அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

12/31/16

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நட்புக்களே :) HAPPY NEW YEAR 2017,அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் நட்புக்களே :)
7/5/16

நான் இரசிக்கும் இயற்கை

வணக்கம் நட்புக்களே :)

மகளுக்கு பரீட்சை அப்புறம் கால நேரம் பார்க்காமல் இயற்கையை ரசிப்பது என்று நேரமில்லாமல் போய் விட்டது ..

முகநூலில் நிறைய இயற்கை காட்சிகளை ,காணொளிகளை பகிர்ந்தேன் 
சிலவற்றை இங்கும் பகிர்கிறேன் ..

நானும்  கணவரும் பேலியோ உணவு முறை ஆரம்பித்ததில் இருந்து தினமும் காலையில் நடைபயணம் செல்கிறோம் எங்க பகுதி கால்வாய் ஓரம் ..

தினமும் நாங்கள் நடக்கும் canal /கால்வாய் வழி இது ..மிகவும் அமைதியா இயற்கையை ரசிச்சுக்கிட்டே நடக்கலாம் .இருமருங்கிலும் அழகிய காட்டு செடிகள் புதர் என ரொம்ப அழகா இருக்கும் .இங்கிலாந்தில் ஒரு காலத்தில் இந்த canals தான் போக்குவரத்துக்கு பயன்பட்டிருக்கு இன்னமும் அந்த படகுகளை வாடகைக்கு வாரம் மாதக்கணக்கில் எடுத்து செல்வோரும் உண்டு .                                                                                   
ஒரே ஒரு மாஸ்க்கோவி ஆண் வாத்து 


இவங்க raft சவாரி போறாங்களாம் :)

அம்மாவும் ஏழு வாத்து பிள்ளைங்களையும் தொடர்ந்து ஒரு மாதமா பார்க்கிறேன் ! அம்மா கூடவே அழைத்துக்கொண்டு செல்கிறது மகள்களை :)

இதோ அம்மாக்கூட வேகமா நீந்துதே இந்த வாத்து பாப்பா 
இது நேற்று வாக் போகும்போது தனியா குவாக் குவாக்ன்னு கத்திக்கிட்டு 
அவங்கம்மாவை தேடி அழுதுகொண்டிருந்தது .எனக்கு பாவமா இருந்தது .
கணவர் பாக் பாக்ன்னு குரல் கொடுக்க வேகமா ஒரு மூலைலேருந்து 
எங்களை பார்த்து கத்திகிட்டே வந்தது ..என்னால் குனிந்து பிடிக்கவும் முடியலை அதால் மேலேறி வரவும் முடியலை ..அங்கேயே எல்லா சாமிங்ககிட்டயும் பாப்பாவுக்கு வேண்டிக்கிட்டு அம்மாவோட சேரணும்னு 
வீட்டுக்கு வந்தேன் .இன்னிக்கு காலைல பார்த்தா அம்மாவோட வேகமா நீச்சல் ..எங்களை சட்டை கூட பண்ணலை :)

நீரில் நீந்தும் எலிகள் ,வண்ணத்திப்பூச்சிகள் அழகிய மலர்கள் 
இப்படி கண்கொள்ளா காட்ச்சிகளை தினமும் ரசிக்கிறேன் ..
ரசித்தவற்றை உங்களோடு பகிர்கிறேன் :)


அன்புடன் ஏஞ்சல் ...

 .

4/20/16

பல்..லே பல்..லே..Tooth Fairy /பல் தேவதை ...

இது ஒரு பல்லே பல்லே  பல்  பதிவு :))

இந்த சிறிய trinket பெட்டி ஜெர்மனியில் இருந்தபோது மகளுக்கு வழங்கப்பட்டது . ..மூன்று  வயதானவுடன்  அனைத்து சிறுவர் சிறுமியர் வீடுகளுக்கு  aok என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் கடிதம்  அனுப்புவாங்க ..குழந்தையுடன் அங்கே செல்ல வேண்டும் .அப்படி சென்ற பிள்ளைகளிடம் இந்த சிறிய மரத்தாலான  பெட்டி வழங்கப்படும் .Milch Zahne என்றால் ஜெர்மானிய மொழியில் பால் பல் என்று அர்த்தம் .
இது ....பிள்ளைங்களுக்கு பல் விழுந்ததும் அதை பத்திரமா சேமித்து வைக்க .
                                                                  இப்படி சைக்கில் பின்னே கட்டும் கொடி,ஸ்கார்ப்,,பென்சில்,,பாக்ஸ்,டெடிபேர் ,லஞ்ச் பாக்ஸ் என்று அவ்வப்போது வயதுக்கேற்ற இலவச பரிசாக வழங்குவார்கள் .  எங்கள் மகள் ஒவ்வொரு முறை பல் விழுந்தவுடன் இதில் பத்திரப்படுத்தி வைப்பா :) ஒரு ஆறு ஏழு வயது வரைக்கும் வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் தனது யானை தந்தம் போன்ற இந்த பற்களை காட்டி மகிழ்வாள் அவ்வப்போது நாணயத்தை எண்ணுவதுபோல  மேஜையில் கவிழ்த்து கொட்டி எண்ணுவாள் :) சுமார் 10 வயது வரை கவிழ்த்து கொட்டி எண்ணும் வழக்கம் இருந்தது :) 
நேற்று ரொம்ப நாளாச்சே பதிவு எழுதி என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த பொக்கிஷபெட்டி..மகளிடம் பெர்மிஷன் கேட்டேன் இதைப்பற்றி எழுதலாமா என்று .அவள் கூறினாள் ..ஓ  !! தாராளமாக எழுதுங்கள் ..ஆனால் ஒரு கண்டிஷன் எனது பற்களை படமெடுத்து போடக்கூடாது ..ஆகவே நண்பர்களே அந்த மினி யானை தந்தங்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை :))..
பல வெளிநாட்டினர் இதுபோன்ற பெட்டிகளை வாங்கிகுழந்தைகளை  அதில் பற்களை சேர்த்து வைக்க சொல்கிறார்கள் .சிலர் முதல் விழுந்த பால் பல்லை பென்டன்ட் போல செய்தும் அணிவிப்பார்கள் குழந்தைகளுக்கு ..நம் ஊரில் தரையில் புதைக்காட்டி வாயில் பல் வளராது என்று சொல்லி விட்டதால் நான் ரொம்ப கவனமுடன் ஆழக்குழி தோண்டி புதைத்து வைத்தேன் :) ..
ஸ்பெயின் பிரான்ஸ் மற்றும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் .விழுந்த பல்லை தலையணை கீழேஅல்லது ஒரு கண்ணாடி தம்ப்ளரில் நீர் ஊற்றி பல்லை போட்டு வைத்து உறங்க செல்லவேண்டும்.....


Ratoncito Perez..//.இது ஸ்பானிஷ் எலி le petite souris,இது பிரெஞ்சு நாட்டு எலி 
                                                                                     
என்ற பெயருடைய எலிகள்  இரவில் வந்து அந்த பல்லை எடுத்து 
சென்று ஒரு இனிப்பு மிட்டாய் அல்லது ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து செல்லும் என்று குழந்தைகளுக்கு சொல்வார்கள் :)
இவங்களும் அப்படியே வைத்து தூங்கி எழும்பி பார்த்தா ...காலை நாணயமோ அல்லது மிட்டாயோ இருக்கும் ..வேற யார் வச்சிருப்பா எல்லாம் ரெண்டு கால் அம்மா அல்லது அப்பா எலிதான் ..

இங்கிலாந்தில் தலையணை கீழ் வைத்து விட்டு உறங்க வேண்டும் இரவு பல் தேவதை வந்து பல்லை எடுத்துக்கிட்டு ஒரு நாணயத்தை வைத்து விட்டு செல்லும் என்கிறார்கள்... சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் பொய் கதைகளை பரப்பகூடாது என்ற காரணத்தால் பலர் இந்த  பெட்டிகளில் மட்டும் சேர்க்க சொல்லி தாங்களே ஏதும் சிறு பரிசு பொருட்களை வாங்கி காலையில் கொடுத்து விடுவது வழக்கம் ..அதைதான் நாங்களும்  செய்தோம்..


..பல் தேவதை தெரியுமா உங்களுக்கு அதாங்க :)tooth fairy ..
இந்த பல் தேவதை பற்றி ஒரு கதை உண்டு ..இந்த பல் தேவதை ஆற்றங்கரையோரமா மரத்தின் கீழே வசித்து வந்ததாம் ..அதற்க்கு நிறைய நண்பர்கள் உண்டு பல்லி,தவளை,தலைபிரட்டை ,வண்டு மற்றும் சிறு உயிரினங்கள் இதன் விளையாட்டு தோழர்கள் ..இந்த தேவதையின் பொழுதுபோக்கு ஆற்றில் கரையோரம் ஒதுங்கும் சிறு பொருட்களை மற்றும் trinket பெட்டிகளை எடுத்து சேமித்து வைப்பது .இதற்க்கு ஒரு தனித்துவ குணமுண்டு கரையொதுங்கிய எந்த பொருளை தொட்டாலும் அது சம்பந்தமான நினைவுகள் இந்த தேவதையின் கண் முன்னே காட்சி விரியுமாம் !.
ஆற்றில் அடித்து வந்த கோலி குண்டுகளை தொட்டால் அதை விளையாடிய சிறுவர்களின் சந்தோசம் அப்படியே இதற்க்கு தெரியும் ..இப்படி இந்த தேவதைக்கு நிறைய பொக்கிஷ பெட்டிகள் கிடைத்தாலும் அதற்க்கு பற்கள் சேமித்து வைத்த பெட்டி மட்டும் இதுவரையில் காணக்கிடைக்கவில்லை ..பல் விழும்போது சிறுவர்களின் உணர்வு எப்படி  இருக்கும் என்று தெரிந்துகொள்ள தேவதைக்கு ஆவல் ..
 ஒரு நாள் தேவதை எப்பவும்போல கரையோரம் trinket பெட்டிகளை தேடிகொண்டிருந்தபோது இதன் மற்ற தோழர்கள் //அச்சோ மனுஷ பிள்ளைங்க வராங்க ஒடுங்க ஒளிங்க என்று அலறி ஓடினார்களாம் தேவதை மட்டும் தைரியமாக அந்த சிறுவர் கூட்டத்தை பார்த்தது..
 எல்லா பிள்ளைகளும் நீரில் குதித்து சேற்றில் விளையாடினர் ஒரு பெண் அவள் பெயர் லூயிஸ் அவளைத்தவிர .பல் தேவதை அவளருகே சென்றபோது லூயிஸ் கேட்டதாம் ..நீ தேவதை தானே ??
அதற்கு இதுவும் தலையாட்டி இன்னும் நெருங்கி சென்றது லூயிஸை நோக்கி ..லூயிஸின் பல் ஒன்று இப்பவோ அப்பவோ என்று ஆடிகொண்டிருந்தது  கண்டு தேவதைக்கு பயங்கர குஷி தானும் அப்பல்லை மெதுவா ஆட்டி பார்த்ததாம் ..அப்போ லூயிஸ் கேட்டுச்சாம்  ..உனக்கு இந்த பல்வேணுமா என்று ..அதைகேட்டதும் தேவதைக்குசொல்லொணா சந்தோஷம்..உடனே வேண்டும் என்றதாம் அதற்க்கு லூயிஸ்...இன்று இரவு இந்த பல் அனேகமா விழுந்துவிடும் நீ எங்க வீட்டுக்கு வந்து என் தலையணை கீழே இருக்கும் எடுத்துக்கோ ..அதைக்கேட்டதும் தேவதைக்கு சந்தோஷம் லூயிசுக்கு ஏதாவது பரிசு தரனும் என்று இரவு செல்லும்போது ஒரு வெள்ளி நாணயத்தை கொண்டு வைத்துவிட்டு பல்லை எடுத்துக்கொண்டு வந்ததாம் .அடுத்தநாள விழித்த லூயிசுக்கு சந்தோசம் அந்த நாணயத்தை பள்ளிக்கு எடுத்து சென்று காண்பித்தாளாம் !  அவளின் நண்பிகள் நம்பவேயில்லை அப்போ லூயிஸ் சொன்னது நீங்களும் உங்க பல்லை தலையணை கீழே வைங்க அடுத்த நாள் தேவதை உங்களுக்கும் பரிசு கொடுக்கும் ..அடுத்தநாள் மற்றொரு பெண் ஒரு நாணயத்தை தூக்கிட்டு ஓடி வந்தாளாம் !இப்படியாக பல் தேவதைபரிசு தரும் கதைகள் பரவி விட்டது உலகெங்கும் பல வித்தியாச கதைகள் வடிவில் ....


அமெரிக்காவில் இந்த tooth fairy இற்கு மியூசியமே இருக்கு !
இந்த சுட்டியில் சென்று பார்க்கவும் ..

https://enchantedamerica.wordpress.com/2014/06/10/the-tooth-fairy-museum-deerfield-il/

..................................................................................................................................................................


நானே வீட்டில் விதை சேகரித்து வளர்த்த என் சிறகவரை செடி :)
சமையலுக்கு வாங்கிய சிறகவரைகளில் ஒன்று மிகவும் முற்றியதாக இருந்தது அதை காயவைத்து விதை எடுத்து நட்டு வைத்தேன் ..
மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ..
                                                                   ***********************

3/21/16

Loud Speaker ..40 உலக வன நாள் மற்றும் பிற செய்திகள்

இன்றைய ஒலிபெருக்கி செய்திகளில் ..உலக வன நாள் , தடை செய்யப்பட்டுள்ள கூட்டு மருந்துகள், பார்வையிழந்த மனைவிக்காக வாசமிகு மலர்த்தோட்டம் அமைத்த ஜப்பான் கணவர் ...

21.03.2016
--------------

இன்று உலக வன நாள் .
====================
வனத்தைக் காப்போம் வளம் பெறுவோம்!

வறுமையிலும் முதுமையிலும் மற்றும் இன்னபிற சூழல்களிலும் தளராமல் தங்களால் இயன்றவரை மரங்களை நட்ட இன்னும் நட்டுவரும் இயற்கை காவலர்களை ஆர்வலர்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம் ,தமது கொள்கைகளால் நம்மோடு வாழ்ந்து வரும் மறைந்தநம்மாழ்வார் அய்யா..சாலமருத திம்மக்கா, பசுமை ஆர்வலர் "அரச மர பாபா ",ஜாதவ் பயாங் ,மகேந்திர பாபு பசுமையை போதிக்கும் தமிழாசிரியர்!,சேலம் பியூஷ் மனுஷ் ,பிஷ்னோய் கிராம மக்கள் ,கேரளாவின் அப்துல் கரீம் அய்யா ..ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா,கால்நடைப் பராமரிப்புத்துறையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற டாக்டர் ராமதாஸ் .கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றும் பசுமைக் காவலர் ‘ம.யோகநாதன்’.வன தேவதை ..சூர்யமணி பகத் ,குத்புதின் கான் , விதைக்கலாம் குழுவினர்,பெண் குழந்தை பிறப்பிற்கு மரம் நடும் பிப்லான்த்ரி கிராம மக்கள் ,‘மரம் தங்கசாமி, பசுமைகாவலர்..பிறந்த நாள் காது குத்து மற்றும் பிற வைபவங்களுக்கும் மரக்கன்று நடும்  மரங்களின் தந்தை முல்லைவனம்,, மதுக்குளம் திருவள்ளுவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் மிதுன் சாய் .. 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ள நடிகர் விவேக்,பள்ளி கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேலும் இங்கு குறிப்பிடாத மரக் காவலர்கள் பலர் உண்டு ..அனைவரையும் வாழ்த்துவோம்..
இவர்கள் அனைவரைப்பற்றியும் பசுமைவிடியல் முகபுத்தகத்தில் பகிர்ந்து உள்ளேன் சிலரை இங்கும் முந்தைய பதிவுகளில் குறிபிட்டுள்ளேன் ..
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பென்சிடில், கோரக்ஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு தடை
=========================================================

பென்சிடில் எனும் அமெரிக்க தயாரிப்பு மருந்து பல நோய்களுக்கு ஒரே தீர்வு எனும் விளம்பரத்துடன் இத்தனை நாள் விற்பனையில் இருந்தது .இந்த இருமல் மருந்தில் கோடைன் எனும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது ..

இந்த மருந்து இருமல், சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, உடல் வலி என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது!!??? மேலும் மத்திய அரசின் தடைக்குப் பிறகு விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை (பி&ஜி)நிறுவனம் நிறுத்தியுள்ளது.

விற்பனையில் உள்ள பல கோடைன் சேர்த்த மருந்துகள் பார்மசியில் மருந்து சீட்டு இன்றியே விற்பனையாகின்றன. இந்த கொடேன் சேர்த்த மருந்துகள் பலரால் போதை ஏற்படுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன ..பரவச நிலை மற்றும் போதையூட்டும் /மயக்கமூட்டும் உணர்வுகள் போன்றவற்றிற்காக இளம் வயதினர் இதற்கு அடிமையாகியுள்ளனர் .

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல சிறார்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது !?
சிலருக்கு ஒரு நாளுக்கு இரண்டு பாட்டில் சிரப் குடிக்கவில்லையென்றால் கை கால்கள் நடுக்கமெடுக்கும் ..அப்படி என்னதான் இருக்கு இந்த சிரப்பில் என்று ஆராய்ந்தபோது 
இந்த போதை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு காரணம் அதில் உள்ள கோடைன் பாஸ்பேட். இது அபின் தயாரிப்பின் மூல மருந்து. இந்த 

கோடைன் சேர்த்த மருந்துகளின் பக்க விளைவுகள் 
----------------------------------------------------------------------------

வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் ; அயர்வு , குழப்பம் ; சிறுநீர்கழிவு , ureteric அல்லது நிணநீர் பிடிப்பு , சிறுநீர் தேக்கம் சிரமம் ; உலர்ந்த வாய் , தலைச்சுற்று, வியர்வை, முக சிவந்துபோதல், தலைவலி , தலைச்சுற்றல் , இதயத் துடிப்பு குறைவு, அதிக இதயத் துடிப்பு, படப்படப்பு, குற்றுநிலை , தாழ்வெப்பநிலை , உளைச்சல், மனநிலை மாற்றங்கள், ஆண்மை குறைவு ,மாயத்தோற்றம்.

மேலும் இதற்கு அடிமையானோரிடம் காணப்படும் விளைவுகள் 

கடுமையான உயர் இரத்த அழுத்தம் , மயக்க உணர்வு, பித்தம்  , தசை கட்டுப்பாடு , கோமா , வலிப்பு,.

அளவுக்கதிகமாக இந்த மருந்துகளை போதைக்காக உண்ட ஒருவர் தற்போது சிகிச்சை பெற்றும் இன்னமும் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுகிறார். அளவுக்கதிகமான இந்த சிரப் குடல்களை பாதித்ததால்இவரால் உணவே எடுத்துக் கொள்ளாத நிலை. உணவு வயிற்றை அடைந்ததும் எரிவது போன்ற உணர்வு ஏற்படுகிறதாம் . பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் போதைக்காக மருந்துகளை எடுத்ததே இதற்கு காரணம் .

பென்சிடில் ,கோரேக்ஸ் போன்ற மருந்துகளை நமது பக்கத்து நாடு பங்களாதேஷ் தடை செய்திருக்கிறது. 

ஆனால் 

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பல ஆயிரக்கணக்கான இந்த இருமல் மருந்துகள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனையாகின்றன .ஏற்கனவே பங்களாதேஷ் இந்த மருந்துகள் உற்பத்தியை மற்றும் சட்ட விரோத கடத்தலை தடை செய்ய சொல்லி இந்தியாவை அறிவுறுத்தியுள்ளது ..

இந்திய மருந்துச் சந்தைகளில் மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான சேர்க்கைகளில் மருந்துகள் புழங்கி வருவது பற்றி ஏற்கெனவே நிறைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் Vicks Action 500 Extra, Corex and Phensedyl உட்பட 350 அதீத மருந்துக் கலவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
..
மருந்துகள் மருத்துவரால்பரிந்துரைக்கப்படவேண்டுமேயன்றி .ஒரு மணிநேர விளம்பர கால்ஷீட்டுக்கு ஆயிரம் லட்சகணக்கில் பணம் வாங்கி அரிதாரம் பூசிய விளையாட்டு வீரர்களாலும் நடிகர்களாலும் தொலைக்காட்சி பத்திரிக்கை போன்றவற்றில் விளம்பரபடுத்தி பொதுமக்களைஅடையக்கூடாது !! ..


அரசு இப்போதாவது 350 க்கும் மேற்பட்ட மருந்துகளை தடை செய்துள்ளதே அதே வேகத்தில் அத்தனை மருந்துகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டால் நல்லது .
மேலும் செய்திகளுக்கு 
http://www.techtimes.com/articles/140831/20160315/india-bans-more-than-300-combination-drugs.htm


------------------------------------------------------------------------------------------------------------
Toshiyuki and Yasuko Kurokiடோஷியுகியும் அவரது மனைவி யசுகோ குரோக்கியும் முறையே வயது 80,70 ஆகிறது இருவருக்கும் .திருமணமாகி சுமார் 30 ஆண்டுகள் வரை இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசியது இவர்களுக்கு என 60 பசு மாடுகளும் ஒரு கால்நடை பால் பண்ணையும் இருந்தது திடீரென யாசுகொவிற்கு 52 வயதாகும்போது நீரிழிவு வியாதியின் தாக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு முற்றிலுமாக பார்வையிழக்க நேரிட்டது .பார்வையிழந்த நாள்முதல் யாசுக்கோ தன்னை வீட்டின் ஒரு அறையிலுள்ளே அடைந்து தன்னை வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டாராம் ..
மனைவியின் இந்நிலை கணவருக்கும் மிகுந்த வருத்தமாம் .ஒரு நாள் இவர்களது பண்ணையில் ஷிபசாகுரா Shibazakura எனும் பிங்க் நிற மலர் பூத்திருப்பதை டோஷிகி கண்டார் .இந்த மலர்கள் மிகுந்த மணம் உள்ளவை .பாய் விரித்தார்போளிருக்கும் தோட்டமுழுதிலும் வளர்ந்திருக்கும்போது .இந்த அழகிய மலரை மனைவியால் கண்ணாரக்கண்டு இரசிக்க முடியாது என்பதை அறிந்த டோஷியுகி அதன் நறுமணம் மனைவிக்கு சென்றடைய வேண்டும் அதனை அவர் உணர வேண்டும் மேலும் அறையில் அவர் வாழ்க்கை முடங்கக்கூடாது என்பதற்காக தோட்ட முழுதும் ஷிபாசகுரா செடிகளை நட துவங்கினாராம் .தனது பால் பண்ணையையே மலர் தோட்டமாக மாற்றிவிட்டார் .சுற்றுலா பயணிகள் ஷிபா சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தில் அவரது இடத்துக்கு வருகை புரிந்தனர் .இப்போது மலர்களின் வாசம் அறையில் அடைந்து கிடந்த யசுகோவை அறையை விட்டு வெளியே வந்து இயற்கையை சுவாசிக்க வைத்தது ..அவரது வாழ்வில் ஷிபாசகுரா மலர்த்தோட்டம் வசந்தத்தையும் சந்தோஷத்தையும் திருப்பி கொண்டு வந்தது ..யசுகோ சுற்றுலா பயணிகளுடன் வெளியில் வந்து உரையாடி மகிழ்கிறாராம் ஒவ்வொரு சீசனுக்கும் .கடந்த 25 வருடங்களாக இந்த மலர் தோட்டத்துக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதமுதல் சுமார் 7000சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இந்த அன்பினால் உருவாக்கப்பட்ட மலர்வனத்தை கண்ணார கண்டு களிக்க !!.....
========================================================================
..ஒரு சமையல் குறிப்பு :))

மாங்கா இஞ்சி குழம்பு 
---------------------------------------
ரெசிப்பி உபயம் மேனகா 

மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் :)

3/10/16

Loud Speaker...39


இன்றைய பதிவில் மைக்ரோசிப்பிங் ,ஹெமி , சுந்தராவும் மீள் சுழற்சி சோப்பும் மைக்ரோ சிப்பிங் (Microchipping) 
--------------------------------------------------------
இங்கே இங்கிலாந்தில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் அனைத்து நாலுகால் நாய்கர்களுக்கும் மைக்ரோசிப்பிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
அரிசி அளவு ஒரு சிப் அதை ஊசி வழியே தோள் பட்டை நடுவில் பொருத்துவார்கள் அதற்கு 15 எண்களுள்ள ஒரு கோட் இருக்கும் petlog இல் நமது வீட்டு அட்ரஸ் பெயர் ஆகியவற்றுடன் பூனை அல்லது நாய் போன்ற செல்ல பிராணிகளின் தகவலும் அதில் இருக்கும் நமது அட்ரசை மாற்றினால் அவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் .நாயோ பூனையோ தொலைந்தால் முதலில் வெட்னரியன்ஸ் மைக்ரோசிப் செய்யப்பட்டுள்ளதா என்று ஒரு detector  வைத்து பார்ப்பார்கள் ..அதில் உள்ள தகவலை வைத்து காணாமல்  போன ஜீவனை உரிமையாளருடன் சேர்த்து விடுவார்கள் .நாங்க எங்க ஜெசிக்கும் செய்து வைச்சிருக்கோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹெமி 

---------------------அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் ராபர்ட்டின் குடும்பம் வசித்து வந்தது ராபர்ட் கப்பல் மற்றும் நிலப்படை (marine ) நேவி வீரர் ..இவரது வீட்டில் ஹெமி என்ற பூனையை வளர்த்து வந்தனர் இவர் Posttraumatic stress disorder, or PTSD,இனால் பாதிக்கப்பட்டவர் .இந்த நோய் தீவிரவாத தாக்குதல்கள்  பேரழிவுகள் நிலநடுக்கம் போன்றவற்றை நேரில் பார்த்தவர்கள் ,போரில் ஏற்படும் அழிவை கண்ணால் கண்டதினாலும் மற்றும் சில நெருங்கிய உறவினரின் பிரிவு மரணம் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்த நோய்(PTSD is a serious potentially debilitating condition that can occur in people who have experienced or witnessed a natural disaster, serious accident, terrorist incident, sudden death of a loved one, war, violent personal assault such as rape, or other life-threatening events)

இவரது பூனை இவரது நோயை மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியிருக்கு .இவருக்கு இரண்டு குழந்தைகள் அந்த குழந்தைகள் பிறக்குமுன் இந்தபூனைதான் இவரின் உற்ற தோழன் ஆழ் மன இரகசியங்கள் துக்கங்களை கூட இப்பூனை ஹெமியிடம் ராபர்ட் பகிர்ந்ததாக கூறுகிறார் ..ராபர்ட்டுக்கு மீண்டும் வேறொரு போர் நடக்கும் நாட்டிற்கு பணிமாற்றம் காரணமாக செல்லவேண்டிய சூழ்நிலை அவர் பயணிக்கவும் அதே நேரம் ஹெமியும் காணமால் போய் விட்டது அவரின் மனைவி அந்த பக்குதியில் தேடி பார்த்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார் குடும்பத்தினருடன் ..நான்கு வருடங்கள் கழித்து பணியில் இருந்து ஓய்வுபெற்று வட  டகோட்டா விற்கு சென்றதும் இவர்களுக்கு pet log /stray cat அனிமல் ஷெல்டரிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது உங்கள் பூனை எங்களிடமுள்ளது பெயர் ஹெமி மைக்ரோ சிப் எண்  ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தனர் ..பூனைகளின் குணம் ஓரிரு நாள் காணாமல் போனாலும் எப்படியாவது கண்டுபிடித்து நம்மை அடைந்துவிடும் இந்த பூனையும் வட  கரோலினா பகுதியிலேயே நான்கு வருடங்களாக  சுற்றிகொண்டிருந்திருக்கு ....மனதை நெகிழ்த்தும் விஷயம் என்னவென்றால் வடகரொலினாவிர்க்கும் வட டகோட்டவிற்கும் உள்ள தொலைவு 2235.22 km  !!!மேலும் இந்த பூனைக்கு உடலில் சில குறைபாடுகளுண்டு காது மடங்கி பற்களில் சில துருத்திக்கொண்டு ஆனால் இந்த பூனைதான் ராபர்ட்டின் மன அழுத்தத்தை குறைக்க உதவியிருக்கு ..அந்த அன்பு நட்புக்காரணமாகவே  இத்தனை தொலைவில்  இருந்து ராபர்ட் அந்த அனிமல் ஷெல்ட்டருக்கு வந்து ஹெமியை அழைத்து சென்றுள்ளார் ..

----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெஸ்ஸி ..
==========
(சில நாட்கள் முன்பு நடந்தது எங்க வீட்டில் )  முகபுத்தகத்தில் பகிர்ந்தேன் 
இங்கும் போட்டாச்சு இப்போ ..

காட்சி 1... ஜெஸி காரக்டர் ...இது ஜெஸியின் மைண்ட் வாய்ஸ் 
----------------------------------------------------------------------------------------------------------

அச்சோ அச்சச்சோ நான் தப்பு பண்ணிட்டேனே ..இந்த கருவாண்டி பேச்சை கேட்டிருக்கக்கூடாது :((((
அவன்தான் வா அங்கே சின்னதா எதோ ஓடுது எலி மாதிரி இருக்கு போய் பார்க்கலாம்னு alley way பக்கமா கூட்டிட்டு போனான் ..
சுற்றிலும் இருட்டு கருவாண்டியும் இருட்டுப்பய அவன் என்னை விட்டு ஓடிட்டான் வழி தெரியல இப்போ எனக்கு அந்த பக்கம் டெரர் டைகர் காத்திட்டிருக்கு என்னை விழுங்க ...இந்த பக்கம் கார்களா நிக்குதே  நான் எந்த பக்கம் போகணும் ..இதில் எந்த வீடு எங்க வீடு >>
எல்லாமே ஒரே மாதிரி இருக்கே ?? அம்மா என்னை தேட ஆரம்பிக்கறதுக்குள்ள கண்டுபிடிச்சி போயிடனும் வீட்டுக்கு ..முந்தி இப்படிதான் ஒரு முறை அதிகாலை 3 மணி வரைக்கும் என்னை காணோம்னு அம்மா அழுதாங்களாம் சொன்னாங்க ...
ஐயோ அங்கே கார் கிட்ட பிரவுன் கலரில் தெரியுதே ! கண்ணு ரெண்டும் பளபளன்னு அம்மாடியோவ் ..அது ரெட் குள்ள நரி ..அப்பா சொல்லிட்டிருந்தாங்க எங்க வீட்டு தெருவின் மூலையில் ஒரு ஏரியும் குளமும் இருக்கு சில நேரம் நரி அங்கு உலாவுதாம் எப்படி போவேன் எங்க வீட்டுக்கு 
நரி என்னை சாப்பிடுமா ?
கருவாண்டி இனிமே நீ என் பிரண்ட் இல்ல ..தனியே ஏண்டா விட்டுட்டு போன என்னைய 
நிறைய கார் ஓடுது எனக்கு ரோட் க்ராஸ் பண்ண கூட தெரியாது நான் எந்த பக்கம் போகணும் ?
எதுக்கும் நடந்து பார்ப்போம் ....

ஒரு வீட்டில் இருந்து லைட் எரியுது சப்பாத்தி சுட்ட வாசனை வருது கொஞ்சம் சின்னமன் dhoop ஸ்டிக் வாசனையும் அதோட அம்மாவின் வாசனையும் வருதே !! எதுக்கும் தட்டி பார்ப்போம் .
ஆஆ அமாம் இது எங்க வீடுதான் .(ஜெசி உடம்பை வச்சி முட்டி மோதி கதவை தட்டுது )
காட்சி ..2 ..ஏஞ்சல் காரக்டர் 
---------------------------------------------
(எப்பவும்போல லாப்டாப்பில் போஸ்ட் ஒன்று தயாரித்துக்கொண்டும் பிளாக்ஸ் விசிடிங் செஞ்சிகொண்டும் அதிரா ஸ்டேடசுக்கு fb கமெண்ட் ரெயில் நீளத்துக்கு கலாட்டா  நடந்துகொண்டும் இருக்கிறது ) 

கதவு 11 :30 க்கு யாரோ தட்டும் சத்தம் கேட்டதும் மேடம் அலறி மாடிக்கு ஓடுகிறார் ,,இங்கே வாங்க எனக்கு பயமா இருக்கு யாரோ கதவை மடார் மடார்னு தட்டறாங்க ,,திருடன்தான் துப்பாக்கிஎதுவும் வச்சிருப்பான் போலிசுக்கு கால் பண்ணுங்க என்று மூச்சு விடாமல் பேசி முடிக்கவும் கணவர் ஜன்னலை மெதுவாய் திறந்து மேலிருந்து பார்த்தால் !!
ஜெசி கதவை முட்டி மோதிக்கொண்டு திருமதி ஏஞ்சல் குரல் சத்தத்துக்கு இன்னும் அதிகமாக மியாவ் மியாவ் என்று கத்திகொண்டிருக்கு ..கணவர் கீழே வந்து கதவை திறந்ததுதான் தாமதம் ..ஜெசி வேகமாக ஓடி வந்துவிட்டது வீட்டிற்குள் ..
........................................................................................................

எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை எங்கள் ஜெசி வீட்டின் முன்பக்கத்தை பார்த்ததேயில்லை ஜன்னல் வழியே விண்டோ வாட்சிங்க் மட்டுமே செய்யும் ..பின் வழியே தோட்டம் மட்டுமே அறிந்தது .alley way எங்கள் வீட்டில் இருந்து ஐந்து வீடு தள்ளி இருக்கு .முன்பக்கம் தவறி சென்ற ஜெஸி .எப்படி கண்டுபிடித்தது எங்கள் வீட்டை ??....

எழுத படிக்க தெரிந்த பூனையாம் ஜெஸி கணவர் சொல்கிரார் :))) டோர் நம்பர் பார்த்து கண்டுபிடித்திருக்ககூடுமாம் :)) ஹா ஹா ..மோப்ப சக்தியும் தாயை போலவே இருந்திருக்கும்  அதான் சரியா இருட்டிலும் வாசனை வச்சி கண்டுபிடிச்சிருக்கா ஜெஸ்ஸி 
------------------------------------------------------------------------------------------------------------

Erin Zaikis மற்றும் சுந்தரா 
------------------------------------------சுந்தரா என்றால் சமஸ்க்ரிதத்தில் அழகிய என்ற பொருள் .சக மனிதருக்கு அதுவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்யும்போது நம்மின் அக அழகு நம்மையும் மீறி வெளிப்படும் நாம மிக அழகானவர்களாக உணர்வோம் என்கின்றார் எரின் ..

இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் மிச்சிகன் பல்கலைகழகத்தில் பயின்றவர் ..slumdog millionaire  படத்தை பார்த்ததுமுதல் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்கு 
தாய்லாந்தில் மியான்மர் எல்லையில்  ஒரு  சாரிட்டி நிறுவனத்துடன் பணிபுரிகையில் அங்குள்ள குழந்தைகள் மத்தியில் சோப் பற்றிய மற்றும் உணவு சாப்பிடுமுன் கைகழுவும் பற்றிய விழிப்புணர்வே இல்லையென்பது இவருக்கு அதிர்ச்சியாக இருந்ததாம் .அப்பிள்ளைகளுக்கு சோப் பற்றியும் தெரியவில்லை ..அப்போது துவங்கப்பட்டதுதான் இந்த ரீசைக்ளிங் சோப் மற்றும் சுந்தரா எனும் தன்னார்வ நிறுவனம் ..

இவர்கள் பெரிய 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு சென்று அங்கு வீணாகும் சோப்புகட்டிகளை மீள் சுழற்சி  செய்து மற்றவற்றை மீண்டும் சுத்திகரித்து சோப்பு பார்கள் ஆக்குகிறார்கள் அவற்றை உகாண்டா மியான்மர் மற்றும் நம்ம இந்திய நாட்டிலுள்ள ஏழைகுழந்தைகள் இருக்கும் பள்ளிகள் வீடுகளுக்கு வினியோகிக்கிறார்கள் .ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் சுகாதாரமின்மையாலேயே pneumonia, diarrhea வால் மரணிக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன . ..
யூனிலீவர் நிறுவனம் சொல்கிறது 70 இலட்சம் இந்தியர்கள் சோப்பு பயன்படுத்துவதில்லையாம் .
இந்தியாவில் 30 மும்பை  5 நட்சத்திர ஹோட்டல்களில் ஹவுஸ் கீப்பிங் பணிபுரிபவர்கள் அதற்கேன உள்ள பைகளில் பயன்படுத்திய சோப்புகளை சேகரிக்கிறார்கள் பிரபலங்கள் ஒரு நாள் அல்லது சில மணிநேரமே தங்குவார்கள் ..ஒவ்வொரு முறையும் புதிய சோப் வைக்கப்படும் ஒரு பயன்பாட்டுக்கு பின்னர் அவை குப்பையில் வீசப்படும் இந்த சுந்தரா நிறுவனத்தினர் அவற்றை சேகரித்து ஒரு வொர்க் ஷாப்பிற்கு கொண்டு சென்று   வெளிப்புறத்தை ஸ்க்ரேப் செய்து சுத்திகரித்து செய்து துகள்களாக்கி மீண்டும் அனைத்தையும் பார்களாக்கி  சுகாதார முறையில் மீள்சுழற்சி செய்கிறார்கள் ..


இதற்க்கு சுமார் ஏழு நிமிடங்கள் எடுக்குமாம் .

சுந்தர சோப்பு சுமார் 25 சதவீதம் நகர்புற குடிசைப்பகுதிகளில் செல்கிறது , மற்றும் பிற 75 சதவீதம் கிராமப்புற கிராமங்களில் செல்கிறது. இன்றுவரை, சோப்பு கிட்டத்தட்ட 16.700 பார்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாம் .மேலும் வீணா குப்பைக்கு  போகும்  இந்த சோப்புக்கள் இப்படிஏழைகளுக்கு  நல்ல ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவது எவ்வளவோ மேல் 
மேலும் சுந்தரா பற்றி இங்கு சென்று வாசிக்கவும் 
தகவல் மற்றும் படங்கள் http://sundarafund.org/founders-story/மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ..Angelin 

3/8/16

அஞ்சலிப்பதிவு ..


அன்பு நண்பர்களே ..
நம் நட்புக்கள் அனைவருக்கும் பரிச்சியமான அன்புத்தோழி இளமதியின் கணவர் இறைவனது திருவடி  அடைந்து விட்டார் ..அவரது ஆன்ம சாந்திக்காகவும்,சகோதரி இளமதி இத்துயரத்தில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் ..ஏஞ்சலின் ..


3/4/16

Loud Speaker ...38

இன்றைய ஒலிபெருக்கி செய்திகளில் Flash நியூஸ் ..International Space Station..நாசாவிற்கு பயணிக்க இருக்கும் பிரபல வலைப்பதிவர்களின் செல்லங்கள் ,உணவை சூடாக்க உதவும்  ஸ்மார்ட் போன் ,வாழை நாரில் லாமினேட் போர்ட் மற்றும் தேநீர் மேசை ,,தோட்டக்குறிப்பு ..நாசாவிற்கு பயணிக்க இருக்கும் பிரபல வலைப்பதிவர்களின்
------------------------------------------------------------------------------------------------------------- செல்லங்கள் :)
-------------------------
மேற்கண்ட பதிவில் கீதா செல்லங்களின் நாசா பயணம் பற்றி  சொன்ன செய்தியை உறுதிப்படுத்துகிறேன் :)
Purrington Post 04 MAR 2016செய்திதாளிலேயே வந்து விட்டது பதிவர்களின் செல்லங்கள் கீதாவின் கண்ணழகி துளசி அண்ணாவின் டைகர் கரந்தை அண்ணாவின் ஜூலி ,துளசி அக்காவின் ரஜ்ஜூ மதுரை தமிழனின் சன்னி மற்றும் என் செல்லம் ஜெஸி ஆகியோர் ஸ்பேசுக்கு செவ்வாய் கிரகப் பயணத்திட்டத்தில் செல்லவிருப்பது உறுதி ஆகிவிட்டது ..

செய்திதாள் கட்டிங் இங்கே :)

மஹியின் ஜீனோவும் அதிராவின் டேய்சியும் இமாவின் செல்லங்களும்  இப்பதான் ஸ்கூலுக்கு போறாங்க அவங்களும் விரைவில் பயணிக்கலாம் ..ஜெர்மன் அரசியலில் இளமதியின் மீரா பிசியாக  இருப்பதால் மீராவால் இவர்களுடன்  பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை !!

//
Jessie is the UK'S first cat-
astronaut and the first British Asian
astronaut to go to the International
Space Station ! On the ISS she
will conduct experiments along with
her colleagues .Sunny from US and
kannazhagi, Tiger , ,julie from INDIA
and Rajjo From New Zealand  will take part in this mission.
.Jessie ,Rajjoo and the other astronauts from India
will study the understanding of distant
 celestial bodies.life in mars . whereas sunny
from US the astronaut will explore
and would be controlling variables in
an experiment, observing & recording
data in his experiments about Newton's
3rd law using Rolling pin .....//

நல்லா வாசிச்சு பாருங்க செய்தியை எல்லா பதிவர்களின் செல்லங்களும் மார்ஸ் இல் உயிர் வாழ்வதெப்படி celestial bodies பற்றி ஆராய்ச்சி செய்யபோறாங்க ..சன்னி மட்டும் அங்கேயும் பூரிக்கட்டையில் ஆராய்ச்சி செய்ய போதாம் :)))) 

------------------------------------------------------------------------------------------------------------
உணவை சூடாக்கும் ஸ்மார்ட் போன்
------------------------------------------------------

ஸ்மார்ட் போன்களின் பெருக்கத்தால் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் கூட மக்கள் நேரம் செலவிட முடிவதில்லை என்பதே உண்மை ..
ஒரு குடும்பம் டின்னர் சாப்பிட ரெஸ்டாரன்ட் சென்றால் அங்கும் மேசையில் அமர்ந்தவுடன் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிடும் ..
எனக்கு பிடிக்காத விஷயம் ஆலயங்களிலும் கோவில்கள் வழிபாடுதலங்களிலும்  மக்கள் போனுடனே இருப்பது :( ..ஒருவர்  இறந்தப்போ இறுதி பயணத்துக்கு முன் ஜெபம் நடக்குது அந்நேரத்தில் ஜெபித்துகொண்டிருக்கும்  ஆயரின் கைப்பேசி சத்தமா ஒலிக்குது ..இது சில வருடமுன் ..இப்போ இன்னும் மோசமா இருக்காம் சென்னையில் ..சின்ன குட்டிஸ் கையிலும் மொபைல் போன் !
குடும்பமாக வெளியே சென்று உணவருந்தும் நேரத்தில் அந்த அன்பான தருணத்தை ஸ்மார்ட் போன்கள் அபகரிக்ககூடாது என்று  இப்போ நம்ம தைவான் நாட்டு நண்பர்கள் இதற்க்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளார்கள் ..தைவானில்  உள்ள ஒரு IKEA ரெஸ்டாரண்டில் .அந்த ரெஸ்டாரண்டில் உள்ள மேசைகளை வித்தியாசமாக வடிவமைத்து உள்ளார்கள் ..அதாவது உணவு பாத்திரங்களில் கொண்டு வந்து மேசையில் வைப்பார்கள் அந்த உணவு சூடா இருக்கணும்னா ..சாப்பிடறவங்க தங்களது ஸ்மார்ட் போன்களை மேசையில் உள்ள மையப் பகுதியில் வைத்து விட வேண்டும் அப்போது உணவு சூடாகும் ..(The table features a heating component, which rises up from the center. On the heating component, a pot is placed with food inside. The component will only turn on if the diners put their phones in the space underneath, and their food will only heat up enough if everyone hands over their phones. As a result, diners are giving attention to their companions, instead of their devices.)


அதைபற்றிய காணொளி இங்கே 
இதேபோல இன்னொரு கண்டுபிடிப்பு The Dolmio Pepper Hackerசாப்பிடும் நேரத்தில் சாதாரண கையால் மிளகு  அரைக்கும் இந்த கிரைண்டரில் மறைவாக  வைக்கப்பட்டுள்ள ஒரு சுவிச்சை அழுத்தினால் போதும் WIFI ,டிவி போன் ஆகியவற்றின் கனெக்க்ஷன் துண்டிக்கப்படும் !!
அப்படியே யாராவது புத்தகத்தை  மூடி வைக்கிறதுக்கு இப்படி ஏதாவது கண்டுபிடிச்சா நல்லா இருக்கும் !!எங்க மகள் சாப்பிடும்போதும் புக் வாசிக்கிறா ..

------------------------------------------------------------------------------------------------------------


வாழை நாரில் லாமினேட் போர்ட் மற்றும்  மேசை
-----------------------------------------------------------------------------


வாழை மரத்தில் குலை தள்ளியதும் அறுவடைக்குப்பின் வெட்டி விடுவார்கள் அது அழுகி அளவுக்கதிகமான  மீத்தேன் வாயுவை கார்பன்டை ஆக்சைடா வளிமண்டலத்தில் வெளியிடுகிறது.ஒவ்வொருமுறையும் வாழை மரங்கள் எரிக்கப்பட்டு சிதையும்போதும் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும் .இதனை தவிர்க்க மொனாக்கொவை சேர்ந்த http://www.beleaf.tm.mc/en/veneer.php நிறுவனம் ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளது ..வாழை அறுவடைக்குப்பின் மரத்தின் தண்டுபகுதிகளை
வெட்டி முறையாய் தட்டி பதப்படுத்தி விலை குறைந்த மரத் தகட்டின் மீது ஒட்டப்படும் நல்ல வகை லாமினேட் (VENEER)மரத் தகடுகளாக்குகிரார்கள் .
இவை நீர் உரிஞ்சா தன்மையுடனும் மேலும் நெருப்பினால் பாதிக்காவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன ..

இந்த மேசையும் வாழைத்தண்டு நாரிலிருந்து உருவாக்கப்பட்டது

------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுத் தோட்டகுறிப்பு 
---------------------------------
பசலைக்கீரை ...இப்படி சமையலுக்கு வாங்கி வந்ததை வேர் பகுதியை ஒட்டி (இரண்டு அங்குலம் ) கொஞ்சம் இடைவெளி விட்டு வெட்டி எடுத்து தொட்டியில் நட்டால் மீண்டும் புதிய பசலைக்கீரை செடி மூன்று வாரத்தில் வளரும் .வீட்டில் தொட்டியில் வளரும் இலைகளை மட்டும் சமையலுக்கு பயன்படுத்தினால் அதே வேர்செடியை மறுபடியும் பயன்படுத்தலாம் .

மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் ...

========================================================================


3/2/16

தொடர் பதிவு :)


எனக்கு பிடித்த பதிவுகள்  .....
========================
தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரர் செல்வக்குமாருக்கு நன்றி :)
நான் தொடர்பவர்கள் :)
கடிதம் எழுத ஆவலை தூண்டி விட்டவர்கள்  
வெற்றிவேல்  
------------------------
நம்மில் எத்தனை பேருக்கு இப்பவும் கடிதமெழுதும் பழக்கம் இருக்கு ??
வெற்றிவேலும் விஜயன் துரைராஜும் எழுதும் கடிதங்களை படிக்க தவறாதீர்கள் ...
கடல் :)என்று தனது தோழனை விளித்து எழுதியிருக்கும் கடிதமிங்கே !
வெற்றிவேலின் வலைப்பூ http://iravinpunnagai.blogspot.com/

விஜயன் துரைராஜ் 
----------------------------------
கவிதையோடு சில நிமிடம்  கவிஞர்கள் மட்டுமல்ல அனைவருக்குமே பிடிக்கும்   இது விஜயன் துரைராஜின் வலைப்பூ

கௌசல்யா ராஜ் 
------------------------------ 

 உடல் நலம் மனநலம் வீட்டுத்தோட்டம் குழந்தைகள் டீனேஜ் பருவ பிரச்சினைகள்  என அனைத்து துறைகள் சம்பந்தமான பதிவுகளையும் மனதை தொட்டு பேசும் கௌசல்யா :) 

இவரது தளம் மனதோடு மட்டும் 
http://www.kousalyaraj.com/
இவரது சமீபத்திய பதிவு கடனுக்காக பலியாகும் மனைவிகள் :( 

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் என்று சுருக்கமா அழைக்கப்படும்  சீனு 
-----------------------------------------------------------------------------------------------------


சுற்று ுசூழல் ஆர்வலர்இயற்கை காதலர் :)
 திடம் கொண்டு போராடு வலைப்பூ உரிமையாளர் 
எனக்கு மிகவும் பிடித்தது என்று ஒரே ஒரு பதிவை மட்டும் எப்படி எடுத்து சொல்ல முடியும் ..எல்லாமே முத்தும் வைரமும் தான் அவர் வீட்டில் ..சென்று பொக்கிஷங்களை அள்ளிகொள்ளுங்கள் ..
தோட்டம் சிவா 
-----------------------------
வீட்டுத்தோட்டம் grow bag தோட்டம் மாடிதோட்டம் என்று கலக்கும் .விதை சேகரிப்பு நாற்று நடல் என பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம் இவர் வலைப்பக்கம் ..
சிவா இவரது வலைப்பூ தோட்டம் 

கலா குமரன் 
----------------------
இவர் ஒரு சிறந்த ஓவியர் முகபுத்தக்தில் முன்பு அடிக்கடி quiz போட்டி வைப்பார் அதில் பதில் கூற ஆவலாயிருக்கும் :)
இனியவை கூறல் கலாகுமரன்

இவரது எல்லா பதிவுகளுமே அறிவியல் சம்பந்தப்பட்டவை 
மனிதனின் முதல் எதிரி வாசிக்க இங்கே செல்லவும் 


ராம் கணேஷ்
-----------------------
ராம் கணேஷ் என்ற ஒரு நண்பர் முகபுத்தக அறிமுகம் இப்போ தமிழில் வலைப்பூ துவங்கி இருக்கார் இனிய தமிழில் ஒரு இலக்கிய பயணம் செல்லும் அவரது தளம் 


அகிலா புகழ் அக்கா 
----------------------------
இவர் சிறந்த கவிதாயினி சின்ன சிதறல்கள் வலைப்பூ அகிலா அவர்கள்
முகப்புத்தக  அறிமுகம்.இவரது வலைப்பூ ..

சமீபத்து ுபதிவு கைம்பெண்ணும் தபுதாரனும 


அனுராதா பிரேம் 
-------------------------------
அனுவின் தமிழ்த்துளிகள்http://anu-rainydrop.blogspot.com/ இவரது வலைப்பூ 
கண்ணாடியில் ஓவியம், பயணக்கட்டுரைகள், கிராப்ட்ஸ்  பல்சுவை களஞ்சியம் ..


சுபிதா 
-----------
இவர் சுபிதா ..முகப்புத்தக நட்பு ..சுபியின் வானவில் வலைப்பூ இவரது தளம் 
கவிதை க்வில்லிங் சமையல் என்று அனைத்து துறையிலும் எழுதுகிறார் .


காமாட்சியம்மா
----------------------------
காமாட்சியம்மா அவர்களின் வலைப்பூ http://chollukireen.com/
சமையல் ,பயணக்கட்டுரைகள் கதை என கூட நாமும்அவருடன் பயணிப்பது  உரையாடுவது போலிருக்கும் அவரது பதிவுகள் ..
அவரது சமீபத்திய பதிவு  சிவராத்திரி மகிமை  ..

-----------------------------------------------------------------------------------------------------------
-
நான் வாசிக்கும் தொடரும் 
பல பதிவர்களை நிறையப்பேர் குறிப்பிட்டதால் repetition வேண்டாமென்று   அவர்களை இணைக்கவில்லை இந்த லிஸ்டில் :)
------------------------------------------------------------------------------------------------------------