அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/14/16

Loud Speaker ..35


இன்றைய ஒலிபெருக்கியில் ..காத்து வாங்கலையோ காத்து !!,மீள்சுழற்சி  மற்றும் க்வில்லிங் ,பாதையோர கோடீஸ்வரர்கள் ,மிதுன் சாய்    நிறைய சந்தோஷம் ,கொஞ்சம் கோபம் .

காத்து வாங்கலையோ காத்து :)
--------------------------------------------------------

காசை கரியாக்குவதை கேள்விபட்டிருப்போம் !இங்கே இங்கிலாந்தில் லியோ டி வாட்ஸ் என்ற 27 வயது தொழிலதிபர் ! காற்றை ஜாடியில் அடைத்து சீனாவுக்கு விற்று 16,000 பவுண்டுகள் சம்பாதிச்சிருக்கார் !


ஷாங்காய் பெய்ஜிங் போன்ற சீனாவின் பல பகுதிகளில் மிக மோசமான மாசு சூழ்ந்ததால் அங்குள்ளோர் சுவாசிக்க தூய்மையான காற்று இன்றி தவிக்கிறாங்க இவர் காற்று பிசினஸ் ஆரம்பிச்ச வேகத்தில் ஒரு சில வாரங்களில் 200 காற்று நிரப்பிய 580 மிலி கண்ணாடி குடுவைகள் விற்று தீர்ந்தனவாம் ! தனது குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரையும் லியோ காற்று பிடிக்க கிராமப்புறம் மலைபகுதிகளுக்கு மாசில்லா இடங்கள தேர்வு செய்து அனுப்பி வலையால் காற்றை பிடித்து ஜாடியில் அடைத்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறாராம் ! 

காற்று புடிக்கிறாங்க பாருங்க :)


காற்றின் விலை ஒரு மேசன் ஜாடி ..£80..இந்திய மதிப்பில் ரூபாய் 7906.34 ....
இந்த பிசினஸ் நல்லா இருக்கும் போலிருக்கே :)  இந்தியாவில் உள்ளவங்க விரைவில் முயற்சிக்கலாம் குறிப்பா சுத்தமான பொல்யூஷன் இல்லா மலைவாழ்விடங்கள் கிராமபுறங்களில் உள்ளோர் :)
இந்த காற்றை சைனாகாரங்க திறந்து முகர்கிராங்கலாம் ஒரு முறைதான் .
சிலர் அதை souvenir போலவும் பத்திரமா வைத்துகொள்கின்றார்களாம் !
காற்று பிடிப்பதை இந்த காணொளியில் பாருங்க :)காற்று சுத்தமான ஆர்கானிக் காற்று என்பதில் மிக கவனமா இருக்காங்க இந்த காற்று பிடிக்கும் க்ரூப் .ஜாடியில் சிறு பூச்சிகள் புல் துண்டுகள் அடையாம கவனமா இருக்காங்க .சீனத்து பேராசை பிடித்த மக்கள்  மண்ணை மிளகாக்கி ,இரசாயன மருந்துகளில் உணவுபொருளை முக்கி எடுத்து சோயாவில் கலர் சேர்த்து பட்டாணியாக்கி பல  தில்லாலங்கடி வேலை செய்தது மட்டுமன்றி   :( பிளாஸ்டிக் அரிசி அதிக  இனிப்பும் செயற்கை பொருளும் கான்சர் காரணிகளும்  சேர்த்த கொய்யா மிட்டாய்,பிளாஸ்டிக் காய்கறிகள் ,பில்டிங் கட்டும்போது மழை வராம  மழையை தடுக்க இரசாயன குடை என கணக்கிலடங்கா   போலிகள் போலிகள் ! என இவங்க அக்கிரமங்களுக்கு அளவேயில்லை .இப்போ சுத்தமான காற்றை ஆன்லைனில் வாங்குவது காலத்தின் கோலம் :( 

----------------------------------------------------------------------------------------------------------
பாதையோர கோடீஸ்வரர்கள்
-------------------------------------------
நடைமேடையிலிருந்து விழா மேடை வரை - நெகிழ வைத்த சிறுவர்கள்
செல்வம் இருப்பவர்களைவிட இல்லாதோரிடம் நிறைய அன்பு கருணை தாரள குணங்கள் இருக்கும் என்பதற்கு இவர்கள் சாட்சி ..

------------------------------------------------------------------------------------------------------------

மிதுன் சாய் 
----------------

மதுக்குளம் திருவள்ளுவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் .பசுமை இந்தியாவை உருவாக்க ஆர்வமுடன் இருக்கிறான் 
இச்சிறுவன் .சென்ற தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லையாம் மிதுன் .
காரணம் காற்று சூழல் மாசு அடையும் பட்டாசு புகையால் என்பதற்காக  .
ரெயில்வே ட்ராக் அருகில் 7 மரங்களை நட்டு பராமரித்து வருகிறான் இச்சிறுவன் .வீட்டிலும் நிறைய மரங்களை நட்டு பராமரிக்கிறான் .
இவனைபற்றி சுட்டி விகடனில் செய்தி வந்து அதை இவனது தாய் எங்களுக்கு பசுமைவிடியலில் தெரிவித்தார் .வாழ்த்துக்கள் சாய் மிதுன் .இப்படிப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்கும் இவனது பெற்றோருக்கும் பாராட்டுக்கள் 
---------------------------------------------------------------------------------------------------------

மீள்சுழற்சி  மற்றும் க்வில்லிங்
------------------------------------------------------

ஒரு சிறிய கண்ணாடி குடுவை ஆலயத்தில் இருந்தது !அதன் வாய் பகுதி மற்றும் கழுத்து பகுதி வெடித்து விழும் நிலையில் ..அதை வீசுவதற்கு வைத்திருந்தாங்க எனக்கு அதை வீச மனம் வரல்லை :)
வீட்டுக்கு கொண்டு வந்து ஆங்காங்கே double sided sticky tape ஒட்டி உரித்து அதில் சணல் சுற்றி கொஞ்சம் க்வில்லிங்கும் செய்து விட்டேன் :)                                                                                 


சந்தோஷம் 
---------------------
முகபுத்தகத்தில் பசுமைவிடியலில் பல விழிப்புணர்வு வீட்டு தோட்டம் என பல்சுவை பதிவுகளை பகிர்கிறோம் ..அதுவும் தோட்டம் சம்பந்தமா பல விஷயங்களை பகிரும்போதும் அதைபற்றிய சந்தேகங்களை அங்கு நிறைபேர் கேட்டு பதில் கூறும்போதும் ஆத்ம திருப்தி எனக்கு ..சமீபத்தில் மாடிதோட்ட கலப்பின விதைகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு அதிகமானோரை அடைந்தது ..அதேபோல சகோதரர் செல்வா அவர்களின் கொய்யா மிட்டாய் பதிவு பற்றிய விரிவான தகவல்களை பகிர்ந்தோம் பலரை திகைக்க வைத்தது ..
மிக்க  சந்தோஷமா இருந்தது ..

கோபம் 
-----------
ஒரு நல்ல விஷயத்தை கஷ்டப்பட்டு பகிர்வோம் அதற்கு views அதிகபட்சம் 1500 -3000 இருக்கும் .
ஆனா ஒரு திரைப்பட நடிகர் மாடித் தோட்டத்தில்  காய்கறிகளுடன் இருக்கும் படத்தை ஷேர் செய்யும்போது அதுக்கு கமெண்ட்சும் (25) ஷேர்ஸ் ஆயிரக்கணக்கில் .views 35000 எனும்போது எரிச்சலும் வேதனையுமே மிஞ்சுகிறது அதேபோல கெயில் திட்டம் பற்றி நடிகர் அர்ஜுன் படம் போட்ட மீம்ஸ் 900 லைக்ஸ் வாங்கிச்சி ....மனிதன் இன்னும் திரைப்பட ரீல் பெட்டியில் இருந்து வெளிவரவில்லையே :( 
வீட்டுதோட்டத்துக்கும்  நடிகர்களை வைத்து ப்ரொமோட் செய்தாதான் செய்தி மக்களை சென்றடையும் எனும் பொது மக்களின் மனநிலையை என்ன சொல்வது  :( 

இது நியாயமான கோபம்தானே !
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் 

19 comments:


 1. ல்வுட்ஸ்பீக்கர் மிக நன்றாகவே இருக்கிறது. பல தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது தொகுத்து பகிர்ந்து அளித்தற்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன் சகோ :)

   Delete
 2. பாதையோரச் சிறுவர்கள் மனதை நெகிழ வைத்துவிட்டார்கள். கண்களில் நீர் துளித்ததை அடக்க முடியவில்லை. அக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! இனியும் மனிதம் தொடர...
  மிதுன்சாய்க்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! நல்ல பையன்...

  உங்கள் கோபம் நியாயமான கோபம். உங்கள் சந்தோஷம் எங்களுக்கும்..

  ஆக்சிஜன் கிளினிக் இங்கும் வந்துவிட்டதாகத்தான் வாசித்த நினைவு. இந்தியாவில் பிசினஸா...ஏஞ்சல் இங்கும் தூய்மையான காற்று என்று சொல்வதற்கில்லையே. சைனாக்காரார்களின் மக்கள்தொகை பெருகியதால்தான் இத்தனை சூழல் பாதிப்பு அது போன்றுதானே இங்கும் நாம் இரண்டாவது இடத்தில்...சுற்றுப்புறச் சூழல் கேட்டில் நாம் டாப் 10ல் இடம் பிடித்துவிட்டோம்...

  கீதா: வெல்த் ஃப்ரம் வேஸ்ட் அருமை!! நானும் இப்படித்தான் முன்பு பல செய்வதுண்டு ஏஞ்சல்...மிகவும் ரசித்தேன் உங்கள் கைவண்ணத்தை..

  லவுட் ஸ்பீக்கர் அனைத்தும் நல்ல தொகுப்பு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி அண்ணா அன்ட் கீதா .
   எனக்கு இன்னிக்கு பதிவில் பிடிச்சது ரொம்ப அந்த சிறுவர்கள் கானொலிதான் ,அவங்க முகத்தில் எத்தனை சந்தோஷம் ! அதெல்லாம் இயல்பாய் அமையும் வரம்.ஹ அஹா இங்கே எங்க ஊரில்தான் காற்று பிடிச்சி ஏற்றுமதி செய்றாங்க :) இல்லை சும்மா அப்பவாச்சும் நம்ம மக்கள் சூழலை தூய்மையா வைப்பார்களா என்ற நப்பாசைதான் :) .எனக்கு அந்த மாடிதோட்ட ஆக்டர் படம் ரெஸ்பான்ஸ் பார்த்து வெறுத்து போனது ..

   Delete
 3. பாதையோர கோடீஸ்வரர்கள் வீடியோ பார்த்து மனம் நெகிழ்ந்துவிட்டது. உண்மையில் இவர்களிடம் இப்படியான குணங்கள் அதிகம்தான்.
  சீனா எதில்தான் தில்லுமுல்லு செய்யவில்லை. அங்கு சுத்தமான காற்று ஒரு பிரச்சனைதான். இங்கு சில சீனப்பொருட்கள் தடைசெய்திருக்கிறாங்க.
  மிதுன் எல்லாப்பிள்ளைகளுக்கும் முன்மாதிரியா இருக்கிறார்.பாராட்டி ஊக்குவிக்கனும்.
  வா.வ் அழகாக்கியிருக்கீங்க குடுவையை.!!
  நடிகர் தோட்டம் ம்.நானும் பார்த்தேன்.நியாயமான கோபம்தான்.
  நல்ல தகவல்கள் அஞ்சு.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா காணொளிகள் பார்த்திங்களா ..அந்த சிறுவர்கள் பாருங்க !பணம் ஒன்றுமில்லா அவங்ககிட்ட ஆனா உதவும் குணம் எவ்ளோ இருக்கு அவர்களிடம் .
   குடுவை போல நீங்களும் ட்ரை பண்ணுங்க ப்ரிங்கிள்ஸ் பாக்ஸில் பாட்டிலில் .
   fb யில் பார்த்திங்களா .எனக்கு செம கடுப்ப போச்சு

   Delete
 4. நல்லதொகுப்புகள் அக்கா... சீனாக்காரங்க காற்றைக் கூட விட்டு வைக்கலையா? கஷ்டம் தான்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அபி ..சீனாவின் பேராசைக்கு அளவேயில்லைம்மா

   Delete
 5. குடிதண்ணீரை காசு கொடுத்தும் வாங்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது போல, சுவாசுக்கும் தூய காற்றையும் அதிக விலை கொடுத்து வாங்கும் நாள் வெகு விரைவில் வரக்கூடும் என்ற பயங்கரமான அச்சமூட்டும் தகவலை இதோ இந்தப்பதிவினில் சமீபத்தில் படித்து நான் பயந்துபோனேன்: http://senthilmsp.blogspot.com/2016/02/blog-post_10.html

  அதையே தாங்களும் இங்கு அழகாக காணொளியுடன் காட்டிச் சொல்லியுள்ளது வியப்பளிக்கிறது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அந்த லிங்க் சென்று படிச்சேன் ..நம்ம நாடும் மக்கள் விழிக்காட்டி சைனா போலதான் ஆகும் எதிர்காலத்தில்

   Delete
 6. பாதையோர கோடீஸ்வரர்கள் என்ற செய்தியும் காணொளியும் வெகு அருமை .... மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அந்த காணொளி மிக அருமை ..எனக்கு மனசுக்கு நெகிழ்வா இருந்தது

   Delete
 7. மற்ற அனைத்து செய்திகளுமே அருமையாக உள்ளன. மொத்தத்தில் இன்றைய Loud Speaker .. 35 சூப்பர். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா .

   Delete
 8. நwnன்றி சகோதரி...என் பதிவு இத்தனை பகிர்விற்கு ஆனது இது முதன் முறை...நிலவன் அய்யா சில்வார்..உன்னுடைய பதிவு உண்மையுடனும் பொதுநன்மையும் வேண்டியிருக்குமானால் கவனம்பெறும் என..உணர்ந்தேன்....
  உங்கள் செய்திகளின் தெளிப்பில் நனைந்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..

   Delete
 9. சிறப்பான படைப்புகள் ....வாழ்த்துக்கள்....

  மிள் சுழற்சி குயில்லிங் அருமை ...

  ReplyDelete
 10. அரும்சி அருமை அத்தனையும் நல்ல தவல்கல். குயிலிங் ஜாடி சூப்பர்.

  ReplyDelete