அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/8/16

அஞ்சலிப்பதிவு ..


அன்பு நண்பர்களே ..
நம் நட்புக்கள் அனைவருக்கும் பரிச்சியமான அன்புத்தோழி இளமதியின் கணவர் இறைவனது திருவடி  அடைந்து விட்டார் ..அவரது ஆன்ம சாந்திக்காகவும்,சகோதரி இளமதி இத்துயரத்தில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் ..ஏஞ்சலின் ..


11 comments:

 1. ஆம் ! சகோ அந்தச் செய்தியை அறிந்ததும் நம்ப முடியவில்லை. உடல் நலக் குறைவாக இருந்தார் என்பது தெரிந்திருந்தாலும். அவரது பதிவுதான் வெளியாகி உள்ளது என்று நினைத்து அம்மா துணை பதிவு வெளியானதும் பார்த்தால் அவரது மரணச் செய்தி. ஒரு மாதம் ஆகும் நிலை என்றாலும் மனம் வேதனையுற்றது. எழுதிக் கொண்டிருந்த பதிவைக் கூட அப்படியே நிறுத்திவிட்டு அந்தச் செய்தியை அறிவித்து முடித்துக் கொண்டோம். பதிவைத் தொடர முடியவில்லை. ஆன்மீகப் பதிவுகள் என்றாலும் சில சுற்றுலா கட்டுரைகளும், ஒரு சில விழிப்புணர்வுப் பதிவுகளும் கூட எழுதியிருக்கிறார். பல தளங்களுக்கும் சென்று கருத்துகள் பதிவார். அதிலும் கூட அவரது அன்பு அந்த எழுத்துகளில் மென்மையாக வெளிப்படும். துல்லியமாகவும் வெளிப்படும். நேர்மறை எண்ணங்கள்.

  அவரது மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...

  ReplyDelete
 2. எங்கள் பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 3. இந்தச் செய்தி மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.:(

  அவரது கணவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  இவர்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப பிரார்த்திக்கிறேன்.

  காலம் மட்டுமே அவர்களின் மனக்காயங்களை ஆற்றக்கூடும்.

  ReplyDelete
 4. சகோதரி இளமதி அவர்களுடைய கணவர் இறைவனது திருவடி சேர்ந்து விட்ட செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்..

  அவரது ஆன்மா இறைநிழலில் சாந்தியுறட்டும்..

  சகோதரி இளமதி இத்துயரத்தில் இருந்து திடங்கொண்டு
  மீண்டு வரவேண்டும்..

  எல்லாம் வல்ல இறைவன் ஆறுதலையும் தேறுதலையும் அளித்தருள்வானாக..

  ReplyDelete
 5. ரொம்பவும் வருத்தத்தை அளித்தது இந்த செய்தி ஏஞ்சலின்! இந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள‌வும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளவும் தேவையான மன வலிமையும் அமைதியும் அவருக்கு விரைவில் கிடைக்க என் ஆழ்ந்த பிரார்த்தனைகள்! என் அஞ்சலிகளையும் அவருக்கான என் பிரார்த்தனைஅக்லையும் அவரிடம் தெரிவியுங்கள் ஏஞ்சலின்!!

  ReplyDelete
 6. மிகவும் வருத்தம் தரும் செய்தி...:((

  அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மன ஆறுதல் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 7. சகோதரி இளமதி அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் அவரது கணவரின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் கில்லர்ஜி

  ReplyDelete
 8. மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அவர் மீண்டும் உறுதியோடு மீண்டு வர கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன் ...

  ReplyDelete
 9. நீங்கள் சகோதரியை சந்தித்தீரா ..
  துயர் தரும் இழப்பு

  ReplyDelete