அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/11/16

Loud Speaker ....34

இன்றைய ஒலிபெருக்கியில் கேரளா  மாணவ விவசாயி நந்து ,
எங்க வீட்டு மீனாட்சி, சிறகவரை சதுரபயிர் தோரன் ,மஞ்சள் ,மாங்கா இஞ்சி ஊறுகாய் ....

மாணவ விவசாயி நந்து ,
----------------------------------


கேரளா ..நெடுமங்காடு கரிப்பூரில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் .
படிக்கும் காலத்தில் நமக்கு பரீட்சை இருந்தால் மட்டுமே அதிகபட்சம் காலை 5 மணிக்கு விழிப்போம் .ஆனால் நந்துவுக்கு அதிகாலை சூரியன் உதிக்குமுன் 4:30 மணிக்கே நாள் துவங்குகிறது .ஒரு விவசாயியின் மகனான அருணைஅக்கம் பக்கத்தினர்  நந்து ,விவசாயி தோட்டக்காரன்  என்றே செல்லபெயரிட்டு அழைக்கின்றனர் .
நந்துவின் சிறிய வீட்டின் ஒரு பக்கத்தில் பச்சை பசேலன  மேல்கூரையை நோக்கி பரந்து விரிந்த செடிகொடிகள்  கீழே நாற்றுபைகளில் பல்வேறு வகையான சின்னஞ்சிறு நாற்று செடிகள் என கண்கொள்ளா காட்சியாக உள்ளது ..அருகில் நன்கு செழிப்புடன் வளர்ந்த வாழைமரங்கள் அடைந்த பழுத்த குலைகளோடு காட்சி தருகின்றன .மேலும் தோட்டத்தில் வருடமுழுதும் விளையும் நித்யவழுதன Clove bean என்ற பீன்ஸ் வகையும் பூக்களுடன் காட்சி தருகின்றது  ..இந்த வகை பீன்ஸ் இப்போதெல்லாம் காண்பது அரிது .மேலும் வளரி பயிர் சிறகு அவரை எனும் சதுரபயிர், விதவிதமான மிளகாய் வகைகள் மற்றும் கோவைக்காய் பூசணி  போன்ற படர்கொடிவகைகளும் வளர்ந்துள்ளன .

தன வீட்டு தோட்ட விளைச்சலை அண்டை அயலாருக்கு விற்று அதன் மூலம் வரும் பணத்தை பள்ளி படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கவும் வீட்டின் கொல்லைபுறத்தில் ஆட்டுப்பட்டி அமைக்க சுய உதவிகுழுவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்கவும் பயன்படுத்துகிறான் நந்து !!
வீட்டு தோட்ட காய்கறிகளை சுமார் எவ்வளவுக்கு விற்பனை செய்கிறார்  என்று வினவியபோது 
25 ரூபாய்க்கு 1 கிலோ சிறகு அவரை விற்பேன் என்கிறார்...(இன்று நான்  200 கிராம் 3:50 பவுண்டு கொடுத்து வாங்கினேன் இங்குள்ள ஆசிய கடையில் ) !! ..வெளிநாட்டில் வருடந்தோறும் வெயில் மட்டும் இருந்தால் எல்லா இடத்திலும் இந்த 25 ரூபாய்க்கு சிறகு அவரை இங்கும் சாத்தியமே !!

இவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அல்போன்சா கூருகிறார்  பல நேரங்களில் நந்து காய்கறிகளை இலவசமாகவே தந்து விடுவாராம் ! இவரிடம் விளையும் அத்தனை  இயற்கை முறையில் நச்சு உரமின்றி பூச்சி மருந்தின்றி விளைவதால் அனைவருக்கும் நந்துவின் தோட்ட விளைச்சல் மிக விருப்பமாம் !
இயற்கை வேளாண்மையில் சாதிக்க செடிகொடிகளை வளர்க்க இவருக்கு உதவுவது இவர் தோட்டத்தின் 5 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறிய எண்ணிக்கையில் உள்ள வாத்துக்கள் வான்கோழிகள் ஆடு முயல் மற்றும் கோழிகள் போன்ற உயிரினங்கள் இவையெழுப்பும் ..பல்வேறு கலவையான ஒலிகள்  தோட்டத்தில் இருந்து காற்றில் பரவி காதுகளை அடையும் .மேலும் செங்கலாலான மீன் தொட்டி ஒன்றும் அதில் கப்பி கெளுத்தி மற்றும் ஒருசில வகை மீன்களும் வளர்க்கின்றார் .இந்த தொட்டியின் நீரும் செடிகளுக்கு பயன்படுத்துகிறார் .மீன் தொட்டியின் நீர் சிறந்த உரமாகிறது ,ஆடு முயல்களின் கழிவுகளையும் உரம் தயாரிக்கிறோம் என்கிறார் நந்துவின் இளைய சகோதரி அனிலா .இவர் தோட்ட செடிகளையும் விலங்குகளையும் பராமரிக்க நந்துவுக்கு உதவி செய்கிறார் .
தேர்ந்த விவசாயிகளுக்கே இயற்கை பாரபட்சம் செயும்போது இவர்களை விட்டுவைக்குமா என்ன !
கால்வாய் மற்றும் குளங்கள் போன்றவற்றில் வறட்சியால்  நீர் குறைவதால் இவர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சில செடிகள் காய்ந்துவிட்டனவாம் கடந்த ஆண்டு பாகல் தக்காளி கத்திரி என அமோக விளைச்சல் ஆனால்  இவ்வருடம் குறைவு என்று வருத்ததுடன் கூறுகிறார்கள் அணிலாவும் நந்துவும் .வறட்சி மட்டுமின்றி பலத்த காற்று மற்றும் அருகிலுள்ள இஸ்ரோ வளாகத்துக்கு வரும் குரங்குகளும் இந்த தோட்டங்களை  விட்டு வைப்பதில்லை ஆகவே வாழைக்குலைகளை சாக்கு பையினால் சுற்றி கட்டி வைத்துள்ளார்கள் ! பழங்களை முன்னோர்களிடமிருந்து காப்பாற்ற !!.. ஹ்ம்ம் காடுகள் என்று இருந்தால் மனிதனால் அவை ஆக்கிரமிக்கப்படாதிருந்தால்  !குரங்கினங்கள் அங்கிருக்கும் இப்படி நகரத்துக்கு உணவு தேடி வீட்டை நாடி வராதே :( ..
எத்தனை குறைகளிருந்தாலும் அடுத்த ஓணம் பண்டிகைக்கு இப்போதே தங்கள் வீட்டு தேவைக்கு பீன்ஸ் பயிரிட்டுவிட்டார்கள் இந்த மாணவ ஒருங்கிணைந்த பண்ணை விவசாயிகள் !..
 மாணவ பருவத்திலேயே இயற்கையை நேசித்து நஞ்சில்லா காய்கறிகளை வீட்டுதோட்டத்தில் பயிரிடும் இவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களே !!

தகவல் மற்றும் படம்  இந்தியன் எக்ஸ்ப்ரஸ் கொச்சின் .

========================================================================
கீதா அவர்களின் தனியொருவன் பதிவு பார்த்ததும் எனக்கு எங்க வீட்டு மீனு என்ற மீனாட்சி நினைவுக்கு வந்தாள் ..ரொம்ப வருஷம் முன்பு நடந்தது ..அப்பா அப்போ அருப்புகோட்டை பக்கம் வேலை செய்துகொண்டிருந்தார் எதோ ஒரு வேலையாக மதுரை செல்ல வேண்டியிருந்ததாம் ஜீப்பில் தான் அரசு அதிகாரிகள் அப்போ செல்வார்கள் .
அப்பாவின் ஜீப்பை ஓட்டிய ட்ரைவர் அன்று மிகவும் பதட்டத்தில் வேகமாக வண்டியை ஒட்டினாராம் அவருடைய மனைவிக்கு தலைப்ரசவம் 
உடனே ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கணும் அலுவல் முடிந்ததும் வீட்டுக்கு போகணும் என்று அவசரத்தில் ஒட்டினாராம் ..அப்போ அவர் எதிர்பாராதவிதமா கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் வந்த நாலுகால் ஜீவனை கவனிக்காமல் மோதிவிட்டார் ..வண்டியை நிறுத்திவிட்டு ஓவென்று அழுதுவிட்டாராம் ..உயிர் மட்டும்தான் போகவில்லை ஆனால் ரத்த சகதியில் அந்த ஜீவன் அங்குள்ளவர்கள் தூக்கிஎரிய சொன்னார்களாம் குப்பைத்தொட்டியில் ..ஆனால் அப்பா மனசுகேளாமல் ஒரு கூடையில் அள்ளிபோட்டு முதலுதவி செய்து அருப்புகோட்டையில் சுமார் 3 மாதங்கள் கவனித்து பராமரித்திருக்கிறார் ..பின்பு அதை எடுத்த இடத்திலேயே கொண்டு விட சென்றார்களாம் டிரைவரும் அப்பாவும் ஆனால்  அது ஜீப்பை விட்டு இறங்காமல் அடம்பிடிக்கவும் நன்கு பழகி விட்டதால் அப்பாவும் அதைபிரிய மனசில்லாமல் ஒரு நாள் ரயிலில் ஏற்றி சென்னைக்கு கொண்டுவந்தார் .அந்த நாலுகால் ஜீவனுக்கு அந்த டிரைவர் வைத்தபெயர் மீனாட்சி ....
மீனாட்சி ஒரு உயர்ரக ராஜபாளையம் நாய் ..அது எப்படி ரோட்டுக்கு வந்ததென்று தெரியல ...பலர் ஆசைப்பட்டு வாங்கி வளர்க்க முடியாம ரோட்டில் எங்கோ கொண்டு விடுகின்றனர் :( வாயில்லா  ஜீவனுக்கு என்ன தெரியும் பாவம் .ரோட்டில் அலைந்து திரிந்து வாழ்கையை நடத்துதுங்க ...மீனாட்சி எங்க வீட்ல 12 வருஷம் இருந்தாள் .படத்தில் இருப்பது மீனாட்சி .
========================================================================

சிறகு அவரை /சதுரபயிர் 
-----------------------------------------
இந்த அவரையை முன்பு ஆசிய கடையில் பார்த்திருக்கேன் ஆனா சமைக்க தெரியாததால் வாங்கியதில்லை .சமீபத்தில் மீண்டும் பார்த்தேன் உடனே மேனகா கிட்ட ரெசிப்பி கேட்டு சமைத்தேன் ..ஆஹா ருசியோ ருசி !
பீன்ஸ் தோரன் போலத்தான் சமைக்கணும் 


மெல்லியதாக நறுக்கினால் சதுர வடிவில் வருவதால் சதுரபயிர்னு சொல்றாங்களோ தெரியலை .அதை கடுகு வெங்காயம் சிவப்பு மிளகாய் கூட சேர்த்து தாளித்து உப்பு அப்புறம் தேங்காய் துருவலுடன் வதக்கிசேர்த்து மூடிபோட்டு வேகவைத்து நன்கு வெந்ததும் ஏற்கனவே வேகவைத்த பாசிபருப்பையும் சேர்த்து கலந்து விட்டேன் .பாசிபருப்பை பாத்திரத்தில் நீர்சேர்த்து 10 நிமிஷம் வேக வைத்து சேர்த்தேன் .

மஞ்சள் மாங்கா இஞ்சி ஈசி ஊறுகாய் ..
--------------------------------------------------------------


இது குஜராத்தி நண்பி ஒருவர் சொன்ன ரெசிப்பி ..
இங்கே எங்களுக்கு வட இந்தியர் உணவு வகைகள் தாராளமாக கிடைக்கும் .
பச்சை மஞ்சள் எப்பவும் கடையில் பார்ப்பேன் அதுபோலதான் மாங்கா இஞ்சியும் ..
குஜராத்தியர் இதில் தாளிக்காமல் ஊறுகாய் செய்கிறார்கள் .
மஞ்சளில் தனியாகவும் மா இஞ்சியில் தனியாகவும் செய்யலாம் நான்  இரண்டையும் சேர்த்து செய்தேன் ..
தேவையான பொருட்கள்
------------------------------------------
மஞ்சள் கிழங்கு ....1
மாங்கா இஞ்சி ....1 
எலுமிச்சை சாறு இரண்டு பழங்களில் பிழிந்தது ..
உப்பு தேவையான அளவு ..
இரண்டு கிழங்குகளையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி ஒரு பாட்டிலில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து அவை மூழ்குமளவு எலுமிச்சை சாறு ஊற்றி இருக்க மூடி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் .
தினமும் தொடர்ந்து 7 நாட்களுக்கு எடுத்து குலுக்கி மீண்டும் உள்ளேயே வைக்க வேண்டும் 7 வது நாள் நன்கு ஊறியிருக்கும் உணவுடன் ஒன்றிரண்டு துண்டுகள் சாப்பிட வேண்டும் ..
எளிமையான ருசியான ஊறுகாய் ..

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் ..
************************************************************************************************************

44 comments:

 1. மாங்கா இஞ்சியை ஃப்ரெஷ்ஷாக பிஞ்சாக வாங்கி வந்து தோல்சீவி, பொடிப்பொடியாக நறுக்கி, உப்புப்போட்டு, எலுமிச்சை சாறு ஊற்றி, கடுகு + பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டினால் போதும். உடனடியாகவே உபயோகிக்கலாம். மோர்/தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !கிடைச்சாச்சி இன்னொரு ரெசிப்பி ..இதையும் செய்கிறேன் விரைவில்..Thanks Gopu Anna

   Delete
  2. மஞ்சள் கிழங்கெல்லாம் சேர்க்கத் தேவையேயில்லை. மாங்கா இஞ்சிமட்டும் காய்ந்ததாக இல்லாமல், ஃப்ரெஷ்ஷாக பிஞ்சாக கையால் உடைத்தால் உள்ளே பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் பசுமையாக இருக்குமாறு இருந்தால் போதும். அவற்றை நன்கு அலம்பிவிட்டு, இஞ்சிபோல கத்தியால் தோலை மட்டும் சீவி விடவும். பிசறும் வடு மாங்காய் போலப் பொடிப்பொடியா வெட்டிக்கொண்டு, எலுமிச்சம்பழம் பிழிந்து, உப்பு சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே உடனடியாக வாயில் போட்டு கடித்துச் சாப்பிடலாம். வாய்க்கு மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். ஒருவாரம் ஊற வைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு கால் கிலோ மாங்கா இஞ்சி வாங்கி வந்தால், மோர்/தயிர் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள அது ஒரு வாரத்திற்குள் நிச்சயமாகக் காலியாகிவிடும். :) மாங்காய் போலவே வித்யாசமான ருசியாகவும் மணமாகவும் இருக்கும். ஜீரணத்திற்கும் மிகவும் நல்லது.

   Delete
  3. மஞ்சள் கிழங்கெல்லாம் சேர்க்கத் தேவையேயில்லை. மாங்கா இஞ்சிமட்டும் காய்ந்ததாக இல்லாமல், ஃப்ரெஷ்ஷாக பிஞ்சாக கையால் உடைத்தால் உள்ளே பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் பசுமையாக இருக்குமாறு இருந்தால் போதும். அவற்றை நன்கு அலம்பிவிட்டு, இஞ்சிபோல கத்தியால் தோலை மட்டும் சீவி விடவும். பிசறும் வடு மாங்காய் போலப் பொடிப்பொடியா வெட்டிக்கொண்டு, எலுமிச்சம்பழம் பிழிந்து, உப்பு சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே உடனடியாக வாயில் போட்டு கடித்துச் சாப்பிடலாம். வாய்க்கு மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். ஒருவாரம் ஊற வைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு கால் கிலோ மாங்கா இஞ்சி வாங்கி வந்தால், மோர்/தயிர் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள அது ஒரு வாரத்திற்குள் நிச்சயமாகக் காலியாகிவிடும். :) மாங்காய் போலவே வித்யாசமான ருசியாகவும் மணமாகவும் இருக்கும். ஜீரணத்திற்கும் மிகவும் நல்லது.

   Delete
  4. நோஓஒ கர்ர்ர்ர் இம்முறையும் கோபு அண்ணனோ ... மீ தான் 1ச்ட்டூஊஊஉ��������

   Delete
  5. ✍(◔◡◔) ( ◡́.◡̀)\(^◡^ )

   Delete
  6. REVISED:

   இந்த அதிரா என்ற மாமி யாரு? எப்போதுமே என்னை வம்பு இழுக்குறாங்க :(

   எங்கேயோ கேட்ட பெயர் போலவும் மிகவும் பழகியதுபோலவும் ஞாபகம் வருகிறது. ஆனால் யாருன்னே சரிவரத் தெரியமாட்டேங்குது.

   சரி போகட்டும் யாராக இருந்தால் நமக்கு என்ன?

   Delete
  7. அதுதானே கேளுங்க கோபு அண்ணா !சும்மா அப்பப்போ மின்னல் மாதிரி வராங்க அதுவும் லேட்டா வந்திட்டு தான் first என்று சத்தம் வேற :))

   Delete
  8. அப்போ இவரு:) அவரு :) இல்லயா? அஞ்சூஊஉ கொஞ்சம் மூக்குக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்துச் சொல்லுங்கோ:) , நேக்கும் எங்கயோ பார்த்த நியாஆஆஆஆபகமாவே இறு:)க்கே:).

   Delete
  9. யாராச்சும் பெரிய magnifying glass கொடுங்க இந்த பூனைக்கு :)

   Delete
 2. பள்ளியின் படிக்கும் போதே, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, காய்கறிகள் உற்பத்திசெய்யும் விவசாயியாகவும் செயல்படும் நந்து பாராட்டுக்குரியவர். மற்ற செய்திகளும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அண்ணா ! இளம் வயதிலேயே எவ்ளோ ஒரு பெரிய விஷயம் .உழைத்து வாழனும் அதுமட்டுமில்லாம இயற்கை முறையில் தோட்டம் என அவர்கள் பாராட்டுக்குரியவர்களே !வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு அண்ணா

   Delete
 3. ஆட்டுக்குள் மாட்டை விட்டு, மாட்டுக்குள் மீனாட்சியை விட்டு, அவரையில் பொரியல் செய்து மாங்காய் இஞ்சியை சைட் டிஸ் ஆக்கி ஒரு போஸ்ட் போட்டாச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:), சமையல் குறிப்புக்களை தனிப் பட்டியல் இடும்படி, மகுயினின் பேத்தி, சுவீட் 16 அதிரா ஆணையிடுகிறார்.....

  ReplyDelete
  Replies
  1. இங்கே வருபவர்கள் மற்றும் கோபு அண்ணா சாட்சி 1
   நீங்க ரெண்டு நாளில் ப்ளாக் போஸ்ட் போடல்லைனா உங்க ப்ளாக் படங்கள் பொருட்களை நான் ஏலத்தில் விடுவேன்

   Delete
  2. கிச்சன் கார்னர் லேபில் கொடுத்திட்டேன் இப்போ miyaav

   Delete
  3. என்னாதூஊஊஊ ஏலமோ? விடுங்கோ விடுங்கோ என் புளொக்கை முதலில் காப்பாற்றப்பபோறேன்ன்ன்ன்ன் அப்புறம்தேன் எல்லாம்:)

   Delete
  4. முடிஞ்சா காப்பத்திகோங்க உங்க ப்ளாகை :)

   Delete
 4. அனைத்து அவரை வகைகளுமே எனக்கு ரொம்ப புய்க்கும் ஆனா இங்கு கிடைக்காதே:(. நந்துவின் தோட்டம் நினைக்கவே ஆசையா இருக்கு, எங்களுக்கும் அப்படி வெதர் இருப்பின் நானும் நிறைய செய்வேன், மனமிருந்தும் முடியாமல் இருக்கு....

  ReplyDelete
 5. மீனாட்சிக்கு பக்கத்திலே கை சூப்பியபடி நிற்கும் குட்டிப் பொண்ணு ஆரு? அஞ்சுதானே?:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் பூனைக்கு கண்ணு ரொம்ப ஷார்ப் :) சரியா கண்டுபுடிசிருச்சே

   Delete
  2. அதூஊஊஊஉ மூக்கால் வடிவதைப் பார்த்துக் கண்டுபிடிச்சேன்..... மீ எஸ்ஸ்ஸ்ஸூஊஊஊஊஉ🏃🏾

   Delete
 6. ஏஞ்சல் நந்து மாணவ விவசாயிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள். அருமையான தொழிலைச் செய்துவருகின்றார்...இயற்கையோடு ஒன்றி...அதுவும் இந்தச் சிறியவயதில்...பாராட்டுவோம்...வாழ்த்துவோம்....மனதிற்கு மகிழ்வாக இருக்கின்றது. பொதுவாகவே கேரளாவில் பெரும்பான்மையோர் தனி வீடு, தோட்டம் சிறியதாக இருந்தாலும் மண்ணின்றி வாழ்வதில்லை என்பதால் அவர்களே தோட்டம் வைக்கின்றார்கள். மருந்தில்லாத நல்ல காய்கள், பழங்கள், கீரைகள் வீட்டிலெயே..

  மீனாட்சியைக் காப்பாற்றிய தங்கள் தந்தை ஒரு சிறந்த உதாரண்மாகத் திகழ்ந்திருக்க வேண்டும் நல்ல வெட் ஆக....மீனாட்சியைக் காப்பாற்றி உங்கள் வீட்டில் வளர்த்து என்று ..என்ன ஒரு அருமையான செயல்...மீனாட்சி கொடுத்துவைத்திருக்க வேண்டும் ..அப்பா எடுத்துச் சென்றிருக்காவிட்டால் குப்பைத்தொட்டிக்குப் போய்ருக்கும் உயிரிழந்து...

  சதுரபயிர் செய்வதுண்டு...நல்ல தகவல்.

  மா இஞ்சி ஊறுகாய் போட்டிருக்கேன் ஏஞ்சல். மான் இஞ்சி இங்கு கால்கிலோ 60 ரூபாய். மா இஞ்சியைக் கழுவி தோல் சீவி, சிறியதாக கட் செய்து எலுமிச்சை பிழிந்து, உப்பிட்டு கடுகும், பெருங்காயம், பச்சைமிளகாயும் தாளித்தால் சுவையாக இருக்கும். இப்படிச் செய்துவிட்டு பச்சைமிளகாய் இல்லாமல், எண்ணையில் கடுகு தாளிக்கும் போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் பெருங்காயம் போட்டு, வறுத்த வெந்தயப் பொடி போட்டு, கடுகு வெடித்ததும் மா இஞ்சியில் தாளித்தால் சுவையாக இருக்கும். மா இஞ்சியைத் துருவிக் கொண்டு நல்லெண்ணையில் கடுகு தாளித்து துருவிய இஞ்சியைப் போட்டு மஞ்சள், மிளகாய்தூள், பெருங்காயம் உப்பு எல்லாம் போது நன்றாக வதக்கி இறுதியில் வறுத்த வெந்தயப் பொடியும் போட்டு வதக்கிவிட்டு இறக்கினால் மா இஞ்சிச் தொக்கு.

  பகிர்வுக்கு மிக்க நன்றி ஏன்சல்.

  கீதா  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அண்ட் கீதா ..மீனாட்சி மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கு அப்பா ட்ரீட்மென்ட் கொடுத்த மாடு ஒன்று பற்றி எழுதணும் விரைவில் பகிர்கிறேன் .
   கேரளாவில் எல்லார் வீட்டிலும் தோட்டம் இருக்கும் ..வீடு சிறிதாக இருந்தாலும் தோட்டம் பச்சைப் பசேல்னு இருக்கும் ..இங்கே இங்கிலாந்தில் மட்டும் தொடர் வெயில் இருந்தா எவ்ளோ நல்ல இருக்கும் !ஒரு சதுரபயிரை காயவச்சி ரெண்டு விதை எடுத்தேன் முளைக்கும் என்ற நம்பிக்கையில் நட்டிருக்கேன் :)
   வாவ் !தாங்க்ஸ் மா இஞ்சி தொக்கு ரெசிப்பிக்கு ..இங்கே நார்த் இந்தியன்ஸ் ஏரியா என்பதால் வருடம் முழுக்க கிடைக்கும் ..செய்கிறேன் விரைவில் மா இஞ்சி தொக்கையும் .வருகைக்கும் கருத்துக்கும் சுவையான ரெசிப்பிக்கும் நன்றி

   Delete
 7. வணக்கம்
  இஞ்சி ஊறுகாய் செய்முறை விளக்கம் மற்றும் ஏனைய தகவலும் சிறப்பு.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ரூபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 8. நந்துவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். இந்தக் காலத்தில் இவரைப்போன்ற இளைஞர்களைக் காண்பது அபூர்வம்.

  மீனாட்சி பற்றிய பகிர்வு எங்கள் மோதியை நினைவு படுத்தியது!

  இதைத்தான் சிறகு அவரை என்பார்களா? வாங்கிச் சமைத்திருக்கிறோம். ஏனோ இதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.

  மாங்காய் இஞ்சி நாங்களும் செய்வோம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஸ்ரீராம் ..மோதி //..எழுதியிருக்கின்களா பதிவில் மோதி பற்றி ..
   எங்க குடும்பத்தில் இப்படி நிறைய இருக்கு எழுத .அடுத்து ஒரு மாடு கதையும் இருக்கு பகிர்கிறேன் .உண்மையில் நம் நாட்டு வாழ்க்கைக்கே மனம் எங்கும் எப்பவும் இங்கிருந்தாலும் என் மனசு அங்கே நம்ம ஊரில்தான் .அப்போ சிறகவரை சென்னையிலும் கிடைக்குதா !இது கேரலைட் மக்களின் பிடித்த உணவாம் .

   Delete
 9. நந்துவைப் பற்றி தெரிந்து சந்தோஷமா இருக்கு. அவரோட தோட்டம் நல்லபடியா செழித்து வளரணும்..தண்ணிப்பஞ்சமும் வராம இருக்கணும்.

  மீனாட்சி சூப்பரப்பு! :)

  சதுரபயிர் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..ஹிஹி..!! எனக்கும் அவரைக்காயின் எல்லா வெரைட்டியும் பிடிக்கும், ஆனா இங்கே கிடைப்பதே அரிது. ஹூம்ம்!! போட்டோ எடுக்கும்போது பொரியல் கிண்ணம் ஒரு டான்ஸ் ஆடீருச்சு போலிருக்கு! ;)

  நானும் மஞ்சள் கிழங்கு வாங்கினேன் அக்கா, ஆனால் சமைச்சப்ப சொதப்பிருச்சு!! எனக்கு மஞ்சள் வாசனை பிடிக்கும், உரைச்சு குளிக்க! ஆனா சாப்பிடும்போது...ஊஹூம்!! இவர்தான் சாப்பிட்டாரு..நல்லா இருக்குன்னாரு..ஆனா ரொம்ப வேலை, தோலை சீவி, துருவின்னு!! பாத்திரம், கட்டிங் போர்டு, என்ர கை எல்லாம் மஞ்சளோ மஞ்சள்! இன்னும் காய் சீவில கூட மஞ்சள் நிறம் இருக்குன்னா பாருங்களேன்..!! மா இஞ்சி எனக்கு பிடிக்கும், இங்கே கிடைக்குமான்னு தெரில.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மஹி :) அது சுட சுட எடுத்த போட்டோ அதான் அப்படி :)
   அந்த மஞ்சள் இங்கே என்னோட வெள்ளை கட்டிங் போர்டெல்லாம் மஞ்சளாக்கி விட்டது !
   aww same pinch :)ஸ்க்ரேப் செஞ்சேன் சாலடில் சேர்க்க இன்னும் அந்த ஸ்க்றேப்பர் மஞ்சலாவே இருக்கு அவ்வ்
   இந்த பஞ்சாபிஸ் குஜராதிஸ் மட்டும் அள்ளிட்டு போறாங்க இதை.
   மா இஞ்சி அங்கே வட இந்தியர் கடைல பாருங்க கிடைக்கும் இங்கே கீதா கோபு அண்ணா எல்லாரும் நிறைய ரெசிப்பிஸ் கொடுத்தாங்க அதில் ...

   Delete
 10. பூசக்கா வந்திருக்காக போல!! :)

  //அதூஊஊஊஉ மூக்கால் வடிவதைப் பார்த்துக் கண்டுபிடிச்சேன்.....// ஹஹஹாஆஆ!! அதெப்படி பூஸுக்கு இதெல்லாம் தெரியுதோ??? எனக்கு ஃப்ராக் போட்ட 2 காலு மட்டும்தானே தெரியுதூஊஊஊ!!?!?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) அந்த சொக்கா போட்ட கல என்னுதில்லை மஹி :)
   என் கால் மீனாட்சிக்கு பின்னாடி இருக்கு :)பூசுக்கு மண தக்காளிக்கும் மற்ற தக்காளிக்குமே வித்தியாசம் தெரியாது :)
   சும்மனாச்சும் பில்டப் கொடுத்திட்டு திரியுது குண்டு பூஸ்

   Delete
  2. யாராச்சும் மீயைப் பத்திப் பெசினவையோ இங்கின:) மஞ்சள் பூ மஹி வடிவாப்பாருங்கோ மூக்கும் தெரியுதே:)

   Delete
 11. நந்து பற்றிய பதிவு அருமை..அப்படி வாழ்வுக்கு ஏங்குகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ .வருகைக்கு நன்றி ..இந்த நந்துவின் வீட்டைப்போல ஒரு வாழ்வுக்கு நானும் ஏங்குகின்றேன் .இங்கே எங்க ஊரில் இடமிருக்கு ஆனன தட்பவெப்பம் மூன்று மாதம் வெயிலை பார்த்தா அபூர்வம் அதில் மழையும் சேரும் :( ஹ்ம்ம் .நந்து மாதிரி நிறைய பேர் உருவாகட்டும் நம் நாட்டில்

   Delete
 12. எனக்கு கேரளா மிகவும் பிடித்த இடம்.கிட்டதட்ட இலங்கையில் கண்டி க்கு போனமாதிரி இருக்கும்.பச்சைபசேல்ன்னு. நல்ல காலநிலையும் கூட. நீங்க சொன்னமாதிரி சின்னதா ஒரு வீடு,தோட்டம் இருக்கும்.நாங்க நின்றவீடும் அப்படியானதொன்று. அவங்களே தோட்டம் செய்றாங்க.
  மிகவும் பாராட்டப்படவேண்டிய மாணவன் நந்து. இந்த வயதில் என்ன ஒரு சிந்தனை. இப்படியானவங்களை பாராட்டவேணும்.
  வாயில்லா ஜீவனுக்கு இருக்கும் அறிவு.!! தன்னை காப்பாற்றியவருக்கு நன்றியாக இருந்திருக்கு. நல்லகாலம் அப்பா சென்ற வண்டியில் மோதியதால்தான் உயிர்தப்பியிருக்கு. அவரும் கஷ்டப்பட்டு காப்பாற்றிவிட்டார்.
  நானும் சதுர அவரை பார்த்துக்கேன். நானும் தெரியாததால் ரிஸ்க் எடுக்கல. நீங்க சொன்னதன் பின் இனி சமைக்கலாம்.மாங்கா இஞ்சி தேடியும் கிடைக்கல.
  நல்லதொரு பகிர்வு அஞ்சு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா கேரளா மக்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்பவர்கள் இப்போ அவர்களும் நம்மைப்போல சென்னைவாசிகளை போல மாறிடக்கூடாது என்பதே எனது வேண்டுதல் .சிறகவரை இங்கே இலங்கை தமிழ் கடையில் தான வாங்கினே

   Delete
 13. அஞ்சுஊ யாரது புதுசா வந்திருக்காங்க... என்ன ஓரே சத்தமா இருக்கே என நினைத்தேன். ஆ.வ்வ்வ்வ் அதிரா வந்திருக்காக..!!
  இனி அப்போ தூசு தட்டப்போறாங்க அவங்களும்..நான் ப்ளாக் ஐ சொன்னேன்.சந்தோஷம் வாங்க பூஸ்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியா நேற்று இங்கே பூனையால் நிலநடுக்கம் ..இருங்க ஒரு கர்ச்சீப் தரேன் பூனை 2014 லருந்து தூசு தட்டல அதனால் கவனமா மூக்கில் துணி கட்டிக்கிட்டு வாங்க :)

   Delete
  2. நோஒ நான் மாட்டேன் நான் மாட்டேன் எனக்கு தூசு அலர்ஜி:) அதனால அப்பூடியே விடப்போறேன்ன்ன்ன்ன்:)

   Delete
 14. அன்றைய நாட்களில் இந்த மாணவனைப் போலவே - நிறைய நண்பர்கள் எனக்கு!..

  ஆனால் இன்றைக்கு அவர்களின் சந்ததியரால் எப்படி விவசாயத்திலிருந்து வெளியேற முடிந்தது?.. புரியவில்லை.

  பாருங்கள் - வாயில்லா ஜீவனின் மீது மோதி விட்டதற்காக கதறி அழுத ஓட்டுனரை.. அப்படியான மனிதர்களும் இருந்திருக்கின்றார்கள்..

  ஆனால் - இன்றைக்கு மகா பயங்கரமான விபத்துகளை ஏற்படுத்திய பின்னரும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல்!...

  பற்பல நினைவுகளைத் தூண்டுகின்றது - இந்தப் பதிவு..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா ..இதே கேள்வி எப்படி இவ்வளவு இயற்கை சூழலான இடங்களை விட்டு வெளியேற முடிந்தது நம்மால் எனக்கும் தோணிச்சு ..அது இயலாமை தான் .சமீபத்தில் ஒரு செய்தி குடும்பத்துடன் கடன் தொல்லையால் ஒரு விவசாயி தற்கொலை பற்றி படித்தேன் மனதுக்கு வருத்தமா போச்சு
   அவங்க நிலைக்கு நாமும் ஒரு காரணமே :(
   சந்தையில் வாங்காமல் சூப்பர் மார்கெட்டில் பணத்தை கொட்டறோம் அப்போ இந்த ஏழைகள் என்ன செய்வாங்க ..அரசாங்கமும் உதவி செய்வதில்லை பாவம் அவர்கள் நிராயுதபாணிகள் .
   நாம் அனைவரும் இயற்கை முறையில் விளைந்ததை மட்டும் நம் நாட்டு பொருட்களை மட்டும் உண்போம் என உறுதியுடன் இருந்தால் மிச்சமுள்ள விளைநிலங்கள் தப்பிபிழைக்கும் .

   Delete
 15. விவசாயம் அருகி வரும் நிலையில் விவசாயம் செய்யும் அந்த மாணவரை வாழ்த்துவோம்.

  பல்சுவையைக் கலந்து கொடுத்த பகிர்வு... அருமை.

  ReplyDelete