அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/31/15

வருக வருக 2016 :)

விடை கொடு  2015   வருக வருக 2016 
=====================================ஒரு ஊரில் கடற்கரையோரம் ஒரு குள்ள நரி வசித்து வந்தது ..கரையோரம் வசித்ததால் அதற்க்கு ராஜபோக வாழ்க்கை ..தினந்தோறும் வயிறுபுடைக்க மீன் கருவாடு என நன்கு உண்டு கொழுத்து இருந்தது அந்த நரி ..உணவு தட்டுப்பாடே அதற்க்கு ஏற்பட்டதில்லை ஆனாலும் எப்பவும் நாலு கருவாட்டுதுண்டங்களை எடுத்து குழி தோண்டி புதைத்து வைக்குமாம் .பசித்த நேரம் உண்ணலாமே அதற்குதான் .இப்படியாக நாட்கள் வருடங்கள் ஓடியது .நரிக்கும் வயது கூடி மூப்படைந்து சாமிகிட்ட போய் சேர்ந்தது .சொர்க்கத்தின் வாசலில் கடவுளின் அசிஸ்டன்ட் நின்றுகொண்டு வருகை தருபவர்களை அன்போடு ஆரத்தழுவி வரவேற்றுகொண்டிருந்தார் .நரிக்கு முன் போனவம்களை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பினாராம் கடவுளின் அசிஸ்டன்ட்..அப்போ அவருக்கு வித்தியாசமான ஒரு மணம் நாசியை தீண்டியது ..என்னவென்று கண்டுபிடிக்க அதிக நேரமெடுக்கவில்லை அவருக்கு.
நரியை பார்த்து ..நரியாரே உங்களுடன் கொண்டு வந்த அந்த கருவாட்டு மூட்டையை வீசி விடுங்கள் அப்போதான் சொர்க்கம் செல்ல முடியும் இல்லைன்னா உள்ளே அனுப்ப முடியாது என்றார் .
அதற்கு நரி சொன்னதாம் ..அது எப்படி நான் வாழ்நாள் முழுதும் இதை சாப்பிட்டு பழகிட்டேன் என்கூட கொண்டு வருவேன் இந்த மூட்டையையும் என்றதாம் .கடவுளின் அசிஸ்டன்ட் இறுதிவரை உள்ளே விடவில்லை நரியை .உலகத்து குப்பை சொர்க்கத்தில் அனுமதியில்லை என்று திட்டவட்டமாக சொல்லி நரியை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தாராம் ..
இந்த கதையில் வரும் நரி போலதான் மனிதர்களாகிய நாமும் பொறாமை ,கோபம் வன்மம் ,புரணி ,துவேஷம் ,வெறுப்பு ,போட்டி ,சண்டை என பல அழுக்குகளை விட முடியாமல் சுமந்து திரிகிறோம் .இந்த வருட கோபதாபங்களை மற்றும் மேற்சொன்ன அழுக்குகளை 31 ஆம் தேதி இரவுடன் குப்பையில் கொட்டி எரிப்போம் எனக்கு மீள்சுழற்சி பிடிக்கும் ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இவ்விஷயங்களுக்கு மீள் சுழற்சி வேண்டாம் smile emoticon ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசாபாசங்களுண்டு .இயன்றவரை பிறர் மனம் புண்படாமல் நடப்போம் .புத்தாண்டில் புதிதாய் பிறப்போம் ..நாம் பேசும் பேச்சும் சிந்தனைகளும் நல்ல விதைகளாய் நிலத்தில் விழுந்து பிறருக்கு பயன்தரும் கனிதரும் விருட்சங்களாகவோ அல்லது மணம் வீசும் மலர்களாகவோ வளரட்டுமே என கூறி எனது சிற்றுரையை முடித்துகொள்கிறேன் .
அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி வணக்கம் .
அன்புடன் ஏஞ்சலின் .
12/23/15

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

இது மகளின் வயலின் டீச்சருக்கு செய்த வாழ்த்தட்டை ..
ஸ்கூல் படிக்கிற நாளிலேயே எங்க வீட்டுக்கும் , பெரியப்பா பேர பிள்ளைங்க அப்புறம் எங்க அக்கம்பக்கத்து வீட்டு குட்டீஸ்ங்களுக்கு நான் தான் nativity set / கிறிஸ்துமஸ் குடில் அமைத்து தரும் 
பிரபல ஆர்கிடெக்ட் எஞ்சினியர் !! எங்க தோட்டத்தில் தோண்டினா களிமண் வரும் கீழே விழுந்த பன்னாடை (தென்ன மரத்தில் இருந்து காய்ந்து விழுமே ) குச்சி /ஓட்டு சில்ல எல்லாம் வைத்து அந்த காலத்திலயே model வீடு கட்டியிருக்கேன் ..எங்க வீட்ல கோழி பூனை நாய் என்று எல்லாம் வளர்த்தோம் ..இந்த doggies மட்டும் நான் கட்டின வீட்டையோ அல்லது கிறிஸ்துமஸ் மரத்தையோ சட்டை பண்ணாதுகள் .
 மரம் வச்சி டெகரேஷன் செய்து குடிலும் பொம்மைகளும் அடுக்கி வச்சிட்டு சந்தோஷமா தூங்க போவோம் ..அடுத்த நாள் காலையில் பார்த்தா பேபி ஜீசஸ் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு முட்டை இருக்கும் :) அம்மாவின் சிட்டி (கருப்பு நாட்டுகோழி ) முட்டையை இட்டுட்டு போயிருப்பா :) ராஜா ,மேய்ப்பர்கள் மேரி ஜோசப் எல்லாம் ஆளுக்கொரு திசையில் இருப்பாங்க !
சரி இரவே கோழியை கூண்டில் மறக்காம அடைச்சி வச்சிட்டு தூங்கி எழும்பினா மீண்டும் அதே கோலம் :) ஆனா முட்டைக்கு பதிலா எங்க வீட்டு கொழுத்த பூனை வைக்கோல் மேலே சுருண்டு படுத்திருக்கும் ..இல்லைன்னா வேற கோழி மரத்தின் தடித்த கிளையில் தூங்கியிருக்கும் பகலிலும் ஒரு பிரச்சினை :) எங்க வீட்டு சண்டை சேவலுங்க அவங்க மனைவியரை முட்டையிட கூட்டிட்டு வருவாங்க நான் கட்டின குடிலில் கோழி இருக்கும் வெளியே அழகா இவனுங்க காவல் இருப்பாங்க ..இதெல்லாம் நான் திருமணமாகும் வரை சந்தோஷமா அனுபவிச்சேன் :)
அப்போ இந்த மொபைல் போன்  எல்லாம் இல்லை ..போட்டோ எடுக்க ..அழகிய நினைவுகள் அழியாமல் என்னுள் இருக்கு ..
இப்போ இங்கே எங்க வீட்டில் சின்ன மேன்ஜர் செட் வைப்போம் ..எங்க ஜெசிக்கு அதை தோண்டுவதில் அலாதி ஆனந்தம் ..அதேபோல கிறிஸ்துமஸ் மரத்தையும் விட்டு வைக்காது :) டெகரேஷன் எல்லாம் இப்பவே கீழும் மேலும் இருக்கு அவள் வேலைதான் :) நேற்று காணோம் என்று தேடினேன் பார்த்தா மரத்துக்கு கீழே  தூங்குது .

.அந்த மேன்ஜர் செட் முன்னாடி உக்காந்திருக்கா :) நல்ல வேளை இந்த பொம்மைங்க லேசில் உடையாது ..காலையில் ஒவ்வொரு பொம்மையா கீழே இருக்கும் ..சின்ன பிள்ளைங்களை கூட சமாளிக்கலாம் ஆனா பூனைங்க ரொம்ப அட்டகாசம் :) .
...................................................................................................................................................................
இவை ஒரு ஆர்டருக்கு செய்த quilled tree decorations ..
அனைத்து நட்புக்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள் :)
அன்புடன் ஏஞ்சல்