அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/21/16

Loud Speaker ..40 உலக வன நாள் மற்றும் பிற செய்திகள்

இன்றைய ஒலிபெருக்கி செய்திகளில் ..உலக வன நாள் , தடை செய்யப்பட்டுள்ள கூட்டு மருந்துகள், பார்வையிழந்த மனைவிக்காக வாசமிகு மலர்த்தோட்டம் அமைத்த ஜப்பான் கணவர் ...

21.03.2016
--------------

இன்று உலக வன நாள் .
====================
வனத்தைக் காப்போம் வளம் பெறுவோம்!

வறுமையிலும் முதுமையிலும் மற்றும் இன்னபிற சூழல்களிலும் தளராமல் தங்களால் இயன்றவரை மரங்களை நட்ட இன்னும் நட்டுவரும் இயற்கை காவலர்களை ஆர்வலர்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம் ,தமது கொள்கைகளால் நம்மோடு வாழ்ந்து வரும் மறைந்தநம்மாழ்வார் அய்யா..சாலமருத திம்மக்கா, பசுமை ஆர்வலர் "அரச மர பாபா ",ஜாதவ் பயாங் ,மகேந்திர பாபு பசுமையை போதிக்கும் தமிழாசிரியர்!,சேலம் பியூஷ் மனுஷ் ,பிஷ்னோய் கிராம மக்கள் ,கேரளாவின் அப்துல் கரீம் அய்யா ..ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா,கால்நடைப் பராமரிப்புத்துறையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற டாக்டர் ராமதாஸ் .கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றும் பசுமைக் காவலர் ‘ம.யோகநாதன்’.வன தேவதை ..சூர்யமணி பகத் ,குத்புதின் கான் , விதைக்கலாம் குழுவினர்,பெண் குழந்தை பிறப்பிற்கு மரம் நடும் பிப்லான்த்ரி கிராம மக்கள் ,‘மரம் தங்கசாமி, பசுமைகாவலர்..பிறந்த நாள் காது குத்து மற்றும் பிற வைபவங்களுக்கும் மரக்கன்று நடும்  மரங்களின் தந்தை முல்லைவனம்,, மதுக்குளம் திருவள்ளுவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மிதுன் சாய் .. 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ள நடிகர் விவேக்,பள்ளி கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேலும் இங்கு குறிப்பிடாத மரக் காவலர்கள் பலர் உண்டு ..அனைவரையும் வாழ்த்துவோம்..
இவர்கள் அனைவரைப்பற்றியும் பசுமைவிடியல் முகபுத்தகத்தில் பகிர்ந்து உள்ளேன் சிலரை இங்கும் முந்தைய பதிவுகளில் குறிபிட்டுள்ளேன் ..
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பென்சிடில், கோரக்ஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு தடை
=========================================================

பென்சிடில் எனும் அமெரிக்க தயாரிப்பு மருந்து பல நோய்களுக்கு ஒரே தீர்வு எனும் விளம்பரத்துடன் இத்தனை நாள் விற்பனையில் இருந்தது .இந்த இருமல் மருந்தில் கோடைன் எனும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது ..

இந்த மருந்து இருமல், சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, உடல் வலி என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது!!??? மேலும் மத்திய அரசின் தடைக்குப் பிறகு விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை (பி&ஜி)நிறுவனம் நிறுத்தியுள்ளது.

விற்பனையில் உள்ள பல கோடைன் சேர்த்த மருந்துகள் பார்மசியில் மருந்து சீட்டு இன்றியே விற்பனையாகின்றன. இந்த கொடேன் சேர்த்த மருந்துகள் பலரால் போதை ஏற்படுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன ..பரவச நிலை மற்றும் போதையூட்டும் /மயக்கமூட்டும் உணர்வுகள் போன்றவற்றிற்காக இளம் வயதினர் இதற்கு அடிமையாகியுள்ளனர் .

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல சிறார்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது !?
சிலருக்கு ஒரு நாளுக்கு இரண்டு பாட்டில் சிரப் குடிக்கவில்லையென்றால் கை கால்கள் நடுக்கமெடுக்கும் ..அப்படி என்னதான் இருக்கு இந்த சிரப்பில் என்று ஆராய்ந்தபோது 
இந்த போதை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு காரணம் அதில் உள்ள கோடைன் பாஸ்பேட். இது அபின் தயாரிப்பின் மூல மருந்து. இந்த 

கோடைன் சேர்த்த மருந்துகளின் பக்க விளைவுகள் 
----------------------------------------------------------------------------

வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் ; அயர்வு , குழப்பம் ; சிறுநீர்கழிவு , ureteric அல்லது நிணநீர் பிடிப்பு , சிறுநீர் தேக்கம் சிரமம் ; உலர்ந்த வாய் , தலைச்சுற்று, வியர்வை, முக சிவந்துபோதல், தலைவலி , தலைச்சுற்றல் , இதயத் துடிப்பு குறைவு, அதிக இதயத் துடிப்பு, படப்படப்பு, குற்றுநிலை , தாழ்வெப்பநிலை , உளைச்சல், மனநிலை மாற்றங்கள், ஆண்மை குறைவு ,மாயத்தோற்றம்.

மேலும் இதற்கு அடிமையானோரிடம் காணப்படும் விளைவுகள் 

கடுமையான உயர் இரத்த அழுத்தம் , மயக்க உணர்வு, பித்தம்  , தசை கட்டுப்பாடு , கோமா , வலிப்பு,.

அளவுக்கதிகமாக இந்த மருந்துகளை போதைக்காக உண்ட ஒருவர் தற்போது சிகிச்சை பெற்றும் இன்னமும் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுகிறார். அளவுக்கதிகமான இந்த சிரப் குடல்களை பாதித்ததால்இவரால் உணவே எடுத்துக் கொள்ளாத நிலை. உணவு வயிற்றை அடைந்ததும் எரிவது போன்ற உணர்வு ஏற்படுகிறதாம் . பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் போதைக்காக மருந்துகளை எடுத்ததே இதற்கு காரணம் .

பென்சிடில் ,கோரேக்ஸ் போன்ற மருந்துகளை நமது பக்கத்து நாடு பங்களாதேஷ் தடை செய்திருக்கிறது. 

ஆனால் 

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பல ஆயிரக்கணக்கான இந்த இருமல் மருந்துகள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனையாகின்றன .ஏற்கனவே பங்களாதேஷ் இந்த மருந்துகள் உற்பத்தியை மற்றும் சட்ட விரோத கடத்தலை தடை செய்ய சொல்லி இந்தியாவை அறிவுறுத்தியுள்ளது ..

இந்திய மருந்துச் சந்தைகளில் மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான சேர்க்கைகளில் மருந்துகள் புழங்கி வருவது பற்றி ஏற்கெனவே நிறைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் Vicks Action 500 Extra, Corex and Phensedyl உட்பட 350 அதீத மருந்துக் கலவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
..
மருந்துகள் மருத்துவரால்பரிந்துரைக்கப்படவேண்டுமேயன்றி .ஒரு மணிநேர விளம்பர கால்ஷீட்டுக்கு ஆயிரம் லட்சகணக்கில் பணம் வாங்கி அரிதாரம் பூசிய விளையாட்டு வீரர்களாலும் நடிகர்களாலும் தொலைக்காட்சி பத்திரிக்கை போன்றவற்றில் விளம்பரபடுத்தி பொதுமக்களைஅடையக்கூடாது !! ..


அரசு இப்போதாவது 350 க்கும் மேற்பட்ட மருந்துகளை தடை செய்துள்ளதே அதே வேகத்தில் அத்தனை மருந்துகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டால் நல்லது .
மேலும் செய்திகளுக்கு 
http://www.techtimes.com/articles/140831/20160315/india-bans-more-than-300-combination-drugs.htm


------------------------------------------------------------------------------------------------------------
Toshiyuki and Yasuko Kurokiடோஷியுகியும் அவரது மனைவி யசுகோ குரோக்கியும் முறையே வயது 80,70 ஆகிறது இருவருக்கும் .திருமணமாகி சுமார் 30 ஆண்டுகள் வரை இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசியது இவர்களுக்கு என 60 பசு மாடுகளும் ஒரு கால்நடை பால் பண்ணையும் இருந்தது திடீரென யாசுகொவிற்கு 52 வயதாகும்போது நீரிழிவு வியாதியின் தாக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு முற்றிலுமாக பார்வையிழக்க நேரிட்டது .பார்வையிழந்த நாள்முதல் யாசுக்கோ தன்னை வீட்டின் ஒரு அறையிலுள்ளே அடைந்து தன்னை வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டாராம் ..
மனைவியின் இந்நிலை கணவருக்கும் மிகுந்த வருத்தமாம் .ஒரு நாள் இவர்களது பண்ணையில் ஷிபசாகுரா Shibazakura எனும் பிங்க் நிற மலர் பூத்திருப்பதை டோஷிகி கண்டார் .இந்த மலர்கள் மிகுந்த மணம் உள்ளவை .பாய் விரித்தார்போளிருக்கும் தோட்டமுழுதிலும் வளர்ந்திருக்கும்போது .இந்த அழகிய மலரை மனைவியால் கண்ணாரக்கண்டு இரசிக்க முடியாது என்பதை அறிந்த டோஷியுகி அதன் நறுமணம் மனைவிக்கு சென்றடைய வேண்டும் அதனை அவர் உணர வேண்டும் மேலும் அறையில் அவர் வாழ்க்கை முடங்கக்கூடாது என்பதற்காக தோட்ட முழுதும் ஷிபாசகுரா செடிகளை நட துவங்கினாராம் .தனது பால் பண்ணையையே மலர் தோட்டமாக மாற்றிவிட்டார் .சுற்றுலா பயணிகள் ஷிபா சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தில் அவரது இடத்துக்கு வருகை புரிந்தனர் .இப்போது மலர்களின் வாசம் அறையில் அடைந்து கிடந்த யசுகோவை அறையை விட்டு வெளியே வந்து இயற்கையை சுவாசிக்க வைத்தது ..அவரது வாழ்வில் ஷிபாசகுரா மலர்த்தோட்டம் வசந்தத்தையும் சந்தோஷத்தையும் திருப்பி கொண்டு வந்தது ..யசுகோ சுற்றுலா பயணிகளுடன் வெளியில் வந்து உரையாடி மகிழ்கிறாராம் ஒவ்வொரு சீசனுக்கும் .கடந்த 25 வருடங்களாக இந்த மலர் தோட்டத்துக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதமுதல் சுமார் 7000சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இந்த அன்பினால் உருவாக்கப்பட்ட மலர்வனத்தை கண்ணார கண்டு களிக்க !!.....
========================================================================
..ஒரு சமையல் குறிப்பு :))

மாங்கா இஞ்சி குழம்பு 
---------------------------------------
ரெசிப்பி உபயம் மேனகா 

மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் :)

11 comments:

 1. வன நாளுக்காக இந்த சிறப்பான மனிதர்களை அறிமுகப் படுத்தியதர்க்கு நன்றி ..

  கொடுமை ...இந்த மருந்தின் பட்டியலை வசிக்க வேண்டும்  டோஷியுகியும் யசுக்கோ வும் ...அடடா அழகு ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு:)

   Delete
 2. இன்று உலக வன நாள். வனத்தைக் காப்போம் வளம் பெறுவோம்!

  மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. படங்களும் செய்திகளும் சூப்பர்.

  சூப்பரோ சூப்பரான, கடைசியில் காட்டியுள்ள மாங்கா இஞ்சி இன்னும் பிஞ்சாக, பசுமையாக இருக்க வேண்டும். இது என்னவோ காஞ்சுபோன சாதா இஞ்சிபோல இங்கு காட்டப்பட்டுள்ளது.

  எனினும் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே கொஞ்சம் காய்ந்த வெரைட்டி மாங்கா இஞ்சி தான் கிடைச்சது அண்ணா :)

   Delete
 3. வணக்கம்
  தாங்கள் சொல்லிய ஒவ்வொருதகவலும் சிறப்பு படித்து மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. முதல் செய்தி - வாழ்த்தப் பட வேண்டியவர்கள்.

  இரண்டாம் செய்தி - எங்கள் ப்ளாக்கிலும் இந்தக் கவலை இன்று அல்லது நாளை தெரிவிக்கப்படப் போகிறது!

  மாங்கா இஞ்சிக் குழம்பு எங்கள் வீட்டில் எதிர்ப்பால் அல்லது புறக்கணிப்பால் கைவிடப்பட்ட ஒன்று!

  ReplyDelete
 5. கண்டிப்பா பாராட்டப்பட,வாழ்த்தப்படவேண்டியவர்கள் அத்தனை பேரும்.
  மருந்து பற்றிய தகவல்கள் வாசிக்க பயம்தான் வருகிறது. நாம் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் கொஞ்சமேனும் சுகயீனங்களை தவிர்க்கலாம்.
  அன்பான கணவர். அழகான பிங்க் பூக்கள்.
  நல்ல தகவல்கள் அஞ்சு.நன்றி.

  ReplyDelete
 6. எப்படித் திரட்டுகிறீர்கள் இத்துணைத் தகவல்களையும்
  அசத்தல்
  காதல் பண்ணை அருமை ..

  அதுவும் சுற்றுலாப் பயணிகள் வரும் வண்ணம் இருப்பது
  நமது ஹிந்தித் திரைப்படம் ஒன்றின் நினைவு வந்தது ...

  ReplyDelete
 7. முதல் செய்தியில் அனைவரும் வாழ்த்தப்படவேண்டியவர்கள்...

  இரண்டாவது ஆம் ஏஞ்சலின் நிறைய மருந்துகள் தடை செய்யப்பட்டும் உலா வருகின்றன இங்கு. பெய்ன் கில்லர்ஸ் உட்பட. ஒவ்வொரு வருடமும் தடைசெய்யப்படும் மருந்துகள் வெளியிடப்படும் ஆனாலும் அவை புழக்கத்தில் இருக்கின்றன. மெத்தனம்தான்...அதுவும் பாமரமக்கள் பலர் வாழும் ஊர் இது...ம்ம் அதுவும் காலாவதியான மருந்துகள் விற்க்கப்படுகின்றன....அவற்றை புனர்ஜென்மம் கொடுத்தும் விற்கின்றனர்...மிகவும் வேதனை..விழிப்புணர்வு அவசியம்

  ஆஹா அன்பான கணவர்....மனைவி...தோட்டம் அழகு!!

  மா இஞ்சிக் குழம்பு அரைத்துச் செய்வதில்லை துண்டு துண்டாகக் கட் செய்து வதக்கி...இப்படியும் செய்து பார்த்துவிடுகிறேன்...

  நன்றி ஏஞ்சலின் பகிர்விற்கு அழகான பதிவுகளாகத் தருகின்றீர்கள்.

  கீதா

  ReplyDelete
 8. பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள் .

  ReplyDelete