அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/7/16

எங்கே செல்லும் இந்த பாதை :( ,புகையிலை விழிப்புணர்வு,

எங்கே செல்லும் இந்த பாதை :(
=============================
இளைய தலைமுறையை புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக்கும் பழக்கம் வேகமாக அரங்கேறி வருகிறது நம் சென்னையில்  பள்ளிகளில் அருகிலுள்ள பெட்டிகடைகளில் விற்கப்படும் கூல் லிப் தயாராவது பஞ்சாபில் ..கொடிகட்டிபறப்பது பள்ளிகூடங்கள் அருகிலுள்ள கடைகளில் :(  .நம் தமிழ் நாட்டில்  கிடைக்கும்   ஹன்ஸ், மாவா, கருடா,கூல் லிப், சைனி-கைனி, துளசி, கணேஷ், ஸ்டார் போன்ற வகை புகையிலை பாக்கெட்டுகளில் இதன் தயாரிக்கும் இடம், தயாரிப்பாளர் பற்றி விபரம் கொடுக்கப்படவில்லை. இவை ஒன்று கூட தமிழகத்தில் தயாரிக்கப்படவில்லை. அனைத்தும் வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது
இனிப்பு சுவையுடன் கவர்ச்சியான பாக்கெட்டில் விலை மலிவா ஒரு விஷம் :(
கடந்த வாரம் ஹிந்து நாளிதழ் செய்தி இது.புகையில்லா புகையிலையாம் பாதிப்பில்லா  புகையிலை என்று எங்காவது உண்டா ..?? துப்ப வேண்டிய அவசியமில்லை வாய்க்குள்ளேயே வச்சிக்கலாம் !!என்னவொரு கொடுமை ..எனக்குதெரிந்து ஹார்லிக்ஸ் விளம்பரம்தான் குடிக்கவேணாம் அப்படியே சாப்பிடலாம்னு வரும் முன்பு !

வாய் துர் மணத்தை  நீக்க பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்ற விஷ விளம்பரத்துடன் விற்பனையாகிறது இந்த கூல் லிப் .குழந்தைகள் முதல் பெரியவர் மத்தியில் மிக பிரபலமாம் !
பள்ளிக்குழந்தைகள் சாக்லேட்டை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது போல இந்த இந்த பொருளை பகிர்ந்துகொள்கிரார்களாம் ..எவ்வளவு ஆபத்தான விஷயம் ..கெட்டதில் நல்ல கெட்டது என்று எங்காவது கேள்விபட்டிருக்கிறீர்களா ??..இந்த பொருளின் விளம்பரம் அதைதான் சொல்கிறது .

இதிலுள்ள குட்காவில் புகையிலையும் கலந்துள்ளதாம் மேலும் இதில் சேர்க்கப்படும் பாக்கில் பூஞ்சை மற்றும் பல நுண்ணுயிரிகள் இருக்காம் .இதன் தயாரிப்பாளர்கள் கவர்ச்சியாக காட்ட அதிக செயற்கை நிறத்தையும் அதிகளவு இனிப்பையும் சேர்த்து விற்கிறார்கள் .எல்லாமே உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை .மதிய உணவு சாப்பிட்டபின் பள்ளிகருகில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கி பிள்ளைகள் சாப்பிட துவங்குவார்கள் ஆரம்பத்தில் ஓரிரு பாக்கெட் என துவங்கி அப்படியே அடிமையாகிறார்கள .கன்னங்களுக்குள் அல்லது நாக்குக்கும் உதட்டுக்கும் கீழே அதக்கி வைத்துஒரு கட்டத்தில் அது இல்லைன்னா முடியாமல் போகும் மாணவர்களுக்கு .
மருத்துவர் Dr Sadaf Ahmed கூறுகிறார் !
இனிப்பு சுபாரியில் உள்ள arecoline எனும் பொருள் ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் தொடர்ந்து பயன்படுத்தினால் oral submucous fibrosis .தாடைகளை மேலும் கீழும் அசைக்க முடியாத  என்ற நோய் தாக்கும் .இதனால் பிள்ளைகள் வளர்ச்சியின்றி மெலிந்து காணப்படுவார்கள் .காரமான உணவுகளை சாப்பிட்டதும் பற்களும் ஈறுகளும் எரியத்துவங்கும் .சுபாரி மற்றும் பாக்கு உலகறிந்த புற்றுநோய் காரணி என்கிறார் மற்றொரு மருத்துவர் ஆயிஷா .
இவற்றின்  தீமைகளை மாணவர்களுக்கு சிறுபிள்ளைகளுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய பத்திரிக்கை தொலைக்காட்சி போன்றவையே இந்த தீய பொருட்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரம் ஒளிபரப்பி தொலைப்பதுதான் கொடுமை :(
ஒரு ஆஜானுபாகுவான மனிதன் இதை வாயில் போட்டு உடனே தனது எதிரிகளை துவம்சம் செய்வது போன்ற விளம்பரங்களை  விழி அகல வாய்பிளந்து பார்க்கும் பிள்ளை அதுதான் நிஜம் என்று நினைக்காதா !! அந்த பிள்ளைக்கு தெரியுமா இனிப்பு சுப்பாரியில் இருப்பது நிகோடினும் CAFFEIN உம் விஷம் என்பது :( 
பெற்றோரும் பிள்ளைகள் கையில் பணத்தை கொடுக்கின்றனர் அவர்கள் என்ன வாங்கி உண்கின்றனர் என்பதை கண்காணிப்பதில்லை .
மேலும் பல் மருத்துவர் Dr Sadaf கூறுகிறார் .அவரிடம் பல் சம்பந்தமான பிரச்சினையுடன் வெளிநோயாளிகளாக வருபவர்களில் அதிகமானோர் பள்ளி மாணவர்களே .
நம் நாட்டில் ரெகுலர் பல் பரிசோதனை பள்ளி மாணவர்களுக்கு கிடையாது ஆகவே  OSF தாக்கிபின்னரே அறுவை சிகிச்சை செய்யும் மூன்றாம் நிலையில் மருத்துவரை நாடுகிறார்கள் அதனால்பல் பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் ..
சமீபத்தில் சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பதைத் தடை செய்யும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஒருலட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது...சட்டம் இந்த மாதிரி பள்ளிகளருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

தகவல் இணையம் 


13 comments:

 1. விழிப்புணர்வு ஊட்டிடும் பயனுள்ள பதிவு. இதிலெல்லாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..முடிஞ்சவரைக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை பரப்பணும் ..வருகைக்கு நன்றி

   Delete
 2. விழிப்புணர்வுப் பதிவு. இருக்கும் சட்டங்களைக் கடுமையாக உபயோகப் படுத்தினாலே போதும். ஆனால் நம் ஊரிலா... மாமூல் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் விடுவது சகஜம். வளரும் தலைமுறையைச் சீரழிக்கும் இவர்களை யார் கேட்க, என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. எத்தனை சட்டங்கள் வந்தாலும் சுலபமா ஏய்த்து விடுவாங்க திருடர்கள் :(
   ஆனா நமக்குதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு இந்த சுப்பாரி இதன் விளைவுகள் மோசமானவையாச்சே ..கொடுமை என்னன்னா ஒரு ஜெர்மன்காரன் இந்த கூல் லிப் பக்கெட்டை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து யூ டியூபில் வீடியோ போட்ருக்கான் :( அவளோ கிக்காம் .
   பான் பாக்கு இப்போ நிறைய போலந்து மற்றும் ஆபிரிக்கர் சாப்பிடறாங்க :( எப்படி தெரியுமா நம்ம குஜராத்திங்க உபயத்தால் ..இங்குள்ள ஆசிய கடைங்களில் ஒளிச்சி விக்கறாங்க ..போலிசுக்கு சும்மா betel nuts என்று சொல்லி போன வாரம் ஒரு நேபால் காரன் நெஞ்சு வழியில் மயங்கி விழுந்தான் கணவருடன் வேலைபுரிபவன்

   Delete
 3. அருமையான பதிவு சகோ. மீராசெல்வகுமார் ஒரு கொய்யா மிட்டாய் என்று சீன மிட்டாய் விஷத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யமாக இருந்தது என்றால் இப்போது உங்கள் பதிவு. குழந்தைகளின் எதிர்காலம் பயமுறுத்துகின்றது. பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் பொறுப்புடன். மிக மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றதுதான் உலகம்..

  கீதா: கொய்யா மிட்டாய் பற்றி அறியவில்லை என்றாலும் இது குறித்து வாசித்த போது அதிர்ச்சி. வீட்டில் பல நிகழ்வுகள் நேரப் பற்றாக்குறையால் எழுத நினைத்தும் எழுத முடியவில்லை. நன்றி நீங்கள் எழுதியமைக்கு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி அரசும் பொது நலத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. ஏனென்றால் நமது நாடு அதீத சுதந்திர நாடாகிவிட்டது என்பதால். சுதந்திரம் என்பதன் அர்த்தமே கெட்டுப் போய்விட்டது. இது பற்றியும் ஒரு பதிவு பாதியில் நிற்கின்றது ஏஞ்சல்..

  பாக்கு என்ற வகையறாக்களையே எங்கள் வீட்டில் தடா...நல்ல பதிவு ஏஞ்சல்

  ReplyDelete
  Replies
  1. துளசி அண்ணா அன்ட் கீதா ..உங்க பின்னூட்டம் பார்த்ததும் உடனே அந்த கொய்யா மிட்டாய் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன் ..அது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது 2012 ஆம் ஆண்டிலேயே ..காரணம் //
   5/2/12 Guava Candy – Unsafe Color, Adulteration//
   நம்ம நாட்டில்தான் எல்லாமே சுதந்திரமா கிடைக்குமே ..அமேசன் அலிபாபா போன்ற கம்பெனிகளின் வாயிலாக ஆன்லைன் ஆர்டர் கொடுத்தா வீட்டுக்கே வருது :(

   அந்த மிட்டாயில் அதிக அளவு இனிப்பிருக்கு அதுதான் அந்த மயக்க நிலை வர காரணம் .

   அமேசன் பாருங்க விற்கும்போது தனக்கு பிரச்சினை வர கூடாதின்னு கீழே ஒரு டிஸ்க்ளைமர் கொடுத்திருக்கு ..


   Important Information
   Ingredients
   Sugar, Glucose Syrup, Fruit Acid, Citric Acid, Salt, Edible Spice, Food Colo (FD & C Blue #1, FD & C Yellow #5)
   Legal Disclaimer
   Actual product packaging and materials may contain more and different information than what is shown on our website. We recommend that you do not rely solely on the information presented and that you always read labels, warnings, and directions before using or consuming a product

   Delete
 4. >>> சட்டம் இந்த மாதிரி பள்ளிகளருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் <<<

  இதையெல்லாம் நம் நாட்டில் - குறிப்பாகத் தமிழ் நாட்டில் எதிர்பார்க்க வேண்டாம்..

  பள்ளி மாணவர்கள் மது அருந்துகின்ற செய்திக்கே -
  அரசு அசையவில்லையே!..

  கண்ணுடையோர் காணக் கடவர்..
  விருப்பம் உடையோர் விழித்துக் கொள்வர்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா .ஒவ்வொருவரும் அவரவர் பிள்ளைகளை கவனமுடன் பார்த்தாலே போதும் .ஆனால் ஒரு விஷயம் மட்டும் மனதை உறுத்துகிறது ...இந்த பொருட்கள் மலிவா கிடைபதால் ஏழை பிள்ளைங்க என்னன்னு தெரியாம வாங்கி சாப்பிடுவாங்க ..அவர்களின் தேவை அந்த நேர ஒரு இனிப்பு சுவை அது நல்லதா கெட்டதான்னு பார்க்க மாட்டாங்க :(

   Delete
 5. நானும் பார்த்தேன் அக்கா.. இதெல்லாம் சாப்பிட்டா என்ன ஆகும் இளைய தலைமுறை...நினைக்கவே பயம்மா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அபி. எங்க வீட்ல இந்த செயற்கை இனிப்பு கலர் சேர்த்த பொருளுக்கு எப்பவும் தடா ..எனக்கு எல்லாமே அலர்ஜி ஆவதால் எங்கே மகளுக்கும் பிரச்சினை வருமோன்னே நானா தருவதில்லை

   Delete
 6. வாசிக்கும்போது எத்தனை விதமான நச்சுக்கள் வியாபாரம் என்கிற போர்வையில்.பணம் படும்பாடு.கடுமையான சட்டங்கள் ஒன்றும் செய்யபோவதில்லை.மக்களுக்கு போதிய விழிப்புணர்வு போதாது.
  அவர்களிற்கு போய் சேரும் வகையில் ஏதாவது செய்யனும்.
  இந்த கொய்யா இனிப்பு கனடாவிலிருந்து கொண்டுவாராங்க. ஆனா இங்கு நான் காணவில்லை.
  நல்ல விழிப்புணர்வு பதிவு அஞ்சு.

  ReplyDelete
 7. தங்கள் பதிவினை - எனது தளத்தினில் ஒரு பிரார்த்தனை எனும் தலைப்பில் சுட்டிக் காட்டியுள்ளேன்..

  ReplyDelete
 8. பிராத்தனையில் பதிவு கண்டு வந்தேன், நல்ல விழிப்புணர்வு பதிவு,, நாம் காணும் போது தடுக்கலாம்,, முயற்சிப்போம்,, நன்றிமா

  ReplyDelete