அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/21/15

நலமா நட்புக்களே :)

நலமா நட்புக்களே :)
எங்களுக்கு இப்போ சம்மர் விடுமுறை .wild park ஒன்றுக்கு சென்றோம்.அங்கு எடுத்த படங்கள் இவை.

வெள்ளை மயில் :)

குட்டி Babes :)


அம்மா வாத்தும் குட்டி பாப்பாங்களும் :)
அம்மா அப்பா கூட நடந்துபோன கினி கோழி குட்டி 
பாப்பா 
அப்பா சைடில் இருந்தார் காமராவில் பிடிக்க முடியல 

முகத்தை நக்கி பாசத்தை பொழிந்த கோமாதாஸ் :)



நம் permission இல்லாம படமெடுக்கராங்கனு 
யோசிக்கறாங்க :)







Asian Short-clawed otter family


இவங்க விளையாட்டை சிறை பிடித்தேன் ..


video



இது தாய்லாந்து கத்திரிக்கா 
ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் பாருக் என்பவர் சமையல் குறிப்பு பார்த்து செய்தது 
இதை முகநூலில் பகிர்ந்தேன் .ரெசிப்பி இங்கே 

கல்லால் /பூரிக்கட்டையால் கத்திரிக்காயை ஓங்கி ஒரு போடு போட்டா பிளந்து விதைகள் சிதறி விடும் ..பிறகு குட்டி கத்திரி கப்ஸ் கிடைக்கும் அதை வெட்டி சமைக்கணும்.
அவர் செய்முறையில் maldives தூள் சேர்த்தார் .நான் அதற்க்கு பதில் வறுத்து அரைத்த ஆளி விதை பவுடர் (flax seed )சேர்த்தேன் ..
ஒரு சிறு விளம்பர இடைவேளை ..ஒரு பழைய நினைவு 
ஒன்றுமில்லை :):)
இதே கத்தரிக்கா ஜெர்மனில இருந்தப்போ இலங்கை தமிழ் கடையில் கணவர் வாங்கி வந்தார் ..நான் நாலா வெட்டி அதில் சா -ம் -பா -ர் செஞ்சேன் ................
கிக்க்கிக்கீஈஈஈஈ............எவ்ளோ கசப்பா இருந்திச்சோ !
ஒரு விஷயம் சொல்லியே ஆகணும் .நான் சமைக்கக் ஆரம்பிச்சப்போ ஒன்லி டெஸ்டிங் நோ டேஸ்டிங் .அந்த சாம்பார் நான் சாப்டிருந்தா கசப்பு தெரிஞ்சிருக்கும்!





அடுத்தது எங்கள் ப்ளாக் குறிப்பும் செய்தாச்சு 

சேனை மசாலா :)

அன்புடன் ஏஞ்சல் .


8/1/15

கொடைக்கானல் மெர்க்குரி நச்சுக்கழிவு

கொடைக்கானல் மெர்க்குரி  நச்சுக்கழிவு 





மெர்க்குரி இந்திய மருந்து ,அழகு சாதனபொருட்கள் சட்ட விதிகளின்படி 
தடை செய்யப்பட்ட ஒரு இரசாயன நச்சு பொருள் .
சிறுநீரக பாதிப்பு ,தோலில் அரிப்பு ,நிறம் மாறுபடுதல் ,தழும்புகள் 
இவையெல்லாம் ஏற்படக்காரணம் இந்த மெர்க்குரி /பாதரசம் .
இயற்கையாக நமது தோலின் மெலனின் எனும் நிறமியின் செயல்பாட்டை 
தடை செய்து தோலை வெளுப்பாக வைக்க இந்த பாதரசத்தை முக அழகு
 கிரீம்களில் பயன்படுத்துகிறார்கள் //
நான் கடந்த ஆண்டு எழுதிய பதிவு இங்கே http://kaagidhapookal.blogspot.co.uk/2014/03/blog-post_6.html


கொடைக்கானல் மலைப் பகுதியில் இந்துஸ்தான் லீவர் நிறுவனம்1983ம் ஆண்டுதெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை துவங்கியது . அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு (களவாணித்தனம் ) முயற்சியாம் :(

முழுக்கமுழுக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒன்று கூட இந்தியாவில் விற்கப்படவில்லை.


அமெரிக்காவிலிருந்து மெர்க்குரி இந்தியாவுக்கு  கொண்டு வரப்பட்டது. இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் அவைமீண்டும் அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டு வந்தன. அங்கிருந்து ஜெர்மனி ,இங்கிலாந்து ,கனடா ,ஆஸ்திரேலியா ,ஸ்பெயின் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன அமெரிக்காவில் இந்தத் தொழிற்சாலையை நடத்தினால் அந் நாட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இந்தியா உள்பட மற்ற நாடுகளில்வைத்துத் தான் தெர்மமீட்டர் தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் பாதரசநச்சுக்கழிவு கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது ..
2001 ஆம் ஆண்டில், கொடைக்கானல் வசிப்பவர்கள் தொழிற்சாலையில் இருந்து 7.4 டன் நொறுக்கிய நச்சு பாதரச கழிவு மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் கோணி பைகளில் ஸ்க்ராப் /கழிவு கொட்டும் வெளி முற்றத்தில்  இருப்பதை கண்டு பிடித்தனர் .

மேலும் HUL இற்கு சொந்தமான இடத்திலுள்ள சோலைகாடுகளிலும் மெர்க்குரி கழிவுகள் இருப்பதை கண்டு பதைத்த அப்பகுதியினர் 14 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய போராட்டம் இப்போ உயிர் பெற்றுள்ளது  

THE SCRAPYARD AT Moonjikkal in Kodaikanal where the mercury-containing waste from the factory was dumped..



இங்கிலாந்து இந்திய விஞ்ஜானிகள் சமீபத்தில் அப்பகுதியில் மெர்க்குரி பாதிப்பு பற்றிய ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளார்கள் ..//Hindustan Unilever Ltd (HUL) is a subsidiary of the Anglo-Dutch multinational Unilever and is being held responsible for dumping toxic mercury close to human settlements, polluting the ecosystem and placing workers’ lives in danger.// 

பெரிஜம் ஏரி மற்றும் கொடைக்கானல் ஏரிப்பகுதியிலுள்ள  பச்சை பாசி யின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அதிலும் மெர்க்குரியின் நச்சு சுவடுகள் இருந்தன .இந்த ஏரிகள் தொழிற்சாலையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளவை 
..

1983லிருந்து 2001 வரை, இதுபற்றியான விழிப்புணர்வே இல்லாமல்  தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பல போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்பட்டு, தெர்மா மீட்டர் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.

ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றபடாமலேயே உள்ளது
முறையற்று சுற்றுசூழலில் வெளியேற்றப்படும்  மெர்குரி சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தும்,தோல் நோய்கள்  ,கண்களை சேதப்படுத்தும். ,நரம்பு மண்டலத்தையும்பாதிக்கும் .குழந்தையின்மையும் ஏற்படும்.

மார்ச் 2015 இல், ஆலையின் முன்னாள் தொழிலாளர்கள்  போராட்டம் மேற்கொண்டு சில கோரிக்கைகளை முன்வைத்தனர் ..பாதிக்கப்பட்ட நபர்களுக்கு  இழப்பீடு ,மற்றும் தொழிற்சாலையில் இருந்து  மீதமுள்ள கழிவுகள் நீக்க மற்றும் அதற்கான கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவையை வழங்க மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் புறக்கணிக்கப்பட அழைப்பு விடுத்தனர் .
அழகிய மலைவாசஸ்தலத்தின் இயற்கை அழகை மேற்கத்திய நாடுகள் துஷ் பிரயோகபடுதியுள்ளன என்பது மிகையில்லை அவங்க நாடுகளில் குப்பை கொட்டமாட்டார்கள் அங்குள்ள குப்பையை கப்பலேற்றி நம் நாட்டில் கொட்டுவது கொடுமை :(..தொழிலாளர்களது உரிமைகள் , பாதுகாப்பு, சுகாதார தொடர்பாக குறைந்த தரநிலைகள்  இதெல்லாம் நம் நாட்டில் எளிதில் அமுக்கப்படும் ..

விந்தை என்னவென்றால் இத்தகைய பெரிய நிறுவ






ங்களில் //“ is a unique company with a proud history and a bright future. We have ambitious plans for sustainable growth and an intense sense of social purpose.”//
என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள் ..சமூக பொறுப்பு பாதுகாப்பு என்று பெரும் பள பளக்கும் விளம்பரம் எல்லாம் இருக்கும் பின்னணியில் ,ஏதோ ஒரு ஏழை நாட்டின் குடிமக்களின் அறியா தியாகமும் ,உயிரை கொடுத்த உழைப்பும் இருக்கும் :(



மக்களாகிய நாம் செய்ய வேண்டியது இங்கே
http://www.jhatkaa.org/unilever/
சென்று பெட்டிஷனில் கையொப்பமிட்டு நீதி கிடைக்க தோள் கொடுப்போம் ..நம் தாய்நாடு மேற்கத்திய நாடுகளின் குப்பை தொட்டியில்லை என்பதை உணர வைப்போம் .
தகவல் இணையம் 
http://homegrown.co.in/unileverpollutes-a-protest-rap-song-from-india-seeks-to-end-14-years-of-injustice/

அன்புடன் ஏஞ்சல் .