அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/4/16

Loud Speaker ...38

இன்றைய ஒலிபெருக்கி செய்திகளில் Flash நியூஸ் ..International Space Station..நாசாவிற்கு பயணிக்க இருக்கும் பிரபல வலைப்பதிவர்களின் செல்லங்கள் ,உணவை சூடாக்க உதவும்  ஸ்மார்ட் போன் ,வாழை நாரில் லாமினேட் போர்ட் மற்றும் தேநீர் மேசை ,,தோட்டக்குறிப்பு ..நாசாவிற்கு பயணிக்க இருக்கும் பிரபல வலைப்பதிவர்களின்
------------------------------------------------------------------------------------------------------------- செல்லங்கள் :)
-------------------------
மேற்கண்ட பதிவில் கீதா செல்லங்களின் நாசா பயணம் பற்றி  சொன்ன செய்தியை உறுதிப்படுத்துகிறேன் :)
Purrington Post 04 MAR 2016செய்திதாளிலேயே வந்து விட்டது பதிவர்களின் செல்லங்கள் கீதாவின் கண்ணழகி துளசி அண்ணாவின் டைகர் கரந்தை அண்ணாவின் ஜூலி ,துளசி அக்காவின் ரஜ்ஜூ மதுரை தமிழனின் சன்னி மற்றும் என் செல்லம் ஜெஸி ஆகியோர் ஸ்பேசுக்கு செவ்வாய் கிரகப் பயணத்திட்டத்தில் செல்லவிருப்பது உறுதி ஆகிவிட்டது ..

செய்திதாள் கட்டிங் இங்கே :)

மஹியின் ஜீனோவும் அதிராவின் டேய்சியும் இமாவின் செல்லங்களும்  இப்பதான் ஸ்கூலுக்கு போறாங்க அவங்களும் விரைவில் பயணிக்கலாம் ..ஜெர்மன் அரசியலில் இளமதியின் மீரா பிசியாக  இருப்பதால் மீராவால் இவர்களுடன்  பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை !!

//
Jessie is the UK'S first cat-
astronaut and the first British Asian
astronaut to go to the International
Space Station ! On the ISS she
will conduct experiments along with
her colleagues .Sunny from US and
kannazhagi, Tiger , ,julie from INDIA
and Rajjo From New Zealand  will take part in this mission.
.Jessie ,Rajjoo and the other astronauts from India
will study the understanding of distant
 celestial bodies.life in mars . whereas sunny
from US the astronaut will explore
and would be controlling variables in
an experiment, observing & recording
data in his experiments about Newton's
3rd law using Rolling pin .....//

நல்லா வாசிச்சு பாருங்க செய்தியை எல்லா பதிவர்களின் செல்லங்களும் மார்ஸ் இல் உயிர் வாழ்வதெப்படி celestial bodies பற்றி ஆராய்ச்சி செய்யபோறாங்க ..சன்னி மட்டும் அங்கேயும் பூரிக்கட்டையில் ஆராய்ச்சி செய்ய போதாம் :)))) 

------------------------------------------------------------------------------------------------------------
உணவை சூடாக்கும் ஸ்மார்ட் போன்
------------------------------------------------------

ஸ்மார்ட் போன்களின் பெருக்கத்தால் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் கூட மக்கள் நேரம் செலவிட முடிவதில்லை என்பதே உண்மை ..
ஒரு குடும்பம் டின்னர் சாப்பிட ரெஸ்டாரன்ட் சென்றால் அங்கும் மேசையில் அமர்ந்தவுடன் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிடும் ..
எனக்கு பிடிக்காத விஷயம் ஆலயங்களிலும் கோவில்கள் வழிபாடுதலங்களிலும்  மக்கள் போனுடனே இருப்பது :( ..ஒருவர்  இறந்தப்போ இறுதி பயணத்துக்கு முன் ஜெபம் நடக்குது அந்நேரத்தில் ஜெபித்துகொண்டிருக்கும்  ஆயரின் கைப்பேசி சத்தமா ஒலிக்குது ..இது சில வருடமுன் ..இப்போ இன்னும் மோசமா இருக்காம் சென்னையில் ..சின்ன குட்டிஸ் கையிலும் மொபைல் போன் !
குடும்பமாக வெளியே சென்று உணவருந்தும் நேரத்தில் அந்த அன்பான தருணத்தை ஸ்மார்ட் போன்கள் அபகரிக்ககூடாது என்று  இப்போ நம்ம தைவான் நாட்டு நண்பர்கள் இதற்க்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளார்கள் ..தைவானில்  உள்ள ஒரு IKEA ரெஸ்டாரண்டில் .அந்த ரெஸ்டாரண்டில் உள்ள மேசைகளை வித்தியாசமாக வடிவமைத்து உள்ளார்கள் ..அதாவது உணவு பாத்திரங்களில் கொண்டு வந்து மேசையில் வைப்பார்கள் அந்த உணவு சூடா இருக்கணும்னா ..சாப்பிடறவங்க தங்களது ஸ்மார்ட் போன்களை மேசையில் உள்ள மையப் பகுதியில் வைத்து விட வேண்டும் அப்போது உணவு சூடாகும் ..(The table features a heating component, which rises up from the center. On the heating component, a pot is placed with food inside. The component will only turn on if the diners put their phones in the space underneath, and their food will only heat up enough if everyone hands over their phones. As a result, diners are giving attention to their companions, instead of their devices.)


அதைபற்றிய காணொளி இங்கே 
இதேபோல இன்னொரு கண்டுபிடிப்பு The Dolmio Pepper Hackerசாப்பிடும் நேரத்தில் சாதாரண கையால் மிளகு  அரைக்கும் இந்த கிரைண்டரில் மறைவாக  வைக்கப்பட்டுள்ள ஒரு சுவிச்சை அழுத்தினால் போதும் WIFI ,டிவி போன் ஆகியவற்றின் கனெக்க்ஷன் துண்டிக்கப்படும் !!
அப்படியே யாராவது புத்தகத்தை  மூடி வைக்கிறதுக்கு இப்படி ஏதாவது கண்டுபிடிச்சா நல்லா இருக்கும் !!எங்க மகள் சாப்பிடும்போதும் புக் வாசிக்கிறா ..

------------------------------------------------------------------------------------------------------------


வாழை நாரில் லாமினேட் போர்ட் மற்றும்  மேசை
-----------------------------------------------------------------------------


வாழை மரத்தில் குலை தள்ளியதும் அறுவடைக்குப்பின் வெட்டி விடுவார்கள் அது அழுகி அளவுக்கதிகமான  மீத்தேன் வாயுவை கார்பன்டை ஆக்சைடா வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.ஒவ்வொருமுறையும் வாழை மரங்கள் எரிக்கப்பட்டு சிதையும்போதும் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும் .இதனை தவிர்க்க மொனாக்கொவை சேர்ந்த http://www.beleaf.tm.mc/en/veneer.php நிறுவனம் ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளது ..வாழை அறுவடைக்குப்பின் மரத்தின் தண்டுபகுதிகளை
வெட்டி முறையாய் தட்டி பதப்படுத்தி விலை குறைந்த மரத் தகட்டின் மீது ஒட்டப்படும் நல்ல வகை லாமினேட் (VENEER)மரத் தகடுகளாக்குகிரார்கள் .
இவை நீர் உரிஞ்சா தன்மையுடனும் மேலும் நெருப்பினால் பாதிக்காவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன ..

இந்த மேசையும் வாழைத்தண்டு நாரிலிருந்து உருவாக்கப்பட்டது

------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுத் தோட்டகுறிப்பு 
---------------------------------
பசலைக்கீரை ...இப்படி சமையலுக்கு வாங்கி வந்ததை வேர் பகுதியை ஒட்டி (இரண்டு அங்குலம் ) கொஞ்சம் இடைவெளி விட்டு வெட்டி எடுத்து தொட்டியில் நட்டால் மீண்டும் புதிய பசலைக்கீரை செடி மூன்று வாரத்தில் வளரும் .வீட்டில் தொட்டியில் வளரும் இலைகளை மட்டும் சமையலுக்கு பயன்படுத்தினால் அதே வேர்செடியை மறுபடியும் பயன்படுத்தலாம் .

மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ...

========================================================================


24 comments:

 1. அனைத்தும் பயனுள்ள + ஆச்சர்யமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. செவ்வாய் கிரஹத்திற்குச்செல்ல ’நாஸா’வினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூனைகளில், பதிவுலகில் பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்டுள்ள முக்கியமானதோர் பூனையைக் (பூசாரைக்) காணோமே ????? :)

  ReplyDelete
  Replies
  1. ஹ அஹா :) வாங்க கோபு அண்ணா ! நாசா பயண திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அனுமதி இல்லையாம் ஆதலால்தான் அந்த பிரபல பூனை பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுக்க சென்று விட்டது ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
  2. நான் வரமாட்டேன் நான் வரமாட்டேன் நாசாக்கு வரமாட்டேன்ன்ன்:) மேசைக்குக் கீழேதான் இருப்பேன்ன்ன்ன்ன்:)

   Delete
  3. ஹ ஆஹா :) வயசாச்சின்னு இப்பவாச்சும் ஒத்துக்கிட்டிங்களே :) குண்டு மியாவ்

   Delete
 3. ஹஹாஹஹ் நம் அனைவரது செல்லங்களும் நாசா திட்டத்தில் போகப் போவது பற்றி தாங்கள் சொல்லி இருக்கும் விதம் அருமை ஏஞ்சல். ஜெஸ்ஸிக்கு வாழ்த்துகள். இந்தச் செல்லங்களை அவர்கள் அனுப்பப் போவது பற்றி ஆலோசித்துவருவது பற்றி அறிந்ததால்தான் அப்படிச் சொல்லியிருந்தேன்.ஆனால் உறுதியாகாததால் உட்டான்ஸ் என்று சொல்லியிருந்தேன். அப்புறம் யாராவது செய்தியை மறுத்துவிட்டால்..ஹஹஹஹ் அதான். அது சரி சன்னி மதுரைத் தமிழனின் செல்லம் சன்னி என்பது இப்போது தெரிந்தது. எங்கள் பதிவில் செல்லம் என்றுமட்டுமே. சன்னியின் வேலை அஹஹஹஹ்ஹ செம...ரொம்ப சரியா சொன்னீங்க.. ரஜ்ஜுவையுன் விட்டுவிட்டோம். அப்புறம்தான் நினைத்துக் கொண்டோம் அடடா துளசி சகோவின் ரஜ்ஜுவை விட்டு விட்டோமே அது கோச்சுக்கப் போகுதேனு. துளசி சகோவிடம் கேட்க வேண்டும் ரஜ்ஜு என்ன சொல்லுதுனு. உங்கள் விவரணம் செம ...

  பாலக் கீரை அப்படி நடுவதுண்டு நன்றாக வருகின்றது ஏஞ்சல்..

  வாழை நார் அசத்துகிறது அந்த லாமினேட்டட் போர்ட், மேசை எல்லாம்...சூப்பர்.

  ஸ்மார்ட் ஃபோன் ம்ம்ம் னீங்கள் சொல்லுவது போல் ம்ம், உறவுகளைத் தொலைத்து விடும் அபாயம்...அட சூடாக்குதே...ம்ம் என்னும் எத்தனையோ!!!

  மிளகு அரைக்கும் க்ரைண்டரில் வைஃபை ம்ம்ம்.டெக்னாலஜி எப்படி எல்லாம் போகுது....முன்னர் இப்படி வரும் என்று வாசித்ததுண்டு. அதாவது வெளியில் செல்லும் போது வீட்டில் அணைக்க மறந்தவற்றை எல்லாம் ரிமோட்டில் அணைத்துவிடலாம் என்று...

  அருமை எல்லாமே...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) கீதா அண்ட் துளசி அண்ணா காலையில் பதிவு பார்த்ததும் சட்டென்னு தோணிச்சி நியூஸ் ஜெனரேட்டர் இல் போட்டு பேப்பரை பப்ளிஷ் பண்ணியாச்சு :) தமிழில் தான் செய்ய முடியலை ..இங்கிலாந்து என்பதால் ஆங்கிலத்தில் பேப்பர் செய்தி :)
   நானா ஏற்கனவே வலைசரத்தில் பதிவர்களின் செல்லமே ..பதிவர்களின் செல்லங்கல்னு ஒரு பதிவு போட்டேன் .முந்தி ரெகுலரா எல்லார் போஸ்டும் வாசிப்பேன் அப்ப இந்த செல்லங்களின் பேர் மறக்காம நினைவு வச்சிருக்கேன் ..இதோ இந்த சுட்டியில் பாருங்க :)
   http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

   Delete
 4. ஹேய் அது யாருப்பா அந்தப் பிரபல பூனை பூசார்??? வைகோ சாரின் பூனையா??!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) கீதா கோபு சார் சொன்ன அந்த பிரபல பூனை அதிரா மியாவ் என்ற சிரிப்பு பூனை :)
   இப்போ முக புத்தகம் பக்கத்தில் விளையாடிகிட்டு இருக்காங்க :) ப்ளாகில் அவங்க தான் காமெடி அரசி :)http://gokisha.blogspot.co.uk/

   Delete
  2. யாராவது என்னைப் பற்றி இங்கின கதைக்கினமோ:) பிராண்டிப்போடுவேன் அஞ்சுவை:)

   Delete
  3. எங்கே பிராண்டுங்க பார்க்கலாம் பத்து விரலிலும் வைர மோதிரம் போட்டு பிராண்டுங்க :))
   ≧◉◡◉≦

   Delete
 5. :) ஜீனோவ செவ்வாய் கிரகத்துக்கா?? ஊஹூம்...நோ சான்ஸ்!! அவ்ளோ நாளெல்லாம் விட்டுட்டு இருக்க முடியாதுக்கா!! <3

  பூஸக்காவை அனுப்ப முடியாதா?? அவ்வ்வ்வ்!!!

  பயனுள்ள பதிவு!! ஸ்பினாச்சை நானும் வளர்க்க முயற்சிக்க போறேனே..!!

  ReplyDelete
  Replies
  1. ஹ அஹா :) மஹி நீங்களும் போங்க குடும்பத்தோட ஸ்பேசுக்கு :)
   இல்லை குண்டு பூனைக்கு நோ சான்ஸ் சீனியர் சிட்டிசன்சுக்கு அங்கு இடமில்லை :)
   ம்ம் செய்து பாருங்க பசலை கீரை ..நான் நட்டு வச்சேன் ஆனா பாருங்க மார்ச் மாசம் ஸ்நொவ் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது இங்கே கர்ர்ர்ர்

   Delete
  2. என்னாதூஊஊஊ ரியுஸ்டே கிரகத்துக்கோ நோஓஓஒ மீ மாட்டேன்ன்ன் ரொக்கெட்டில நெருப்பு வைப்பினம் மீக்குப் பயம்:) அஞ்சுவுக்கு கவசம் போட்டு அனுப்புவம் எங்கட செல்லங்களைப் பாதுகாக்க அங்கின:)

   Delete
  3. கர்ர்ர்ர் ..உங்களை மார்ஸுக்கு அனுப்பனும்னு நிறையப்பேர் ஆசைப்படறாங்க .வேற வழியேயில்லை நீங்க போயி ஆகணும்

   Delete
 6. நாசா செல்லும் செல்லங்கள் குறிப்பை தில்லையகத்துத் தளத்திலும் கண்டேன்! :))

  ஆயரின் ஃபோனே அலறியது ஆச்சர்யம்தான். அவர்தான் மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்! அருகில் அமர்ந்திருக்கும் மகனையே ஒரு தாய் "சாப்பிட வர்றியா" என்று வாட்சாப்பில் கூப்பிடும் காலம்!

  வாழைமட்டையின் பயன்பாடு ஆச்சர்யம்.

  பசலைக் கீரை கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை எனக்குப் பிடித்த கீரை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..அந்த ஆயரின் போன் அலறியது எங்க அம்மாவின் இருதிபயணத்தின் போது ..நானா வெறுப்பின் உச்சத்துக்கே போயிட்டேன் ..எவ்வளவு அமைதியாக இருக்க வேண்டிய தருணம் அது :(
   இங்கே எங்கள் ஆலயத்தில் இன்னும் பல பஞ்சாபி இந்தியர்களின் கைப்பேசி லவுடா சர்வீஸ் நேரத்தில் ஒலிக்கும் ..இங்குள ஆயர் பொருது பொருது பார்த்தார் ..இறுதியில் சுவர் முழுக்க போஸ்டர் ஒட்டிட்டார் //இறைவனுடன் நாம் கழிக்கும் நேரத்தில் தொலைபேசி அவசியமில்லை //ஆலயத்துள் நுழையும்போதே சுவிட்ச் ஆப் செய்யவும் அல்லது சைலண்ட் மோடில் போடவும் என்று ..

   நவீன கண்டுபிடிப்புகள் நம் சந்தோஷத்தை அபகரிக்கின்றன என்பதே உண்மை :(

   Delete
 7. ஸ்பினாச் வளர்ப்பு முறை சூப்பர் நான் இம்முறை ட்ரை பண்ணப்போறேன்ன்ன்ன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்பினாச் பூனை :) செய்து பாருங்க தொட்டியில் க்விக்கா வளருது

   Delete
  2. இந்த முறை வாங்கிய 3 கட்டு கீரையிலும் வெறும் தண்டுகள் மட்டுமே..வேர் ஒன்றில் கூட இல்லை!! அடுத்து வேருடன் கிடைக்கையில் முயற்சிக்கணும். ஹும்ம்ம்!

   Delete
 8. அம்மாடியோ எம்புட்டு செய்தி, நாசாவுக்கு போறவாளுக்கு வாழ்த்துக்கள். நல்லா இருக்கு,,

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன் :)

   Delete
 9. வணக்கம்
  ஹா..ஹா.. நாசாவுக்கு செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிய ஏனைய தகவலும் சிறப்பு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரூபன் :)

   Delete