அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/19/16

எனது வலைப் பயணம் ....Blogiversary
Quilling
-----------


Quilling
-----------
2010ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் மகளுக்கு பரிசுபொருட்கள் வாங்க சென்றபோது கண்ணில் பட்டது ஒரு பிளாஸ்டிக் என்வலப் அதனுள் சில தாள்கள் ஒரு பிளாஸ்டிக் பேனா போன்ற பொருள் .எனக்கு அது அப்போ என்னவென்று தெரியாது ..சாண்டா கிப்ட் என்று கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே வைத்து விட்டேன் மகள் அதை பிரித்து பார்த்து ஆராய்ச்சி செய்து 
ஒருவாறு கண்டுபிடித்து விட்டாள் அதன் பெயர் க்வில்லிங் டூல் என்று சொன்னாள் ..எனக்கு அதை பற்றிய விவரங்களை யூ டியூபில் பார்த்து சொல்லியும் தந்தாள் .அவள் முதலில் செய்து காட்டிய வாத்துகுஞ்சுகள்தான் இந்த இரண்டும் .அந்த நாட்களில்  எங்கள் ப்ளாகின் மற்றொரு வலைப்பூவான  நம்ம ஏரியாவை அடிக்கடி எட்டிப்பார்ப்பேன் அதில் squiggles டைப்பில் ஒரு புள்ளியோ அல்லது கோடோ போட்டு அதை முடித்து ஆர்ட் போல செய்ய சொல்வாங்க அந்த ஒரு பகுதியை போட்டுட்டு இது என்னன்னு கேள்வி கேப்பாங்க :) அதெல்லாம் இண்டரெஸ்ட்டா இருக்கும் ..ஒரு பதிவில் மயில் புள்ளி கோலம் போல போட்டு வரைந்து வர்ணம் தீட்ட சொன்னாங்க .உடனே மகளை அதை க்வில்லிங்கில் செய்ய சொன்னேன் 2011 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் ..சின்ன பட்டு விரல்களை வைத்து கடகடன்னு செஞ்சு முடிச்சா !..அங்கே வந்த பின்னூட்டங்கள் எல்லாம் பார்த்து நான் ட்ரான்ஸ்லேட் செய்து சொல்லவும் செம குஷி அவளுக்கு .
நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்வா கார்ட்ஸ் ஆர்ட் என்று அப்படியே நானும் அந்த க்வில்லிங்கை செய்ய துவங்கி ப்ளாகில் போடஆரம்பிச்சேன் எல்லா பெண்களும் சமையல் ஓவியம் காமெடி பின் நவீனத்துவம் பெண்ணியம் என்று கலக்கிகொண்டிருந்த காலமது .நமக்கு சமையல் சுட்டு போட்டாலும் வராது .அதனால் கார்ட் செய்வதை போட்டூ ஒப்பேற்றிகொண்டிருந்தேன் மகளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு கொடுக்க சொன்னா அவளுக்கு என்று .சில போட்டிகளில் எல்லாம் பங்கேற்று பரிசு வாங்கினா ..இப்படி நல்லா போயிக்கிட்டுருந்த அவளது க்வில்லிங் பயணத்தில் ஒரு சிறு தடை கல் :) கல்லை தூக்கி போட்டது அவளோட அப்பா :) ஒரு நாள் அவள் ஒரு கார்டை செய்து டேபிள் மேலே வைச்சாள் ..வேலை முடிந்து வந்த அப்பா பார்க்கணும் முதலில் என்பது குழந்தையின் ஆசை ...அப்பாவும் வந்தார் ,கார்டை பார்த்தவுடன் //வாவ் அம்மா எவ்ளோ அழகா செய்திருக்காங்கன்னு //திருவாய் மலரவும் குழந்தை முகம் சுண்டி விட்டது !.அது ரெண்டு வருஷம் முன் அதோட அவ க்விலிங் செய்வதை விட்டுவிட்டாள் :( ஒரே பிள்ளை என்பதால் அந்த சின்ன வார்த்தை  கூட அவளுக்கு தாங்க முடியலை ....பிறகு மெதுவா அவளை மீண்டும் சிறு கார்ட்ஸ் செய்ய உற்சாக மூட்டினேன் ..இதோ சனிக்கிழமைஅவளுடைய நண்பிக்கு செய்த கார்ட். அவளே செய்தா ..
ஒரு படத்தை பிரிண்ட் எடுத்து typography P எழுத்தை  க்விலிங் முறையில் செய்தாள் ..
அடுத்து வரவிருக்கும் gcse இறுதி பரீட்சைக்கு portrait செய்யபோவதாக சொன்னாள் .. இனி செய்யவே மாட்டாளோ என்று பயந்து கொண்டிருந்தேன் நல்லவேளை மீண்டும் ஆரம்பிச்சிட்டா :).
அன்று முதல் நாங்கள் பிள்ளை முன் எவ்வித கம்பேரிசனும் செய்வதில்லை ...ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனித்தன்மையான திறமைகளுண்டு அவற்றை நாம் உற்சாகமூட்டி வெளிக்கொணர வேண்டும் .அதுவும் இக்கால பிள்ளைகள் சிறு விஷயத்துக்கும் முகம் சுருங்கி விடுவார்கள் .இது எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது ..அப்படியே பழைய பதிவுகளை பார்த்துக்கொண்டு வந்தபோது கண்டுபிடித்தேன்  :) நான் வலைப்பூ  துவங்கி 6 ஆவது வருடம் இது .. :).
சமீப காலமாக முகபுத்தகம் இறுக்கி பிடித்துகொண்டது என்னை :)
ஒருவாறு அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து மீண்டும் வலைப்பூ பக்கம் வர முடிவெடுத்துள்ளேன் :) இனி தவறாமல் இங்கே பதிவுகளும் அனைவர் பக்கம் எனது  பின்னூட்டமும் வெளிவரும் :) .நான்  வராமல் விட்டாலும் தொடர்ந்து வருகை தந்து என்னை பாராட்டி ஊக்குவித்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள் ..

அன்புடன் ஏஞ்சல் ..

30 comments:

 1. நல்லதொரு முடிவு... தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் இனி இங்கே அடிக்கடி வலம் வருவேன் ..உண்மையை சொல்லணும்னா முகநூல் ஒரு அடிக்சன் தான் ..வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சகோ டி டி ✍(◔◡◔)

   Delete
 2. வாழ்த்துகள் ...

  உங்கள் வலை பயணம் தொடரவும்...உங்க மகளின் கியில்லிங் பயணம் சிறப்பாக அமையவும் எனது மனம் கனிந்த வாழ்த்துகள் ...

  Typography card ..சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம் ..சொல்கிறேன் மகளிடம் ரொம்ப சந்தோஷப்படுவா ≧❂◡❂≦

   Delete
 3. ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள் அஞ்சு.
  மிகவும் அழகாக செய்திருக்கிறா. உங்க மகளாச்சே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ப்ரியா .நீங்களும் மீண்டும் கிராப்ட் ஸ்டார்ட் பண்ணுங்க ப்ளாகில் மீண்டும் சந்திப்போம் ✍(◔◡◔)(ɔ◔‿◔)ɔ ♥

   Delete
 4. ஆஹா...சூப்பர். தங்கள் மகளின் கைவண்ணம் அழகு. உற்சாக மூட்ட மூட்ட ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது அப்படிங்கிற மாதிரி...கலைகள் செய்த கையும் சும்மா இருக்காது....

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் காயத்ரி !உண்மைதான் ...நானும் சிலநேரம் பேப்பர் உருட்டராதை நிறுத்துவோம்னு
   நினைப்பேன் ஆனா என் கண்ணில் கலர் கலரா பேப்பர்ஸ் பட்டிசினா உடனே வாங்கி குவிப்பேன் :)
   கலை என்பது உணர்ந்து செய்வது கொஞ்சம் இடைவெளி விட்டாலும் மீண்டும் அங்கே தான் மீண்டும்ம் சென்று நிற்போம் ..அவளுக்கு சின்ன வருத்தம் என்னடா அப்பா தன் க்ராப்டை அம்மாவோடதின்னு நினைச்சிட்டறேன்னு அவ்ளோதான் ,இப்போ மீண்டும் ஒரே ஆர்வமா இருக்கா ( ◡́.◡̀)\(^◡^ )

   Delete
 5. Vai.Gopalakrishnan Said
  -----------------------
  தங்கள் மகளின் மயில் பதிவுக்கு:

  மிகவும் அழகாக உள்ளது. இதை ஏனோ இன்றுதான் என்னால் பார்க்க முடிந்துள்ளது. தங்கள் செல்ல மகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள் + ஆசிகள்.

  ReplyDelete
 6. Vai.Gopalakrishnan Said
  -----------------------
  /நான் வலைப்பூ துவங்கி 6 ஆவது வருடம் இது .. :)//

  மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  >>>>>

  //சின்ன பட்டு விரல்களை வைத்து கடகடன்னு செஞ்சு முடிச்சா !..அங்கே வந்த பின்னூட்டங்கள் எல்லாம் பார்த்து நானா ட்ரான்ஸ்லேட் செய்து சொல்லவும் செம குஷி அவளுக்கு .//


  மிகவும் இனிமையான தங்கத் தருணங்கள் அவை. :)

  ReplyDelete
 7. Vai.Gopalakrishnan Said

  //ஒரே பிள்ளை என்பதால் அந்த சின்ன வார்த்தை கூட அவளுக்கு தாங்க முடியலை ....//

  இதனை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

  //பிறகு மெதுவா அவளை மீண்டும் சிறு கார்ட்ஸ் செய்ய உற்சாக மூட்டினேன் ..இதோ சனிக்கிழமைஅவளுடைய நண்பிக்கு செய்த கார்ட். அவளே செய்தா .. ஒரு படத்தை பிரிண்ட் எடுத்து typography P க்விலிங் முறையில் செய்தாள் ..//

  மிகவும் சூப்பராக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. Vai.Gopalakrishnan Said
  ------------------------
  ////அன்று முதல் நாங்கள் பிள்ளை முன் எவ்வித கம்பேரிசனும் செய்வதில்லை //

  அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும் நல்ல விஷயம் இது.

  //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனித்தன்மையான திறமைகளுண்டு அவற்றை நாம் உற்சாகமூட்டி வெளிக்கொணர வேண்டும் .அதுவும் இக்கால பிள்ளைகள் சிறு விஷயத்துக்கும் முகம் சுருங்கி விடுவார்கள் .இது எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது ..//

  இதைப்படிக்கும் அனைவருக்கும் தாங்கள் சொல்லும் அனுபவப்பாடம் இது.


  மீண்டும் நல் வாழ்த்துகள். பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.//

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துக்களை இவ்வாறு வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.

   பின்னூட்டமிடுவதில் எனக்கு இருந்த பிரச்சனைகள் இப்போது நீங்கி விட்டன.

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
  2. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் அனைத்து பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா ..மகள் இப்பெல்லாம் ரொம்ப பிசி அதனால்தான் இங்கேயே போட்டுட்டேன் அவள் செஞ்ச கார்டை :)

   ✍(◔◡◔)

   Delete
  3. //..மகள் இப்பெல்லாம் ரொம்ப பிசி//

   புரிகிறது. போகப்போக படிப்புகளும் பொறுப்புகளும் ஜாஸ்தியாகத்தான் இருக்கும்.

   //அதனால்தான் இங்கேயே போட்டுட்டேன் அவள் செஞ்ச கார்டை :)//

   அதுதான் நல்லது. சந்தோஷம். நன்னா இருக்கு.

   Delete
 9. வாழ்த்துக்கள்!நானும் 2011 முதல் எழுதுகின்றேன்! தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி சகோ சுரேஷ் நாமெல்லாம் ஒரே நேரம்தான் வலைபூ ஆரம்பிச்சிருக்கோம் ≧◉◡◉≦

   Delete
 10. தங்களது வலைப் பயணம் சிறக்க நல்வாழ்த்துகள்!..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அய்யா

   Delete
 11. மாற்றிச் சொல்லுகின்றோம் சகோ!! "குட்டி 16 அடி பாய்ந்தால் தாய் 8 அடியாவது பாயமாட்டாரா!!!!!!" இது எப்படி இருக்கு ஹஹஹ்!! இருவருமே கலக்குகின்றீர்கள்!

  தொடர்ந்து வலைக்கு வாருங்கள் சகோ...முகநூல் பக்கம் துளசி அவ்வளவாகச் செல்லுவதில்லை. கீதா முகநூலில் இல்லவே இல்லை..ஹிஹி...

  உங்கள் இருவரின் க்வில்லிங்கும் ப்ரமிக்க வைக்கிறது.

  வாழ்த்துகள் கைவேலைப்பாடுகளுக்கும்,வலைப்பயணத்திற்கும்! இனி அடிக்கடி எதிர்ப்பார்க்கின்றோம் தங்களை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) உண்மைதான் அவள்தான் எனக்கு க்விலிங் பற்றி சொல்லி கொடுத்ததே !.ஆர்ட் மட்டுமில்லை ..நிறைய விஷயங்களை எனக்கு சொல்லிதருவா குட்டி டீச்சரமா அவதான் :)
   நிச்சயம் இனி இங்கே அடிக்கடி வலம் வருவேன் ..உண்மையை சொல்லணும்னா முகநூல் ஒரு அடிக்சன் தான் ..வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி துளசி அண்ணா அண்ட் கீதா

   Delete
 12. Good decision Akka! Hopefully I will continue my blogging in a few weeks!

  ReplyDelete
  Replies
  1. Thanks Mahi :) ஆமாம் .சீக்கிரம் மீண்டும் ஆரம்பிங்க

   ≧◉◡◉≦

   Delete
 13. மகளுக்கு வாழ்த்ருகள். எங்கள் பங்கும் இதில் அணிலளவு இருப்பதில் இரட்டிப்பு சந்தோஷம்.

  உங்களுக்கும் வாழ்த்துகள். வலைப்பதிவு தொடங்கி ஆறு வருடங்கள் ஆவதற்கும் வாழ்த்துகள்.

  வலையிலும் தொடரும் முடிவு நல்ல முடிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சகோ ...ரெண்டு பேஜ்களுக்கு அட்மினா இருப்பதால் அவ்வப்போ எட்டி பார்த்தே ஆகணும் fb ..அங்கேயே இருக்கும் எண்ணமில்லை முன்போல .

   Delete
 14. உங்களது Loudspeaker பதிவுகள் எனக்குப் பிடித்தமானவை...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா தம்பி :) நான் விரைவில் மீண்டும் ஒலிபெருக்கியை தூசி தட்டறேன் :)
   நிறைய விஷயங்களை சேமித்து தொலைத்து விட்டேன் ட்ராப்டில் வச்சிருந்தாலாவது பத்திரமா இருந்திருக்கும் :( புக் மார்க் பண்ணது எல்லாம் டிலீட் பண்ணிட்டா பொண்ணு தெரியாம .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 15. வாவ்.. குட்டி விரல்ல செய்த மயில் ரொம்ப அழகு.. நான் கார்ட்ஸ் செய்ததில்லை.. இயரிங் தான் 2, 3 வருஷமா பண்றேன்.. அது பண்ண தெரியும்னு சொன்னதுக்கு என் கிட்ட ஒருத்தர் பேசறதே இல்லை.. அதனால் முகநூலில் கூட இதுவரை இயரிங் போட்டோஸ் போட்டதில்லை.. எனக்கும் அதிலிருந்து இப்போல்லாம் செய்ய மனம் வரலை.. நிறைய இருக்கு. அதை வைத்து கார்ட்ஸ் பண்ண போறேன்.. பிளாக்கின் 6வது வருட பிறந்த நாளைக்கு வாழ்த்துக்கள் அஞ்சு அக்கா..

  ReplyDelete
  Replies
  1. நம்ம திருப்திக்கு சந்தோஷத்துக்கு செய்யணும் :) கடமையை செய் பலனை எதிர்பாராதே அப்படிதான் ....ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி போடுங்க உங்க கம்மல் மற்றும் க்வில்லிங்கை ..க்வில்லிங்கில் ரொம்ப முக்கியம் ..நீங்க எத்தனை பேரின் கார்ட்ஸ் அல்லது கம்மல் டிசைன்ஸ் பார்க்கலாம் ஆனா செய்யும்போது உங்க own ஐடியா வெளி வரணும் அதுதான் ஹிட்டாகும் ..நான் ஒரு கார்டை செய்ய ஆரம்பிக்குமுன் யாராச்சும் அதேபோல செய்தனகலான்னு பார்ப்பேன் அதே டிசைன் செஞ்சிருந்தா கைவிட்ருவேன் ,,அடுத்த விஷயம் நானா எந்த பேப்பர் கிடைச்சாலும் செய்வேன் .நோட் புக் அட்டை கொஞ்சம் திக்கா இருக்கும் அதில் செஞ்சா பிடிக்கும் ..happy crafting :)

   Delete
  2. கார்ட்ஸ் ரொம்ப ஈசி ..background இமேஜ் கலரில் பிரிண்ட் எடுத்து அதில் ஒரு குட்டி பூ ஓட்டினாலும் அது அழகா இருக்கும்

   Delete