அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/26/16

Loud Speaker ..37 பங்களாதேஷ் பெண் சிங்கங்கள் :)

இன்றையஒலிபெருக்கியில் ....பங்களாதேஷ் மக்களும் லண்டன் காய்கறி அலாட்மெண்டும் , ,பக்கத்து வீட்டு வஹிதா பீவி ,...

காய்கறி அலாட்மெண்ட் தோட்டம் ..
--------------------------------------------------------------
இம்முறையில் 250 சதுர அடி அல்லது  20 மீட்டர் /10 மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் (community gardens )காய்கறி வீட்டு தோட்டம் அமைத்தல்  ஆகும். இந்த நிலங்களை சொந்தமாக வாங்கி கொள்ளலாம் அல்லது மாதாமாதம் வாடகை கட்டி லீசுக்கும் எடுக்கலாம் ..சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகள் உண்டு ..ஒவ்வொரு மாதம் 30 பவுண்ட் கட்டவேண்டும் ..இங்கே நிறைய பேருக்கு வீட்டில் பெரிய அளவில் தோட்டம் இருந்தாலும் இப்படி அலாட்மெண்ட்டில் காய்கறி தோட்டமும் உண்டு .
அடுக்கு மாடிகளில் வசிப்போர் இப்படி அலாட்மெண்ட் வாங்கி வைத்துள்ளார்கள் .சில தோட்டங்களில் மேட்டுபாத்தி ,no dig கார்டன் எனும் raised bed தோட்டங்கள் மற்றும் வைக்கோல் தட்டு தோட்டம் என விதவிதமா இருக்கும் ..சம்மர் ஆரம்பிச்சா எல்லாரும் போய் விடுவார்கள் தங்கள் அலாட்மெண்ட்சுக்கு ..நம்ம நாட்டில் கல்கத்தாவில் இப்படி கம்யூனிட்டி தோட்டங்கள் இருக்கின்றன .

இங்கே பஞ்சாபியர் குஜராத்தியர் பங்களாதேஷ் பாகிஸ்தானியர் அதிகம் இருக்கும் பகுதிகளில் நம்ம நாட்டு காய்கறிகள் அதிகம் விளையும் தோட்டம் இருக்கும் .
லண்டனில் மக்கள் தொகை அதிகம் மேலும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆனாலும் அங்குள்ள வங்காளிகள் சின்ன இடம் கிடைத்தாலும் அதில் குறைந்தது 10 வகை காய்கறிகளை பால்கனி ஜன்னல் தொங்கும் தோட்டம் என வித விதமாக அமைத்து விடுவார்கள் ..இங்கே படத்தில் இருப்பது லண்டனில் உள்ள ஒரு பங்களாதேஷ் குடும்பத்தின் அலாட்மெண்ட் ..மேலும் படங்களுக்கு  சுட்டியில் வாசிக்கவும் 

குட்டியூண்டு இடத்தில பூசணி ,வெண்டை, பீர்கை, பாகல் ,புடலை, சுரைக்காய் ,கத்திரி ,கொத்த மல்லி ,முள்ளங்கி ,மேத்தி ,தண்டுக்கீரை ,கடுகு கீரை என பயிரிட்டு உள்ளார்கள் எல்லாமே இயற்கை முறையில் வளர்ந்தவை ..விதைகள் அவர்கள் நாட்டில் இருந்து தருவித்து மேலும் வீட்டு தேவைக்கு ஆசிய கடைகளில் வாங்குபவற்றில் இருந்து சேமித்த விதைகளை கிச்சன் ஜன்னலில் காய வைத்து அதே ஜன்னலில் குட்டி பெட்டிகளில் முளைக்க வைத்து நாற்றுக்கள் வளர்ந்ததும் வெளியில் தொட்டி மற்றும் பைகளில் நடுவார்கள்  ..இந்த அங்கக  தோட்டக்காரர்கள் அனைவருமே பெண்கள் தான் என்பது சிறப்பான விஷயம் . ..


இது அர்ஃ புல் நிசா என்பவரின்  தோட்டம் .பங்களாதேஷிலிருந்து முப்பது ஆண்டுக்களுக்கு முன்பு லண்டனில் குடியேறியவர் அலாட்மெண்ட் இல்லை இவருக்கு ஆனால் வீட்டின் பின்பக்கம் நாலு சுவர்களுக்கிடையிலுள்ள பகுதியை தோட்டமாக்கியுள்ளார் !


லண்டன் பகுதியில் தோட்டத்தில் வங்க  பெண் சிங்கங்கள் :)


இங்குள்ள ஆங்கிலேயரையே வியக்க வைத்துள்ளனர் இந்த  வங்க தேச பெண் சிங்கங்கள் :) ..ஒரு விஷயத்தை கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும் ..பங்களாதேஷ் மக்கள் மிகவும் அன்பானவர்கள் கடும் உழைப்பாளிகள் ..பெரும்பாலும் பஞ்சாபியர்  பாகிஸ்தானியர்கள் குஜராத்தியர்  ஆகியோர் இவர்களுடன் சேருவதில்லை நான்  பார்த்த வரையில் ..காரணம் மொழி மற்றும் சில பழக்கவழக்கங்கள் ..மூன்றாம் தலைமுறையினர் இப்போ முன்னேறி இருந்தாலும் பலருக்கு இன்னும் ஆங்கிலமே தெரியாது ...இன்னமும் நம்ம ஊரில்  இருக்குமே சங்கு மார்க் லுங்கி அணிந்து ரோட்டில் சர்வசாதரணமாக நடமாடும் ஆண்களை கண்கூடாக பார்த்திருக்கிறேன் பெண்களும் காட்டன் பிரிண்ட்  புடவை அணிந்தே கடும் குளிரிலும் செல்வார்கள் .இன்னும் அவர்கள் ஊரில் இருந்து கொண்டுவந்த  ரப்பர் பாட்டா காலணிகளையே அணிவார்கள் .சுருட்டு பிடிப்பார்கள் .மூக்குபொடி போடுவார்கள் ..


வஹிதா பீவி 
-----------------------
நாங்க இங்கிலாந்து வந்த புதிதில்  சுமார் 10 மாதங்கள் வேறு ஒரு வீட்டில் இருந்தோம் அது இரண்டு வீடுகள் ஒட்டி அமைந்த விக்டோரியன் அமைப்பு .பின் பக்கம் கதவு இருக்கும் கார்டன் கிச்சன் பக்கம் இருவரும் பார்த்துக்கொள்ளலாம் தோட்டம் இருவருக்கும் அருகில் இருக்கும் .அப்போது வந்த புதிதில் எனக்கு தோட்டம் அமைப்பதில் ஆர்வமில்லை ஜன்னல் வழியே பார்ப்பேன் ,வஹிதா பெரிய பானையில் தண்ணீர் கொதிக்க வைத்து அசைவ சமையல் செய்து கொண்டிருப்பார் நடு தோட்டத்தில் அடுப்பு க்ரில் அமைத்து இருப்பார் .விறகு கட்டை வைத்து நீர் கொதிக்கும் அதில் பலவகை அசைவ சமையல் நடக்கும் சம்மர் நேரத்தில் ..அவர் சமைச்சா அவ்வளவுதான் 
ஒரு நாள் முழுதும் மயக்கம்  வரும் !எனக்கு இந்த வாசனை விஷயத்தில் ஒரு பிரச்சினையுண்டு எந்த மணத்துக்கும் மயக்க மருந்து கொடுத்தாற்போல ஒரு உணர்வு வரும் எனக்கு .காரில் கூட ஸ்ப்ரே அடிக்க மாட்டார் கணவர் அதேபோல மெக்டானல்ட்ஸ் ப்ரெட் பர்கர் கியூடெக்ஸ்  வாசனை  பஜ்ஜி பொரிக்கும் வாசனை எதுவும் ஆகாது எனக்கு.

ஸ்ட்ராங்  சென்ட் மணத்துக்கும் அசைவ சமையல் காய்ந்த மீன் பொரித்தால் வரும் மணத்துக்கும் உமட்டலும் மயக்கமும் வரும் !மீன் மட்டுமில்லை சென்னான்குன்னி என்ற ஒரு வகை இறால் உண்டு அதையும்பொரிப்பார் .எங்க வீட்டு ஜன்னல் திறந்து வைக்கவே மாட்டேன் ஏனென்றால் காற்று வழியே அந்த வாசனை எங்க வீட்டுக்கு வந்துவிடும் .ஒருமுறை இவர் வீட்டு மணத்துக்கு ஒரு பிரிட்டிஷ் பெண்மணி பீப் வார்த்தையில் எங்க வீட்டை பார்த்து திட்டிக்கொண்டு சென்றார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் எப்படிப்பட்ட வாசனை என்று !..

நீங்க எல்லாரும் கம்மார் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி கொட்டை பாக்கை இடித்து பன்னீர் புகையிலை சேர்த்து சாப்பிடுவோரை மதுரைல பார்த்திருப்பீங்க தேனில  பார்த்திருப்பீங்க கோயம்பத்தூர்ல ,தர்மபுரில உளுந்தூர்பேட்டைல சிவகாசில ஏன் நம்ம சென்னைல கூட பார்த்திருப்பீங்க இங்கிலாந்தில் பார்த்திருப்பீங்களா (அப்படியே சிங்கம்  டயலாக் modulation இல் வாசிக்கவும் :))  ) நான் பார்த்திருக்கேன் இங்கே வெளிநாட்டில் .

இவர் வெற்றிலை குதப்புவதை பார்த்து மகள் என்னிடம் கேட்டா அம்மா அந்த ஆண்டி வாயில் இரத்தம் வருதே ஏனென்று ..!!..ஒரு நாள் இரவு நெருப்பு வட்டம் புள்ளியாய்  தெரியுது பயந்துட்டேன் ,,இவர் சுருட்டு பிடிசிக்கிட்டுருந்தார் இருட்டில் :)..வஹிதா முறம்/சுளகு  போல இருக்குமே ஓவல் ஷேப்பில் அதில் எல்லா பொருளையும் வைத்து கால நீட்டி பாய்விரித்து அதில் அமர்ந்து புகையிலை சாப்பிடுவார் ..நீண்ட தோட்டத்தில் தண்டுக்கீரை முளைக்கீரை ரன்னர் பீன்ஸ் உருளை எல்லாம் போட்டு வளர்த்தார் நாள் முழுதும் தோட்டத்திலேயே இருப்பார் ..ஏர்பூட்டி உழாத குறைதான் !..அவ்வப்போது ரஜினி ஸ்டைலில் இரண்டு விரல்களை வாயில் வைத்து வெற்றிலையை துப்புவார் !! அரிவாளேல்லாம் நான்  சென்னைல கூட படத்தில் தான் பார்த்திருக்கேன் இவர் தோட்டத்தில் மூன்று வச்சிருப்பார் ... ..!!....

ஒரு நாள் அவர் வீட்டில் யாருமில்லை ஒரு ரெஜிஸ்டர் போஸ்டை தபால்காரர் என்னிடம் தந்தார் ..நான் அவர் வந்ததும் கதவை தட்டி தபாலை நீட்டினேன் ..அவரது மொழியில் எதோ சொன்னார் ..எனக்கு விளங்கவில்லை அவர் மகள் சொன்னாள் //அம்மா உங்களுக்கு எதோ தரணுமாம் கொஞ்சம் இருங்க //கிச்சனுக்கு ஓடியவர் ரெண்டு முட்டைகளை கொண்டு வந்து தந்தார் என் கையில் ..அவர் மகள் சொன்னார் வீட்டில் தின்பண்டம் எதுவுமில்லை அதனால் அம்மா முட்டை தருகிறார்.எங்கள் வழக்கம் ஏதாவது கொடுப்போம் வீட்டுக்கு வந்தவருக்கு என்றாள்  !!..நல்லவேளை முட்டையுடன் நிறுத்தினாரே என்று நினைத்துக்கொண்டேன் ..அந்த ப்ரிட்ஜில் முழு மீன் இருந்தா என் நிலை என்னாயிருக்கும் !!!

இவர் பங்களாதேஷ் நாட்டு பெரிய ஆற்று மீன்களை வாங்கி பின்னாடியே தோட்டத்தில் காயவைத்து கருவாடாக்கி சமைப்பார் !அதை பொரிச்சா எங்க ஏரியாவுக்கே கருவாட்டுகடை மணம் அடிக்கும் ஒவ்வொருநேரம் எனக்கு மயக்கமே வரும் ..அந்த நாற்றத்துக்கு எங்க வீட்ல ஊதுபத்தியா கொளுத்தி வைப்பேன் அந்த ரெண்டு வாசத்துக்கும் சேர்ந்து  மயக்கமே வரும்  அப்படியும் என்னமோ எங்க வீட்ல சமைச்ச மாதிரியே இருக்கும் .எங்க வீட்டு loft இற்கும் பக்கத்துக்கு வீட்டு loft attic இற்க்கும் இடையில் உள்ள துவாரம்  வழியே அவங்க வீட்டு சமையல் மணம் எங்களுக்கு வரும் .இதில் அடிக்கடி எனக்கு தட்டு நிறைத்து உணவும் கொடுப்பார் பத்திரமா வாங்கி குப்பையில் கொட்டிடுவேன் ..கணவர் கிண்டல் செய்வார் //நீங்க என்ன கிறிஸ்டியன் அன்போடு கொடுத்தா சாப்பிடணும் ஆஹா ஓஹோன்னு ..எப்படி நான்  சாப்பிடுவேன் ..எல்லாமே அசைவம் அதுவும் கட்லா /ரோஹு/ மிருகால் போன்ற மீன்கள் அளவில் 60 செண்டிமீட்டர் நீளமும் தடித்தும் இருக்கும் நான் கிச்சனில் ஜன்னல் வழியே பார்ப்பேன் தோட்டத்தில் துவைக்கும் கல் போல ஸ்லாப்ஸ் மேலே வச்சி அப்படியே பெரிய கத்தியால் வெட்டுவார் வகிதா 1சில நேரம் கருப்பு நிறத்தில் கெண்டை மீன்கள்அல்லது நண்டுகள்  உயிருடன் துள்ளிக்கொண்டு இருக்கும் வாளியில்  .

வஹிதாவுக்கு ஒரு மகள் ஒரு மகன் .மகன் வேலைக்கு போவார்.அவருக்கும் ஆங்கிலம் தடுமாற்றம்தான்  .மகள் கல்லூரி படித்துகொண்டிருந்தார் .ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும் இந்த வஹிதா வீட்டு கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்து பாதியில் கொத்தமல்லி பறிக்க தோட்டத்துக்கு போன சமயம் மகள் மறந்து  கதவை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டாள் .வஹிதா கதவை தட்டி பார்த்திருக்கு கதவு லாக் ஆகியிருக்கவும்  பயத்தில் தரையில் உக்கார்ந்து ஓவென்று அழுகிறார் பத்து நிமிடமாக அன்று  என் கணவரும் வீட்டில் இருந்தார் ..அப்பவும் அதற்கு பேச தெரியல !பேட்டி ,பேட்டா என்று மட்டும் சொல்லிகொண்டே தரையில்  விழுந்து புரள்கிறார் !ஒரு குப்பை வாளியை எடுத்து ஏறி வீட்டில் நுழைய சைகையால் சொன்னார் பார்த்தால் உள்ளே சமையல் கியாஸ் அடுப்பு எரிவது கண்ணாடி வழியே தெரியுது !.. ஜன்னலின் மேற்பக்கம் ஒரு சிறு அளவு மேல் நோக்கி  திறந்து இருந்தது அதனுள்ளே கொஞ்சம் மெலிந்த தேகவாகு இருப்போர் நுழையலாம் நான் என் கணவரை உள்ளே நுழைய சொன்னேன் ..இவருக்கு பயம் வேறு குருட்டாம்போக்கில் எப்படி ..வீட்டுக்குள் நுழைவதென்று  திருடன் யாராவது இருந்தால் அல்லது இவரையே திருடன் என்று வெளியே சென்ற மகள் நினைத்து அடித்தால் என்னாவதென்று !அவர் பயம் அவருக்கு ஆனால என் பயம் அந்த வீடு எரிந்தாலோ கியாஸ் லைன் வெடித்தாலோ எங்க வீடும் பாதிக்கப்படும் ஒருவாறு அவரை  மிரட்டி :)ஏற வைத்துவிட்டேன் ! பாதி உடம்பு நுழைந்ததும் இவர் ரிவர்ஸ் இல் காலை உதைத்து திரும்பினார் /ஐயோ நான் மாட்டேன்  சமையலறையை கண்ணாலும் காண முடியலை அவ்ளோ அழுக்கும் குப்பையும் நிறைந்திருக்கு என்று திரும்ப பார்த்தார் !ஆனாலும் நான்  சைகையால்  மிரட்டி உள்ளே தள்ளிவிடாத குறையாய் அனுப்பி விட்டேன்..இறங்கியவர் அந்த அடுப்பை அணைத்து உள்புறம் தாளை நீக்கி கதவின் வழியே வெளியே வந்தார் ..அந்த வஹிதா சந்தோஷத்தில் செய்வதறியாமல் என் கணவர் காலில் தொபுக்கடீர்னு விழுந்து பிடித்து நன்றி சொன்னார் .fire என்ற வார்த்தை கூட சொல்ல தெரியலையேன்னு வருத்தமாக இருந்தது எனக்கு .முக்கியமான விஷயம் அன்று ஜன்னல் வழியே உள்ளே போய் வந்த என் கணவர் இரண்டு வாரத்துக்கு கிரி படத்தில் அடிவாங்கிய  வடிவேலு மாதிரியே இருந்தார் :))) சமையல் அறையில் சுண்டெலிகள் ஓடினவாம் ..அவ்வளவு அழுக்கும் குப்பையுமாம் எண்ணெய்  பிசுக்கில் வழுக்கி எழும்பினாராம் .ஐந்து நிமிடத்தில் மீண்டும் பின் கதவை தட்டினார் ..திறந்தால் கையில்  ஒரு தட்டில் நாலு ப்ளெயின் பராத்தாஸ் இருக்கு !வேகவேகமா சுட்டு எனக்கு கொண்டுவந்திருக்கார் வஹிதா !!.அன்று அந்த பராத்தாஸ் நான்  சாப்பிட்டேன் !!..

படத்தில் இருப்பது மகளும் மூன்றாவது வீட்டு சிறுவனும் ..பக்கவாட்டில் நிற்கிறாரே அவர்தான்  வஹிதா ..இது 2007 இல் எடுத்த படம் :)) சுமார் ஒரு வருடம் அந்த வீட்டில் இருந்தோம் பிறகு இந்த வீட்டை வாங்கி  மாறி வந்தபின்னும் நடு இரவில் பல நாட்கள் கனவில் அந்த குழம்பு மணம் வந்ததென்றால் பார்த்துகொள்ளுங்கள் எந்தளவு நான்  மனரீதியா பாதிக்கப்பட்டு இருப்பேன் :)..
பதிவு கொஞ்சம் பெரிதாகிவிட்டது :))மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ...
அன்புடன் ஏஞ்சல் ..
========================================================================44 comments:

 1. வணக்கம்
  ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன் சகோ

   Delete
 2. பங்களாதேஷ் பெண் சிங்கங்கள் என்றதும் கொஞ்சம் உஷாராகவே தளத்திற்குள் நுழைந்தேன்..

  பிற்பகுதியில் வஹிதா...

  அடடா.. அப்படியே இங்கு (என்னருகில்) பங்களாதேஷ் ஆண் சிங்கங்கள் (!) செய்வதன் நேர்முக வர்ணனை!..

  வங்கதேஷிகள் செய்யும் சமைப்பதே - அலாதியானது..

  அனுபவித்த சிரமம் - சொல்லிய விதம் அருமை..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வாங்க ஐயா .நிச்சயம், ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்போருக்கும் இதே அனுபவம் இருந்திருக்கும் :)

   Delete
 3. ரொம்ப அருமையா கமகம வாசனையுடன் இருந்தது பதிவு மொத்தமும் :-)

  தோட்டத்தின் மீதுள்ள அவர்களின் ஆர்வம் பிரமிப்பாக இருக்கிறது. சின்ன இடத்தில் மிக அழகா தோட்டம் போட்டு இருக்கிறார்கள்!!

  அவர்களின் நன்றி பாராட்டுதலும் சாப்பாடு சம்பந்தப் பட்டதாகவே இருக்கிறது...அன்பான மக்கள்.

  மலரும் நினைவுகள் ரசனையாக இருக்கிறது ஏஞ்சல்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கௌசல்யா :) இப்பவும் அவங்க பக்கத்து வீடு காலியாதான் இருக்கு உங்களுக்கு ரென்டுக்கு எடுத்து தரேன் :) பிரியாணி சாப்பிட்டு பீடா எல்லாம் கிடைக்கும் :)) கூடவே நீங்களும் களத்தில் இறங்கி தோட்டம் போடலாம் வஹிதாவோடு :) எனக்கு முட்டை உங்களுக்கு கெளுத்தி மீனே கிடைக்கும்

   Delete
 4. சிறிய இடங்களில் அமைந்துள்ள காய்கனித் தோட்டப் படங்களும், அவை பற்றிய அரிய பெரிய செய்திகளும், உழைக்கும் பெண் சிங்கங்கங்கள் பற்றிய கூடுதல் செய்திகளும் வியப்பளிப்பதாக உள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..இவர்களின் தோட்டங்கள் கண்கொள்ளா காட்சி நம்ம ஊர்ர் காய்கறிகளையும் வேம்பு மரத்தையும் இங்கிலாந்தில் வளர்த்தவங்கலாச்சே பெண் சிங்கங்கள் :)

   Delete
 5. ஆஹா..!! வஹிதா உருவில் உங்களுக்கு எத்தனை சோதனைகள்..
  கடவுளே இப்படியா சமைப்பங்க வஹிதா. ஒவ்வொன்னையும் நல்லா நோட் பன்னியிருக்கீங்க அஞ்சு. எழுதிய விதம் சூப்பர். பாவம் உங்க கணவர் என்ன பாடுபட்டாரோ...! அதோடு மிரட்டி வேற அனுப்பியிருக்கீங்க. ம்..பாவம். ஆனாலும் அந்நேரம் ஒன்னுமே செய்யமுடியாது. அடுப்பு வேற எரியுதே. அதுதான் முதல் பயம்.
  படத்தில் குட்டீஸ் அழகா போஸ் கொடுக்கிறாங்க.

  இங்க இந்த சமையல் மணம் ரெம்பவே படுத்தும், அதுவும் அசைவ சமையல் என்றால் கேட்கவே வேண்டாம். கருவாடா.. ஓ மைகோட். இங்கு ஒரு பாமிலி சமைத்திருக்கினம் வீட்டை காலி செய்யச்சொல்லீட்டாங்க.
  இந்த அலாட்மெண்ட் முறை இங்கு இருக்கு அஞ்சு. அந்த இடம் மிக அழகா இருக்கு.காய்கறிகளோடு பூச்செடிகளும்,சிறிய வீடும் இருக்கும்.
  வங்க தேசத்து பெண் சிங்கங்கள் தகவல் அருமை. நாங்களும் அவங்களை பார்த்து உழைப்புக்கு கற்றுக்கொள்ள வேண்டும்.
  நல்ல சுவாரஸ்யமான தகவல்கள் அஞ்சு.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா :)வாங்க ப்ரியா .பெண் சிங்கங்கள் உண்மைலேயே சிங்கம்ஸ் தான் ..முன்னாள் லேடிஸ் நடப்பாங்க பின்னாடி பைஜாமா குர்தாஸ் போட்டு ஆண்கள் போவாங்க பயபக்தியா :)
   ரோட்டிலேயே வெற்றிலை துப்பி வச்சிருக்காங்க !..அப்படியே அவங்க நாட்டில் இருபது போல ..ஆனா சாப்பாடு மட்டும் தாராளமா சமைச்சி கொட்ப்பாங்க எல்லாருக்கும் ரொம்ப அன்பானவங்க .
   வழி இல்லையே நானா மிரட்டலேன்னா இவர் இறங்க மாட்டார் எங்க வீடும் எரிஞ்சிருக்கும் ..ஜெர்மன் அலாட்ட்மேன்ட்ஸ் ரொம்ப அழகு அந்த சின்ன வீடு இங்கில்லை ..இருந்தால் அதிலேயே குடும்பம் நடத்துவாங்க இங்கே அதான் இங்கே அலவ் பண்ணலை :)

   Delete
 6. பங்களாதேஷ் பெண் சிங்கங்கள்...

  ஹா... ஹா...

  பங்களாதேஷ் ஆண் சிங்கள் இங்கு பண்ணும் அடாவடி தாங்காமல் கிளீன் சிட்டி ஆக்கப் போறோமென பங்களாதேஷ் விசாவையே நிறுத்தி வைத்திருந்தார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :)
   துபாய் சவூதி அரபு நாட்டுக்காரங்கலுக்கும் இவங்க சிம்ம சொப்பனம் தான் போலிருக்கு :) இங்கே பிரிட்டிஷ்காரங்க இவங்களை திருத்த முடியாதின்னு கை கழுவிட்டாங்க சில ஏரியாக்கள் இவங்க மட்டுமே வசிக்கிறாங்க ..

   Delete
 7. :) காலைல உங்க போஸ்ட்டைப் படிச்சு சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வராத குறை! அஹாஹாஹா!! எப்படிதான் 10 மாசம் அங்க குப்பை கொட்டினீங்களோ அக்கா!!! நினைச்சுப் பார்க்கவே கடினமாக இருக்கிறது. அவ்வ்வ்வ்வ்!!

  இந்த அலாட்மெண்ட்ஸ் இங்கே அதிகம் இருப்பது போல தெரிலை...அருமையா செய்திருக்காங்க..எனக்குதான் இன்னும் செடிகளைத் தொடவே மனசு வரலை..டைமே இல்லாத மாதிரி மாயையா இருக்கு!! ஹிஹி...!!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ் !! அந்த இடத்தை விட்டு வெளியேறினா போதும் என்று வீடு மாறிட்டோம் ..சுண்டெலிலாம் இருந்தது மஹி அவங்க வீட்ல !காச் மூச்னு சத்தம் கேக்கும் அப்புறம் கூண்டில் புடிச்சி தூக்கி போவாங்க வஹிதா ..அங்கேருந்து இந்த வீட்டுக்கு வந்த முதல் சில மாசத்துக்கு என்னை சுத்தி அந்த சூப் மசாலா வாசனை இருக்கறமாதிரியே மனப்ரம்மையா இருக்கும் ..நம்ம நாட்டில் என்ன சமைச்சாலும் மணம் வராது இங்கே அப்படியில்லையே எல்லாமே க்ளோஸ்ட் மேலும் கார்பெட்டில் எல்லா வாசமும் ஏறிடும்.. allotments ஜெர்மனில ரொம்ப அழகு மஹி ஒரு குட்டி வீடும் இருக்கும் அங்கே :)
   இங்கே 20/10 sq ft தான் ஆனா அதிலும் பெண்சிங்கங்கள் சாதிச்சிருக்காங்க !

   இப்பவும் அந்த பக்கம் காரில் போகும்போது கணவர் சொல்வார் //என்னை மிரட்டி அந்த வீட்டுக்குள் தள்ளி விட்டீங்கலேன்னு // ஹா ஹா

   Delete
 8. சுவாரஸ்யமான அனுபவங்கள். வங்கதேசப் பெண் சிங்கங்கள் என்றதும் நானும் என்னவோ ஏதோ என்று வந்து படித்தேன். ரசித்தேன். வாங்க தேசத்தில் நடைபெற்று வரும் T 20 மேட்ச்களில் அந்நாட்டினரின் வெறியான ரசனையைக் கண்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு உங்கள் பதிவு வித்தியாசத்தைக் கொடுத்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
   ஹா ஹா :) பெண் சிங்கங்கள் என்று தலைப்பு கொடுக்க காரணம் இங்கே சீக்கியர் பெண்களும் பங்களாதேஷ் பெண்களும் மதுரை மீனாட்சிகள் ஆண்கள் இங்கே henpecked அவங்க வீட்டில் அமைதியா இருப்பாங்க சிலர் கைகட்டி நடந்து செல்வதையும் பார்த்திருக்கேன் ..இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு :)

   Delete
 9. வஹிதாவின் பாசம் வித்தியாசமானது! வீட்டுத்தோட்டம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. ஆமா சகோ அது கள்ளமில்லா அன்பு ரொம்ப இன்னொசன்ட் அவங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. அருமையான விவரங்கள். லண்டனில் எலிகளா.. அடக்கடவுளே.
  வஹீதா சிங்கம் ஆங்கிலம் கற்றிருந்தால் ஊரையே ஆட்டி வைப்பார்.
  மஹா பொறுமை ஏஞ்சல் உங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. வல்லிம்மா இங்கே வந்த புதிதில் பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன் //pest கன்ட்ரோல் //அதில் எலி கரப்பான்பூச்சி எல்லாம் இருக்காம் சில ஏரியாக்களில் ..அப்புறம் ஜெர்மனிக்கே திரும்பி ஓடிடலாமான்னே தோணும் அதுவும் வெம்ப்ளி ஏரியால்லாம் சுத்த மோசம் ..டியூப் டிரெயினில் இறங்கி சப் வேயில் போகும்போதே எனக்கு மூக்கு நமனமன்னுச்சி அணியன் பஜ்ஜி வாசனை அந்த எண்ணெய் ..இனிமே லண்டன் பக்கம் போனா காரில் மட்டும் போகணும்னு நினைச்சிகிட்டேன் வஹிதா சிங்கம் இப்போ esol கிளாஸ் போறாங்களாம் ..கணவர் சொனனார் :) ரெண்டு மாசம் முன்னாடி

   ரோட்டில் நடந்துபோகும்போது புக் நோட் எல்லாம் காட்டினாராம் :)

   Delete
 11. ஹஹஹ் வங்க (பெண்) சிங்கங்கள்!!!! அதற்கு ஏற்றாற் போல் சிங்கம் பட டயலாக் வேறு அஹ்ஹஹ் அருமை. அந்தச் சின்ன இடத்தில் அழகான தோட்டம்..அழகு இங்கும் அது போன்று மக்கள் சிலர் செய்கின்றார்கள் ஆனால் கம்யூனிட்டி தோட்டம் என்றில்லாமல் அவரவர் விருப்பத்தில் மொட்டை மாடி பால்கனி என்று செய்கின்றார்கள்.

  வஹிதா ம்ம் உங்களுக்குச் சில சிரமங்கள் கொடுத்திருந்தாலும் அன்பானவர்தான் இல்லையா...என்றாலும் என்ன தான் அன்பு என்றாலும் ஒருசில விஷயங்கள் நமக்கு ஒத்துவரவில்லை என்றால் கஷ்டம்தான். நல்ல வர்ணனை. தங்கள் பெண் அழகு அந்தக் குட்டிப்பையனும். மற்றொரு நாட்டில் வந்து எப்படி அவர்களால் அவர்கள் ஊரில் இருப்பது போல் இருக்க முடிகின்றது??!! ஆச்சரியம்தான்...ஏதோ எங்கள் வீட்டில் அடுத்து இருந்தது போன்ற ஒரு உணர்வு...

  கீதா:எனக்கும் ஃப்ளாட் என்பதால் சிறிய பால்கனியில் தோட்டம் போட ஆசைதான் ஆனால் என் மகள்களுக்கு வாசலில் வம்பு வந்தால் கண்மண் தெரியாமல் ஓடுவதில் தொட்டி எல்லாம் உடைத்துவிடுவார்கள். செடிகள் எல்லாம் அவ்வளவுதான்...அதனாலேயே போடாமல் இருக்கின்றேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அன்ட் துளசி அண்ணா :) நமக்கு இப்படி வித்தியாசமான அனுபவங்கள் தேடித்தேடி வரும் :)
   //முற்க டிம் //அப்படின்னு சொல்லிகிட்டே போனாங்க ..அது என் காதில் முறுக்கு டின் என்று கேட்டுச்சி :)
   ஹையோ அங்கிருந்தவரை நித்தம் ஒரு அனுபவம் எனக்கு ..இங்கே வந்தாஹ் பல வெளிநாட்டுக்காரங்க இன்னும் அவங்களோட அவங்க நாட்டு பழக்கங்களை கொண்டு வந்து விட்டாங்க :(
   ஒரு ஏரியா சைனா டவுன் ஒரு ஏரியா பாகிஸ்தான் ஒரு ஏரியா குஜராதிஸ் ஒரு ஏரியா தமிழர்னு ஆகிபோச்சு ..
   மகள்கள் :) ரசித்தேன் ,,இங்கே என் ஜெசி பொன்னும் வீட்டுக்குள்ள காக்டஸ் கூட வைக்க விட மாட்டா :)

   பொன்னும் அவள் ப்ரண்ட் டானியல் அண்ட் படம் 2007 இல் எடுத்தது ..இப்போ பொண்ணு ரொம்ப உயரம் ஆகிட்டா

   Delete
 12. ஹா ஹா ஹா! ;)))) பாவம் அஞ்சூஸ்! ;))

  இங்கும் சில அனுபவங்கள் அதே போல தான். கதவைத் தட்டி, முன் வீட்டுச் சின்னன் ப்ளேட் நிறைய கோழி பாபிக்யூவை நீட்டி, 'Enjoy' என்றுவிட்டுப் போக... என் joy எல்லாம் காணாமல் போச்சு. ;D

  ஒரு வீட்டில் கணவாய், கம்பியில் கட்டிக் காயப் போட்டு அயலார் பொலீஸைக் கூப்பிட்டு அது நியூஸாக வந்தது. அந்தத் தெருவைக் கடக்கும் போதே குப்பென்று வாடை அடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //'Enjoy' என்றுவிட்டுப் போக... என் joy எல்லாம் காணாமல் போச்சு. ;D//
   ஹா ஹா செம செம :)
   ஜெர்மனில இருக்கும்போது சுறா மீனை பொரிச்ச ஒரு குடும்பத்துக்கும் இப்படி போலிஸ் வந்தது நாங்க அங்கிருக்கும்போது ..வஹிதா biltongs அப்புறம் மீனை வாங்கி கருவாடு ஆக்குவாங்க ஏரியாவே பீச் பக்கம் மாதிரி இருக்கும் இமா !!..

   Delete
 13. ஸ்ஸ்ஸ்ஸ் ஸாப்பா 2007 இல் இருந்து இதை மனதில் காவி வந்திருக்கிறீங்க, இப்போ பாரம் கொஞ்சம் குறைஞ்சிருக்குமே, குப்பையாக இருப்பினும் வஹிதா ரொம்ப நல்ல மனசு படைத்தவர். எவ்வளவு சுத்தமாக இருப்பினும் மனம் நல்லமில்லை எனில் அவர்களின் எந்த உணவும் உண்ண மனம் வராது ஆனா எவ்ளோ குப்பை எனிலும் இவ்ளோ நல்ல மனசாக அடுத்தவருக்கு குடுக்கோணும் எனும் மனதோடு இருப்போர் எது தந்தாலும் சாப்பிட்டுவிடுவேன், ஆண்டவன் காப்பாத்துவார் எனும் நம்பிக்கையில்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) பழைய நினைவுகள் பகிர்வது இனிமைதானே மியாவ் !!
   நீங்க சொல்றது சரிதான் மியாவ் ஆனா மனசு ஒன்னு சொல்லும் மூளை ஒன்னு சொல்லும் எனக்கு :)சாப்பிடனும்னு நினைக்கும்போது அந்த தட்டில் எலி ஏறியிருக்குமோ என்று டவுட் வந்து தொலைக்கும் அப்புறம் நா அசைவம் சாப்பிட மாட்டேனே என்ன செய்ய :)

   Delete
  2. மியாவ் இந்த விஷயத்தில் வெள்ளைகாரங்க குறிப்பா பிரிட்டிஷ் கிரேட்டோ கிரேட் யார் கொடுத்தாலும் சாப்பிடுவாங்க

   Delete
 14. தோட்டம் பார்க்க ஆசையா இருக்கு, இம்முறை எப்படியும் அழகா கார்டினில் வெஜ் நடவேணும் எனும் நினைவுடன் இருக்கிறேன் ஆனா வெளியே இறங்கவே மனமில்லை குளிர், மார்ச் இல் உருளைக்கிழங்கு தாக்க வேண்டும் எப்படி இறங்குவேன் கார்டினில்... நல்ல வெயில் எறிக்குது ஆனா குளிர் வதைக்குது.

  ReplyDelete
  Replies
  1. தோட்டம் இங்கயும் குளிர்தான் ஆனலும் ஸ்டார்ட் பண்ணிட்டனே

   Delete
 15. Replies
  1. ஹா ஹா :) துளசியக்காவ் ..ஹையோ 1000 டைம்ஸ் !! துபாய்காரங்களுக்கும் இதே அனுபவம் இருக்கு
   அமெரிக்கவும் நியூசிலாந்தும் தூரம்னாலே தப்பிச்சிங்க நீங்கல்லாம் :))but in backyard farming even punjabis and gujaratis can't beat them :)

   Delete
 16. அன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..
  தாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.

  http://naanselva.blogspot.com/2016/02/blog-post_29.html

  ReplyDelete
 17. எப்பேர்ப்பட்ட வித்தியாசமான அனுபவப் பகிர்வுகள். ஒருபக்கம் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபாடு காட்டி வியக்கவைக்கும் மக்கள். இன்னொரு பக்கம் வஹிதா போன்று விநோதமான மனிதர்கள். நீங்கள் இங்கே எழுதியிருப்பதிலிருந்தே புரிகிறது, மனரீதியாய் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ஆமாம் கீதா ..ரொம்பவே கஷ்டப்பட்டேன் ..இயற்கையாவே எனக்கு இந்த odour சென்ஸிடிவ் கொஞ்சம் அதிகம் ..சில வாசனைகள் பாடாய் படுத்தும் .. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா .

   Delete
 18. என்ன வித்தியாசமான அனுபவங்கள் ....

  தோட்டங்கள் ...ஆகா அருமை ...
  வகிதா பீபி ...சூப்பர் அவர் பாசத்தால்

  ReplyDelete
 19. உங்க வூட்டுக்காரர் மேல எந்த அளவிற்கு கோபம் இருந்தால் இப்படி செஞ்சு இருப்பீங்க....அண்ணனை நினைத்தால் என் நெஞ்சமே

  ReplyDelete
  Replies
  1. Oru thesis submit seyra range ku oru post. .athil unga annanai windows vazhiya jump seythathu mattum eppadi correct aa kandupidichitteenga 😆😆😆😆😈😈😈😈

   Delete
 20. அண்ணாவை சோறு போடாமல் வளர்த்திருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. Awwwwwwww 😂😂😂😂😂

   Delete
  2. நானே :) லிங்கை குடுத்து வசமா மாட்டிகிட்டேனோ :)

   ஆமாப்பா ஆமா :) அவர் எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் போடாத சில கொடுத்த வச்ச மனிதர்களில் ஒருவர் :) செம லக்கி

   Delete
 21. அவங்க கவிச்சியா சமைக்கிறாங்க... அதுவே தாங்க முடியலேன்னா, அவங்க ஊர்ப்பக்கம் போய்ப் பார்த்தால் எப்படி இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. Namakke ippadinnaa 😂😂😂 antha paavapatta British people nilaimaiya ninaichi parunga 😄😄😄

   Delete
  2. நெத்திலி மாதிரி ஒரு மீன் அது கல்கத்தா மற்றும் பங்களாதேஷ் ஸ்பெஷலாம் ..நாற்றம் சென்னைல சமைச்சா செங்கல்பட்டுக்கு வரை வீசும்

   Delete