அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/22/16

Loud Speaker ..31 ,kitchen corner Quilling , pickle,

ஒலிபெருக்கியில் இன்று மகள் அவளின் குட்டி தோழி Angel க்கு செய்த olaf வாழ்த்தட்டை , Angel Sense Apps..மற்றும் ஏஞ்சலின் மீள்சுழற்சி கிராப்ட் :)


Frozen ..2013 இல் வந்த படம் ..இன்னும் பிள்ளைங்க மனதில் இடம் பிடிச்சிருக்கு 
பெட்ஷீட் தலையணை உறை பொம்மை டிபன் பாக்ஸ் ஸ்கூல் பாக் என்று எல்லாம் இந்த தீமில் வந்துவிட்டது :)
உறைபனியில் செய்யப்பட்ட ஸ்னோ மனிதன்  பேசுவதும், சித்திரக்குள்ளர்கள் வட்டப்பாறைகளாய் சுருண்டு கிடப்பதும், எல்சாவின் கையசைவில்… பனிப்பாலங்களும், மாடிப்படிகளும், மாட மாளிகையும் உருவாவதும் அசத்தல் முப்பரிமாணத்தில் அழகோ அழகு :) 

                                                                  OLAF :) 


olaf 
-----
என் மகளுக்கு மட்டும் எல்லாமே 4-5 இந்த வயசு குட்டீஸ்  நட்புக்கள் அதிகம் :) அனைவரும் இவளைவிட 10 வயசு சின்னதுங்க ..
ஆலயத்துக்கு போனாலும் இவ பின்னாடி நண்டும் சிண்டுமா ஒரு கூட்டமே சுற்றும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி :) இவ கைய பிடிச்சிக்கிரதுக்கு மடில உக்காரதுக்கு என்று போட்டா  போட்டியும் நடக்கும் :)
இந்த ஏஞ்சல் பொண்ணுக்கு 4 வயசு என் மகள் அதோட பிறந்த நாள் பார்ட்டிக்கு கட்டாயம் வரணும்னு என்கிட்டே பெர்மிஷன் போன்லயே வாங்கிடுச்சி :) அந்த குட்டிக்கு OLAF ரொம்ப பிடிக்கும்னு செய்த கார்ட் .ஐடியா மட்டும் நான்  கொடுத்தேன் மற்றதெல்லாம் அவளே செய்தா ..

தொடர்ந்து 4 எக்ஸாம் எழுதி முடிச்சி இந்த கார்ட் செஞ்சது ரொம்ப மனசுக்கு ரிலாக்சிங்கா இருந்ததாம் .Angel Sense Apps
ஆட்டிசம் குறைபாடுள்ள தனது மகனுக்கு ஒரு தந்தை இந்த மொபைல் ஆப்சை கண்டுபிடித்தார் அது காணாமல் போனஇதேகுறைபாடுள்ள இன்னொரு பிள்ளையை கண்டுபிடிக்க உதவியுள்ளது ..ஆட்டிசம் குறைபாடுள்ள பிள்ளைகள் பல நேரங்களில் தன்னந் தனியே பள்ளியை விட்டோ அல்லது வீட்டை விட்டோ யாரும் கவனிக்காத நேரத்தில் நடந்து சென்று விடுவார்கள் ..இவ்வாண்டின் துவக்கத்தில் பென்சில்வேனியாவில் ஒரு 5 வயது சிறுவன் வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல்  வெளியேறி விட்டான் ..இறுதியில் தீவிர தேடுதலு க்குபின்னர் கிடைத்தது அவனது உடல்   :( //பல குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு இவ்வாறன தன்னிச்சையா நடக்கும் பழக்கம் உள்ளதால்  ஒரு தந்தை இந்த apps உருவாக்கியுள்ளார் .இது ஒரு GPS போன்ற சிறு சாதனம் .ஆட்டிசம்  குறைபாடுள்ள பிள்ளைகளின் கால்சட்டையில் பொருத்திவிட வேண்டும் ..பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது முதல் ஒவ்வொன்றையும் பெற்றோரின் கைபேசிக்கு தகவல் அளித்து கொண்டு வரும் இந்த APPS .மேலும் சுற்றி நடைபெறும் குரல் சம்பாஷனைகள் சத்தம் கூட கேட்கலாமாம் .
இந்த சுட்டியில் சென்று விவரங்களை வாசிக்கவும் 

https://www.angelsense.com/blog/angelsenses-biggest-life-saving-events-2015/
ஆகஸ்ட் மாதம் asperger's சின்றோமினால் பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது பெண்ணை ஒரு வக்கிரபுத்தி ஆணினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படமுன் காப்பற்றபட்டுள்ளாள் ..பிள்ளையின் பெற்றோருக்கு AngelSense இன் Listen-In feature மூலமாக அப்பெண் இருக்குமிடத்தை காட்டி கொடுத்துள்ளது 
https://www.youtube.com/watch?time_continue=16&v=LlLN2ZH4JAY..
ஆடிசம் குறைபாடுள்ள பிள்ளைகளின் பெற்றோருக்கு இந்த ஏஞ்சல் சென்ஸ் ஆப்ஸ் சிறந்த வரம் என்றால் மிகையில்லை .

முன்னோர் உணவு /Paleo Diet 
============================

ரொம்ப நாளா இதை பற்றி எழுதனும்னு யோசிச்சிட்டிருக்கேன் நம் நட்புக்கள் பலர் இந்த குழுவில் இருக்கீங்கன்னு நினைக்கிறேன் :)
நடுவில் வழிதப்பிய ஆடு போல பேலியோ வை விட்டு கொஞ்சம் பாதை மாறிப்போனதால்  பலன்களை எழுத கொஞ்சம் தாமதமாகிறது ..
 இன்னும் சில நாட்கள் கழித்து முழு விவரங்களை தருகிறேன் ..ஆனால் ஒன்று எந்த டயட் துவங்குமுன்னும் மருத்துவ செக்கப் செய்து கொள்ளவேண்டும் .அது நமக்கு சரிவருமா என்று மருத்துவர் ஆலோசனை பெற்றே துவங்க வேண்டும் .
இப்போதைக்கு ஒரு paleo ரெசிப்பி அக்குழுமத்தில் ரெசிப்பி பார்த்து செய்தது ..
பேலியோ எலுமிச்சை ஊறுகாய் ..
================================

இது ஆயில் இல்லா ஊறுகாய் :))

இந்த ஊறுகாய் மிக சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்களேன் .

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் :)
என்னுடைய மீள்சுழற்சி கிராப்ட் ஒன்னு முகபுத்தகத்தில் பகிர்ந்தது இங்கே உங்கள் பார்வைக்கும் :)


ஒரு பழைய candle ஹோல்டர் வீட்டில் இருந்தது ..அதை பென்சில் /பேனா வைக்க இப்படி சணல் நூல் சுற்றி பழைய புத்தக தாளை வெட்டி க்வில்லிங் செய்து மங்குஸ்தான் பழ மலர்களையும் ஒட்டிவிட்டேன் ..அந்த மலர்கள் நடுவில் இருக்கும் சிவப்பு கல் கூட பழைய சல்வாரில் இருந்து எடுத்தது..மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் :)

28 comments:

 1. முதலில் உள்ள வாழ்த்து அட்டை பிரமாதமாக உள்ளது. OLAF வாழ்த்து அட்டை காணொளியும் நன்றாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 2. ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை நினைக்க வருத்தமாக உள்ளது. அவர்களுக்கான ஸ்பெஷல் கண்காணிப்புக் கருவி கண்டு பிடித்து அது வெற்றிகரமாக செயல்படுவது அறிய மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. அது சம்பந்தமான அனிமேஷன் படமும், காணொளியும் கொடுத்துள்ளது சிறப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா .வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி .இந்த கண்காணிப்பு ஆப்ஸ் ஆட்டிசம் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு மிக்க நலன் பயக்கும் ..இறைவனின் குழந்தைகள் அவர்கள் ..

   Delete
 3. A Brother's devotion காணொளி மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது.

  ஆயில் இல்லா ஊறுகாய் பற்றிய செய்தியும் ருசியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆயில் இல்லா ஊறுகாய் ஆயுளுக்கு நல்லது நீங்க செய்யலாம் செய்து பாருங்க .ருசியும் அபாரம்

   Delete
 4. இரண்டு சிவப்புக்கற்களுடன் ஜொலிக்கும் கடைசியில் காட்டப்பட்டுள்ள பென்/பென்சில் ஸ்டாண்ட் கைவேலை சூப்பரோ சூப்பராக உள்ளது. சணல் சுற்ற எவ்வளவு பொறுமை வேண்டும் !

  அனைத்துக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

  Loud Speaker ..31 பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete
 5. வணக்கம்
  வாழ்த்து அட்டை அழகு..வித்தியாசமான வகையில் ஊறுகாய் செய்தும் அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..ஊறுகாய் முன்னோர் உணவு குறிப்பு பார்த்து செய்தது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 6. Replies
  1. ஆமாம் சகோ ..நிறைய பிள்ளைங்களுக்கு இது உதவும் .வருகைக்கு நன்றி

   Delete
 7. Replies
  1. வணக்கம் நலமா சகோ

   Delete
 8. நல்ல தகவல்கள்
  ப்ரோசன் படம் என்றதும் அவள் எழுப்பும் மாளிகைதான் கண்முன் வந்தது
  என் வயதிற்கே மூச்சு முட்டப் பார்க்க வைத்தது அனிமேசன் ..
  குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க கஸ்தூரி சகோ ....அந்த படத்தை மூன்று தடவை தியேட்டரில் பார்த்தோம் பார்க்கிற குட்டிஸ் எல்லாமே அந்த லெட் இட் கோ பாட்டைத்தான் பாடிக்கிட்டிருனுங்க :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 9. ஆஹா பேலியோ ஊறுகாய்..ட்ரை பண்றேன்... மற்ற எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள்.. வீடியோ க்கு தேங்க்ஸ் அக்கா.. மகளுக்கு இந்த மாதிரியான கேரக்டர்ஸ் ரொம்ப பிடிக்கும்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அபி :) மகளுக்கும் மட்டுமில்லை பெரியவங்களே இங்கே ஆன்னு வாய்பிளந்து பார்ப்பாங்க இந்த கார்ட்டுன் சினிமால்லாம் .பேலியோ ஊறுகா செஞ்சி பாருங்க ஆயில் இல்லா ஊறுகாய் ஆயுளுக்கு நல்லது :)

   Delete
 10. வாழ்த்து அட்டைகள் அழகு அழகு!!! சூப்பர்! உங்கள் மகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  உங்கள் க்ராஃப்டும் தான்!!! மகளுக்குச் சொன்னால் அம்மாவிற்குச் சொன்னது போல்தானே!! ஹிஹிஹி!!! எல்லாம் ஜீன் ஜீன் ஜீன்...அண்ட் என்விரொன்மென்ட்...எங்கரேஜ்மென்ட்...சூப்பர் மாம்!!!!

  கீதா: என் கசினின் பையன் ஆட்டிசம் பாய்தான். அவனும் அப்படித்தான் வெளியே ஓடிப்போய்விடுகின்றான் என்று கதவு பூட்டியே தான்...ஆனால் என் கசின் அவனைப் பல ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிஸ், பாடம் என்று பொறுமையாகக் கையாண்டு வருகின்றாள். இங்கு இந்தியாவில் இன்னும் நம் சமூகம் மாறாததால் பலரும் பல அட்வைஸ்கள் மழையாகப் பொழிந்து விடுவதால் அவள் தனது சமூக உறவுகளைக் கொஞ்சம் ஒரு வரையறைக்குள்ளே, லிமிட்டெட் ஆகத்தான் வைத்திருக்கின்றால். ஒரு எல்லைக் கோடு வரைந்து கொண்டு. அவளும் ஸ்பெஷல் எஜுகேட்டர்தான். அமெரிக்காவில் கற்றவள். பேசிக்கலி எஞ்சினியர். அமெரிக்காவிலிருந்து குழந்தைக்காக இங்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று...பையன் 16 வயது இப்போது. நல்ல ஆப். அவளுக்கும் சொல்கின்றேன்.

  ஊறுகாய் ஏஞ்சல் எங்கள் வீட்டில் இப்படித்தான் நான் போடுகின்றேன். வெயிலில் வைப்பது இல்லை. கொதுக்கும் எண்ணெய் விடுவதுமில்லை. அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். அந்த ஜூஸே போதும் ஊறுவதற்கு...அதே ப்ரோபயாட்டிக்...

  தகவல்கள் அனைத்தும் அருமை....ஏஞ்சல்/சகோ

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா :) அதேதான் சில குழந்தைகளுக்கு என்கறேஜ்மென்ட் மிக அவசியம் . குட்டி பெண்ணுக்கு பிறந்தநாள் என்று சொன்னதும் கார்டை நான் செய்யலாம் என்றுதான்யோசிச்சேன் பிறகு மகளிடம் சொன்னதும் அவளே செய்கிறேன் என்றாள் ஐடியா மட்டும் தந்தேன் செஞ்சி முடிச்சிட்டா ..வீட்டில் பிரிண்டர் இருப்பதும் ஒரு வசதி :)
   @கீதா ..ஆமாம் அக்கா நம்ம நாட்டில் இன்னும் ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு போதிய புரிதல் இல்லையென்பதே உண்மை ..பலருக்கு குத்திக்காட்ட புரணி பேச மட்டுமே அந்த நாவு இருக்கு கீதா எனக்கு தெரிந்தவர் குடும்பத்தில் பிறவியில் வாய் பேச முடியா பெண் குழந்தை ஒன்று இருந்தது :(நன்கு நடனமாடும் பிள்ளை அவங்கம்மா முன்னாடியே ஒருவர் சொல்லிட்டார் என்ன பாவம் பண்ணிங்களோ இப்படி ஊமை பிறந்தின்னு .இப்படிப்பட்ட நரம்பில்லா நாக்குகள் பலரை முடக்கி விடுகிறது என்பதே உண்மை :( உங்கள் கசினும் பல பிரச்சினைகளை சந்தித்திருப்பார் அதனால்தான் சுற்று வட்டாரத்தை சுருக்கி வைத்திருக்கார்னு நினைக்கிறேன் ..வெளிநாட்டை பொறுத்தவரை அந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளைபோலதான் .எனக்கும் sportsukkum ரொம்ப தூரம் ஓட்டபந்தயம் எல்லாம் சான்சே இல்லை லாஸ்டில் ஒரு ஜீவன் அழுதுகொண்டு ஓடும் அது நானாகத்தானிருக்கும் ..இந்த ஆட்டிசம் குறைபாட்டு குழந்தைகளும் அப்படித்தான் பெற்றோர் முயன்றால் அந்த குழந்தைகளை சாதிக்க வைக்க முடியும் அடுத்த பதிவில் சில சுட்டிகள் இணைக்கிறேன் அப்படி சாதிதவர்களைபற்றி .. அந்த ப்ரோபையாடிக் ஊறுகாய் பல நாள் ப்ரிட்ஜில் வைக்கலாம் .

   அதென்னமோ தெரிலா எனக்கு மட்டும் க்வில்லிங் என்றாலே பழைய பேப்பர் பொருள்த வைத்து செய்வதுதான் ரொம்ப ஆசை

   Delete
  2. என்ன பாவம் பண்ணிங்களோ இப்படி ஊமை பிறந்தின்னு// ஆமாம் உண்மை இதுதான். பாவம் அவர்கள்.

   ஹஹஹ் உங்கள் ஓட்டப்பந்தையம் ரசித்தேன் ஏஞ்சல்.

   ஹை நானும் அப்படித்தான். பள்ளி நாட்களில் இருந்து..8 ஆம் வகுப்பு முதல் அப்போதே க்வில்லிங்க் பழைய பேப்பர் வழ வழ மாகசின் பேப்பர் கல்ர்ஃபுல்லா இருக்குமே அந்தப் பேப்பர் கொண்டு செய்வதில் பிடிக்கும். அது போன்று வீட்டிற்கு வரும் க்ரீட்டிங்க் கார்டுகள், (திக் அல்ல...கொஞ்சம் நன்றாகச் சுருட்ட வரக்கூடியவை) இன்விட்டேஷன் கார்டுகள் என்று செய்வதுண்டு. அப்புறம் சிலவருடங்களுக்கு முன் அப்படிச் செய்வதில் அதில் பெயிண்டிங்க், குந்தன் கற்கள் பீட்ஸ் என்று பதிவதுண்டு. இப்போது செய்வதில்லை மீண்டும் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

   Delete
 11. குட்டிப்பெண் தயாரித்த வாழ்த்து அட்டை சூப்பர்! மற்ற செய்திகள் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் சகோ வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

   Delete
 12. வாழ்த்து அட்டை அழகு...
  செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
  மற்ற செய்திகளின் தொகுப்பு அருமை...

  ReplyDelete
 13. வாழ்த்து அட்டையை சூப்பரா பண்ணியிருக்காங்க ! அஞ்சு மட்டும் என்ன ! கைவண்ணம் கடைசி படத்தில் தெரியுதே !

  பயனளிக்கும் நல்ல ஆப்ஸ்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :)தாங்க்ஸ் சித்ரா

   Delete
 14. ஷரோனுக்கு என் வாழ்த்துக்கள். மிக அழகா செய்திருக்கா. வழமையான மொழிதான் ஆனா உங்களுக்கு மிக பொருத்தம்..மீன் குட்டிக்கு(மீனோட குட்டிக்கு) கத்துகொடுக்கனுமா.
  நல்ல பயனுள்ள ஆப்ஸ் அஞ்சு.
  ஆயில் இல்லா ஊறுகாய் ஆயுளுக்கு நல்லது அருமை.
  உங்க கைவண்ணமும் அழகு..!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ..

   Delete