுந்தரா நிறுவனத்தினர் அவற்றை சேகரித்து ஒரு வொர்க் ஷாப்பிற்கு கொண்டு சென்று   வெளிப்புறத்தை ஸ்க்ரேப் செய்து சுத்திகரித்து செய்து துகள்களாக்கி மீண்டும் அனைத்தையும் பார்களாக்கி  சுகாதார முறையில் மீள்சுழற்சி செய்கிறார்கள் ..


இதற்க்கு சுமார் ஏழு நிமிடங்கள் எடுக்குமாம் .

சுந்தர சோப்பு சுமார் 25 சதவீதம் நகர்புற குடிசைப்பகுதிகளில் செல்கிறது , மற்றும் பிற 75 சதவீதம் கிராமப்புற கிராமங்களில் செல்கிறது. இன்றுவரை, சோப்பு கிட்டத்தட்ட 16.700 பார்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாம் .மேலும் வீணா குப்பைக்கு  போகும்  இந்த சோப்புக்கள் இப்படிஏழைகளுக்கு  நல்ல ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவது எவ்வளவோ மேல் 
மேலும் சுந்தரா பற்றி இங்கு சென்று வாசிக்கவும் 
தகவல் மற்றும் படங்கள் http://sundarafund.org/founders-story/மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ..Angelin 

28 comments:

 1. Super information angel,thxs for sharing it..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா :)

   Delete
 2. We have this microchip concept long time in us I guess Akka! When we got Geno, he was already chipped. We just have to call and change the name of the owner from adoption agency to our names. People who love pets can only understand their importance. 😊

  Useful share as always!

  ReplyDelete
  Replies
  1. True mahi..here some people don't even insure their pets .thats why they've made it strict now ..free microchipping is also available in some parts of uk

   Delete
 3. இப்படியான செய்திகளை எப்படி உங்களினால் தேடிப்போக முடியுது உண்மையில் உங்கள் மூலம் பலவிடயத்தை வலையில் தெரிந்துகொள்கின்றேன். சமூக அக்கரைக்கு நன்றிகள்.ஆனாலும் பூசாரின் மோர்ப்ப சக்தி எனக்கில்லை[[

  ReplyDelete
  Replies
  1. சில செய்திகள் முகபுதகத்தில் trending இல் காட்டும் .அவற்றை புக் மார்க் செய்வேன் ,நேத்து பிரேசில் நாட்டு தாத்தா வும் பென்குயினும் கூட பார்த்தேன் அதற்குள் ஷாஜஹான் அண்ணா அதைப்பற்றி போட்டார் ஆகவே அதை இங்கு சேர்க்கலை :)

   Delete
 4. வெளிநாட்டில் பிறந்து மற்றைய தேசத்தில் போய் சேவை செய்ய அன்னை தெரேசா போல மனசும் வேண்டும் துணிவும் வேண்டும் அது Erin Zaikis இருப்பது பாராட்டி போற்ற வேண்டிய முன்னுதாரணம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நேசன் ..சேவை செய்யவும் ஒரு மனம் வேண்டும் அது சிலருக்கே அமையும்

   Delete
 5. முதல் செய்தி 'அட, பரவாயில்லையே' சொல்ல வைக்கிறது. சமீபத்தில் எங்கள் காம்பவுண்டில் வளரும் சில நாலு கால்களை அள்ளிக்கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்து போட்டுப் போனார்கள். அதில் சில காதில் புழு, உடம்பில் காயம் என்று அல்லாடிக் கொண்டிருக்க, தன்னார்வ விலங்கு ஆர்வலர்கள் சிலர் அவற்றை தினசரி வந்து கவனித்துச் சரி செய்தார்கள்.

  இன்னொன்று உடம்பு முடியாமல் படுத்த படுக்கையாகி விட, ப்ளூ க்ராஸுக்கு தொலைபேசியபோது, 'வீட்டில் வளர்க்கப்படுவதா?' என்று கேட்டார்கள். இல்லை என்றேன். வீட்டில் வளர்ப்பதாக இருந்தால் வர மாட்டார்கள் என்று ஒரு நண்பர் பின்னர் சொன்னார். உடனே வந்து விடுவதாகச் சொன்னாலும் நான்கு நாட்கள் கழித்துதான் வந்தார்கள். அந்த நான்கு நாட்களும் அந்த நாலு காலை அவ்வப்போது துணியில் வைத்துப் படுக்க வைத்து நிழலுக்கு மாற்றி தண்ணீரும், பாலும் ஒரு நாளைக்கு ஒரே ஒரு ப்ரெட் துண்டும் (அவ்வளவுதான் சாப்பிட்டது அது) கொடுத்து வந்தேன். மறுபடி மறுபடி தொலைபேசி ஒரு வழியாக வந்து கொண்டு அது!  .நெகிழ்த்தும் ஹெமி.

  ஜெஸ்ஸி ஆச்சர்யப்படுத்துகிறது.

  எரின் செய்தியை பாஸிட்டிவ் செய்திக்கு எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தாராளமாக எடுத்துக்கோங்க .அந்த லிங்கில் இன்னும் பல தகவல்கள் இருக்கு பாருங்க

   Delete
  2. இலவச அறுவை சிகிச்சை யில் நாலுகால் ஜீவன்கள் மிகவும் அவதிதான் படுகின்றன ..ஆபரேசன் முடிந்து குறைந்தது காயம் ஆற 5 நாட்கள் ஆகும் அதற்குப்பின் விட்டால் நல்லா இருக்கும் ..
   எனக்கே இந்த வெளிநாட்டு பூனைகளை கண்டால் வியப்புதான் ! ..என் கணவர் வரும் நேரம் ஜெசிக்கு தெரியும் ..ஜன்னலில் அமர்ந்து பர்ர்திட்டே இருப்பா ..இவர் கார் வந்ததும் மாடியில் இருந்து உருண்டோடி முன் கதவுக்கு வரும் கிட்டத்தட்ட நாய்கள் போலதான் இவ்வூர் பூனைகளும்

   Delete
 6. ரெமி பற்றிய பதிவு நெகிழ்வு என்றால், கருவாண்டி கதை புன்னகை..மீள் சுழற்சி சோப் இன்னும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..கருவாண்டி ஜெஸியின் நண்பன் :)

   Delete
 7. நிறைவாய் செய்திகள்...
  சுந்தர சோப்பு நல்லதொரு செயல்... அவர்களை வாழ்த்துவோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..அதேதான் நானும் யோசிச்சேன் குப்பைக்கு செல்வதை விட இப்படி பயன்படுவது நல்லது

   Delete
 8. மைக்ரோசிப்பிங் ..புதிய செய்தி...
  என்ன ஒரு நட்பு ...

  பாராட்டப்பட வேண்டிய செயல் ..மீள் சுழற்சி சோப்பு..

  அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா ..மைக்ரோ சிப்பிங் முக்கியமா நம்மூரில் வாயில்லா ஜீவன்களை வளர்த்து பாதியில் ரோட்டில் விடரவங்களை சிலரை ட்ரேஸ் செய்ய உதவும் ,இங்கே அப்படி மாட்டினா மீண்டும் pets வளர்க்க தடா போடுவாங்க

   Delete
 9. பூனை விஷயம் நெகிழ்சியாக இருக்குது !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ .. பூனைகளுக்கும் இவ்வளவு அன்பான்னு யோசிப்பேன் நானும்

   Delete
 10. மிகவும் ஆச்சர்யமளிக்கும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. நிறைந்த விஷயங்களுடன் பதிவு மிளிர்கின்றது..

  ஜெஸியின் புத்திக் கூர்மை வியப்பு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா

   Delete
 12. வணக்கம்
  இப்படியான செயலை மனிதனுக்கும் வைத்தால் கண்டு பிடிப்பது இலகு ஒவ்வொரு தகவலும் சிறப்பு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரூபன் ..விரைவில் மனிதருக்கும் வரலாம் :)

   Delete
 13. சுந்தரா சுந்தரமாக இருக்கிறதே சகோ/ஏஞ்சல்...மிக மிக அருமையான வித்தியாசமான சிந்தனையால் ஒரு நன்மை இல்லையா? நல்ல சேவை. வாழ்க வளர்க சுந்தரா சேவை!!! அந்த சோப்பு..

  நாலுகால் செல்லங்கள் தொலைந்து போனால் எப்படியும் வீட்டைக் கண்டுபிடித்து வந்துவிடுகின்றார்கள். சிலசமயம் நாட்கள் மாதங்கள் ஆகலாம். ஆனால் மோப்பம் பிடித்து வந்துவிடுவார்கள். அந்தச் சம்பவம் மனதை நெகிழ்த்திவிட்டது
  (கீதா: ஹப்பா 4 வருடங்கள் குழந்தை அலைந்திருக்கிறது...பாவம்...எனக்குக் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது அதை வாசித்த போது. இறுதியில் சேர்ந்துவிட்டதே....மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது..)

  (கீதா: இங்கு மகனின் கிளினிக்கில் மைக்ரோ சிப் பொருத்துகிறார்கள். இங்கிருந்து வெளிநாட்டுக்காரர்கள் சிலர் இங்கிருந்து ஸ்ட்ரே நாலுகால் செல்லங்கள் நாயகர்களையும், பூனையர்களையும் அவர்கள் ஊருக்கு தத்தெடுத்துச் செல்லும் போது அதற்கான ப்ரொசீஜர்ஸ் நிறைய உள்ளதால் அதை எல்லாம் இவர்கள் செய்து கொடுக்கின்றார்கள். அதில் ஒன்று இந்த மைக்ரோ சிப் பொருத்துதல். அதையும் செய்கின்றார்கள். அங்கு இந்த மைக்ரோ சிப் பொருத்துதல் நல்ல விஷ்யம். அமெரிக்காவிலும் செய்கின்றார்கள்.

  செல்லம் ஜெசி காரெக்டர் மைண்ட் வாய்ஸ் ஹஹஹ செம....அது போல ஏஞ்சல் காரெக்டர் செம...அருமையான டயலாக்ஸ்..ஜெசி அட்டகாசம்தான் இல்லையா...மிகவும் ரசித்தோம் அப்படியே காட்சியாகப் பார்த்து அவள் அப்படிப் பேசிவருவதைப் போல...ஹஹஹஹ்..சிரிப்பு வந்துவிட்டது...

  அருமையான பதிவு..

  ReplyDelete
  Replies
  1. ஜெசியுடன் எனக்கு தினமும் புது புது அனுபவம்தான் :)
   இங்கே பலவிதமான மக்கள் இருப்பதால் குறிப்பா இந்திய பாகிஸ்தானியர் வீடுகளை திருடர்கள் டார்கிட் செய்வாங்க ..படபடன்னு கதவு தட்டவும் நான் பயந்தே போனேன் !

   மைக்ரோ சிப் இங்கு இப்போ கட்டயாமாக்கிட்டட்டாங்க நல்லதுதான் யாரும் செல்லங்களை abandon செய்ய முடியாது ..ம்ம் எனக்கு ரோட்டில் எதாச்சும் பூனை/நாய் சுற்றினாலே பதறும்

   உடனே rspca விற்கு போன் போடுவேன் ..சில நேரம் அவை நார்மலா கவே சுற்றுன்கலாம் சுவர் /வெளி தாண்டி குதித்து ..
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா அண்ட் துளசி அண்ணா

   Delete
 14. மைக்ரோ சிப் வைக்க எவ்வளவு செலவானது என்பதையும் குறிப்பிடிருக்கலாம்
  அப்புறம்
  சுந்தரா அசந்தரா ...
  தொடருங்கள்

  ReplyDelete