அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/2/16

Loud Speaker ...33

இன்றைய ஒலிபெருக்கியில்  கோழித்தோழி  ஹென் :) ,வாழ்நாள் முழுக்க kit kat ,பூனைகளுடன் புத்தகம் வாசித்தல் (cat therapy ) 
நானும் கோழித் :) தோழி  ஹென்னும் ..
-----------------------------------------------------------

இங்கே மகள் ப்ரைமரி ஸ்கூலில் எனக்கு கிடைத்த இரண்டு நட்புக்கள் 
ஒருவர் huyen nguyen வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்  இன்னொருவர் ரீஸா பாகிஸ்தானியர் ..மூவரும் ஒன்றாகவே பள்ளி விடும்போது சென்று பிள்ளைகளை அழைத்து வருவோம் .சிலநேரம் மாறி மாறி டைம் டேபிள் போட்டு ஒருவரே சென்றும் பிள்ளைகளை அழைத்து வருவோம் .
இதில் நம்ம ஹென் நிறைய சாக்லேட்ஸ் எனக்கு தருவாங்க .. :) 
அவங்க பேர் எனக்கு வாயில் நுழையாது எனக்கு மட்டுமில்லை யாருக்கும் நுழையாத பெயர் .ஒரு நாள் பாகிஸ்தானிய நண்பி என்னை தொலைபேசியில் அழைத்து இன்று //ஹென் //உங்களை மூவரின்  பிள்ளைகளையும்  அழைத்து வர சொன்னார்  என்றார் ..நான் யார் அது ஹென் என்றேன் ..அதற்க்கு ரீசா சொன்னார் ..கிம் இன் அம்மா . எனக்கேற்றார்போல வசதிக்கு ஹென்ஆக்கிட்டேன் என்றார் :)))அப்போ என் பெயர் என்று மெதுவா கேட்டேன் 
அதற்க்கு an ஷொர்ட் அன்ட் ஸ்வீட் என்றது :) 
ஹென்  விதவிதமா அகர் அகர் ஜெல்லி செய்வார் ..குழாய் புட்டு அதில் கிட்னி பீன்ஸ் தேங்காய் வெல்லம் போட்டு செம டேஸ்டா இருக்கும் ..
..இந்த ஹென் உடன் பள்ளி எதிரில் இருக்கும் ஆசிய மார்க்கெட்டுக்கு ஒருமுறை சென்றேன் பத்து பாகற்காய்களை அள்ளி எடுத்தார் ..நான் ஆச்சர்யமுடன் கேட்டேன் நீங்க இவற்றை சமைப்பீர்களா !!

உடனே ஆமா என்றார் //நாங்க பாகற்காயில் சூப் செய்வோம் நாளை உனக்கு செய்து தரேன் எனவும் எனக்கும் ரொம்ப சந்தோஷம்..அடுத்தநாள் சென்றேன் டேபிளில் அழகா சூப் கோப்பைகளில் பாவக்கா முழுசா மிதக்குது..சூப் ருசியாவே இருந்தது !முள்கரண்டி எடுத்து பாவக்காயை குத்தி வாயில் வைத்து கடித்தேன் எதோ வித்யாசமாக பட்டது !! அவரிடம் இதில் என்னென்ன சேர்த்திருக்கு எனவும் அவர் சொன்னதைகேட்டு மயங்கி விழாத குறை !! உள்ளே நெத்தி கருவாடும் சிக்கனும் வேகவைத்து அரைத்து  stuff செய்தாராம் .நான்  சைவம் என்பதை அவருக்கு சொல்லவில்லை என் தவறுதான் ..கயிறு போட்டு கட்டி இருந்ததால் உள்ளே என்ன இருக்குன்னு எனக்கு சின்ன டவுட் கூட வரல்லை !அதுவுமில்லாம அம்மா எப்பவும் சொல்வார் ஒருவர் அன்போடு கொடுப்பதை ஆராயக்கூடாது வாயில் போட்டுக்கணும் என்று ..ஒருவாறு சுதாரித்து ..உடனே அவசரமா நான் வீட்டுக்கு போணும் எலெக்ட்ரிசிடி  மீட்டர ரீடிங் எடுக்க வராங்க இந்த சூப்பை வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிடுகிறேன் என்று பாக் செய்து வீட்டுக்கு கொண்டு வந்தேன் !அது குப்பைதொட்டிக்கு போனது ஹென்னுக்கு தெரியாது அவ்வவ் ..
ஹென்  பேசுவது அந்த பள்ளியில் எனக்கும் ரீசாவுக்கும் மட்டுமே புரியும் ..
beef அவர் வாயில் பீப் ,டீச்சர் ரீச்சர் ,ஸ்டமக் ..டமக் .fish பிஸ் ,மை சிஸ்டர் இன் லா ...மை சிசர் இன் லவ் careful ..கேவல் இப்படி சொல்லிட்டே போலாம் ..ப்ரைமரி முடிந்து மகள் வேறு செகண்டரி பள்ளி போனாள் அத்துடன் தொடர்பு விட்டுப்போனது ரொம்பநாள் கழிச்சி இன்று அந்த ஹென் எனக்கு போன் செய்து தனக்கு பிரிட்டிஷ் சிடிசன்ஷிப் கிடைத்துவிட்டதை மகிழ்வுடன் சொன்னார் ..
=======================================================================

Kit Kat 
----------

இங்கே மல்ட்டி pack kit kat wafer சாக்லேட்ஸ் சைமா அஹமத்னு ஒரு 20 வயது பொண்ணு வாங்கியிருக்கா .
ஒரு பாக்கெட்டில் 8 சாக்லேட் இருக்கும் ஆனா இந்த பொண்ணு வாங்கின பாக்கெட்டில் சாக்லேட் இருக்கு wafer இல்லையாம் ..{நம்ம ஊரா இருந்தா அதுதான் இதுன்னு ஜோக்கடிச்சி சமாளிச்சிரலாம் }அந்த எட்டு பாரிலும் வெறும் சாக்லெட்டா இருந்திருக்கு உடனே நெஸ்லே கம்பெனிக்கு லெட்டர் போட்டிருக்கு //நீங்க எனக்கு வாழ்நாள் முழுதும் சாக்லேட் அனுப்பி வைக்கணும் wafer இல்லாத சாக்லேட்டை விற்று என்னை ஏமாத்திட்டீங்க ..
//I would therefore like to request a lifelong supply of KitKat so that I can act as a means of quality control – it appears you need me more than I need you.”// 
அதே போல இன்னொரு பொண்ணு ட்வீட் செஞ்சிருக்கு //My KitKat is waferless and I am sad.
Please respond soon, I am very hungry. // எப்படியெல்லாம் யோசிக்கறாங்க !!
====================================================================

கற்றல் குறைபாடு உள்ள மனிதர்கள் பெரும்பாலும் எதற்கும் பதட்டம் பயம் சுயமாக சிந்திக்கும் திறனின்றி வாழ்க்கையில் முன்னேற கஷ்டபடுவார்கள் .
இங்கே என கணவருடன் வேலை செய்யும் பல ப்ரித்தானியர்களுக்கே ஸ்பெல்லிங் தெரியாது ..banana என்பதை binena ,onion என்பதை anyan என்று ஸ்பெல்லிங் எழுதுவாங்க dyslexic என்று இவர்களுக்கு தனி சலுகையுமுண்டு.எங்கே வாசிக்கும்போதோ எழுதும்போதோ தவறா உச்சரித்து விடுவோமேன்றோ ,எழுதிடுவோமென்று பயந்தே தவறுகளை செய்வார்களாம் :(
போர்ட்லண்டில் இப்படி கற்றல் குறைபாடுள்ளவர்களை புத்தகங்களுடன் cat ஹோமுக்கு கொண்டு சென்று ஆளுக்கொரு பூனையும் கொடுத்து அதன்முன் சத்தமா வாசிக்க செய்தார்களாம் ..என்ன ஒரு விந்தை எல்லாருமே சந்தோஷமா தைரியமா அவர்களுக்கு கொடுத்த ஆங்கில புத்தகத்தை வாசிச்சிருக்காங்க அதில் 24 வயது ஆண் சொல்லியுள்ளார் //மனிதர் முன்னால் வாசிக்க சொன்னா எனக்கு கைகாலெல்லாம் நடுங்கும் ,முக மெல்லாம் அவமானத்தால் சிவக்கும் ஆனா பூனைங்க முன்னாடி வாசிச்சா அதுங்க தவறா இருந்தாலும் கிண்டலோ கேலியோ செய்யாதுங்க ,இவன் படிக்கிறதுக்கே லாயக்கில்லை என்று ஜட்ஜ் செய்யாதுங்க ஆகவே நான் மன தைரியமுடன் பயமில்லாம வாசிக்க முடிகிறது //
பெரியவங்க மட்டுமில்லை ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த முறையை அறிமுகபடுத்தி வெற்றி கண்டுள்ளனர் ஆசிரியர்கள் .படத்தில் உள்ள சிறுவன் ரொம்ப லோ லெவலில் இருந்து பூனைங்க முன்னாடி புக் வாசித்து இப்போ நல்லா தைரியமா படிப்பிலும் கிரேட்ஸ் மேலே வந்திருக்காராம் !

======================================================================
மற்றொரு பதிவில் சந்திப்போம் அன்புடன் ஏஞ்சல் .
24 comments:

 1. பல்வேறு அனுபவங்களுடன் கூடிய பகிர்வு நல்லா இருக்குது. பாராட்டுகள். வாழ்த்துகள். தாங்கள் சைவம் என்பது கேட்க எனக்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) நானும் அம்மாவும் சைவம் எங்கள் வீட்டில் .மீன் மட்டும் சாப்பிடுவேன் ஒரு காலத்தில் என்னை அதுக்கு பிடிக்கல அலர்ஜியா வந்ததால் அதையும் விட்டாச்சு ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
  2. ஆவ்வ்வ் கோபு அண்ணனோ 1ஸ்ட்டூஊஊஊஊ அப்போ மீஈஈஈஈஈஈஇ???:)

   Delete
  3. நீங்க லாஸ்ட்ல first miyaav

   Delete
 2. = தோழி ஹென் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

  = சாக்லேட் விவரமும் அதேபோல!

  = டால்பின் வைத்தியம் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் சகோ :) இப்படி பல வருஷமா வித்தியாசமான மனிதர்களை சந்திச்சிருக்கேன் ..
   ஹென ரொம்ப அன்பானவர் ரோட்டில் நடந்துபோகும்போது பார்த்தா கூட உடனே கைபையில் என்ன ஸ்வீட் பழம் இருந்தாலும் உடனே கொடுப்பார் ..என் கணவர் கூட கேட்பார் எப்படி அவங்க பேசறதை நீங்க மட்டும் கண்டுபிடிக்கிறீங்க என்று ..அன்புக்கு மொழி இல்லையே :) என்பேன் நான்

   Delete
 3. பாகற்காய் சூப் – நல்ல ‘ஜோக்’. உங்கள் மேல் தப்பில்லை. நம்மூர் பக்கம் பாகற்காய் சூப் என்பது பெரும்பாலும் சைவம்தான். உங்களைப் பொறுத்த மட்டில் அன்று, பாகற்காய் சூப் என்பது பாவக் காய் ஆகி விட்டது.

  பூனை வாத்தியார்கள் – அந்நாளில் படித்த ருஷ்ய நாடோடிக் கதைப் புத்தகங்களில் இருந்த கோட்டு சூட்டு போட்ட பூனைகளின் படங்களை நினைவு படுத்தின.

  ReplyDelete
  Replies
  1. அதை விட ஜோக் அடுத்தநாள் அந்த பொண்ணு எப்படி இருந்ததின்னு கேட்டார் அண்ணா .நான் ரொம்ப டேஸ்டி எனவும் ..மீண்டும் செய்து தரேன் என்றாங்க ..நான் இல்லையில்லை எனக்கு ரெசிப்பி சொல்லுங்க வீட்டில் நானே செஞ்சுக்கறேன் என்று சொல்லி சமாளிச்சிட்டேன் ..ஆமாமா ரஷ்ய நாட்டு கதைகளில் பூனைகள் ரொம்ப பெரிய காரக்டர்ஸ் தான்

   Delete
 4. ரசனையான பதிவு..

  ஆனாலும் - நீங்கள் சைவம் எனில் ஜெஸ்ஸி குட்டிக்கு!?..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா :) கணவரும் மகளும் அசைவம் ..மேலும் இங்கே பூனைகளுக்கு ஸ்பெஷல் food அதைதான் தரணும்னு vets சொல்றாங்க ..அதை சமைக்க வேணாம் அப்படியே டின்னை உடைத்து தட்டில் போட்டா 5 நிமிடத்தில் முடிச்சிடுவா

   Delete
 5. ஏஞ்சலின்! அனுபவங்களைப்படிக்கப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா கருத்துக்கும் நன்றி ..இதைவிட பல காமெடிஸ் இருக்கு இங்கே எல்லாவற்றையும் ஒவ்வொன்றா எழுதறேன் :)

   Delete
 6. என் கூட ஜிங் என்று சீன பெண் படித்தார். இங்கு சும்மாவே ஜேர்மன் லாங்வேஜ் உச்சரிப்பு மாறினால் ஒருமாதிரி பார்ப்பார்கள். இவர் பேசுவது மிகவும் சிரிப்பாக இருக்கும். ich heiße என்பதை ஈசி காச என்பார். அது புரியவே கொஞ்சநாள் ஆயிற்று படிப்பித்தவருக்கு.!!
  பாகற்காய்...சூப். சமாளித்துவிட்டீங்க.
  அவ்வ்வ்வ்..!! இந்தகாலப்பிள்ளைகளை என்ன சொல்வது.ம்..
  எல்லா தகவல்களும் செம இன்ரஸ்டிங் அஞ்சு.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ஆமாம் ப்ரியா சைனீஸ் கொரிய ஜப்பானிஸ் உச்சரிப்பு ந்கோய் நோய் என்றே இருக்கும்..
   ஆனா நான் ஹென் பேசறத எப்படியாச்சும் புரிஞ்சிப்பேன் ஸ்கூலில் இருக்கும் நிறையப்பேர் என்னை ஆச்சர்யமா பார்ப்பாங்க எப்படி இந்தியாக்கும் வியட்நாமுக்கும் லாங்க்வேஜ் அட்ஜஸ்ட் ஆகுதுன்னு :)
   பாவக்காக்கு ஆசைப்பட்டு அலறி ஓட வைத்து விட்டது சூப் :)

   Delete
 7. ஹை சகோ/ஏஞ்சல் ஹென் ரொம்பவே ஈர்த்துவிட்டார் சுவாரஸ்யமாய். சுவாரஸ்யங்கள் எப்போதுமே அட்ராக்ஷந்தானே!! பாகற்காய் சூப் ஹஹஹ் நீங்கள் சைவம் என்பது உங்கள் பதிவுகளிலிருந்துதெரியும். அதிலும் நீங்கள் பாக் வேறு செஞ்சு எடுத்துட்டுப் போயிட்டீங்க. அப்போ அவங்க நினைச்சுருப்பாங்க உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுனு அப்புறம் அவங்க மீண்டும் செஞ்சு கொடுத்தாங்களா?? ஹஹஹ்

  அட அப்ப அந்தப் புள்ளைங்களுக்குச் சாக்கலேட் கிடைக்குமோ லைஃப் லாங்க் என்ன பதில் வந்துச்சோ?

  4 கால் செல்லாங்கள் மனிதர்களுக்கு உதவத்தான் செய்கின்றன பல விதங்களிலும்.

  கீதா: இங்கு ப்ளூக்ராசில் நாலுகால் செல்லங்களை மனநிலை சரியில்லாதவர்களுக்கு, வயதானவர்கள் தனியாக இருந்தால், நோயுற்றோர் என்று பலருக்கும் அனுப்புவார்களாம் வாரம் ஒரு நாள் அல்லது வெண்டும் சமயம். அவை நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று.
  என் மகன் கற்றல் குறைபாடு உள்ளவனாகத்தான் இருந்தான். செல்லங்களுடன் விளையாடல், அவற்றின் மீது அன்பு, வெட் தான் ஆக வேண்டும் என்ற இலக்கு என்று இவைதான் அவனை இன்று இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. பள்ளிக்குச் செல்ல வெறுப்பு. அவனைப் புரிந்து கொண்டோர் இல்லை. எறும்புகள், தெருவில் குட்டிப் போடும் நாலுகால்செல்லங்கள், பூனைகள், ஊருக்குச் சென்றால், ஆடு மாடு கோழி, வான் கோழி, கன்றுகுட்டி என்று அவர்களுடனேயேதான் விளையாடுவான்.

  நீங்கள் சொல்லியிருப்பது போல் இங்கும் ஸ்பெஷல் பள்ளிகளில் செய்யலாம். நல்ல முன்னேற்றம் வரும்...செய்வார்களா என்று தெரியவில்லை...

  அருமை எல்லாமே

  ReplyDelete
  Replies
  1. //வாங்க துளசி அண்ணா அன்ட் கீதா ..ஹென் கொஞ்சம் அன்பு பொழிகிறதே வகை :) ரெசிப்பியை கேட்டு நான் மயங்கி விழாத குறை அதில நீந்தும் நீந்தாத எல்லா உயிரும் சேர்த்திருக்கு அந்த பொண்ணு !!! அவங்க மீண்டும் செஞ்சு கொடுத்தாங்களா?? ஹஹஹ்// அதான் நானே செய்யறேன்னு தப்பிசிட்டனே :)
   அந்த சாக்லேட் கம்பெனி நிச்சயம் நஷ்ட ஈடு கொடுப்பாங்க அட்லீஸ்ட் ஒரு வருடம் சாப்பிடும் அளவாவது ப்ரீயா கொடுப்பானாக ..இங்கே கன்ஸ்யூமர் கேஸ் போட்டா கம்பெனிகாரங்களுக்கு கொஞ்சம் நடுக்கம்தான் ...உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்க்கு கீதா ..இல்லா பேரண்ட்சும் இப்படி பிள்ளைங்களை என்கரேஜ் பண்ணா எவ்ளோ நல்லா இருக்கும் ..இங்கே எங்க வீட்ல ஜெசி வந்த பின் எங்க மகள் ஹோம்வொர்க் செய்யும்போது பாசம் வரையும்போது அவ அருகில் உக்கார்ந்து curious ஆக பார்த்துகொண்டிருக்கும் !!..
   என்னமோ இது அவளுக்கு தங்கை போல தான் பழகுவா :)

   Delete
  2. //எறும்புகள், தெருவில் குட்டிப் போடும் நாலுகால்செல்லங்கள், பூனைகள், ஊருக்குச் சென்றால், ஆடு மாடு கோழி, வான் கோழி, கன்றுகுட்டி என்று அவர்களுடனேயேதான் விளையாடுவான். //கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு :) ..இங்கே பொண்ணு ரூமுக்குள்ளே பாட்டிலில் tadpoles வளர்த்து வெளியில் பாண்டில் விட்டா ..நத்தைகுட்டிங்களை ரூமுக்கு கொண்ட்டந்துடுவா ஒரு காலத்தில் அதையெல்லாம் நினைச்சா இப்பவும் சிரிப்பு வருது ..
   படிச்சு முடிச்சி வேலைக்கு போனதும் பெரிய வீடு நிறைய அனிமல்ஸ் வளர்பென்னு சொல்றாங்க சின்ன மேடம் :)
   அப்புறம் நானும் வாலறுந்த பல்லிக்கு soframycin போட்டுவிட்ட ஆள்தான் :)

   Delete
 8. பதிவும் கமெண்ட்ஸும் படித்து முடிச்சாச்சு!

  ஹென் பாவக்கா சூப்ப்....ரியல்ல்லி சூப்ப்ப்ப்ப்ப்பர்! :) உங்க நிலைமைய நினைச்சுப் பாத்தா சிப்பு சிப்பா வருது..கி கி கி!!

  நல்லதொரு பகிர்வு. எனக்குமே சின்னதில மனிதர்களோடு பழகுவதை விட நாய் பூனை ஆட்டுக்குட்டி இவங்களோட பேசதான் விருப்பம்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மஹி :) இன்னும் இதுபோல நிறைய இருக்கு :) அம்மா எப்பவுமே சைவத்தையும் அசைவத்தையும் சேர்த்து சமைக்க மாட்டாங்க அந்த தைரியத்தில் வாய்ல வச்சிட்டேன் :)
   நாமெல்லாம் அனிமல் லவர்சாச்செ அதான் ஒண்ணாவே சுத்தரோம் :)

   Delete
 9. மிக நீண்ட இடைவெளியின் பின்பு கால் எடுத்து வைக்கும்போது கூசுது:) போஸ்ட் முழுக்க படிச்சேன்ன் பாவக்காயின் சிக்கின் ஸ்ரவ் ஆஆஆஆஆ?:) ஆவ்வ்வ்வ் பிஸ் க்கு இது தேவைதான்:) அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல:) அஞ்சுவுக்கு கிடைக்கும் நட்புக்கள் எல்லாமே:) புரியாத பாசையிலயே பேசுறாங்களே?:) அது ஏன்ன் ஏன்ன்ன் ஏன்ன்ன்ன்?:) மீ என்னைச் சொல்லல்ல:)

  ReplyDelete
  Replies
  1. ஆவ் சுனாமி புயல் ப்ளாக் ஆடுது !!பூனை வரவால் :))
   பூனை பாஷை எனக்கு புரியுமே :)
   வெல்கம் வெல்கம் மியாவ்

   Delete
 10. இப்போ முதல் அடி எடுத்து வைத்திருக்கிறேன், இனி எல்லோர் புளொக்கும் வருவேன்ன்ன்... ஆன சத்தியம் எல்லாம் இப்போ பண்ணமாட்டேன்ன்ன்:)

  ReplyDelete
 11. சுவாரசியமான பதிவு
  பாகற்காய் சூப் அதில் கருவாடு சேர்த்து வதக்கினால் ரொம்ப நல்ல இருக்கும் அதே போல் சூப் வித்தியாசம் இது மலேசிய மக்கள் செய்வாரக்ள், ஆனால் மன நோகாமல் அதை நாங்க சாப்பிடமாட்டோம் என்று சொல்லாமல் சமாளித்து வீட்டுக்கு கொண்டு போனது அருமை

  ReplyDelete
 12. மியாவ் புது வருட பதிவு ஏதும் போட வில்லையா??

  ReplyDelete