அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/31/15

வருக வருக 2016 :)

விடை கொடு  2015   வருக வருக 2016 
=====================================ஒரு ஊரில் கடற்கரையோரம் ஒரு குள்ள நரி வசித்து வந்தது ..கரையோரம் வசித்ததால் அதற்க்கு ராஜபோக வாழ்க்கை ..தினந்தோறும் வயிறுபுடைக்க மீன் கருவாடு என நன்கு உண்டு கொழுத்து இருந்தது அந்த நரி ..உணவு தட்டுப்பாடே அதற்க்கு ஏற்பட்டதில்லை ஆனாலும் எப்பவும் நாலு கருவாட்டுதுண்டங்களை எடுத்து குழி தோண்டி புதைத்து வைக்குமாம் .பசித்த நேரம் உண்ணலாமே அதற்குதான் .இப்படியாக நாட்கள் வருடங்கள் ஓடியது .நரிக்கும் வயது கூடி மூப்படைந்து சாமிகிட்ட போய் சேர்ந்தது .சொர்க்கத்தின் வாசலில் கடவுளின் அசிஸ்டன்ட் நின்றுகொண்டு வருகை தருபவர்களை அன்போடு ஆரத்தழுவி வரவேற்றுகொண்டிருந்தார் .நரிக்கு முன் போனவம்களை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பினாராம் கடவுளின் அசிஸ்டன்ட்..அப்போ அவருக்கு வித்தியாசமான ஒரு மணம் நாசியை தீண்டியது ..என்னவென்று கண்டுபிடிக்க அதிக நேரமெடுக்கவில்லை அவருக்கு.
நரியை பார்த்து ..நரியாரே உங்களுடன் கொண்டு வந்த அந்த கருவாட்டு மூட்டையை வீசி விடுங்கள் அப்போதான் சொர்க்கம் செல்ல முடியும் இல்லைன்னா உள்ளே அனுப்ப முடியாது என்றார் .
அதற்கு நரி சொன்னதாம் ..அது எப்படி நான் வாழ்நாள் முழுதும் இதை சாப்பிட்டு பழகிட்டேன் என்கூட கொண்டு வருவேன் இந்த மூட்டையையும் என்றதாம் .கடவுளின் அசிஸ்டன்ட் இறுதிவரை உள்ளே விடவில்லை நரியை .உலகத்து குப்பை சொர்க்கத்தில் அனுமதியில்லை என்று திட்டவட்டமாக சொல்லி நரியை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தாராம் ..
இந்த கதையில் வரும் நரி போலதான் மனிதர்களாகிய நாமும் பொறாமை ,கோபம் வன்மம் ,புரணி ,துவேஷம் ,வெறுப்பு ,போட்டி ,சண்டை என பல அழுக்குகளை விட முடியாமல் சுமந்து திரிகிறோம் .இந்த வருட கோபதாபங்களை மற்றும் மேற்சொன்ன அழுக்குகளை 31 ஆம் தேதி இரவுடன் குப்பையில் கொட்டி எரிப்போம் எனக்கு மீள்சுழற்சி பிடிக்கும் ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இவ்விஷயங்களுக்கு மீள் சுழற்சி வேண்டாம் smile emoticon ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசாபாசங்களுண்டு .இயன்றவரை பிறர் மனம் புண்படாமல் நடப்போம் .புத்தாண்டில் புதிதாய் பிறப்போம் ..நாம் பேசும் பேச்சும் சிந்தனைகளும் நல்ல விதைகளாய் நிலத்தில் விழுந்து பிறருக்கு பயன்தரும் கனிதரும் விருட்சங்களாகவோ அல்லது மணம் வீசும் மலர்களாகவோ வளரட்டுமே என கூறி எனது சிற்றுரையை முடித்துகொள்கிறேன் .
அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி வணக்கம் .
அன்புடன் ஏஞ்சலின் .
22 comments:

 1. இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை.
  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சொக்கன் :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ..
   நிறைய பிரசினைகள இந்த வேண்டா சிந்தனைகளல்தானே வருகின்றன முன்பு இதை ஒரு பாதிரியார் சொன்னார் ..new yearக்கு பொருத்தம்னு பகிர்ந்தேன்

   Delete
 2. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை செல்வராஜ் அய்யா :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ..

   Delete
 3. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. அருமையான கதை! சகோ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றம், நண்பர்கல் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா மற்றும் கீதா :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ..

   Delete
 5. அருமையான கதை. ஆம், தேவை இல்லாத விஷயங்களைச் சுமந்து கொண்டு திரிகிறோம்!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் சகோ :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ..

   Delete
 6. சிறப்புக் கதை இதுவரை அறியாதது
  அறிந்திருக்கவேண்டியது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமணி அண்ணா :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ..இந்த கதை ஒரிஜினலில் பூனைதான் வரும் நரிக்கு பதில் ..பூனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் நரியாக மாற்றினேன் கதையில்

   Delete
 7. சகோதரிக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்! நரி எப்படியும் கடவுளையும் ஏமாற்றி, சொர்க்கத்தில் இடம் போட்டுவிடும். கருவாட்டுக் குழம்பும் சுடுசோறும் ருசியே தனிதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளங்கோ அண்ணா :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ..இந்த கதை ஒரிஜினலில் பூனைதான் வரும் நரிக்கு பதில் ..பூனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் நரியாக மாற்றினேன் கதையில் .உண்மைதான் நரி குள்ளனரியாசே செய்தாலும் செய்யும்

   Delete
 8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

  அருமையான கதை ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 9. நல்ல கதை...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ குமார் :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 10. அன்பின் இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உங்கள் குடும்பத்தாருக்கும் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 11. அன்பு அஞ்சு!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  என் உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  மீள்சுழற்சிக் கைவேலைப்பாடும் கதையும் மிகச் சிறப்பு!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 12. மறப்போம் .மன்னிப்போம். என்று மனம் நினைத்தாலும் சில குப்பைகள் நினைவில் தொடர்கின்றது. இனிய ஆண்டில் தொடர்ந்து நல்லதை சிந்திப்போம்.

  ReplyDelete