அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/28/16

Hybrid கலப்பின வீரிய விதைகளும் பாரம்பரிய நாட்டுரக விதைகளும் ..ஒரு சிறு கண்ணோட்டம்


 இரண்டு நாட்களாக முகபுத்தகம் முழுதும் இந்த ஹைப்ரிட் (hybrid ) விதைகளை தமிழ்நாட்டு தோட்ட மையம் மக்களுக்கு பாதிவிலையில் கடந்த சனி ஞாயிறு அன்று விற்பனை செய்தது பற்றிய சூடான விவாதங்களும் பதிவுகளுமாக வலம் வந்தன .
அந்த பதிவு இங்கே 
https://www.facebook.com/permalink.php?story_fbid=1752552218313417&id=100006759676762
ஒரு சிறு தீக்குச்சியின் பொறி !பற்றவைத்தது ஸ்ரீஜா என்பவர் அவர் பதிவை நந்தன் சிறீதரன் பகிர்ந்து 
பின்பு விகடன் என்று இந்த கலப்பின உயர்ரக இன்டோ அமெரிக்க கூட்டுறவு விதைகளை பற்றிய பல விவரங்களை எப்படி இந்த ஹைப்ரிட் விதைகள்  நம் நாட்டில் நுழைந்து காலூன்றின என கொஞ்சம் நானும் என் பங்கிற்கு பசுமை விடியலில் எழுதினேன் ..


பதிவிற்கு போகுமுன் ..இந்த விதைகள் GMO விதைகள் அல்ல ஆனால் கலப்பின உயர்ரக வகை THIRAM என்ற இரசாயன பூஞ்சைகொல்லியால் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட HYBRID  விதைகள் ..இயற்கையை  நாம் வாழும் சூழலை பாதுகாக்க விரும்புவோர் நிச்சயம் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் நச்சு பொருளை விதைகளுக்கு பூஞ்சை கொல்லியாக பயன்படுத்த மாட்டார்கள் .கோதுமை சோளம் சோயா ஆகியவற்றில் கிளைபாசெட் பூச்சிகொல்லி ஏற்கனவே ஊடுருவி மக்களுக்கு பல தோல் நோய்களை உண்டாக்கியுள்ளது ..
அந்தTHIRAM  பூஞ்சைகொல்லி யின் குணநலன்கள் இவை //
Description: A multi-use carbamate fungicide which is also used as a mammal repellent. Also pesticide transformation product.

Example pests controlled: As a fungicide: Seed decay; Seedling blight; Damping-off; Kernal smut; Smuts; Bunts. As a repellent: Rabbits; Deer

Example applications: Cereals including barley, millet, oats, rye, triticale; Beans and peas; Brassicas; Beet crops; Aubergines; Flax; Onions; Soybean; Sunflowers; TomatoesNOTE! AVOID ALL CONTACT! AVOID EXPOSURE OF (PREGNANT) WOMEN!
Route of Exposure
Symptoms
First Aid
Inhalation Confusion. Cough. Dizziness. Headache. Sore throat. Fresh air rest. Refer for medical attention.
Skin Redness. Remove contaminated clothes. Rinse and then wash skin with water and soap.
Eyes Redness. Pain. First rinse with plenty of water for several minutes (remove contact lenses if easily possible) then take to a doctor.
Ingestion (See Inhalation). Rinse mouth. Refer for medical attention.
Notes for ICSC Information
Physical properties reported in literature are inconsistent. Use of alcoholic beverages enhances the harmful effect. If the substance is formulated with solvent(s) also consult the card(s) (ICSC) of the solvent(s). Carrier solvents used in commercial formulations may change physical and toxicological properties.
Symptoms of Thiram Exposure from Other Sources
- Irritation of skin, eyes, respiratory tract and mucous membranes.
- Contact dermatitis and sensitization.
- At high doses, hyperactivity, ataxia, loss of muscle tone, dyspnea, and convulsions. 
- Predisposition to Antabuse reactions if alcohol is ingested.

இப்போ பதிவிற்குள் செல்வோம்..

Hybrid கலப்பின வீரிய விதைகளும் பாரம்பரிய நாட்டுரக 
விதைகளும் ..ஒரு சிறு கண்ணோட்டம் 
======================================
தமிழ்நாட்டில் காய்கறி பழங்களின் உற்பத்தியை நான்கு மடங்கு மேம்படுத்தி அதிகரிக்க இஸ்ரேல் நாட்டு விவசாய தொழில் நுட்ப வல்லுனர்கள் நம்ம நாட்டு விவசாயிகளுக்கு கற்றுகொடுக்கபோராங்களாம் .சுமார் 20 இலட்சம் தக்காளி , மிளகாய் , கத்தரி, வெண்டைக்காய் , மற்றும் சாம்பல் பூசணி நாற்றுக்கள் நன்கு தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன 
http://www.business-standard.com/…/israel-offering-latest-t…
இதுதான் இன்றைய விவசாயத்தின் நிலை

அங்காடிகளில் இருந்து நமது உணவு மேசைக்கு வரும் பல காய்கறிகளும் பழங்களும் Hybrid வகை என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? .நடு ரோட்டில் ஒரு வாழைபழத்தோல் இருக்கு .அதை கண்டும் காணாமல் செல்வோம் பின்னால் வருபவர் எடுத்து வீசட்டும் என்ற மனநிலைதான் பலருக்கும் ..அல்லது நான் விழல்லை அதனால் யார் வழுக்கினா எனக்கென்ன என்ற ஒரு அலட்சியமும் உண்டு பலர் மத்தியில் ..ஹைப்ரிட் வெரைட்டியில் நிறைய மகசூல் கிடைக்குமாமே என்று பின் விளைவை பார்க்காமல் கலப்பின மாயையில் விழுந்தோர் பலருண்டு ..நம் நாட்டில் எப்படி ஹைப்ரிட் விதை வந்தது அதை எப்படி உருவாக்கினார்கள் என்ற யோசனை கூட நம்மில் பலருக்கு இல்லை .இந்த அறியாமைதான் கார்பொரேட் களவாணி முதலைகள்.எளிதில் நம் நாட்டுக்குள் நமது நிலத்தில் அவர்கள் பொருட்களை விளைய செய்ய வைத்துள்ளது .. இது நாள் வரை நிலத்தை நாசமாக்கும் ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் மட்டும் விற்ற முதலைகள் உதவி செய்கிறோம் என்ற போர்வையில் விவசாய நிலங்களில் தங்கள் கலப்பின விதைகளை பரீட்சித்து பார்க்கிறார்கள் ..ஏழை விவசாயியும் என்ன செய்வான் ..கொட்டும் கண்ணீரை துடைக்க வந்த கரங்களை பற்றிகொள்கின்றனர் அது இரும்பாலான சிலந்திவலை என அறியாதுகுறுகிய நாளில் கொள்ளை லாபம் பார்க்கலாம் என ஆசை காட்டி தங்களின் ஹைப்ரிட் விதைகளை கொள்ளை லாபத்திற்கு விற்று விடுகிறார்கள்.

இன்னும் கூட இயற்கை விதை பயன்படுத்தும் விவசாயிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் யோகநாதன் ,பரமேஸ்வரன் இன்னும் சிலர் //"விவசாயி என்னைக்கு விதையை காசு கொடுத்து கடையில வாங்கினாரோ அன்னைகே விவசாயம் நம்ம கையைவிட்டு போயிடுச்சு.விதைய கை பற்றிட்டா,ஒட்டுமொத்த உணவு சந்தையையும் கைபற்றிடலாம்ங்கிற கம்பெனிகளோட திட்டம் பலிச்சிடிச்சி,உரம் பூச்சி மருந்து,விதைன்னு விவசாயிய சந்தைக்குள்ள முடக்கி கடன்காரனா மாத்தி மொத்த விவசாயத்தையும் அழிச்சிட்டாங்க.நம்ம விவசாயத்தை காப்பாத்தனும்னா,விதைய காப்பாத்தணும்.அதுக்கான முன்னடியத்தான் நான் எடுத்து வச்சிருக்கேன்..." - இவர் 50க்கும் மேற்பட்ட நாட்டு காய்கறிகளின் விதைகளை காப்பாற்றிய பேருக்கு சொந்தக்காரர்.//திரு .யோகநாதன் .
hybrid விதைகள் நட்டு செடி வளரும் அதில் இருந்து கிடைக்கும் விதைகளை மறுபடி நட்ட செடி வளராது அதாவது இவர்களது விதைகளை வாங்கி நாம் பயிரிட்டால் மறுபடி அந்த நிறுவனங்களிடமே உரங்களுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் கையேந்தி நிற்க வேண்டும் என்பதே உண்மை
ஆனால் பாரம்பரிய விதைகளை நாம் விதைத்து அதில் இருந்தே விதை சேமித்தால் காலத்திற்கும் விதை வாங்க வேண்டியது இல்லை.
அது சரி நாம் உண்ணும் கத்திரிக்காயில் வெண்டைக்காயில் பூச்சியே இல்லையே அதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா ?..அந்த பூச்சிகள் ஒன்று கூட நெருங்காத அளவுக்கு பூச்சிமருந்து டிங்கரிங் கோட்டிங் சேர்த்துதான் இந்த காய்கறிகள் நம் வயிற்ருக்குள் செல்கின்றன ..
gluten அல்லர்ஜி என்று ஒன்றினை கேள்விபட்டிருப்பீர்கள் !கோதுமை உணவு உண்போருக்கு இந்த ஒவ்வாமை ஏற்படும் ..சமீபத்து செய்தி ..glyphosate பூச்சிகொல்லியை கோதுமை பயிரில் தெளித்து விடுவதால்தான் இந்த gluten அல்லர்ஜி ஏற்படுகிறதாம் ..
அரசாங்கம் நமது பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டா இப்படி பிறரிடம் நம் விவசாயிகள் கையேந்தும் நிலை வராது ..
நம் நாடு விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள ,விதை தேவை அதிகம் உள்ள நாடு இங்க எப்படியாவது காலூன்றிவிட்டால் போதும் கார்போரேட்களுக்கு , இங்குதான் உணவுக்கு உற்பத்திக்கு போட்டாபோட்டி நிலவுகிறதே !முதலைகளுக்கு இந்தியா ஒரு பொன் முட்டையிடும் வாத்து...பொன் முட்டையை ரசிக்கலாம் அழகு பார்க்கலாம் ஆனால் சாப்பிடமுடியாது :(இது தெரியாமல் .கவர்ச்சியில் மயங்கி விழும் விட்டில் பூச்சிகளாய் நாமும் ஏழை விவசாயிகளும் .எதை எதையோ பாதுகாக்கும் அரசாங்கம் இந்த பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வைத்தால் தான் என்ன ?.டிவியும் மிக்சியும் கிரைண்டரும் இலவசமா தரும் அரசு வீட்டுக்கு ஒரு க்ரோ பாகும் நாலு வகை பாரம்பரிய விதையும் கொடுத்தால் நன்றாக இருக்குமே !.


ஆதங்கத்துடன் ஏஞ்சல்  ..

14 comments:

 1. //ஏழை விவசாயியும் என்ன செய்வான் ..கொட்டும் கண்ணீரை துடைக்க வந்த கரங்களை பற்றிகொள்கின்றனர் அது இரும்பாலான சிலந்திவலை என அறியாது//

  //பொன் முட்டையை ரசிக்கலாம் அழகு பார்க்கலாம் ஆனால் சாப்பிடமுடியாது//

  விழிப்புணர்வூட்டிடும் பயனுள்ள பல தகவல்களை தந்துள்ளீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு அண்ணா ..ரெண்டு மூணு நாளா இந்த ஹைப்ரிட் விஷயம் சுற்றிகிட்டிருக்கு அதான் நானும் எழுதியதை இங்கே பகிர்ந்தேன்

   Delete
 2. அங்கயே படிச்சேன் அக்கா.. அம்மா வீட்டில் பூ,காய், மரம் என அவ்வளவு இருக்கு.. நல்ல காலம் இதுவரை ஒரு பாக்கெட் விதை கூட வாங்கியதில்லை.. அம்மா அதிலே விதை எடுப்பாங்க..
  நானும் 2 மாதத்தில் தோட்டம் போட வேண்டும்.. வெளியில் விதை வாங்க நினைச்சேன்.. இதை படிச்சிட்டு ஊரிலிருந்தே கொண்டு வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.. அங்கேயும், இங்கேயும் பகிர்விற்கு நன்றிக்கா..

  ReplyDelete
  Replies
  1. நான் இங்கே போட்டதுக்கு இன்னோர் ரீசனும் இருக்கு அபி ..இணையத்தில்பசுமைவிடியல் fb யில் போட்ட பல பதிவுகளை சிலர் அவங்க பதிவா போடறாங்க ..ஒருவர் தனி ப்ளாகே நலம் போஸ்ட் எல்லாம் சேர்த்து ஆரம்பிச்சி வச்சிருக்கார் ..அதான் இங்க போட்டா திருடினளும் கண்டுபிடிசிருவேன் :)
   நல்லது ஆர்கானிக் விதைங்கலையே பயன்படுத்துங்க எப்பவும் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. முதலைகளுக்கு இந்தியா ஒரு பொன் முட்டையிடும் வாத்து...

  உண்மை அக்கா...
  விழிப்புணர்வூட்டும் பகிர்வு....

  ReplyDelete
  Replies
  1. ஆமா தம்பி :( ஒருபுறம் விவசாயிகள் தற்கொலை ,விளைநிலங்கள் வீடுகளாகி என்று பேரழிவைநோக்கி இப்போ இந்த ஹைப்ரிட் விதைகளை எதற்கு தரனும் இவங்க :(
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. முகநூலிலும் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..

   Delete
 5. விழிப்புணர்வு செய்தி ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு

   Delete
 6. அருமையான கட்டுரை சகோ/தோழி! எங்களின் ஆதங்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் நாட்டுத் தக்காளிதான் உபயோகப்படுத்துகின்றோம். பங்களூர் தக்காளி ஹைப்ரிட் வரைட்டி. அது போல வரிகள் உள்ள கத்தரிக்காய் ஹைப்ரிட்/பி.டி. கத்தரிக்காய். அதை வாங்குவதில்லை. அது போன்று பூச்சி இருக்கும் காய்கள்தான் வாங்குவின்றோம். கீரைகள் அரிக்கப்பட்டு இருந்தாலும் பரவாயில்லை என்று. பழங்கள் கூட நாட்டுப்பழங்கள்தான் வாங்குகின்றோம் கூடியவரை. நேர்ந்திரம் பழம் மெலிதாக இருந்தால் நாடன் பழம். இப்போதெல்லாம் அவை குண்டாகப் பெரிதாகவும் வருகின்றன. ஆனால் அவற்றை வாங்குவதில்லை. அது போன்று மஞ்சள் நிற மோரிஸ் பழத்தை வாங்குவதில்லை. பச்சை மட்டுமே வாங்குகின்றோம். மஞ்சள் நிறம் ஹைப்ரிட். அமெரிக்கா இந்தப் பழத்தை ஆப்பிரிக்க நாடுகளிள் பயிரிடச் செய்து, அது இப்போது உலகம் குழுவதும் சுற்றத் தொடங்கிவிட்டது. இங்கு நிறைய குவிந்துள்ளது.

  கீதா: மேற்சொன்ன கருத்துடன்....நான் சென்னையில் சில வருடங்களூக்கு முன் விவசாய வல்லுநர்கள் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் சொன்னது பூச்சிகள் இருப்பவைதான் இயற்கையானவை மற்றவை பூச்சிகள் மருந்து தெளித்து இருப்பவை என்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அன்ட் கீதா !! நான் தனிப்பட்டமுறையில் இந்த இராசயன/செயற்கை பூச்சிகொல்லி க்லுடென் அல்லர்ஜி என பலவாறு பாதிக்கப்பட்டிருக்கேன்..இங்கு விளையும் தக்காளியை ஆசைப்பட்டு அப்படியே சாப்பிட்டா அவ்வளவுதான் என் நிலை .. organic முறையில் விளைந்த பொருட்கள் மட்டுமே எனக்கு ஒத்துக்கொள்ளும் இந்தியாவில் இருந்தவரை இந்த நிலை இல்லை ..ஆனா இப்போ இந்தியாவிலும் இதே கத்திரி தக்காளி வருதாம் :(
   எவ்வளவு தீமைகள் செய்றாங்க .வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 7. வணக்கம் சமூக அக்கறை சூழியல் அக்கறை ததும்பும் பதிவு ..
  வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 8. விழிப்புணர்வு பதிவு...

  ReplyDelete