அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/22/16

Loud Speaker ...36 ..மியாவ் ஸ்பெஷல் :)

மியாவ் ஸ்பெஷல் :) 
====================


22 .02 .2016 திங்களன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பின் பூனைக்கு :)
எனக்கும் பூனைகளுக்குமான நேசம் பாசம் பந்தம் எல்லாம் எனது 3 வயது முதலே துவங்கியது என்றால் மிகையில்லை :)
எங்கள் வீட்டில் நாங்கள்  வளர்த்த முதல் பூனை rufus ..எனது மெத்தை எனது பொம்மைகள் நான் பால் குடிக்கும் பாட்டில் என என்னுடைய பொருட்களை மட்டுமே பொறாமையுடன் எடுத்து செல்லும் கள்ளப்பூனை அது !
அதற்குபிறகு பல பூனைகள் எங்கள் வீட்டில் எங்களோடு வளர்ந்தார்கள் ..ஆகவே எனக்கு நாயகர்களை விட பூனைகள் மீது ஸ்பெஷல் தனிப்பட்ட அன்புண்டு :)
உங்களை முதன்முதலில் ஜலீலா அவர்களின் பதிவில்தான் சில பின்னூட்டங்களில் பார்த்தேன் !
அந்த ஏரியாவையே அதகளபடுத்தி இருப்பீர்கள் !விழுந்து புரண்டு சிரித்து இருக்கிறேன் அப்போதெல்லாம் என்ன ஒரு அட்டகாசம் ! இடி நிலநடுக்கம் வந்தாற்போல இருக்கும் !
ஒருவேளை குண்டு பூனை எடைதான் காரணமோ என்றும் நினைத்திருக்கிறேன் ..
இன்னொன்று கட்டாயம் சொல்லியாக வேண்டும் !நீங்கள் உங்கள் முகத்தை காட்டியிருந்தாலும் எனக்கு எப்பவும் நீங்கள் குண்டு பூனைதான் :) என் மகள் கூட உங்களை cat ஆன்ட்டி என்றுதான் சொல்லுவாள் :)

எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு மட்டுமில்லை நம் நட்புக்கள் குறிப்பாக ப்ரியா ,இலியாஸ் மஹி ஜெய் நேசன் ,அப்துல் காதர் ,வானதி அனைவருக்குமே இந்த சந்தேகம் உண்டு !
உங்கள் உண்மையான வயது 16 என்கிறீர்கள் ஆனால் 2011 முதல் எப்படி அதே 16 இல் இருக்க முடியும் ! ஆகவே 2016 இல் உங்கள் 61 வது மன்னிக்கவும் :) உங்கள் 21 ஆவது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் உங்களுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று இன்னும் குழப்பத்தில் இருப்பதாலும் மேலும் உங்களுக்கு எங்கள் அனைவரின் கடல் போன்ற அன்பு இருப்பதாலும் பரிசுகளை நீங்க விரும்ப மாட்டீர்கள் என்பதாலும் எதையும் உங்களுக்கு பரிசாக தரவில்லை :)
ஆனால் 10 வேக வைத்த முட்டைகளை மட்டும் அன்போடு அளிக்கிறேன் பெற்றுகொள்ளவும் .


இதேபோல எப்பொழுதும் சந்தோஷமாக அனைவரையும் சிரிக்கவைத்து அந்த நீங்க சந்தோஷத்திலேயே இரண்டு மடங்கு வெயிட் ஏறி இதேபோல பல 21 ஆம் பிரண்ட சே சே :)  டங் ஸ்லிப் பிறந்த  நாட்களை கொண்டாட  வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அதிரா மியாவ் !

என் பக்கம் ப்ளாக் ஓனர் அதிரா மியாவ் 

அன்புடன் வாழ்த்துவோர் மீ ஏஞ்சல்  மற்றும் நட்பூக்கள் அனைவரும் :)

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூன் 2015
-----------------
ஒரு புது விசிட்டர் ..ஒரு வாரமா கிச்சனுக்கும் தோட்டத்துக்கும் நடுவில் வந்து எதையோ எதிர்பார்த்து என்னை பார்ப்பார்..ஒரு நாள் மூணாவது வீட்டு குட்டி பூஸ் ரெண்டுபேரை கூட்டிக்கிட்டு வரான் smile emoticonhomeward bound படம் தான் நினைவு வருது எனக்கு smile emoticon 
என்னடா பசிக்குதான்னு கேட்டேன் ..பாவமா இருந்தான் உடம்பெல்லாம் காயம் ..இப்போ டெய்லி நான்தான் சாப்பாடு கொடுக்கறேன் .சாப்பிட்டு போறான் ...ஹோம்லஸ் பூனை பாவம் ..கிட்டு என்று பெயர் வச்சிருக்கேன்2015 டிசம்பர் இறுதியில் 
-----------------------------------------


எங்கிருந்தோ வந்தான் !!
என்னவென்று சொல்வேன் எப்படி சொல்வேன்  சந்தோஷத்தில் திக்குமுக்காடிட்டேன் !!
சில மாதங்கள் முன்பு ஒரு ஹோம்லஸ் பூனை உடம்பெல்லாம் புண்களுடன் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து உணவு சாப்பிட்டு போவான் கிட்டு என்று பேர் கூட அவனுக்கு வச்சேன் நினைவிருக்கா  அவன் ஹோம்லஸ் இல்லை யாரோ வளர்க்கும் பூனைதான் ஆனா எங்க ஏரியா தாதா பூனைகள் அவனை கடிச்சி புண் ஆக்கியிருக்குங்க ..
கடந்த 2 மாதங்களாக அவன் வீட்டுப்பக்கம் வரவேயில்லை ..
மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சி ..என் கணவர் சொன்னார் அவனது ஓனர்ஸ் வீடு மாறியிருப்பாங்க இவனையும் கூட கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ..போனில் அவன் போட்டோஸ் எல்லாம் போன வாரம் தான் டிலீட் செஞ்சேன் ..நேற்று இரவு 9:30 இருக்கும் மெல்லிய குரலில் மி மி என்று ஒரு சத்தம் கேட்டது கிச்சனில் இருந்தேன் அப்போது கிட்டு எப்பவும் சத்தம் போடாம மெதுவா தான் கூப்பிடும் ..கர்ட்டனை விலக்கினா எதோ வெள்ளையா பஞ்சு மூட்டை போல தெரிஞ்சது ..நான் அப்பகூட நினைக்கலை இவனாக இருக்கும்னு ..கதவை திறந்து பார்க்கிறேன் !!என்னை நோக்கி அந்த பஞ்சு மூட்டை வரவும் எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை !! அவனுக்கு சந்தோசம் என்னை பார்த்ததும் !!காலை சுற்றி சுற்றி வரான் இப்போ முன்பைவிட இன்னும் வெயிட் போட்டு இருக்கான் .
உணவு கொடுத்தேன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு போய் விட்டான்  வரவே மாட்டான் பார்க்கவே மாட்டோம் என்று நினைச்சிட்டிருந்தேன் என்னை தேடி வந்திடுச்சே அந்த மியாவ் 
எனக்கு அவனை பார்த்ததில் சந்தோஷமா இல்லை அவனுக்கு என்னை பார்த்ததில் சந்தோஷமான்னு எனக்கே அளவிட முடியவில்லை
அன்பு என்பது யாதெனில் காணாமல் போனாலும் நம்மை தேடி வருவதே ஆகும் :)) 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மனதுக்கு இதமளிக்கும் ஒரு செய்தி 
---------------------------------------------------------------

நேற்று இந்த செய்தியை sky நியூசில் காண்பித்தார்கள் !

இராக் மற்றும் சிரியா  நாட்டு நிலைமை அனைவரும் அறிந்ததே ..அங்கிருந்து உயிரை பிடித்து கடினமான சூழல்களை கடந்து எப்படியாவது ஐரோப்பாவிற்க்கோ அல்லது அமெரிக்க நாடுகளுக்கோ தப்பி கடல்மார்க்கமாக பயணிக்கிறார்கள் பலர் ..இதில் பலர் உயிரை விடுவதும் மனதை வருத்தும் பல செய்திகள் படித்திருக்கிறேன் ..
அப்படி இராக்கிலிருந்து தாயும் ஐந்து பிள்ளைகளும் அவர்களின் வளர்ப்பு பூனையுடன் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டு தீவிற்கு  ரப்பர் படகில் பயணித்து உள்ளார்கள் ரப்பர் படகில் நிறைய மக்கள் கூட்டத்தில் நீரில் பயணம் !என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை !எவ்வளவு ஆபத்தான பிரயாணம் :( அதிலும் இவர்கள் தங்கள் அன்பு பூனையையும் படகில் அணைத்தவாறு செல்லும்போது இயல்பாகவே பூனைகளுக்கு ஒரு பயம் வரும் அந்த பயத்தில் குதித்து ஓடிவிட்டது அப்பூனை ..அவர்கள் அங்கேயே சில நாட்கள் இப்பூனையை தேடியும் கண்டுபிடிக்க மீண்டும் இயலா நிலையில் அழுகையுடன் அக்குடும்பம் ஐரோப்பாவை (பெர்லின் )நோக்கி சென்றுள்ளது ஆனால் அப்பூனை அங்கேயே தீவில் இவர்களை தேடி கொண்டு அலைந்திருக்கு அந்த ஏரியா தாதாக்கள் வேறு (பிற பூனைகள் ) இதை ராகிங் செய்து மிரட்டியுள்ளன !.அப்போ அந்த பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்த ஆஷ்லி என்பவர் அதை தத்தெடுத்து வாக்சின் போட்டு உணவளித்து dias என பெயர் சூட்டி பாதுகாத்துள்ளார் .அங்குள்ளோரை விசாரிக்கவும் அவர்கள் இப்பூனை குடும்பம் பெர்லின் பயணித்ததை சொல்லவும் பெர்லினுக்கு அனுப்பியுள்ளார் பூனையை பிறகு ஒரு போஸ்டர் ஆன்லைன் மூலம் மற்றும் அச்சிட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களை அடையும் வண்ணம் இப்படி விளம்பரப்படுத்தி இருக்கின்றார் !


என்ன ஒரு அற்புதம் ஆச்சர்யம் அப்பூனை யின் உரிமையாளர்கள் நோர்வே நாட்டை  தஞ்சமடைந்தது கேள்விப்பட்டு 480 ஐரோக்கள் செலவு செய்து அக்குடும்பத்துடன் சேர்த்துள்ளார்கள் ..பெர்லினில் இப்பூனை ஒருவர் வீட்டில் கொஞ்சம் நாட்கள் இருந்தது அவர்களுக்கு  மிக ஆசையாம் dias மீது அதன் உரிமையாளர்கள் கண்டுபிடிக்க முடியா பட்சத்தில் அவர்களே இதை வளர்க்கவும் முன்வந்தனராம் !

பெர்லின் ஏர்போர்ட்டில் dias


dias எனும் குன்குஷ் என்ற செல்ல பூனையுடன் சேர்ந்த குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் !

அன்பு என்பது அனைவருக்கும் உரித்தானது என்பது உண்மையே 1
உண்மையான அன்பு எப்படியாவது உரிமையாளர்களுடன் இணைத்து வைக்கும்.
==================================
மற்றொரு பதிவில் சந்திப்போம் ..19 comments:

 1. >>> அன்பு என்பது அனைவருக்கும் உரித்தானது <<<

  இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா

   Delete
 2. அதிரா மியாவ் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  பூனைச் செய்திகள் மனம் கவர்கின்றன. நாடு விட்டு நாடு ஓடி, காணாமல் போய், மீண்டும் எஜமானர்களிடம் சேர்ந்தபோது அந்தப் பூனை எப்படி ரீஆக்ஷன் காட்டி இருக்கும்! (அந்த வீடியோ எனக்கு ஓடவில்லை. 'ப்ளகின்' தகராறு!)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அந்த லின்க்கை இணைக்கிறேன் பின்னூட்டத்தில் ..வீடியோவில் பெர்லின் ஏர்போர்ட்டில் குன்குஷ் /dias இருக்கும் காட்சி வருகிறது ..இப்போ அந்த ரியாக்க்ஷன் வீடியோவும் கிடைத்தது இணைசிட்டேன்

   Delete
 3. மியாவ் ஸ்பெஷல் .....சூப்பர் ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

   Delete
 4. அதிராமியாவ் க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!!
  நீங்க சொல்வதுபோல் கலகலப்புக்கு பஞ்சமில்லை. அட்டகாசமாக இருக்கும் அதிரா வந்தால். ஒரு சிலருக்குதான் இப்படியான தன்மை,திறமை இருக்கு. எதையுமே போல்ட் ஆ ஏற்றுக்கொள்வா!!. கோவிக்கமாட்டா!!. நிறைய சொல்லலாம். நல்லாரோக்கிய த்துடனும்,மகிழ்ச்சியாகவும் இருக்க நானும் வாழ்த்துகிறேன்.
  //அன்பு என்பது அனைவருக்கும் உரித்தானது//உண்மையான கருத்து. இது ஐந்தறிவு ஜீவன்களுக்கு அதிகமா இருக்கிறது என்கருத்து. எல்லாத்தகவல்களும் பூனைகள் ஸ்பெஷலா இப்பதிவில் அமைந்தமை அருமை அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா :) பூனை பெர்த்டே ஸ்பெஷலாச்சே நேற்று இந்த dias பூனை பற்றி நியூசில் கேள்விபட்டேன உடனே அதையும் சேர்த்தாச்சு

   Delete
 5. சகோ/ஏஞ்சல் மியாவ் ஸ்பெஷல் மெய்யாலுமே ஸ்பெஷல் பதிவுதான்! மிக மிக ரசித்தோம்.

  அதிராமியாவ் அவர்களுக்கு பிலேட்டட் ம்ம்ம்ம்ம்மியாவ்.....ம்மியாவ்...(ஹிஹி ஒன்றுமில்லை பிறந்தநாள் வாழ்த்துகள்!!!!

  அன்பு! உண்மையானது என்பது எப்படி நிரூபணமாகியிருக்கிறது பாருங்கள். இருநிகழ்வுகள். ஒன்று உங்களைத் தேடிவந்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய கிட்டு!!! மற்றொன்று ரியூனியன் ஆஃப் டயாஸ். பிரமிக்க வைத்துவிட்டது. சமூக வலைத்தளங்களை நாம் குற்றம் சொன்னாலும் பாருங்கள் இது போன்று நாலுகால் செல்லங்களின் ஆதரவாளர்கள் பிரிந்தவர்களை இணைத்து வைக்க உதவுகின்றது பாருங்கள். எத்தனை சந்தோஷம் இருந்திருக்கும் இல்லையா?!!!!

  இப்போதெல்லாம் இது போன்று நாலுகால் செல்லங்களை அனுப்பும் போது சிப் பொருத்துகின்றார்களே! இங்கிருந்து - சென்னையிலிருந்து பல ஹோம்லெஸ் செல்லங்களை வெளிநாட்டவர்கள் தங்களுடன் கொண்டு செல்லுகின்றனர். மகனின் கிளினிக் அதற்கு வேண்டிய வழிமுறைகளைச் செய்து கொடுக்கின்றார்கள். டயாஸ் சம்பவம் மனதை நெகிழ்த்திவிட்டது. மெய்யாலுமே கண்களில் நீர் துளிர்த்தது ஏஞ்சல். அருமையான பதிவுகள்

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம் ஒரே இனமல்லவா :) பௌ பௌ மியாவ் மியாவ் கீச் கீச் :) கீதா அன்ட் துளசி அண்ணா !! வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .என் கண்ணில் படும் இப்படிப்பட்ட மனதுக்கு சந்தோஷமான நாலு காலர்களின் செய்திகளை உடனுக்குடன் பகிர்கிறேன் என் சந்தோசம் அனைவரையும் அடைவதில் மிக்க மகிழ்ச்சி .
   கிட்டு பற்றி fb யில் எழுதினேன் ..இங்கே எழுதினா தேடுவதும் சுலபம் ..
   இப்போ நம்ம ஊரிலிருந்து செல்லங்களையும் உரிமையாளர்கள் அழைத்துசெல்வது கேட்க்க சந்தோஷமா இருக்கு !முன்பு பல வருடங்கள் முன் இப்படி வசதி இல்லை எல்லாரும் ப்ளூ கிராசில் விடுவாங்க சிலர் யாரிடமாவது கொடுப்பாங்க எப்படித்தான் மனம் வருமோ :(..பாவமா இருக்கும் இப்போ உடன் அழைத்து செல்வது நல்லது தான்

   Delete
 6. அன்பு செலுத்துவதில் செல்லங்களுக்கு நிகர் அவர்களேதான் நாலுகாலாக இருந்தாலும், பறவைகளாக இருந்தாலும்..அவர்களை மிஞ்ச மனிதனால் முடியாது..

  கீதா

  ReplyDelete
 7. பூனைச்செய்தி மனம் குளிர்ச்சியாகின்றது! பூசார் அதிராவுக்கு காலம் தாழ்த்திய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பூனை பெர்த்டே ஸ்பெஷலாச்சே நேசன் :) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

   Delete
 8. சம்பந்தப்பட்டவருக்கு _ _ வது பிறந்தநாள் வாழ்த்துகள். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) தயங்காம கோடிட்ட இடத்தில் 61 என்று போடுங்க :) haa haa :)

   Delete
 9. மீண்டும் இரண்டாம் முறையாக இந்த பதிவினைப் படித்தேன். காரணம், ஒரு பூனைக் குடும்பம், எங்கிருந்தோ வந்து எங்கள் வீட்டு வராண்டவில் தங்கி இருக்கிறது. விரட்டாமல் அன்பாக ஆதரவு கொடுத்து வருகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளங்கோ அண்ணா !சந்தோஷமா இருக்கு உங்க வீட்ல் அந்த குடும்பத்துக்கு இடம் கொடுத்ததுக்கு /ஒரு வீடியோ புதுசா இனைச்சேன் பாருங்க

   Delete
 10. அடடா இங்கேயும் வாழ்த்தோ? மிக்க நன்றி அஞ்சு.

  ReplyDelete