அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/26/16

Loud Speaker .....32 இங்கிலாந்து பள்ளி கல்விமுறை

Work Experience ..இங்கிலாந்து பள்ளி கல்வி ..
=============
இங்கே இங்கிலாந்தில் 11 ஆம் வகுப்பில் தான் GCSE எனப்படும் நம்ம ஊர் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கு சமமான தேர்வு நடைபெறும் .அதற்கான பாடங்களை 8 ஆம் வகுப்பிலேயே மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் .திட்டமிடல் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
முக்கிய பாடங்கள் ஆங்கிலம்,Religious Education  சமயக் கல்வி ..இது ப்ராடஸ்டன்ட் பள்ளிகளில் கட்டாயம் அதில் இஸ்லாம் ஹிந்து மற்றும் கிறிஸ்தவம் மூன்றும் இருக்கும் .. கணிதம் ,அறிவியல் (இயற்பியல் வேதியியல் ,உயிரியல் ),மற்றும் உடற்கல்வி ,மொழிபாடமான ஜெர்மன் ,பிரெஞ்சு ,ஸ்பானிஷ் ,தமிழ் இவற்றில் ஏதேனும் ஒன்று கட்டாயம் தேர்வு செய்யவேண்டும் ..இங்குள்ள இலங்கை தமிழரின் பிள்ளைகள் அனைவரும் தமிழ் பாடத்தை தேர்வு செய்து எழுதுகிறார்கள் ..இந்திய தமிழரை விட இலங்கை தமிழர் தாய்மொழியை பாதுக்காக்கின்றனர் என்றால் மிகையாகாது ..எங்கள் மகளுக்கு நன்கு பேச முடியும் ஆனால் எழுத சொல்லித்தரவில்லை :(..மேற்கூறியவை கட்டாயபாடங்கள் ..இவை தவிர வரலாறு அல்லது புவியியல் ,நிழற்படக்கலை அல்லது ஆர்ட் ,பிசினஸ் ஸ்டடிஸ் அல்லது நாடகக்கலை ,சுகாதாரம் மற்றும் சமூகவியல் அல்லது கணிப்பொறி அறிவியல் இவற்றில் விருப்பமான பாடங்களை தேர்வு செய்ய வேண்டும் .மகள் தேர்வு health அண்ட் சோஷியல் ,வரலாறு டிசைன் அன்ட் ஆர்ட் ..இவற்றில் மொழி பாடங்கள் மற்றும் ஓரிரு பாடங்களை முதலிலேயே தேர்வு எழுத வைப்பார்கள் அதில் இப்போதே  A எடுத்தால்  பின்பு 11 ஆம் வகுப்பில் மீண்டும் எழுத வேண்டாம் இந்த மதிப்பெண்களே போதுமானது (தனிபதிவில் எழுதுகிறேன் ) 

இங்கிலாந்து பள்ளிகள் அனைத்திலும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் கல்வியாண்டின் இறுதியில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து இந்த பணி  முன் அனுபவ பயிற்சி ..Work Experience கட்டாயமாக செய்ய வேண்டும் .இந்த முன் அனுபவ பயிற்சியானது மாணவர்களுக்கு நம்பிக்கை வேலை செய்யுமிடத்தில் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் மற்றும் திறமைகளை வளர்க்க உதவுகிறது ,இதுவரையில் காலையில் பள்ளிக்கு அவசர அவசரமாக சென்ற வர்கள் வேலையென்றால் என்ன பணியிடம் எப்படி இருக்கும் போன்றவற்றை அறிந்துகொள்ள ஏதுவாகிறது ..எதிர்கால  வாழ்க்கை முறையை அவர்கள் தெரிவு செய்யும் செய்துள்ள பாடபிரிவுகள் ஆகியவைபற்றிய ஒரு தொலைநோக்கு  பார்வை மாணவர்களுக்கு கிடைக்கக்கூடும் ....
சட்டத்திட்டங்கள் ...

--------------------------------
மாணவர்கள் தனி CV அவர்களின் பள்ளி வயது விருப்பங்கள் என சிறு தொகுப்பு விவரம் அனைத்தும் எழுதி விண்ணப்பிக்க வேண்டும் ..உறவினரிடம் வேலை செய்யக்கூடாது ,
இந்த  பணி அனுபவம் மாணவர்கள்  16 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் கெமிகல்ஸ் பயன்படுத்தும்  மற்றும் பாதுகாப்பற்ற  இடங்களில் வேலை அனுபவம் பெற இயலாது மற்றும் தேர்வுசெய்த பாடங்கள் சம்பத்தப்பட்ட துறையாக இருக்கவேண்டியது கட்டாயம் . பிசினஸ் ஸ்டடிஸ் எடுத்து மாணவர் சூப்பர் மார்கெட்களில் கட்டாயம் பயிற்சி பெறணும் என்பது முக்கியம் .சமையல் துறை கேட்டரிங் என்றால் கட்டாயம் ரெஸ்டாரண்டில் வேலை செய்ய வேண்டும் .
 ஹெல்த் ஸ்டடிஸ் தேர்வு செய்த எனது மகள் ஹேர் டிரெஸ்ஸிங் செய்யுமிடத்தில் வேலை செய்ய முடியாது கட்டாயம் ப்ரைமரி  பள்ளி/special needs பள்ளி   அல்லது மருத்துவமனை/விலங்கு பூங்கா ,விலங்கு காப்பகம்,  முதியோர் இல்லம் போன்ற இடங்களில் மட்டுமே பணி  அனுபவத்திற்கு விண்ணப்பிக்க முடியும் அதிலும் ஒரு பிரச்சினை பள்ளிக்கூடம் ,ZOO தவிர்த்து வேறெங்கும் 16 வயது பூர்த்தி அடைந்தா மட்டுமே விண்ணப்பம் ஏற்க்கப்படும் ..எங்கள் வீட்டுக்கு அருகாமையில் ZOO இல்லை ..இதில் மகளுக்கு பெரும் வருத்தம் ..எங்கள் வீட்டுக்கு சற்று தொலைவிலுள்ள ஒரு கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது காரணம் இவளுக்கு டிசம்பர் வந்தால்தால் 16 வயது ..இன்று அருகிலுள்ள ஸ்பெஷல் நீட்ஸ் /LEARNING DISABILITIES பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பணி செய்ய  அவளுக்கு கடிதம் வந்துள்ளது !! ..அறிவியல் மருத்துவத்துறையை அவள் விரும்புவதால் அவளுக்கு இது உதவும் .ஜூலை மாதம் இரண்டு வாரம் தொடர்ந்து வேலை .அங்கு அவள் பெற்ற அனுபவங்கள் பின்பு பகிர்கிறேன் ..

அன்புடன் ஏஞ்சல் ..

24 comments:

 1. அவர்கள் விருப்பம் போல் நடக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. ஆத்தி.. பொண்ணு வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சாச்சா... ஹா ஹா.. ஷரோனுக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்குமே.. இந்த குழந்தைகளுக்கு எப்படி சொல்லி தராங்கனு பாருங்க அக்கா..

  ReplyDelete
  Replies
  1. :)ஹா ஹா அபி இது எக்ஸ்பீரியன்ஸ் gain செய்ய வொர்க் போகணும் ..ஜூலை மாசம் போறா ஆமா அவளுக்கு ஹெல்பிங் என்றால் ரொம்ப பிடிக்கும்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 3. //மேற்கூறியவை கட்டாயபாடங்கள் ..இவை தவிர வரலாறு அல்லது புவியியல், நிழற்படக்கலை அல்லது ஆர்ட், பிசினஸ் ஸ்டடிஸ் அல்லது நாடகக்கலை, சுகாதாரம் மற்றும் சமூகவியல் அல்லது கணிப்பொறி அறிவியல் இவற்றில் விருப்பமான பாடங்களை தேர்வு செய்ய வேண்டும் .மகள் தேர்வு health அண்ட் சோஷியல் ,வரலாறு டிசைன் அன்ட் ஆர்ட் ..//

  அவரவர் விருப்பம் போல மிகச்சிறப்பான கல்வி முறை. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 4. //மாணவர்கள் தனி CV அவர்களின் பள்ளி வயது விருப்பங்கள் என சிறு தொகுப்பு விவரம் அனைத்தும் எழுதி விண்ணப்பிக்க வேண்டும் .. உறவினரிடம் வேலை செய்யக்கூடாது ,
  இந்த பணி அனுபவம் மாணவர்கள் 16 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் கெமிகல்ஸ் பயன்படுத்தும் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் வேலை அனுபவம் பெற இயலாது மற்றும் தேர்வுசெய்த பாடங்கள் சம்பத்தப்பட்ட துறையாக இருக்கவேண்டியது கட்டாயம் . பிசினஸ் ஸ்டடிஸ் எடுத்து மாணவர் சூப்பர் மார்கெட்களில் கட்டாயம் பயிற்சி பெறணும் என்பது முக்கியம் .சமையல் துறை கேட்டரிங் என்றால் கட்டாயம் ரெஸ்டாரண்டில் வேலை செய்ய வேண்டும் .//

  மிகவும் யோசித்து வடிவமைக்கப்பட்ட மிக அருமையான திட்டங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா ..வெளிநாட்டில் அனைவருக்கும் எல்லாம் தெரிந்திருக்கணும் .7/8 வகுப்பில் பேக்கிங்
   பேஸ்ட்றிஸ் ,சமோசா ஸ்ப்ரிங் ரோல் என நிறைய படிச்சா மகள் .. நம்மூரில் கிச்சன் கூட எட்டி பார்த்ததில்லை நான் அந்த வயதில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. அங்கு கல்விமுறை கச்சிதமாக இருக்கிறது. மகளின் விருப்பம் நிறைவேறட்டும். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ .ஸ்ரீராம் இங்கே ஓவ்வொரு விஷயமும் என்னை ஆச்சர்யபடுத்தும் .எனக்கே மீண்டும் ஸ்கூல் போய் படிக்க ஆவலா இருக்கு . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 7. வணக்கம்
  வித்தியாசமான நடைமுறைக் கல்வி... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. எனக்கு இந்த மெதேட் ரெம்ப பிடிக்கும் .படிச்சு முடிச்சு பப்பரபே ன்னு நிக்க தேவையில்ல . இந்த கல்வி முறைல எதிர்காலத்திட்டமிடல் நிறையவே இருக்கும் . நான் தங்கை எல்லோரும் இப்பிடித்தான் ஐரோப் ல்.இப்போ என்அக்காபிள்ளைகள் இப்ப பிறந்த மாதிரி இருக்கு இதே மாதிரி படிக்கிற துறை சம்மந்தமா வேலை செய்யினம் . நல்ல சிஸ்டம் - சுரேஜினி-

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சுரே நம்ம ஊர் மாதிரியில்லாம இங்கே ஸ்ட்ரெஸ் குறைவு பிள்ளைங்க எல்லாவற்றையும் அறிந்துகொள்ள கற்றுக்கொள்ள எளிதும் கூட

   Delete
 9. வாழ்த்துக்கள் மகளுக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அக்கா

   Delete
 10. சிறப்பான கல்விமுறை போலவே!கனவுகள் நிறைவேற வெற்றி பெற ஷாரனிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிரேஸ் ..மகளிடம் சொல்கிறேன் அனைவர் வாழ்த்துக்களையும்

   Delete
 11. வாழ்த்துக்கள் ஷரோன்.!
  இங்கும் இந்த மாதிரிதான் திட்டங்கள் இருக்கின்றன.ஆனால் பரீட்சை முன்கூட்டியே எடுப்பது இல்லை. வேலைக்கான முன் அனுபவப்பயிற்சி இருக்கின்றது. ஜுலைக்கு முன் சென்றுவிடுவார்கள். ஜுன்,ஜுலையில் பொதுப்பரீட்சை இங்கு.இன்னமும் 2014லிருந்து 13 வகுப்பு இல்லை.12ல் முடிந்துவிடும் பாடசாலை படிப்பு. ஆனா இன்னும் இங்கு கல்விமுறையில் மாற்றம் தேவையென விவாதிக்கிறார்கள்.
  பிரிட்டிஷ் முறைதான் இலங்கையிலும்.தொழில் முன் அனுபவ பயிற்சி இல்லை அங்கு.நான் படித்த முறைக்கும்,இப்ப இருக்கும் முறைக்கும் வித்தியாசம் வந்துவிட்டது அங்கு.இங்குள்ள படிப்பித்தல் முறை நல்லவிதமாக இருக்கின்றது.
  உங்க மகளாச்சே சோ உதவி செய்வதற்கு தயங்க மாட்டா. அவரின் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ப்ரியா .மகளிடம் சொல்கிறேன் அனைவர் வாழ்த்துக்களையும் ..இங்க சிஸ்டம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு ..ஐரோப்பா முழுதும் ஒரே சிஸ்டம் தான் ஏறக்குறைய

   Delete
 12. மிக மிகச் சிறப்பான கல்விமுறை. ஏற்கனவே அங்குள்ள ஐரோப்பிய கல்வி முறை பற்றி தெரியும் ஓரளவிற்கு உறவினர் அங்கு இருப்பதால்.

  தங்கள் மகளின் விருப்பம் நிறைவேற, வெற்றிபெற வாழ்த்துகள் மகளிடம் தெரிவித்துவிடுங்கள்.

  ReplyDelete