அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/23/15

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

இது மகளின் வயலின் டீச்சருக்கு செய்த வாழ்த்தட்டை ..
ஸ்கூல் படிக்கிற நாளிலேயே எங்க வீட்டுக்கும் , பெரியப்பா பேர பிள்ளைங்க அப்புறம் எங்க அக்கம்பக்கத்து வீட்டு குட்டீஸ்ங்களுக்கு நான் தான் nativity set / கிறிஸ்துமஸ் குடில் அமைத்து தரும் 
பிரபல ஆர்கிடெக்ட் எஞ்சினியர் !! எங்க தோட்டத்தில் தோண்டினா களிமண் வரும் கீழே விழுந்த பன்னாடை (தென்ன மரத்தில் இருந்து காய்ந்து விழுமே ) குச்சி /ஓட்டு சில்ல எல்லாம் வைத்து அந்த காலத்திலயே model வீடு கட்டியிருக்கேன் ..எங்க வீட்ல கோழி பூனை நாய் என்று எல்லாம் வளர்த்தோம் ..இந்த doggies மட்டும் நான் கட்டின வீட்டையோ அல்லது கிறிஸ்துமஸ் மரத்தையோ சட்டை பண்ணாதுகள் .
 மரம் வச்சி டெகரேஷன் செய்து குடிலும் பொம்மைகளும் அடுக்கி வச்சிட்டு சந்தோஷமா தூங்க போவோம் ..அடுத்த நாள் காலையில் பார்த்தா பேபி ஜீசஸ் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு முட்டை இருக்கும் :) அம்மாவின் சிட்டி (கருப்பு நாட்டுகோழி ) முட்டையை இட்டுட்டு போயிருப்பா :) ராஜா ,மேய்ப்பர்கள் மேரி ஜோசப் எல்லாம் ஆளுக்கொரு திசையில் இருப்பாங்க !
சரி இரவே கோழியை கூண்டில் மறக்காம அடைச்சி வச்சிட்டு தூங்கி எழும்பினா மீண்டும் அதே கோலம் :) ஆனா முட்டைக்கு பதிலா எங்க வீட்டு கொழுத்த பூனை வைக்கோல் மேலே சுருண்டு படுத்திருக்கும் ..இல்லைன்னா வேற கோழி மரத்தின் தடித்த கிளையில் தூங்கியிருக்கும் பகலிலும் ஒரு பிரச்சினை :) எங்க வீட்டு சண்டை சேவலுங்க அவங்க மனைவியரை முட்டையிட கூட்டிட்டு வருவாங்க நான் கட்டின குடிலில் கோழி இருக்கும் வெளியே அழகா இவனுங்க காவல் இருப்பாங்க ..இதெல்லாம் நான் திருமணமாகும் வரை சந்தோஷமா அனுபவிச்சேன் :)
அப்போ இந்த மொபைல் போன்  எல்லாம் இல்லை ..போட்டோ எடுக்க ..அழகிய நினைவுகள் அழியாமல் என்னுள் இருக்கு ..
இப்போ இங்கே எங்க வீட்டில் சின்ன மேன்ஜர் செட் வைப்போம் ..எங்க ஜெசிக்கு அதை தோண்டுவதில் அலாதி ஆனந்தம் ..அதேபோல கிறிஸ்துமஸ் மரத்தையும் விட்டு வைக்காது :) டெகரேஷன் எல்லாம் இப்பவே கீழும் மேலும் இருக்கு அவள் வேலைதான் :) நேற்று காணோம் என்று தேடினேன் பார்த்தா மரத்துக்கு கீழே  தூங்குது .

.அந்த மேன்ஜர் செட் முன்னாடி உக்காந்திருக்கா :) நல்ல வேளை இந்த பொம்மைங்க லேசில் உடையாது ..காலையில் ஒவ்வொரு பொம்மையா கீழே இருக்கும் ..சின்ன பிள்ளைங்களை கூட சமாளிக்கலாம் ஆனா பூனைங்க ரொம்ப அட்டகாசம் :) .
...................................................................................................................................................................
இவை ஒரு ஆர்டருக்கு செய்த quilled tree decorations ..
அனைத்து நட்புக்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள் :)
அன்புடன் ஏஞ்சல் 10 comments:

 1. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

  தங்கள் அன்பு மகளின் வயலின் டீச்சருக்கு செய்த வாழ்த்து அட்டை மிகவும் அருமையாக உள்ளது.

  //சின்ன பிள்ளைங்களை கூட சமாளிக்கலாம் ஆனா பூனைங்க ரொம்ப அட்டகாசம் :)//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதில் ஏதோ உள் அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. :) நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ் :)

  ஒரு ஆர்டருக்கு செய்த quilled tree decorations .. அழகோ அழகாக உள்ளது.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. தங்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 3. அழகான வாழ்த்து அட்டை ....


  உங்க கிறிஸ்துமஸ் மரம் ரொம்ப அழகா இருக்கு....

  எனக்கும் எங்க ஸ்கூல்ல பண்ற அலங்கார குடில் ரொம்ப பிடிக்கும் ...

  இப்பவும் பசங்க ஸ்கூல் இருக்க அலங்காரங்களை ரசித்து பார்ப்பது உண்டு ..

  merry christmas

  ReplyDelete
 4. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்து அட்டை ரொம்ப ரொம்ப அழகு அஞ்சு.. இந்த கை வேலையில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது..:) இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்!! கை வேலைகள் அனைத்தும் மிக அழகு!

  ReplyDelete
 7. முக நூலிலேயே ரசித்தேன்.

  இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 9. ஸாரி சகோ தாமதமான வருகைக்கும் வாழ்த்திற்கும். பயணம். இருவருமே. தாமதமான கிறித்துமஸ் வாழ்த்துகள். அட்வான்ஸ் புதுவருட வாழ்த்துகள்!

  அருமையான வாழ்த்து அட்டை! ரசித்தோம்

  ஆஹா! செல்லங்கள் அடித்தக் கூத்தை மிகவும் ரசித்தோம். என்ன ஒரு மனதிற்கு சந்தோஷம் தரும் விஷயம் இல்லையா. மனசு மிகவும் ரிலாக்ஸ்டாக மாறும் இவர்களின் அட்டகாசத்தையும், குறும்புகளையும் கண்டு...அழகு அழகு ஜெசி அழகு! அங்க உக்காந்துருக்குது பாருங்க...கொள்ளை அழகு...அவள் என்ன செய்திருப்பாள் என்று நினைத்துப் பார்த்து சிரித்து ...

  கீதா: அருமையான க்வில்லிங்க் அலங்காரம். ஓ அதான் ஆளைக் காணோமா....பின்னே எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் இப்படிச் செய்வதற்கு அருமை....

  ரசித்தோம் அனைத்தையும்....

  ReplyDelete
 10. Belated Christmas wishes and advance New year wishes !

  ReplyDelete